Friday, October 15, 2010

சிரிக்கும் பெண்ணை நம்பாதே ( சவால் சிறுகதை )

 

சட்டசபையில் இருந்த அனைவரும் நம்ப முடியாமல் திகைத்தனர்.. நடக்கவே முடியாத ஒன்று நடந்து விட்ட்து..

ஆளும் கட்சிக்கு எதிராக எதிர்கட்சி கொண்டு வந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் தோல்வி அடைந்து அரசு தப்பிக்கும் என்று ஒரு குழந்தை கூட நம்பி இருக்காது..

220 பேர் கொண்ட சட்ட சபையில் , 150 எம் எல் ஏக்களுடன் மெஜாரிட்டியாக இருந்த அரசு , 60 பேர் பிரிந்து சென்றதால் சிக்கலுக்கு உள்ளானது..

அவர்களை கட்சி தாவல் தடை சட்டம் எதுவும் செய்ய முடியாது.. கட்சி உறுப்பினரில் மூன்றில் ஒரு பங்கினர் பிரிந்து சென்றால் அது கட்சி பிளவாக கருதப்ப்படும்.. கட்சி தாவல் அல்ல...

பேரம் பேச வழியில்லாமல் அனைவரும் வெளி நாடு சென்று விட்டு வாக்களிக்கும் தினம் நேரடியாக சட்டசபைக்கு வந்தனர்,,,

எனவே அரசு கண்டிப்பாக கவிழும் என டி வி சானலகள் முடிவு செய்து மாற்று அரசு குறித்து ஊகங்கள் வெளியிட ஆரம்பித்தன..

விவாதம் தொடங்கியபோது, எதிர்கட்சியை விட காட்டமாக பேசினார்கள் கட்சி மாறிகள்.

முதல்வர் தவறிழைக்கிறார்.. பதவி விலகுதல் அவர் செய்யும் ஒரே நல்ல காரியமாக இருக்கும் என்றனர்..

கடைசியில் முதல்வர் பேசினார்..

எப்போதும் அமைதியாக இருக்கும் அவர் , கைகளை ஆட்டியும்., மேஜையை குத்தியும் ஆவேசமாக பேசினார்..

மக்கள் என்றும் என் பக்கம் என் சூளுரைத்தார்..

கடைசியில் வாக்கெடுப்பு...

குரல் வாகெடுப்பு அல்ல.. அனைவருக்கும் எலெக்ட்ரானிக் மெஷினில் வாக்களிக்கலாம். முடிவு உடனே தெரியும்..

எதிர்கட்சியினர் பட்டாசு வெடிக்க ஆயத்தமானார்கள்..

ஆளுங்கட்சியினருக்கு சுரத்தே இல்லை... துரோகிகளை திட்டி அறிக்கை விட ஆயத்தமானார்கள்..

முடிவு திரையில் வந்த்து..

சபா நாயகரே திகைத்து விட்டார்...

அரசுக்கு ஆதரவு – 150

எதிர்ப்பு - 70

நம்பிக்கை இல்லா தீர்மானம் தோல்வி..

அரசு பிழைத்தது...

யாராலும் நம்ப முடியவில்லை... முதல்வர் மட்டும் அமைதியாக இருந்தார்..

********************************************************************************8

“ உன் புன்னகை, பொன் நகையாக ஒளி வீசுதே.. ப்ளீஸ்.. ஒண்ணே ஒண்ணு இச்சு கொடேன் “ வழக்கமான காதலன் போல கெஞ்சினான் சிவா..

” எல்லாம் கல்யாணத்துக்கு அப்புறம் “ பழைய கால காதலிகள் போல பிகு செய்தாள் காமினி...

” இந்த சட்டசபை மேட்டரை முடிச்சுட்டு , உடனே உங்க வீட்டுக்கு வந்து பொண்ணு கேட்க போறேன் “

“ ஆமாம்பா.. இந்த மேட்டர்ல என்ன மாயாஜாலம் நடந்த்து,, ஒன்னும் புரியல.. இதை மட்டும் கண்டு பிடிச்சா, தேசிய அளவுல பரபரப்பு ஏற்படும் . ஆனா நீ வேலை வேலைனு அலைய்றது எனக்கு சுத்தமா பிடிக்கல“

சிவா ஒன்றும் பேசாமல் சட்டசபை விவாதங்களை டிவிடி யில் பார்த்துகொண்டிருந்தான்..

வழக்கத்துக்கு மாறாக முதல்வர் ஆவேசமாக பேசுவது கவனத்தை கவர்ந்த்து,,,

கையை ஆட்டி பேசுவது அதீதமான நாடக பாணியில் இருந்த்து..

அவர் பேச பேச , அதிருப்தி கோஷ்டி தலைவரின் முகம் மாறுவது இன்னும் ஆச்சர்யம் அளித்த்து.. முதல்வரின் பேச்ச்சை கேட்டு மனம் திருந்துகிறார் என நினக்க அவன் அப்பாவி அல்ல..

மீண்டும் மீண்டும் போட்டு பார்த்தான்.

திடீரென மின்னல் வெட்டியது,..

“ காட்..இப்படியும் நடக்குமா ? “ அதிர்ந்தான்..

“ காமினி.. ஆள் சிக்கிட்டார்” கூச்சலிட்டான்..

“ என்ன ஆச்சு ? “

“ முதல்வரின் கை , அதிருப்தி தலைவரை நோக்கி சைகை செய்வதை பார்த்தாயா ? “

காமினியும் கவனித்து விட்டாள்..” அவர் கையில் அணிந்திருக்கும் உலகிலேயே காஸ்ட்லியான வைர மோதிரத்தையும் கவனித்தேன் “

******************************************************************************

அதன் பின் அடுத்த நடவடிக்கைகளை திட்டமிட்வது மளமள வென நடந்த்து..

” உலகிலேயே புகழ் பெற்ற வைரம் மயிலாசனத்தில் இருந்து துண்டாடப்பட்டவைதான்.. அது முகலாயர்கள் ஆட்சி காலத்தில் இந்தியாவில் இருந்து விடைபெற்றது.. அதன் பின் பல கை மாறி அது எங்கிருக்கிறது என்பது தெரியாமல் இருந்த்து... சிறிய துண்டு கிடைத்தால் கூட கோடிக்கணக்கில், நம்பவே முடியாத தொகைக்கு விலை போகும்..

இந்த நிலையில்தான் வெளினாட்டு அதிபர் ஒருவர் பரிசாக முதல்வருக்கு அதை அளித்தார்,,, ஆனால் அது அரசுக்குதான் சொந்தம்.. முதல்வர் என்ற முறையில் மட்டும் அதை அவர் பயன்படித்தி கொள்ளலாம்.. பதவி முடிந்த்தும் அரசிடம் ஒப்படைதுவிட்டு செல்ல வேண்டியதுதான்..

ஆனால் இதை ஆட்டையை போடுவதில்தான் முதல்வருக்கும் , உள்துறை அமைச்சருக்கும் பிரச்சினை ஏற்பட்டு ஆட்சி கவிழ்ப்பில் முடிய இருந்த்து..

ஆனால் கடைசி நேரத்தில் முதல்வர் சுதாரித்துகொண்டார்..

சட்டசபை உரையில் பேசும்போது ‘ என்னை நம்பிய மக்களை கைவிட மாட்டேன்.. எதிர்பார்ப்புகள் நிறைவேறும் “ என சாடையாக பேசி, ஆக்‌ஷனையும் காட்டி காரியத்தை நிறைவேற்றி கொண்டார்..

இப்போது நாம் செய்ய வேண்டியது, அந்த வைரம் அரசு கருவூலத்தில் இல்லை என நிரூபிப்பதுதான், அந்த வைரம் உள்துறை அமைச்சர் வசம் இருந்தால் அதை திருடினாலும் தவறில்லை...

ஆளுனர் பரந்தாமன் நேர்மையானவர்.. அவரிடம் இந்த ஆதாரத்தை காட்டினால் போதும் .. அவருக்கு இந்த சந்தேகம் உண்டு .. ஆனால் ஆதாரம் இல்லாமல் எதுவும் செய்ய முடியாமல் இருக்கிறார் ”

மூச்சு விடாமல் பேசி முடித்தான் சிவா..

ஒரு நிருபரை காதலித்த்து தவறோ என நினைக்க தொடங்கினாள் காமினி..

*************************************************************************************

” ஆமா காமினி... நான் உனக்காக எதுவும் செய்ய தயாரா இருக்கேன்.. ஆனால் நீ ஒரு நிருபனை காதலிச்ச,, அவன் உன்னை விட வேலையைத்தான் முக்கியமா நினைக்கிறான்.. இப்பவும் ஒன்னும் கெட்டு போகல.. என் இதய வாசல் உனக்காக திறந்துதான் இருக்கு “

கல்லூரி நண்பன் விமல் உருகி பேசுவதை உணர்ச்சி எதையும் காட்டாமல் கவனித்தாள் காமினி...

“!புதிய மனிதா ..பூமிக்கு வா “ செல்போன் கொஞ்சியது.. சிவாதான்,,,

“ காமினி... முக்கிய்மான விஷ்யம்.. இப்பத்தான் தெரிய வந்த்து.. உள்துறை அமைச்சரிடம் இருந்து வைரம் திருடு போயிருச்சு.. சிலரை சந்தேகப்பட்றாங்க.. ஆனால் திருடனுக்கு தேள் கொட்டுன கேஸ்..

விஷ்யத்தை வெளியே சொல்லாம போலிஸ் தேடுது.. அவங்களுக்கு முன்னாடி நாம முந்திக்கணும்.. ஏதாவது துப்பு கிடைத்தா சொல்லு..

அரசு சொத்தான வைரம் தொலைந்த்தை , ரிக்கார்டில் காட்டாத்து பெரிய குற்றம்.. இதை கிண்டினா பல மேட்டர் வெளியே வரும் “

பதிலை எதிர்பாராமல் இணைப்பை துண்டித்தான் சிவா..

” என்ன டியர்,,,எனி பிராப்ளம் “ என விமல் கேட்ட்தும்தான் , அவனும் உரையாடலை கேட்டு இருப்பான் என்பது அவளுக்கு புரிந்த்து..பரவாயில்லை.. பாதகம் இல்லை... அவன் உதவ கூடும்..

சுருக்க்மாக சொன்னாள்..

அவனுக்கு பல தொடர்புகள் உண்டு.. எனவே அவனுக்கு இது ஆச்சர்யமாக இல்லை..

மாறாக அவன் சொன்ன தகவல், காமினிக்கு ஆச்சர்யம் அளித்த்து.. யோசிக்க தொடங்கினாள்..

****************************************************************

” ஹலோ ..இன்ஸ்பெக்டர்... நான் காமினி பேசறேன்.. அமைச்சரோட பி ஏ தான் வைரம் திருடி இருக்கான்.. இதை வைத்து பிளாக் மெயில் அரசியல் செய்வது அவன் திட்டம்... சீக்கிரம் ஆக்‌ஷன் எடுங்க.. உண்மை தெரிஞ்ச எனக்கும் ஆபத்து.. பாதுகாப்பு கொடுங்க “

அவசரமாக பேசி முடிக்கவும், சிவா அவள் அறைக்கு வரவும் சரியாக இருந்த்து..

“ சபாஷ்... சீறும் பாம்பை நம்பு..சிரிக்கும் பெண்னை நம்பாதேனு சொன்னது சரிதான்... உனக்கு தெரிஞ்ச விஷய்த்தை எனக்கு சொல்லாம போலிசுக்கு சொல்றியா..துரோகி,,”

அவள் விளக்கம் அளிப்பாள் என நம்பியதற்கு மாறாக, அவள் புயல் போல வெளியே ஓடினாள்...சுதாரிப்பதற்குள் , ஸ்கூட்டியை ஸ்டார்ட் செய்து விட்டாள்.

“ ஏய் .. நில்லு “ ஓடினான் சிவா

**************************************************************************

சென்னையின் முக்கியமான இட்த்தில் இருக்கும் மருத்துவமனை...

” அய்யோ..அவள் இப்ப்டி பேய் போல வண்டியை கிளப்பும்போதே நினைத்தேன்..ஏதாவது ஆகும் என்று... விபத்தில் சிக்கி விட்டாளாமே... என் வண்டி பஞ்சர் ஆனதால் தொடர முடியவில்லை “ புலம்பினான் சிவா..

“ விமல்னு ஒருத்தர் தான் வந்து அவங்களை அட்மிட் செஞ்சாரு,,, இப்ப பரவாயில்லை சார் “ நர்ஸ் சொல்ல “ விமல்..ம்ம்ம்.. அவன் தான் அவளின் மன மாற்றத்துக்கு காரணமா ..? “ பல்லை கடித்தான் சிவா..

“ மிஸ் காமினி.. உங்க பல் டேமேஜ் ஆயிடுச்சு .. வேற ஒண்ணும் பெரிய பிராப்ளம் இல்ல,,, “

டாக்டர் சொன்னார்.

“அமைச்சரோட கார் டிரைவர் எப்படி இருக்கார் ? “ சைகையில் காமினி கேட்டாள்..

” சாரி,,காப்பாத்த முடியல.. ஒகே காமினி... நான் கிளம்புறேன் “ டாக்டர் கிளம்பினார்..

டாக்டர் அகன்றதும் காமினி எழுந்து தன் முகத்தில் இருந்த மாஸ்கை அக்ற்றிவிட்டு,வயர்களையெல்லாம் பிடுங்கி விட்டு அருகிலிருந்த கண்ணாடி ஜன்னலைத் திறந்து வெளியே குதித்தாள்.

*********************************************************************

“ என்ன ..காமினியை காணோமா... “ அதிர்ந்தான் சிவா..

” காதலனை பார்க்க போய் இருப்பா” விமல் வீட்டை நோக்கி சிவாவின் கார் சீறியது..

வீட்டில் விமல் இல்லை.. ஆனால்....

... காமினி இருந்தாள்... வாயில் பெரிய கட்டு போடப்பட்டு இருந்த்து..

பல்லை கடித்தான் சிவா..

“ஸாரி.. எனக்கு வேற வழி தெரியலை” என்று காமினியின் நெற்றிப் பொட்டில் துப்பாக்கியை வைத்தான் சிவா.”

”ப்ளீஸ்.. நான் சொல்றதை கேளுங்க” அவள் கண்கள் கெஞ்சின..

“ சாவுடீ நாயே” அவன் விசையை அழுத்தும் முன், போலிஸ் நுழைந்தது..

சட் என துப்பாக்கியை மறைத்தான் சிவா..

“ மேடம்.. உங்க உயிரை பணயம் வைத்து துப்பு கொடுத்தீங்க... நன்றி... ஆனால் அந்த பி ஏ வைரம் திருடல.. சும்மா நகை, பணம்னு திருடி இருக்கான்.. எனிவே அவனை கைது செஞ்சுட்டோம்..

வைரம் பத்தி துப்பு கிடைத்தாலும் சொல்லுங்க.. யாருக்கும் பயப்படாதீங்க.. உங்க பாதுகாப்புக்கு போலிஸ் இருக்கும் “

” அரசுக்கு எதிராக சதி செய்வதை தடுக்குமாறு கவர்னரிடம் மனு கொடுக்கனும் .. அவர் அப்பாயின்மெண்ட் கூட இருக்கு “ காமினி எழுது காட்டினாள்..

“ இவங்களை போலிஸ் பாதுகாப்போடு அழைத்து போங்க “: உத்தரவு வர, போலீஸ் ஜீப் கவர்னர் மாளிகை நோக்கி விரைந்த்து.. காமினியுடன் சிவாவும்...

ஆளுனர் பரந்தாமன் அன்புடன் வரவேற்றார்..

“காமினி... வெல்டன்.. எப்படியோ போலீஸ் கண்ல மண்ணைத் தூவிட்டு இந்த டைமண்டைக் கொண்டு வந்துட்டியே” என்று பாராட்டினார் பரந்தாமன்.

“ அவங்க பாதுகாப்போட்த்தான் வர்றேன்” காமினி வாய்திறந்து பேச ஆச்சரியமாக பார்த்தான் சிவா,,

“ என்ன அப்படி பார்க்கறீங்க,,, என் நண்பன் விமலும் வைரத்தை கைப்பற்ற முயன்று இருக்கான்,, உங்களை விட பெரிய ஆள் ஆகணும்ங்ற வெறி..

அமைச்சரோட கார் டிரைவர் மூலம் திருடி இருக்காங்க.. ஒரு ஆக்சிடண்ட்ல அவன் மாட்டி உயிருக்கு போராடிக்கிட்டு இருந்தான்..அதே ஆஸ்பத்திரில அட்மிட் ஆகி , டாக்டர் உதவியோட டிரைவரிடம் இருந்த வைரம் என் கைக்கு வந்துடுச்சு..

போலிஸ் கவனத்தை திசை திருப்ப, துப்பு கொடுக்குற மாதிரி பி ஏ வை போட்டு கொடுத்தேன்,,

விமலோ , நீங்களோ இன்வால்வ் ஆக முடியாது,, ஏன்னா , போலிஸ் பார்வை உங்க மேலையும் இருக்கு. சோ, நானே இதை செஞ்சு முடிச்சேன் “

அவள் புன்னகைக்க, அவள் புன்னகை பொன் நகையாக இல்லாமல், வைர நகையாக , ஜொலித்தது.. வைர பல்லை கழட்டி ஆளுனரிடம் கொடுத்தாள் காமினி...

7 comments:

  1. பட் எங்கயோ இடிக்குது

    ReplyDelete
  2. "பட் எங்கயோ இடிக்கு"
    எங்கே?
    "வைர பல்லு"
    பாதுகாப்பாக வைரத்தை கொண்டு வர , அவள் கண்டுபிடித்த டெக்னிக்

    ReplyDelete
  3. //LK said...

    பட் எங்கயோ இடிக்குது
    //

    எனக்கும் தான்!

    ReplyDelete
  4. "எனக்கும் தான்! "


    டாக்டர் அவளுக்கு உதவினார் என்பது , சொல்லாமல் சொல்லப்பட்டு இருக்கிறது.. லாஜிக் மீறல் எங்கும் இல்லை

    ReplyDelete
  5. ”நானும்எழுதியிருக்கேன் ... வைரம் உன் தேகம் ங்கற தலைப்பில்..”

    பார்த்தேன். படித்தேன்..ரசித்தென்... ரியல்லி சுபர்ப்

    ReplyDelete

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா