Saturday, October 2, 2010

எந்திரன் காட்சிகளும் ரசிகர்களின் உற்சாகமும்- ஸ்பெஷல் ரிப்போர்ட் ( வீடியோவுடன் )

ரஜினி பட்த்திற்கு செல்வது பட்த்தை ரசிப்பதற்கு மட்டும் அல்ல.. திரையரங்கின் விழாக்கால கோலாகலத்தில் பங்கேற்க வேண்டும் எனப்தற்காகவும்தான்..

ரஜ்னி பட்த்தை சி டி யில் பார்த்தால் வேலைக்கு ஆகாது.. திரைஅரங்கில் பார்த்தால்தான் திருப்தி....

ஆசிரியர்கள், டாக்டர்கள், எஞ்சினிய்ரகள், மென்பொருள் துறையினர், ஏழைகள், பணக்கார்ர்கள், தொழிலாளிகள் என அனைவரும் , பெரிய பெரிய பதவிகளில் இருப்பவர்களும் கூட குழந்தைகள் போல மாறி கொண்டாட்டம் நட்த்துவது ரஜினி பட்த்தில் மட்டுமே பார்க்க முடியும்..

பள்ளிக்காலத்தில் ஒரு முறை ரஜினி படம் சென்றிருந்தேன்.. படம் ஆரம்பிக்கும் முன் விசில் அடித்து, படம் சீக்கிரம் போட சொல்லி ரகளை செய்து கொண்டு இருந்தோம்..

திடீரென அதிர்ச்சி... கண்டிப்புக்கு பேர் போன தமிழ் ஆசிரியர் உள்ளே நுழைந்தார்.. அட ஆண்டவா.. இவர் அருகில் இருந்தால் ஜாலியாக இருக்க முடியாதே என நினைத்த படி நைசாக அவருக்கு பின் வரிசைக்கு மாறினோம் . அங்கு இருந்தவர்களை முன் சீட்டுக்கு மாற்றினோம் ( அந்த திரை அரங்கில் சீட் எண் இல்லை.. ஃபர்ஸ்ட் கம், ஃபர்ஸ்ட் சர்வ் பேசிஸ் தான் )

படம் ஆரம்பித்த்தும் ரகளையை தொடங்கினோம்.. ஓரிரு முறை அவர் திரும்பி பார்ப்பது போல தோன்றியது..ஆனாலும் எங்கள் சேட்டை நிற்கவில்லை.

திடீரென பார்த்தால், எங்களை விட அவர் அருமையாக விசில் , கைதட்டல் என அமர்க்களப்படுதிக்கொண்டு இருந்தார்...

அவருக்கு விசில் அடிக்க தெரியும் என்பதே ஆச்சர்யம்.. அதுவும் படம் எல்லாம் பார்ப்பர் என்பது மகா ஆச்சர்யம்..

அன்று இருந்த அதே உற்சாகம் இன்றும் ரஜினி படம் பார்க்கும் போது தொடர்கிரது..

எந்திரன் பட்த்தில் உற்சாகம் கரை புரண்டு ஓடியது..

தியேட்டரில் ரசிகர்களின் ஆரவாரத்தை ளை படம் பிடித்தேன்..

ஆனால் யோசித்து பார்த்தால், சிலர் அந்த படம் வெளிவருவதை விரும்ப மாட்டார்கள் என தோன்றியது..

எனவே ரசிகர்களின் உற்சாகத்தின் சில காட்சிகள் மட்டும் இதோ உங்கள் பார்வைக்கு...பட்த்தை திரையரங்கில் பார்த்தால்தான் இது போல முழுமையாக எஞ்சாய் செய்ய முடியும்.. சி டி யில் பார்க்க வேண்டாம் என கேட்டு கொள்கிறென்


 

 

3 comments:

  1. அந்த திரை அரங்கில் சீட் எண் இல்லை.. ஃபர்ஸ்ட் கம், ஃபர்ஸ்ட் சர்வ் பேசிஸ் தான் )//

    first come, last serve (seat) ???
    படம் பார்த்தாச்சா ?
    எத்தனை ஆசிரியர்கள் மாணவர்களுக்கு பயந்து சினிமா ஆசையை தள்ளிப் போடுறாங்க தெரியுமா?

    ReplyDelete
  2. படம் பார்த்தாச்சா ?
    எத்தனை ஆசிரியர்கள் மாணவர்களுக்கு பயந்து சினிமா ஆசையை தள்ளிப் போடுறாங்க தெரியுமா?"


    இப்ப ஆசிரியர்கள் பயம் இல்லை..அதனால தைரியமா முதல் நாள் , முதல் ஷோ பார்த்துட்டேன்..


    "first come, last serve (seat) ???"
    ஆமா.. உள்ளே போனதும் பிடித்த சீட்டில், கிடைக்கும் சீட்டில் பாய்ந்து உட்கார்ந்து கொள்ள வேண்டும்.. நம்பர் கிடையாது..

    ReplyDelete
  3. //ஆசிரியர்கள், டாக்டர்கள், எஞ்சினிய்ரகள், மென்பொருள் துறையினர், ஏழைகள், பணக்கார்ர்கள், தொழிலாளிகள் என அனைவரும் , பெரிய பெரிய பதவிகளில் இருப்பவர்களும் கூட குழந்தைகள் போல மாறி கொண்டாட்டம் நட்த்துவது ரஜினி பட்த்தில் மட்டுமே பார்க்க முடியும்..//

    அது ................................

    ReplyDelete

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா