கூட்டமான பேருந்தில் செல்கிறோம்..
யாராவது நம் பத்து பைசா பர்சை அடித்து விட்டு தப்ப முயன்றால் என்ன செய்வோம்… ?
தர்ம அடி கொடுக்க முயல்வோமா இல்லையா?
திருடியவனின் கஷ்டம், சமூக அவலம், அவனை இப்படி ஆக்கிய சூழ் நிலை எல்லாவற்றையும் ஆராய வேண்டும் என கோருவோமா?
அப்படியே அவன் தப்பி விட்டாலும், அந்த நாயை பிடித்து கொல்ல வேண்டும் என துடிப்போமோ இல்லையா..
ஒரு பத்து பைசா பர்சுக்கு இந்த ஆர்ப்பாட்டம்..
இதுவே , இன்னொருவருக்கு இழப்பு என்றால் நம் பார்வை எப்படி இருக்கும்..
ஏன் அவனை போட்டு அடிக்கிறீங்க? அடிப்பதுதான் இதற்கு தீர்வா? பிடிபட்டதால் இவனை அடிக்கிறோம்.. பிடிபடாத திருடர்களை என்ன செய்ய போகிறோம்…
சமூகத்தை சீர்திருத்துவதுதான் இதற்கு தீர்வு..
இப்படி எல்லாம் டீ கடை பானியில் வெட்டி நியாயம் பேசுவோம், பர்ஸை பறி கொடுத்தவன் அடுத்தவன் என்றால்..
இதே பாணி கருத்து வெள்ளம்தான் இப்போது பதிவுலகில் பாய்ந்து வருகிறது..
கோவை மக்கள் அன்பாக பழக கூடியவர்கள்.. சண்டை போட்டால் கூட கண்ணியமான வார்த்தைகளை பயன்படுத்த கூடியவர்கள்..
ஒரு சிறுவனும், சிறுமியும் கொடும் செயலுக்கு உள்ளான போது , தம் குடும்பத்திலேயே இழப்பு ஏற்பட்டது போல துடித்து விட்டனர்…
சென்னை போன்ற பெரு நகரங்களில் இது ஜஸ்ட் ஒரு பரபரப்பு செய்தி மட்டுமே…ஆனால் கோவையில் அப்படி இல்லை..
இந்த நிலையில் , கொலையாளிகள் கைது செய்யப்பட்டனர்.,,,,
அவர்களை கொலையாளிகள் என சொல்ல கூடாது.. குற்றம் சாட்டப்பட்டவர்கள் என்றுதான் சொல்ல வேண்டும் என் பதிவுலக அறிவு ஜீவிகள் சட்ட நுணுக்கத்தை ஆராய்ந்த நிலையில், படிக்காதோர், சாதாரண மக்கள் , போன்றோர் , இந்த குழந்தைகளை எப்படி கொல்ல மனம் வந்தது என கதறினர்.. கொலையாளிகள் முகத்தில் காறி துப்பினர்..
புழல் சிறையில் அங்கு இருந்த கைதிகளே இவர்களை தாக்க முயன்றனர்..
அவர்களுக்கெல்லாம் பதிவுலகமோ, அறிவு பூர்வ தர்க்கங்களோ தெரி்யாது…
இந்த நிலையில் கொலையாளி ஒருவர் இறந்தது, இவர்களுக்கு ஓர் ஆறுதலாக இருந்தது…
இதற்கு காரணம் இருக்கிறது..
நம் ஊரில் ஒரு குற்றத்திற்கு தண்டனை வாங்கி தருவது அவ்வளவு எளிதல்ல…
டில்லியில் , பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட ஒரு பெண்னின் வழக்கு நடந்து ஓர் அற்பமான தண்டனை வழங்கப்பட்டது..
இன்னொரு பெண் பாதிக்கப்பட்டு, சுய நினைவு இன்றி வாழ்கிறார்.. வழக்கு முடியவில்லை..
தமிழ்னாட்டில், நாவரசு என்ற மாணவர் கண்ட துண்டமாக வெட்டி கொல்லப்பட்டார்.. யாருக்கும் தண்டனை இல்லை ….
ஆலடி அருணா கொலை உள்ளிட்ட பல கொலை வழக்குகளும் இப்படித்தான்..
இந்த பின்னனியில், ஏதோ ஒரு வகையில் குற்றவாளி இறந்தது, இந்த கையலாகாத சமூகத்தில் வாழும் மக்களுக்கு ஒரு சிறிய ஆறுதலை அளித்தது,,
அவ்வலவுதான்.. பொங்கி எழுந்தனர் பதிவுலக மஹாத்மாக்கள்…
கொலையை கொண்டாடும் மக்கள், உணர்ச்சி வசப்பட்ட பரிதாப ஜீவன்கள் , கொலையாளியின் பரிதாபம் என கொட்டி தீர்த்து விட்டனர்..
அட ஆண்டவா,,, பாவம்,, குழந்தையை இழந்தவர்களுக்கு ஒரு அப்பாவித்தனமான ஓர் ஆறுதல்…. மீண்ட உயிர் வர போவதில்லை.. ஆனால் சிறிது காலம் கழித்து கொலையாளி சுதந்திரமாக வருவதை பார்க்கும் அவலம் இல்லாமல் , உடனே இறப்பதை பார்த்ததும், சிறிய ஆறுதல்..
இதை கொண்டாட்டம் என கொச்சைப்படுதுவது, நம் இதயம் எவ்வளவு தூரம் இறுகி இருக்கிறது என்பதை காட்டுகிறது…
இது ஒரு தீர்வு என யாரும் சொல்லவில்லை.. என்கவுண்டர் இல்லாமல் வேறு வகையில் முடிவு வந்து இருந்தாலும், இய்றகையின் நீதி என்றுதான் எடுத்து கொண்டு இருப்பார்கள்..
அதை புரிந்து கொள்ளாமல், எல்லா குற்றங்கலுக்கும் என்கவுண்டர்தான் தீர்வா என குதர்க்கம் பேசுகின்றனர்.
அய்யா, அறிவு ஜீ்விகளே… சாதாரன மனிதன் நிரந்தர தீர்வை பற்றி யோசிக்கவில்லை…
நம் குடும்பதில் ஒரு இழப்பு.. அந்த பாதிப்பை ஏற்படுதியவன் இறந்தது ஒரு வித ஆறுதலை தருகிறது ..அவ்வளவுதான்..
யாரோ ஒரு குடும்பத்தில் நிகழ்ந்த துக்கத்தை , தம் குடும்ப துக்கமாக நினைத்த அந்த அன்பு உள்ளங்களின், கோவை மக்களின் பாதம் தொட்டு வணங்குகிறேன் ..
வெட்டி நியாயம் பேசும் பதிவுலகை நினைத்து பரிதாப படுகிறேன்…
இந்த கொலையாளிகளைப்பார்த்து பரிதாபப்படும் இந்த நாதாரிகள் யாரும் கொலைசெய்தி வெளியான போது எந்த கண்டனமும் தெரிவிக்கவில்லை. ஏன்னா சென்னைல இதெல்லாம் ஜகஜமாம். ஏண்டா உங்க ஊருல தெருவுக்கு தெரு கொலைகாரர்களும் மொல்லமாறிகளும் இருந்தால் எல்லா ஊருலயும் அப்படியே இருக்கனுமா? இந்த கொலைகாரனை சட்டம் தண்டிக்கும்னு விட்டிருந்தால் 6 மாசத்துல ஜாமின்ல வெளில வந்து திரும்பவும் ஆட்டத்த ஆரம்பிச்சிடுவானுங்க. நீதிமன்றம் திருந்தாதவரை இது போன்ற என்கவுன்டர்கள் அவசியம். நாம அந்த குழந்தை நம்மதா இருந்தா எப்படி இருக்கும்னு யோசிக்கறோம். இந்த பாவிகள் அந்த கொலையாளிகள் நாமா இருந்தா எப்படி இருக்கும்னு யோசிக்கிறானுங்க.
ReplyDeletenice views
ReplyDeleteஎன்னுடைய எண்ணத்தை அப்படியே பிரதிபலித்திருக்கிறீர்கள். நானும் இதே போல ஒரு பதிவு எழுதி இருக்கிறேன். பார்க்கப் போனால் சமூக சூழ்நிலையால் அனைத்து குற்றங்களுமே நடக்கிறது. இதற்காக பரிதாபபடுவதை விட தீர்வு என்ன என்று யோசிப்பதே அறிவுபூர்வமாக இன்றையத் தேவை.
ReplyDeleteகுழந்தைகளையும் பெண்களையும் உண்மையிலேயே சமூதாயத்தில் மதித்து நடத்தும் நேரம் எப்பொழுது வருமோ?
ReplyDeleteநண்பரே, சுட்டுக் கொல்லப்பட்டவர் குற்றவாளி என்று முடிவு செய்தீர் ? இல்லாமலும் இருக்கலாம்தானே...
ReplyDeleteஏன் இந்த அவசர நாடகம் ? யாரைக்காப்பாற்ற ? என்பது போன்ற கேள்விகள் எழவில்லையா உங்கள் மனதி்ல்
Well done Kovai police, continue this in future. If possible try to encounter Mohanraj fiends who helped to abduct the kids
ReplyDeleteசரிதான்... அந்த சிறுவன் சிறுமியின் பெற்றோர் இடத்தில் இருந்து பார்த்தால் மட்டுமே அந்த வலி புரியும்...
ReplyDelete/நண்பரே, சுட்டுக் கொல்லப்பட்டவர் குற்றவாளி என்று முடிவு செய்தீர் ? இல்லாமலும் இருக்கலாம்தானே...
ReplyDelete//
உங்கள் குழந்தைக்கு இது நடந்தால்(வேறு வழி இல்லாமல்தான் கேட்கிறேன் ) இதே நியாயத்தை பேசுவீர்களா
ஏன்னா சென்னைல இதெல்லாம் ஜகஜமாம்.
ReplyDeleteஉண்மை.. விபத்தில் சிக்கி துடிப்ப்தை கூட லைவ் ஷோவாக பார்த்து ரச்க்கும் மக்களுக்கு , கோவை போன்ற நகர மக்களின் அன்பு புரியாது
Suresh S R said...
ReplyDeletenice views"
thanks
மூக சூழ்நிலையால் அனைத்து குற்றங்களுமே நடக்கிறது. இதற்காக பரிதாபபடுவதை விட தீர்வு என்ன என்று யோசிப்பதே அறிவுபூர்வமாக இன்றையத் தேவை."
ReplyDeleteவழி மொழிகிறேன்
Chitra said...
ReplyDeleteகுழந்தைகளையும் பெண்களையும் உண்மையிலேயே சமூதாயத்தில் மதித்து நடத்தும் நேரம் எப்பொழுது வருமோ?”
எதோ ஒரு பெண்னுக்கு, ஒரு குழந்தைக்கு துன்பம் இழைக்கப்பட்டால் , அந்த வேதனையை நாம் உண்ர வேண்டும்... ஆனால் நகர வாழ்வு , இதை வெறும் செய்தியாக பார்த்து விவாதிக்கும் நிலையை ஏற்படுத்தி விட்டது
நண்பரே, சுட்டுக் கொல்லப்பட்டவர் குற்றவாளி என்று முடிவு செய்தீர் ? இல்லாமலும் இருக்கலாம்தானே.."
ReplyDeleteபின்னணியில் இன்னும் சிலர் இருக்கலாம் என்பது உணமைதான்..
ஆனால் அதை எல்லாம் னம் நீதி துறை தண்டிக்கும் என்ற நம்பிக்கை இல்லாத நிலையில், இதாவது நடந்ததே என்ற ஆறுதல்தான்
”Well done Kovai police, continue this in future. If possible try to encounter Mohanraj fiends who helped to abduct the kids”
ReplyDeleteall to be punished under law... but is our judicial system will do it?
philosophy prabhakaran said...
ReplyDeleteசரிதான்... அந்த சிறுவன் சிறுமியின் பெற்றோர் இடத்தில் இருந்து பார்த்தால் மட்டுமே அந்த வலி "
உண்மை ந்ண்பரே
நண்பரே, சுட்டுக் கொல்லப்பட்டவர் குற்றவாளி என்று முடிவு செய்தீர் ? இல்லாமலும் இருக்கலாம்தானே...
ReplyDelete//
உங்கள் குழந்தைக்கு இது நடந்தால்(வேறு வழி இல்லாமல்தான் கேட்கிறேன் ) இதே நியாயத்தை பேசுவீர்”
இப்படி கேட்பது மனிதாபிமானம் அல்ல என்பதால்தான் நான் அப்படி கேட்கவில்லை..
ஆனால் ஒரு வாத்தக்குகாக நீங்கள் கேட்பதை புரிந்து கொள்கிறேன்..
நம் மக்களுக்கு அவர்களுக்கு வந்தால்தான் கஷ்டமும் , துன்பமும் புரியும்..
கிராம புறங்கலில் மற்றவர் துன்பத்தை தம் துன்பமாக நினைக்கும் இயல்பு இன்னும் இருக்கிறது
//கிராம புறங்கலில் மற்றவர் துன்பத்தை தம் துன்பமாக நினைக்கும் இயல்பு இன்னும் இருக்கிறது. //
ReplyDeleteஇது நிஜம்தான் நண்பரே.
அவன் தான் கொலை செய்தான் என்று எப்படி ஒரே நாளில் முடிவு செய்யப்பட்டது?
ReplyDeleteஅடுத்து.
முடிவு செய்பவர் யார்? போலீசா, நீதிபதியா?
போலீசு காண்ஸ்டபுளுக்கு அவ்வளவு அறிவா?
"முடிவு செய்பவர் யார்? போலீசா, நீதிபதியா?"
ReplyDeletepolice did not give judgement.. they cant give..and should not give..
ஒரு கொலைக்கு இன்னும் ஒரு கொலை முடிவாகாது. குற்றம் சாட்டபட்டவர்கள் உன்மையிலையே குழந்தைகளை கொலை செய்தவர்களாக இருந்தால், நிச்சயம் மனநிலை பாதிக்கபட்டவர்களாகத்தான் இருப்பார்கள்!!!
ReplyDeleteஇதற்கு முன்னர் நாட்டில் எங்குமே குழந்தைகளைக் கடத்துவதோ, கற்பழிப்போ அல்லது கொலையோ நடந்ததே இல்லையா? இதுதானா முதல்முறை? அந்தக் குற்றவாளிகள் அத்தனைபேரும் தண்டிக்கப்பட்டுவிட்டனரா?
ReplyDeleteசரி இதுதான் ஆரம்பம் என்றே வைத்துக்கொண்டாலும் இனிமேல் இப்படிப்பட்ட தண்டனைகள் "பாரபட்சம்" இல்லாமல் தொடருமா - அது யார் குற்றவாளியாக இருந்தாலும்...?
என்வீட்டு குழந்தையாக இருந்தால் இப்படி பேசுவேனா? ஹ்ம்ம்ம்...
என்வீட்டு பையன்மீது இப்படி ஒரு முறையில்லாத விசாரணை இல்லாத ஒரு என்கவுண்டர் நடத்தப்பட்டு இருந்தால்...???
சரி... அவன் உண்மையாகவே பொறுக்கியாக இருக்கட்டும்... இதே தண்டனையை "எல்லா" குற்றவாளிகளுக்கும் கொடுக்கக்கூடிய தெனாவட்டு கோவை காவல்துறையினருக்கு இருக்கிறதா?
ஒரு கால்டாக்ஸி டிரைவர் முதல் அரசாங்க ஊழியர், அரசியல் அதிகாரி, அரசியல்வாதி, வலதுகை, இடதுகை, அல்லக்கை, நொள்ளக்கை எல்லா கைக்கும் இந்த தண்டனை கொடுக்கக்கூடிய தெனாவட்டு கோவை காவல்துறையினருக்கு இருக்கிறதா? இல்லை எந்தப் பின்னணியும் இல்லாத இதுபோன்ற சப்பை குற்றவாளிகளிடம் மட்டும்தான் வீரம் வெளிப்படுமா?
சைலேந்திரபாபு நெஞ்சில் கைவைத்து சொல்லட்டும். கோவை மக்கள் அத்தனைபேரும் நெற்றியில் கைவைத்து சல்யூட் செய்வோம்...
அடடா.. திரும்ப திரும்ப தவறாகவே பேசுகிறீர்கள்..
ReplyDeleteதாங்கள் தண்டனை கொடுத்ததாக போலிசும் சொல்லவில்லை.. மக்களும் சொல்லவில்லை...
சொந்த காரனத்துக்காவோ, அரசியல் காரணத்துக்காகவோ, அல்லது தற்செயலாக துப்பாக்கி வெடித்தோ கூட அவன் இறந்து இருக்கலாம் .. அதெல்லாம் விசாரணைதான் முடிவு செய்யவேண்டும்...
சாதாரண மனிதன் பார்வையில், ஒரு மனித மிருகம், சிறுமியிடம் தவறாக நடந்து கொண்ட ஒரு மிருகம் இறந்தது நல்லதுதான் என மக்கள் நினைக்கிறார்கள்.. அவ்வளவுதான்..
// சொந்த காரனத்துக்காவோ, அரசியல் காரணத்துக்காகவோ, அல்லது தற்செயலாக துப்பாக்கி வெடித்தோ கூட அவன் இறந்து இருக்கலாம் .. அதெல்லாம் விசாரணைதான் முடிவு செய்யவேண்டும்... //
ReplyDelete- காமடி பண்ணாதீங்க சார்... ஊருக்கே தெரியும் எப்படி கொன்னாங்கன்னு, முக்கியமா கண்டிப்பா கமிஷனர் மனசாட்சிக்கு...
"ஊருக்கே தெரியும் எப்படி கொன்னாங்கன்னு,"
ReplyDeleteyes friend.. i know,, u know... how it happened ..perhaps it may be against law..
but common man does bother about causes... as for he is concerened an animal which killed his children was killed,,, thats all...
but only we, the bloggers , who does not have any emotional impact on that children , discuss about causes..
that common man would have been happay even if an accident killed that animal...
encounter or no encounter ..that is not comman man mans concern
எந்தப் பின்னணியும் இல்லாத இதுபோன்ற சப்பை குற்றவாளிகளிடம் மட்டும்தான் வீரம் வெளிப்படுமா"
ReplyDeletethis is not a courage at all...
but the person who was killeed..that is matter..
if a freedom fighter killed like that people wpuld have reacted differently..
"என்வீட்டு பையன்மீது இப்படி ஒரு முறையில்லாத விசாரணை இல்லாத ஒரு என்கவுண்டர் நடத்தப்பட்டு இருந்தால்...???"
dear firend.. there are lot of innocnet peopel suffering in jail after ur so called proper enquiry...
our judicial system is so bad.. so something happened in favour of common man , he feel happy..
he is not in position to analyse legal points
அந்தக் குற்றவாளிகள் அத்தனைபேரும் தண்டிக்கப்பட்டுவிட்டனரா"
ReplyDeleteno... they did not get punishment and will not get punishment..
they will either get natural death or death like this...
that is beauty of our system...
// yes friend.. i know,, u know... how it happened ..perhaps it may be against law.. //
ReplyDelete- IT IS against law... and doesnt need a blogger (as you comment in your post) to claim against this ridiculous encouter.
// but common man does bother about causes... as for he is concerened an animal which killed his children was killed,,, thats all... //
- common man never knows when to react and for what to react. it is all about thought and not emotion. a crowd is always emotion bound.
// but only we, the bloggers , who does not have any emotional impact on that children , discuss about causes.. //
- of course, we have to be like that. this is not naattamai panchayat. As per our democratic law the accused (not convict) has all the rights to defend him, even if he is a criminal. but i am not here to talk about that, anyway...
// that common man would have been happay even if an accident killed that animal...
encounter or no encounter ..that is not comman man mans concern
- we cannot encourage all that makes common men happy who thinks emotionally.
// this is not a courage at all... //
- thats what exactly i was talking about.
// but the person who was killeed..that is matter..
if a freedom fighter killed like that people wpuld have reacted differently.. //
- how they would reacted? what was the reaction on gandhiji's assasination? was nathuram encountered?
// dear firend.. there are lot of innocnet peopel suffering in jail after ur so called proper enquiry... //
- i totally agree with u.
// our judicial system is so bad.. so something happened in favour of common man , he feel happy..
he is not in position to analyse legal points //
- i totally agree with you but cannot be justified...
// no... they did not get punishment and will not get punishment..
they will either get natural death or death like this...
that is beauty of our system... //
- beauty? system? how come suddenly u become so philosophical.
so simple... my only question and concern is what if the guys was an innocent? i need a straight forward answer please.
thank you.
"a crowd is always emotion bound."
ReplyDeleteஉண்மைதான்... எளிய மனிதர்கள் உணர்வு பூர்வமாகத்தான் இருப்பார்கள்..
கிராமப்புற்ங்களில் விபத்தில் சிக்கினால் , அய்யோ பாவம் என உதவ வருவார்கள். அறிவுபூர்வமாக சிந்திக்கும் நகரங்களில் , பொறுமையாக நின்று விபத்தை வேடிக்கை பார்ப்பார்கள்..
எளிய மனிதர்களின் உணர்வுகளை இலக்க்ராமாக நினைப்பது தவறு..
அந்த குழந்தைகளுக்காக தீப்பாவளியை ரத்து செய்த எமோஷ்னல் கூட்டத்தையும், சினிமா பார்க்கும் நேரம் போக , ஓய்வு நேரத்தில் பதிவு போடும் அறிவு ஜீவுகளையும் ஒப்பிட்டு பாருங்கள்.
so simple... my only question and concern is what if the guys was an innocent?
...
இறந்தவர் நம் சகோதரன் ..அவன் ஒரு அப்பாவி என வைத்து கொள்ளுங்கள்.. நமக்கு எவ்வளவு வேதனையாக இருக்கும்..? சட்டமும் ஒன்றும் செய்யாது... நீதி கிடைக்க வாய்ப்பே இல்லை..
இந்த நிலையில் அந்த போலீசார் ஏதாவது விப்த்திலோ , சண்டையிலோ இறந்து விட்டால், அந்த அப்பாவியின் சகோதரன் என்ற முரையில் ஒழிந்தார்கள் எதிரிகள் என லேசான ஆறுதல் கிடைக்கும்...
இந்த ஆறுதல்தான் குழைந்தைகளி நேசிப்பவர்கலுக்கு கிடைக்கிறது..
இதை சரி என்றோ, இதுதான் தீர்வு என்றோ சொல்ல முடியாது.
ஆனால், நம் பாரத திரு நாட்டில் அப்பாவிகலின் நிலை இதுதான்
// இறந்தவர் நம் சகோதரன் ..அவன் ஒரு அப்பாவி என வைத்து கொள்ளுங்கள்.. நமக்கு எவ்வளவு வேதனையாக இருக்கும்..? சட்டமும் ஒன்றும் செய்யாது... நீதி கிடைக்க வாய்ப்பே இல்லை..
ReplyDeleteஇந்த நிலையில் அந்த போலீசார் ஏதாவது விப்த்திலோ , சண்டையிலோ இறந்து விட்டால், அந்த அப்பாவியின் சகோதரன் என்ற முரையில் ஒழிந்தார்கள் எதிரிகள் என லேசான ஆறுதல் கிடைக்கும்...
இந்த ஆறுதல்தான் குழைந்தைகளி நேசிப்பவர்கலுக்கு கிடைக்கிறது..
இதை சரி என்றோ, இதுதான் தீர்வு என்றோ சொல்ல முடியாது.
ஆனால், நம் பாரத திரு நாட்டில் அப்பாவிகலின் நிலை இதுதான் //
- மன்னியுங்கள். இதில் நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் என்று எனக்கு சுத்தமாக புரியவில்லை.
// கிராமப்புற்ங்களில் விபத்தில் சிக்கினால் , அய்யோ பாவம் என உதவ வருவார்கள். அறிவுபூர்வமாக சிந்திக்கும் நகரங்களில் , பொறுமையாக நின்று விபத்தை வேடிக்கை பார்ப்பார்கள்..//
ReplyDelete- உண்மைதான். நகரங்களில் மனிதர்களுக்கு பின்விளைவுகள் புரிகிறது. அது தவறு என்று எப்படி கூறமுடியும்?
// எளிய மனிதர்களின் உணர்வுகளை இலக்க்ராமாக நினைப்பது தவறு.. //
- யாருமே அப்படி நினைக்கவில்லை... அரசியல்வாதிகளையும் அரசாங்க அதிகாரிகளையும் தவிர... என்னால் உறுதியாகக் கூறமுடியும்
// அந்த குழந்தைகளுக்காக தீப்பாவளியை ரத்து செய்த எமோஷ்னல் கூட்டத்தையும், சினிமா பார்க்கும் நேரம் போக , ஓய்வு நேரத்தில் பதிவு போடும் அறிவு ஜீவுகளையும் ஒப்பிட்டு பாருங்கள்.//
- என்ன செய்யலாம்... உன்னைப் போல் ஒருவனில் மோகன்லால் சொன்னபடி ஒரு துப்பாக்கியைத் தூக்கிக்கொண்டு வெறிபிடித்தாற்போல் தெருவில் ஓடலாமா?
"மன்னியுங்கள். இதில் நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் என்று எனக்கு சுத்தமாக புரியவில்லை"
ReplyDeleteநண்பரே.. சட்டப்படி குற்றவாளிகள் தண்டிக்கப்ப்டுவதுதான் நல்லது.. அதுதான் நியாயம்.
ஆனால் அதற்கு வாய்ப்பில்லாத நிலையில், குற்றவாளிகள் வேறு விதமாக தண்டிக்கப்படும்போது மக்கள் ஆறுதல் அடைகிறார்கள்.
உதாரணமாக , மகிந்தா ராஜபக்சேவை போர் குற்றவாளி என் சர்வதேச நீதிமன்றம் தீர்மானித்து தண்டனை வழங்குனால் அது சரியான செயலாக இருக்கும். ஆனால் அது நடக்காது.
இந்த நிலையில், உள் நாட்டு சதியாலோ , தீவிரவாதிகளாலோ அவர் கொல்லப்பட்டால் , ஒருவித ஆறுதல் கிடைக்கும்.
அதாவது என்கவுண்டர் என்பதை ஒரு தீர்வாக சாதாரண மனிதன் நினைக்கவில்லை.
சிறுமியை சீரழைத்த ஒருவன், மரணத்தை தழுவும்போது ஆறுதல் அடைகிறார்கள்.
என்கவுண்டர் இல்லாமல் , சக கூட்டாளியால் இந்த முடிவை அடைந்து இருந்தாலும், இதே ஆறுதல் கிடைத்து இருக்கும்...
இது எல்லாம் தீர்வு அல்ல என்பதை ஒப்புகொள்கிரேன். ஆனால் இப்படி நடக்கும்போது ஒரு சாரார் மகிழ்வது இயல்புதான்..
நாளையே ராஜபக்சே கொல்லப்பட்டால், ஒரு சாரார் மகிழ்வார்கள்.. ஒரு சாரார் இது தவறு என வாதிடுவார்கள்...
// நண்பரே.. சட்டப்படி குற்றவாளிகள் தண்டிக்கப்ப்டுவதுதான் நல்லது.. அதுதான் நியாயம். //
ReplyDelete//இது எல்லாம் தீர்வு அல்ல என்பதை ஒப்புகொள்கிரேன்//
- அப்படி என்றால் "அறிவுஜீவிகள்" "பதிவுலக மகாத்மாக்கள்" அப்படின்னு பகடி பேசக்கூடாதுங்க...