Monday, December 13, 2010

Exclusive Report : பீர் அபிஷேகம், புதிய பட்டம்- கொண்டாட்ட மன நிலையில் நடந்த சாரு நிவேதிதா விழா (பிரத்தியேக படங்களுடன் )

சாரு நிவேதிதாவின் ஏழு நூல்கள் வெளியீட்டு விழா சென்னை ,காமராஜ் அரங்கில் நடந்தது…
இலக்கிய விழா போல அல்லாமல் ஒரு கொண்டாட்டமாக , உற்சாகமாக , அதே சமயம் இலக்கியம் சார்ந்த அறிவு பூர்வ சொற்பொழிவுகளுடன்  நடந்தது குறிப்பிடத்தக்கது…
அந்த அறிவுபூர்வ உரையாடல்களை நான் தொகுத்து தருவதை விட , மற்றவர்கள் சொன்னால் நன்றாக இருக்கும்… அதை மற்ற நல்ல பதிவர்கள் சொல்வார்கள்.. அதை படித்துக்கொள்ளுங்கள்…


saru5
படம்:1 கனிமொழி, தமிழச்சி தங்கபாண்டியன் ஆகியோரை வரவேற்கும் எழுத்து சித்தர் பாலகுமாரன் அவர்கள்

அதைத்தவிர்த்து விட்டு , அங்கு நிலவிய உற்சாக மன நிலையை மட்டும் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்..
இலக்கிய விழா என்றால் அது வயதானவர்கள் செல்வது, போரடிக்கும் விஷ்யம் என்பதே பொது கருத்து..
அப்படி இல்லை என்று கல்லூரி மாணவர்கள் சந்திப்பு போல நடந்த அந்த விழாவின் சில சுவையான அம்சங்களை மற்றும் தொகுத்து தருகிறேன்..


1. ஆறு மணிக்கு தொடங்க வேண்டிய நிகழ்ச்சிக்கு  நான்கு  மணியிலிருந்தே மக்கள் வர தொடங்கினர்.. ஆனால் தீவிர ரசிகர்கள் மதியத்திலேயே ஆஜர் ஆகி, வரவேற்பு போர்ட் வைத்தல், விழா ஏற்பாட்டில் உதவி செய்தல் போன்ற பணிகளில் ஈடுபட்டனர்…
இது வழக்கமாக சினிமா நட்சத்திரங்களுக்கு மட்டுமே நிகழும்.. ஓர் இலக்கியவாதிக்கு இப்படி ஒரு ஸ்டார் அந்தஸ்து கிடைத்ததையும், வரவேற்பு போர்டையும் பலர் ஆர்வத்துடன் பார்த்து சென்றனர்..
2.  நவீன எழுத்தின் புயல் சின்னம் சாரு நிவேதிதா என்ற வரவேற்பு வாசகம் அட்டகாசமாக இருந்தது…image
3 . சாரு படத்துக்கு , பீர் அபிஷேகம் , பால் அபிஷேகம் செய்ய முயன்றார் ரசிகர் ஒருவர் (பார்க்க படம் ) … சிலர் பதட்டத்துடன் சென்று தடுக்க முயன்றனர்,,, அன்பு போராட்டம் ??
 image
4 விழா தொடங்கும் முன் அனைவருக்கும் சிற்றுண்டி வழங்கப்பட்டது.. சாரு இதற்கு சிறப்பு அக்கறை எடுத்துக்கொண்டது, ஒரு வித உணர்வு பூர்வ நெருக்கத்தை ஏற்படுத்தியது..image
5. ஒவ்வொருவராக வரத்தொடங்கினர்… அதில் குறிப்பாக எழுத்து சித்தர் பாலகுமாரன் அவர்களை அங்கிருந்த பலர் எழுந்து நின்று மரியாதையாக வரவேற்றனர்.. ஒரு வாசகர் அவர் பாதம் தொட்டு வணங்கினார்…
ஒரு எழுத்தாளரின் விழாவில் இன்னொரு எழுத்தாளருக்கு இந்த அளவு மரியாதை கிடைத்தது ஆச்சரியம்தான்..
6. சாமியார் பற்றிய புத்தகதை பெற்றுக்கொள்ள , அதற்கு தகுந்த வலைப்பதிவரை தேர்ந்தெடுத்த ரசனை சூப்பர் ( அவர் யார் என நாளை சொல்லப்படும் )
7 கேட்பவர்களுக்கு இனிய முகத்துடன் சாரு ஆட்டொகிராப் போட்டு கொடுத்தார்.. ஆட்டோகிராப் வாங்க பலர் ஆர்வமாக இருந்தனர்.
image
8 . நடிகர் ஒருவர் தன் அனுமதி இன்றி தன்னோடு புகைப்படம் எடுத்து கொண்டதை கண்டித்து சாரு எழுதி இருந்தார்..
எனவே ஒரு வித அச்சத்துடன் அவரை புகைப்படம் எடுக்க அணுகினர் பலர்…
9. வந்து இருந்தவர்களில் பெரும்பாலானோர் இளைஞர்கள்.. பதிவர்கள் பலரும் வந்து இருந்தனர்…  வந்தவர்க்ள் அனைவரும் ஈடுபாட்டுடன் வந்து இருந்தனர் image
10. தேகம் நாவல் பரபரப்பாக விற்பனை ஆனது ( என் கருத்துரை – நாளை )

15 comments:

  1. சூப்பர்! ச்சே நான் வரலயேன்னு கவலையா இருக்கு பாஸ்! வீடியோ எடுத்திருப்பாங்கதானே ? சென்ற வருடம் நடைபெற்ற விழாவை அப்படித்தான் பார்த்தேன்! :-)

    ReplyDelete
  2. வீடியோ எடுத்திருப்பாங்கதானே ? "

    கண்டிப்பாக அதை பாருங்கள்..

    ஆனால் நம்முடையது கொஞ்சம் லோ கிளாஸ் ரிப்போர்ட்..

    பேச்சு , புத்தகம் பற்றி இல்லாமல் கொண்டாட்டத்தை மட்டும் சொல்லி இருக்கிறேன்..

    ReplyDelete
  3. நல்ல பகிர்வு”

    நன்றி

    ReplyDelete
  4. சென்ற வருடத்தில் இடம்பெற்ற சாருவின் வெளியீட்டு விழாவுக்கு சென்றிருந்தேன். இந்தவருட கொண்டாட்டங்களை புகைப்படத்துடன் தந்து, சென்னை நினைவுகளை மீள மனதில் எழுப்பியுள்ளீர்கள். நன்றி.

    ReplyDelete
  5. அருமையாக, சுருக்கமாக பதிந்துள்ளீர்கள்..நன்றி.

    ReplyDelete
  6. அருமையான பகிர்வு ..

    ReplyDelete
  7. சாருவின் தளத்தில் உங்கள் கடிதம் பார்த்தேன்! நல்லா இருக்கு வாழ்த்துக்கள்! :-)

    ReplyDelete
  8. யாரு அந்த சாரு?

    ReplyDelete
  9. சாருவின் தளத்தில் உங்கள் கடிதம் பார்த்தேன்! நல்லா இருக்கு வாழ்த்துக்கள்!"

    எழுத்தாளர்கள் பதிவுலகை அலட்சியமாக கருதவில்லை என்பது நாம் இன்னும் கொஞ்சம் பொறுப்புணர்வுடன் நடந்து கொள்ள வேண்டிய அவசியத்தை ஏற்படுத்தியுள்ளது

    ReplyDelete
  10. அரசன் said...
    அருமையான பகிர்வு ”

    நன்றி

    ReplyDelete
  11. செங்கோவி said...
    அருமையாக, சுருக்கமாக பதிந்துள்ளீர்கள்..நன்றி.

    நன்றி

    ReplyDelete
  12. nadikarukku mattumthan paal beer abishekam panna koodathua. but ibarukku more beer abishekam pannaalam, athiayum iveru romba santhosam vilambarapaduthuvaaru. I know this comment will not be published. because, seems only comment whoch is worshipping that guy will be published. ippady nakky pilaikka venam,

    ReplyDelete
  13. ennaikkuthan intha samoogam thirumthumo. cinema-i pol ippa ilakkiyavahikallum pana aasai, ore naalil periya aal aaga vendiya very, pughazh bothai ellam, Jeyalaitha maary ivarkal kaalil rasigarkal vila ethirpaakirathu ellam kodumayin uchakattam. kaly muthy poachu.

    ReplyDelete
  14. அனானி நண்பரே.... உங்கள் கருத்தை அப்படியே பப்ளிஷ் செய்து இருக்கிறேன்...

    ReplyDelete

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா