- 1993 ல் , எரிகல் தாக்கி ஒரு செயற்கைகோள் அழிந்தது..இப்படி நிகழ்வது அபூர்வம்..
- உலகில் அதிகமாக பயன்படுத்தப்படும் உலோகம் இரும்பு.. அதற்கு அடுத்த இடம் தாமிரம்…
- கடல், நிலப்பகுதி என உலகில் இருக்கும் எல்லா தங்கமும் தோண்டி எடுக்கப்பட்டு விட்டால், பூமியில் இருக்கும் ஒவ்வொருவர்க்கும் இரண்டு கிலோ தங்கம் கொடுக்கலாம்…
- ஐ பி எம் சேர்மனாக இருந்த தாமஸ் வாட்சனிடம் கம்ப்யூட்டர் விற்பனை வாய்ப்பு பற்றி கேட்கப் பட்டது…
அதிக பட்சம் ஐந்து கம்ப்யூட்டர்கள் விற்பனை ஆகலாம் என்றார் அவர்… 1943ல் நடந்தது இது…
- 60 கி மீ வேகத்தில் ஒரு கார் பயணப்பட்டால், அது பூமியின் அருகில் இருக்கும் ( சூரியனை தவிர வேறு ) நட்சத்திரத்தை அடைய 48 மில்லியன் ஆண்டுகள் ஆகும்… அதாவது 6,85,000 தலைமுறைகள் ஆகும்…
- சூரியன் , பால்வெளி மண்டலத்தை ஒரு முறை சுற்றி வரும் காலம் காலம் , காஸ்மிக் ஆண்டு என அழைக்கப்படுகிறது ..
இதற்கு 225 மில்லியன் ஆண்டுகள் ஆகும்..
..
- எரிகல்லால் தாக்கப்பட்ட இறந்த ஒரே உயிரினம் என்ற பெருமையை ஒரு நாய் பெற்றுள்ளது…
1911ல் எகிப்தில் இது நடந்தது…
- சனி கிரகத்தின் அடர்த்தி, தண்ணீரை விட குறைவு,, தண்ணீரை விட லேசானது இது…
அதாவது, ஒரு மாபெரும் பாத்திரத்தில் தண்ணீரை நிரப்பினால் , அதில் சனி கிரகம் மிதக்கும்…
.
- முதலையால் வாயை மூடி மூடி திறக்க முடியும்.. ஆனால் பக்கவாட்டில் அசைக்க முடியாது..
********************************************************************************************************
ஓக்கே… ரிலாக்ஸ் செய்ய ஒரு புதிர்..
ஒரு முப்பது வயது ஆள் , 25 வயது பெண்ணை திருமணம் செய்து கொண்டான்.. இருவருக்கும் அது முதல் திருமணம்…
இனிய வாழவு வாழ்ந்த பின், தன் ஐம்பதாவது வயதில் அவள் இறந்தாள்..
மனைவியை இழந்த சோகத்தில் வாழந்த அவன் , தன் 80 ஆவது வயதில் இறந்தான்..
மனைவி இல்லாமல் எத்தனை ஆண்டுகள் அவன் இந்த பூமியில் வாழ்ந்தான் ?
( க்ளு ..ஒரு ட்விஸ்ட் இருக்கிறது…. )
அடடா..!
ReplyDeleteமுதல் வடையே..
கிடைச்சிருக்கே..!
தகவல்கள் பிடித்திருந்ததா ?
ReplyDeleteபுதுமையான தகவல்கள் அனைத்தும் அருமை.!
ReplyDeleteபுதிருக்கான விடை.
ReplyDelete55 ஆண்டுகள் (திருமணம் வரை 30 வருடம். பாவம் அதுவரை சனி பிடிக்காமல் இருந்திருக்கு. சுதந்திரமாக இருந்திருப்பான்.)
மனைவி இறக்கும் போது அவளுக்கு 50 இவனுக்கு 55 ஆக மீதமுள்ள 25 ஆண்டுகள் உண்மையில் நிம்மதியாவே வாழ்ந்திருப்பான்.. ஹி...ஹி.. துக்கம் எனில்.. 1 வருடத்திற்குள்ளாவே இறந்திருப்பான்.)
விடை சரியா..!!??
ReplyDeleteவிளக்கம் சரியா..??
ஹே..ஹெ.. நாங்களும் புதிர் போடுவோம்ல...!!!??? ஹி..ஹி..
பகிர்வுக்கு நன்றி.
விடை சூப்பர் . விளக்கம் செம காமடி . எக்சலண்ட் பதில் .
ReplyDeleteஇந்த கேள்வி என்னிடம் கேட்கபட்டபோது தவறாக பதிலளித்தேன் என்ற ரகசியம் நமக்குள் இருக்கட்டும்
தகவல்கலுக்கு நன்றி.
ReplyDelete//மனைவி இல்லாமல் எத்தனை ஆண்டுகள் அவன் இந்த பூமியில் வாழ்ந்தான் //
54 ஆண்டுகள் சரியா? பரிசு எல்லாம் வேண்டாம்!!!
//கடல், நிலப்பகுதி என உலகில் இருக்கும் எல்லா தங்கமும் தோண்டி எடுக்கப்பட்டு விட்டால், பூமியில் இருக்கும் ஒவ்வொருவர்க்கும் இரண்டு கிலோ தங்கம் கொடுக்கலாம்//
ReplyDeleteபார்ரா! அப்புறம் எதுக்கு வெய்ட்டிங்? :)
உங்கள் தகவலுக்கு நன்றி !
ReplyDeleteமேலும் ஒரு தகவல் : சனி கிரகத்தின் பெரிய நிலவின் பெயர் " டைட்டன் ". டைட்டன் என்றால் பிரம்மாண்டம் என்று அர்த்தம். அதன் நீட்சியே டைட்டானிக்.
எனக்கு ரெண்டு கிலோ தங்கம் ஆர்டர் பண்ணிருங்க,,
ReplyDeleteஅருமை..
நன்றி ஹரிஸ்
ReplyDeleteதகவலுக்கு நன்றி கனாகாதலரே
ReplyDeleteஜீ...
ReplyDeleteதங்கம் எடுக்க ஆரம்பிததும் முதலில் நமக்குதான் ..டொண்ட் வொர்ரி
தாமஸ் ரூபன்..
ReplyDeleteஎன் பங்கு தங்கம் இரண்டு கிலோ வந்ததும், நீங்கள் வேண்டம் என்றாலும் பரிசு வந்து சேரும்..
80 = 30 + (25) + 25
ReplyDeleteஐயா, பரிசு தொகை எவ்வளவு?
அருமையான தகவல்கள்.... சிலிர்த்தேன்... குறிப்பாக IBM Chairman சொன்ன செய்தியையும், ஏரிகள் பட்டு இறந்த நாயையும் அதிகம் ரசித்தேன்...
ReplyDelete// மனைவி இல்லாமல் எத்தனை ஆண்டுகள் அவன் இந்த பூமியில் வாழ்ந்தான் ? //
இதுதான் கேள்விஎன்றால் பதில் 25...
புதிய தகவல்கள் நண்பா..
ReplyDeleteசூரியன் பால்வெளியச் சுத்தி வருதா? என்னங்க சொல்றீங்க? சூரியன், ஒரு நட்சத்திரம் ...அது நிலையானது அப்படிதானே அறிவியல் சொல்லிக் கொடுக்குது...
ReplyDelete@நான்தான் . பூமியை பொறுத்தவரை சூரியன் நிலையானதுதான் . பஸ்ஸில் கண்டக்டர் நிலையாக அமர்ந்து இருக்கிறார் . நாம் நடந்து சென்று டிக்கட் வாங்குகிறோம் . சில பஸ்களில் பயணி நிலையாக இருப்பார் . ஆனால் வெளியில் இருந்து பார்ப்பவர்களை பொறுத்தவரை கண்டக்டர் , பயணி என யாரும் நிலையாக இல்லை . பஸ்ஸுடன் நகர்கிறார்கள்
ReplyDeleteகடுகு சிறிதாக இருந்தாலும்,காரம் பெரிது
ReplyDelete@பிலாசபிபிரபாகரன் , திருமணத்துக்கு முன்பு அவர் மனைவி இல்லாமல்தானே இருந்திருப்பார் . அதை மறந்து விட்டீர்களே
ReplyDeleteசரியான விடை சித்ரா மேடம்
ReplyDeleteநன்றி பாலாஜி சரவணா
ReplyDeleteநன்றி உருத்திரா அவர்களே
ReplyDelete@நான்தான், பூமி சூரியனை சுற்றுகிறது. சூரியன் பால்வெளி மண்டலத்தை சுற்றுகிறது. அடிப்படையில் சூரியன் மட்டும் சுற்றவில்லை. அதனுடன் இணைந்த சூரியக் குடும்பமே சுற்றுகிறது. அதனால் பூமியை பொறுத்த வரை சூரியன் நிலையானது.
ReplyDeleteநல்ல தகவல்கள். சமீபத்தில் கூட எரிகல் தாக்கி ஒரு செயற்கைக்கோள் செயலிழந்துவிட்டதாக செய்தி படித்த நினைவுகள். பகிர்வுக்கு நன்றிகள்.
ReplyDelete"சமீபத்தில் கூட எரிகல் தாக்கி ஒரு செயற்கைக்கோள் செயலிழந்துவிட்டதாக செய்தி படித்த நினைவுகள் "
ReplyDeletethank u for information
@நாகராஜசோழன் MA தேர்தலில் ஜெயித்ததும் கல்வி அமைச்சர் பதவி உங்களுத்தான்... :-)
ReplyDeleteசரியான செய்தியை, தெளிவாகவும் எளிமையாகவும் சொன்னிங்க.. நன்றி
அருமையான மினி என்சைக்ளோபீடியா...
ReplyDelete