Pages

Thursday, October 21, 2010

பறக்கும் தட்டு ஆராய்ச்சி ஆபத்தானது - ஸ்டீபன் ஹாக்கிங் , இல்லை முக்கியமானது - பீட்டர் டேவன்போர்ட் , அறிவியல் சர்ச்சை



கணவன் மனைவி சண்டையில், மனைவி கணவனை அடிப்பதும் , கணவனை மனைவி அடிப்பதும் தமிழ் நாட்டில் சர்வசாதரணமாக தினமும் நடக்கும் விஷயம்தான்.. சண்டையில் பாத்திரங்கள், கரண்டிகள் , தட்டுக்கள் எல்லாம் பறப்பதும் எல்லா வீட்டிலும் நடப்பதுதான்..
பறக்கும் தட்டுக்கள் நமக்கு பழகி போன சமாச்சாரம் ஆகி விட்டது.. ஆனால் வெளிநாட்டில் பறக்கும் தட்டுக்களை பற்றி ஆர்வமாக ஆராய்ச்சி செய்து வருகிறார்கள்..
சண்டையில் பறக்கும் தட்டுக்களை பற்றி அல்ல.. வெளி கிரக வாசிகள் அவ்வபோது, வினோதமான பறக்கும் தட்டுகளில் பூமிக்கு விஸ்ட் அடித்து விட்டு மாயமாக மறைவதை பற்றித்தான் இந்த ஆராய்ச்சி..

பறக்கும் தட்டு என்றெல்லாம் எதுவும் இல்லை என சிலர் சொன்னாலும், மர்மமான ஒன்று வானில் பறப்பதை பார்தேன் என போட்டோ ஆதாரம் காட்டுபவர்கள் இருக்கிறார்கள்.. அந்த போட்டவை பார்த்தல், அவை விமானமோ அல்லது மனிதன் செய்த ஒரு பொருளாகவோ தோன்றவில்லை... தவிர, இது போன்ற பறக்கும் தட்டுக்களின் உடைந்த பாகங்களும் சில சமயம் கிடைத்துள்ளன...

எனவே இது குறித்த ஆராய்ச்சிக்கு தேவை இருக்கிறது..
ஒரு வேலை அதில் வேற்று கிரகவாசிகள் இருந்தால் அவர்களை பூமிக்கு அழைத்து விருந்து கொடுத்து அவர்களை பற்றி தெரிந்து கொள்ள முயற்சிகள் நடக்கின்றன.. அப்படி நேரில் பார்க்கவிடாலும் , எதவது ஒரு வகையில் தகவல் தொடர்பு கொள்ள முடியுமா எனவும் ஆய்வுகள் நடக்கின்றன..

இந்நிலையில், பிரபல இயற்பியல் விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் , தம்பி, இதெல்லாம் வேண்டாம்.. இந்த முயற்சி சொந்த செலவில் சூன்யம் வைத்து கொள்வது போன்றது என எச்சரித்து இருக்கிறார்..
கொலம்பஸ் அமெரிக்காவை கண்டு பிடித்ததும், அங்குள்ள பஊர்வ குடிகள் வாழ்க்கை அழிந்தது..
அதே போல, வேற்று கிரக வாசிகள் பூமியை கண்டுபிடித்தால், நம் வாழ்க்கை அழிந்து விடும்.. அவர்கள் நம்மை விட கில்லாடிகளாக இருக்க கூடும்.. எனவே அவர்களுடன் தொடர்பு கொள்ள முயற்சிப்பதோ, பூமிக்கு அழைப்பதோ வேண்டாம் என்கிறார் அவர்..

இது குறித்து, இந்த துறையில் ஆய்வு செய்து வருபவரும், தேசிய ,அடையாளம் தெரியாத பறக்கும் பொருட்கள் ஆய்வு மையத்தின் இயக்குனருமான பீட்டர் தேவன் போர்ட் அளித்த பேட்டி..

*******************************************

பறக்கும் தட்டின் மேல் எப்போதிருந்து ஆர்வம் ஏற்பட்டது ?

முதன் முதலில் அதை பார்த்ததில் இருந்து ஆர்வம் ஏற்பட்டது :-)

ஆறு வயது சிறுவனாக இருக்கும்போது, குடும்பத்துடன் சினிமா பார்க்க சென்றோம்.. காரில் சென்று கொண்டு இருக்கும்போது, திடீரென சாலையில் பரபரப்பு.. மக்கள் ஓடிக்கொண்டும் கத்தி கொண்டும் இருந்தார்கள்.. சிவப்பு சூரியன் போல ஒன்று பறந்து கொண்டு இருந்தது.. அந்த சிவப்பு நிறத்தால் , பூமி ஒளிர்ந்தது.. திடீரன் அது வேறு திசையில் பறந்து , மறைந்து விட்டது..
தவிர , நான் ஒரு விஞ்ஞானி.. அறிவியல் வரலாற்றின் உக்கிய கேள்வியை ஆய்ந்து வருகிறேன்..
பூமியில் மட்டும்தான் உயிர் இருக்கிறதா?
இதற்கு திட்டவட்டமான , உறுதியான பதில் என நான் நினைப்பது..

இல்லை.. பூமியில் மட்டும் உயிர் இல்லை.. மற்ற கிரகங்களிலும் இருக்கிறது..


இப்படி சொல்வதற்கு ஆதாரம் இருக்கிறதா?

பல ஆதரங்களை காட்டி விட்டோம்.. நேரில் பார்த்த பலர் சாட்சியங்கள் இருகின்றன.. சரி, அதை கூட நம்ப வேண்டாம்,., சிலர் கற்பனையாக சொல்லி இருக்கலாம்.. அல்லது வேறு எதையாவது பார்த்து விட்டு தவறாக பறக்கும் தட்டு என சொல்லி இருக்கலாம்.. ஆனால் நேரடியான ஆதாரங்களும் உள்ளன.. பறக்கும் தட்டு இரங்கி சென்ற தடங்கள், அவை விட்டு சென்ற உலோக பொருட்கள், என பலதும் கண் முன் காட்ட முடியும்..
பிரிட்டன், ஒரு கோதுமை வயலில் உண்டான மர்ம வளையங்கள் பற்றி இன்னும் சரியான விளக்கம் தர நம்மால் முடியவிலையே?
( ஒரு கோதுமை வயலில் இந்த விசித்திர வடிவம் தோன்றியது.. இரவு தூங்க சென்றபோது இல்லை.. காலை யில் பார்த்த உழவர்கள் திகைத்தனர்.. குறுகிய நேரத்தில் வேறு யாரும் இதை செய்த்திருக்க முடியாது.. அந்த வடிவம் எதோ செய்தியை சொல்வது போல இருந்தது - பார்க்க்க படம்.. - பிச்சைக்காரன் )

பறக்கும்தட்டு குறித்த தகவல் வந்தால் அதை எப்படி கையாள்வீர்கள்..?

வானில் ஒளியை பார்த்த தகவல்தான் அதிகம் வரும்.. ஒருவேளை அது விமான ஒளியாகவோ, நட்சத்திரங்கலோகவோ, கோள் கலாகவோ இருக்கலாம்.. உண்மையான தகவல் என்பதை ஆய்ந்துதான் கண்டுபிகக் முடியும்.. பலரும் ஒரே தகவலை , ஒரே மாதிரியாக சொன்னால் , அது ஓரளவு நம்பகமாக இருக்கும்..,
அவர்கள் என்ன பார்த்தார்கள் என்பதை விவரிப்பதும், உண்மையை கண்டு பிடிக்க உதவியாக இருக்கும்..

என்ன ஆதாரத்தை காட்டினால், பறக்கும் தட்டு உண்மையா பொய்யா என்ற விவாதம் முடிவுக்கு வரும் ?

ஒரு வேற்று கிரக வாசியை நேருக்கு நேர் சந்தித்து பேசினால் முடிவுக்கு வரும் :-)

அனால் அதற்காக காத்து இருக்காமல், ராடார் முறையை பயன்படுத்த வேண்டும் என்பது என் திட்டம்.. வானொலி, ஒளி அலைகளை விண்ணில் அனுப்பி, திரும்ப வரும் அலைகளை உணரும் ஆண்டேனாக்களை தயார் நிலையில் வைக்க வேண்டும்.. யாரவது நம் அழைப்புக்கு பதில் அளித்தால் தெரிந்து விடும்...
இது இந்த பறக்கும் தட்டு சர்ச்சையை முடித்து வைக்கும்..

இது ஆபத்தான வேலை என்கிறாரே ஸ்டீவன் ஹாக்கிங் ?

அவர் சொல்வது தவறு.. கொலமபசுடன் வேற்று கிரக வாசிகளை ஒப்பிட கூடாது.. கொலம்பசுக்கு பொருளாதார நோக்கம் இருந்தது, அவர் குழுவினருக்கும் , பூர்வ குடிகளுக்கும் மோதல் ஏறபட்டது..
ஆனால் , இந்த விஷயத்தில் பறக்கும்தட்டில் வருபவர்களும் ஆராய்ச்சி நோக்கில் வருகிறார்கள்..நாமும் ஆய்வு நோக்கில் இருக்கிறோம்.. எனவே மோதல் இருக்காது..


******************************

அடுத்த முறை வானில் ஏதேனும் ஒளியை பார்த்தால் அது கடவுளாகவும் இருக்கலாம்.. அல்லது பறக்கும் தட்டாகவும் இருக்கலாம் என்பதை மறந்து விடாதீர்கள்..

10 comments:

  1. பறக்கும் தட்டு, வேற்று கிரக வாசிகள் பற்றியெல்லாம் படிப்பதில் எனக்கு கொஞ்சம் ஆர்வம் அதிகம்... உங்கள் பதிவு என் ஆர்வத்திற்கு தீனி போடும் வகையில் அமைந்திருந்தது... ஸ்டீபன் ஹாக்கிங் சொல்வது சரிதான்...

    ReplyDelete
  2. பறக்கும் தட்டை பற்றி மேலும் தெரிந்துகொள்ள ஏதாவது புத்தகம் தமிழில் இருக்கா பார்வையாளன் சார்?

    ReplyDelete
  3. நாகராஜசோழன் MA said...
    பறக்கும் தட்டை பற்றி மேலும் தெரிந்துகொள்ள ஏதாவது புத்தகம் தமிழில் இருக்கா பார்வையாளன் சார்"

    இருக்கு.. ஆனா பெரும்பாலானவை , கற்பனை சார்ந்து எழுதப் பட்டு இருக்கு. நல்ல புக் கண்ல பட்டதும் சொல்ட்றேன்

    ReplyDelete
  4. உங்கள மாதிரியே இங்க ஒரு scientist பறக்கும் தட்டு பற்றி சொல்லி உள்ளார் :)

    http://subadhraspeaks.blogspot.com/2010/10/blog-post.html

    ReplyDelete
  5. ஐயோ.. பயமா இருக்கே.. :(

    ReplyDelete
  6. பறக்கும் தட்டுகள் உண்மையே.. ஆனால் சாதாரண மக்களுக்கு இவை தெரிய கூடாது என்பதில்
    அனைத்து நாட்டு அரசாங்கங்களும் முனைப்பு காட்டி உண்மையை மறைக்கின்றன..
    இங்கே இமயமலை அடிவாரத்தில் உள்ள ஒரு கிராம மக்கள் ஏறக்குறைய தினமும் பறக்கும் தட்டுகளை பார்க்கிறார்கள்..
    ஆனால் இவை செய்தியில் வராது..
    மேலும் யூ.எப்.ஒ க்கள் பற்றி அறிய நீங்கள் எனது ப்ளாக்குக்கு வரலாம்.. :)

    ReplyDelete
  7. really interesting.......thanks for ur post

    ReplyDelete

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]