Pages
▼
Sunday, October 17, 2010
ஜெர்மன் செய்வது சரியே - நண்பர் மாணிக்கத்தின் மாற்று பார்வை
ஜெர்மனி கலாச்சாரத்தை பழகி கொண்டு இருப்பதானால் இருங்கள்..இல்லையேல் வெளியேறுங்கள் . பல கலாச்சாரங்கள் ஒன்றாக இருக்கும் தமாஷ் வேண்டாம் என்ற மன நிலை ஜெர்மனியில் தோன்றி இருப்பதை குறித்து என் கவலையை தெரிவித்து இருந்தேன்..
மற்றவரை ஏற்றுக்கொண்டு வாழவதுதான் நல்லது ..இன்றைய உலகில் அதுதான் அமைதிக்கு நல்லது..ஒவ்வொருவரும் தம் மொழி , இனம் சிறந்த்து என மற்றவரை அதை ஏற்க வற்புறுத்தினால் ஆபத்து என நினைக்கிறேன்..
செய்தியை மட்டும் படித்து நான் சொன்ன கருத்து அது.. ஆனால் அனுபவ ரீதியாக , ஆழந்த சிந்தனையுடன், பதிவர் க்க்கு – மாணிக்கம் பின்னூட்டம் இட்டு இருக்கிறார்..
அவர் கருத்தை ஏற்கிறோமோ இல்லையோ, அவரது வித்தியாசமான பார்வையை நாம் தெரிந்து கொள்வது நமக்கு நல்லது என்பதால் அதை தனி பதிவாக இடுகிறேன்..
இது அவரது கருத்து மட்டுமே... என் கருத்து அல்ல... அவர் கருதுடன் எனக்கு சிலவற்றில் உடன்பாடு இல்லை.. விரிவான விவாதம் தேவை
ஒரு பின்னூட்ட்தை இவ்வளவு ஆழ்ந்த சிந்தனையுடன், தன் அனுபவத்தை கலந்து எழுதிய அவர் எழுத்துக்கு தலை வனங்குகிறேன் ..
இதை முரண்பாடாக எண்ணாமல் கலந்துரையாடலாக எடுத்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறேன்
இனி வருவது அவர் கருத்து
***********************************
கக்கு - மாணிக்கம் said...
ஜெர்மனி ஜெர்மனியருக்கே என்று அந்நாட்டு ஆட்சியாளர் சொல்வதில் என்ன தவறு? இந்திய காலாசாரம்தான் சிறந்து என்று இந்தியர்கள் சொல்வார்கள்தானே?
இந்தியா இந்தியர்களுக்கே என்றால் கூட அதுவும் தவறா? இந்தியாவையும் ஜெர்மனியையும் இந்த தலைப்பை எடுத்துகொண்டு ஒப்பிடுவது தவறு.
சுதந்திரம் அடைந்த பின்னர் நம் நாட்டிற்கு எந்த அந்நியரும் பிற நாட்டவரும் வேலைகாகவோ அல்லது பிழைகவோ , தங்கள் நாட்டு அடக்கு முறைகள் வெறுத்து அகதிகளாகவோ கூட வரவில்லை. (இலங்கை தமிழர்களின்/அகதிகளின் நிலை வேறு.)
ஜெர்மனியில் பிற தேசத்துமக்கள் அணைவரும் வசிகின்றனர். தமிழர்களும் கூட உண்டு. அவர்கள் சிறுபான்மை எண்ணிக்கைதான். சென்ற முப்பது வருடங்களாக நிறைய அரபு நாட்டினர் அங்கு குடியேறி வசித்து வருகின்றனர்.குறிப்பாக சவூதி அரபிய நாட்டினர். அந்நாட்டு குடி உரிமையும் பெற்றுள்ளனர். இவர்களின் எண்ணிக்கை தற்போது அதிகமாகியுள்ளது. அதாவது இஸ்லாமியர்களின் எண்ணிக்கை அதிகமாகி வருகிறது. அதற்கே உண்டான பக்க விளைவுகளும் அங்குண்டு. மசூதிகளின் எண்ணிகையும் அதிகமாகி வருகிறது. பின்னர் அந்நாடு ஒரு இஸ்லாமிய நாடாக அறிவிக்கப்படும் சந்தர்பம் உள்ளது. இப்பவே தங்களின் மதம் சார்ந்த சட்டமான ஷரியத்தை மட்டும் பின்பற்ற அவர்கள் தீவிரமாக முயற்சி எடுகின்றனர்.
படித்துகொண்டு பகுதி நேர வேலை பார்க்கும் பல ஜெர்மானிய இளைஞர்கள் அணைவருக்கும் தற்போது அங்கு நிகழும் சூழல்கள் வெறுப்பை தந்துள்ளன. நான் முன்பு பயிற்சிக்காக சென்றிருந்தபோது தங்கியிருந்த ஹோட்டலில் மாலை நேரங்களில் வந்து பணியாற்றும் பல படித்துக்கொண்டு இருக்கும் இளையவர்கள் "பிறநாட்டவர்கள் தங்களின் வேலை வாய்ப்பை எடுத்துக்கொள்வதாக " கூறுகின்றனர்.
இதற்கு என்ன சொல்வீர்கள்? இதே நிலை இங்கு இந்தியாவில் நிலவினால் ஏற்றுகொள்வீர்களா? ஆனாலும் அதுவும் நடந்து கொண்டுள்ளது. பிற நாட்டு தெழிலாளர்கள் அதிக அளவில் வேலை செய்யும் அரபு நாடுகளில் அவர்கள் எல்லாம் எப்படி நடத்தபடுகிறார்கள் என்றாவது தெரியுமா?
அவர்கள் எல்லாம் தம் மதம் பரப்பவும், குடியுரிமை கேட்டும் போராட்டமா செய்கிறார்கள்? அரபு நாடுகளில் அல்லது எந்த ஒரு இஸ்லாமிய நாட்டிலாவது நீங்கள் ஒரு அடி மண் கூட வாங்க இயலாது. நீங்கள் ஒரு முசல்மானாக இருந்தாலும் கூட இதே விதிதான். அவ்வளவு ஏன் ? எல்லாரும் கொண்டாடும் "நம்ம ஊர்" காஷ்மீரில் ஒரு அடி நிலம் வாங்க எந்த இந்தியனாலும் இயலுமா?
நான் சொல்லுவதெல்லாம் இதுதான்; உள்ளூர் கதையே நாறிகிடக்க, நமக்கு ஏன் ஜெர்மனி பற்றி கவலை?
இன்னுமொன்று. நாம் தான் இன்னமும் அந்த ஹிட்லரை கட்டிக்கொண்டு அழுகிறோம் வேறு வழி வழி இல்லாமல். இன்றுள்ள ஜெர்மானிய தலை முறையினர் ஹிட்லரை ஒரு மன நலம் குன்றிய மனிதனாக எண்ணியே புறம் தள்ளுகின்றனர்.
இது ஒரு கலந்துரையாடல் என்ற அளவில் மட்டுமே கருதப்படவேண்டும் அன்றி சண்டை போடும் முயற்சியாக இல்லாமல் இருக்க விழைகிறேன்.
// மற்றவரை ஏற்றுக்கொண்டு வாழவதுதான் நல்லது ..இன்றைய உலகில் அதுதான் அமைதிக்கு நல்லது..ஒவ்வொருவரும் தம் மொழி , இனம் சிறந்த்து என மற்றவரை அதை ஏற்க வற்புறுத்தினால் ஆபத்து என நினைக்கிறேன்.//
ReplyDelete---------------------பார்வையாளன்.
அய்யா சாமி, நானும் இதைதான் சொல்கிறேன். ஒருசாரார் மட்டும் சகலதையும் ஏற்றுக்கொண்டு பிற, பல இன. மொழி. மத கலாச்சாரங்களை ஏற்றுக்கொண்டு ஒற்றுமையுடன் இருக்க வேண்டும்.
மற்றவர்கள் மட்டும் தன், இன. மொழி. மத வழிமுறைகளை மட்டுமே கொண்டாடி வாழலாம்.
பிறரை தன் மதம், மொழி, இனம் போன்ற காரணங்களை காட்டி பிரிவினையை நாடலாம்.
இது மட்டும் முரண்பாடாக இல்லையா?
இன்றைய காஷ்மீரில் "உமர் அப்துலா, காஷ்மீர் காஷ்மீரிகளுக்கே " என்று கூறுவதை ஏற்றுகொள்வீர்களா? அவர் "காஷ்மீர் இந்தியர்களுக்கே " என்று சொல்ல முடியுமா?
நம் ஊரில் உமர் அப்துல்லா அதை சொன்னால் அது சரி, ஆனால் வெளிநாட்டில் வேறு யாரோ ஒரு ஏதோ ஒரு நாட்டில் சொன்னால் அது பற்றி நாம் கவலை கொண்டு இளைத்து போக வேண்டும்?
கக்கு - மாணிக்கம் சொன்னது மிகவும் நேர்மையானதும், உண்மையானதுமாகும். ஜெர்மனியில் உள்ள இஸ்லாமியயரின் நடவடிக்கைகளால் அங்கே வாழும் மற்றைய வெளிநாட்டவர்களே வெறுப்படைந்துள்ளனர்.
ReplyDeleteAngela Merkel கருத்து தனது நாட்டின் மேல் உள்ள அக்கறையினால் வந்த நியாயமான தேவையான வெளிபாடாகும்.