Friday, December 3, 2010

அம்பேத்கர் திரைப்படம்- ஒரு நடுநிலை பார்வை

இந்திய வரலாற்றில் முக்கியமான ஒரு தலைவர் அம்பேத்கர்.. வரலாற்றின் முக்கிய கால கட்டத்தில் வாழ்ந்தவர்.. பெரிய சாதனைகள் செய்த்வர்.. மக்களுக்கு , அதிலும் நலிந்தவர்களுக்கு சேவை ஆற்றியவர்.
பல சிக்கல்களுக்கு பின் தமிழில் படம் வெளிவந்துள்ளது..
நான் வாழ்க்கை வரலாறுகளை விரும்பி படிப்பவன் என்ற முறையில் இந்த படத்தின் மீது ஆர்வம் ஏற்பட்டது…
மற்றவர்கள் பார்த்து கருத்து சொல்லட்டும் .பிறகு பார்க்கலாம் என நினைத்தேன்…



ஆனால் அதில் ஒரு சிக்கல்.. பெரும்பாலானோர் என்ன எழுதுவார்கள் என படிக்காமலேயே சொல்லி விடலாம்.
அறிவு ஜீவி என பெயர் வாங்க வேண்டுமா ? எந்திரனை திட்டு… இளையராஜாவை திட்டு, சோகம் – அதீத கதாபாத்திரம் – மெதுவான காட்சிகள் உள்ள படமென்றால்  தமிழின் உச்சமான படம் என பாராட்டு, என்று ஒரு ஃபார்முலாவில் சிலர் இயங்குவதால் , அம்பேத்கார் படத்தை பற்றி என்ன எழுதுவார்கள் என முன்பே தெரிந்து விட்டது.
சரி,, நாமே போய் பார்த்து தெரிந்து கொள்ளலாம் என கிளம்பினேன்…
திரை அரங்கு விழாக் கோலம் பூண்டு இருந்தது… இத்த்னை பேர் ஆர்வமாக இருக்கிறார்களே என மகிழ்ச்சியாக இருந்தது…
டிக்கட் கவுண்டரில் பலர் அம்பேத்கார் பட டிக்கட் என கேட்டு வாங்கியதும் சந்தோஷாமாக இருந்தது…
சற்று தாமதித்து இருந்தால் , எனக்கு டிக்கட் கிடைத்து இருக்காது..

அம்பேத்கரின் கொள்கை , செயல்பாடு , அவர் ஆற்றிய தொண்டு , சமூக மாற்றம் என்பதெல்லாம்  தனியாக பேசப்பட வேண்டியவை … ஒரு சினிமா என்ற முறையில் , ஒரு ரசிகனின் பார்வையில் படம் எப்படி..
அதாவது அம்பேத்கரை பற்றி விமர்சனம் அல்ல… அவர் வாழ்வை எவ்வளவு தூரம் சரியாக ,எந்த அளவுக்கு சுவையாக படம் பிடித்து இருக்கிறார்கள்   என ஒரு பார்வை
***********************************************************************************************

அவர் பிறப்பு, குழந்தை பருவத்தில் அனுபவித்த கஷ்டம், என்ற வரிசையில் இல்லாமல் . வெளி நாட்டில் அவர் படிப்பதில் ஆரம்பிக்கிறது படம்.
இந்த கால கட்டம்தான் அவரது மேதமைக்கு , வெற்றிக்கு அடித்தளமிட்டது என்றால் மிகையாகாது..
எம் ஏ , பி எச் டீ , எம் எஸ் சி , சட்டம் என அமெரிக்காவிலும் , இங்கிலாந்திலும் படித்தார்..
அப்போது மனதை சிதற விடாமல், படிப்பு ஒன்றே குறியாக இருந்தது தெளிவாக காட்டப்பட்டு இருக்கிறது… 1916 முதல் ஏழு ஆண்டுகள் கடும் உழைப்பு, பல கஷ்டங்களுக்கு இடையில்..
இது முக்கியம்தான் என்றாலும் , சில காட்சிகளை குறைத்து இருந்தால், அவர் இந்தியாவில் செய்த பல பணிகளை இன்னும் விரிவாக காட்டி இருக்கலாம்.
சிந்தனையாளர், சட்ட மேதை, அரசியல் தலைவர், எழுத்தாளர் என அவரது பல சிறப்பம்சங்களை காட்ட வேண்டியது இருக்கும் போது, வயலின் வாசிப்பது, சிக்கன் பீஸ் சண்டை என சில காட்சிக்ளை அனுமதித்து இருக்க வேண்டாம்..அவை சுவையான காட்சிகள்தான் என்ற போதிலும், முக்கியமான சம்பவங்களுக்கு இடம் இல்லாமல் போய் விட்டதே !!

சிறுவயதில் அனுமவித்த கஷ்டங்களை அவ்வப்போது விரைவாக காட்டியதை போல , வெளினாட்டு காட்சிகளை விரைவாக காட்டி முடித்து இருக்கலாம்…
அவர் நடத்திய எல்லா போராட்டங்களையும் காட்ட நேரம் இருக்காது என்ற நிலையில், இரண்டு முக்கியமான போராட்டங்களை செலக்ட் செய்து காட்சி அமைத்து இருப்பது சிறப்பு..
பொது குளத்தில் தண்ணீர் எடுத்தல், மற்றும் ஆலய நுழைவு.
இரண்டும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய நிகழ்வுகள்..
தண்ணிர் எடுத்த பின் , அதை “ தீட்டை “ நீக்க உயர்சாதியினர் சுத்தப்படுத்தும் சடங்கை செய்வதும், பதிலடியாக அம்பேத்கர் தலைமையில் மனு நீதி எதிர்ப்பு போராட்டமும் விறு விறு காட்சிகள்.
ஆலய நுழைவு நல்ல காட்சிதான் ,, ஆனால் அதில் காந்தியின் பங்கை காட்டாதது வருந்ததக்கது…

காந்தியின் கேரக்டரை இன்னும் விரிவாக காட்டி இருந்தால், அவரை போன்ற ஒரு பெரிய தலைவருக்கு எதிரான கருத்தை அம்பேத்கார் அடுத்து வைத்தது அழுத்தமாக படிவாகி இருக்கும்…
துணிச்சலான , வெளிப்படையான வசனங்கள்

காந்தி துறவியோ, மகாத்மாவோ அல்ல. அவர் ஒரு சந்தர்ப்பவாத அரசியல்வாதி. சீஸனுக்கு சீஸன் அவர் குணம் மாறும். ஆதரவும் மாறும்
.
“காந்திஜி, உண்ணாவிரதம் ஒரு பலமான ஆயுதம்தான். ஆனால் அதை அடிக்கடி கையிலெடுக்க வேண்டாம். ஆயுதமும் மழுங்கிவிடும். நீங்களும் இருக்க மாட்டீர்கள். இந்த தேசத்துக்கு நீங்கள் தேவைப்படலாம்!


நம்மை இந்துக்களும் ஏற்பதில்லை.. நாம் போட்டியாக வந்து விடுவோமோ என மற்ற மதத்தினரும் ஏற்பதில்லை..


பலர் புத்த மதமும் , பொது உடமையும் ஒன்று என நினைக்கின்றனர்.. பொது உடமை என்பது ஹிம்சை… புத்த மதம் அஹிம்சை..


ஆலய பிரவேசத்தை விட அரசியலில் முக்கியத்துவம் பெறுவதுதான் அவசியமானது..


எல்லா மத தலைவர்களும் , தாம்தான் கடவுளின் அவதாரம் என சொல்கின்றனர்.. புத்த மதம் மட்டும்தான் அபப்டி இல்லை… அதில் மட்டும்தான் ஜாதியும் இல்லை ..


நாங்கள் பொது தன்னீர் குடித்து அது அசுத்தம் ஆகிறது என்றால், வீட்டில் இருந்து தண்ணீர் எடுத்து வந்து குடித்து கொள்ளுங்கள்..

 நாங்கள் ஹிந்து மதத்தை விட்டு விலகுவதற்கு வருத்தப்படாதீர்க்ள்... நாங்கள் போவதால் அது தூய்மை ஆகிறது என சந்தோசப்படுங்கள்..



போன்றவை சில உதாரணங்கள்..

பூனா ஒப்பந்தம் பற்றி சிறப்பாக பதிவு செய்துள்ளனர்..
சாதிக்கொடுமையையும் , அதற்கு எதிரான போராட்டத்தயும் பதிவு செய்துள்ளனர்..
குடும்ப வாழ்வையும் லேசாக காட்டி இருப்பது நன்றாக இருக்கிறது..
பாராட்டப்படவேண்டிய விஷ்யம்..

காந்தியுடன் மோதல் போன்றவை சுவையாக உள்ளன.. ஆனால் காந்தி தரப்பு பார்வையையும் காட்டி இருந்தால் , ஒரு சினிமா என்ற முறையில் நன்றாக இருந்து இருக்கும்..

வாழ்க்கை வரலாறு என்று பார்த்தாலும் முழுமையாக இல்லை..
அவரது பொருளாதார சிந்தனைகள், ஏழ்மை ஒழிப்பு, கட்சி ஈடுபாடு, தேர்தல் என பலவற்றை விட்டு விட்டனர்.
இதெல்லாம் பரவாயில்லை…
இடதுசாரிகளுடன் சேர்ந்து நடத்திய , இந்தியாவையே குலுக்கிய நெசவாளர்கள் வேலை நிறுத்தம், விவசாயிகள் போராட்டம் போன்றவற்றை  காட்சி படுத்தாது வருந்த தக்கது.. அவர் எழுதிய புத்தகங்கள் பற்றியும் ஏதாவது சொல்லி இருக்கலாம்…
ஆனால், இந்த குறைகளை பெரிது படுத்தாமல் இருப்பதே நல்லது.. 
பல கஷ்டங்களுக்கு மத்தியில் படம் எடுக்கும் நிலையில் , குறைகளை மறந்து விட்டு, வரவேற்பதே நல்லது…
ஆனால் இதில் காட்டப்பட்டிருக்கும் அம்பேத்காரை மட்டும் அம்பேத்கார் அல்ல.. இதை தாண்டியும் பல சிறப்பான விஷ்யங்கள் இருக்கின்றன என்ற தெளிவு நமக்கு முக்கியம்..
அதே போல இந்த படத்தை மட்டும் பார்த்து காந்தியை பற்றி ஒரு  முடிவுக்கு வரக்கூடாது…
**********************************
படத்தின் பிளஸ் : ஜாதி கொடுமைகளை நச் என காட்டி இருப்பது, இதற்கு எதிரான அம்பேத்காரின் போராட்டதை பதிவு செய்து இருப்பது, வசனங்கள், அவர் எல்லா மதங்களுக்கும் எதிரானவர் என்பதை காட்டி இருப்பது… மம்முட்டியின் அபார நடிப்பு
மைனஸ் : 1பிற ஜாதியினரை நேரடியாக திட்ட அனுமதியில்லாத நிலையில், பிராமணர்களை திட்டும் காட்சிகள் வைத்து இருப்பது அவரக்ளுக்கு செய்யப்படும்  அநீதி,
               2, அவர் வாழ்வின் முக்கிய நிக்ழ்ச்சிகள் இடம்பெறாதது..
                3, அம்பேத்கர் காந்தியை விமர்சித்தது புரட்சிதான்,, ஆனால் அதை சினிமாவில் வைத்தது புரட்சி அல்ல… வேறு தலைவர்களை திட்டும் காட்சிகள் வைக்க முடியாது.. காந்தியை திட்டி வைத்தால் பிரச்சினை வராது என்ப்தால் இந்த காட்சியை வைத்ததை புரட்சி என சொல்ல முடியாது

எனக்கு பிடித்த காட்சி : தலித்துகளின் பிரதினிதி காந்தி அல்ல என வாதிடுவது , ஹிந்து மதத்தை விட்டு விலக முடிவு எடுத்த நிலையில் மற்ற மதத்தினர் இவரை தம் மதத்துக்கு இழுக்க முயல்வதும் ,இவர் பிடி கொடுக்காமல் இருப்பதும்..
முடிவு:
முழுமையான படம் அல்ல.. ஆனால் வரவேற்கப்பட வேண்டிய முயற்சி .. கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம்

20 comments:

  1. நல்ல விமர்சனம்.

    குறைகளை சொல்லக்கூடாது என்று சொல்லியே, எல்லாக்குறைகளையும் சொல்லிவிட்டீர்களே? :-)

    ReplyDelete
  2. //ஹிந்து மதத்தை விட்டு விலக முடிவு எடுத்த நிலையில் மற்ற மதத்தினர் இவரை தம் மதத்துக்கு இழுக்க முயல்வதும் ,இவர் பிடி கொடுக்காமல் இருப்பதும்//
    I like this! :-)

    ReplyDelete
  3. குறைகளை சொல்லக்கூடாது என்று சொல்லியே, எல்லாக்குறைகளையும் சொல்லிவிட்டீர்களே? :-)

    குதூகலமா இருக்குர குடும்பத்து ல கும்மி அடிச்சுட்டு போய்டாதீங்க..

    ReplyDelete
  4. நல்ல நடு நிலையான விமர்சனம். நன்றி பார்வையாளன்.

    ReplyDelete
  5. குறைகளை சொல்லக்கூடாது என்று சொல்லியே, எல்லாக்குறைகளையும் சொல்லிவிட்டீர்களே? :-)

    குதூகலமா இருக்குர குடும்பத்து ல கும்மி அடிச்சுட்டு போய்டாதீங்க.


    ஹஹாஹா.................

    ReplyDelete
  6. இந்தப் படம் எப்ப நம்மூர் வருமென்று காத்திருக்கிறேன் சகோதரா....

    ReplyDelete
  7. இந்தப் படம் எப்ப நம்மூர் வருமென்று காத்திருக்கிறேன் சகோதரா....

    கண்டிப்பா பாருங்க

    ReplyDelete
  8. //முடிவு:
    முழுமையான படம் அல்ல.. ஆனால் வரவேற்கப்பட வேண்டிய முயற்சி .. கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம் //

    நல்ல முடிவு

    ReplyDelete
  9. காந்தி பற்றிய உங்கள் பார்வை நன்று , நிச்சயம் படத்தை பார்க்க வேண்டும்

    ReplyDelete
  10. முழுமையான படம் அல்ல.. ஆனால் வரவேற்கப்பட வேண்டிய முயற்சி .. கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம்


    .......தெளிவான விமர்சனம்.

    ReplyDelete
  11. நன்றி சித்ரா மேடம்

    ReplyDelete
  12. நன்றி கனாகாதலரே , நன்றி அன்பரசன் சார்

    ReplyDelete
  13. நன்றி கனாகாதலரே , நன்றி அன்பரசன் சார்

    ReplyDelete
  14. தொப்பிதொப்பி , என் சிக்கல் உங்களுக்கு சிரிப்பா இருக்கா :-(

    ReplyDelete
  15. சிறப்பான ஒருபார்வை. படத்தை எப்படியாவது பார்த்துவிடவேண்மே.

    ReplyDelete
  16. கண்டிப்பாக பாருங்கள் ஜனா .

    ReplyDelete
  17. உங்க‌ள் விம‌ர்ச‌ன‌ம் ப‌ட‌ம் பார்க்கும் ஆர்வ‌த்தை அதிக‌ரிக்கிற‌து,.. நன்றி

    ReplyDelete
  18. ப‌யணம் - பொதுபுத்தியிலுள்ள முசுலீம் மீதான வன்மம்

    http://powrnamy.blogspot.com/2011/02/blog-post_27.html

    ReplyDelete

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா