ஒருவர் உங்களை கோபமாக திட்டும்போது மகிழ முடியுமா?
முடியாது என்றுதான் நினைத்து வந்தேன், நேற்று பதிவர் ஆதிமூலகிருஷ்ணன் என்னை திட்டும் வரை..
அவர் ஏன் என்னை திட்டினார்.. அவர் யாரையும் திட்டமாட்டாரே ! அதுவும் நல்லவனும், அறிவாளியும் ( ? !! ) , இலக்கியவாதியுமான (**@@ ? !! ) என்னை ஏன் திட்டினார்?..
அதுவும் பரிசளிப்பு நிகழ்ச்சியில்…?
சொல்கிறேன்..
2010ஆம் ஆண்டை நினைத்து பார்த்தால், அதில் மறக்கமுடியாத இனிய அனுபவங்களில் ஒன்று சிறுகதை போட்டி..
எனக்கு பரிசு கிடைத்தது என்பதால் மட்டும் அல்ல.. அதற்கு முன்பே அது ஒரு நல்ல நிகழ்வு , ஒரு குறிப்பிடத்தக்க சாதனை என்று என் மகிழ்ச்சியை சொல்லி இருந்தேன்..
நடத்தியவர்கள், நடுவர்கள், கலந்து கொண்டவர்கள், ஊக்கமூட்டியவர்கள், ஆதரவளித்தவர்கள்,வாசகர்கள் என அனைத்து தரப்பினரும் போற்றத்தக்க வகையில் நடந்து கொண்டது மிக மிக மகிழ்வூட்டியது..
அரசியல, சினிமா, சமூகம் என பல விஷயங்களில் மதிப்பீடுகளின் வீழ்ச்சியை பார்க்கும் நமக்கு , நல்லவர்களின் அறிமுகம் மகிழ்வூட்டியது…
இத்தனை கற்பனைகள், சிந்தனைகள், திறமைகளை , எழுத்தாளர்களின் எழுத்துக்களை பார்க்கும் போது ஒருவகை உற்சாகம் ஏற்பட்டது..
சம்பந்தப்பட்ட அனைவருமே , பங்கேற்ற அனைவருமே வெற்றியாளர்கள் என்பது என் எண்ணம்.
எனவே முடிவு வந்தவுடன் அனைவரும் ஒன்று கூடும் வகையில் ஒரு சந்திப்பு நடத்த வேண்டும் ..அதற்கு மூத்த பதிவர்கள் ஏற்பாடு செய்ய வேண்டும் என்று விரும்பினேன்.. அவர்களை வற்புறுத்தவும் நினைத்து இருந்தேன்…
நல்லதை போற்றினால்தான் நல்ல விஷயங்கள் பரவும்… பாசிடிவ் எண்ணங்கள் பரவும்..
இந்த நிலையில் எனக்கு பரிசு கிடைத்தது மிகவும் பெருமையாக இருந்தது,, நல்லவர்களின் கூட்டத்தில் ஓர் அங்கீகாரம் கிடைத்தது என்பது மிக மிக மகிழ்வூட்டும் விஷயம்..
ஆனால் , இந்த போட்டியை முன் வைத்து , சந்திப்பு ஏற்பாட்டை வற்புறுத்த முடியாமல் போய் விட்டது..
நான் பரிசு வாங்கும் நிலையில் , சந்திப்புக்கு வலியுறுத்தினால் , எனக்காக செய்வது போல் ஆகி விடும் என்பதால் தயக்கம்..
ஆனால் பரிசை தபாலில் பெற விரும்பவில்லை… முறைப்படி , ஆதியிடமே நேரடியாக பெற விரும்பினேன்…
அவரிடம் பேசி , எளிய முறையில் பரிசளிப்பு நிகழ்ச்சிக்கான நேரம் முடிவு செய்யப்பட்டது…
உண்மையிலேயே அது ஒரு நிறைவான அனுபவமாக அமைந்தது..
நேரடியாக பெற நான் முடிவு செய்தது சரியானதுதான் என்ற மகிழ்ச்சி ஏற்பட்டது…
ஃபார்மலாக , சில இனிய வார்த்தைகள் பேசி பரிசளிக்காமல் , சில விமர்சனங்களை அவர் வைத்ததுதான் இதில் ஹை லைட்..
போலியான பாராட்டை விட, உண்மையான திட்டு தான் இனிமையானது என்பதை உணர்ந்த கணங்கள் அவை…
திட்டினார் என்றால் என்னை தனிப்பட்ட முறையிலோ அல்லது கதையையோ அல்ல..
பரிசு பெற்றமைக்கு பாராட்டினார்.
தொடர்ந்து நன்றாக எழுத வேண்டும் என வாழ்த்தினார்..
ஆனால் வேறொரு விஷயத்துக்காக கடுமையாக விமர்சித்தார்..
அது பொதுவான விஷயம் என்பதால் இங்கு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்…
எழுத்தார்வம் மிக்க நான் இன்னும் கொஞ்சம் பொறுப்புணர்வுடன் நடந்து கொள்ள வேண்டும் என்பது அவர் விருப்பம்.. அந்த அடிப்படையில் சில கடுமையான விமர்சனங்கள் முன் வைத்தார்..
என் சமீபத்திய இடுகைகளில் சிலவற்றை அவர் ரசிக்கவில்லை.. விரும்பவும் இல்லை…
ஏன் விரும்பவில்லை என சரியான காரணங்களை எடுத்து வைத்தார்..
அதெல்லாம் வேறு விஷயம்…
ஆனால் எழுத்துப் பிழைகள் இல்லாமல் எழுதுவதற்கு அவர் கொடுத்த முக்கியத்துவம் சிந்திக்க வைத்தது..
பதிவுலகம் என்பதை தாண்டி சிந்திக்க வேண்டிய விஷயம் இது.
ஒரு வேலையை செய்கிறோம் முழு ஈடுபாட்டுடன் செய்ய வேண்டும்.. இல்லையேல் செய்யக்கூடாது..
வாழ்வில் நாம் பல ரோல்கள் செய்கிறோம்… வேலை, குடும்பம், எழுத்து, இயக்க ஈடுபாடு, இலக்கியம் என எவ்வளவோ..
ஒரு ரோலில் பெர்ஃபக்ஷன் இல்லாமல் இருந்து கொண்டு இன்னொரு துறையில் பெர்ஃபக்ஷன் எதிர்பார்ப்பது இயலாது..
ஓர் ஊழல் அரசியல்வாதி , நான்கு இலவச திருமணங்கள் நடத்தி , நல்ல மனிதன் ஆக முடியாது..
ஒன்றின் குறை , இன்னொன்றை பாதிக்கும்…ஒன்றில் கிடைக்கும் நிறைவு இன்னொன்றையும் சிறப்பாக்கும் என்பது என் புரிதல்…
எழுத்துப் பிழையின்றி எழுத கூடுதல் உழைப்பை கொடுக்குமாறு சொல்ல ஆதிக்கு முழு தகுதி இருக்கிறது என்று என்னால் உறுதியாக சொல்ல முடியும்…
அவர் பணி புரியும் நிறுவனத்தில் சில காலங்கள் வியாபார தொடர்பு கொண்டு இருந்தேன் என்ற முறையிலும், அவர் பணி என் முந்தைய பணிக்கு தொடர்புடையது என்பதாலும் , அதில் இருக்கும் பணிச்சுமை எனக்கு நன்கு தெரியும்…
அப்படி இருந்தும் கூட சற்றும் குறையில்லாமல் போட்டியை நடத்தி முடிக்க , அவர் கொடுத்த உழைப்பு பிரமிக்கத்தக்கது…அந்த ஈடுபாடுதான் முக்கியம்…
ஒரு வேலை செய்கிறோம் என்றால் அதில் முழு ஈடுபாடு காட்ட வேண்டும் என்பதை அவர் செய்து காட்டிவிட்டதால், நானும் ஏற்க வேண்டியதுதான்..
எழுத்தின் மூலம் நம்மை எப்படி வெளிப்படுத்திக்கொள்ள விரும்புகிறோம் என்ற அம்சத்திலும் அவர் தீவிரமாக சில கருத்துக்களை முன் வைத்தார்..
இதை எல்லாம் பார்க்கும்போது எழுத்திலும் , தமிழிலும் , ஓர் ஆரோக்கியமான சூழலை உருவாக்குவதிலும் அவருக்கு இருக்கும் அக்கறை புரிந்தது..
இல்லை என்றால் முதல் முறை சந்திக்கும் என்னிடம் இவ்வளவு பேசும் அவசியம் அவருக்கு இல்லை…
ஒரு நல்லவரை பார்த்த மகிழ்ச்சியுடனும், சிறுகதை போட்டி என்று அல்ல.. எதை செய்தாலும் பரிசல்-ஆதி கூட்டணி சிறப்பாக செய்யும் என்ற நம்பிக்கையுடனும் விடைபெற்றேன்..பின் குறிப்பு .. அதன் பின் பரிசல் காரனுக்கும் போன் செய்து நன்றி தெரிவித்தேன்..
ஆனால் இதுவரை நடுவர்கள் யாருக்கும் நன்றி சொல்லவில்லை..தொடர்பு கொள்ளவும் இல்லை... பரிசளித்ததற்கு நன்றி சொலவது போல ஆகி விடும் என்பதால்..
ஆனால் அவர்கள் செய்த பணி பாராட்டுகுரியது என்பதால், இதன் மூலம் பாராட்டுக்களை தெரிவித்து கொள்கிறேன்
வழங்கப்பட்ட பரிசு
பரிசளிப்பவர் : ஆதியின் புதல்வர்
பரிசு பெறுபவர் : உங்கள் நண்பன் பார்வையாளன் ( தன்னடக்கம்- ஹி ஹி )
ஒளி ஓவியம் : ஆதி
வாழ்த்துக்கள்! :-)
ReplyDeleteநன்றி ஜீ
ReplyDelete//ஒரு வேலை செய்கிறோம் என்றால் அதில் முழு ஈடுபாடு காட்ட வேண்டும் என்பதை அவர் செய்து காட்டிவிட்டதால், நானும் ஏற்க வேண்டியதுதான்..//
ReplyDeleteஉண்மை .... பகிர்வுக்கு நன்றி. வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள் நண்பரே
ReplyDeleteவாழ்த்துக்கள் நண்பரே
ReplyDeleteநன்றி அன்பரசன்
உண்மை .... பகிர்வுக்கு நன்றி. வாழ்த்துக்கள்
ReplyDeleteநன்றி சரவணன் சார்
வாழ்த்துக்கள் பார்வையாளன். ஆதி சொன்னது அனைத்தும் உண்மை.
ReplyDeleteஇப்ப நான் உங்களுக்கு வாழ்த்து சொன்னேன்னா தனிப்பட்ட முறையில் உங்களைத் தெரிந்து தேர்ந்தெடுத்தேன்னு அர்த்தம் ஆயிரும்.அதுனால நோ வாழ்த்து :))
ReplyDeleteஎனக்கு பரிசு கிடைத்தது என்பதால் மட்டும் அல்ல.. அதற்கு முன்பே அது ஒரு நல்ல நிகழ்வு , ஒரு குறிப்பிடத்தக்க சாதனை என்று என் மகிழ்ச்சியை சொல்லி இருந்தேன்..
ReplyDelete.....Thats great! Congratulations!
அப்துல்லா சார் , இதே காரணத்தால்தான் நடுவர்கள் யாருக்கும் நான் நன்றி சொல்லவில்லை . தொடர்பு கொள்ளவும் இல்லை :-)
ReplyDeletethank u madam
ReplyDeleteநன்றி கனாகாதலன்
ReplyDeleteஉங்க பிளாக் டைட்டில் ஓப்பன் ஆனது முதலில் அடுத்து ஆதியோட போட்டோ வந்துச்சு..என்னடா ஆதிய இப்படி திட்டுறீங்களேன்னு நினைச்சு ஒரு நிமிடம் சந்தோசப்பட்டுவிட்டேன்:)))
ReplyDelete//தமிழிலும் , ஓர் ஆரோக்கியமான சூழலை உருவாக்குவதிலும் அவருக்கு இருக்கும் அக்கறை புரிந்தது..
இல்லை என்றால் முதல் முறை சந்திக்கும் என்னிடம் இவ்வளவு பேசும் அவசியம் அவருக்கு இல்லை…
//
ரொம்ப நாளா ஒரு காது கிடைக்காம இருந்திருக்கிறார். நீங்க வசமா போய் சிக்கியதும் போட்டு கும்மு கும்முன்னு கும்மியிருக்கிறார்.
//எழுத்தார்வம் மிக்க நான் இன்னும் கொஞ்சம் பொறுப்புணர்வுடன் நடந்து கொள்ள வேண்டும் என்பது அவர் விருப்பம்.. //
ReplyDeleteஇந்த பெருசுங்களே இப்படிதான் பாய்...அதுங்க செய்ய முடியாததை நம்ம மாதிரி யூத்தை புடிச்சு வெச்சிக்கிட்டு அட்வைஸ் உட்டுக்கினே இருக்குங்க...கண்டுக்காதீங்க.
//பெர்ஃபக்ஷன் இல்லாமல் இருந்து கொண்டு இன்னொரு துறையில் பெர்ஃபக்ஷன் எதிர்பார்ப்பது இயலாது..
ReplyDelete//
இப்ப முடிவா என்ன சொல்றீங்க...ஆதியை இனி பதிவு எழுதக்கூடாதுன்னு தானே சொல்லவருகிறீர்கள்:))
ஆதி கேட்டுக்கய்யா.
ஓவர் செண்டிமெண்டா இருக்குதே.. :-))
ReplyDeleteஇருந்தாலும்.. வாழ்த்துகள்.!
@குசும்பன்,
ReplyDeleteஅதென்னவோ சரிதான் மாமா.
வாழ்த்துக்கள் நண்பரே
ReplyDelete@வெறும்பய thankyou boss
ReplyDelete@ஆதி
ReplyDeleteநான் சொன்னது குறைவுதான்
@குசும்பன்
ReplyDeleteஅப்ப நம்ம பாணியை மாத்த வேண்டாம்ங்கிறீங்க
சூப்பர்
பார்வையாளான் ஆகிய நீர் எங்களை ஏன் தங்கள் முகத்தை பார்க்கவிடாமல் செய்துவிட்டீர் .ஆனாலும் என்னுடைய வாழ்த்துக்கள்
ReplyDelete@மணிவண்ணன்
ReplyDeleteதன்னடக்கம் ..ஹி ஹி
Congrats
ReplyDeletevaazhthukal
ReplyDeletemullaiamuthan
http://kaatruveli-ithazh.blogspot.com/
குனிஞ்சிட்டு இருக்குற ஃபோட்டோல உம்ம தொப்பை தெரியுதுங்காணும்... பாத்து சூதானமா நடந்துக்கிடுங்க :)))))
ReplyDeleteபோட்டோல உம்ம தொப்பை தெரியுதுங்காணும் "
ReplyDeleteஅடடா..அதை மறைக்க மறந்துட்டேனே....
middleclassmadhavi said...
ReplyDeleteCongrats
மாதேவி said...
வாழ்த்துக்கள்.
*******************************
நன்றி நன்றி