Saturday, December 11, 2010

பதிவுலகை கலக்கும் மூட நம்பிக்கைகள் - விளக்கங்கள்

ஒரு  ooril  ஒரு சாமியார் இருந்தார்..
ஒரு நாள் பூஜை செய்யும் போது, பூனை ஓன்று தொந்தரவு செய்து  கொண்டே இருந்தது...எரிச்சலடைந்த அவர் , பூனையை அருகில் இருந்த தூணில் கட்டி வைத்து விட்டு தன்  வேலையை தொடர்ந்தார்..
வழ க்கம்போல தாமதமாக வந்த சீடன் பூனை கட்டப்பட்டு இருப்பதை பார்த்து குழம்பினான்..
விளக்கம் கேட்பதற்குள் சாமியார் வெளியூர் போய் விட்டார்..
அதன் பின் அந்த பூஜை செய்யும் வேலை , சீடனுக்கு வந்து சேர்ந்தது..
சாமியார் செய்தபடியே செய்ய நினைத்த அவன், தெருவில் , தன் இணையுடன் டூயட் பாடிக்கொண்டு   இருந்த பூனையை வலு கட்டாயமாக பிடித்து வந்து தூணில் கட்டி வைத்து விட்டு, அதன் பின் பூஜை செய்தான்...
நாளடைவில் இது ஒரு நடைமுறை ஆகிவிட்டது..
அந்த ஊரில் இருந்த பூனைகள் எல்லாம் வெளியூருக்கு ஓடி   போய் விட்டன.. அப்படி இருந்தும தேடி பிடித்து கொண்டு வந்து கட்டுவது ஒரு செயல் முறை ஆகிவிட்டது..
கொஞ்ச நாள் கழித்து திரும்பி வந்த சாமியார், தன் சீடர்கள் புதிதாக ஏதோ செய்வதை பார்த்து அசந்து விட்டார்.. விளக்கம் கேட்க கூச்சப்பட்டு , அவரும் பூனை கட்டும் முறையை தொடர ஆரம்பித்தார் ..

இப்படித்தான் நம்பிக்கைகள் உருவாக்கி நிலை பெறுகின்றன...
பதிவுலகில் இப்படிப்பட்ட நம்பிக்கைகள் அதிகம்...
அதில் பல தவறானவை ..
 பல ஆண்டுகள் ஆராய்ச்சிக்கு பின் , நாம் கண்டுபிடித்தவற்றை  பொதுநலன் கருதி வெளியிடுவதில் பெருமை படுகிறோம்..
 *****************************
1 ஞாயிற்று கிழமை பதிவிட கூடாது.. யாரும் படிக்க மாட்டார்கள்..
            ஊரில் இருக்கும் எல்லா நிறுவனங்களிலும் கம்ப்யூட்டர் பயன்படுத்துவது போலவும், அந்த நிறுவனங்களில் இருப்பவர்கள் , முழு நேர வேலையாக பதிவுகளை பார்வையிடுவதாகவும் நினைத்து கொண்டு எழுந்த நம்பிக்கை இது..

       யார் இதை கிளப்பி விட்டது..
                 மென்பொருள் துறை பதிவர்கள்..  தம்மை போல பிறரை நினைத்து இப்படி ஒரு மாபாதகத்தை செய்தனர்..

உண்மை நிலை :
                                 மென்பொருள்  துறையில் இல்லாத பதிவர்கள்தான் அதிகம்.. இவர்களுக்கு நிறுவனங்கள் லப் டாப் கொடுத்து விடும்...
 விடுமுறை நாட்களில் , லேப் டாப்பை வைத்து கொண்டு வீட்டு வேலை செய்வதில் இருந்து தப்பிப்பது இவர்கள் யுக்தி...
        எனவே ஞாயிறு அன்றுதான் அதிகாமான பதிவுகள் பார்வையிடப்படுகின்றன...


2  காலை 9  மணியில் இருந்து மாலை 5 மணிக்குள் பதிவிட்டால் பலர் படிப்பார்கள்..
    பள்ளிக்கால பசுமை நினைவுகளால் எழுந்த நம்பிக்கை இது..

கிளப்பியது யார் : அரசு வேலை பார்க்கும் பதிவர்கள்

உண்மை நிலை:

இப்போதெல்லாம் யாரும் சரியான நேரத்துக்கு அலுவலகம் செலவ்தில்லை.. செல்வது போல கணக்கு காட்டுவது எளிதாகிவிட்ட நிலையில், இது தேவை அற்றது..
பாத்து மணிக்கு வந்து சேர்ந்து, தூங்கி எழுந்து, டி வடை சாப்பிட்டு , வேலையை ஆரம்பிக்கவே , மாலை ஐந்து மணி ஆகி விடும்.. அப்புறம் எப்படி வீட்டுக்கு போவது..
ஐந்து மணிக்கு மேல்தான் வேலையை ஆரம்பிப்பார்கள்...  அவ்வப்போது பதிவுகளையும் பார்ப்பார்கள்.. எழுதுவார்கள்..
இந்த நேரத்தில் மற்ற நாட்டை சேர்ந்தவர்களும் பணியை ஆரம்பிப்பார்கள்... (அவர்கள் நம்மை போல அல்ல )

எனவே மாலை நேரத்துக்கு மேல்தான் நல்ல நேரம்..

3 அவ்வபோது புரட்சிகர கருத்துக்களை எடுத்து வைத்தால் , மக்கள் மனதில் ஓர் இடம் கிடைக்கும்,,,

கிளப்பியது யார் : அதிகம் படிப்பவர்கள்

உண்மை நிலை :
இன்டர்நெட் யுகத்தில் எல்லோருமே நெட்டில் படிக்க ஆரம்பித்து விட்டதால், எல்லோருக்குமே புரட்சிகர கருத்துக்கள் தெரிந்து விட்டன... எனவே இப்படி பேசினால் யாரும் நம்புவதில்லை

4 எல்லோருடைய எழுத்தையும் பாராட்டினால் நம்மையும் பாராட்டுவார்கள்...

கிளப்பியது யார் : படிக்காமல் பின்னூட்டம் இடுவோர் சங்கம்...
உண்மை நிலை : சில நேரங்களில் எழுதியவருக்கே தான் எழுதியது பிடிக்காது... அப்போது போய் நாம் பாராட்டினால், நம் அறிவின் மீது அவருக்கு சந்தேகம் வந்து விடும்

5 "அந்த " எழுத்தாளரை நட்பாக்கி கொண்டால் , நம்மை பிரபல படுத்துவார்

கிளப்பியது யார் : இலக்கிய பதிவர்கள்..

உண்மை நிலை : வெளிநாட்டு சரக்கு என லோக்கல் சரக்கை கொடுத்து ஏமாற்ற நினைத்த பதிவரை , நேரடியாக கேட்ட வார்த்தையில் திட்டி தீர்த்தார்.. இதனால் அவரை நட்பாக்கும் முயற்சி தோற்றது..

இந்த ஐடியா வேலைக்கு ஆகாது.,..
இந்த எழுத்தாளரும், போட்டி எழுத்தாளரும் ஒருவரை ஒருவர் பிரபலபடுத்தி கொள்வார்களே தவிர, பதிவர்களை பிரபலபடுத்த மாட்டார்கள்..
அவர்களுக்குள் கனவான் ஒப்பந்தம் இருக்கிறது...
6 கண்ணை மூடிக்கொண்டு எல்லா பதிவுகளுக்கும் மைனஸ் ஒட்டு போட்டுவிட்டால், நம் பதிவு பிரபலமாகி விடும்

கிளப்பியது  யார் : காசு வாங்கி கள்ள ஊட்டு போடுவதை சைட்  தொழிலாக வைத்து இருக்கும் பதிவர்கள்
உண்மை நிலை :  ஒருவர் மைனஸ் வாங்கினால் மட்டும் போதாது... நாமும் பிளஸ் வாங்க    வேண்டும்... எனவே இந்த ஐடியா செல்லாது... செல்லாது

7 புரியாமல் எழுத வேண்டும்

கிளப்பியது யார் : விபரம் புரியாதவர்கள்

உண்மை நிலை : பிரபஞ்ச சிறகை கட்டிக்கொண்டு, உலகில் பார்ப்பவன், பிரக்ஞையின் பிதற்றல், படிமங்களின் தரிசனம் என்றெல்லாம் எழுதினால் ஆரம்பத்தில் எல்லோரும் பாராட்டுவார்கள்..
ஆனால் காலப்போக்கில் , ஒரே பதிவை மீண்டும் மீண்டும் படிப்பது போல ர்ஹோன்ற ஆரம்பித்து விடும்..
தவிர , பிரபல எழுத்தாளர்களே இப்படி எழுத ஆரம்பித்து  விட்டதால், பதிவர் என்ற அடையாளம் கிடைக்காமல் போய் விடும்..

8 உலக திரைப்படங்களுக்கு விமர்சனம் எழுத வேண்டும்

கிளப்பியது யார் : மலிவு விலையில், வி சி டி கிடைக்கும் இடம் தெரிந்து வைத்து இருப்பவர்கள்
உண்மை நிலை : இப்போதெல்லாம் நம் ஆட்கள் ஆங்கில படங்ககளை பார்த்துதான் எடுக்கிறார்கள்.. எனவே உலக திரைப்பட விமர்சனம் தமிழ் பட விமர்சனம் போலவேதான் இருக்கும்...


 { விரைவில் இரண்டாம் பாகம் )

39 comments:

  1. //இந்த எழுத்தாளரும், போட்டி எழுத்தாளரும் ஒருவரை ஒருவர் பிரபலபடுத்தி கொள்வார்களே தவிர, பதிவர்களை பிரபலபடுத்த மாட்டார்கள்..//

    //அவர்களுக்குள் கனவான் ஒப்பந்தம் இருக்கிறது...//

    இதை யாராவது 'அந்த' எழுத்தாளரிடம் காட்டினால், உங்களைப் 'பிரபலப்'படுத்தி விடுவார்!
    :-))

    ReplyDelete
  2. முதல் இரண்டு மூட நம்பிக்கைகள் எனது பதிவிற்கு எதிர்பதிவு போல இருக்கிறதே :)

    ReplyDelete
  3. இருக்கட்டும் மற்றவர்கள் என்ன பின்னூட்டங்கள் போடுகிறார்கள் என்று பார்ப்போம்...

    ReplyDelete
  4. விமர்சனம் என்பது வேறு - நமக்குப் பிடித்ததை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்வது என்பது வேறு!
    உலக சினிமாவை விமர்சனம் செய்யுமளவிற்கு(?!).......என்னால் தமிழ் சினிமாவை மட்டும்தான் விமர்சனம் செய்ய முடியும்!
    உலகசினிமாவில் பொதுவாக ஆங்கில மசாலா (ஹாலிவுட்) சினிமாவைச் சேர்ப்பதில்லை. ஆனால் சில ஹாலிவுட் சினிமாக்கள் உலகசினிமா வரிசையில் (தரத்தில்) வருகின்றன!

    ReplyDelete
  5. இரண்டாவது கேள்வி ஒரு சுயபரிசோதனை கேள்வியா? ஏனென்றால் தினம் இரண்டு பதிவு போடுகிறீர்களே (மனத்திற்குள் :ஒரு பதிவு போடுவதற்கே இங்க நாக்கு தள்ளுது )

    ReplyDelete
  6. இன்று முதல் எனது புதிய வலைப்பூவைத் தொடங்கியுள்ளேன்..சரியான நேரத்தில் உங்கள் பதிவு..நன்றி..

    அனைவரும் எனது வலைப்பூவிற்கும் அடிக்கடி வருக என அழைக்கின்றேன்..முகவரி:http://sengovi.blogspot.com/
    அன்புடன்
    செங்கோவி

    ReplyDelete
  7. @ ஜீ அந்த எழுத்தாளர் பிரபலபடுத்தினால் என்ன ஆகும் என தெரியும் .ஓ . நோ

    ReplyDelete
  8. @பிரபாகரன் . ஆம்
    ஒரு அப்பாவியை ஏமாற்றி தவறான கருத்தை நம்ப வைத்துவிட்டார்களே என்ற ஆதங்கம்தான் இந்த பதிவு

    ReplyDelete
  9. @மணிவண்ணன்
    ஹிஹி

    ReplyDelete
  10. வாழ்த்துக்கள் செங்கோவி

    ReplyDelete
  11. குறிப்பு எடுத்துக்கிட்டு இருக்கிறேன், Professor சார்.

    ReplyDelete
  12. அண்ணாச்சி என்ன நடந்தது...

    ReplyDelete
  13. ஃஃஃஃஃஃசில நேரங்களில் எழுதியவருக்கே தான் எழுதியது பிடிக்காது... அப்போது போய் நாம் பாராட்டினால், நம் அறிவின் மீது அவருக்கு சந்தேகம் வந்து விடும்ஃஃஃஃஃ

    என்னத்தில பரீட்சை வைப்பதென்று ஒரு விவஸ்தை இல்லையா அந்த பதிவருக்கு..

    ReplyDelete
  14. >>>சரியான நேரத்தில் இந்த பதிவை இட்டுள்ளீர்கள்! என் என்றால் வெகு சில ஓட்டுக்களே வாங்கும் கத்துக்குட்டி பதிவன் நான். எனக்கு உபயோகமான பதிவு. நம் சந்திப்பு (சென்னையில்) எப்போது நிகழும்???????????? அலைபேசி என் தங்களிடம் உள்ளதென நினைக்கிறேன். சனி அல்லது ஞாயிறு.....தங்களுக்கு தகுந்த நேரத்தில். ஆனால் தாமதம் இன்றி. சொன்னால் பிரபாவையும் அழைக்கிறேன்>>>

    ReplyDelete
  15. மூட நம்பிக்கையை தகர்த்த பகுத்தறிவுப் பகலவனே வாழ்க நின் தொண்டு.

    ReplyDelete
  16. பிச்சி உதறிட்டீங்க.........

    ReplyDelete
  17. வழிப்போக்கன் - யோகேஷ் said...
    பிச்சி உதறிட்டீங்க”

    நன்றி தலைவரே

    ReplyDelete
  18. இந்த வாரம் தமிழ்மணம் சிறந்த இருபது வலைப்பூக்கள் பட்டியலில் 6-வது இடம் பிடித்தமைக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  19. sivatharisan said...
    அலசல் அருமை

    நன்றி பாஸ்

    ReplyDelete
  20. மூட நம்பிக்கையை தகர்த்த பகுத்தறிவுப் பகலவனே வாழ்க நின் தொண்டு.”

    2011 நம்ம ஆட்சிதான் போலிருக்கே

    ReplyDelete
  21. அலைபேசி என் தங்களிடம் உள்ளதென நினைக்கிறேன். சனி அல்லது ஞாயிறு “

    இந்த வாரம் “இலக்கிய” பணிகல் குறுக்கிட்டு விட்ட்ன,,
    அடுத்த வாரம் சந்திப்போம்

    ReplyDelete
  22. என்னத்தில பரீட்சை வைப்பதென்று ஒரு விவஸ்தை இல்லையா அந்த பதிவருக்கு..

    ஹா ஹா

    ReplyDelete
  23. குறிப்பு எடுத்துக்கிட்டு இருக்கிறேன், Professor சார்.


    மேடம் எழுத்து துறையில் நீங்கள் சூரியன் என்றால் நான் சுண்டெலி

    ReplyDelete
  24. கனாக்காதலன் said...
    நல்ல பார்வை :)
    பயணமும் எண்ணங்களும் said...
    ரசித்தேன்.
    அன்பரசன் said..
    கலக்கிட்டீங்க
    ____________________________

    நன்றி நன்றி நன்றி

    ReplyDelete
  25. ரொம்ப நன்றி, ஆனாலும் நான் பாராட்ட மாட்டேன்....:)

    ReplyDelete
  26. அருமையான கலக்கல் பதிவு. சென்ற வாரம் வரை ஞாயிறுகளில் இட்ட பதிவுகள் நன்றாகத்தான் போனது.
    வலையுலகத்தை கலக்கும் விஷயங்கள் பற்றிய கலக்கல் பதிவு, இது பற்றி யோசனை வந்ததற்கு முதலில் சபாஷ்..

    ReplyDelete
  27. //இந்த வாரம் தமிழ்மணம் சிறந்த இருபது வலைப்பூக்கள் பட்டியலில் 6-வது இடம் பிடித்தமைக்கு வாழ்த்துக்கள். //

    ReplyDelete
  28. இந்த வாரம் தமிழ்மணம் சிறந்த இருபது வலைப்பூக்கள் பட்டியலில் 6-வது இடம் பிடித்தமைக்கு வாழ்த்துக்கள்.
    ..

    தகவல் சொன்னதற்கும், அன்புக்குன் நெஞ்சார்ந்த நன்றி

    ReplyDelete
  29. ரொம்ப நன்றி, ஆனாலும் நான் பாராட்ட மாட்டேன்....:)

    :(

    ReplyDelete
  30. சென்ற வாரம் வரை ஞாயிறுகளில் இட்ட பதிவுகள் நன்றாகத்தான் போனது”

    உணமை

    ReplyDelete
  31. ஆஹா...இப்படி எல்லாம் இருக்கா!!!

    ReplyDelete
  32. ரொம்ப பொறுப்பா அலசி இருக்கீங்க :))))))))

    ReplyDelete
  33. ரசித்துப் படித்தேன். நல்லாருக்கு.

    (உங்களுக்கு இந்தப் பதிவு பிடிக்கும் என்று நினைத்ததால் பாராட்டி இருக்கிறேன். இப்போ எழுதினதுக்கு அப்புறம் பிடிக்கமா போயிருந்தா நான்
    பொறுப்பல்ல)

    பின்னூட்ட பெட்டி தனியா திறப்பது மாதிரி வைக்கவும்

    ReplyDelete
  34. பின்னூட்ட பெட்டி தனியா திறப்பது மாதிரி வைக்கவும் "

    அப்படி வைத்தால் அது ஒப்பன் ஆவதற்கு சற்று நேரம் ஆகுமே... அதனால்தான் இப்படி வைத்தேன்..

    அதன் அட்வான்டேஜ் என்ன ?

    ReplyDelete
  35. atataa.. ippatiyum irukkiRathaa... good post(sorry i couldn;t type in tamil)

    ReplyDelete

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா