வெவ்வேறு மாநிலங்களில் பணியாற்றி வந்த நிலையில், தமிழுக்கும் கம்ப்யூட்டருக்கும் சம்பந்தம் உண்டு என நான் நினைத்ததே இல்லை..
அதன் பின் தமிழ் நாட்டுக்கு வந்த பின் , சில சமயம் தமிழ் பிரிண்ட் அவுட் தேவைப்படும்போது , தமிழ் வசதி இருக்கும் கடைகளை தேடி அலைந்த காலம் எல்லாம் உண்டு..
தற்செயலாகத்தான் தமிழில் எழுதப்படும் வலைப்பூக்கள் பற்றி எனக்கு தெரியவந்தது…
அட,,, இத்தனை விஷயங்கள் தமிழில் எழுதுகிறார்களே என்ற பிரமிப்பு ஏற்பட்டது…
அதன் பின் ரசித்து படிக்க ஆரம்பித்தேன்… பத்திரிக்கைளை விட பதிவகள் என் இதயம் கவர்ந்தன…
குறிப்பாக நர்சிம் போன்ற பதிவர்களின் எழுத்துக்களை பார்க்கும்போது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கும்…
என் தமிழ் ஆர்வம் மீண்டும் உயிர் பெற்றது இது போன்ற எழுத்துக்களால்தான் .
அந்த கால கட்டத்தில் என்னிடம் கணிணி இல்லாததால் , அலுவலகத்தில் மட்டுமே வலைப்புக்களை படிக்க முடியும்… எனவே சில பதிவுகளை பிரிண்ட் எடுத்து வைத்துக்கொள்வது வழக்கம்..
அப்படி பிரிண்ட் எடுக்கும் எழுத்துக்களில் பதிவர் நர்சிமின் எழுத்துகளும் ஒன்று..
நான் ஏன் அப்படி சொல்கிறேன் என்று அவர் கவிதைகள், கதை போன்றவற்றை படித்தால் , உங்களால் புரிந்து கொள்ள முடியும்..
குறிப்பாக அவரது, குறுந்தொகை, சங்க இலக்கிய விளக்கங்கள் எத்தனை முறை வேண்டுமானாலும் படிக்கலாம் . இதை க்ளிக் செய்து படித்து பாருங்கள்…
அவர் கவிதை போல ஒரு கவிதையை என் வலைத்தளத்திலும் பிரசுரித்தால் நன்றாக இருக்குமே என நினைத்து பல நாட்கள் முயன்று பார்த்தேன்..
முடியல..
அவர் கவிதை போல அவர் மட்டுமே எழுத முடியும் என உணர்ந்து அவரிடமே கேட்டேன்..
அவர் தந்த கவிதை , இதோ உங்கள் பார்வைக்கு ..
அவர் எனக்கு தந்தது கவிதை மட்டுமல்ல… கவுரவுமும் கூட ….
*************************************************************************************************
முந்தைய நாள் தடம்
வார முதல்நாள்
பகற்பொழுதுக் கடற்கரை
நீர் நிறை வான்
நிகர் நிறை மண்
நேர் முக ஜோடி.
கழுவித் துடைத்துக் கயிறு கட்டப்பட்ட
கரும்பு-ஜூஸ் எந்திரம்.
யாரும் இயக்கிவிடாதபடி கம்பியாற் பிணித்த
ரங்கராட்டினம்.
துப்பாக்கி ஓட்டைகள் தாங்கிய
வேட்டித் திரை
பலூன்கள் அற்று.
தலைகீழாய் ஸ்டூல்கள்
அதன் மீது காகங்கள்.
சுற்றிப் பார்க்கிறேன்,
முந்தைய நாளின் தடங்கள்
ஏதேனும் தட்டுப்படுமா என
சற்றுத் தள்ளி
கைகளை மார்பின் குறுக்காகக் கட்டியபடி
கடலைப் பார்த்துக்கொண்டு இருக்கிறார்
ஒரு முதியவர்
ஆர்ப்பரித்து வந்து கொண்டிருக்கிறது
ஓர் அலை
- நர்சிம்வார முதல்நாள்
பகற்பொழுதுக் கடற்கரை
நீர் நிறை வான்
நிகர் நிறை மண்
நேர் முக ஜோடி.
கழுவித் துடைத்துக் கயிறு கட்டப்பட்ட
கரும்பு-ஜூஸ் எந்திரம்.
யாரும் இயக்கிவிடாதபடி கம்பியாற் பிணித்த
ரங்கராட்டினம்.
துப்பாக்கி ஓட்டைகள் தாங்கிய
வேட்டித் திரை
பலூன்கள் அற்று.
தலைகீழாய் ஸ்டூல்கள்
அதன் மீது காகங்கள்.
சுற்றிப் பார்க்கிறேன்,
முந்தைய நாளின் தடங்கள்
ஏதேனும் தட்டுப்படுமா என
சற்றுத் தள்ளி
கைகளை மார்பின் குறுக்காகக் கட்டியபடி
கடலைப் பார்த்துக்கொண்டு இருக்கிறார்
ஒரு முதியவர்
ஆர்ப்பரித்து வந்து கொண்டிருக்கிறது
ஓர் அலை
"தல" யோட கவிதையைப் போட்டுட்டு ஜன்ம சாபல்யம் அடைஞ்சிட்டீங்க பாஸ் :)
ReplyDeleteகவிதை வழக்கம் போல அவரது நடைல சூப்பர்!
"தல" யோட கவிதையைப் போட்டுட்டு ஜன்ம சாபல்யம் அடைஞ்சிட்டீங்க பாஸ் :)"
ReplyDeleteஎன் மகிழ்ச்சியை வார்த்தைகளில் வெளிப்படுத்த இயலவில்லை
”நீர் நிறை வான்
ReplyDeleteநிகர் நிறை மண்”
இது போன்றெல்லாம் தமிழ் நமக்கு எப்போது கைவரப்போகிறது என்ற ஏக்கம் ஏற்படுகிறது
கவிதை அருமை
ReplyDeleteகவிதை அருமை
ReplyDeletei am happy that i have introduced two wonderful persons to each other paarvaiyaalan
ReplyDelete"i am happy that i have introduced two wonderful persons to each other paarvaiyaalan"
ReplyDeleteநல்லோரை காணலும் நன்றே..
ந்ல்லோர் சொல் கேட்டலும் ந்ன்றே..
நல்லர்ர் குணம் உரைத்தலும் நன்றே..
அவரோடு இணங்கி இருத்தலும் நன்று..
கவிதை சூப்பர்.
ReplyDelete♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...
ReplyDeleteகவிதை அருமை
வெறும்பய said...
கவிதை அருமை
அன்பரசன் said...
கவிதை சூப்பர்.
***********************
அவரிடம் கவிதை வாங்கி பிரசுரித்த என்னை பாராட்ட யாரும் இல்லையா ?
[im]http://hatshrapnel.com/wp-content/uploads/2009/03/crying_baby.jpg[/im]
நர்சிம்மின் கவிதை அருமை வழக்கம்போலவே.
ReplyDelete//அவரிடம் கவிதை வாங்கி பிரசுரித்த என்னை பாராட்ட யாரும் இல்லையா ? //
ReplyDeleteபிறரைப் பாராட்டும் பிளாட்டின குணமுடைய (தங்கத்தை விட மேல்) பார்வையாளப் பெருந்தகையே :) பாராட்டுவது நல்லதுதான். ஆனால் ஒருவரை ஒரேயடியாகப் புகழ்வதும் பின் அவரிடம் ஏதும் குறை கண்டு ஒரேயடியாகத் திட்டுவதும் சரியல்ல. ஒவ்வொருவரிடமும் உள்ள நல்ல தன்மைகளை மட்டும் பார்த்தால் போதும், அந்த நல்ல பண்புகள் நம்மிடமும் வந்து விடும்.
கவிதை சூப்பர்.
ReplyDelete”ஒவ்வொருவரிடமும் உள்ள நல்ல தன்மைகளை பார்த்தால் , அந்த நல்ல பண்புகள் நம்மிடமும் வந்து விடும்”
ReplyDeleteஅருமையாக சொன்னீர்கள்
மிக்க நன்றி பார்வையாளன். அன்பும்.
ReplyDelete