Pages

Monday, November 1, 2010

அடுத்த தொழில் நுட்ப அதிரடி, இ-போன்

 

  சின்ன வயதில் சைக்கிள் ஓட்ட வேண்டும் என ஆசையாக இருக்கும்.. கஷ்டப்பட்டு , பெரியவர்களை கெஞ்சியோ, அழுதோ வாங்கி விடுவோம்..

கொஞ்ச நாள் பெருமையாக ஓட்டுவோம். அதன்  பின் அலுத்து விடும்.. எல்லோரும்தான் சைக்கிள் ஓட்டுகிறார்கள்.. இதில் என்ன பெருமை என தோன்றும்..

இந்த மன நிலை , எப்போதும் மாறுவதில்லை… 

ஒரு கார் வாங்க வேண்டும் என ஏங்குபவர்களுக்கு கார் வாங்கும் வரைதான் ஏக்கம்.. வாங்கி கொஞ்ச நாளிலேயே, எல்லோரும்தான் கார் வைத்து இருக்கிறார்கள் என தோன்றி விடும்..

செல்போன் வந்த ஆரம்ப காலத்தில், அது ஒரு ஆடம்பர அடையாளமாக கருதப்பட்டது..

அந்த கால கட்டத்தில், ஒரு இண்டர்வியூ சென்று இருந்தேன்.. காண்டாக்ட் நம்பர் கேட்டார்கள்… என் செல்போன் நம்பர் கொடுத்ததும் அதிர்ச்சி அடைந்தார்கள்.. அந்த நிறுவனத்தின் மேலாளரிடமே அப்போது செல்போன் இல்லை… செல்போன் வைத்து இருப்பவன், வேலைக்கு ஏன் வருகிறான் என நினைத்து இருக்க கூடும்..

அப்போது சாதாரண, எந்த வசதியும் இல்லாத, மெசேஜ் கூட அனுப்ப வசதி இல்லாத, சும்மா பேச மட்டுமே வசதியுள்ள போனின் விலையே மிக அதிகம்.,  எடையும் அதிகம்.

தவிர , இன்கமிங் காலுக்கும் அப்போது கட்டணம் உண்டு.. நாம் பேசினாலும் பயங்கர கட்டணம்..

இப்போது நிலை தலைகீழாகி விட்டது..

இந்தியாவில் , எல்லோரிடமும் இருக்கும் ஒரே பொருள் செல்போன் தான் என்ற நிலை ஏற்பட்டு இருக்கிறது அல்லவா ?

இல்லை….

செல்போன் வாங்க முடியாத பலர்  நம்மிடையே இருக்கின்றனர்.. முன்பு பார்த்த கார் உதாரணம்தான்..

நாம் கார்  வாங்கி விட்டால், இப்ப கார் எல்லாம் சாதாரணமாயிடுச்சுப்பா..  எல்லோரிடமும் கார் இருக்கிறது என நினைப்பதைப்போல, செல்போன் எல்லோரிடமும் இருக்கிறது என நினைக்கிறோம்..

ஆனால் உண்மை நிலை அப்படி இல்லை.. பலரால் செல்போன் வாங்க முடியாது…

இவர்கள் தகவல் தொடர்புக்கு என்ன செய்வது?

வேலை தேடுதல், கிராம புற தகவல் தொடர்பு போன்றவற்ருக்கு செல்போன் இருந்தால் நல்லது…

இந்த தேவைகளுக்காக அடுத்து வரப்போகும் தொழில் நுட்பம்தான், இ-போன்.. பிரிட்டன் நிறுவனம் ஒன்று இதை அறிமுகப்படுத்த உள்ளது,,,

என்ன இது?

நாம் எல்லாம் இ-மெயில் பயன்படுத்துகிறோம்.. சொந்தமாக கம்ப்யூட்டர் வைத்து இருந்தால்தான் , இ-மெயில் பயன்படுத்த முடியும் என்பது இல்லை..

ஹாட் மெயில், ஜி மெயில் என யாரிடமாவது அக்கவுண்ட் இருக்க வேண்டும்..  பிரவுசிங் செண்டரிலோ, அலுவலகத்திலோ, நண்பர்கள் வீட்டிலோ கம்ப்யூட்டர் இருந்தால், பத்து நிமிடத்தில் நம் மெயிலை செக் செய்து கொள்ளலாம். யார்ருக்காவது மெயில் அனுப்ப வேண்டும் என்றால், அனுப்பி கொள்ளலாம்.

இதே போன்றதுதான் இ-போன்…

ஒரு அக்கவுண்ட் உருவாக்கி கொள்ள வேண்டும்..   ஜி மெயில், ஹாட் மெயில் போன்றவை இ மெயில் சேவையை வழங்குவதுபோல ,  இந்த இ போன் சேவையை வழ்ங்குவதுதான் பிரிட்டன் நிறுவனத்தின் திட்டம்..

இந்த அக்கவுண்ட் மூலம் பயனாளர் பெயர் , கடவு சொல்லை பயன்படுத்தி எந்த போன் மூலமும் , நம் கணக்கை பார்வை இடலாம்.. நமக்கு வந்து இருக்கும் , வாய்ஸ் மெயில், எஸ் எம் எஸ் , மிஸ்டு கால் போன்றவற்றை பார்வை இடலாம்..

கால் செய்தும் கூட பேசலாம்… மெயில் அனுப்புவதுபோல… மெயில் அனுப்ப காசு இல்லை என்பது போல , கால் செய்து பேச காசு இருக்காது.. ஆனால் , ப்ரவுசிங் செண்டரில் , வொர்க் செய்யும் நேரத்திற்கு ஏற்ப காசு கொடுப்பது போல, போன் செண்டரில் காசு கொடுக்க வேண்டும்..

இந்த காசு , கால் செய்து பேசுவதை விட குறைவாகவே இருக்கும்… 

ஆகவே ஒரு தெருவுக்கு ஒரு போன் இருந்தால் கூட அனைவரும் பயன்படுத்தி கொள்ளலாம்..

இது டெலிபோன் பூத் போன்றது அல்ல என்பதை மறந்து விட கூடாது..இந்த முறையில், ஒவ்வொருவருக்கும் தனி தனி எண் இருக்கும் .. யாருக்கு வேண்டுமானாலும் தன் எண்ணை கொடுத்து விட்டு, அதன் பின் வேறு எந்த போனில் இருந்து வேண்டுமானாலும், தனக்கு வந்த தகவலை பெற்று கொள்ளலாம்..

பூத்தில் இது முடியாது..

 

சரி, இது ஏழைகளுக்கு மட்டும்தான் பயன்படுமா?

இல்லை… வசதியானவர்களுக்கும் பயன்படும்..

சிலர் இரண்டு , மூன்று போன் வைத்து இருப்பார்கள்… ஒரே போன் மூலம் மூன்று போன்களின் தகவலை ஒருங்கிணைக்க இந்த சேவையை பயன்படுத்தலாம்..

செல்போன் தொலைவது , பழுதாவது, சாதாரணமாகி விட்டன.. செல்போன் தொலைந்தாலும், தொடர்ந்து தொடர்பில் இருக்க இந்த சேவை பயன்படும்…

பேஜர்கள் போல இது பிளாப் ஆகுமா அல்லது செல் போன் போல புயலை கிளப்புமா என பொறுத்து இருந்துதான் பார்க்க வேண்டும்…

11 comments:

  1. //கொஞ்ச நாள் பெருமையாக ஓட்டுவோம். அதன் பின் அலுத்து விடும்.. எல்லோரும்தான் சைக்கிள் ஓட்டுகிறார்கள்.. இதில் என்ன பெருமை என தோன்றும்..

    இந்த மன நிலை , எப்போதும் மாறுவதில்லை…//

    Correct..

    ReplyDelete
  2. //பேஜர்கள் போல இது பிளாப் ஆகுமா அல்லது செல் போன் போல புயலை கிளப்புமா என பொறுத்து இருந்துதான் பார்க்க வேண்டும்…//

    ஆமாங்க.

    ReplyDelete
  3. இந்த தொழில்நுட்பம் வரவேற்கத்தக்கது.
    பொறுத்திருந்து பாப்போம்....

    ReplyDelete
  4. இந்த தொழில்நுட்பம் வரவேற்கத்தக்கது .
    பொறுத்திருந்து பார்போம்....

    ReplyDelete
  5. நல்ல ஒரு டெக்னாலஜியாகத் தான் தெரிகிறது ... இருப்பினும் எனக்கு இது சரிபட்டு வருமா என தெரியவில்லை... பார்ப்போம். பகிர்வுக்கு நன்றி. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  6. Technology..... You can't live with them - You can't live without them!!! :-)

    ReplyDelete
  7. பொறுத்திருந்து பார்ப்போம்...

    ReplyDelete
  8. போனை தூக்கி கொண்டு அலைய வேண்டியதில்லை என்ற அளவில் இந்த டெக்னாலஜி நல்லதுதான்.. ஆனால் செல்போன் தகவல் தொடர்பையும் தாண்டி வேறு பல விஷயங்களுக்கும் பயன் படுகிறது.. பாட்டு கேட்பது, போட்டோ எடுப்பது போல பல விஷயங்கள்..
    எனவே போனை தூக்கி கொண்டு அலைய வேண்டியதில்லை என்ற அம்சம் வரவேற்பை பெறுவதில் சற்று சிக்கல் இருக்கிறது ..
    ஆனாலும் அடிக்கடி போனை தொலைக்கும் என்னை போன்றவர்களுக்கு , இந்த தொழில் நுட்பம் பயன்படும்..

    ReplyDelete
  9. //நாம் கார் வாங்கி விட்டால், இப்ப கார் எல்லாம் சாதாரணமாயிடுச்சுப்பா.. எல்லோரிடமும் கார் இருக்கிறது என நினைப்பதைப்போல, செல்போன் எல்லோரிடமும் இருக்கிறது என நினைக்கிறோம்..
    யோசிக்க வெச்சுட்டீங்களே!... நன்றி

    ReplyDelete
  10. ஒரே இடத்தில் வசிப்பவராக இருந்தால் o.k

    அனால், எங்களை போன்று travel'll இருப்போருக்கு உதவ செல்போன் தவிர வேறு எதுவும் இல்லை, இந்த உலகினில் ! [ பயணத்தின் போதும், பேசிக் கொள்ள (கொல்ல) ]

    .சிவப்பு_மனிதன்

    ReplyDelete

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]