Thursday, November 25, 2010

இந்த ஐந்து அறிவியல் உண்மைகள் உங்களுக்கு தெரியுமா?

சில அறிவியல் உண்மைகள் உங்கள் பார்வைக்கு,.
முதலில் அந்த உண்மைகளை பார்க்கலாம். அதற்கு பிறகு அதன் பின் இருக்கும் டெக்னிக்கல் விஷயங்களை பார்க்கலாம்..
1. காரில் தப்பி செல்லும் ஒருவனை உடனடியாக கொல்ல வேண்டுமானால் , சுலபமான வழி , அந்த காரின் பெட்ரோல் டேங்கை துப்பாக்கியில் சுடுவதுதான்.. இதனால் கார் தீப்பற்றி வெடித்து சிதறும்… ( பல சினிமாக்களில் இந்த டெக்னிக்கை பயன்படுத்துகின்றனர் )
2. மின்னல் ஒரே இடத்தை இரு முறை தாக்காது
3. எல்க்ட்ரிக்கல் கார் பயன்படுத்தினால் , சுற்றுச்சூழல் சீர்கேடு இருக்காது..
4  நிலவின் ஒரு பகுதியில் சூரிய ஒளி படுவதே இல்லை.. அது எப்போதும் இருட்டாக இருக்கும்.
5 பரிணாம வளர்ச்சி என்பது தாழ்ந்த நிலையில் இருந்து உயர்ந்த நிலைக்கு செல்வதே ஆகும்.. அதுதான் உலகில் இருக்கும் எல்லா உயிர்களிலும் நடந்து வருகிறது..எல்லா உயிர்களும் சிறப்பான நிலையை நோக்கி செல்கின்றன..
இந்த உண்மைகளைப்பற்றி அலசுவதற்கு முன் ஒரு விஷயம்..



இவை எதுவும் உண்மை இல்லை…
ஆனால் உண்மை போல தோன்றும்.. பெரும்பாலும் இவற்றை உண்மை என்றே நம்புகிறார்கள்..
எல்லாவற்றையும் இல்லாவிட்டாலும் சிலதையாவது உண்மை என நம்புபவர்கள் பலர்…

சரி.. விளக்கத்தை பார்க்கலாம்.
1. பெட்ரோல் டேங்க் சுடப்பட்டதும் கார் வெடித்து சிதறுவதை சினிமாவில் பார்த்து அதை உண்மை என நம்புகிறோம்…
ஆனால் இது போல நடக்க வாய்ப்பு மிகவும் குறைவே…
பெட்ரோல் முழுக்க நிரம்பி இருந்தால் , சுடப்ப்ட்டதும் தீப்பிடிக்கும் என நினைக்கிறோம்..
தவறு… 
தீப்பிடிக்க இரண்டு விஷயங்கள் தேவை..
ஆக்சிஜன், தீப்பொறி அல்லது சூடு ..
துப்பாக்கி குண்டில் தீப்பொறி இருக்காது..  அதே போல பெட்ரோல் நிரம்பி இருந்தால் அதில் எரிய தேவையான ஆக்சிஜன் இருக்காது… ஒரு உலோக குண்டு  வேகமாக மோதுவதால் அதில் துளை ஏற்படும் ..அவ்வளவே…
அபூர்வ நிகழ்வாக, துப்பாக்கி குண்டு காற்றின் உராய்வால் வெப்பம் தூண்டப்பட்டு, அது டேங்கில் மோதும் நேரம் ஆக்சிஜனும் இருந்தால் தீப்பிடிக்கும் என்பது உண்மையே..
இது நடக்க ஒரு சதவிகித வாய்ப்புதான் இருக்கிறது.

2. மின்னல் எப்பொதும் உயரமான கட்டடங்கள், மரங்களை தாக்கும்.. சில உயரமான கட்டடங்கள் அடிக்கடி பாதிக்கப்படுவது , பாதிக்கப்பட்டவர்களுக்குத்தான் தெரியும்..
பழைய காலங்களில், ஓர் உயரமான மரம் தாக்கப்பட்டு கருகி இருக்கும்… அதன் பின் மின்னல் அதில் விழுந்திருக்காது… பக்கத்தில் இருக்கும் வேறோரு உயரமான மரத்தை தேடி சென்று அதன் தலையில் இடி விழுந்து இருக்கும்
இதை வைத்து, ஒரே இடத்தில் ( ஒரே மரத்தை ) இரு முறை தாக்காது என நம்ப ஆரம்பித்து விட்டார்கள்..
ஒரு முறை, இரண்டாம் முறை என்பது கணக்கல்ல… உயரம்தான் முக்கியம்..
ஒரு முறை தாக்கப்பட்ட கட்டடம், மீண்டும் உயரமாக கட்டப்பட்டால், மீண்டும் ஆபத்தை சந்திக்கும் வாய்ப்பு இருக்கிறது..அப்படி பல கட்டடங்கள் ஆபத்தை சந்தித்தும் வருகின்றன…
மரத்தை பொறுத்தவரை, தாக்கப்பட்டதும் , உயரத்தை இழப்பதுதான் அது மீண்டும் தாக்கப்படாமைக்கு காரணம்..இதில் மர்மம் எதுவும் இல்லை…
3. எலெட்ரிக் கார் ஓடுவதால் சீர்கேடு இல்லை என்பது போல தோன்றினாலும், அது ஓட தேவைப்படும் மின்சாரம் தயாரிக்கும்போது ஏற்படும் சீர்கேட்டை மறந்து விடுகிறோம்..
ரோட்டில் சுற்றுபுற சீர்கேடு ஏற்படாது என்பது உண்மைதான்.. ஆனால் இன்னொரு இடத்தில் அது ஏற்படுகிறது என்பதே உண்மை..
அதாவது நூறு கி மீ ஓடினால், பெட்ரோல் கார் ஏற்படுத்தும் சீர்கேடும், எலெக்ட்ரிக் கார் ஏற்படுத்தும் சீர்கேடும் ஒன்றுதான்.. ஏற்படும் இடம் வெவ்வேறு..
அந்த மின்சாரத்தை சூரிய ஒளி மூலமோ, காற்றாலை மூலமோ தயாரித்தால்தான், சீர்கேடு இல்லை என சொல்ல முடியும்..
நடைமுறையில் அப்படி இல்லை

4. நிலவின் ஒரு பகுதியை நாம் எப்போதும் பார்க்கவே முடியாது என்பதே உண்மை… சுழல் வேகங்கள் ஒருங்கிணந்து போவதால் , நாம் ஒரு பக்கத்தை மட்டுமே பூமியில் இருந்து பார்க்க முடியும் .
ஆனால் சூரிய ஒளி படாது என சொல்வதில் உண்மை இல்லை
5 உயிர் வாழ்வுக்கு தேவையான வகையில் ஒத்துபோகும் உயிரினங்களே எஞ்சுகின்றன..
சிறப்பானது எஞ்சும் என்பது இல்லை..
பல சிறப்பான உயிரினங்கள் அழிந்துள்ளன…
நாய் போன்ற விலங்கினங்கள்., தம் சிற்ப்பு தன்மை கொஞ்சம் கொஞ்சமாக இழந்து வருகின்றன.. அப்போதுதான் மனிதனுடன் ஒத்து போக முடியும்..
மனிதன் கூட கொஞ்சம் கொஞ்சமாக சில சிறப்பு தன்மைகளை இழந்து வருகிறான்.. காரணம் இன்றைய வாழவுக்கு அவை தேவை இல்லை…
எனவே பரிணாம வளர்ச்சி என்பது சிறப்பை நோக்கி செல்வது அல்ல… சூழ்னிலைக்கு ஏற்ப ஒத்து போவதுதான் தாக்குபிடிக்கும்…

இது போல பல தவறான நம்பிக்கைகள் இருக்கின்றன… அவ்வப்போது நாம் அவற்றை பார்க்க இருக்கிறோம்…

16 comments:

  1. நன்றி கனா காதலரே

    ReplyDelete
  2. இப்படியெல்லாம் லாஜிக் பாத்தீங்கன்னா, தமிழ் படம் எடுப்பது எப்படி?

    ReplyDelete
  3. இப்படியெல்லாம் லாஜிக் பாத்தீங்கன்னா, தமிழ் படம் எடுப்பது எப்படி?
    ha,ha,ha,ha....

    ReplyDelete
  4. ஆச்சர்யங்கள்!. தொடருங்கள் பாஸ்

    ReplyDelete
  5. நல்லாயிருக்கு அறிவியல் உண்மைகள்.பிரயோஜனம் மிகுந்தவை.

    ReplyDelete
  6. ஆச்சர்யங்கள் அறிவியல் உணமைகள். தொடரவும்.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  7. நன்றி
    பாலாஜி சரவணன்
    விமலன்
    லட்சுமி மேடம்

    ReplyDelete
  8. அறிவியல் உண்மைகள்னு சொல்லி உண்மைன்னு நம்பியிருந்த அனைத்தையும் பொய்யாக்கிடீங்களே நண்பா!!

    ReplyDelete
  9. "உண்மைன்னு நம்பியிருந்த அனைத்தையும் பொய்யாக்கிடீங்களே நண்பா!!"

    பூமி தட்டையானது என்பது ஒரு காலத்தில் அறிவியல் உணமையாக இருந்தது...

    தவறான நம்பிக்கைகள் என்பது அறிவியலில் அதிகம்

    ReplyDelete
  10. அறிவியல் உண்மைகளை இவ்வளவு தெளிவாக விளக்கியதற்கு நன்றி

    ReplyDelete
  11. நன்றி இசக்கி முத்து..
    நன்றி சித்ரா மேடம்

    ReplyDelete
  12. 1. உண்மை சுடும்... அதுக்காக சுட்ட பெட்ரோல் டாங் வெடிக்கலைன்னா அப்புறம் வில்லனை எப்படி கொல்வது...

    2. அப்போ கட்டிடம் எல்லாம் ஏன் இன்னும் உயரமா கட்டிக்கிட்டு இருக்குறாங்க...

    3. தொழிற்சாலையில் மின்சாரம் தயாரிக்கும் போது, அந்த கழிவுகளை முறையாக வெளியேற்றினால் அந்த பின்விளைவுகளை தவிர்க்கலாம்.

    4. ஒரு வேலை அமாவாசை அன்னைக்கு நிலவு தன்னோட மறுபக்கத்தை பூமிக்கு காட்டுமோ ? பாவம் நமக்குத் தான் கொடுத்து வைக்கல...

    5. இதில் முற்றும் ஒத்துப்போகிறேன்...

    5.

    ReplyDelete
  13. மின்னல் எப்பொதும் உயரமான கட்டடங்கள், மரங்களை தாக்கும்.. சில உயரமான கட்டடங்கள் அடிக்கடி பாதிக்கப்படுவது , பாதிக்கப்பட்டவர்களுக்குத்தான் தெரியும்..
    பழைய காலங்களில், ஓர் உயரமான மரம் தாக்கப்பட்டு கருகி இருக்கும்… அதன் பின் மின்னல் அதில் விழுந்திருக்காது… பக்கத்தில் இருக்கும் வேறோரு உயரமான மரத்தை தேடி சென்று அதன் தலையில் இடி விழுந்து இருக்கும்///
    கிராமத்தில் ஓன்று சொல்வார்கள். அதாவதுஒரு குடும்பத்தின் மூத்தவனை தான் இடி தாக்கும் என்று, காரணம் ஒரு குறிப்பிட்ட வயது வரை மூத்தவன் இளையவனை விட கொஞ்சம் உயரமாக இருப்பான். உயரமானவர்களைத்தான் இடி தாக்கும். அதன் அடிப்படையில் தான் சொல்லப்பட்டது.

    ReplyDelete
  14. நன்றா அனானி நண்பரே

    ReplyDelete

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா