எந்திரன் படம் பார்த்து ரசித்து வருகிறோம்..
படத்தின் விறுவிறுப்பில் அதில் வரும் ஒரு சுவையான வசனத்தை கவனிக்க தவறி விட்டோம்..
என்ன அது ?
ரோபோ ரஜினியை கேள்வி கேட்டு சோதிப்பார்கள் அல்லவா?
அப்போது ஒரு கேள்வி..( எளிமை கருதி கருத்தை மட்டும் வைத்துக்கொண்டு கேரக்டர்களை மாற்றி இருக்கிறேன் )
முயலுக்கும் ஆமைக்கும் போட்டி வைத்தால் , ஆமைதான் வெற்றி பெறும் என தர்க்க ரீதியாக நிரூபிக்கப்பட்டு இருக்கிறதே என்பது கேள்வி.. ( நாம் கேள்வி பட்டு இருக்கும் முயல்- ஆமை கதை அல்ல.. தர்க்க ரீதியான முடிவு )
அது பாரடக்ஸ் என ரஜினி பதில் அளிப்பார்..
அது என்ன பாரடக்ஸ் என்பதையும் இது போன்ற இன்னும் சில சுவையான முரண்பாடுகளையும் பார்க்கலாமா?
பயங்கரமாக யோசிக்க விரும்புபவர்கள் களத்தில் இறங்குங்கள்
1. படைப்பின் உச்சம் இருக்கவே முடியாது ..
ஒருவர் எதையும் உருவாக்கும் அளவுக்கு சக்தி மிகுந்தவர் என வைத்துக் கொள்வோம்.. அப்படியானால் அவருக்கு , யாராலும் வெல்ல முடியாத ஒரு கருவியையோ வெல்ல முடியாத ஆளையோ உருவாக்க முடிய வேண்டும் ..இல்லையா?
சரி.. அப்படி ஒன்றை உருவாக்கி விட்டார் என வைத்துக் கொள்வோம்… அப்படியானால் தான் உருவாக்கிய ஒன்றை அவரால் வெல்ல முடியாத நிலை ஏற்படும்.. எனவே அவர் சர்வ சக்தி உடையவர் என்பது அடிபட்டு போய் விடும்..
சரி. அவர் அப்படி ஒன்றை உருவாக்க முடியாது என வைத்து கொள்வோம்…
அப்படி என்றால் அவர் எதையும் செய்ய முடியும் என சொல்லிக்கொள்ள முடியாது.
எப்படி பார்த்தாலும் சிக்கல்தான்..
2. அம்பு செய்யும் வம்பு..
தான் இருக்கும் இடத்தை மாற்றிக்கொள்ளுதல்..
அம்பு நகர்கிறது என எப்போது சொல்ல முடியும்?
1. இப்போது அது எங்கு இருக்கிறதோ , அங்கு வந்து சேர வேண்டும்..
2. அல்லது இப்போது எங்கு இல்லையோ அங்கு போய் சேர வேண்டும்..
இந்த இரண்டில் ஒன்று நிகழ்ந்தால் அது நக்ர்கிறது எனலாம்..
சரி.. இப்போது காலத்தின் ஒரு கணத்தை மட்டும் எடுத்துக்கொள்வோம்..
தான் எங்கு இருக்கிறதோ அங்குதான் அம்பு அந்த கணத்தில் இருக்கும்… இன்னொரு இடத்திலும் , அந்த இடத்திலும் ஒரே கணத்தில் இருக்க முடியாது…
எனவே அது எங்கு இல்லையோ அங்கு போய் சேர வேண்டும் என்ற இரண்டாம் பாயிண்ட் அடிபட்டு போய் விடுகிறது…
இப்போது எங்கு இருக்கிறதோ அங்கு வந்து சேர முடியாது.. அதுதான் ஏற்கனவே இருக்கிறதே..
எனவே முதல் பாயிண்டும் சாத்தியம் இல்லை..
இப்படி பார்த்தால், ஒரு கணத்தில் நகர்தல் சாத்தியம் இல்லை…
காலம் என்பது பல கணங்களால் ஆனதுதானே..
எனவே ஒரு கணத்தில் நகர முடியாதது எப்போதுமே நகர முடியாது..
3. எந்திரன் பாரடக்ஸ் - முயல் ஆமையை வெல்ல முடியாது.
முயலுக்கும் , ஆமைக்கும் ஓட்ட பந்தயம் …
ஆமையின் ஆரம்ப புள்ளி நூறு மீட்டர் முன்பாக நிர்ணயிக்கப்படுகிறது.. ( ஸ்பெஷல் சலுகை )
இப்போது போட்டி ஆரம்பிக்கிறது..
முயல் முதலில் ஆமையின் ஆரம்ப புள்ளியை அடைய வேண்டும்..
முயல் நூறு மீட்டரை அடைவதற்குள், ஆமை ஒரு பத்து மீட்டராவது நகர்ந்து இருக்கும்..
இப்போது முயல் இந்த பத்து மீட்டரை அடைய வேண்டும்..
அதற்குள் ஆமை ஒரு மீட்டராவது நகர்ந்து இருக்கும்..
இந்த தூரம் குறையுமே தவிர, இல்லாமல் போய் விடாது..
இந்த ஸ்டேட்மண்ட் உண்மை என்றால், நான் சொல்வது பொய் ஆகிவிடும்..
நானும் ஒருவர் பதிவர்தானே.. ஸ்டேட்மண்ட் படி நானும் பொய் சொல்பவன்..
எனவே எனது இந்த ஸ்டேட்மெண்டும் பொய்…
இந்த ஸ்டேட்மெண்ட் பொய் என்றால் என்ன அர்த்தம்..
எல்லா பதிவர்களும் உண்மை சொல்பவர்கள் என்று ஆகிறது..
அப்படி என்றால் எனது ஸ்டேட்மெண்டும் உண்மை ஆகிறது..
உண்மை என்றால் என்ன ஆகும்?
இப்படி முடிவே இல்லாமல் போகும் இந்த விவகாரம்
5, பார்பர் பாரடக்ஸ்
ஓர் ஊரில் ஒரே ஒரு பார்பர் மட்டும் இருக்கிறார்.. அந்த ஊரை விட்டு யாரும் வெளியே போக முடியாது.. யாரும் வரவும் முடியாது..
செல்ஃப் ஷேவிங் செய்து கொள்ள விரும்புபவர்களுக்கு ஷேவிங் செய்ய கூடாது.. , செல்ஃப் ஷேவ் செய்யாத , அந்த ஊரில் இருக்கும் மற்ற அனைவருக்கும் இவர் ஷேவிங் செய்ய வேண்டும் என்பது உத்தரவு,,,’
தானே செல்ஃப் ஷேவிங் செய்து கொள்ள விரும்பினால், அப்படி செய்ய முடியாது,,, ஏனென்றால் செல்ஃப் ஷேவிங் செய்து கொள்ள விரும்புபவர்களுக்கு செய்ய கூடாது என்பது விதி..
சரி.. ஷேவ் செய்யாமல் இருக்கலாம் என்றாலும் முடியாது… செல்ஃப் ஷேவிங் செய்யாதவர்களுக்கு , இவர் செய்து விட வேண்டும் என்பது விதி..

சர்வ சக்தியுடைய , எதை வேண்டுமானாலும் செய்யக்கூடிய ஒருவர் இருக்க முடியாது…இது என்ன கலாட்டா?
ஒருவர் எதையும் உருவாக்கும் அளவுக்கு சக்தி மிகுந்தவர் என வைத்துக் கொள்வோம்.. அப்படியானால் அவருக்கு , யாராலும் வெல்ல முடியாத ஒரு கருவியையோ வெல்ல முடியாத ஆளையோ உருவாக்க முடிய வேண்டும் ..இல்லையா?
சரி.. அப்படி ஒன்றை உருவாக்கி விட்டார் என வைத்துக் கொள்வோம்… அப்படியானால் தான் உருவாக்கிய ஒன்றை அவரால் வெல்ல முடியாத நிலை ஏற்படும்.. எனவே அவர் சர்வ சக்தி உடையவர் என்பது அடிபட்டு போய் விடும்..
சரி. அவர் அப்படி ஒன்றை உருவாக்க முடியாது என வைத்து கொள்வோம்…
அப்படி என்றால் அவர் எதையும் செய்ய முடியும் என சொல்லிக்கொள்ள முடியாது.
எப்படி பார்த்தாலும் சிக்கல்தான்..
2. அம்பு செய்யும் வம்பு..
தர்க்க ரீதியாக பார்த்தால் ஓர் அம்பு பறந்து செல்ல வாய்ப்பே இல்லை..நக்ர்தல் என்றால் என்ன?
தான் இருக்கும் இடத்தை மாற்றிக்கொள்ளுதல்..
அம்பு நகர்கிறது என எப்போது சொல்ல முடியும்?
1. இப்போது அது எங்கு இருக்கிறதோ , அங்கு வந்து சேர வேண்டும்..
2. அல்லது இப்போது எங்கு இல்லையோ அங்கு போய் சேர வேண்டும்..
இந்த இரண்டில் ஒன்று நிகழ்ந்தால் அது நக்ர்கிறது எனலாம்..
சரி.. இப்போது காலத்தின் ஒரு கணத்தை மட்டும் எடுத்துக்கொள்வோம்..
தான் எங்கு இருக்கிறதோ அங்குதான் அம்பு அந்த கணத்தில் இருக்கும்… இன்னொரு இடத்திலும் , அந்த இடத்திலும் ஒரே கணத்தில் இருக்க முடியாது…
எனவே அது எங்கு இல்லையோ அங்கு போய் சேர வேண்டும் என்ற இரண்டாம் பாயிண்ட் அடிபட்டு போய் விடுகிறது…
இப்போது எங்கு இருக்கிறதோ அங்கு வந்து சேர முடியாது.. அதுதான் ஏற்கனவே இருக்கிறதே..
எனவே முதல் பாயிண்டும் சாத்தியம் இல்லை..
இப்படி பார்த்தால், ஒரு கணத்தில் நகர்தல் சாத்தியம் இல்லை…
காலம் என்பது பல கணங்களால் ஆனதுதானே..
எனவே ஒரு கணத்தில் நகர முடியாதது எப்போதுமே நகர முடியாது..
3. எந்திரன் பாரடக்ஸ் - முயல் ஆமையை வெல்ல முடியாது.
முயலுக்கும் , ஆமைக்கும் ஓட்ட பந்தயம் …
ஆமையின் ஆரம்ப புள்ளி நூறு மீட்டர் முன்பாக நிர்ணயிக்கப்படுகிறது.. ( ஸ்பெஷல் சலுகை )
இப்போது போட்டி ஆரம்பிக்கிறது..
முயல் முதலில் ஆமையின் ஆரம்ப புள்ளியை அடைய வேண்டும்..
முயல் நூறு மீட்டரை அடைவதற்குள், ஆமை ஒரு பத்து மீட்டராவது நகர்ந்து இருக்கும்..
இப்போது முயல் இந்த பத்து மீட்டரை அடைய வேண்டும்..
அதற்குள் ஆமை ஒரு மீட்டராவது நகர்ந்து இருக்கும்..
இந்த தூரம் குறையுமே தவிர, இல்லாமல் போய் விடாது..
எனவே முயல் ஆமையை ஒரு போதும் வெல்ல முடியாது.4. பதிவர் பாரடக்ஸ்
எல்லா பதிவர்களும் பொய் சொல்பவர்கள்இப்படி நான் சொன்னால் அது பாரட்க்ஸ்,,
இந்த ஸ்டேட்மண்ட் உண்மை என்றால், நான் சொல்வது பொய் ஆகிவிடும்..
நானும் ஒருவர் பதிவர்தானே.. ஸ்டேட்மண்ட் படி நானும் பொய் சொல்பவன்..
எனவே எனது இந்த ஸ்டேட்மெண்டும் பொய்…
இந்த ஸ்டேட்மெண்ட் பொய் என்றால் என்ன அர்த்தம்..
எல்லா பதிவர்களும் உண்மை சொல்பவர்கள் என்று ஆகிறது..
அப்படி என்றால் எனது ஸ்டேட்மெண்டும் உண்மை ஆகிறது..
உண்மை என்றால் என்ன ஆகும்?
இப்படி முடிவே இல்லாமல் போகும் இந்த விவகாரம்
5, பார்பர் பாரடக்ஸ்
ஓர் ஊரில் ஒரே ஒரு பார்பர் மட்டும் இருக்கிறார்.. அந்த ஊரை விட்டு யாரும் வெளியே போக முடியாது.. யாரும் வரவும் முடியாது..
செல்ஃப் ஷேவிங் செய்து கொள்ள விரும்புபவர்களுக்கு ஷேவிங் செய்ய கூடாது.. , செல்ஃப் ஷேவ் செய்யாத , அந்த ஊரில் இருக்கும் மற்ற அனைவருக்கும் இவர் ஷேவிங் செய்ய வேண்டும் என்பது உத்தரவு,,,’
இந்த உத்தரவு ஒரு பாரடக்ஸ்இவர் எப்படி ஷேவ் செய்து கொள்வார்..
தானே செல்ஃப் ஷேவிங் செய்து கொள்ள விரும்பினால், அப்படி செய்ய முடியாது,,, ஏனென்றால் செல்ஃப் ஷேவிங் செய்து கொள்ள விரும்புபவர்களுக்கு செய்ய கூடாது என்பது விதி..
சரி.. ஷேவ் செய்யாமல் இருக்கலாம் என்றாலும் முடியாது… செல்ஃப் ஷேவிங் செய்யாதவர்களுக்கு , இவர் செய்து விட வேண்டும் என்பது விதி..
எப்படி பார்த்தாலும் சிக்கல்தான்..
தமிழ்நாட்டு அரசியல்ல எல்லாமே பார்டக்ஸ் தான்...
ReplyDeleteநம்ம ஒட்டு போடலேன்னா நம்ம ஓட்ட யாரவது போட்ருவாங்க. சரி நாம ஒட்டு போடலாம்னா, நாம ஒட்டு போட்ற அளவுக்கு நல்லவங்க யாருமில்ல..
நம்ம ஒட்டு போடலேன்னா நம்ம ஓட்ட யாரவது போட்ருவாங்க. சரி நாம ஒட்டு போடலாம்னா, நாம ஒட்டு போட்ற அளவுக்கு நல்லவங்க யாருமில்ல "
ReplyDeleteஅட்டகாசமா சொன்னீங்க ..சூப்பர்
இதைத் தான் தமிழில் "தெளிவாகக் குழப்புவது" என்பார்கள் ! அருமை அருமை !
ReplyDeleteஇதைத் தான் தமிழில் "தெளிவாகக் குழப்புவது" என்பார்கள் "
ReplyDeleteஹி ஹி
மொத்தமா நல்லா குழப்பிட்டீங்க. பதிவோட லேபிள் ஆராய்ச்சினு இருக்கு. உங்க ஆராய்ச்சிக்கு நாங்க தான் சோதனை எலியா?
ReplyDeleteபடம் பார்த்தபோது நான்கூட வழக்கமாக நாம் சின்ன வயதில் படித்த முயல் ஆமை பற்றிய கதை தான் என்று நினைத்துக்கொண்டேன்...
ReplyDeleteபதிவர் பாரடாக்ஸ் கான்செப்ட் அருமை...
உங்க ஆராய்ச்சிக்கு நாங்க தான் சோதனை எலியா"
ReplyDeleteஎனக்கு உங்களை விட்டா யாரு இருககா..
அதான் ஆராய்ச்சியை உங்கலிடம் செய்ய வேண்டி இருக்கு
ஹி ஹி
.
பதிவர் பாரடாக்ஸ் கான்செப்ட் அருமை..”
ReplyDeleteந்ன்றி..
நல்லா குழப்பி, இடியாப்பம் மாதிரி பிழிஞ்சிட்டீங்களே!
ReplyDeleteநண்பர் "கனாக்காதலன்" அவர்களின் பின்னூட்டத்தை "கன்னா பின்னா"வென வழிமொழிகிறேன் :)
ReplyDeleteஒரு சிறிய ததவல் திருத்தம்!! எந்திரன் படத்தில் கூறப்படுவது ஆமைக்கும் முயலுக்குமான ரேஸ் அல்ல.
ReplyDeleteகிரேக்க வீரன் எக்கீலீஸுக்கும் ஆமைக்குமான ரேஸ் அது!!
யோசிப்பவருக்கு நன்றி. நீங்கள் சொல்வது சரியானதுதான் . எளிமையாக விளக்க முயல் என மாற்றி விட்டேன் . பின் குறிப்பிட்டு சொல்லியிருக்க வேண்டும் . சுட்டி காட்டியதற்கு நன்றி
ReplyDeleteபாலாஜி சரவணா. இன்னொரு முறை ஹி ஹி
ReplyDeleteபதிவர் பாரடாக்ஸ் மட்டும் படிச்சா உடனே எனக்கு நல்லா புரிஞ்சிச்சு... மத்த எதுவுமே புரியலை... ஒரு வேலை டெய்லி ஒண்ணு படிச்சா புரியுமோ என்னவோ ?
ReplyDelete