நலமா ?
எப்போதும் பின்னூட்டம் வழியாக உங்களுடன் உரையாடும் நான் இப்போது மெயில் அனுப்ப காரணம் ந்ந்தலாலா எனும் டெம்ப்ளேட் படம்...
உங்களது பெரிய பிளஸாக நான் கருதுவது, சராசரி மனிதனை புரிந்து வைத்து கொண்டுள்ள தன்மைதான்..
மந்திர புன்னகை படம் பார்க்கும்போது , என் அருகில் சற்று நேரம் அமர்ந்து இருந்தீர்கள்.. என்னை அறிமுகப்படுத்தி கொண்டு , கை குலுக்கி பாராட்ட நினைத்தேன்.. ஆனால் மற்றவர்களுக்கு தொல்லையாக இருக்கும் என்பதால் , செய்ய முடியவில்லை...
இதை நான் சொல்ல காரணம், உங்கள் கருத்துக்கள் மீது நான் வைத்துள்ள மரியாதையை உணர்த்துவதற்காக..
அப்படிப்பட்ட நீங்கள் , ந்ந்தலாலாவை சரியான படி விமர்சிக்கவில்லை என்ப்தே என்னை போன்றோரின் வருத்தம்..
ஒரு ரசிகன் என்ற முறையில், என்னை போன்றோர் என்ன வேண்டுமானாலும் சொல்ல்லாம்.. ஆனால் நாளைய இயக்குனர்களுக்கு செக் வைக்கும் இது போன்ற இயக்குனர் படங்களுக்கு , திரை துறையில் இருக்கும் நீங்களே ஆதரவளிப்பது, மரத்தின் மீது இருந்து கொண்டு அதன் அடிப்பகுதியை வெட்டுவது போன்ற செயல்...
கண்ணை திறந்து பார்த்தால், ஆயிரம் கதைகள் இங்கு இருக்கின்றன.. ஆயிரம் பேர் நல்ல கதைகளை வைத்து கொண்டு வாய்ப்பில்லாமல் இருக்கும் நிலையில், அனுபவம் எல்லாம் குப்பை... நான் வெளினாட்டு பட்த்தை பார்த்தோ, புத்தகம் படித்தோ படம் எடுப்பேன் என சொல்வது , அந்த அப்பாவிகளை, திறமைசாலிகளை கிண்டல் செய்வது போல ஆகாதா? இதை என்னை போன்ற ரசிகர்கள் கேட்பதைவிட, நீங்கள்தானே கேட்க வேண்டும்..
எத்தனை பேர் வெளி நாட்டு படங்களை பார்த்து இருப்பார்கள்.. இப்படியாவது வந்தால் நல்லதுதானே என நீங்கள் கேட்கலாம்..
ஒரு பொழுது போக்கு படம் இப்படி எடுக்கப்பட்டால்கூட ஒப்புக்கொள்ள்லாம்.. ய்தார்த்த படங்கள் இப்படி எடுக்கப்பட்டால், அது அபாயகரமானது..
உதாரணமாக, தாஸ்தயேவ்ஸ்கியின் வெண்ணிற இரவுகள் கதையை , சென்னையில் நடப்பது போல மாற்றி ஒருவர் எழுதி வெளியிட்டால் அது கேலிக்கூத்து ஆகி விடாதா?
இரவு, பனி போன்றவை ரஷ்ய நாவலில் தரும் அர்த்தம் வேறு.. சென்னையில் நடப்பதாக ஒருவர் அதே பாணியில் எடுத்தால் அந்த அர்த்தமே மாறி விடும்...
அதிகார பூர்வ மொழி பெயர்ப்பை படித்தால்தான் , சரியான உணர்வை பெற முடியும்...
இந்த அதிகார பூர்வமற்ற மொழி பெயர்ப்பை, எந்திரனுடன் ஒப்பிட்டு நீங்கள் சொன்னது, மிக மிக தவறானது...
உண்மையில் இது போன்ற போக்கை கண்டிக்கும் கடமை என் போன்றோரை விட உங்களுக்குத்தான் உள்ளது..
இது போன்ற இயக்குனர் படங்கள் ஜெயித்தால் அப்படி என்ன கெடுதல்.ஏற்படும் ( என் போன்ற ரசிகனுக்கு அல்ல... திரை உலகுக்கு )
1. நல்ல சினிமா என்றால், மெல்லிய சோகம்- இயல்பை விட்டு விலகிய கதானாயகன்- இளையராஜா இசை என்ற டெம்ப்ளேட் உறுதியாகி விடும்.. உண்மையான நல்ல படங்கள் வராமல் போய் விடும்
2. நம் பிரச்சினைகளை, நம்மை , நம் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் ப்டங்கள் வராது.. அனைவரும், இறக்குமதியை ஆரம்பித்து விடுவார்கள்.
3. உலகப்பட தரத்தை நாம் என்றுமே எட்ட முடியாமல் போய் விடும்...
4. சராசரி மனித்னை சினிமா புறக்கணித்தால், அவனும் சினிமாவை புறக்கணிப்பான்.
விரைவில் மிச்சம் இருக்கும் திரை அரங்குகளும் , ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் ஆகி விடும்..
5. சராசரிக்கு மேற்பட்ட ரசிகனும் , தமிழ் சினிமாவை புறக்கணிப்பான்.. ஜப்பான் பட்த்தை அவனே பார்க்க முடியும் சூழ்னிலையில், காப்பியை பார்க்க விரும்ப மாட்டான்..
சுருக்கமாக சொன்னால், எந்திரன் சராசரி ரசிகனை மனதில் கொண்டு தயாரிக்கப்பட்ட தமிழுக்கு ஏற்ற படம்..
ந்ந்தலாலா , அறிவு ஜீவிகளை மனதில் கொண்டு தயாரிக்கப்பட்ட தமிழுக்கு ஒவ்வாத படம்....
அதை உங்களை போன்றோர் ஆதரிப்பது தமிழ் சினிமாவுக்கு நல்லதல்ல...
என்றென்றும் அன்புடன்,
பார்வையாளன்Pichaikaaran.blogspot.com
கேபிள் அண்ணன் பதில் எழுதினால் நிச்சயம் அதை இந்தப் பதிவிற்கு பிற்சேர்க்கையாக இணைக்கவும்...
ReplyDeleteஅவர் பதில் அனுப்பினால், கண்டிப்பாக இணைப்பேன்..
ReplyDeleteநாம் ரசிப்பது, திட்டுவது வேறு விஷயம்.. ரசிகன் என்ற முறையில் அது முக்கியம்
ஆனால், திரைதுறை சம்பந்தப்பட்ட அவர் கருத்து இன்னொரு கோணத்தில் முக்கியமானது..
பார்வையாளன் அவர்களே, நீங்கள் ஒன்றை மட்டும் மறந்து விடுகிறீர்கள். கேபிள் சங்கர் சார் போன்றோர் "நந்தலாலா" வை மட்டும் நல்ல படம் என்று சொல்லவில்லை. நந்தலாலாவும் ஒரு நல்ல படம் என்றே சொல்லுகின்றனர். இந்த பாராடாக்ஸ் உங்களுக்கு புரியாததல்ல.
ReplyDeleteநந்தலாலாவும் ஒரு நல்ல படம் என்றே சொல்லுகின்றனர். இந்த பாராடாக்ஸ் உங்களுக்கு புரியாததல்ல "
ReplyDelete!ஹா ஹா..
மைனா , மந்திர புன்னகை நல்ல படம்.. நந்தலாலா”வும்” நல்ல படம் என சொல்வது தவ்று என்பதே என் குற்றச்சாட்டு
ஆங்கிலப்படங்கள் மொழிமாற்றம் அடைந்து சனி ஞ்யிருகளில் டி.வி.யில் சக்கை போடு போடுகிறது.கேரளா தெலுங்கு படங்கள் விஜய் நடித்து சூப்பர் டூப்பர் ஹிட் ஆகிறது.இதற்கெல்லாம் தங்கள் கவலை என்னவோ? எங்கள மாதிரி சப்பான்,கொரியா,படங்கள் பாக்க முடியாதவங்க பாக்குறோம்.உங்களுக்கென்ன?
ReplyDeleteஆங்கிலப்படங்கள் மொழிமாற்றம் அடைந்து சனி ஞ்யிருகளில் டி.வி.யில் சக்கை போடு போடுகிறது "
ReplyDeleteஇப்படி அதிகாரபூர்வ மொழி மாற்ரம் செய்வது வரவேற்கதக்கதுதான்
’
கேரளா தெலுங்கு படங்கள் விஜய் நடித்து சூப்பர் டூப்பர் ஹிட் ஆகிறது.இதற்கெல்லாம் தங்கள் கவலை என்னவோ?”
கம்ர்சியல் படங்களை எந்த மொழியில் இருந்து எந்த மொழிக்கு மாற்றினாலும் ஒன்றும் பாதிப்பு இருக்காது
“எங்கள மாதிரி சப்பான்,கொரியா,படங்கள் பாக்க முடியாதவங்க பாக்குறோம்”
நல்லதுதான்... அதிகாரபூர்வமாக இப்படி மொழி மாற்றம் செய்யவேண்டியதுதானே என்பதே நம் ஆதங்கம்