நர்சிமிடம் விளக்கம் கோரும் அவசியம் என்ன ?
ஒரு நல்ல இயக்குனரான மிஷ்கினின் நந்தலாலா படம் ஒரு தரப்பில் பாராட்டை அள்ளி குவித்தாலும், எதிர்ப்பும் வரலாறு காணாத அளவுக்கு வலுவாக எழுந்தது என்பதை யாரும் மறுக்க முடியாது..
இந்த எதிர்ப்பு எழுந்ததற்கு வலுவான ஓர் உளவியல் காரணம் உண்டு…
ஒரு படைப்பை காப்பி அடித்தல் என்பதற்கும் , ஒரு படைப்பின் பாதிப்பில் இருந்து ஒரு படைப்பை உருவாக்குவதற்கும் நுண்ணிய வேறுபாடு உண்டு..
படைப்பு என சொல்லும்போது அது சினிமா மட்டும் அல்ல… உடனே படைப்பு என்றால் இலக்கியமா என்றால் அதுவும் க்ரியேட்டிவ் வொர்க்தான் என்றாலும் அது மட்டுமே படைப்பு அல்ல..
ஒரு வித்தியாசமான பம்ப் டிசைன் செய்து செய்திறனை கூட்டும் மெக்கானிக்கல் எஞ்சினியரும் படைப்பாளிதான்… ஒரு சிறந்த மார்க்கெட்டிங் உத்தியை தன் நிறுவனத்தில் அமல்படுத்துபவர், ஓர் உலோகத்துக்கு புதிதான பயன்பாட்டை கண்டுபிடிப்பவர், ஒரு லேத்- தில் மெஷினிங் செய்யப்படும் செயல்வேகத்தை அதிகரிக்க புதிய செட்டிங் கண்டுபிடிப்பவர், ஜிக் ஃபிக்ஸர் வடிவமைத்தல் என படைப்பு திறன் எல்லா இடத்திலும் இருக்கிறது..
எனவேதான் தான் கஷ்டப்பட்ட உருவாக்கிய ஒரு படைப்பு திருடப்படும் வேதனையை அனுபவித்தவர்கள் எல்லா துறைகளிலும் இருக்கும் நிலை இங்கு இருக்கிறது ( சினிமாவில் மட்டும் அல்ல )
இந்த வேதனையை உணர்ந்தவர்கள் சதவிகிதம் அதிகம் என்பதால் நந்தலாலா படத்துக்கு வரலாறு காணாத எதிர்ப்பு ஏற்பட்டது.. பலர் ஜப்பான் படம் பார்க்கவில்லை.. ஆனால் காப்பி என்ற தகவலே அவர்களை கோபப்பட செய்ய போதுமானதாக இருந்தது..
ஒரு மசாலா படத்தை காப்பி அடித்து எடுத்து இருந்தாலும் , பெரிய எதிர்ப்பு இருக்காது.. ஏனென்றால் அதை உன்னத படைப்பு என யாரும் சொல்வதில்லை.. எனவே அதை பார்த்து விட்டு அப்படியே மறந்து விடுவோம்..
ஆனால் உன்னத படம் என நந்தலாலாவை சொல்லும்போதுதான் , படைப்பு திருட்டால் பாதிக்கப்பட்ட வேதனையை உணர்ந்த பெரும்பான்மையினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
என் அனுபத்தில் இருந்து சொல்ல வேண்டும் என்றால்,
- ஒரு எஃப் எம் ரேடியோவுக்கு நான் அனுப்பிய ஒரு கான்சப்ட் அவர்கள் கண்டுபிடிப்பு போல, ஒரு வரி மாறாமல் ஒலிபரப்ப பட்டதை கேட்டு நொந்து போய் இருக்கிறேன்..
- நான் வேலைக்கு சேர்ந்த புதிதில், ஒரு டிசைனை உருவாக்கிய பெயரை என் சீனியரிடம் இழந்து வருந்தி இருக்கிறேன்.
- நான் உருவாக்கிய விளம்பர வாசகம், தேவையில்லாத வகையில் காப்பி அடிக்கப்பட்டு கிண்டலுக்கு உள்ளானதை பார்த்து இருக்கிறேன்..
அந்த அனுபவம் இல்லாதவர்கள் கூட, பதிவு காப்பி அடிக்கப்படும் அனுபவம் பெற்று இருப்பார்கள் ..
அட அதுவும் இல்லையா… விரைவில் அந்த அனுபவம் கிடைக்கும்….
எனவே இந்த எதிர்ப்பு சினிமா என்பதை தாண்டி முக்கியமான விஷயமாகி விட்டது…
இதற்கு அறிவு உலகம் சரியான பதில் சொல்லவில்லை… இயக்குனர்களை விரோதித்து கொள்ள இயலாத நிலை, சினிமா பற்றிய அறிவு இன்மை , கிணற்று தவளை போன்ற பொது அறிவு என பல காரணங்கள் ..
இது போன்ற நிர்பந்தங்கள் இல்லாத பதிவுலகிலும் சரியான விவாதம் இந்த கோணத்தில் நடக்கவில்லை..
கேபிள் சங்கர் ஒரு சினிமா என்ற கோணத்தில், அந்த துறையில் இருப்பவர் என்ற முறையில் வழங்கிய விளக்கம் முக்கியமான ஒன்று… அதற்காக எவ்வளவு நன்றி சொன்னாலும் போதாது…
போனில் அவருடன் வெகு நேரம் பேசியும், என் நன்றியை சரியான விதத்தில் சொல்லவில்லை என்றே தோன்றியது…
ஒரு முக்கிய பிரச்சினையில் இலக்கியம் சார்ந்த ரெஸ்பான்ஸ் , படைப்பாளி என்ற கோணத்தில் பதிவு செய்யப்படாமல் போவது வருந்ததக்கது என்ற நிலையில்தான், எழுத்தாளரும், இலக்கிய அறிவும் சினிமா அறிவும் ஒருங்கே கொண்டவரும், கவிஞரும் பதிவருமான நர்சிம் அவர்களின் நந்தலாலா விமர்சனம் படிக்க நேர்ந்தது..
வித்தியாசமான விமர்சனம் என்னை ஈர்த்தது.. ஆனால் எதிர் கருத்தை அவர் கணக்கில் எடுத்து கொண்டாரா என்பது தெரியவில்லை… அதையும் கணக்கில் எடுத்துக்கொண்டு விட்டு, அதன் பின்னும் படத்தை பாராட்டினால்தான் அதில் ஆழம் இருக்கும் என்பது என் கருத்து…
எதிர் கருத்தை யோசித்து பார்த்து விட்டு, அதன் பின் படத்தை குப்பை என நினைத்தால், அதை அவர் வெளிப்படையாக சொல்லி விட்டு, முன்பு பாராட்டியதை வாபஸ் வாங்க வேண்டும் என்பது என் எண்ணம்..
எனவே , படத்தை நேசிக்கும், ஓர் இலக்கிய ப்ளஸ் சினிமா ஞானம் கொண்ட ஒருவர் கருத்து முக்கியம் என்ற நிலையில் அவரை தொடர்பு கொண்டேன்..
என் பார்வையை பொறுமையாக கேட்ட அவர், டீக்கடை விவாதத்தில் பேசுவது போல மேம்போக்காக பேச விரும்பாமல் , யோசித்து விட்டு , தகவல்களை பெற்று விட்டு தன் விளக்கத்தை சொல்வதாக சொன்னார்..
if a mattter is deserved to be discussed , it is deserved to be discussed sincerly
if it is not deserved to be discussed, it should be ignored.
half minded discussion is a time waste
என்பது அவர் பாலிஸி..
சும்மா தட்டி கழிப்பதற்காக இப்படி சொல்கிறார் என நினைத்து அவ்வப்போது பதில் கேட்டு டார்ச்சர் செய்து வந்தேன்..
ஒரு கட்டத்தில் என் போன் நம்பரை பார்த்தாலே , டென்ஷன் ஆக ஆரம்பித்தார்.. நாம் சற்று அத்து மீறுகிறோமோ என எனக்கே தோன்றியது
கடைசியாக அவர் பதிலை படித்ததும், அத்து மீறி இருந்தாலும் தவறு இல்லை என தோன்றியது…
இலக்கிய உதாரணம் சொல்லி அவர் கொடுத்த விளக்கம் , சில மன கதவுகளை திறந்தது…
நான் சொன்ன பம்ப் டிசைனையே எடுத்து கொண்டால், டிசைன் என் சொந்த கற்பனையாக இருக்கலாம்.. ஆனால் அதன் இன்ஸ்பிரேஷன் வேறு எங்காவது இருந்து கிடைத்து இருக்கும் என்பதே உண்மை…
எறும்பை இன்ஸ்பிரேஷனாக கொண்டு, சில தேடல் முறைகள் கண்டுபிடிக்கப்பட்ட வரலாறு சாஃப்ட்வேரில் உண்டு…
ஆனால் இந்த இன்ஸ்பிரேஷனை பயன்படுத்திக்கொள்ள , ஒரு ஐடியாவை மேம்படுத்த அடிப்படையில் நமக்கு அந்த துறையில் ஞானம் வேண்டும்..இல்லை என்றால் வெறும் காப்பியில் முடியும்.
- மிஷ்கினை எப்படி மதிப்பிடுவது?
- எதிர் தரப்பை ஆய்ந்த பின்னும், நந்தலாலா பாராட்டத்தக்கதா ;
- தாக்கம் இல்லாமல் படைப்பு உண்டா
- ஜப்பான் படத்தை காப்பி அடித்தாரா அல்லது அதன் பாதிப்பில் இன்னும் சிறப்பாக அதை வெளிப்படுத்தினாரா.
- இதற்கு இலக்கிய முன்னுதாரணங்கள் உண்டா
சினிமா ரசிகர்கள் படித்தால் இன்னும் ஒரு முறை அவர் சொன்ன படங்களை பார்க்க தோன்றும்..
சினிமா ஆர்வம் இல்லாதவர்களுக்கும் , இதில் இருக்கும் கவனிப்புத்தன்மை, ரசிப்புத்தன்மை, க்ரியேட்டிவிட்டி குறித்த கருத்துக்கள் போன்ற்வை பயன் படும்..
எதிர் கருத்தும் தோன்ற கூடும்.. ஏற்க முடியாமலும் போகலாம் ’
படித்து பாருங்கள்….
********************************************************************************
அன்பு நண்பருக்கு,
முதலில் தாமதமான பதிலுக்கு வருந்துகிறேன். நான் தொலைபேயில் சொன்னது போல், வேலை அதிகம்.
ஆதாரக் கருத்தில் எந்த மாற்றமும் முரணும் இல்லை. இந்தப் படத்தின் இன்ஸ்ப்ரேஷன் இதுவென மிஷ்கின் டைட்டிலில் போட்டிருக்க வேண்டும். அதில் மாற்றுக் கருத்து இல்லை.
ஆனால், மிஷ்கின் போன்ற ஒரு கலைஞனை நாம் போற்றித்தான் ஆக வேண்டும்.
இதுவரை வெளிவந்த மிஷ்கினின் மூன்று படங்களுமே அற்புதமானவை. காட்சிகளில் குறியீடுகள் அதிகம் கவனம் செலுத்துபவை.
சித்திரம் பேசுதடி ஒரு சாதாரண காதல் படம் என்று கடந்து விட முடியாது. ஒவ்வொரு காட்சியிலும் இயக்குனர் யார் என்ற கேள்வி எழுந்து கொண்டே இருக்கும் படியான காட்சியமைப்புகள் இருக்கும். சாலைகள், கால்கள், அப்பா, நேரெதிர் குணங்கள். வில்லன் கதாபாத்திரத்திற்குள்ளும் இருக்கும் நெகிழ்வும் நேர்மையும்.
இறுதிக் காட்சியில் வில்லன் தண்டபானி கத்திகுத்துப் பட்ட நரேனைப் பார்த்து ‘டேய் இவ உன் காதலின்னு முதல்லயே சொல்லி இருக்கக்கூடாதா’ எனும்பொழுது நமக்குள் சட்டென ஒரு நெகிழ்வு ஏற்படும்.
அஞ்சாதே..
இந்தப் படம் தமிழ் படங்களில் மிக முக்கிய ஒன்று. பரந்து விரிந்த வானத்தைக் கோணலாக காட்டி, கட் ஷாட் ஏதுமில்லாமல் இறக்கியது தமிழுக்குப் புதுசு.
நாயகனை அறிமுகம் செய்யும்பொழுது காலைக் காட்டுவது எல்லா கமர்சியல் படங்களிலும் இடம்பெறும். ஆனால் இப்படத்தில் வெற்றுக்காலுடன் ஆட்டோவில் தலைகீழாய் என , ஒற்றை ஷாட்டில் அவனுடைய கேரக்டரை உணத்திப் போகும் பாங்கு மிஷ்கினிடம் நிறையவே இருக்கும்.
படம் நெடுக குறியீடுகள் மட்டுமே. மிருகம் போன்ற பார்வை, முடி, நடை, நடுவிரலை விலக்கி வைத்தே நீரோ,பீரோ அருந்தும் பிரசன்னா.. கால் ஊனமான வில்லனின் குடும்பம்.. அவன் சாவு ஏற்படுத்தும் தாக்கம்.. போலிஸ் ஸ்டேஷனை அப்படியே காட்டிய காட்சிகள் என அஞ்சாதே குறித்து அடுக்கிக் கொண்டே போகலாம்.
அப்படியான ஒரு திறமையான ஒரு இயக்குனர்தான் மிஷ்கின். நேற்று முளைத்து, இன்று டிவிடி திருடி நந்தலாலாவை வெளியிட்டுவிடவில்லை. சித்திரம் பேசுதடி, அஞ்சாதே, யுத்தம் செய், நந்தலாலா என பாரதியார் வார்த்தைகளைத் தேர்ந்தெடுக்கும் பாணி.
தீக்குள் விரலை வைத்தால் நந்தலாலா! நின்னைத் தீண்டு மின்பந் தோன்றுதடா, நந்த லாலா! ஈறு கெடாத எதிர்மறைப் பெயரச்சம் இது. அகண்ட விசயத்தை இறக்கி வைக்க பாரதியார் தேர்ந்தெடுத்த வார்த்தை நந்தலாலா..
சுவரை உரசும் கரங்கள், அதே சுவரை உரசும் தாய்மைக் கால்கள். லாங் ஷாட்டிலும் க்ளோஷப்பிலும் முதலில் தெரிவது கால்கள், பூச்சியோ, மரமோ, மனிதனோ,.. தெரிவது கால்களே.. கால்கள் கொள்ளும் பயணமே வாழ்க்கை.. என குறியீடுகளை நம்பும் மிஷ்கினின் நந்தலாலா என்ற வார்த்தைப் பிரயோகமும் இது தத்தெடுத்த பிள்ளை எனவே நந்தலாலா எனும் குறியீடாயும் இருக்கலாம்.
ஒற்றை வார்த்தையில் நன்றி என ஜப்பானியத் திரைப்படம் குறித்துப் போட்டிருந்தால் உங்களின் அதிருப்தி திருப்தியாக மாறி இருக்குமா எனில் ஐயமே.
தோள்கண்டேன் தோளே கண்டேன், தோளில் இரு கிளிகள் கண்டேன்.. கிளிகள் என்ன என்பது கண்ணதாசருக்குத் தெரியும்.. கம்பர் சொன்ன தோள்கண்டார் தோளே கண்டார் வேறு.. ஆனாலும் அதன் தாக்கம் இது.
அதற்காக கம்பருக்கு நன்றி சொல்ல வேண்டிய கட்டாயம் இல்லை. தாக்கத்தில் எழும் படைப்புகளே படைப்புகள். எந்த ஒரு தாக்கமும் இல்லாமல் சாப்பிட்டுத் தூங்கி, எழுந்ததும் பேனாவைத் திற்ந்து பின்னால் சொருகி எழுதப்படுவதில்லை எந்தவொரு படைப்பும்.
நீங்கள் நான் உட்பட எழுதும் அனைவரும் ஏதேனும் ஒரு தாக்கம் தந்த பாதிப்பிலேயே எழுதுகிறோம்.
என் கிராமத்தில் இருக்கும் அத்தனை மனிதர்களின் பாதிப்புகளே என் கதைகள்.
எழுதும் விதத்தில் வித்தியாசப்பட்டு நிற்கிறோம்.
டைட்டில் கார்டில் அவர் ’நன்றி ‘ போட்டிருந்தாலும், குறை என நிறையச் சொல்லி இருப்பார்கள். ஏனெனில் இங்கே, தழுவல், திருட்டு, காப்பி எனும் குரல்களில் அத்தனையும், நாங்கள் உலகமொழிப்படம் பார்க்கும் அறிவுஜீவிகள் எங்களை ஏய்க்க முடியாது எனும் குரலாகவே ஓங்கி ஒலிக்கிறதேயொழிய, இரு படங்களுக்குமான ஆதார வேற்றுமைகளையும் மிஷ்கின் கையாண்ட நேர்த்தியையும் நோக்கும் நோக்கம் இருப்பதாகப் படவில்லை.
எல்லாப் பேட்டிகளிலும் ஜப்பான் படம் குறித்து அவர் கூறிக்கொண்டுதான் இருக்கிறார்.
ஒரு படைப்பாளியாக நீங்கள் கேட்ட அதே மனநிலையில் இதற்கு பதில் சொல்ல வேண்டுமெனில், ஆம் கிகுஜிரோவின் பாதிப்பு என்று டைட்டிலில் அவர் போட்டு இருக்க வேண்டும்.
என்னளவில், கிகுஜிரோவை பலமடங்கு தாண்டியது நந்தலாலாவின் உயரமும் குறியீடுகளால் நிறைந்த காட்சிகளும்.
நன்றி.
அன்புடன் நர்சிம்
விரிவான அலசல் தெளிவான பதில்.
ReplyDeleteஇப்படி ஒரு விரிவான பார்வையா..?? அருமையிலும் அருமையுங்க... அவர் தழுவல் படம் எடுத்திருந்தால் ஆரம்பத்திலெயெ மெதுவாக சொல்லிச் செய்திரந்தால் அவருடைய செதுக்கல் திறமையை ஏற்றுக் கொண்டிருப்பார்கள்.. இப்போது அவர் திறமையையே சந்தேகப்படும் படி செய்து விட்டாரே...
ReplyDeleteவிரிவான அலசல் தெளிவான பதில்”
ReplyDeleteநீங்களும் ஒரு படைப்பாளி என்ற முறையில் இதை ரசித்து இருக்கிறீர்கள் என நினைக்கிறேன்
//டைட்டில் கார்டில் அவர் ’நன்றி ‘ போட்டிருந்தாலும், குறை என நிறையச் சொல்லி இருப்பார்கள். ஏனெனில் இங்கே, தழுவல், திருட்டு, காப்பி எனும் குரல்களில் அத்தனையும், நாங்கள் உலகமொழிப்படம் பார்க்கும் அறிவுஜீவிகள் எங்களை ஏய்க்க முடியாது எனும் குரலாகவே ஓங்கி ஒலிக்கிறதேயொழிய, இரு படங்களுக்குமான ஆதார வேற்றுமைகளையும் மிஷ்கின் கையாண்ட நேர்த்தியையும் நோக்கும் நோக்கம் இருப்பதாகப் படவில்லை//
ReplyDeleteஅருமையான விளக்கம்!
"அவர் தழுவல் படம் எடுத்திருந்தால் ஆரம்பத்திலெயெ மெதுவாக சொல்லிச் செய்திரந்தால் அவருடைய செதுக்கல் திறமையை ஏற்றுக் கொண்டிருப்பார்கள்.."
ReplyDeleteஅப்படி சொல்ல ஆரம்பித்தால் ஒவ்வொருவரும் பல விஷயங்களால் பாதிக்கப்பட்டு இருப்பார்கள்.. எல்லாவற்றையும் சொல்ல முடியாது என்கிறார் நர்சிம்..
சொல்லி செய்திருக்க வேண்டும் என்பதே என் கருத்து..
”அருமையான விளக்கம் “
ReplyDeleteபடைப்பாளி என்ற முரையில் அதை ரசித்து இருக்கிறிர்கள் என நினைக்கிறேன்
நர்சிம்மின் விளக்கம் சிறப்பு.
ReplyDeleteஒன்றில் இருந்து மற்றொன்று இது நிதர்சனம்... உங்கள் தலைப்பிலேயே அதை அழகா சொல்லி இருக்கிறீர்கள்....
ReplyDeleteஇப்படியும் ஒரு தெளிவான விளக்கம் கொடுக்க முடியுமா...?! படத்தினை பற்றிய மதிப்பு இன்னும் அதிகரிக்கிறது...
தெளிவான அலசல்.
ReplyDeleteமிகத் தெளிவான பார்வை. நர்சிம் நச்!. ஒரு விஷயம் தொடர்பான உங்கள் தேடுதல் பிரமிக்க வைக்கிறது. இந்த குணம் உங்களை இன்னும் உயரத்தில் சேர்க்கும் பார்வையாளன்.
ReplyDeleteஉங்கள் தேடுதல் பிரமிக்க வைக்கிறது. இந்த குணம் உங்களை இன்னும் உயரத்தில் சேர்க்கும் பார்வையாளன்"
ReplyDeleteநாம் தேட தேடத்தான், நாம் தெரிந்து கொள்ள வேண்டியவை இன்னும் நிறைய இருப்பது தெரிய வரும்
”ஒன்றில் இருந்து மற்றொன்று இது நிதர்சனம்.”
ReplyDeleteஒன்றில் இருந்து மற்றொன்றை படைக்க அசாத்திய திறன் வேண்டும்..
ஆப்பிள் விழுவதை எல்லோரும் பார்த்தாலும், ஒருவருக்குத்தானே புவி ஈர்ப்பு விசை என்பது தோன்றியது
நர்சிம்மின் விளக்கம் சிறப்”
ReplyDeleteகண்ணதாசன் உதாரனம் எப்படி ?
தெளிவான அலசல்”
ReplyDeleteஇதற்காக நேரம் ஒதுக்கி எழுதினார் அவர்
ஒரு படைப்பாளியாக தங்கள் கருத்தை ஏற்றுக் கொள்கிறேன். அதேசமயம் நர்சிம் அவர்களின் கட்டுரையும் சிறப்பாகவே உள்ளது!
ReplyDelete// நான் வேலைக்கு சேர்ந்த புதிதில், ஒரு டிசைனை உருவாக்கிய பெயரை என் சீனியரிடம் இழந்து வருந்தி இருக்கிறேன் //
ReplyDeleteநானும் இதே சூழ்நிலையை கடந்திருக்கிறேன்...
மிஷ்கினின் முந்தய படங்கள் கூட காப்பி தானே...
தவறாக எடுத்துக்கொள்ள வேண்டாம்... உங்களிடம் படத்திற்கு வர நேரமில்லை என்று கூறியிருந்தேன்... ஆனால் மற்றொரு பதிவுலக நண்பர் எனக்கு போன் செய்து வற்புறுத்தி அழைத்தமையால் இன்று அவருடன் படம் பார்க்க இருக்கிறேன்...
ReplyDeleteநன்றி எஸ் கே
ReplyDelete@ பிரபாகரன் . பரவாயில்லை சென்று வாருங்கள் . அன்று என்னுடன் வந்திருந்தால் வித்தியாசமான அனுபவம் கிடைத்திருக்கும் . பரவாயில்லை . பார்த்துவிட்டு கருத்தை சொல்லுங்கள்
ReplyDelete@ பிரபாகரன் . அதை காப்பி என சொல்ல கூடாது என்பதே நர்சிம் வாதம் .
ReplyDeleteமிஷ்கினுக்கு வாய் கொஞ்சம் அதிகம் தான் ஆனால் இதையேன் காப்பி காப்பி என்று அவரை மட்டம் தட்டுகின்றனர்.???
ReplyDeleteஅவர் திறமையற்றவர் என கருதுகின்றனரா.???
அவர் புகழ்ச்சியில் வருத்தம் கொள்கின்றனரா.???
கிகுஜிரா பாக்காத எத்தனையோ பேருக்கு இது ஒரு பெரிய நெகிழ்வு அல்லவா.???
இதை காப்பி காப்பி என்று சொல்லி அனைவருக்கும் கிடைக்கவேண்டிய அனுபவத்தை தடுக்கின்றனரே..
இப்படி பல கேள்விகளுடன் இருந்தன்..
இங்கே ஒரு விரிவான அலசலை கண்டேன்..
தங்களை அறிமுகபடுத்திய தமிழ்மணத்திற்கு நன்றி..
இங்கும் வாருங்கள் நண்பரே...
http://kirukaninkirukals.blogspot.com/
http://ram-all.blogspot.com/
தெளிவான பதிலகள்..........
ReplyDeleteஅருமையான அதேநேரம் விரிவான ஒரு விளக்கம். என் மனது கேட்ட சில கேள்விகளுக்கு சில பதில்கள் யோசிக்கவைத்துள்ளன.
ReplyDeleteஇங்கும் வாருங்கள் நண்பரே.”
ReplyDeleteவந்து பார்த்தேன்... என் கருத்துக்க்ளை பதிந்து இருக்கிறேன்
”என் மனது கேட்ட சில கேள்விகளுக்கு சில பதில்கள் யோசிக்கவைத்துள்ளன ”
ReplyDeleteதேடல் இருந்தால் கண்டிப்பாக பதில் கிடைத்தே தீரும்
ழிப்போக்கன் - யோகேஷ் said...
ReplyDeleteதெளிவான பதிலகள்.......”
ஆம்.. அவர் மேலோட்டமாக பதில் அளிக்க விரும்பாமல், சற்று தாமதம் ஆனாலும் தீர்க்கமாக யோசித்தே பதில் அளித்தார்
i agree with what narsim said
ReplyDelete"i agree with what narsim said "
ReplyDeletenot agreed with my points ? :-(
நந்தலாலா ..........நொந்தலால.........
ReplyDeletegood one.
ReplyDeleteநர்சிம் சரியாகச் சொல்லியிருக்கிறார். திருக்குறளைப் பாரதியார் உட்பட பலரும் எடுத்தாண்டு இருக்கிறார்கள்.
ReplyDeleteஆதிகாவியம் என்று நாம் பெருமைகொள்ளும் 'ராமாயணம்', (கேரக்டர்கள், சம்பவங்கள் உட்பட) கிரேக்கக் காவியங்களான 'இலியட்-ஒடிஸ்ஸி'யின் தழுவலா? தாக்கமா?
It's in the eye of the beholder.
HOPPITHOPPI said...
ReplyDeleteநந்தலாலா ..........நொந்தலால.""
ஏன் ஏன் ஏன்
ஆதிகாவியம் என்று நாம் பெருமைகொள்ளும் 'ராமாயணம்', (கேரக்டர்கள், சம்பவங்கள் உட்பட) கிரேக்கக் காவியங்களான 'இலியட்-ஒடிஸ்ஸி'யின் தழுவலா? தாக்கமா? “
ReplyDeleteஇது என்ன புது குழப்பம் ?
SurveySan said...
ReplyDeletegood one.”
அவரிடம் சொல்லி விடுகிறேன்
புதுக்குழப்பம் ஒன்றும் இல்லை. பலரும் சுட்டிக்காட்டுவதுதான். என்னுடைய 'நாடோடித்தடம்' என்னும் நூலில் ஒரு கடிதத்தின் பகுதி இது:
ReplyDeleteSome people say that 'Ramayana' is an imaginary story. And some people say that it is based on history. I would like to say that it is an imaginary portrayal of historical incidents. Poets need not to stick to history. They can make a make-believe history.
Lifting somebody's wife, due to love or enmity, had happened all through the ages, not only in India but all over the world. It happens even today. It simply shows that, even now, the women are accounted nothing better than objects - pleasure giving objects.
Ramayana has every possibility to take it as a make-believe history. There might have been an actual incident in which an aborigine lifted the wife of a civilized man. And the civilized man with the help of tribal men rescued his wife. But the characterization of the epic has the influence of the Greek epics ‘Iliad’ & ‘Odyssey’. Sita is characterized after the chaste Penelope, but the abduction is modeled after Helene, Briseis and also Priest Chryses' daughter. Stringing the Great Bow takes place in the palace of Ithaca by the suitors of Penelope. Achilles and Ulysses are combined to be Rama. Other good qualities of Rama, apart from bravery, is solely Valmiki's work. A man to have only one wife is a later morality of mankind. Hector is shaped as Indrajit and Patrocles as Lakshmana. Anybody who has read Homar's works can easily see the similarities. Inspired by the epics of Homer, Valmiki might have decided to write an epic in Sanskrit to boost the ethics of his native land.
But being Indians we should propose the reverse, i..e. Homer might have been inspired by Valmiki. But alas! Valmiki is a genuine poet and, true to his spirit, he didn't give us chance to boost our false prestige. He had set his story in Iron Age, whereas ‘Iliad’ is set in Bronze Age. Whoever decided to do some forgery, like inserting jaataka in Ramayana, didn't have the brain to push back the story to Stone Age. That is because the forgery makers had no chance of learning time history in their days.
புதுக்குழப்பம் ஒன்றும் இல்லை. பலரும் சுட்டிக்காட்டுவதுதான் "
ReplyDeleteஎன்னைப்ப்பொன்ற பலருக்கு இது புதிய செய்தி
உலக திரைப்படம் பார்த்து விமர்சிக்கும் intellectual பெண் இல்லாத சராசரி ரசனை உள்ள வெகு சராசரி பெண் நான்...இந்த படம் காப்பி அடித்து எடுக்கபட்டதாங்க்றது எனக்கு பிரச்சனையே இல்லை...எனக்கு ரசித்தது..நெகிழ வைத்தது..என் மொழியில்..என் கலாச்சாரத்தில் மெனக்கெட்ட மிஸ்கின் னுக்கு வாழ்த்துக்கள்...
ReplyDeleteஅப்புறம்...
//ஒரு படைப்பை காப்பி அடித்தல் என்பதற்கும் , ஒரு படைப்பின் பாதிப்பில் இருந்து ஒரு படைப்பை உருவாக்குவதற்கும் நுண்ணிய வேறுபாடு உண்டு.. //
உண்மை..உண்மை...மணிரத்னத்தின் ராவணா,தளபதி எல்லாமே ஒரு படைப்பின் பாதிப்பா..இல்லை அந்த கதையை அப்படியே நம் கலாச்சாரத்திற்கு மாத்திய படைப்பானு இந்த சிறுமூளைக்கு இன்னும் தெரில...அப்படி இருந்தாலும் மணி சார் க்கு மிஸ்கினு எழும் எதிர்ப்பு போலே கண்டனம் பெருசா எழுப்புவாங்கலானு தெரில..ஏனால் அவரும் நன்றி ராமாயணம்,மகாபாரதம் னு நன்றி கார்டு போடவே இல்லயே..மிஸ்கின் நன்றி னு போடாததுக்கு அந்த ஜப்பான் மொழி கதை ஆசிரியர் கவலைப்படட்டும்...நாம் அழகான கவிதை படத்தை தமிழ் இல் கொடுத்த நம் சக தமிழனை பாராட்டுவோம்...:)))
..அப்படி இருந்தாலும் மணி சார் க்கு மிஸ்கினு எழும் எதிர்ப்பு போலே கண்டனம் பெருசா எழுப்புவாங்கலானு தெரில"
ReplyDeleteமணிரத்னம், கமல் போன்றோர் விமர்சனத்துக்க்கு அப்பாற்படட்வர்கள்
புரிந்துணர்விற்கும், மிக நல்ல முறையில் பதிந்ததற்கும் மிக்க நன்றி நண்பரே.. மகிழ்வாக இருக்கிறது.
ReplyDeleteநண்பர் சர்வேசனின் இன்றைய மிஷ்கின் பேட்டி பதிவும் முக்கிய ஒன்று.
அனைவரின் கருத்திற்கும் நன்றி.
நண்பர் சர்வேசனின் இன்றைய மிஷ்கின் பேட்டி பதிவும் முக்கிய ஒன்று "
ReplyDeleteஉண்மைதான்..அதைப்பார்த்து விட்டேன்..
உங்கள் விரிவான பதிலுக்கு நன்றி..
இந்த பதிவுல் நிங்கள் பயன்ப்டுத்தியுள்ள சில விஷ்யங்கள் குறித்து நேரில் சந்திக்கும்போது விவாதிக்க விரும்புகிறேன்