Friday, December 31, 2010
சந்தல் படுகொலையும் ஜீரோ டிகிரி சிந்தனையும் …
அந்த சிலரில் ஒருவர்தான் நண்பர் நிர்மல்..
சந்தல் போராட்டம் (The Santhal revolt 1855 )குறித்தும் படுகொலை குறித்தும் சென்ற பதிவில் எழுதினார்…
அதன் தொடர்ச்சியாக , ஜீரோ டிகிரி நாவல் படித்த பாதிப்பில் , அந்த பிரச்சினையை அலசுகிறார் அவர் , இந்த பதிவில்..
ஒரு நாவல் இந்த அளவுக்கு பாதிப்பை ஏற்படுத்த முடியும் என்பது ஆச்சர்யமளிக்கும் விஷயம் ..
இனி வருவது அவர் கருத்து
Thursday, December 30, 2010
கர்நாடக இசைமீது சாதாரண மனிதனின் கோபம்
உலகின் மற்ற இசைகளுக்கும் கர்னாடக இசைக்கும் ஓர் அடிப்படை வேறுபாடு உண்டு.
இந்த இசை மட்டுமே ஒரு குறிப்பிட்ட மக்களுக்கான இசை என்ற முத்திரையை சரியாகவோ தவறாகவோ பெற்று விட்டது…
இது குறித்து நண்பர் Mrinzo நிர்மலின் பார்வையை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்..
**********************************************************************
கர்நாடக இசையின் மாதம் இது, நம்மால இந்த இசையை ரசிக்க முடியவில்லையே என்ற ஆதங்கம் எழுகிறது. நம்ம ஊர் சாஸ்த்ரிய இசை என்று புகழ்கிறோம்.அது தமிழில் இல்லை என்று வருந்துகிறோம்.
நம்ம ஊர்லதான் இருக்கு என்றாலும் நாம் அந்நியப்பட்டுகிடக்கிறோம். ஓர் இசையை இப்படியா சமுகத்தின் பெருவாரியான மக்களிடம் இருந்து அந்நியபடுத்துவது.
இதெல்லாம் உங்களோட Problem , அந்த இசையின் problem இல்லை என்று சொல்லுவாங்க.
சரி எங்களுக்கு ரசனை இல்லைதான், அதை ரசிக்கிறவர்கள் எதை ரசிக்கிறார்கள்? யார் ரசிக்கிறார்கள்? இப்படித்தான் தொன்று தொட்டு இந்த இசை அந்நியப்பட்டு கிடந்ததா?
.
எனக்கு கோபமெல்லாம் அது தமிழில் பாடவில்லை என்றோ அது ஒரு சிறு குழுவின் கையில் இருக்கிறதோ இல்லை.
எனக்கு கோபமெல்லாம் அது ஏன் பக்தியை தவிர எந்த பாடலுக்கும் அங்கு இடமில்லை?
உலகில் உள்ள எல்லா சாஸ்திரிய சங்கீதம் போலத்தானே இதுவும்.
கடவுளுக்கு இந்த இசையை மட்டும்தான் பிடிக்கும்போல...
பக்தியை பிரித்து இந்த இசையை பார்க்கமுடியவில்லையே?
சரி இந்த இசை ஒரு மேட்டுகுடி இசையென்று வைத்து கொள்ளவோம்,
நீங்க தலித்தை, தீண்டாமையை, தொழிலாளியை பற்றி பாடவேண்டாங்க
அதுக்கு நாட்டுப்புற பாட்டு இருக்கு,
atleast உங்க சகோதரி பற்றி, பெறந்த குழதையை பற்றி, ஒரு நட்பை பற்றி, சாப்பாடை,உங்க சோகத்தை, உங்க காதல் அதன் வெற்றி , தோல்வியை பற்றி, மனிதனை பற்றி இப்படி எவள்ளவோ பற்றி பாடலாம்ல.
இந்த ஹிந்துஸ்தானி இசையை பாருங்க..
பக்திக்கு பஜன், காதலுக்கு கவிதைக்கும் சோகத்துக்கும் கசல், கொண்டாட்டத்துக்கு கவாலி என்று எப்படி பல கோணங்கனில் பரந்து கிடக்குது.
ம்ம்,ஒரு வேளை இந்த இசை கடவுளின் காதல், கடவுளின் செயல் அவரது கருணை, அன்பு மேலும் நூறாண்டுக்கு முன்பு நடந்தவற்றை பற்றி மட்டும்தான் பாடமுடியுமோ?
பக்தி இருக்கவேண்டியதுதான் ... அதற்கு இப்படியா? 100 ஆண்டு கழித்து ஓர் ஆராய்ச்சியாளன் இந்த இசையை வைத்து நமது சமுகத்தை ஆராய்ந்து எழுதினால் என்ன எழுதுவான்?
- Mrinzo Nirmal
-
Wednesday, December 29, 2010
மனதை கலங்க வைக்கும் கொடூரமும், மறைக்கப்பட்ட வரலாறும்
மறைக்கப்பட்ட, மறக்கப்பட்ட வரலாறுகள் எத்தனையோ உண்டு.
கொடூரங்கள், ஆக்கிரமிப்புகள், வதைகள் என இவற்றின் பேட்டர்ன் ஒரே மாதிரி இருக்கும் என்பதைத்தான் சாரு நிவேதிதாவின் தேகம், சீரோ டிகிரி போன்றவை சொல்கின்றன.
நம் மண்ணில் நடந்த எத்தனையோ சம்பவங்கள் நமக்கு தெரிவதில்லை..
அந்த வகையில், நம்மிடம் இருந்து மறைக்கப்பட்ட , இதயத்தை கலங்க வைக்கும் , வரலாற்று தகவலை, நண்பர் நிர்மல் நம்முடன் பகிர்ந்து கொள்கிறார்.
********************************************************************
Tuesday, December 28, 2010
exclusive report: சாருவுக்கு ”இன்சல்டிங்” மெசேஜ் அனுப்பிய மனுஷ்யபுத்திரன் - கலகலப்பான புத்தக வெளியீட்டு விழா தொகுப்பு
இதற்கு முன்பும் , இதற்கு பிறகும் என்ற கவிதை தொகுப்பு நூல் ( எழுதியவர் : கவிஞர் மனுஷ்யபுத்திரன் ) வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது...
அந்த கவிதைகளை பற்றி பிறகு விரிவாக எழுதுவேன்..
இப்போது விழா பற்றிய சுருக்கமான தொகுப்பு , உங்கள் பார்வைக்கு
சுகம் கொடுக்குற பொண்ணுக்கும் மனசு இருக்கு...- -Mrinzo Nirmal
ஜில்லா விட்டு ஜில்லா வந்த கதைய கேளுங்க, சுகம்கொடுக்குற பொண்ணுக்கு மனசு இருக்கு பாருங்க.

ஈசன் படத்தில் ஜேம்ஸ் வசந்தன் இசையில் தஞ்சை செல்வி படிய பாட்டை கேட்டீர்களா.?
எனக்கு தெரிஞ்சி "சுகம் குடுக்குற பொண்ணு" என முதல் முறையா ஒரு பொண்ணு சொலற மாதிரி நம்ம தமிழ் படத்தில் வந்தது இதுதான் முதல் முறை என்று நினைகேறேன். ஒரு பொண்ணோட கதைதான் பாட்டு, அந்த பாட்டு சொல்லும் அர்த்தத்திற்கு Irony யான ஒரு background music.
கதைய கேட்கும் போது ஏற்படும் உணர்வை அந்த rhythem மறைகிறது, இதுதான் நம்ம ஸ்டைல், சோகத்தை சொன்னாலும் ஒரு கும்மாளத்தோடு சொல்லுறது. இந்த Back ground music ....
- அந்த பெண் அவளது வறுமையை தனது உடலால் வென்றதை சொல்லுதா?!!!
- விபச்சாரம் பாவம்.. அதை செய்பவர்கள் பாவி என்று சொல்லும் கலாச்சார கனவான்களுக்கு குடுக்குற மரண அடியா?
- என்னோட கனவுகள் உடைந்துபோனாலும் மத்தவங்க கனவுகளுக்காக இந்த கூத்தா?!!
இப்படி பல நெனைப்பு நமக்கு ஏற்படுது இந்த பாட்டை கேட்கும்போது.
இந்த தஞ்சை செல்வி என்ற பாடகியை பார்க்கணும்னா... http://www.cinefundas.com/2010/11/22/thanjai-selvi-speaks-about-easan ,
--Mrinzo Nirmal
Monday, December 27, 2010
பின்னூட்ட புதையல்
இப்போதெல்லாம் பதிவுகளை விட பின்னூட்டங்கள் சிறப்பாக அமைவது அவ்வப்போது நடக்கிறது..
எழுத்தாளர் சாரு என் பதிவுகளை பாராட்டாமல், அதற்கு வந்த பின்னூட்டத்தை பாராட்டியதால் , பின்னூட்டம் இட்டவர்களை பார்த்து பொறாமை படவில்லை :)
மகிழ்ச்சிதான் அடைந்தேன்.
Saturday, December 25, 2010
மன்மதன் அம்பு,ஒரு மாறுபட்ட பார்வை -Mrinzo Nirmal.
நான் நடு நிலை தவறி விட்டதாக குற்றம் சாட்டினார்கள்..
ஆனால் பிரபாகரன் சினிமா பார்க்க சென்ற போது, 600 சீட் கொண்ட தியேட்டரில், ஊழியர்கள் உட்பட வெறும் ஆறு பேர் இருப்பதை பார்த்து நான் சொன்னது உண்மை என அறிந்தார்..
படம் பார்த்து முடித்ததும், என்னை விட கடுமையாக படத்தை விமர்சித்தார்..
இளையராஜா செய்தது சரியா?- விவாத தொகுப்பு
அர்த்தம்தான் முக்கியம் என நினைத்து , சில வார்த்தைகளை கூட்டவோ குறைக்கவோ செய்தால் , விமர்சனம் எழும்..
வார்த்தைக்கு வார்த்தை மொழி பெயர்த்தால், மூல கவிதையின் உணர்ச்சி இதில் இல்லை என அதையும் திட்டுவார்கள்..
அந்த அடிப்படையில் தாகூர் கவிதை மொழி பெயர்ப்பு விவாகாரத்தை பதிவிட்டேன்…
அதில் என் பதிவில் அலசியதை விட சிறப்பாக அலசியது பின்னூட்டங்கள்தான்..
சிலர் பதிவை மட்டும் பார்த்து விட்டு பின்னூட்டங்களை பார்க்காமல் சென்று விடுவார்கள் ..
அவர்களுக்காகவும்,
ஒரு கட்டுரை எழுத தேவையான உழைப்பை பின்னூட்டத்திற்கு தந்த நண்பர்களுக்கு கருத்து அனைவரையும் சென்றடைய வேண்டும் என்பதற்காகவும் , அவர்கள் கருத்தை தனி பதிவாக தருவதில் பெருமைப்படுகிறேன்.
தானே சொந்தமாக முயற்சித்த செல்வாவையும், அதை மனமார பாராட்டிய தம்பி கூர்மதியனையும் , ஆக்க பூர்வமான கருத்துக்கள் சொன்ன நண்பர்களையும் பாராட்ட வார்தைகள் இல்லை…
Friday, December 24, 2010
மன்மதன் அம்பு கேவலமான தோல்வி.. கே எஸ் ரவிகுமாரின் வாட்டர்லூ ?
அது போல , எந்திரனுக்கு இணையாக படம் எடுக்க நினைத்த கமலின் படம் கிண்டலுக்கு உள்ளாகி இருக்கிறது..
புரியாத புதிர், சேரன் பாண்டியன் போன்ற வெற்றி படங்கள் இயக்கியவர் கே எஸ் ரவிகுமார்,,
அதன் பின் வந்த நாட்டாமை அவர் இயக்கிய முதல் பிரமாண்ட படம்..
அப்பொதெல்லாம் கமல் இவரை பொருட்டாக நினைத்ததில்லை… ஆனால் ரஜினி அவருடன் இணைந்து பணி புரிய முன்வந்தார்.. அந்த கால கட்டத்தில் இது விசித்திரமான கூட்டணியாக பார்க்கப்பட்டது..
அந்த படதின் வெற்றி கமலை சிந்திக்க வைத்தது..
அதன் பின் கே எஸ் ரவிகுமாருடன் அவரும் இணைந்து பணி புரிய ஆரம்பித்தார்..
Thursday, December 23, 2010
இளையராஜாவுக்கு மரணதண்டனை? – அடுத்த சர்ச்சை ..
இசை ஞானி இளையராஜாவை சர்ச்சைக்கு இழுக்காதவர்கள் யாரும் இல்லை ..
வீட்டுக்கு போன தனக்கு தண்ணீர் தரவில்லை என அதைக்கூட பிரச்சினையாக்கினார் இயக்குனர் மிஷ்கின் ..
இதை கூட பிரச்சினை ஆக்குபவர்கள் , இலக்கிய விவகாரம் கிடைத்தால் விட்டு விடுவார்களா?
தாகூர் எழுதிய பிரபல கவிதைகளில் ஒன்று mind without fear
Tuesday, December 21, 2010
உலகின் முதல் கிறிஸ்தவ நாடு எது? சென்னைக்கும் அதற்கும் என்ன சம்பந்தம் ? - Mrinzo
அது என்ன அர்மினியா ? அதன் வரலாறு என்ன ?
அதற்கும் சென்னைக்கும் என்ன தொடர்பு?
உலகின் முதல் கிறிஸ்தவ நாடு எது போன்ற பல சுவையான , வரலாற்று தகவலை நம்முடன் பகிர்ந்து கொள்கிறார் , Mrinzo நிர்மல் ..
இவர் நம் பிலாக்கில் எழுதிய சிரோ டிகிரி விமர்சனம் , டி டெக்ஸ்ட் போன்றவை பரவலானா வரவேற்பு பெற்றன... எனவே தொடர்ந்து எழுதுமாறு கேட்டு கொண்டேன்..
எனக்கோ விஷமம் தெரியும்..ஆனால் விஷயம் தெரியாது.. விஷயம் தெரிந்தவர் எழுதும் கட்டுரையும் இதில் இடம் பெறட்டுமே என்ற எண்ணமே அவரை எழுத காரணம்..
சரி, அவர் கட்டுரை இதோ உங்கள் பார்வைக்கு.
*********************************************************
வரலாற்று பார்வை
அர்மினியா என்ற ஒரு நாடு இருக்கிறது, அது ரஷ்ய federation இல் இருந்த ஒரு நாடு, இப்போது அது ஒரு சுதந்திர நாடு.

இந்த அர்மினியாவிற்கும் Genocide கும் , நமக்கு தெரியாத ஒரு கொடூர சம்பந்தம் உண்டு, 18 ஆம் நுற்றாண்டில் நடந்த ottaman மன்னர்களால் இந்த அர்மேனியர்கள் திட்டமிட்டு படுகொலை செய்யபட்டார்கள்.
இந்த அர்மினியர்கள்தான் உலகில் தங்களை முதல் கிறிஸ்துவ நாடு என்று தங்களை பிரகடனபடுத்தி கொண்டவர்கள் அதாவது முதலாவது நுற்றாண்டில்.
இது ரோமர்கள் கிறிஸ்துவத்தை தழுவதற்கும் முன்பு.
மதத்தின் பெயரால் நடந்த 18 ஆம் நுற்றாண்டு படுகொலை இன்றும் தொடர்கிறது. அன்றைய Ottaman empire இன்றைய Turky எனப்படும் நாடு. இந்த மனித படுகொலைகளை பற்றி எழுதி கொண்டே போகலாம்,
இந்த அர்மினியாவுகும் சென்னைக்கும் எதாவது சம்பந்தம் உண்டா?
இந்த அர்மேனியர்கள் பல நுற்றாண்டுகளுக்கு முன்பு இந்தியா வந்துள்ளார்கள், அதாவது Vasko da Gamma இந்தியாவிற்கு வருவதற்கு முன்பு.
சென்னையிலுள்ள "St Thomas Mount" ஒரு அர்மேனியார்தான் என்ற ஒரு மாற்று செய்தி உண்டு, மேலும் கணிசமான அர்மேனியர்கள் வாழ்ந்து வந்துள்ளனர்,
அர்மேனியர்கள் தெரு என்ற ஒரு தெரு இருக்கிறது, அங்கு St Mary;s church என்ற ஒரு 240 வருட பழைய தேவாலயம் ஒன்றும் உள்ளது,

Kojah Petrus Woskan என்ற சென்னை வாழ் அர்மினியார்த்தன் சைதாபேட்டை Marmalong பாலம் ( அந்த பாலத்தை மறைமலை அடிகள் பாலம் என சிலர் "தமிழ்" படுத்தி இருக்கின்றனர்..ஆனால் வரலாற்று காரணம் கூறும் கல் வெட்டு பக்கத்திலேயே இருக்கிறது - பதிப்பாசிரியர் )
மற்றும் St Thomas மௌண்டின் 164படிக்கட்டை கட்டியவர்.
ராயபுரதிலுள்ள Arthoon Road எனபது ஒரு அர்மேனியர் பெயரால் இன்றும் அழைக்கப்படுகிறதாம் அடுத்த முறை சென்னை வரும்போது இந்த இடங்களுக்கு செல்லவேண்டும்.
Mrinzo நிர்மல்
"உண்மையை" அமைதியாக்கிய அவாள், "வயரை" வருத்தப்பட வைத்த நடிகர்- பதிவுலக கிசுகிசு
எதிலுமே "உண்மையாக" இருக்கும் பதிவர் அவர்..மிகவும் நல்லவரும் கூட... அன்பாக பழக கூடியவர் அவர் ..
அவரது சமிபத்திய போக்கு பதிவுலகில் சற்று குழப்பத்தை ஏற்படுத்தியது..
ஒரு முக்கிய தலைவரின் படம் சமிபத்தில் ரிலிஸ் ஆனது.. பரவலான வரவேற்பும் பெற்றது..
Monday, December 20, 2010
தேகமும் சந்தேகமும்- நண்பர் யுவ கிருஷ்ணா உள்ளிட்டோருக்கு விளக்கம்
சில காரணங்கள் இருக்கின்றன..
பலர் இந்த நாவலை படித்து விட்டாலும், சிலர் மட்டுமே சரியான பார்வையை முன் வைத்துள்ளனர்..
பலர் ஒரு சராசரி நாவல் போல புரிந்து கொண்டு விமர்சனம் எழுதி விட்டனர்..
சிறுவயதில் சமுதாயத்தால் கஷ்டப்படும் ஒருவன், இளைஞன் ஆன பின் ஒரு தாதாவிடம் சேர்ந்து கொடும் செயல் செய்கிறான். நடுவில் காதல்.. கடைசியில் ஹேப்பி எண்டிங்...
இப்படி தட்டையாக புரிந்து கொண்டவர்கள் பலர் உண்டு...
பெண் மூட்டை பூச்சிக்கு "அது " கிடையாது.. பிறகு எப்படி "அது" - வினோத ஜல்சா தகவல்கள் - படிக்க வேண்டாம் (அடல்ட்ஸ் ஒன்லி )
ஒரு நாளாவது இப்படி இல்லாமல் கொஞ்சம் " வேறு " மாதிரி பேசலாமே என்பதற்காகத்தான் இந்த பகுதி...
வாரத்தின் ஒரு நாள் மட்டுமே இந்த பகுதி...
தலைப்பிலேயே எச்சரிக்கை கொடுக்கப்படும்...
Saturday, December 18, 2010
கருத்து கணிப்பு தந்த அதிர்ச்சியும் , எடுக்கப்பட்ட முடிவும்…
அந்த வகையில், நான் ஜொள்ளு விட்டு ரசித்த சில மேட்டர்களை அவ்வப்போது பகிர்ந்து கொண்டேன்..
இதற்காக பரவலான ஆதரவு கிடைத்தாலும் கடும் மிரட்டலையும் சந்திக்க வேண்டி வந்தது..
ரசிக்கிறார்களா வெறுக்கிறார்களா என்ற குழப்பத்துக்கு விடை காண கருத்து கணிப்பு நடத்தினேன்..
அதன் முடிவுதான் இப்போது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி விட்டது…
என்ன அதிர்ச்சி?
Thursday, December 16, 2010
தேகம் நாவல் - சாதாரண வாசகன் பார்வையில் ....
அதே போல, ஒரு நாவல் இந்த அளவுக்கு விவாதிக்கப் படுவதும் இதுவே முதல் முறை..
புத்தகத்தை ஸ்டாலில் பார்த்ததும் எனக்கு சற்று ஏமாற்றமே ஏற்பட்டது...
அவரது ராசலீலா போன்றவற்றை படித்த எனக்கு சிறிய நாவல் என்பது கொஞ்சம் ஏமாற்றமே..
ஆனால், இந்த நாவலின் சிறப்புகளில் அதன் சிறிய அளவும் ஓன்று என்பதை படித்து முடித்த பின் உணர்ந்தேன்.
நமக்கெல்லாம் , பெரிய நாவலை பார்த்தாலே சற்று பயம் வந்து விடும்.. படிக்க படிக்க ஆர்வம் வரும் என்பது வேறு விஷயம்.. ஆனால் அப்படி படிப்பவர்கள் சிலரே..
இந்த நாவலை பொறுத்தவரை, பார்த்ததுமே வாங்க தோன்றும்... வாங்கியதுமே படிக்க தூண்டும்...
How to Deconstruct Text -With "Zero Degree" Example- mrinzo
அதை பலரும் ரசிப்பதை உணர முடிந்தது...
அவரை மேலும் எழுத சொல்லி பலர் கேட்டனர்...
அந்த வகையில், அவரது இன்னொரு கட்டுரையை தருவதில் பெருமை படுகிறேன்...
அவருக்கு நன்றி...
எழுத்தாளனை கொண்டாடினால் ஏன் இந்த எரிச்சல்? (புதிய படங்களுடன் )
சாரு வாசகர்களுக்கு கூடுதல் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது..
ஒரு புத்தக வெள்யீட்டு விழா இந்த அளவு பேசப்படுவது தமிழ் இலக்கிய வரலாற்றில் இதுதான் முதல்முறை..
இது சாருவுக்கு மட்டும் அல்ல… அனைத்து எழுத்தாளர்களுக்குமே பெருமை சேர்க்கும் விஷயம்..
Wednesday, December 15, 2010
mrinzo nirmal வழங்கும் சாருவின் காமரூப கதைகள்- ஒரு பார்வை
இதை படித்து விட்டேன்,,, ஆனால் என் உணர்வுகளை எழுத முடியவில்லை... அதாவது எழுத தெரியவில்லை..
இந்த நிலையில், நண்பர் நிர்மல் தன் கருத்துக்களை பதிவு செய்துள்ளார் ஒரு பின்னூட்டம் வழியாக..
பெரும்பாலானோர் பின்னூட்டத்தை படிப்பதில்லை..எனவே தனி பதிவாக அவர் கருத்தை வெளியிடுவதில் பெருமைப்படுகிறேன்...
Tuesday, December 14, 2010
mrinzo வழங்கும் சீரோ டிகிரி குறித்த விவாதம்

தமிழின் முக்கிய நாவல்களில் ஒன்று சாரு நிவேதிதா சீரோ டிகிரி…
அதைப்பற்றி சில காலம் முன் என் கருத்தை எழுதி இருந்தேன்..
அதை படிக்க இதை சொடுக்கவும்..
ஸீரோ டிகிரி- அற்பமா அற்புதமா..
அதற்கு mrinzo வழங்கிய பின்னூட்டம் மிக சிறப்பாக இருந்தது…
அதை பலர் படிக்க வாய்ப்பில்லை என்பதால், தனி பதிவாக அதை தருவதில் பெருமை படுகிறேன்..
அவர் தன் பெயர் மற்றும் மற்ற விபரங்கள் சொன்னால் நன்றி சொல்ல வசதியாக இருக்கும்…
Monday, December 13, 2010
Exclusive Report : பீர் அபிஷேகம், புதிய பட்டம்- கொண்டாட்ட மன நிலையில் நடந்த சாரு நிவேதிதா விழா (பிரத்தியேக படங்களுடன் )
இலக்கிய விழா போல அல்லாமல் ஒரு கொண்டாட்டமாக , உற்சாகமாக , அதே சமயம் இலக்கியம் சார்ந்த அறிவு பூர்வ சொற்பொழிவுகளுடன் நடந்தது குறிப்பிடத்தக்கது…
அந்த அறிவுபூர்வ உரையாடல்களை நான் தொகுத்து தருவதை விட , மற்றவர்கள் சொன்னால் நன்றாக இருக்கும்… அதை மற்ற நல்ல பதிவர்கள் சொல்வார்கள்.. அதை படித்துக்கொள்ளுங்கள்…
படம்:1 கனிமொழி, தமிழச்சி தங்கபாண்டியன் ஆகியோரை வரவேற்கும் எழுத்து சித்தர் பாலகுமாரன் அவர்கள்
அதைத்தவிர்த்து விட்டு , அங்கு நிலவிய உற்சாக மன நிலையை மட்டும் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்..
இலக்கிய விழா என்றால் அது வயதானவர்கள் செல்வது, போரடிக்கும் விஷ்யம் என்பதே பொது கருத்து..
அப்படி இல்லை என்று கல்லூரி மாணவர்கள் சந்திப்பு போல நடந்த அந்த விழாவின் சில சுவையான அம்சங்களை மற்றும் தொகுத்து தருகிறேன்..
Sunday, December 12, 2010
வயர் பதிவர் என்ன சொல்கிறார் ? - பதிவுலக கிசுகிசு
இதை அனைவரும் பயன்படுத்தி கொள்ளும் வகையில், அனைவரும் பங்கு பெறும் வகையில் , ஒரு மெகா சந்திப்பை நடத்துமாறு மூத்த பதிவர்களை வற்புறுத்தி பார்த்தாராம் இவர்...
வெயில், மழை, வேலை என பல காரணங்களை சொல்லி அவர்கள் இதை செய்யவில்லையாம்..
இதனால் மனம் வெறுத்து போன பதிவர், பல விஷ்யங்களில் கில்லாடியான , சீனியர் பதிவரான வயர் பதிவரை மட்டுமாவது அழைத்து , ஆர்வம் மிக்க புதிய பதிவர்களுடன் கலந்துரையாடல் நடத்த முயன்று வருகிறாராம்.
இது நடந்தால் பதிவுலகில் முதல் முறையாக ஒரு வித்தியாசமான இடத்தில் இந்த நிகழ்வு நடக்குமாம்.. சம்பந்தப்பட்ட பதிவர் அந்த இடத்தை பார்த்து திருப்தி அடைந்தாராம்...
2. அதிகம் எழுதாத பதிவர் ஒருவருடன் இலக்கிய சர்ச்சை செய்து விட்டு பதிவர் இரவு நேரம் வீடு திரும்பினாராம்..
லைசன்ஸ் இல்லை, டாக்குமெண்ட் இல்லை, ஹெல்மட் இல்லை, பற்றாக்குறைக்கு “அது “ வேறு..
வழியில் போக்கு வரத்து காவலர் ஒருவர் மடக்க, இன்று ஒரு அமௌவுண்ட் அவுட் என நினைத்தாராம்..
ஆனால் நல்ல வேலையாக, சில மென்பொருள் ஊழியர்கள் அந்த பக்கம் வரவே , இவரை விட அதில்தான் ஆதாயம் என உணர்ந்து இவரை விட்டு விட்டார்களாம்..
அவர் மென்பொருளை வாழ்த்திக்கொண்டே வீடு போய் சேர்ந்தாராம்..
3 பார்ப்பதில் ஆர்வம் கொண்ட பதிவர், இயக்க தலைவர் பெயர் கொண்ட பதிவரை, சீர்திருத்த தலைவர் படம் பார்க்க அழைத்தாராம்..
அவர் தான் ரொம்ப பிசி என சொல்லி அழைப்பை நிராகரித்து விட்டாராம்..
ஆனால் , ஹோட்டல் பதிவர் அழைத்ததும் உடனடியாக கிளம்பி படம் பார்க்க சென்று விட்டாராம்..
இதனால் சற்று குழம்பி போனாராம் பார்க்கும் பதிவர்..
ஆனால் ஹோட்டல் பதிவர் என்ன நடந்தது என தெளிவாக விளக்கம் அளிக்கவே , புரிதல் ஏற்பட்டதாம்..
விரைவில் மூவரும் சந்திக்க இருக்கிறார்களாம்...
பிரத்தியேக செய்தி : சாரு புத்தக வெளியீட்டு விழா, அனைவரும் வருக
எழுத்தாளர் சாருவை ரசிக்கலாம் அல்லது வெறுக்கலாம்.. ஆனால் புறக்கணிக்க முடியாது…
பலரை தமிழ் புத்தகங்கள் படிக்க வைத்தவர் அவர் என்றார் அது மிகையாகாது…
எனக்கு அவர் மீது சில விமர்சனங்கள் இருந்தாலும் அவர் புத்தகம் அனைத்தையும் படித்தவன், படித்து கொண்டு இருப்பவன் நான்,,
அவர் மீது சில விமர்சனங்கள் கொண்ட நானே இப்படி என்றால், தீவிர ரசிகர்கள் பற்றி சொல்லவே வேண்டியதில்லை…
நாளை அவர் புத்தகங்கள் வெளி வரும் நிலையில், ஒரு வாசகன் என்ற அளவில் சில காணோளிகள், படங்கள் , இன்னொரு சுவையான விஷயம் போன்றவற்றை பகிர்ந்து கொள்ள விரும்பினேன்…
ஆனால் அது விழா முடிந்த பின் அதை சொன்னால்தான் இன்னும் நன்றாக இருக்கும் என்பதால், நாளை இரவு வரை காத்து இருங்கள்…
அனைவரும் விழாவிற்கு வருக வருக என அழைக்கிறேன்…
*************************************************************************************************************
சாரு நிவேதிதாவின் ஏழு நூல்கள்
December 12th, 2010
டிசம்பர் 13 வெளிவரும் சாரு நிவேதிதாவின் 7 நூல்கள்
வெளியீட்டு அரங்கில் நூல்களின் மொத்த விலை ரூ 500 மட்டும்
தேகம்
நாவல்
ரூ.90
வதைத்தலுக்கும் வதைக்கப்படுதலுக்கும் இடையேதான் மனிதகுலத்தின் சமூக, பண்பாட்டு வரலாறுகள் எழுதப்படுகின்றன. வலியை உற்பத்தி செய்வதிலிருந்தே அதிகாரம் உற்பத்தி செய்யப்படுகிறது என்பதை எப்போது மனிதர்கள் கண்டுபிடித்தார்களோ அன்றிலிருந்து சித்தரவதையின் தொழில் நுட்பம் நுணுக்கமாக தொடர்ந்து மாறுதடைந்து வந்திருக்கிறது. சிதரவதைகள்மூலம் ஒரு உடலை இன்னொரு உடல் முழுமையாக வெற்றிகொள்ளும்போது நிகழ்வது ஒரு புராதனமான மிருக இச்சையா அல்லது அதற்குள் ஒரு நீதிமுறை செயல்படுகிறதா என்கிற கேள்வியை எதிர்கொள்கிறது இந்த நாவல். சாடுநிவேதிதா இந்த நாவல்மூலம் காட்டும் உலகம் கடும் மனச் அதிர்ச்சியை ஏற்படுத்துவதன் காரணம் அந்த உலகத்தை ஒரு பகுதியாக ஒவ்வொருவரும் இருக்கிறோம் என்பதுதான்.
சரசம் சல்லாபம் சாமியார்
நித்யானந்தர் குறித்து
ரூ.85
மதங்கள் தங்களது வராலாற்றுப் பாத்திரத்தை இழந்த பிறகு புதிய வழிபாட்டுக் குழுக்கள் அந்த இடத்தை கைப்பற்றிக் கொள்ள விழைகின்றன. கடவுள்கள் மனிதர்களிடமிருந்து அன்னியமான பிறகு மனிதக் கடவுளர்கள் எங்கெங்கும் அவதரிக்கின்றனர். நித்யானந்தர் போன்றவர்கள் இன்று ஆன்மீகத்தை ஒரு மாபெரும் வர்த்த்க நிறுவனமாக மாற்றியிருக்கின்றனர். தங்களது புனித முகமூடிகளுக்குப் பின்னே நிகழ்த்தும் நிழல் நடவடிக்கைகள் எளிய மனிதர்களின் அந்தரங்கத்தை ஆழமாக காயப்படுத்துவது மட்டுமல்ல அவர்களை எவ்வாறு பிறழ்வுகொண்டவர்களாகவும் மாற்றுகிறது என்பதை சாருநிவேதிதா இந்த நூலில் விரிவாக முன்வைக்கிறார்.
குமுதம் ரிப்போட்டரில் வெளிவந்து பரபரபாக வாசிக்கப்பட்ட தொடர் நூல் வடிவம் பெறுகிறது.
ஷேக்ஸ்பியரின் மின்னஞ்சல் முகவரி
சிறுகதைகள்
ரூ.60
சாருநிவேதிதாவின் கதைகள் தமிழ்ச் சிறுகதைகளின் இலக்கணங்களை தயக்கமின்றி கலைப்பவை. வழக்கமான கதை சொல்லும் முறைமையினை கடந்து செல்வதன் மூலம் அவர் தனக்கே உரித்தான ஒரு பிரத்யேக மொழியில் தனது புனைவுலகை உருவாக்குகிறார். நவீன வாழ்க்கைமுறையின் அபத்தங்களை, மனித உறவுகளின் விசித்திரத்தன்மையை இக்க்கதைகள் வெகு சுவாரசியமாக எழுதிச்செல்கின்றன.
கலையும் காமமும்
விவாதங்கள்
ரூ.100
சாரு நிவேதிதா தனது வாசகர்களுடன் தொடர்ந்து உரையாடிக்கொண்டே இருக்கிறார். தன்னைப் பற்றியும் பிறரைப் பற்றியும் இருக்கக் கூடிய அபிபராயங்களை பாசாங்குகள் ஏதுமின்றி இந்த விவாதங்களில் முன்வைக்கிறார். சாருவைப் பற்றி பிறர் முன்வைக்கும் குற்றச்சாட்டுகள்கூட அவர் தன்னைப் பற்றி வெளிப்படையாக சொல்லிக்கொண்டவையிலிருந்தே உருவாக்கபடுகின்றன என்பது அவரது சுதந்திரமான மன நிலைக்கு ஒரு சாட்சியம். இந்த நூல் அந்த மன நிலைக்கு ஒரு நிரூபணம்
மழையா பெய்கிறது
சர்ச்சைகள்
ரூ.95
சாருநிவேதிதா இந்த நூலில் உருவாக்கும் சர்ச்சைகள் வழியே எழுப்பும் அடிப்படைக் கேள்விகள் ஒரு தமிழ் எழுத்தாளன் சந்திக்கக்கூடிய அவமானங்களைப் பற்றியவை. அவன் தனது இருப்பையும் எழுத்து இயக்கத்தையும் தக்கவைத்துக் கொள்ள போராடும் அபத்தமான சூழல் பற்றியவை.
கடவுளும் சைத்தானும்
கட்டுரைகள்
ரூ.60
சாரு இந்த நூலில் விவாதிக்கும் பல பிரச்சினைகள் நமது கலாச்சார மதிப்பிடுகளோடும் நுண்னுணர்வுகளோடும் தொடர்புடையவை. குடி, கவிதை, பூங்கொத்துகள், உடல் குறைபாடுகள், கசப்புகள், பிரியங்கள் என பல்வேறு தளங்களில் இவை கூர்மையான கேள்விகளை எழுப்புகின்றன.
கனவுகளின் நடனம்
சினிமா பார்வைகள்
ரூ.110
இதைப் படிக்கும் ஒருவருக்கு தமிழ் சினிமா பற்றி மிகவும் எதிர்மறையாக எழுதப்பட்ட கட்டுரைகள் என்று தோன்றக்கூடும்.. தமிழ் சினிமாவை மிக அதிகமாக நேசிப்பதாலேயே இப்படிப்பட்ட கட்டுரைகளை எழுதினேன். கடந்த 30 ஆண்டுகளாக சர்வதேச சினிமாவின் தீவிரமான ரசிகன் என்ற முறையில் இதையெல்லாம் சொல்லியாக வேண்டியிருக்கிறது. உண்மையில் இந்த விமர்சனங்களுக்கு ஆளானவர்கள் எனக்கு நன்றி தெரிவிக்க வேண்டும். ஆனால் நிலைமை அப்படி இல்லை. அவர்கள் என்மீது கோபப்படுகிறார்கள். உங்கள் எடையை 200 கிலோவாகக் காண்பிக்கும் எடை எந்திரத்தின் மீது கோபப்படுவீர்களா? நான் யாரை விமர்சித்து எழுதுகிறேனோ அவர்கள் மீது எனக்குத் தனிப்பட்ட முறையில் எந்தவித கோபமோ அல்லது நட்புணர்வோ கிடையாது. என்னுடைய கவனமெல்லாம் அந்த சினிமாவைப் பற்றி மட்டுமே இருக்கிறது.
சாரு நிவேதிதா
(முன்னுரையிலிருந்து
பயங்கர விபத்து : மக்கள் நாயகன் ராமராஜன் படுகாயம், டிரைவர் பலி- ஆளுங்கட்சி சதியா??
கரகாட்டகாரன் உட்பட பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்தவர் ராமராஜன்.. ஒரு முறை எம்பியாகவும் இருந்திருக்கிறார்..
![]() |
கோப்பு படம் |
![]() |
மருத்துவமனையில் சிகிச்சை பெறும் ராமராஜன் (தலையில் அடிபட்டு இருக்கிறது ) |
சமீபத்தில் ரிலீசான நந்தலாலா படம் ராமராஜன் படம் போல இருப்பதாகவும், படத்தின் இசை ராமராஜன் பட இசை போல இருப்பதாகவும் ஒரு பேச்சு கிளம்பியதால் மீண்டும் ஸ்டார் அந்தஸ்து பெற்றார்..
Saturday, December 11, 2010
பதிவுலகை கலக்கும் மூட நம்பிக்கைகள் - விளக்கங்கள்
ஒரு நாள் பூஜை செய்யும் போது, பூனை ஓன்று தொந்தரவு செய்து கொண்டே இருந்தது...எரிச்சலடைந்த அவர் , பூனையை அருகில் இருந்த தூணில் கட்டி வைத்து விட்டு தன் வேலையை தொடர்ந்தார்..
வழ க்கம்போல தாமதமாக வந்த சீடன் பூனை கட்டப்பட்டு இருப்பதை பார்த்து குழம்பினான்..
விளக்கம் கேட்பதற்குள் சாமியார் வெளியூர் போய் விட்டார்..
அதன் பின் அந்த பூஜை செய்யும் வேலை , சீடனுக்கு வந்து சேர்ந்தது..
சாமியார் செய்தபடியே செய்ய நினைத்த அவன், தெருவில் , தன் இணையுடன் டூயட் பாடிக்கொண்டு இருந்த பூனையை வலு கட்டாயமாக பிடித்து வந்து தூணில் கட்டி வைத்து விட்டு, அதன் பின் பூஜை செய்தான்...
நாளடைவில் இது ஒரு நடைமுறை ஆகிவிட்டது..
அந்த ஊரில் இருந்த பூனைகள் எல்லாம் வெளியூருக்கு ஓடி போய் விட்டன.. அப்படி இருந்தும தேடி பிடித்து கொண்டு வந்து கட்டுவது ஒரு செயல் முறை ஆகிவிட்டது..
கொஞ்ச நாள் கழித்து திரும்பி வந்த சாமியார், தன் சீடர்கள் புதிதாக ஏதோ செய்வதை பார்த்து அசந்து விட்டார்.. விளக்கம் கேட்க கூச்சப்பட்டு , அவரும் பூனை கட்டும் முறையை தொடர ஆரம்பித்தார் ..
இப்படித்தான் நம்பிக்கைகள் உருவாக்கி நிலை பெறுகின்றன...
பதிவுலகில் இப்படிப்பட்ட நம்பிக்கைகள் அதிகம்...
அதில் பல தவறானவை ..
பல ஆண்டுகள் ஆராய்ச்சிக்கு பின் , நாம் கண்டுபிடித்தவற்றை பொதுநலன் கருதி வெளியிடுவதில் பெருமை படுகிறோம்..
*****************************
1 ஞாயிற்று கிழமை பதிவிட கூடாது.. யாரும் படிக்க மாட்டார்கள்..
ஊரில் இருக்கும் எல்லா நிறுவனங்களிலும் கம்ப்யூட்டர் பயன்படுத்துவது போலவும், அந்த நிறுவனங்களில் இருப்பவர்கள் , முழு நேர வேலையாக பதிவுகளை பார்வையிடுவதாகவும் நினைத்து கொண்டு எழுந்த நம்பிக்கை இது..
யார் இதை கிளப்பி விட்டது..
மென்பொருள் துறை பதிவர்கள்.. தம்மை போல பிறரை நினைத்து இப்படி ஒரு மாபாதகத்தை செய்தனர்..
உண்மை நிலை :
மென்பொருள் துறையில் இல்லாத பதிவர்கள்தான் அதிகம்.. இவர்களுக்கு நிறுவனங்கள் லப் டாப் கொடுத்து விடும்...
விடுமுறை நாட்களில் , லேப் டாப்பை வைத்து கொண்டு வீட்டு வேலை செய்வதில் இருந்து தப்பிப்பது இவர்கள் யுக்தி...
எனவே ஞாயிறு அன்றுதான் அதிகாமான பதிவுகள் பார்வையிடப்படுகின்றன...
2 காலை 9 மணியில் இருந்து மாலை 5 மணிக்குள் பதிவிட்டால் பலர் படிப்பார்கள்..
பள்ளிக்கால பசுமை நினைவுகளால் எழுந்த நம்பிக்கை இது..
கிளப்பியது யார் : அரசு வேலை பார்க்கும் பதிவர்கள்
உண்மை நிலை:
இப்போதெல்லாம் யாரும் சரியான நேரத்துக்கு அலுவலகம் செலவ்தில்லை.. செல்வது போல கணக்கு காட்டுவது எளிதாகிவிட்ட நிலையில், இது தேவை அற்றது..
பாத்து மணிக்கு வந்து சேர்ந்து, தூங்கி எழுந்து, டி வடை சாப்பிட்டு , வேலையை ஆரம்பிக்கவே , மாலை ஐந்து மணி ஆகி விடும்.. அப்புறம் எப்படி வீட்டுக்கு போவது..
ஐந்து மணிக்கு மேல்தான் வேலையை ஆரம்பிப்பார்கள்... அவ்வப்போது பதிவுகளையும் பார்ப்பார்கள்.. எழுதுவார்கள்..
இந்த நேரத்தில் மற்ற நாட்டை சேர்ந்தவர்களும் பணியை ஆரம்பிப்பார்கள்... (அவர்கள் நம்மை போல அல்ல )
எனவே மாலை நேரத்துக்கு மேல்தான் நல்ல நேரம்..
3 அவ்வபோது புரட்சிகர கருத்துக்களை எடுத்து வைத்தால் , மக்கள் மனதில் ஓர் இடம் கிடைக்கும்,,,
கிளப்பியது யார் : அதிகம் படிப்பவர்கள்
உண்மை நிலை :
இன்டர்நெட் யுகத்தில் எல்லோருமே நெட்டில் படிக்க ஆரம்பித்து விட்டதால், எல்லோருக்குமே புரட்சிகர கருத்துக்கள் தெரிந்து விட்டன... எனவே இப்படி பேசினால் யாரும் நம்புவதில்லை
4 எல்லோருடைய எழுத்தையும் பாராட்டினால் நம்மையும் பாராட்டுவார்கள்...
கிளப்பியது யார் : படிக்காமல் பின்னூட்டம் இடுவோர் சங்கம்...
உண்மை நிலை : சில நேரங்களில் எழுதியவருக்கே தான் எழுதியது பிடிக்காது... அப்போது போய் நாம் பாராட்டினால், நம் அறிவின் மீது அவருக்கு சந்தேகம் வந்து விடும்
5 "அந்த " எழுத்தாளரை நட்பாக்கி கொண்டால் , நம்மை பிரபல படுத்துவார்
கிளப்பியது யார் : இலக்கிய பதிவர்கள்..
உண்மை நிலை : வெளிநாட்டு சரக்கு என லோக்கல் சரக்கை கொடுத்து ஏமாற்ற நினைத்த பதிவரை , நேரடியாக கேட்ட வார்த்தையில் திட்டி தீர்த்தார்.. இதனால் அவரை நட்பாக்கும் முயற்சி தோற்றது..
இந்த ஐடியா வேலைக்கு ஆகாது.,..
இந்த எழுத்தாளரும், போட்டி எழுத்தாளரும் ஒருவரை ஒருவர் பிரபலபடுத்தி கொள்வார்களே தவிர, பதிவர்களை பிரபலபடுத்த மாட்டார்கள்..
அவர்களுக்குள் கனவான் ஒப்பந்தம் இருக்கிறது...
6 கண்ணை மூடிக்கொண்டு எல்லா பதிவுகளுக்கும் மைனஸ் ஒட்டு போட்டுவிட்டால், நம் பதிவு பிரபலமாகி விடும்
கிளப்பியது யார் : காசு வாங்கி கள்ள ஊட்டு போடுவதை சைட் தொழிலாக வைத்து இருக்கும் பதிவர்கள்
உண்மை நிலை : ஒருவர் மைனஸ் வாங்கினால் மட்டும் போதாது... நாமும் பிளஸ் வாங்க வேண்டும்... எனவே இந்த ஐடியா செல்லாது... செல்லாது
7 புரியாமல் எழுத வேண்டும்
கிளப்பியது யார் : விபரம் புரியாதவர்கள்
உண்மை நிலை : பிரபஞ்ச சிறகை கட்டிக்கொண்டு, உலகில் பார்ப்பவன், பிரக்ஞையின் பிதற்றல், படிமங்களின் தரிசனம் என்றெல்லாம் எழுதினால் ஆரம்பத்தில் எல்லோரும் பாராட்டுவார்கள்..
ஆனால் காலப்போக்கில் , ஒரே பதிவை மீண்டும் மீண்டும் படிப்பது போல ர்ஹோன்ற ஆரம்பித்து விடும்..
தவிர , பிரபல எழுத்தாளர்களே இப்படி எழுத ஆரம்பித்து விட்டதால், பதிவர் என்ற அடையாளம் கிடைக்காமல் போய் விடும்..
8 உலக திரைப்படங்களுக்கு விமர்சனம் எழுத வேண்டும்
கிளப்பியது யார் : மலிவு விலையில், வி சி டி கிடைக்கும் இடம் தெரிந்து வைத்து இருப்பவர்கள்
உண்மை நிலை : இப்போதெல்லாம் நம் ஆட்கள் ஆங்கில படங்ககளை பார்த்துதான் எடுக்கிறார்கள்.. எனவே உலக திரைப்பட விமர்சனம் தமிழ் பட விமர்சனம் போலவேதான் இருக்கும்...
{ விரைவில் இரண்டாம் பாகம் )
Friday, December 10, 2010
சிறுகதைப் போட்டி பரிசளிப்பு விழாவும், பதிவர் ஆதியின் கோபமும்…-ஸ்பாட் ரிப்போர்ட்
ஒருவர் உங்களை கோபமாக திட்டும்போது மகிழ முடியுமா?
முடியாது என்றுதான் நினைத்து வந்தேன், நேற்று பதிவர் ஆதிமூலகிருஷ்ணன் என்னை திட்டும் வரை..
அவர் ஏன் என்னை திட்டினார்.. அவர் யாரையும் திட்டமாட்டாரே ! அதுவும் நல்லவனும், அறிவாளியும் ( ? !! ) , இலக்கியவாதியுமான (**@@ ? !! ) என்னை ஏன் திட்டினார்?..
Thursday, December 9, 2010
உடல்பசியை தீர்க்கும் ஆட்டை வயிற்றுபசிக்கு கொன்றால் தண்டனை- கிளுகிளுப்பு சட்டங்கள்- அடல்ட்ஸ் ஒன்லி
அதை பற்றி ஒரு பார்வை…..
பதினெட்டு வயத்துக்கு குறைந்தவர்கள், இந்த கோட்டை தொட்டு கும்பிட்டு விட்டு, வேறு நல்ல பதிவரின் ,இடுகையை பார்வையிட செல்லுமாறு கேட்டுக்கொள்ளபடுகிறார்கள்
____________________________________________________________
சில பதிவர்களின் பஞ்ச் டயலாக்கும் , நம் கேள்விகளும்
Wednesday, December 8, 2010
உண்மைதமிழனின் புனிதப்போர் குறும்படம்- ஜோரா? போரா ?
படித்து முடித்ததும்தான் யார் எழுதியது என கவனித்தேன்…’
எழுதியவர் சுதந்திர போராட்ட வீரர் சுப்ரமணியம் சிவா..அவர் எழுத்தாளர் என்பதே எனக்கு அப்போதுதான் தெரியவந்தது.. ஆச்சர்யமாக இருந்தது…
அந்த புத்தகம் பற்றி பிறகு எழுதுவேன்..
இப்போது நான் சொல்லவந்தது வேறு..
பெண்ணாக ”பிரமோஷன்” பெறும் ஆண்- வீடியோவுடன் அறிவியல் வினோதங்கள் ( அடல்ட்ஸ் ஒன்லி )
இயற்கையில் விந்தைகள் ஆயிரம்…
கற்க கற்க வியப்பு அதிகரிக்கத்தான் செய்யுமே தவிர குறையாது..
சரி.. மேலும் சிலவற்றை பார்ப்போம்..
1. காதலினால் துன்பம் தீரும்
சமீபத்தில் ஒரு சாமியார்- நடிகை வீடியோ ரிலீசாகி பரபரப்பு ஏற்பட்டது..
Tuesday, December 7, 2010
குஞ்சு பொறிக்க **சை இழக்கும் ஆண், சம்பந்தம் இல்லாத “சைஸ்”- இயற்கையின் குறும்புகள்- அடல்ட்ஸ் ஒன்லி
ஆரோக்கியமான விவாதம் செய்து கொண்டு இருந்த போது அவர் எடுத்து வைத்த கருத்து ஒன்று என்னை திக்குமுக்காட செய்து விட்டது...
“ நமக்கு “ அந்த “ உறுப்பு அங்கு இல்லாமல் உள்ளங்கையில் இருந்தால் நன்றாக இருந்திருக்கும் ” என்று சொல்லிவிட்டு , அவர் ஒரு விளக்கம் கொடுத்தார் பாருங்கள்..அப்படியே நடு ரோட்டில் அவர் காலில் விழுந்து கும்பிட வேண்டும் போல இருந்தது...
பட் அந்த விளக்கம் எனக்கு பிடித்து இருந்தது
( பாஸ்... உங்க பெயரை சொல்லல... உங்க கருத்தை மக்களிடம் பகிர்ந்து கொள்ளாவிட்டால் வரலாறு என்னை மன்னிக்காது என்பதால் இதை சொல்ல வேண்டி இருக்கிறது.. .சாரி.. ஹி ஹி )
Monday, December 6, 2010
ரத்த சரித்திரம் -வன்முறையை ரசித்து மகிழும் ஒரு சமூகம்

இதன் பூர்வீகம் என்ன... வரலாறு என்ன ... இயக்குனரின் திறமை... கொலை செய்ய பயன் படுத்தும் யுக்திகள்...
கொலை செய்யபடும் இடத்தின் முக்கியத்துவம், கொலை செய்ய தூண்டப்படும் கதாபாத்திரத்தின் நியாயங்கள், எதிர் தரப்பு கேரக்டரின் கொலைக்கு கூட சரியான காரணம் சொல்லும் இயக்குனரின் நடுநிலை பார்வை, பல அப்பாவிகளை கொன்று குவிப்புக்கு காரணமானவர்கள் இந்த படத்தை பார்த்து கண்ணீர் விட்ட உருக்கமான தகவல்கள் என்று எழுத்துலகம் பரபரப்பாக இருக்கிறது..
மகாத்மா காந்தி மரண செய்தியை விசில் அடித்து வரவேற்ற சிறுவர்கள்

சமீபத்தில் ஒரு பொது நிகழ்ச்சிக்கு சென்று இருந்தேன். அது என்ன நிகழ்ச்சி என்பது முக்கியமில்லை.. நான் சொல்லப்போகும் சம்பவம் ஓர் உதாரணம்தான்..எங்கு வேண்டுமென்றாலும் நடக்க முடியும்..
நான் நிகழ்ச்சியை கவனிப்பதுடன், ஆடியன்ஸ் அந்த நிகழ்ச்சியை எப்படி ரசிக்கிறார்கள் என்பதையும் கவனித்து வந்தேன்..
குறிப்பாக சிறுவர்களின் ரெஸ்பான்ஸ் சூப்பராக இருந்தது..
ஒரு குறிப்பிட்ட தலைவரைப்பற்றி பேசினார்கள்… அந்த தலைவர் உண்மையிலேயே ஒரு மகத்தான மனிதர்…
அவர் செய்த சாதனைகளைப்பற்றி பேசும் போது, கைதட்டல், விசில் என அமர்க்களப்பட்டது விழா அரங்கம்..
ஆனால் மிக அதிகளவில் வரவேற்கப்பட்ட ஒரு விஷயம், அந்த தலைவரின் சாதனையோ, அவர் திறமையோ அல்ல..
உலகிலேயே நீளமான “அந்த” உறுப்பு கொண்ட பறவை – கிளுகிளு அறிவியல் ( வயது வந்தோருக்கு மட்டும்)
ஃபீலிங்ஸ் ?
அதை சொல்லவில்லை…
இன்னொன்று…
ஆம்.. நீங்கள் நினைப்பது சரிதான்..
”அது”தான்..
ஆனால் பறவைக்கும் “ அது “ உண்டு என கண்டுபிடித்துள்ளனர் விஞ்ஞானிகள்… இதில் உலக சாதனை செய்துள்ளது ஒரு பறவை.
அறிவியல் கண்டுபிடிப்பு என்ற வகையில் அதை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்..
தவறாக எடுத்துக்கொள்ள வேண்டாம்..
Saturday, December 4, 2010
நந்தலாலா சர்ச்சை, நர்சிம் "நச்" விளக்கம் - தாக்கம் இன்றி படைப்பு இல்லை
நர்சிமிடம் விளக்கம் கோரும் அவசியம் என்ன ?
ஒரு நல்ல இயக்குனரான மிஷ்கினின் நந்தலாலா படம் ஒரு தரப்பில் பாராட்டை அள்ளி குவித்தாலும், எதிர்ப்பும் வரலாறு காணாத அளவுக்கு வலுவாக எழுந்தது என்பதை யாரும் மறுக்க முடியாது..
இந்த எதிர்ப்பு எழுந்ததற்கு வலுவான ஓர் உளவியல் காரணம் உண்டு…
ஒரு படைப்பை காப்பி அடித்தல் என்பதற்கும் , ஒரு படைப்பின் பாதிப்பில் இருந்து ஒரு படைப்பை உருவாக்குவதற்கும் நுண்ணிய வேறுபாடு உண்டு..
படைப்பு என சொல்லும்போது அது சினிமா மட்டும் அல்ல… உடனே படைப்பு என்றால் இலக்கியமா என்றால் அதுவும் க்ரியேட்டிவ் வொர்க்தான் என்றாலும் அது மட்டுமே படைப்பு அல்ல..
Friday, December 3, 2010
அம்பேத்கர் திரைப்படம்- ஒரு நடுநிலை பார்வை


பல சிக்கல்களுக்கு பின் தமிழில் படம் வெளிவந்துள்ளது..
நான் வாழ்க்கை வரலாறுகளை விரும்பி படிப்பவன் என்ற முறையில் இந்த படத்தின் மீது ஆர்வம் ஏற்பட்டது…
மற்றவர்கள் பார்த்து கருத்து சொல்லட்டும் .பிறகு பார்க்கலாம் என நினைத்தேன்…
Thursday, December 2, 2010
ஒரு நல்லவரை, தலைவரை தெரிந்து கொள்வோம்- அம்பேத்கர் சினிமா .
இன்று நாம் அப்படிப்பட்ட தலைவர்கள் யாரையும் பார்க்க முடிவதில்லை..
ஒரு காலத்தில் அப்படிப்பட்ட தலைவர்கள் இருந்து இருக்கிறார்கள் என்பது நமக்கெல்லாம் ஆசர்யம் அளிக்கும் விஷயம்..
தலைவர்களில், நல்ல தலைவர்கள் சுயநல தலைவர்கள் என்று இருவிதம உண்டு...
இன்று நாம் பார்ப்பது சுயநல தலைவர்கள்..இவர்களை விட்டு விடுவோம்..
நல்ல தலைவர்களின் சிந்தனைகளை தெரிந்து கொள்வது, வாழ்க்கயை தெரிந்து கொள்வது எல்லோருக்குமே நல்லது..
நாம் இந்தியனாக இருக்கலாம்.. அதற்காக ஓர் அமெரிக்க தலைவனின் வாழ்க்கையை தெரிந்து கொள்ள கூடாது என்பது இல்லை...
ஒரு தலைவனைப் பற்றி தெரிந்து கொள்ளும் பொது அவன் சார்ந்த சமுகத்தையும், அவனது சமகால வரல்லாற்றையும் தெரிந்து கொள்கிறோம்..
இந்த விதத்தில் , அம்பேத்கார் படம் நாம் எல்லாம் பார்க்க வேண்டிய படம்...
ஒரு தொட்டியில் இருக்கிறது .
அதில் எந்த இடத்தில் இருந்து தண்ணீர் எடுத்தாலும் , மொத்த தன்ணீர் குறையும்..
அதே போல சமுகத்தில், ஒரு தரப்பினர் கஷ்டப்பட்டால், ஒட்டு மொத்த சமுகத்த்துக்கும்தான் பாதிப்பு..
எனவேதான் சமுக நீதி என்பது முக்கியமாகிறது...
அப்படி பார்த்தால்., அம்பேத்கார் அனைவருக்கும் பொதுவான ஒரு தலைவர்தான்...
அதெல்லாம் கூட வேண்டாம், ..
அவரை தலைவாராக கூட ஏற்க வேண்டாம்... அவர் வரலாற்றில் ஒரு முக்கியமானவர் என்பதை யாரும் மறுக்க முடியாது..
அவர் என்னதான் சொன்னார்.. என்னதான் செய்தார் என்பதை தெரிந்து கொள்வது முக்கியமான ஒன்று...
அம்பேத்கார் படம் பார்ப்பது அந்த வகையில் அவசியமாகிறது...
எந்த கட்சி சார்போ, இயக்க சார்போ, மத சார்போ, இன சார்போ இல்லாமல் ஒரு பார்வையாளனாக இந்த படத்தை படத்தை பார்க்க , நடுநிலையாளர்களை , இந்த பார்வையாளன் அழைக்கிறேன்...
Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com
விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....
Blog Archive
-
▼
2010
(277)
-
▼
December
(37)
- சந்தல் படுகொலையும் ஜீரோ டிகிரி சிந்தனையும் …
- கர்நாடக இசைமீது சாதாரண மனிதனின் கோபம்
- மனதை கலங்க வைக்கும் கொடூரமும், மறைக்கப்பட்ட வரலாறும்
- exclusive report: சாருவுக்கு ”இன்சல்டிங்” மெசேஜ் அ...
- சுகம் கொடுக்குற பொண்ணுக்கும் மனசு இருக்கு...- -Mr...
- பின்னூட்ட புதையல்
- மன்மதன் அம்பு,ஒரு மாறுபட்ட பார்வை -Mrinzo Nirmal.
- இளையராஜா செய்தது சரியா?- விவாத தொகுப்பு
- மன்மதன் அம்பு கேவலமான தோல்வி.. கே எஸ் ரவிகுமாரின் ...
- இளையராஜாவுக்கு மரணதண்டனை? – அடுத்த சர்ச்சை ..
- உலகின் முதல் கிறிஸ்தவ நாடு எது? சென்னைக்கும் அதற்க...
- "உண்மையை" அமைதியாக்கிய அவாள், "வயரை" வருத்தப்பட வை...
- தேகமும் சந்தேகமும்- நண்பர் யுவ கிருஷ்ணா உள்ளிட்டோர...
- பெண் மூட்டை பூச்சிக்கு "அது " கிடையாது.. பிறகு எப...
- கருத்து கணிப்பு தந்த அதிர்ச்சியும் , எடுக்கப்பட்ட ...
- தேகம் நாவல் - சாதாரண வாசகன் பார்வையில் ....
- How to Deconstruct Text -With "Zero Degree" Exampl...
- எழுத்தாளனை கொண்டாடினால் ஏன் இந்த எரிச்சல்? (புதிய ...
- mrinzo nirmal வழங்கும் சாருவின் காமரூப கதைகள்- ஒரு...
- mrinzo வழங்கும் சீரோ டிகிரி குறித்த விவாதம்
- Exclusive Report : பீர் அபிஷேகம், புதிய பட்டம்- கொ...
- வயர் பதிவர் என்ன சொல்கிறார் ? - பதிவுலக கிசுகிசு
- பிரத்தியேக செய்தி : சாரு புத்தக வெளியீட்டு விழா, அ...
- பயங்கர விபத்து : மக்கள் நாயகன் ராமராஜன் படுகாயம், ...
- பதிவுலகை கலக்கும் மூட நம்பிக்கைகள் - விளக்கங்கள்
- சிறுகதைப் போட்டி பரிசளிப்பு விழாவும், பதிவர் ஆதியி...
- உடல்பசியை தீர்க்கும் ஆட்டை வயிற்றுபசிக்கு கொன்றால்...
- சில பதிவர்களின் பஞ்ச் டயலாக்கும் , நம் கேள்விகளும்
- உண்மைதமிழனின் புனிதப்போர் குறும்படம்- ஜோரா? போரா ?
- பெண்ணாக ”பிரமோஷன்” பெறும் ஆண்- வீடியோவுடன் அறிவியல...
- குஞ்சு பொறிக்க **சை இழக்கும் ஆண், சம்பந்தம் இல்லாத...
- ரத்த சரித்திரம் -வன்முறையை ரசித்து மகிழும் ஒரு சம...
- மகாத்மா காந்தி மரண செய்தியை விசில் அடித்து வரவேற்ற...
- உலகிலேயே நீளமான “அந்த” உறுப்பு கொண்ட பறவை – கிளுகி...
- நந்தலாலா சர்ச்சை, நர்சிம் "நச்" விளக்கம் - தாக்கம்...
- அம்பேத்கர் திரைப்படம்- ஒரு நடுநிலை பார்வை
- ஒரு நல்லவரை, தலைவரை தெரிந்து கொள்வோம்- அம்பேத்கர் ...
-
▼
December
(37)