Tuesday, October 26, 2010

ஜிகாத் என்றால் என்ன ?

அமெரிக்காவின் இரட்டை கோபுரங்கள் வீழ்த்தப்பட்டபோதுதான் , ஜிகாத் என்ற வார்த்தை அதிகம் அடிபட ஆரம்பித்த்து..

உலகை உலுக்கும் ஜிகாத என்று பத்திரிக்கைகள் கவர் ஸ்டோரி வெளியிட்டன..

நாளடைவில் எங்காவது குண்டு வெடித்தால் , அத்னை ஜிகாத்தோடு ஒப்பிட்டு பார்க்க தொடங்கினர் மக்கள்..

சில இஸ்லாமிய தலைவர்களும் ஜிகாத் என்றால் தீவிரவாத செயல் மூலம் அரசை பலவீனப்படுத்தி, இஸ்லாமிய ஆட்சியை நிறுவுதல் என பேசுவதும் ஜிகாத என்ற சொல்லை பார்த்து ச்ற்று அச்சப்படும் நிலையை ஏற்படுதியது..

எந்த மத்த்திலுமே, மத நூல்கள் சொலவ்து ஒன்றாக இருக்கும்... மத தலைவர்கள் சொலவது ஒன்றாக இருக்கும்..

உண்மையில் ஜிகாத் என்றால் என்ன ?

மேலும் எவர்கள் நம்மை சந்திக்க கடினமாக முயற்சிப்பார்களோ அவர்களை நாம் நம் வழியில் நட்த்துவோம். நிச்சயமாக அல்லாஹ் நனமை செய்பவர்களுடன் இருக்கிறான் ( 29:70 )

இந்த குர் ஆன் வசனத்தில் ஜிகாத் என்ற சொல் கடினமாக முயற்சித்தல் என்ற அர்த்த்தில் பயன் படுத்த படுகிறது..இறைவனை அடைய கடினமாக முயற்சி செய்தல் என்பதை , கொல்லுதல் என மாற்றி விட்டார்கள்..

சில குறிப்பிட்ட நிபந்தனைகளின்பேரிலேயே போரை அனுமத்திக்கிறது குரான்..

இப்படி நேர்மையான முறையில் போர் செய்த்த்தாலேயே ஆரம்ப கட்டங்களில் , குறைவான பலத்துடன் இருந்த போதும் , முஸ்லிம்கள் வெற்றி பெற்றனர்..

மக்காவில் கொடுமைகளுக்கு ஆளான நபிகள் நாயகம் , மதினாவுக்கு குடி புகுந்தார்.. அங்கு எதிரிகள் போர் தொடுத்தனர்.. ஹிஜ்ரி இரண்டாம் ஆண்டில் பதர் எனும் இட்த்தில் போர் நடந்த்து..

போர் என்பதை ஒரு தற்காப்பு ஆயுதமாகத்தான் அவர் பயன்படுத்தினார்.. மத மாற்றம் செய்ய அல்ல.

மக்காவை வென்றதும் அனைவருக்கும் மன்னிப்பு வழங்கினார் என்பது வரலாறு..

சிலர் வன்முறை மூலம் மத்த்தை பரப்பலாம் என நினைத்தால் அது இஸ்லாம் கோட்பாடுகளுக்கு எதிரானது..

ஜிகாத் என்றால் என்ன ?

இருவகை உண்டு..

ஜிகாதே அக்பர் அல்லது ஜிகாதே கபீர் என்பது ஒன்று

ஜிகாதே அஸ்கர் அல்லது ஜிகாதே ஸகிர் என்பது மற்றொன்று..

குரானை பரப்புதல் , அதன்படி செயல்படுதல், மற்றவரை செயல்படசெய்தல் என்பது ஒன்று.

இரைவனை அடைய செய்யும் கடினமான முயற்சிகள் மற்றொன்று..

ஜிகாது என்ற சொல் வேறு பொருளிலும் பயன்பட்டு வருகின்றன..

ஜிகாதுகளில் மிக சிறந்த்து , இறைவனிடன் ஏற்று கொள்ள கூடிய ஹஜ் புனித பயணம் என சஹீஹ் புகாரியில் ஒரு நபி மொழி காணப்படுகிரது..

கொடிய ஆட்சியாளரிடம் உண்மையை எடுத்துரைப்பது மிகப்பெரிய ஜிகாது என மிஷ்காத் எனும் நபி தொகுப்பில் உள்ளது..

ஒருவர் நல்ல சினிமா ஒன்றை பார்த்தால், மற்றவரும் அதை பார்க்க வேண்டும் என விரும்புவார்..

சினிமாவே இப்ப்டி என்றால், தான் ஒரு வழியை பின்பற்றி அதன் அழகை அனுபவித்தவ்ர், மற்றவரும் அதை அடைய வேண்டும் என விரும்புவது மனித இயல்பு..

இதை பிரச்சாரம் செய்வது அவர் கடமை என கூட சொல்ல்லாம்.. அதை வன்முறை மூலம் செய்ய வேண்டும் என இஸ்லாம் சொல்லவே இல்லை..

சிலர் அப்படி பேச கூடும்.. அது அவர்கள் சொல்வதை வைத்து ஒரு கருத்தை உருவாக்க வேண்டியதில்லை..

நாமே நேரடியாக உண்மையை அறிய வாய்ப்புகள் இருக்கின்றன..

இறைவன் என்பவன் இருந்தால் அவன் அனைவருக்கும் பொதுவானவனாகத்தான் இருக்க முடியும்..

பிறப்பை வைத்து நம்மை எடை போட போவதில்லை.. செயல்கள்தான் முக்கியம்..

மத விளையாட்டுகளை விட்டு விட்டு , ஒரு பார்வையாள்னாக பார்த்தால் , நம்மை சுற்றி கொட்டி கிடக்கும் நல்ல விஷ்யங்கள் தெரிய வரும்...

குரானை படிக்க நேர்ந்த போது , தங்க சுரங்கத்தை பார்த்த்து போல இருந்த்து.. அந்த சந்தோஷத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்ளவே இந்த பதிவு

10 comments:

  1. மத விளையாட்டுகளை விட்டு விட்டு , ஒரு பார்வையாள்னாக பார்த்தால் , நம்மை சுற்றி கொட்டி கிடக்கும் நல்ல விஷ்யங்கள் தெரிய வரும்...

    .....அருமையான கருத்துங்க....

    ReplyDelete
  2. //மத விளையாட்டுகளை விட்டு விட்டு , ஒரு பார்வையாள்னாக பார்த்தால் , நம்மை சுற்றி கொட்டி கிடக்கும் நல்ல விஷ்யங்கள் தெரிய வரும்...//

    பார்வையாளனை இருந்து பார்த்தல் தான் "ஜோதி " தெரியும் .....:அப்படிதானே தல :)

    ReplyDelete
  3. பார்வையாளனை இருந்து பார்த்தல் தான் "ஜோதி " தெரியும் .....:அப்படிதானே தல :)

    பார்வையாளனாக இருந்தால் கிடைக்கும் அனுகூலங்கல் பல

    ReplyDelete
  4. நேர்வழி நாடி முயலும் அதே நேரத்தில், சக மனிதர்கள் மேல் நல்லெண்ணம் கொள்ளும் உங்களைப் போன்ற நல்லுள்ளங்கள்தாம் இந்த அவணிக்குத் தேவை.

    Great Sir, Royal Salute.

    ReplyDelete
  5. இந்தக் குடில் உங்கள் அறிவுக்குத் தீனி போடலாம்.
    http://pirapanjakkudil.blogspot.com/2010/10/blog-post_18.html

    ReplyDelete
  6. இந்தக் குடில் உங்கள் அறிவுக்குத் தீனி போடலாம்."



    உண்மைதான்... மிக மிக சிறப்பான எழுத்து ..அறிமுகப்படுத்தியதற்கு நன்றி

    ReplyDelete
  7. குரானின் லட்சணங்களை இங்கே படியும்!
    http://senkodi.wordpress.com/

    சாரு முஸ்லீமுக்கு ஜால்ரா போட்டா நீரும் அதை செய்யணுமா?have some originality man!

    ReplyDelete
  8. ஆபிரகாமிய மதங்களே மனிதனின் முழு கற்பனா சக்திக்கு சிறந்த எடுத்துகாட்டு!புரியலைன்னா A history of God பை Karen Armstrong புத்தகம் படிக்கவும்!

    ReplyDelete

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா