குறைகுடங்கள் ஆர்ப்பரிக்கும் நிலையில், அமைதியாக தன் எழுத்து பணியை தொடர்பவர் எழுத்து சித்தர் பாலகுமாரன்..
அவரது கேள்வி பதில் ஒன்று …
உங்களை சித்த புருஷன் என புகழ்கிறார்களே. இது உண்மையா?
*****************************************
எழுத்து சித்தர் பாலகுமாரன்
அவர்கள் புகழ்வது உண்மை. அது அன்பின் வெளிப்பாடு. ஆனால் ஒரு சித்தருக்கு உண்டான திறமை எல்லாம் எனக்கு இல்லை. என்னால் விபூதி வரவழைக்க முடியாது.. வாயிலிருந்து லிங்கம் எடுக்க முடியாது. அப்படி செய்ய வேண்டும் என நினைத்ததும் கிடையாது.
நான் எழுத்தாளன். அவ்வளவே. நல்ல எழுத்தாளன் என்பது நீங்கள் கொடுத்த மரியாதை. உங்களின் பாராட்டு. வேலைகளில் உண்மையாகவும், திறமையாகவும் இருப்பது என் வழக்கம்., எவர் மீதும் எனக்கு பொறாமை இல்லை. யாரோடும் சண்டை இல்லை. எவர் வளர்ச்சி கண்டும் நான் வெதும்பவில்லை. தானற்ற பிரகாரன் என்ற ரமணர் வாக்கை நம்புகிறேன். வாழ்க்கை நன்றாக நடந்தது.. நடக்கிறது . நடக்கும் என்பது என் தீர்மானம்.
வாலிப வயதில் இருந்த விருப்பு , வெறுப்பு மறைந்து அமைதி பிறந்து இருக்கிறது, எதையும் மிக சரியாக சிந்திக்க முடிகிறது. இதற்காக சித்த புருஷன் என் அழைக்க முடியுமா என தெரியவில்லை..
நல்ல மனிதனாக உருவாக குருனாதரும், இலக்கியமும் உதவி செய்து இருகின்றன, அவ்வளவே..
நல்லது நினைத்தால் நல்லது நடக்கும் என்பது என் அனுபவம்..
இது தான் உண்மையும் கூட. தான் என்ற ஆணவம் , அகங்காரம் அற்றுபோய்விட்டால் எந்த பெயர் வைத்து யார் எப்படி அழைத்தாள் என்ன? அவர் சொவது சரிதான். அவர்மீது உள்ள அன்பின் மிகுதியால் நாம் அவர புகழலாம். ஆனால் அதுவும் உண்மை இல்லை என்பதை அவர் உணர்த்தும் போது அதனை புரிந்துகொள்ளும் அறிவும் பக்குவமும் வாசகர்களுக்கு வேண்டும்.
ReplyDeleteஇனியாவது எவருக்கும் "சொம்பு " தூக்கும் பழக்கத்தை விட்டு ஒழிக்கலாமே !!
எதை போற்றுகிறொமோ , அந்த பண்பு நமிடமும் வளரும்..
ReplyDeleteஅந்த வகையில் சொலர் அன்பு முகிதியால் அவரை சித்தர் என அழைக்கிறார்கள் என எடுத்து கொள்ள வேண்டியதுதான்
thanks for sharing
ReplyDelete