கடந்த வெள்ளியன்று , நிலக்கரி சுரங்கத்தில் வேலை செய்து கொண்டு இருந்த தொழிலளர்கள், மீத்தேன் வாயு வெடித்து சிதறியதால், சுரங்கத்தில் சிக்கினர்... இருவர் மட்டும் அதிர்ஷ்ட வசமாக தப்பினர்..
பதினேழு வயது முதல் அறுபது வயது வரையிலான தொழிலார்கள் இவர்கள்...
உடனடியாக இவர்களை காப்பாற்றுமாறு, அவர்களின் உறவினர்கள் முறையிட்டனர்..
மீண்டும் மீத்தேன் வெடிப்பு ஏற்பட கூடும் என்ற பயம் மீட்பு பணியினரின் வேலையை தாமதப்படுத்தியது...
எனவே நச்சு வாயுக்களை கண்டு பிடிக்கும் எலெக்ட்ரானிக் கருவிகளும் , ரோபோக்களும் பயன்படுத்தப்பட்டன..
சிக்கியவர்கள் காப்பாற்றுங்கள் என அழுது புரண்டனர்.. ஆனால் சிக்கியவர்கள் உயிருடன் இருக்க வாய்ப்பில்லை... இப்போது மீட்பு படையை அனுப்ப்பினால், அவர்களும் சேர்ந்து இறக்க நேரிடும் என்று நிர்வாகம் தயங்கியது.. எனவே இழுபறி நீடித்தது..
கடைசியாக, அவர்களின் கோரிக்கைக்கு செவி சாய்த்து மீட்பு படை அனுப்ப முடிவு எடுக்கப்படபோது, இன்னொரு முறை மீத்தேன் வெடிப்பு நிகழ்ந்தது...
சுரங்க முதன்மை நிர்வாகி பீட்டர் விட்டால் கூறுகையில், " அனைவரும இறந்து விட்டார்கள்... இறந்த உடல்களை எடுப்பது கூட முடியாத காரியம்.. மீண்டும் விபத்து நிகழலாம் .. இரண்டாவது விபத்துக்கு முன்பே அவர்கள் இறந்து இருப்பார்கள்.. மீட்பு படையை அனுப்பி இருந்தால் அவர்களு சேர்ந்துதான் இறந்து இருப்பார்கள்.. எனவே நாங்கள் தாமதம் செய்ததாக சொல்வது தவறு " என்றார்..
இறந்தவர்களின் உறவினர்களோ , "உடனடியாக செயல்பட்டு இருந்தால் காப்பாற்றி இருக்கலாம்.. இனி உண்மை வெளிவர வாய்ப்பில்லை.. இரண்டாம் விபத்துக்கு முன் தாங்கள் உயிருடன் இருந்ததாக சாட்சி சொல்ல யார்டும் வரப்போவதில்லை " என சோகத்துடன் சொல்கின்றனர்..
நம் நாடு சிறிய நாடு... இதில் இத்தனை பேர் ஒட்டு மொத்தமாக இறந்தது , நமக்கு பெரிய இழப்பு.. நம் சகோதர்களை இழந்து நாடே சோகத்தில் மூழ்கி உள்ளது என நியுசிலாந்து பிரதமர் தெரிவித்துள்ளார்..
உலகம் எங்கும் பாதிக்கப்படுவது அப்பாவி தொழிலாளர்கள் தான் போல ...
உண்மைதான்! அதிகாரம் என்று அலட்சியமாகவே இருக்கிறது!
ReplyDeleteபெரிய பதவி வகிப்பவர்கள் சிக்கி இருந்தால் , உயிரை பணயம் வைத்தாவது காப்பாற்றி இருப்பார்கள்
ReplyDeleteஉணமைதான். அதிகாரம் ஆட்சி செலுத்துகிரது.
ReplyDelete//உலகம் எங்கும் பாதிக்கப்படுவது அப்பாவி தொழிலாளர்கள் தான் போல ...//
ReplyDeleteரொம்ப சரியா சொன்னீங்க.