கன்னம் என்பது அன்பு வ்ந்தால் முத்தம் கொடுப்பதற்கும் , கோபம் வந்தால் அறை விடுவதற்கும் மட்டும் பயன்படும் ஒரு உறுப்பு என நினைக்கிறோம்…
அதுதான் கிடையாது.. நாம் எப்படி குடிக்கிறோம் என்பதை கன்னம்தான்
தீர்மானிக்கிறது..
நாம் குடிப்பதற்கும் , பூனை குடிப்பதற்கும் வேறுபாடு இருக்கிறது..
அனைவருக்கும் கொழு கொழு கன்னன் இருக்கிறது என சொல்ல முடியாது.. ஆனால் மனிதனுக்கு இருப்பது முழுமையாக வளர்ச்சி அடைந்த கன்னம்..
பூனைக்கு அப்படி அல்ல.. அதற்கு இருப்பது பிளவு பட்ட கன்னம், எனவே பூனையால் உறிஞ்ச முடியாது…
நாம் குடிப்பது அது குடிக்க நினைத்தால் பாதிக்கு மேல் வீணாகி விடும்…
சரி.. அது எப்படித்தான் குடிக்கிறது?
நாம் பார்த்து இருப்போம்.. அதில் இருக்கும் அறிவியல் முக்கியத்துவத்தை பார்ப்பதே இந்த பதிவின் நோக்கம்.
சடத்துவம், புவி ஈர்ப்பு விசை இரண்டையும் கச்சிதமாக சமன் செய்துதான் பூனை பால் குடிக்கிறது…
புவி ஈர்ர்பு விசை என்றால் தெரியும் ..சடத்துவம் என்றால்?
ஒரு பொருள் , அதன் மீது வேறு விசை செயல்படாதவரை, இயங்கி கொண்டு இருந்தால் இயங்கி கொண்டே இருக்கும்… சும்மா இருந்தால் , சும்மாவே இருக்கும்…
ஒரு கல் தரையில் சும்மா கிடந்தால் சும்மாவேதான் கிடக்கும்.. நாம் அதை எடுத்து எறிந்தால்தான் அந்த ஓய்வு நிலையில் இருந்து விடுபடும்..
எறியப்பட்ட கல் இப்போது பறக்க தொடங்கி விட்டது.. அது பறந்து கொண்டேதான் இருக்கும்.. புவி ஈர்ப்பு விசை அதன் மேல் செயல்படுவதால்தான் அது சற்று நேரத்தில் கீழே விழுகிறது.. அல்லது அது பறக்கும் பாதையில் இடையூறு ஏற்பட்டால் , தன் பயணத்தை நிறுத்தும்..
இல்லை என்றால் பறந்து கொண்டேதான் இருக்கும்.. இதுதான் சடத்துவம்…
சரி..இதற்கும் பூனை பால் குடிப்பதற்கும் என்ன சம்பந்தம்…
பூனை பால் குடிக்க தன் நாக்கை , சற்று பின்புறமாக வளைத்து ஆங்கில எழுத்து ஜே போல நீட்டும்..
அதாவது , தன் நாக்கை ஸ்பூன் போல முன்புறம் மடித்து , அதில் பாலை நிரப்பாது .. முதல் படம் போல் அல்ல…
இரண்டாம் படம் போல நாக்கை பின்புறம் மடிக்கிறது. நாக்கின் மேற்புறம்தான் பால் படுகிறது…
இப்படி படுவ்தால், பாலுக்கும் நாக்குக்கும் இடையே ஒரு மெல்லிய திரவத்திரை ஏற்படுகிறது..
சடத்துவ பண்பின் காரணமாக அந்த திரவத்திரை நாக்குடன் இணைந்து மேல் நோக்கி செல்லும்…
இது கொஞ்ச நேரம்தான் நடக்க இயலும்.. விரவிலேயே புவி ஈர்ப்பு விசை அதை கீழ் நோக்கி இழுத்து விடும்.
எனவே அதற்கு முன் மிக விரைவாக , பூனை தன் நாக்கை வாய்க்குள் இழுத்து கொள்ளும்.. நாக்குடன் சேர்ந்து பாலும் உள்ளே சென்று விடும்.
இது போல மின்னல் வேகத்தில் பல முறை நடைபெறும்..
இதை நாம் பார்த்து இருப்போம்.. அதி நடைபெறும் மெக்கானிசம் இதுதான்…
அதிவேக கேமிராவை வைத்து படம் எடுத்தால் , இதை பார்க்க இயலும்…
இவ்வளவு கவனமாக பால் குடிக்கும் அவசியம் என்ன?
பட்டாம் பூச்சி , கால்களை வைத்தும், காதல் கொண்ட மனித பூச்சி கண்கலை கொண்டும் ருசி அறிவது போல , பூனைக்கு உணர்வு சாதனமாக பயன்படுவது மீசை.. (எனவே அழகு படுத்துகிறோம் என அதை ட்ரிம் செய்து விடாதீர்கள்..)
அந்த மீசை ஈரமாகிவிடக்கூடாது என்பதற்காகத்தான் சிந்தாமல் சிதறாமல் பாலை குடிக்க இந்த முறையை பயன்படுத்துகிறது பூனை..
சில விலங்குகள் ஸ்பூன் போல நாக்கை மடித்து பால் குடிப்பதும் உண்டு..
பூனை அப்படி அல்ல.
விலங்குகளை கவனிக்க ஆரம்பிப்பது சுவையான போக்காகவும் , சிந்தனைக்கு விருந்தாகவும் அமையும்..
உதாரணமாக , இப்படி பால் குடிப்பதால் வேறு என்ன அனுகூலம் என யோசித்தால் , பல சிந்தனைகள் தோன்ற கூடும்..
நாய் போல குடித்தால் , சப்தம் அதிகமாகும்.. பூனை பெரும்பாலும் ரகசியமாக இந்த வேலையை செய்யும்… இந்த டெக்னிக் சத்தம் குறைவானது என்பது அதற்கு அனுகூலம்…
நீங்களும் இதை பற்றி யோசித்து பாருங்கள்..
Subscribe to:
Post Comments (Atom)
Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com
விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....
Blog Archive
-
▼
2010
(277)
-
▼
November
(29)
- தமிழ்மணம் டாப் 20 பதிவர்கள்- ஒரு வரி பார்வை
- அம்பேத்கர் திரைப்படம் வெளியீடு
- தமிழ்மணம் டாப் 20 பதிவர்கள்- என் பார்வையில்
- எரிகல், சூரியன், நாய் – தகவல் களஞ்சியம்
- விண்வெளிக்கு போன வில்லேஜ் ஆளு- வரிவிலக்கு தேவைப்பட...
- நந்தலாலா- கேபிள் சங்கர் அவர்கள் விளக்கம்
- நந்தலாலா- அண்ணன் கேபிள்ஜி க்கு ஒரு மெயில் …
- LOVE PARADOX- வரி விலக்கு தேவையில்லாத சிறுகதை
- நந்தலாலாவா, நொந்தலாலாவா- சராசரி ரசிகன் பார்வையில்…
- எந்திரன் பாரடக்ஸ் &; இன்னும் பல சுவையான பாரடக்ஸ் ...
- தேவே கவுடாவை குழப்பிய சாய் பாபா- சுவையான தகவ...
- இந்த ஐந்து அறிவியல் உண்மைகள் உங்களுக்கு தெரியுமா?
- உலகம் எங்கும் ஒரே கதைதான்- நிர்வாகம் அலட்சியம், ச...
- ஜெயமோகனும் சைன்ஸ் ஃபிக்ஷனும்
- மந்திரப் புன்னகை- எனது பார்வையில்
- எண்ணங்களுக்கு அப்பால்… – ஜே கிருஷ்ணமூர்த்தி
- பதிவர் நர்சிம் எனக்கு தந்த கவிதையும், கவுரவமும்
- படித்தவற்றில் பிடித்தவை..
- மரண ஆராய்ச்சி – எட்கர் ஆலன்போ சிறுகதை
- கருப்பு பூனை – எட்கர் ஆலன் போ சிறுகதை
- பால் குடிப்பதில் இவ்வளவு விஷயமா?
- பறவைகளுக்கு இப்படியும் ஓர் ஆபத்து.. இப்படியும் ஒர...
- சிறுமியை கர்ப்பமாக்கிய போலிஸ் அதிகாரி- விடுதலை செ...
- இதயம் பேசுகிறது (திகில் கதை மன்னன் எட்கர் ஆலன் போ...
- ஆற்று நீர்-கடல் சங்கமம், மின்சாரம் ஆக போகிறது
- அடுத்தவர் வேதனை,வெறும் செய்திதானா?- என்கவ்ன்டரும் ...
- உணர்ச்சி வேகத்தில் கொலையாளிக்கு கண்ணீர் விடும் , ப...
- யார் கண்ணுக்கும் தெரியாமல் ரகசியமாக சைட் அடிக்கும்...
- அடுத்த தொழில் நுட்ப அதிரடி, இ-போன்
-
▼
November
(29)
பூனைக்குள் ஒளிந்திருக்கும் அறிவியல் அருமை. மேலும் தொடரட்டும் உங்கள் பணி.
ReplyDeleteபூனைக்குள் அறிவியல் அருமை.
ReplyDelete"பூனைக்குள் அறிவியல் அருமை"
ReplyDeleteநன்றி
பூனைக்குள் இவ்வளவு விசேசமா..?
ReplyDelete[im]http://farm5.static.flickr.com/4087/5166507591_88aa370e86_s.jpg[/im]
ReplyDeleteநண்பா உங்க ஆராய்ச்சி அருமை.
ReplyDelete""நண்பா உங்க ஆராய்ச்சி அருமை"
ReplyDelete.இந்த்த மாதிரி முக்கியமான ஆராய்ச்சினா எனக்கு பிடிக்கும்
”பூனைக்குள் இவ்வளவு விசேசமா.”
ReplyDeleteவிலங்குகள் உலகம் வினோதமானது..
பெரிய பூனைக்ளை விட , குட்டி பூனைதான் விரைவாக குடிக்கும் என்பது இன்னொரு வினோதம்
பூனை மாதிரி இருந்துட்டு இப்படி எல்லாம் ஆராய்ச்சி பண்றீங்களே...
ReplyDeleteபூனை மாதிரி இருந்துட்டு இப்படி எல்லாம் ஆராய்ச்சி பண்றீங்களே.."
ReplyDeleteஹா .. ஹா ...
பதிவை விட பின்னூட்டம் அருமைனு எல்லொரு சொல்ல போறாங்க..
[co="blue"] மியாவ் .......:-)) [/co]
ReplyDeleteha ha
ReplyDeleteநாம தினம் பாக்கும் விஷயத்தில் இத்தனை சுவாரஸ்யமா ? தொடர்க உங்கள் பணி...
ReplyDeleteஅட! பூனைய இவ்ளோ தூரம் கவனிச்சிருக்கீங்க! எனக்கு ரொம்ப பிடித்த வீட்டுப்பிராணி பூனைதான்! ஆனால் அது எப்போதும் காட்டையே தனக்குள் சும்மந்து திரிகிறது!
ReplyDeleteஆனால் அது எப்போதும் காட்டையே தனக்குள் சும்மந்து திரிகிறது"
ReplyDeleteசூப்பர்
நாம தினம் பாக்கும் விஷயத்தில் இத்தனை சுவாரஸ்யமா ? தொடர்க உங்கள் பணி”’
ReplyDeleteநன்றி தினேஷ்
புதிய செய்தி அருமை. அது என்ன சடத்துவப் பண்பு ? விளக்கினால் மகிழ்வேன்.
ReplyDeleteபூனையைப் பற்றி இன்னுமோர் செய்தி, பூனைக்கென்று எந்த எதிரியும் இல்லை காட்டில். பாம்பைக் கூட பூனை கொன்று விடும். பூனைக்கு இறப்பு பெரும்பாலும் மனிதனாலேயே அல்லது வயதானால் தான்.
ReplyDeleteபூனைக்கு இறப்பு பெரும்பாலும் மனிதனாலேயே அல்லது வயதானால் தான்.""
ReplyDeleteநல்ல தகவல்.
நன்றி