Wednesday, November 24, 2010

ஜெயமோகனும் சைன்ஸ் ஃபிக்‌ஷனும்

ஜெயமோகன் என்றால் நம் நினைவுக்கு வருவது, தத்துவ விசாரணை ,இலக்கிய ஆய்வு மற்றும் ஆழ்மன தரிசனங்கள், படிமங்கள், தொன்மங்கள் , பரப்பிலக்கியம் போன்ற வினோதமான வார்த்தைகள்.. மற்றும் குமரி மாவட்ட தேன் தமிழும், கொஞ்சும் மலையாளமும் நினைவுக்கு வரும்..

அறிவியல் கதைகள் என்றால் நம் நினைவுக்கு வருவது, வேற்று கிரகவாசிகள், வினோத உயிரிகள், விண்வெளி பயணம் , வெளி நாட்டினர் ஆராய்ச்சி போன்றவை..
இரண்டும் வேறு வேறு டிபார்ட்மெண்ட்… இவை இரண்டும் ஒன்று சேரும் நான் நினைத்து பார்த்தது இல்லை…



எனவே ஜெயமோகனின் அறிவியல் புனைகதைகள் தொகுப்பை பார்த்து ஆச்சர்யம் அடைந்தேன்..
இந்த ஆச்சர்யத்துக்கு விடை அளிக்கும் வகையில், அறிவியல் புனை கதை என்பது அறிவியலில் இருந்து பிரச்சினைகளையும் படிமங்களையும் எடுத்துக்கொண்டுள்ள ஓர் இலக்கிய படைப்புதான் என முன்னுரையில் ஜெமோ சொல்கிறார். ( சுஜாதாவுக்கு இந்த தொகுப்பை சமர்ப்பித்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது
அதை படித்த பின் என் ஆவல் இன்னும் அதிகமானது…
இது வழக்கமான ஜெமோ கதையா அல்லது வழக்கமான அறிவியல் கதையா ?

ந்தாவது மருந்து
என்ற முதல் கதையே விறுவிறுப்புடன் ஆரம்பிக்கிறது,, எயிட்சுக்கு மருந்து என்ற ஆரம்பமே இது புதுமையான கதை . வழக்கமான ஜெ மோ கதை அல்ல என்பதை உணர்த்துகிறது..
ஆனால் அது நிகழும் இடமும், பேசும் மொழிகளும் ஜெமோ டச்சுடன் இருக்கிறது…
ஆனால் கதை என்ன சொல்கிறது என்பதில்தான் அது மற்ற தமிழ் அறிவியல் கதைகளில் இருந்து மாறுபடுகி்றது..
நம்முடைய பழைய மருத்துவ பாணியில் எயிட்சுக்கு மருந்து கண்டுபிடிக்கிறார் ஒருவர்..
ஆரம்ப காலங்களில் , நோய்களுக்கு பச்சிலை போன்றவை மருந்தாக பயன்பட்டன.. அதன் பின், நான் வெஜ் மருந்துகள் வந்தன,., அதற்கும் பின் தங்க  பஸ்பம் போன்ற உலோக மருந்துகள் வந்தன…
இதற்கு அப்பாற்பட்ட ஒன்றினால்தான் எயிட்சை குணப்படுத்த முடியும் என லாஜிக்கலாக சொல்லும் ஒருவர் அதை கண்டு பிடித்தும் விடுகிறார்..
அதை பயன்படுத்தி சோதனையும் வெற்றிகரமாக செய்கிறார்..
மாபெரும் சாதனை…
உலகமே போற்ற போகிறது என நாம் நினைக்கும்போது, அவர் சொல்லும் அதிர்ச்சிகரமான விஷயம்  , மாற்று பார்வை நம்மை உறைய வைக்கிறது..
செயற்கையான முடிவாக இல்லாமல், லாஜிக்கலாக அமைத்து இருப்பது அருமை..

டுத்த கதை
இங்கேயே , இப்பொதே..
நாம் ஒரு பொருளை பார்த்தது இல்லை என வைத்துகொள்வோம்.. அதை பற்றி தெரியாது என சொல்வதே அறிவுடைமை..
அந்த பொருள் இருக்கிறது என கண்மூடித்தனமாக நம்புவதும் மூடத்தனம்தான். அது இல்லை என கண்மூடித்தனமாக நம்புவதும் மூடத்தனம்தான்..
இரண்டுமே உண்மையை விட்டு நம்மை விலக்கிவிடும்.
கடவுள் விவாகரத்தில் அறிவாளிகளும், பாமரர்களும் ஒரே நிலையில் இருப்பது இதனால்தான்..
கடவுள் என்றல்ல… ஒரு சாதாரண விஷயத்தை கூட திறந்த மனதுடன் அணுகினால்தான் சரியான முடிவு கிடைக்கும்…
ஒரு முடிவு எடுத்து விட்டு அதன் பின் தேடலை ஆரம்பிக்க கூடாது..
வித்தியாசமான ஒரு கருவை எடுத்துக்கொண்டு சீராக பயணிக்கும் கதை இங்கேயெ இப்பொதே….
வேற்று கிரக வாசிகள் பூமிக்கு வருகிறார்களா? இதை பற்றிய தேடல்தான் கதை


மக்கு எல்லாமே தெரிந்து விட்டது என்றால் சிந்தனையின் அவசியமே இல்லாமல் போய் விடும்.. அதன் விளைவு என்ன.. பாசிடிவாக எப்படி இருக்கும் ? நெகடிவாக எப்படி இருக்கும்..
ஒரு ஹாலிவுட் படமாக வரவேண்டிய கதைதான்
பூரணம்

ரும்பை தங்கமாக்கும் ரசவாத கலை பற்றிய கதை
பித்தம்…


அறிவியல் ரீதியாக பார்த்தால், இரும்பு அணுக்கள் என்றுமே இரும்பு அணுக்களாகத்தான் இருக்கும்…
இரும்புடன் , சற்று க்ரோமியம் , நிக்கல் சேர்த்தால் அது எஃகு இரும்பாகும்… இதற்கு சில தனிப்பட்ட பண்புகள் உருவாகும்
அது சேர்மம்…
ஆனால் தனிமம் என்றுமே தன் பண்பை இழக்காது..
ஆனால் யோசித்து பார்த்தால், அடிப்படையில் ஓர் உலோகத்துக்கும் இன்னொரு உலோகத்துக்கும் இருக்கும் வித்தியாசம், அணுக்களில் இருக்கும் பார்டிக்கிள் எண்ணிகைதான்..
இதை மாற்றிவிட்டால் , ஓர் உலோகம் இன்னொன்றாக மாறிவிடும் ரேடியஷனில் இதுதான் நடக்கிறது..தோரியம் ரேடியம் ஆவது இப்படித்தான்..
( இது போல இரும்பின் அணுவை பிளந்து , தங்கத்தின் எண்ணிக்கைக்கு மாற்றுவதற்கு ஆகும் செலவு, ஒரிஜினல் தங்கத்தை விட அதிகம் என்பது வேறு விஷயம்..எனவே அறிவியல் ரீதியாக இப்படி செய்ய முடியாது )
எனவேதான் ரசவாதம் பல காலங்களாக முயற்சி செய்யப்பட்டு வருகிறது
ஒரு லட்சியம் நிறைவேறுமா , அந்த பலன் நமக்கு கிடைக்குமா என்பதை விட அந்த தேடல்தான் மனித வாழ்வின் அர்த்தம்… அதனால்தான் எல்லா முயற்சிகளும் நடக்கின்றன.. நாட்டுக்காக போரடும் பல போராளிகள் வெற்றி தோல்வியை பற்றி கவலைப்ப்டாமல் போராடுவது இதனால்தான்..
ரசவாதம் என்பது ஒரு கற்பனைவாதம்..
வாழ்வின் ஒரு கணத்தில் ரசவாதம்தான் தன் வாழ்வின் அர்த்தம் என ஒருவருக்கு தோன்றிவிட்டால் என்ன ஆகும் ?
இந்த கதையின் முடிவு அபாரம்…

ஸ்பிளிட் பர்சலாட்டியை வைத்து ஒரு ஆன்மீக கதை
வழக்கமாக இந்த கரு காதலுக்கும் , த்ரில்லருக்கும் பயன்படும்.. ஆனால் இதை ஆன்மீகத்தில் பயன்படுத்தி இருப்பதுதான் ஜெ மோ டச்… கிளைமேக்ஸ் பயங்கரம்
கடவுள் ஏற்பாளர்கர்கள், மறுப்பாளர்கள், உலக் அழிவு, மின் நவீனத்துவம் என பல விறுவிறுப்பான , புதிய அனுபவங்களை தரும் மற்ற பல கதைகள் இருந்தாலும், என்னை மிகவும் பாதித்தது
விசும்பு
 எனும் கதைதான்..
பல கேள்விகளுக்கு விடை அளிக்கிறது..
அறிவியல் கதையில் ஆன்மீக கேள்விகளுக்கு பதில் !!!
றவைகளின் இயல்பை மாற்ற ஓர் ஆராய்ச்சி.. குறிப்பிட்ட இடத்திற்கு , குறிப்பிட்ட காலத்துக்கு  வெளி நாடுகளில் இருந்தெல்லாம் பறவைகள் வருவது இயல்பு…
எப்படி சரியாக திசை கண்டு பிடித்து வருகிறது… எப்படி அதற்கு தேவையான உணவு கிடைக்கிறது என்பதெல்லாம் புரியாத புதிர்..
எப்படி திசையை தேர்ந்தெடுக்கின்றன என கண்டுபிடித்து , அவற்றை திசை மாறி வேறு நாட்டுக்கு போக செய்கிறார் ஒருவர்..
தான் இயற்கை விதியை வென்று விட்டதாக நினைக்கிறார்..
இயற்கையின் அற்புதம்தான் கிளைமேக்ஸ்.. அருமை

மொத்தத்தில்  ஒரு வித்தியாசமான் ட்ரீட் (இந்த தொகுப்பு) இந்த புத்தகம்..
நம் ஊர் பின்னனியில் ஓர் அறிவியல் கதை தொகுப்பு என்பது நல்ல அனுபவத்தை தருகிறது..
எல்லா உணவும் நல்ல உணவுதான் என்றாலும், அந்தந்த ஊருக்கேற்ப உணவை சாப்பிடுவது நல்ல அனுபவமாக இருக்கும்..
பெங்களூர் அருகில் இருக்கும் கெங்கெரி எனும் கிராமத்தில் ஒரு முறை அன் டைமில் சிக்கி கொண்டேன்..
சாப்பிட தகுந்த கடை இல்லை..
ஒரு வீட்டில் சாப்பிட நேர்ந்தது…
அந்த ஊருக்கே ஏற்ற பாணியில் ராகி முத்தே , கருவாட்டு குழம்பு சாப்பிட்ட அனுபவத்தை இன்றும் மறக்க முடியவில்லை..பெங்களூரில் பெரிய ஹோட்டல்களில் சாப்பிட்டதெல்லாம் எங்கும் சாப்பிட கூடியதுதான்.. அதில் எல்லாம் அந்த ஊரின் தன்மை  இல்லை ..

அதே போல சைன்ஸ் ஃபிக்‌ஷன் என்றால் ஆங்கிலத்தில் ஆயிரம் உண்டு. தமிழில் வருபவை பெரும்பாலும் மொழி பெயர்ப்பு போலத்தான் இருக்கும்…

ஆனால் நம் ஊருக்கு ஏற்ற ஓர் அறிவியல் விருந்து விசும்பு எனும் இந்த சிறுகதை தொகுப்பு…
பின் குறிப்பு :
அவரது விஷ்ணுபுரம் நாவலும் ஒரு வித்தியாசமான அனுபவம் தந்தது..அதைப் பற்றி வாசிக்க இதை க்ளிக் செய்யுங்கள்

12 comments:

  1. //எல்லா உணவும் நல்ல உணவுதான் என்றாலும், அந்தந்த ஊருக்கேற்ப உணவை சாப்பிடுவது நல்ல அனுபவமாக இருக்கும்..//
    உண்மை,
    //கடவுள் என்றல்ல… ஒரு சாதாரண விஷயத்தை கூட திறந்த மனதுடன் அணுகினால்தான் சரியான முடிவு கிடைக்கும்…//
    நன்மை,
    //அறிவியல் கதையில் ஆன்மீக கேள்விகளுக்கு பதில்//
    அருமை
    //மொத்தத்தி ஒரு வித்தியாசமான் ட்ரீட் இந்த தொகுப்பு இந்த புத்தகம்..//
    தொகுப்பின் பெயரென்ன ?

    ReplyDelete
  2. விசும்பு ( அறிவியல் புனைகதைகள் தொகுப்பு ) , ஆசிரியர் - ஜெயமோகன்..
    எனி இந்தியன் பதிப்பகம்

    ReplyDelete
  3. //அதே போல சைன்ஸ் ஃபிக்‌ஷன் என்றால் ஆங்கிலத்தில் ஆயிரம் உண்டு. தமிழில் வருபவை பெரும்பாலும் மொழி பெயர்ப்பு போலத்தான் இருக்கும்…//

    சரியாக சொன்னீர்கள் நண்பரே!

    ReplyDelete
  4. நாகராஜ சோழன் சார் , கொஞ்ச நாளா ஒங்க தொகுதிக்கு வருவதில்லை போலிருக்கே !

    ReplyDelete
  5. உங்கள் வாசிப்பு என்னை பிரமிக்க வைக்கிறது பார்வையாளன்

    ReplyDelete
  6. ஆம் நானும் அவருடைய சில அறிவியல் புனை கதைகளை அவருடைய தளத்தில் படித்துள்ளேன். நல்ல பதிவு. வாழ்த்துக்கள் பார்வையாளன்.

    ReplyDelete
  7. உங்கள் வாசிப்பு அனுபவங்களை எல்லாருடனும்பகிர்ந்து கொள்வது மிகவும் அருமை.

    ReplyDelete
  8. புத்தகத்தின் தலைப்பையும் பதிப்பகத்தின் பெயரையும் சொல்லுங்கள்... வாங்கிவிடுகிறேன்...

    ReplyDelete
  9. விசும்பு ( அறிவியல் புனைகதைகள் தொகுப்பு ) , ஆசிரியர் - ஜெயமோகன்..
    எனி இந்தியன் பதிப்பகம்

    ReplyDelete
  10. ரொம்ப நாளைக்கு முன்னாடி நான் அந்தப் புத்தகத்தை வாசிச்சிருக்கேன்.ஏனோ இன்னிக்கு அந்தக் கதைகளைத் திரும்பப் படிக்கணும்போல ஆசை. இணையத்துல தேடிட்டு இருந்தப்போ ஜெமோ தளத்துலயே அந்த எல்லாக்கதைகளும் இருக்கு. அப்போதான் உங்களோட இந்தப் பதிவும்... ஏதோ இப்போ மனசு ஒரு மாதிரியா எக்ஸைட்டட் ஸ்டேட்டஸ்ல இருக்கு... உற்று நோக்கும் பறவையும், நாக்கு கதையும் பலப்பல திசைகளில் என்னை இழுத்துச் செல்கிறது. துவாத்மர்கள் கதையும், மௌனச்சாமியார் கதையும் ஒரே கோட்டில் பயணிப்பதை உணர்ந்தீர்களா?

    ReplyDelete
  11. துவாத்மர்கள் கதையும், மௌனச்சாமியார் கதையும் ஒரே கோட்டில் பயணிப்பதை உணர்ந்தீர்களா”

    படிக்கும்பொது தோன்றவில்லை.

    நீங்கள் சொன்னதும் யோசித்து பார்த்தால், அட,,ஆமா என தோன்றுகிறது..

    நன்றி நன்றி நன்றி

    ReplyDelete
  12. @விந்தைமனிதன் தயவுசெய்து அந்த கதைகளின் சுட்டியை பகிரவும்...

    புத்தகத்தை ஆன்லைன்-யில் வாங்க என்ன செய்ய வேண்டும் என்று தெரியபடுத்தவும்...

    ReplyDelete

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா