எங்கிருந்தோ ஓடி வரும் ஆறு கடலில் கலந்து தன் பயனத்தை முடிவு செய்கிறது…
சுத்தமான ஆற்று நீர் கடலில் கலந்ததும் , கடலின் உப்பு சுவையை பெறுகிறது,,,
இதை எல்லாம் பார்க்கும்போது கவிதை தோன்றலாம்., வாழ்வியல் தத்துவம் தோன்றலாம்…
சிலருக்கு அறிவியல் கண்டுபிடிப்பு தோன்றி இருக்கிரது..
இப்படி ஆற்று நீர் கடலில் கலக்கும் இடத்தில் இருந்து மின்சாரம் தயாரிக்க முடியும் என்கிறார்கள் நெதர்லாந்து விஞ்ஞானிகள்..
சுற்றுசூழல் கெடாது, உயிரின்ங்களுக்கு ஆபத்தும் இல்லை… ஆற்று நீர் கடலில் கலக்கும் இடத்தில் மின்சாரம் தயாரிக்கும் கலக்கலான முறை ரெடி என்கிறார்கள் இவர்கள்..
காற்றாலை மூலம் மின்சாரம் கிடைப்பது காற்று வீசுவதை பொறுத்தது.. சில சமயங்களில் காற்று வீசாமல் மின்சாரம் தடைப்படலாம்.. ஆனால் இந்த புதிய முறை மூலம் தடையில்லா மின்சாரம் கிடைக்கும்..
University of Groningen and the University of Twente ஆகிய பல்கலை விஞ்ஞானிகள் இந்த முறையை ஆராய்ந்து வருகின்றனர்..
ரிவர்ஸ் எலக்ட்ரோடயலிஸ் முறையில் மின்சாரம் தயாரிப்பதுதான் திட்டம்..
அது என்ன ரிவர்ஸ் எலக்ட்ரோடயலிஸ் ?
எலக்ட்ரோடயலிஸ் என்பதன் எதிர் தொழில் நுட்பம்தான் ரிவர்ஸ் எலக்ட்ரோடயலிஸ் .
எலக்ட்ரோடயலிஸ் என்றால் என்ன ?
அது ஒன்றும் இல்லை… கடல் நீரை குடி நீரை மாற்றுவதாக அவ்வப்போது படம் காட்டுகிறார்கள் அல்லவா ? அதுதான் இது…
கடல் நீரில் மின்சாரத்தை பாய்ச்சும்போது , அதில் இருக்கும் உப்புத்தனமை வெளியேறி நல்ல நீர் கிடைக்கும்… இந்த முறைதான் எலக்ட்ரோடயலிஸ் ..
இதை மாற்றி செய்தால் ? அதாவது நல்ல நீரையும் , உப்பு நீரையும் கலந்தால் ?
எஸ்.. நீங்கள் நினைப்பது சரிதான்.. மின்சாரம் உண்டாகும்…
எளிமையாக சொல்ல வேண்டும் என்றால்…
உப்பு நீர் + மின்சாரம் = நல்ல நீர்
உப்பு நீர்+ நல்ல நீர் = மின்சாரம்…
ஒரு செல்லில் இருந்து 50 மில்லி வோல்ட் மின்சாரம் கிடைக்கும்,,, இது மிகவும் குறைவுதான்..
இது போல பல செல் அமைத்தால் , போதுமான மின்சாரம் கிடைக்கும்…
இந்த முறை மூலம் , 2012க்குள் 200 கிலோவாட் மின்சாரம் மின்சாரம் தயாரிப்பு நிலையம் ஒன்றை அமைக்க ஹாலந்து விஞ்ஞானிகள் முயன்று வருகின்றனர்..
ஆரம்ப காலத்தில் இதற்கான செலவு அதிகமாக இருக்கும்.. போக போக குறைந்து விடும் என்கிறார்கள்..
காலம் காலமாக , கடலில் கலந்து கொண்டு இருக்கும் ஆற்று நீர் இனிமேல் புதிய பணி ஒன்றையும் செய்யப்போகிறது என்பது மகிழ்ச்சி அளிக்கும் விஷ்யம்..
இந்த முறை மூலம் சுற்று சூழல் கெடுதி அறவே இல்லை என்பது கூடுதல் மகிழ்ச்சி
புதியதகவல் , தக்வலுக்கு நன்றி. வாழ்த்துக்கள்
ReplyDeleteநல்ல தகவல்.
ReplyDeleteநன்றி சரவணன் மற்றும் அன்பரசன்
ReplyDeleteஐடியா, நல்லா இருக்கே.... தகவலுக்கு நன்றிங்க.
ReplyDeleteஐடியா, நல்லா இருக்கே.... தகவலுக்கு நன்றிங்க."
ReplyDeletethank u madam
கடலை வானம் கொள்ளையடித்தால்
ReplyDelete---------------------------------
'நல்ல நீரு பெரண்டு அடித்தால் கரண்டு இங்கே கெடக்கும்'
'உப்பு நீரில் கரண்டு அடித்தால் நல்ல நீரு கெடக்கும்'
ரெண்டு ரெண்டா சேர்ந்து படுத்தால் மூணு ஒண்ணு கெடக்கும் :)
[ma] ந்ன்றி அரபுதமிழன் [/ma]
ReplyDelete[co="red"]கவிதை சூப்பர்[/co]
ReplyDeletehttp://semmoli.com/ultra/learnt/blogs/index.php
ReplyDelete