Sunday, November 28, 2010

விண்வெளிக்கு போன வில்லேஜ் ஆளு- வரிவிலக்கு தேவைப்படாத சிறுகதை

 

பாரும்மா…. அவசரப்படாம யோசித்து கை எழுத்து போடு.. உன் வாழ்க்கையே மாற்றி அமைக்கும் விஷ்யம் இது “

விஞ்ஞானி ஜோசப் சொல்ல, காயத்ரி மெல்ல சிரித்தாள்..

“ எனக்கு வேறு வழி இல்லை சார்.. நீங்க இதுக்காக கொடுக்கும் பணம் எனக்கு முக்கியம்… யோசிக்கும் நிலையில் நான் இல்ல, “

ஜோசப் அவளை அன்புடன் பார்த்தார்..

”பாரு மா… பணத்துக்காக செய்வதா நினைக்காதே,,, நீ செய்வது ஓர் அற்புதமான காரியம்,,, மனித வரலாற்றுல இது ஒரு மாபெரும் சாதனை “

“ சார்… என் வேதனைதான் எனக்கு பெருசு… நீங்க சரியான விஷயம்தான் செய்வீங்கனு எனக்கு தெரியும்…  அதனால சாதனை பற்றி கவலை இல்லை..”image

” இருந்தாலும் நீ என்ன செய்யபோறேனு உனக்கு தெரியணும்…உனக்கு புரியறமாதிரி எளிமையா சொல்றேன் ..

பிளாக் ஹோல் பற்றி கேள்விப்பட்டு இருக்கலாம்… இதன் ஈர்ப்பு அபரிமிதமா இருக்கும்… ஒளியைக் கூட விட்டு வைக்காது…

ஒரு விதத்தில் உலகின் அழிவு என்பது பிளாக் ஹோல்தான்.. எளிமையாக சொல்ல வேண்டும் என்றால் நடசத்திரத்தின் எரிபொருள் தீர்ந்த நிலையில் கருந்துளையாக மாறும்… வெள்ளை குள்ளர்கள் என்று ஒரு விஷ்யமும் உண்டு..

இதை ஆராய்வது எளிதல்ல…  இதன் எல்லைக்குள் நுழைந்தால் மீண்டும் வெளியே வர முடியாது “

டீ அருந்தி சற்று ரிலாக்ஸ் செய்து விட்டு அவர் தொடர்ந்தார்..

” இன்னொரு பண்பும் உண்டு.. இதன் அருகில் செல்ல செல்ல நம நேரம் மெதுவாக செல்ல தொடங்கும்… அதாவது , எளிமையாக சொல்ல வேண்டும் என்றால், பூமியில் ஒரு வருடம் ஆனால், அதன் செல்பவருக்கு ஒரு மாதம்தான் ஆகி இருக்கும் .. ஒளியின் வேகவும் , இதன் ஈர்ப்பு வேகமும் ஒன்றாக இருப்பதால் இது நிகழ்றது….

ஆனால் இதை ஆராய முடியாமல் இருந்தது…

இந்த நிலையில்தான், பிரபஞ்சம் ஒரு கட்டத்தில் அழிந்து விட்டு மீண்டும் புதிதாக துவங்கும் என்பது கண்டுபிடிக்கப்பட்டது..

அப்படி பார்த்தால், பிளாக் ஹோலுக்கு எதிராக வெண் துளை என ஒன்று இருக்க வேண்டும் என்பது உறுதியாகிறது.. இப்படி ஒன்று இருப்பதை யாரும் ஏற்கவில்லை.. இப்போது ஏற்றுத்தான் ஆக வேண்டும்..

 

இதற்கு பிளாக் ஹோலுக்கு எதிரான பண்பு இருக்கும்.. இது எல்லாவற்றையும் தள்ளிவிட பார்க்கும்.. இப்படி தள்ளப்பட்ட ஒன்றுதான் இந்த பிரபஞ்சம்… நம் பூமி.. நம் இந்தியா.. நம் தமிழ் நாடு..

எல்லா நட்சத்திரங்களும் கருந்துளையால் ஈர்க்கப்பட்டு காணாமல் போகும்.. பிறகு வெண் துளையால் துப்ப்பட்டு , மீண்டும் உருவாகும்… மீண்டும் அழிவு… மீண்டும் உருவாதல்… எல்லையற்ற விளையாட்டு என ஆன்மீக ரீதியாக புரிந்து கொண்டாலும் எனக்கு ஆட்சேபம் இல்லை….

 image

இந்த வெண் துளையை  முதன் முதலில் ஆராய போவது நாம்தான் “

காயத்ரி திகைத்தாள்..

“ நான் போய் என்ன ஆராய்வேன்..எனக்கு என்ன தெரியும் ? “

“ ஆரய்ச்சியாளர்கள் போக தயங்குறாங்க… ஆனால் அதன் அருகில் செல்ல செல்ல ,  கருந்துகளுக்கு எதிரான விளைவு ஏற்படும்.

அதாவது நேரம் வேகமாக செல்ல ஆரம்பிக்கும்…  உனக்கு பத்து வருடம் ஆனால், இங்கு இருப்பவர்களுக்கு ஒரு மாதம்தான் ஆகி இருக்கும் “

காயத்ரிக்கு புரியவில்லை

“ இதனால் என்ன பிரச்சினை ? “

“ அங்கு இருபது வருடம் இருந்து விட்டு, இங்கு வந்தால் , இங்கே இருப்பவர்களுக்கு இரண்டு மாதங்கள்தான் ஆகி இருக்கும் ..

இன்னும் எளிமையாக சொன்னால், நீ போய் விட்டு வரும்போது, உன் வயதும் உன் அம்மா வயதும் ஒன்றாக ஆகி இருக்க கூடும்… உன் அண்ணனை விட உனக்கு அதிக வயதாகும் வாய்ப்பும் இருக்கிறது ..

தன் இளமையை, வயதை இப்படி இழக்க யாரும் விரும்பவில்லை… எனவே தான் பெரும் பணம் கொடுத்து உன்னை ஒப்பந்தம் செய்துள்ளோம்..

நீ ஆராய்ச்சி எல்லாம் செய்ய வேண்டியது இல்லை… போய் விட்டு , ஒரு வருடம் கழித்து இங்கே வந்தால் போதும்.. அதாவது எங்களுக்கு ஒரு வருடம்.. என் கணக்குப்படி  நீ அப்போது ஐம்பது வயது பெண் ஆகி இருப்பாய்..

இது மட்டும் நடந்தால், பெரு வெடிப்பு கொள்கை உள்ளிட்ட பலவும் அடிபட்டு போய் விடும்.

வெண் துகள்தான் அனைத்துக்கும் ஆதாரம் எனபதை பாட திட்டத்தில் சேர்க்கலாம் “

காயத்ரி திகைத்தாள்..

“இப்போது எனக்கு இருபது வயது..  ஒரு வருடம் கழித்து எனக்கு ஐம்பது வயது.ஆகி விட கூடும்.

கல்யாணம், காதல் எல்லாம் கன்வாக போகும்..

ஆனால் பணம் முக்கியம்… குடுமபம் முக்கியம்.. இந்த தியாகம் செய்துதான் ஆக வேண்டும் “

“ எனக்கு ஓக்கே சார்  ..

ஆனா ஒண்ணு சார்… நீங்க கொடுக்க்ற பணம் , என் அப்பா கான்சர் ஆப்பரேஷனுக்கும், தங்கை படிப்புக்கும் சரியா போகும்.. ஒரு வருஷம் கழித்து வரும் என் வாழ்க்கை என்ன ஆகும் ? “

“ உன் பெர்சனல் வாழ்க்கை பற்றி நீதான் முடிவெடுக்கணும்.. ஆனால் வேலை பற்றி கவலை வேண்டாம்… நேராக இங்கே வா.. நான் இங்கேயே உனக்கு ஒரு வேலை போட்டு தரேன் “

 

கிராமத்தில் இருக்கும் குடும்பத்தினருக்கு எப்படி விளக்குவது என தெரியவில்லை…

ஆனால் பணம் கிடைத்தது சந்தோஷமாக இருந்தது…

அண்ணன் அருண் மிகவும் மகிழ்ந்தான்…

“ அப்பாவை நல்ல ஆஸ்பத்திரில சேர்க்கலாம்.. கோமதியை நல்ல காலேஜ்ல சேர்த்து , அவ ஆசைப்ப்ட்ட மாதிரி டாகடர் ஆக்கலாம்.  அம்மாவுக்கு ஒரு நல்ல வீட்டை கட்டி குடி வைக்கலாம்.. நான் பார்த்துக்றேன் “ என்றான் உற்சாகத்துடன்…

வெளி நாடு செல்வதாக சொல்லி கிளம்பினாள்…

”உன்னை நினைத்து ரொம்ப பெருமை படுறேன்மா… நம்ம இந்தியா உலக அரங்கில் தலை நிமிர்ந்து நிற்க நீ உதவ போற… தமிழ் நாடு தலை நிமிர போகுது…” 

லட்சிய வெறியுடன் பேசிய ஜோசப்பை பெருமிதத்துடன் பார்த்தாள்..

 

பணத்துக்காக செல்லும் நினைப்பு மாறி, இந்தியா வல்லரசு ஆக தான் ஒரு கருவியாக இருப்பதை நினைத்து உற்சாகத்துடன் கிளம்பினாள்…

1.12.2010….

விண்கலம் தன் சரித்திர பயணத்தை தொடங்கியது…

2012

மீண்டும் தன் கிராமத்தை நோக்கி சென்று கொண்டிருத்தவளுக்கு , தன்னை எப்படி குடும்பத்தினர் எதிர் கொள்வார்கள் என பார்க்க ஆவலாகவும், டென்ஷனாகவும் இருந்தது.,..

இவர்களை பார்த்த பின்புதான் , ஜோசப் சாரை பார்க்க வேண்டும்.. இங்கு இரண்டு வருடங்கள் ஆகி இருந்தாலும், தன்னை பொறுத்த வரை எத்தனை காலம் கடந்துள்ளது என்பதை அவர்தான் கணிக்க முடியும்..

அவளுக்கு என்னவோ பல யுகங்கள் போனது போல இருந்தது…

’கிராமமும் , மக்களும் அப்படியேதான் இருக்க போகிறது… நாம்தான் வெகு காலம் கடந்து சென்று விட்டோம்…’

கிராமத்தில் நுழைந்ததுமே அந்த வித்தியாசத்தை கவனித்தாள்..

கிராமத்துக்கு அழகு சேர்த்த குன்று அங்கே இல்லை…

சின்னஞ்சிறிய கற்குவியல்தான் காணப்பட்டது.. கல் ஏற்றுமதிக்காக அதை உடைக்கிறார்கள் என்பது புரிந்தது…

ஒரு குன்றையே வீழ்த்தி விட்டார்களே…

வேதனையுடன் நினைத்து கொண்டாள்…

மரங்களும் கூட காணவில்லை…

புதிய அடுக்குமாடி கட்டடங்கள் எழும்பி கொண்டு இருந்தன…

இவ்வளவு விரைவாக இபப்டி அழிவா..

தன் வீடு இருந்த தெரு அடையாளம் தெரியாத அள்வு மாறி இருந்தது…

அவளுக்கு தெரிந்த யாரும் இல்லை…

ஒரு பெரியவரை அணுகினாள்.

“ ஐயா,இங்கே ராமையானு ஒருத்தர் வீடு இருந்ததே..அவங்க எங்கே? “

அவர் கண்ணை சுருக்கி யோசித்தார்..

“ ஓ ..அவரா..  பாவம்.,.. அவர் வயலை அரசு கையகப்படுத்தி , அவர் பிழைப்பில் மண்ணை அள்ளி போட்டதால , தற்கொலை செஞ்சுகிட்டாரு..பாவம்..

அவர் பொண்ணு ஸ்கூல் படிப்பை முடிக்கிறதுக்கு முன்பே எவனைடோவோ ஓடி போச்சு,,,, ”

அதிர்ந்தாள் அவள்..

காதலிக்கும் வயசா அவளுக்கு… சாகும் வயசா அப்பாவுக்கு,.. அய்யோ…

“ அவர் பையன் சொத்தை எல்லாம் குடிச்சே அழிச்சு எங்கே போய் தொலைச்சுட்டான்… கவனிக்க ஆள் இல்லாம , அந்த அம்மாவும் போய் சேர்ந்துட்டாங்க “

தன்னை விட இவர்களுக்குத்தான் காலம் வேகமாக ஓடி இருக்கிறது…

விரக்தியுடன் விண்வெளி ஆய்வு மையத்தில் நுழைந்தாள்…

முன்பே செய்து இருந்த ஏற்பாடுகளால், நுழைவதில் பிரச்சினை இல்லை..

“ யாரைமா பார்க்கணும் “

“ விஞ்ஞானி ஜோசப் “

“ ஓ அவனா,,, இந்தியாவை வல்லரசு ஆக்குறேனு அப்படி இப்படினு கதை விட்டு , மக்கள் பணத்தை தின்னான்..

கடைசில, விஞ்ஞானிகள் மா நாடு ஊழல்ல மாட்டி இப்ப ஜெயில இருக்கான் … அவனோட சேர்ந்த கும்பலே கம்பி எண்ணுது.,..அவனுங்க செஞ்ச ஆராய்ச்சி எல்லாம் குப்பை தொட்டிக்கு போய்டுச்சு“

பல ஆண்டுகளில் நடக்க வேண்டிய தீமைகள் , சில ஆண்டுகளிலேயே முடிந்து விட்டதே..

ஒரு வேளை வெள்ளை துளை இங்குதான் இருக்கிறதா? நாம் இருப்பதே அதில்தானா?

அடிப்படைகள் சரி இல்லாமல் வல்லரசு கனவு காண்பது அபத்தம்…

இந்த ஆராய்ச்சிக்கு உடன்பட்டதே தவறு…

“ சரிமா… நீங்க யாரு “

அவள் விரக்தியுடன் சொன்னாள்

“: நான் யாரும் இல்லை “

தளர்வுடன் வெளியேற தொடங்கினாள்…

14 comments:

  1. இந்த கதையிலேயே சில அடிப்படைகள் இல்லை.அப்புறம் என்னத்த சொல்றது.

    ReplyDelete
  2. இது எல்லாமே புது விஷயங்களாக இருக்கு.

    ReplyDelete
  3. "இந்த கதையிலேயே சில அடிப்படைகள் இல்லை "

    விரிவாக எழுதவில்லை என்பது உணமை தான்..

    ஆனால் அடிப்படை உண்மைகள் ஆதார பூர்வமானவை..

    வெண் துளை என்பதை அறிவியல் உலகம் அதிகார பூர்வமாக ஏற்கும் காலமும், பிக் பெங் என்பது மனித கற்பனை என்பதை உணரும் காலமும் வரும்..

    இன்னும் ஒரு படி மேலே சென்று, காலம் பின் நோக்கி நகர தொடங்கும் என்பதும் ஏற்கப்படும்..

    இன்றைய அறிவியல் , நாளைய அபத்தம் என்பதும், இன்றைய அபத்தம் நாளைய அறிவியல் என்பதும்தான், நிரந்தரமான உண்மை

    ReplyDelete
  4. இது எல்லாமே புது விஷயங்களாக இருக்கு."

    ஒரு கட்டத்து மேல் அறிவியல் என்பது ஆன்மிக விளக்கம் போல ஆகி விடும் .. நம்ப முடியாத விஷயங்களை படிக்க நேரிடும்

    ReplyDelete
  5. //ஒரு கட்டத்து மேல் அறிவியல் என்பது ஆன்மிக விளக்கம் போல ஆகி விடும்//
    :)

    ReplyDelete
  6. //ஒரு கட்டத்து மேல் அறிவியல் என்பது ஆன்மிக விளக்கம் போல ஆகி விடும்//
    :)
    **********************


    பிரபஞ்சம் முழுக்க அறிவியல் விதிகள் படி அழிந்து ஒன்றும் இல்லாமல் போய் விடும்... அந்த ஒன்றுமில்லாததில் இருந்து மீண்டும் அனைத்தும் ஆரம்பிக்கும் என்கிறார்கள்..
    இப்படி நடப்பதற்கு உதவும் சக்திகளுக்கு சில அறிவியல் பெயர்களை வைத்துள்ளார்கள்..

    பெயர் வைத்து இவர்கள்... அவற்றை உருவாக்கியது யார் என்ற கேள்வி எழுகிறது.. ஒரு மாபெரும் பேரறிவு உலகை ஆட்சி செய்வதைத்தான அனைவரும் உறுதி செய்கிறார்கள்..

    ReplyDelete
  7. கதைப்போக்கு நன்றாகத்தான் இருக்கு...ஆனால் ஏதோ ஒன்று விடுபட்டுப்போனதுபோன்று தோன்றுதில்லையா?

    ReplyDelete
  8. @ Jana
    ஆமா . இன்னும் கொஞ்சம் விவரங்களை சேர்த்திருக்க வேண்டும்

    ReplyDelete
  9. அன்பு நண்பருக்கு,

    ஒரு அறிவியல் புனைவு என்பது அதைப் பற்றிய செய்தியை வாசகனைத் தேடிச் சென்று கற்றுக் கொள்ள வைக்க வேண்டும். அதை இக்கதை பூர்த்தி செய்வதாகவே நான் கருதுகிறேன்.

    இந்திய விஞ்ஞானிகளை நீங்கள் இவ்வளவு மட்டமாக எழுதியே எனக்கு இதில் ஏற்புடையாதாயில்லை. இது கற்பனையே என்ற பொழுதிலும்.

    மற்றபடி அருமை. வாழ்த்துக்கள் !

    ReplyDelete
  10. nalla oru karpanai !! rasithen !!

    ReplyDelete
  11. சயின்ஸ் பிக்சன் அருமை நண்பரே! இன்னும் கொஞ்சம் தகவல்களை பூர்த்தி செய்திருக்கலாம்.

    ReplyDelete
  12. "இன்னும் கொஞ்சம் தகவல்களை பூர்த்தி செய்திருக்கலாம் "

    ஆமா... உண்மைதான்.. கதையை விட அந்த அறிவியல் விளக்கங்கள் சுவையாக இருந்து இருக்கும்...

    ReplyDelete
  13. nalla oru karpanai !! rasithen !! "

    thank you, arun

    ReplyDelete
  14. பருத்திவீரன் பாதிப்பு வலைப்பூ சிறுகதையிலுமா ? #முடிவின் சோகம்...

    ReplyDelete

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா