
குடும்பத்துடன் பார்க்க முடிகிற படங்கள் மிகவும் குறைவு... நீண்ட நாள் கழித்து , ஒரு நல்ல படம், அனைவரும் பார்க்க முடிகிற படம் என்றால் அது எந்திரன் தான்..
யாராவது நண்பர்கள், உறவினர்கள் என்னை பார்க்க வந்தால் , எந்திரனுக்கு அழைத்து செல்வது என் வழக்கமாகிவிட்டது..
அந்த வகையில், இன்றும் எந்திரன் பார்க்க வேண்டி இருந்தது.. இருபத்தைந்து நாட்கள் , பல திரையரங்குகளில் ஓடி , அனைவரும் பார்த்து விட்டபின்னும் கூட , இன்னும் பிளாக்கில்தான் டிக்கட் கிடைக்கிறது, பெரிய திரையரங்குகளில்.. ஹவுஸ் புல்..
பல இடங்களில் அலைந்து பார்த்து விட்டு, தேவி கருமாரியம்மனில் பார்தோம்..
நல்ல கூட்டம்.. இன்னும் முதல் நாள் உற்சாகம் ரசிகர்களிடம்..
பாபா படம் பார்க்கும் போது, ஆரம்பதில் இருந்த உற்சாகம் போக போக குறைவதை பார்க்க முடிந்தது..
இதில் ஆரம்பம் முதல் கடைசி வரை உற்சாகம்தான்..
முதலில் பார்க்கும்போது,கருணாஸ், சந்தானம் இருவரும் வீண் போல தோன்றியது..
இப்போது பார்க்கும் போது , அவர்களின் முக்கியத்துவம் தெரிந்தது..
இதற்கு மேல் போய் இருந்தால் அதிகபிரசங்கித்தனமாக இருந்திருக்கும்..
அதே போல வசனம் மிக மிக அருமையாக ரசிக்கப்படுவதை பார்க்க முடிந்தது..
பாடல் காட்சிகளுக்கு வரவேற்பு அமோகம் ( வீடியோ இணைப்பை பார்க்கவும் )
, இதற்கு மேல் அறிவியல் தகவலையோ, செண்டிமெண்டையோ கலந்து இருந்தால், ஓடாத நல்ல படம் என்ற பட்டியலில் எந்திரன் சேர்ந்து இருக்கும்..
ஷங்கருக்கு பாராட்டுக்கள் ...
en neengal itha padam endu sollureenga poi padama athu thuu 25 euro veen akkitten suntv koluthuvan naan unmayathaan solluren orutharukkum padam pidikkala summa ellam suntv ad iniyavathu unmaya eluthunga
ReplyDeleteகருத்துக்கு நன்றி பெயர் சொல்லாத நண்பரே.
ReplyDeleteஒரே விஷ்யம் எல்லோருக்கும் பிடிக்க வேண்டியதில்லை..
எனவே உங்களுக்கு படம் பிடிக்கவில்லை என்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடிகிறது..
ஆனால் யாருக்கும் பிடிக்கவில்லை என சொல்வது தவறு..
கிட்டத்தட்ட அனைவரும் பார்த்து விட்டாலும், இன்னும் ஹவுஸ் புல்லாக ஓடுகிறது என்பதை இன்று அலைந்து திரிந்த பின் உணர்ந்தேன்.. அதைத்தான் உங்களுடன் பகிர்ந்து கொண்டேன் ..
Enakku padam pidikkavillai thaan nanpare naan 1 day leevu eduthu 350 km drive panni inthpadam parthanaan ana padam ok but last 30 min bad sorry nanpa keep it up
ReplyDeleteரொம்பவே கொஞ்சமாக எழுதியிருக்கிறீர்கள்... நான் ஒரு பதிவு எழுதியிருக்கிறேன் (இன்னும் பதிவிடவில்லை)... அநேகமாக நீங்கள் இதை படிக்கும்போது எனது அந்த பதிவு வெளியாகி இருக்கும்... எனது தளத்துக்கு வந்து படியுங்கள்...
ReplyDeleteபடத்துக்கு இன்னும் கூட்டம் குறையலேன்னு சொல்றீங்க. எங்க ஊரு திருப்பூருக்கு வந்து பார்த்தா தெரியும். படத்தை பத்தி சொல்லனும்னா வெறும் ராம.நாராயனன் படம் தான். அவரு பூதம், ஆவின்னுவாரு, சங்கரு ரோபோ அப்படின்னுட்டாரு அவ்வளவுதான். உங்களை ரஜினி படம் பார்க்க வேண்டமுன்னு சொல்லல. இந்த படத்துல ரஜினியை தவிர யாராலெயும் இப்படி நடிக்க முடியாது, ரஜினி மாதிரி 3 வேடத்துல இப்படி வித்தியாசம் காண்பிக்க முடியாது, ரஜினி மாதிரி வில்லத்தனம் செய்ய முடியாது, இன்னும் எத்தனையோ. ரஜினி ரசிகர்கள் எல்லாம் எப்பத்தான் திருந்த போறீங்களோ.
ReplyDeleteபடத்துக்கு இன்னும் கூட்டம் குறையலேன்னு சொல்றீங்க. எங்க ஊரு திருப்பூருக்கு வந்து பார்த்தா தெரியும்"
ReplyDeleteதிருப்பூர்ர் நம்ம ஊர் ஆச்சே..
போன வாரம் ரிலீஸ் ஆன படங்கலுக்கு வர்ர கூட்டத்தையும், 25 நாள் கழித்து எந்திரனுக்கு வர்ர கூட்டத்தையும் ஒப்பிட்டு பார்த்தா உண்மை தெரியும்..
பல தியேட்டர்களில் திரையிட்டதால், ஏற்கனவே அனைவரும் பார்த்து விட்டனர் என்பதையும் மறக்க கூடாது..
எனவேதான் கூட்டம் குறைவு போல் உங்கலுகு தோன்றுகிறது
பல திரை அரங்குகளில் படம் எடுத்து விட்டார்கள்- உதாரணம் ஆதம்பாக்கம் ஜெயலட்சுமி, நங்கநல்லூர் ரங்கா
ReplyDelete"உதாரணம் ஆதம்பாக்கம் ஜெயலட்சுமி, நங்கநல்லூர் ரங்கா"
ReplyDeleteகமல் படமும், ஷகிலா படமும் ஒட்டும் சிறிய தி.அரங்குகளில் மட்டும்தான் எடுத்து இருக்கின்றனர்.. அங்கெல்லாம் படம் பார்க்க பெண்கள் விரும்புவதில்லை.. சத்ய்ம், எஸ்கேப் , அபிராமி என்றுதான் செல்கிறார்கள்.. அங்கு டிக்கட் இல்லாத நிலையில்தான், தேவி கருமாரி சென்றேன்..
நல்ல படம் என்பது அனைவரையும் கவர வேண்டும். சங்கோஜமில்லாமல்,நெளியாமல் குடும்பத்தோடு காணப்படுவதாக இருக்க வேண்டும். ஷாருக்கான் கூட சொன்னதாய் ஞாபகம், 'குழந்தைகளால் அதிகம்
ReplyDeleteவிரும்பிப் பார்க்கப் பட வேண்டும்.' அந்த வகையில் எந்திரன் ஓக்கே.
nalla padam sir. really i enjoyed with my family. songs ellame super.
ReplyDeleteகுழந்தைகளால் அதிகம்
ReplyDeleteவிரும்பிப் பார்க்கப் பட வேண்டும்.' அந்த வகையில் எந்திரன் ஓக்கே////
well said
nalla padam sir. really i enjoyed with my family. songs ellame super.”
ReplyDeleteமிக்க மகிழ்ச்சி