இசை ஞானி இளையராஜாவை சர்ச்சைக்கு இழுக்காதவர்கள் யாரும் இல்லை ..
வீட்டுக்கு போன தனக்கு தண்ணீர் தரவில்லை என அதைக்கூட பிரச்சினையாக்கினார் இயக்குனர் மிஷ்கின் ..
இதை கூட பிரச்சினை ஆக்குபவர்கள் , இலக்கிய விவகாரம் கிடைத்தால் விட்டு விடுவார்களா?
தாகூர் எழுதிய பிரபல கவிதைகளில் ஒன்று mind without fear
அதை இளையராஜா மொழி பெயர்த்தது தவறு என்பதே இப்போது பஞ்சாயத்து..
தாகூர் கவிதைகளில் ஆய்வுகள் செய்துள்ள திரு ஆர் நடராஜன் , யுகமாயினி இதழில் இசைஞானி மேல் கடும் தாக்குதல் நடத்தியுள்ளார்..
தாகூரை ராஜா அவமானப்படுத்தி விட்டார்..
மைண்ட் என்றால் மனம்..அதை இதயம் என மொழி பெயர்த்தது தவ்று..
மனிதன் தலை நிமிர்ந்து நிற்பதாக தாகூர் சொல்வதை இதயம் தலை நிமிர்ந்து இருப்பதாக குழப்புகிறார்..
tireless striving என்ப்தை விடாமுயற்சி என மொழி பெயர்த்தது தவறு,,,
இது போல பல தவறுகள் இருக்கின்றன,,,
பிளேட்டோவின் படைப்பை மொழி பெயர்க்கும்போது அளவு கடந்த சுதந்திரம் எடுத்து கொண்டதால் Etienme Dolet என்பவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது
அதுதான் என் நினைவுக்கு வருகிறது என்று பாய்கிறார் அவர்..
ஆனால் நான் இளையராஜாவின் மொழி பெயர்ப்பை படித்தபோது, அவர் வார்த்தைக்கு வார்த்தை மொழி பெயர்க்காமல் , தாகூர் சொல்ல வந்த கருத்தை அருமையாக தமிழில் சொல்ல வந்தது தெரிந்தது…
இளையராஜா இதயம் என சொல்வது பிசிக்கல் இதயம் அல்ல… மனம் என்பதைதானே சொல்கிறார் ? இது சிறுபிள்ளைக்கும் தெரியுமே?
“ அறிவை சிறைப்படுத்த முடியாது… எனவே விடுதலை என்ற பேச்சு அர்த்தம் அற்றது “ என்பதுதானே கவிதையின் உட்கருத்து..இதை சொல்வதில் என்ன தவறு..
“ வெளிப்படையாக காண்பது வாய்சொற்கள்..இவை மெய்யின் பூரணத்துவத்தை உணர்த்த முடியாது “ என்பது தாகூருக்கு உடன்பாடான கருத்துதான்..
தியானம், முக்தி என நாம் சொல்வது எல்லாமே மனதின் விளையாட்டுதான்…
போலி சாமியார்கள் உருவாக இது போன்ற ஆசைகள்தான் காரணம் ..
இதைத்தான் தாகூர் சொல்கிறார்.. அதை சரியாக இளையராஜா விளக்குகிறார்.
“ விடாமுயற்சியும் தளர்ச்சியும் மனதின் கற்பனையே.. ஆனால் அதுவும் பூரணத்துக்குள் உள்ளதுதான் .. அதை நோக்கி கை நீட்ட அது தனி பொருள் அல்ல “
நாம் கற்ற விஷ்யத்தை வைத்து , இன்னொன்றை ஆராய்ந்தால் புதிதாக அதையும் கற்க முடியாது…
சாய்ஸ்லெஸ் அவேர்னஸ் என்பார் ஜெகே..
அந்த அடிப்படையில் அறிவு பாகுபாடு பார்க்காது என இளையராஜா சொலவ்து மிகவும் சரியான ஒன்றுதான்..
கடவுள் இருக்கிறார் என்ற நம்பிக்கையுடன் தேட ஆரம்பித்தால் கடவுள் என எதையாவது பார்க்க முடியும்..
கடவுள் இல்லை என்ற நம்பிக்கையுடன் தேடினால் , கடவுள் இல்லை என்பதற்கு ஆதாரம் கிடைக்கும்…
விருப்பு வெறுப்பு இல்லாமல் வாழ்வை பார்க்க வேண்டும்..
நோக்கம் அற்ற நிலைதான் விரிந்த நிலை என இளையராஜா சொல்வதும் சரியானதே..
என்னை பொறுத்தவரை இளையராஜாவின் விளக்கமே சரியானதாக தோன்றுகிறது ..
மூலத்தையும் மொழி பெயர்ப்பையும் பாருங்கள்…உங்கள் கருத்தை கூறுங்கள்..
கவிதை உங்கள் பார்வைக்கு, இதோ….
*******************************************************************
Mind without fear
இசைஞானி இளையராஜா மொழிபெயர்ப்பு
இதயம் எங்கே அச்சமின்றி உள்ளதோ, எங்கே தலை நிமிர்ந்து நிற்கிறதோ..
சிறைவாசமின்றி அறிவு வளர்ச்சிக்கு எங்கே பூரண விடுதலை உள்ளதோ..
குடும்பத்தின் குறிகிய தடைப்பாடுகளால் வெளிஉலகின் ஒருமைப்பாடு
எங்கே உடைபட்டு துண்டுகளாக போய்விட வில்லையோ.
வாய்சொற்கள் எங்கே மெய் நெறிகளின் அடிப்படையிலிருந்து
வெளிப்படையாய் வருகின்றனவோ
விடாமுயற்சி எங்கே தளர்ச்சியின்றி பூரணத்துவம் நோக்கி
தனது கரங்களை நீட்டுகிறதோ
அடிப்படைதேடி செல்லும் தெளிந்த நீரோட்டம்
எங்கே பாழடைந்த பழக்கம் எனும் பாலை மணலில்
வழிதவறிப் போய்விடவில்லையோ
நோக்கம் விரியவும் ஆக்க வினை புரியவும் இதயத்தை
எங்கே வழி நடத்தி செல்கிறாயோ
அந்த விடுதலை சுவர்க்க பூமியில் எந்தன் பிதாவே
விழித்தெழுக என் தேசம் !
வார்த்தைக்கு வார்த்தை மொழி பெயர்ப்பு ( திரு நடராஜன் )
எங்கே அச்சமின்றி இருக்கிறதோ மனம்
எங்கே நிமிர்ந்து இருக்கிறதோ தலை
எங்கே சுதந்திரமாக இருக்கிறதோ அறிவு
எங்கே குறுகிய தேச சுவர்களால்
கூறுபட விடவில்லையோ உலகம்
எங்கே உண்மையின் ஆழத்திலிருந்து
வருகின்றனவோ சொற்கள்
எங்கே செம்மைக்கு செல்கிறதோ
அயர்விலா உழைப்பு
மாய்ந்த பழக்கங்களின் பாழ்மணலில்
தெளிந்த பகுத்தறிவு ஓடை
எங்கே பாதை தவறாமலிருக்கிறதோ
எப்போதும் விரிவுபடும் சிந்தையிலும் செயலிலும்
எங்கே நீ மனதை செலுத்துகிறாயோ
என் தந்தையே , அந்த சுதந்திர ஸ்வர்க்கத்தில்
விழிக்கட்டும் என் தேசம்
//தாகூர் சொல்ல வந்த கருத்தை அருமையாக தமிழில் சொல்ல வந்தது தெரிந்தது//
ReplyDeleteஇப்படி செய்தால் அதன் பெயர் இது மொழிபெயர்ப்பா.???
ஒன்றின் எழுத்துகளால் பாதிக்கபட்டு அதன் கருத்தை உள்ளே எடுத்துகொண்டு எழுதுவது வேறு.. வரிகள் மாறாது கருத்துகளை மட்டும் கொண்டு வார்த்தைகளை நமது சுதந்திரம் படி மாற்றுவது வேறு... அர்த்தம் மாறாது சிறந்த பெயர்ப்பு அளிப்பது என்பது வேறு...
Present....
ReplyDeleteமொழிப்பெயர்புகளில் இது நடப்பது மிக இயல்பன ஒரு விசயம்.
ReplyDeleteஎனக்கு என்னவோ திரு நடராஜனின் மொழி பெயர்ப்பே சிறந்ததாகப் படுகிறது. ராஜ சொல்லவருவது ஒன்றுமே புரியவில்லை.
ReplyDeleteதிருக்குறளை எத்தனையோ பேர் மொழிபெயர்ப்பு செஞ்சு இருக்காங்க...அதெல்லாம் அப்படியே அசங்காமல் ஒரே வார்த்தையிலா இருக்கு...Ilaiyaraja is not a professional translator..ஆனால் ஆர்வமாய் முயற்சி செய்யும் சில அழகான விஷயங்களை தூரமாய் இருந்து பாராட்டலாம்..
ReplyDeleteஒரு கவிதையை மொழிபெயர்க்கும்போது அது கவிதை நடையில் வந்தால் தான் அழகு..ஒரு உரைநடை கட்டுரையை கவிதையில் மொழிபெயர்த்தால் அது கொஞ்சம் வேறுபாடா தான் தோணும்...தாகூரின் ஒரு கவிதையை இசை தேவன் அழகாய் கவிதை நடையில் கொடுத்து இருக்கிறார்..நடராஜ் சார் ஐ விட இன்னும் breezy ஆ ,அழகா தான் தோணுது...இதயம் சொல்வது தான் mind ..இந்த லாஜிக் கூட யோசிக்காமல் நடராஜ் அவர்கள் ஏன் நொள்ளை சொல்றார் னு தெரில...இளையராஜா அவர்கள் நல்ல lyricst கூட...இளையராஜா sir என்ன செஞ்சாலும் விமர்சனமா??!!...ஓகே..ஓகே..காய்ச்ச மரம் தானே கல்லடி படும்..??!!
அந்த தலை சிறந்த கவிஞனின் வார்த்தைகள்....!
ReplyDeleteஆஹா...ஆஹா.. படித்துக் கொண்டே இருக்கலாம்..!
ராஜாவின் எழுத்தில் உயிர்...! ரசித்து மகிழ்ந்தேன்...!
தாகூர் எழுதிய காலகட்டத்தை வைத்து பார்த்தால்,
//அந்த சுதந்திர ஸ்வர்க்கத்தில்
விழிக்கட்டும் என் தேசம்// என்று திரு.நடராஜன் முடித்திருப்பதை போல் ராஜா முடித்திருக்க வேண்டும் என்பது எனது தாழ்மையான கருத்து...!
மிக்க உணர்ச்சி பரவசமானேன் பார்வையாளன்..!
ஞாபகப் படுத்தியமைக்கு உமக்கு கோடானுகோடி நன்றிகள்...!
ராஜா எழுதுனத ரசிச்ச அளவுக்கு நடராஜன் எழுதுனது பிடிக்கல. ஏன்னா கவிதை தனமா அது தெரியல. ஆனாலும் மொழிபெயர்ப்பு என வரும் போது எல்லாமே கச்சிதமா இருக்கணும் என்பது தானே இலக்கணம்?!! இலக்கணம் மாறுதோ.....
ReplyDeleteஎங்கே அச்சமின்றி இருக்கிறதோ மனம்
ReplyDeleteவேதனையாக இருக்கிறது. இதுதான் மொழி பெயர்ப்பா...
மனம் எனும் வார்த்தை தொக்கி நிற்பதை உணரவில்லையா,. how are you?. என்பதை நீங்கள் எப்படி இருக்கின்றீர்கள் என்றல்வா மொழிபெயர்கக வேண்டும். அதில் உள்ள படியே செய்கிறேன் என எப்படி இருக்ககின்றீர்கள் நீங்கள் என்று செய்தால் பாராட்டுவோமா. இல்லையே அதைதான் நடராஜன் செய்திருக்கின்றார்...
- ஜெகதீஸ்வரன்.
நடராஜன்'s Best.
ReplyDeleteமனம் எங்கே அச்சமின்றி இருக்கிறதோ
ReplyDeleteதலை எங்கே நிமிர்ந்து இருக்கிறதோ
அறிவு எங்கே சுதந்திரமாக இருக்கிறதோ
உலகம் எங்கே குறுகிய தேச சுவர்களால் கூறுபட விடவில்லையோ
உண்மையின் ஆழத்திலிருந்து எங்கே சொற்கள் வருகின்றனவோ
அயர்விலா உழைப்பு எங்கே செம்மைக்கு விரிந்து செல்கிறதோ
மாய்ந்த பழக்கங்களின் பாழ்மணலில் எங்கே
தெளிந்த பகுத்தறிவு ஓடை பாதை தவறாமலிருக்கிறதோ
விரிவுபடும் சிந்தையிலும் செயலிலும் எங்கே நீ மனதை எப்போதும் செலுத்துகிறாயோ
என் தந்தையே , அந்த விடுதலை ஸ்வர்க்கத்தில்
விழிக்கட்டும் என் தேசம் !
செல்வா..
@தம்பி கூர்மதியன் said...
ReplyDeleteஅர்த்தம் மாற கூடாது என்பதற்காக கூடுதல் வார்த்தை சேர்ப்பது தவறா இல்லையா ?
மொழிப்பெயர்புகளில் இது நடப்பது மிக இயல்பன ஒரு விசயம்”
ReplyDeleteஆம் .
@ ஆனந்தி..
ReplyDeleteஉங்கள் கருத்துடன் எனக்கு நூறு சதவிகி தம் உடன்பாடு
அருமை செல்வா..
ReplyDeleteசூப்பர்
நடராஜன்'s Best.:
ReplyDeleteஇஸ் இட் ? :)
jegadeeswaran said...
ReplyDeleteஎங்கே அச்சமின்றி இருக்கிறதோ மனம்
வேதனையாக இருக்கிறது. இதுதான் மொழி பெயர்ப்பா..
:)
ஆனாலும் மொழிபெயர்ப்பு என வரும் போது எல்லாமே கச்சிதமா இருக்கணும் என்பது தானே இலக்கணம்?!! இலக்கணம் மாறுதோ...”
ReplyDeleteவார்ட்தைகளை விட உணர்வுகளை கொண்டு வர வேண்டும்...
பிரபலமானவர்களை தாக்கி பேசும்போது தானும் பேசப்படுகிறோம் எனும் யுக்தியாக இருக்கலாமோ என எண்ணத்தோன்றுகிறது. வேறொன்றுமில்லை.
ReplyDeleteபிரபலமானவர்களை தாக்கி பேசும்போது தானும் பேசப்படுகிறோம் எனும் யுக்தியாக இருக்கலாமோ என எண்ணத்தோன்றுகிறது”
ReplyDeleteஇந்த விஷ்யத்தில் அப்படி தோணவில்லை.. நடராஜன் தான் உண்மையாக நினைப்பதை சொல்லி இருக்கிறார்..
ஆனால் அவர் சொன்னது தவறு என்பது என் கருத்து
@பார்வையாளன்: தவறில்லை.. அது உங்களுடைய அல்லது என்னுடைய கவிதையின் மொழிபெயர்ப்பா இருந்தால் தவறில்லை என்றே தோன்றுகிறது.. மேலும் ஞானியின் இந்த மொழிபெயர்ப்பும் என்னை பெரிதும் கவருவதாக இல்லை.. தாகூரின் வரிகளை மொழிபெயர்க்கையில் நயம் ஊட்டுவது
ReplyDelete''சிறைவாசமின்றி அறிவு வளர்ச்சிக்கு''
தவறு தான்... அதன் பெயர் மொழிபெயர்ப்பு இல்லை.. கருத்தை மட்டும் எடுத்துகொண்டு ராஜா அவருக்கே உரிய பாணியில் எழுதியிருந்தால் எனக்கும் பிடித்திருக்கும்.. கவிதை ஒருவரின் உள்குமுறலாக இருக்கும்போதே அதன் சிறந்த வெளிபாடு இருக்கும்.. தாகூரின் வெளிபாடு அளவுக்கு ராஜாவின் வெளிபாடு எனக்கு திருப்தி அளிக்கவில்லை.. என்னுடைய வண்டியை எடுத்துட்டு போயி பட்டி, டிங்கரிங் பாக்க ராஜா யார்னு சும்மா கேக்கலாமா.?? யாரும் கோச்சிக்க வேணாம்.. சும்மா சொன்னன்.. மொழிபெயர்ப்பு என்ற பேரில் ராஜா இதை எடுத்து சரியான கருத்தை வெளிகொண்டிருந்தாலும் அதற்கு நயம் கொண்டுவந்த்தை தவறு என்கிறேன்..
@ANKITHA VARMA: இருக்கலாம்...
ReplyDelete@செல்வா: இப்படி சொல்வது சரியில்லை.. ராஜாவினதும் அருமையே.. ஆனால் என் கருத்தை பார்க்கவும்..
@ஆனந்தி: வாங்க தோழி.. திருக்குறளை ராஜா மாதிரி ரொம்ப பேமஸ் ஆனவங்க யார் தப்பா மொழிபெயர்த்தாங்கன்னு சொல்லமுடியுமா.?? உங்கள் இஷ்டத்துக்கு மாத்துறதுக்கு பேர் மொழிபெயர்ப்பு இல்ல மேடம்.. நீங்க அதிகமா புகழ்ற ஆளு இவரு தானே அதான் அவருக்கிட்ட இருக்குற குறைய காட்டுறோம்.. உங்களுக்கு வேற யாரையாவது பிடிக்கும்னா சொல்லுங்க.. அவர பத்தி கிண்டலா ஒரு பதிவு போடுறன்.. உடனே அவர் திறமைய மட்டும் பாருங்கன்னு சொல்லிடாதீங்க.. அந்த பதில் நிராகரிக்கப்படுது..
@ஆமினா: உங்கள் கருத்துகளுக்கு ஒத்துபோகிறேன்..
@jegadeeswaran: //எப்படி இருக்ககின்றீர்கள் நீங்கள்//இதுவும் சரிதான் தோழரே..!!
@நடராஜன்: ராஜாவுதும் சிறப்பாக தான் இருக்கிறது... மொழிபெயர்ப்பா இல்லை என்றாலும்...
ReplyDelete@செல்வா: சிறந்த முயற்சி...
@தம்பி கூர்மதியன் ...
ReplyDeleteநடு நிலையாகவும், உணர்ச்சி வசப்படாமலும் உங்கள் கருத்தை முன் வைத்த பண்பு பாராட்டத்தக்கது..
அதிலும் செல்வாவின் முயற்சியை பாராட்ட ஒரு நல்ல மனம் வேண்டும் ( சிலர் டிஸ்கரேஜ் செய்வார்கள் )
விஷயம் தெரிந்த நீங்கள் அவரை பாராட்டியது மிகவும் மகிழ்ச்சியடைய வைத்தது..
அவர் கவிதையயும் , உங்கள் கருத்தையும் தனி பதிவாக இட இருக்கிறேன்