Sunday, October 17, 2010
ஹிட்லர் பாதைக்கு திரும்புகிறதா ஜெர்மனி?
வேற்றுமையில் ஒற்றுமை என்பதெல்லாம் வீண் பேச்சு.. ஜெர்மனி கலாச்சாரம்தான் சிறந்த்து என ஜெர்மன் அதிபர் அறிவித்து இருப்பது , ஜெர்மன் மீண்டும் ஹிட்லர் கால ஃபாசிச பாதைக்கு திரும்புகிறதா என்ற அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது..
பல நம்பிக்கை, கலாச்சாரம் கொண்ட மக்கள் ஒன்றாக இணைந்து வாழ்வது அழகானது... ஒரே மாதிரி இருந்தால் போரடிக்கும் என இயற்கையே இப்படி அமைத்து வைத்து இருக்கிறதோ என்று கூட தோன்றும்..
ஆனால் பாசிச வாதிகள் எல்லா இட்த்திலும் இருக்கத்தான் செய்கிறார்கள். உதாரணமாக கிறிஸ்தவர்கள் நட்த்தும் தொழிற்சாலைகளில் கூட , மற்றவர் நம்பிக்கைக்கும் மதிப்பளித்து நேற்று ஆயுத பூஜை கொண்டாடினார்கள்.. அந்த் தொழிற்சாலையில் வேலை பார்க்கும் கிறிஸ்தவ்ர்கள், தமக்கு உதவும் கருவிகள், ஆயுதங்களுக்கு மரியாதை செய்கிறோம் என அதை எடுத்து கொண்டார்கள்.. சாமி கும்பிட அவர்களை இந்துக்களும் வற்புறுத்தவில்லை.. ஆனாலும் ஒன்றாக கொண்டாடி, பிரசாதங்களை இந்துக்களும், அதை தொழிற்சாலை தரும் இனிப்பாக , உணவாக கிறிஸ்தவர்களும் எடுத்து கொண்டார்கள்..
இதே போல கிறிஸ்தவ நம்பிக்கை இல்லாத இந்துக்களும் , கிறிஸ்துமஸில் உற்சாகமாக கலந்து கொள்வது இயல்பு..
ஆனாலும் ஒரு சிலர், எனக்கு சாமி நம்பிக்கை இல்லை.. நீயும் கும்பிட கூடாது என தம் விருப்பத்தை மற்றவர் மேல் திணிப்பவ்ர்களும் உண்டு..ஆனால் இந்தியாவில் இவர்கள் எண்ணிக்கை குறைவு என்பதால், பெரிய பிரச்சினைகள் இல்லை..
ஆனால் ஜெர்மனியை பொருத்தவரை, என் கலாச்சாரம்தான் சிறந்த்து..மற்றவரை கொல் எனும் ஹிட்லரின் ஃபாசிசம் பெரிய வரவேற்பு பெற்று இருந்த்தும், அதனால் ஏற்பட்ட அழிவுகளும் பழைய கதை..
ஆனால் வரலாறு திரும்புகிறது என்ற கதையாக, வேற்றுமையில் ஒற்றுமை என்பது ஜெர்மனியில் தோல்வி அடைந்து விட்ட்து..மீண்டும் ஜெர்மனி ஜெர்மானியருக்கே என்ற பாதைக்கு திரும்ப வேண்டும் என அதன் அரசு தலைவர் ( நம்ம ஊர் பிரதமர் பதவிக்கு இணையான் பதவி ) அங்கீலா மேக்க்ள் (Angela Merkel) அறிவித்து இருப்பது அங்கு இருக்கும் சிறுபான்மை இன , மொழி மக்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது..
மற்ற மக்களால் , ஜெர்மன் மக்களின் வேலைவாய்ப்பு பாதிக்க படுகிறது என்று பரவலான கருத்து அங்கே உருவாக்கி வருகிறது- அல்லது உருவாக்கப்பட்டு வருகிறது
இந்த நிலையில் தனது கட்சி கூட்ட்த்தில் பேசிய அவர் , “ 1960 களில் வெளி நாட்டினர் இங்கே வர அனுமதிக்க தொடங்கினோம்.. வேலை முடிந்த்தும் சென்று விடுவார்கள் என நம்மை நாமே ஏமாற்றி கொண்டோம்.. ஆனால் அப்படி நடக்கவில்லை.. சரி, அனைத்து இன மக்களும், இணைந்து வாழ்வோம்.. வேற்றுமையில் ஒற்றுமை காண்போம் என எண்ணினோம்.. ஆனால் அது தோல்வி அடைந்து விட்ட்து..
இதை முறைப்படுத்த வேண்டும் என பேசி இருக்கிறார்..
பலர் இணைந்து செயல்படுவ்தால்தான், ஜெர்மனி அபார முன்னேற்றம் கண்டு வருகிறது.. எனவே வெளி நாட்டினர் குடியேறுவது ஜெர்மனிக்கு நல்லதுதான்..அதை அவரும் அறிவார்..
ஆனால் தேர்தல் வர இருப்பதால் இப்படி பேசுகிறார் என்கின்றனர் பார்வையாள்ர்கள்..
தற்காலிக லாபம் தரும் துவேஷ பேச்சுக்கள்தான், நீண்ட கால தீமையை ஏற்படுத்துகின்றன என்பதுதான் வரலாறு.
ஆனாலும் அரசியல்வாதிகள், எல்லா இட்த்திலும் ஒரே மாதிரிதான் இருக்கிறார்கள் என்பதை அறியும்போது , ஒருவித மகிழ்ச்சி ஏற்பட்த்தான் செய்கிறது
Labels:
news
Subscribe to:
Post Comments (Atom)
Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com
விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....
Blog Archive
-
▼
2010
(277)
-
▼
October
(40)
- சாதனையாளர்:கீழே விழுந்தாலும், மீசையில் மண் ஒட்டாத ...
- வரலாற்று வினோதம் : கார்ப்பரேட் உலகை, மேனேஜ்மெண்ட் ...
- காமத்துடன் கண்ணாமூச்சி- ஜெயமோகனின் காடு
- ஜிகாத் என்றால் என்ன ?
- எம்பிஏ பாடத்தை இலக்கியம் , வரலாற்றில் கலந்து தரும்...
- நீங்கள் முற்றிலும் அறிந்த சித்தரா? எழுத்து சித்தர்...
- கிருஷ்ணர் கடவுள் அல்ல... அல்லாவால் அனுப்பப்பட்ட இ...
- இருபத்தைந்து நாட்கள் கழித்து எந்திரன் எப்படி ஓடிகி...
- புனிதமான கலர் எது ? ஆன்மிக குருவை பின்பற்றுகிறேன் ...
- என் மதிப்பு கேவலம் 15 கோடிதானா ? பேரம் பேசும் எம்எ...
- பறக்கும் தட்டு ஆராய்ச்சி ஆபத்தானது - ஸ்டீபன் ஹாக்க...
- பேசினால் சார்ஜ் ஆகும் செல்போன்... கடலை பிரியர்களு...
- எந்திரன் - "மாறிய" கதையும் , மாறாத மனோபாவமும்
- எரிசக்தி தயாரிக்க ஏடாகூட வழிகள்- பேக்டீரியாவையும் ...
- சிரிக்க வைக்கும், சிந்தனையை தூண்டும் மாற்று எரிபொர...
- ஜெர்மன் செய்வது சரியே - நண்பர் மாணிக்கத்தின் மாற்...
- ஹிட்லர் பாதைக்கு திரும்புகிறதா ஜெர்மனி?
- கொடி அசைந்த்தும் மின்சாரம் வந்த்தா ? அசத்தும் தொழி...
- பரப்பெழுத்து- பிரத்தியேக படங்களுடன் விவாதம் – வயது...
- சிரிக்கும் பெண்ணை நம்பாதே ( சவால் சிறுகதை )
- ஆதலினால் காதல்செய்வீர்; உலகத்தீரே (‘சவால் சிறுகதை’ )
- என் உயிர் நீ அல்லவா !!? ( சவால் சிறுகதை )
- எழுதிச் செல்லும் விதியின் கைகள் மாறுமோ? ( சவால் சி...
- எந்திரன் சண்டை காட்சிகள் காப்பி அடிப்பா?? சர்ச்சை...
- பரபரப்பான சூழலில் எடியூரப்பா அரசு சந்திக்கும் செமி...
- எந்திரனின் இமாலய வெற்றியும், அறிவுஜீவிகளின் பார்ப்...
- கர்நாடக முதல்வர எடியூரப்பா வென்றார்.
- பரப்பெழுத்து (பாப்புலர் ரைட்டிங்) , சில பகிர்தல்கள...
- பெங்களூரில் காட்டுமிராண்டித்தனம் : அரசு செய்ய இர...
- எந்திரன் யாருக்கெல்லாம் பிடிக்கவில்லை...?
- எந்திரன் , இன்னொரு ராவணனா- பரபரப்பான அலசல்
- காலத்தை ( காசு கொடுத்து ) வென்றவன் நீ
- சுயபரிசோதனை மூலம் அறியுங்கள்: நீங்கள் அறிவு ஜீவியா...
- எந்திரனால் இந்தியா வல்லரசு ஆவது பாதிப்பு - அ அ ச ப...
- எந்திரனின் வானளவிய புகழ், கமல் அதிர்ச்சி – செம ஃபா...
- கண் முன் நடக்கும் கொடூர விபத்துகள்
- எந்திரன் கன்னட சூப்பர் ஸ்டார் பட்த்தின் காப்பியா? ...
- எந்திரன் காட்சிகளும் ரசிகர்களின் உற்சாகமும்- ஸ்பெஷ...
- சிவாஜி- எந்திரன் ஒப்பிடுக.. முதல்வர் கலைஞர் பதில்
- எந்திரன் ரஜினி படமா , ஷங்கர் படமா.. சில கேள்விகள்,...
-
▼
October
(40)
thanks for sharing
ReplyDeleteஜெர்மனி ஜெர்மனியருக்கே என்று அந்நாட்டு ஆட்சியாளர் சொல்வதில் என்ன தவறு? இந்திய காலாசாரம்தான் சிறந்து என்று இந்தியர்கள் சொல்வார்கள்தானே?
ReplyDeleteஇந்தியா இந்தியர்களுக்கே என்றால் கூட அதுவும் தவறா? இந்தியாவையும் ஜெர்மனியையும் இந்த தலைப்பை எடுத்துகொண்டு ஒப்பிடுவது தவறு.
சுதந்திரம் அடைந்த பின்னர் நம் நாட்டிற்கு எந்த அந்நியரும் பிற நாட்டவரும் வேலைகாகவோ அல்லது பிழைகவோ , தங்கள் நாட்டு அடக்கு முறைகள் வெறுத்து அகதிகளாகவோ கூட வரவில்லை. (இலங்கை தமிழர்களின்/அகதிகளின் நிலை வேறு.)
ஜெர்மனியில் பிற தேசத்துமக்கள் அணைவரும் வசிகின்றனர். தமிழர்களும் கூட உண்டு. அவர்கள் சிறுபான்மை எண்ணிக்கைதான். சென்ற முப்பது வருடங்களாக நிறைய அரபு நாட்டினர் அங்கு குடியேறி வசித்து வருகின்றனர்.குறிப்பாக சவூதி அரபிய நாட்டினர். அந்நாட்டு குடி உரிமையும் பெற்றுள்ளனர். இவர்களின் எண்ணிக்கை தற்போது அதிகமாகியுள்ளது. அதாவது இஸ்லாமியர்களின் எண்ணிக்கை அதிகமாகி வருகிறது. அதற்கே உண்டான பக்க விளைவுகளும் அங்குண்டு. மசூதிகளின் எண்ணிகையும் அதிகமாகி வருகிறது. பின்னர் அந்நாடு ஒரு இஸ்லாமிய நாடாக அறிவிக்கப்படும் சந்தர்பம் உள்ளது. இப்பவே தங்களின் மதம் சார்ந்த சட்டமான ஷரியத்தை மட்டும் பின்பற்ற அவர்கள் தீவிரமாக முயற்சி எடுகின்றனர்.
படித்துகொண்டு பகுதி நேர வேலை பார்க்கும் பல ஜெர்மானிய இளைஞர்கள் அணைவருக்கும் தற்போது அங்கு நிகழும் சூழல்கள் வெறுப்பை தந்துள்ளன. நான் முன்பு பயிற்சிக்காக சென்றிருந்தபோது தங்கியிருந்த ஹோட்டலில் மாலை நேரங்களில் வந்து பணியாற்றும் பல படித்துக்கொண்டு இருக்கும் இளையவர்கள் "பிறநாட்டவர்கள் தங்களின் வேலை வாய்ப்பை எடுத்துக்கொள்வதாக " கூறுகின்றனர்.
இதற்கு என்ன சொல்வீர்கள்? இதே நிலை இங்கு இந்தியாவில் நிலவினால் ஏற்றுகொள்வீர்களா? ஆனாலும் அதுவும் நடந்து கொண்டுள்ளது. பிற நாட்டு தெழிலாளர்கள் அதிக அளவில் வேலை செய்யும் அரபு நாடுகளில் அவர்கள் எல்லாம் எப்படி நடத்தபடுகிறார்கள் என்றாவது தெரியுமா?
அவர்கள் எல்லாம் தம் மதம் பரப்பவும், குடியுரிமை கேட்டும் போராட்டமா செய்கிறார்கள்? அரபு நாடுகளில் அல்லது எந்த ஒரு இஸ்லாமிய நாட்டிலாவது நீங்கள் ஒரு அடி மண் கூட வாங்க இயலாது. நீங்கள் ஒரு முசல்மானாக இருந்தாலும் கூட இதே விதிதான். அவ்வளவு ஏன் ? எல்லாரும் கொண்டாடும் "நம்ம ஊர்" காஷ்மீரில் ஒரு அடி நிலம் வாங்க எந்த இந்தியனாலும் இயலுமா?
நான் சொல்லுவதெல்லாம் இதுதான்; உள்ளூர் கதையே நாறிகிடக்க, நமக்கு ஏன் ஜெர்மனி பற்றி கவலை?
இன்னுமொன்று. நாம் தான் இன்னமும் அந்த ஹிட்லரை கட்டிக்கொண்டு அழுகிறோம் வேறு வழி வழி இல்லாமல். இன்றுள்ள ஜெர்மானிய தலை முறையினர் ஹிட்லரை ஒரு மன நலம் குன்றிய மனிதனாக எண்ணியே புறம் தள்ளுகின்றனர்.
இது ஒரு கலந்துரையாடல் என்ற அளவில் மட்டுமே கருதப்படவேண்டும் அன்றி சண்டை போடும் முயற்சியாக இல்லாமல் இருக்க விழைகிறேன். நன்றி ! உண்மைத்தமிழன் அவர்களே!!