Thursday, December 16, 2010

தேகம் நாவல் - சாதாரண வாசகன் பார்வையில் ....

ரு ரஜினி படம் ரிலீஸ் ஆனது போல சாருவின் "தேகம்" நாவல்  ரிலீஸ் ஆனது தமிழ் இலக்கிய வரலாற்றில் நடந்திராத ஒன்று..
அதே போல, ஒரு நாவல் இந்த அளவுக்கு விவாதிக்கப் படுவதும் இதுவே முதல் முறை..

புத்தகத்தை ஸ்டாலில் பார்த்ததும் எனக்கு சற்று ஏமாற்றமே ஏற்பட்டது...
அவரது ராசலீலா போன்றவற்றை படித்த எனக்கு சிறிய நாவல் என்பது கொஞ்சம் ஏமாற்றமே..
ஆனால், இந்த நாவலின் சிறப்புகளில் அதன் சிறிய அளவும் ஓன்று என்பதை படித்து முடித்த பின் உணர்ந்தேன். 
நமக்கெல்லாம் , பெரிய நாவலை பார்த்தாலே சற்று பயம் வந்து விடும்.. படிக்க படிக்க ஆர்வம் வரும் என்பது வேறு விஷயம்.. ஆனால் அப்படி படிப்பவர்கள் சிலரே..

இந்த நாவலை பொறுத்தவரை, பார்த்ததுமே வாங்க தோன்றும்... வாங்கியதுமே படிக்க தூண்டும்...

சாதாரண வாசகனை படிக்க வைத்ததில் சாரு முதல் வெற்றியை பெறுகிறார்...

சிறிய நாவல் , பெரிய நாவல் என்பது சிறப்பை நிர்ணயிக்கும் விஷயம் அல்ல..

நாலு பாட்டில் பீர் அடித்தால்தான், லேசாக எபெக்ட் தெரியும்.. ஆனால் டக்கிலா என்றால் கொஞ்சம் போதும்...

சிலர் இந்த நாவல் வதை பற்றிய நாவல் என்று கேள்வி பட்டுவிட்டு, நாவல் முழுதும் ஆக்சன் பிலிம் மாதிரி சண்டைகளும், விதவிதமான வதை காட்சிகளும் என எதிர்பார்த்து , ஒரு கிரைம் நாவலை எதிர்பார்த்து படித்தனர்..
அப்படியும் படிக்கலாம்.. ஆனால் அப்படி படித்தால் , நாவலின் உண்மையான சாரத்தை தவற விட்டு விடுவோம்..

வதை என்பது போர் களத்தில் மட்டுமோ அல்லது  சில குற்றவாளிகளால் மட்டுமோ நடத்தப்படுவது அல்ல..

வன்முறை என்பது நம்மிடம் இருந்தே தொடங்குகிறது...

you are the world என ஜிட்டு கிருஷ்ணமுர்த்தி சொன்னது இதைத்தான்..

போர் கள வன்முறைகளை , சித்திரவதைகளை வைத்து முழு நாவலையும் எழுதி இருக்க முடியும்.. ஆனால் அது ஒரு சுவையான நாவலாக இருந்திருக்க முடியுமே தவிர, நம்மை பாதித்து இருக்காது..


நம்மில் பலர் போர்க்களம் சென்று இருக்க மாட்டோம்.. எனவே நாம் எல்லாம் நல்லவர்கள் போலவும், வன்முறை வேறு எங்கோ நடப்பது போலவும் நினைத்து கொள்வோம்..
ஆனால் இந்த நாவலில் இப்படி நிகழவதில்லை...

நம்முடன் நேரடியாக உரையாடுகிறது நாவல்...

ஆழ்ந்த படிப்பில் , தர்மா நாம்தான் என்பது  புரிகிறது...

தர்மா  செய்யும் மற்றவர்களை செய்யும் வதைகளை கொஞ்சம் மட்டுமே சொல்லி இருப்பது நாவலின் சிறப்பு...
பல நேரங்களில் அவன் வன்முறையை ஒரு சாட்சியாக இருந்து பார்க்கிறான்...  பல நேரங்களில் மன ரீதியான கஷ்டங்களுக்கு உள்ளாகிறான்...
                
இதுதான்  நாவலின் பெரிய பிளஸ் பாயிண்ட்..

இதை தர்மா வாழ்வு மட்டும் அல்ல.. நம் வாழ்வும் கூட..

சில சம்பவங்கள் மாறலாமே தவிர, அடிப்படை கான்சப்ட் ஒன்றுதான்...

   வன்முறை ,. அதன் மீதான இச்சை, ஆதிக்கம் செலுத்த நினைத்தல்

சென்ற மாதம் ஒரு நாள்  பக்கத்து வீட்டு வாசலில் சிறிய கூட்டம் ... என்ன என பார்த்தால், ஒரு குட்டி பாம்பு, ...
அபாயம் இல்லாத , தண்ணி பாம்பு... சிறியது வேறு..
நம் ஆட்களுக்கு ஒரே குஷி... அதை லேசாக குத்தி, அது துடிப்பதை ரசித்தார்கள்...
அது துடிப்பதையும், இங்கும் அங்கும் அலை பாய்வதையும், அது சாகும் வரை ரசித்தார்கள்..

  • அவர்களுக்குள் தர்மா இல்லையா..?



  • அதை விடியோ எடுத்து யு டியுபில் போட நினைத்த எனக்குள் தர்மா இல்லையா?



  • என்கவுண்டரில் கொல்லப்பட்ட , பாலியல் குற்றம் சாட்டப்பட்ட்ட ஒருவரை , உடனே கொன்று இருக்க கூடாது.. சித்திரவதை செய்து கொன்று இருக்க வேண்டும் என நினைத்த மக்களுக்குள் தர்மா இல்லையா..






குழந்தை  பருவத்தில் இருந்தே வதை மூலம் ஆதிக்கம் செலுத்தும் ஆசை தொடங்கி விடுகிறதே...

   குழந்தைகளை சித்திரவதை செய்வது எளிது..


ஆனால் , நாம் நினைக்கும் எல்லா வதைகளையும் செய்ய முடியாது... எல்லோரையும் துன்புறுத்த முடியாது..
 வலிமை பொருந்திய சிலர் மட்டுமே ஆதிக்கம் செலுத்த முடியும்..

மற்றவர்கள் ஆதிக்கத்துக்கு உட்பட்டவர்களாக இருப்பார்கள். ( நடைமுறையில் இவர்களே அதிகம் ) 
அந்த நிலையில்  , வன்முறை மனதில் நடக்க ஆரம்பிக்கிறது...
 மன ரீதியாக துன்புறுத்தலை ஆரம்பிக்கிறோம்...
காதல் கூட இன்னொருவர் மேல் செலுத்தும் ஆதிக்கம் ஆகிறது...

இதில் இன்னொரு காமடி, ஆன்மீகம் மற்றும் புனித பசு ஆகுதல்.. வன்முறைக்கு அப்பால் செல்ல விரும்புபவர்கள் இவர்கள்...

இவர்களுக்கு வேறு யாரையும் துன்புறுத்த பிடிக்காது...

அதை பாவம் என நினைப்பவர்கள் இவர்கள்..

எனவே தம்மையே சித்திரவதை செய்து கொள்ள ஆரம்பிக்கிறார்கள்...

உண்ணாவிரதம், முடி வளர்ந்தால் அதை கையாலே பிடிங்கி எடுத்தல், வாழ்வை மற்றவர்கள் கொண்டாடினால் மன ரீதியாக தம்மை தானே வதைத்து கொள்ளுதல் என இவர்கள் செய்யும் சுய வதைகள் ஏராளம்...

ஆகவே வன்முறையை அடக்க நினைத்தல் இன்னொரு வன்முறையாக மாறுகிறது..

மதங்களின் சிக்கல்களுக்கு இது ஒரு காரணம்..

எத்தனை நீதி நூல்கள் வந்தாலும், எத்தனை மகான்கள் வந்தாலும் வன்முறை இல்லாமல் செய்யமுடியாது...

என்ன நடக்கிறது என்பதை ஒரு சாட்சியாக நின்று கவனிப்பதைதுதான் , அதை கடந்து செல்லும் வழி...

அந்த வகையில் உள்ளதை உள்ள படி காட்டும் எழுத்து ஸ்டைல் சூப்பர் ...

நம்மை நாமே விருப்பு வெறுப்பு இன்றி பார்க்க வேண்டும் என்பார் ஜே கிரிஷ்ணமுர்த்தி ...

அதைத்தான் செய்கிறது நாவல்..

நம்மை நாமே கவனிக்க உதவுகிறது...

சில வரிகள் உக்கிரமாக இருந்தாலும் , தூங்கும் மனதை தட்டி எழுப்ப இது அவசியம்தான்..

படித்து பாருங்கள் .. உங்களுக்கே தெரியும்..
இருபதாம் அத்தியாயம் மட்டும் படித்தாலே போதும் ... அந்த பாதிப்பு மனதை விட்டு அகலவே சில காலங்கள் ஆகும்...

வாசகனின் புத்திசாலித்தனத்துக்கு சவால் விடும் வகையில், அவனையே சிலவற்றை கற்பனை செய்து கொள்ள வைத்து இருப்பது, சுவையான சவால்..

அதாவது, தேகம் நாவல் என்னை பொறுத்தவரை ஒரு விதமாக இருக்கும்... உங்களுக்கு இன்னொரு விதமாக இருக்கும்...
( என்னை பொறுத்தவரை  இது 180 பக்கங்களை தாண்டி விரிவடைந்து செல்கிறது )..

பொருத்தமான கவிதைகள், பொருத்தமான மேற்கோள்கள் என நச் என்று அமைந்துள்ளது...

நான் எதை எல்லாம் சம்பாதித்தேனோ அவை என்னிடம் இல்லை, எதை கொடுத்தேனோ அது என்னிடம் இருக்கிறது...
எனக்கான ஆகாரம் எது என கேட்டான் அவன்..

போன்ற வரிகளை படித்து , அவை என்ன சொல்கின்றன என பத்து நிமிடம் அமைதியாக யோசித்து விட்டு அதன் பின் அந்த அத்தியாயத்தை படித்தால், ஒரு உன்னதமான மன நிலை கிடைக்கிறது...


கேட்டமைட், சோடமி , குப்பி  , ஜேப்படி   என அதிரடியாக    எழுதி   இருந்தாலும், நகை சுவைக்கு    குறை  இல்லை...

தர்மா ஏன் ஜேப்படியை நிறுத்தினான் என்ற இடம் செம கிண்டல்...

கவிதை ரசிக்க வைக்கும் படி இருப்பதால், பலர் கவிதை தனியாக ரசிக்கின்றனர்...

அது தவறு...

கதையின் பின்புலத்தில் அதை படிக்க வேண்டும்.. அல்லது கவிதையின் பின்புலத்தில் கதையை படிக்க வேண்டும்..

காகம் கவிதை ஒன்றே போதும். அதை புரிந்து கொண்டால், ஒரு பெரிய அதிர்வு  ஏற்படும்...


சரி..இந்த கவிதையை பாருங்கள்...


கலவி கொள்ளலாமா
எனக் கேட்டாள்
இதுவரை 
பேசியிராத
அந்தப்
பக்கத்து வீட்டு
பெண்
பித்தமோ
சித்தம் கலங்கியதோ
என வியந்தேன்
பிறகுதான் 
தெரிந்தது



என்ன தெரிந்தது... ?????


படித்து பாருங்கள்..

மரணமும் , பாலுணர்வும் வேறு வேறு அல்ல என்பார் ஓஷோ...
இரண்டும் ஆழ்ந்த  தொடர்பு கொண்டவை...
ஒருவனை தூக்கில் போடும்போது, "அது" விரைப்படையும்....
என்று விளக்கி இருப்பார் ஓஷோ..

இந்த நாவலில் இரண்டையும் தொட்டு செல்கிறார் சாரு..

பல இடங்களை வாய் விட்டு சிரிக்காமல் படிக்க முடியாது..

நூறு ரூபாய்  கொடுத்த ஆழ்வார் " பார்த்து செலவு செய்டா , ஹார்ட் இயர்ன்ட் மணி " என்றான் ஆழ்வார்..
அதை பற்றி யோசித்த தர்மா " அவன் சொல்வதும் சரிதான்... குப்பி கொடுப்பதிலும், ஜேப்படி செய்வதிலும் வருவது ஈசி மணிதானே " என நினைத்து கொண்டான்..
இதை மந்திரியிடம் சொன்னபோது பெரிய ஜோக்கை கேட்டது போலசிரிசிரியென சிரித்தார்
( நான் அதை விட அதிகமாக சிரித்தேன்  )


இதை எல்லாம் விட அதிக ஜோக் இன்னொன்று இருக்கிறது..

சாரு என்றால் நமக்கு சிரோ டிகிரி நினைவுக்கு வருகிறதோ இல்லையோ, " அந்த எழுத்தாளர் " நினைவுக்கு வந்து விடுவார்..
சாருவின் ஆருயிர் நண்பரான அவரை செல்லமாக சீண்டும் பொது, ஒரு தனி உற்சாகம் வந்து விடும் சாரு வுக்கு..


இதில் அப்படி ஒரு சம்பவம் இல்லையே என்பது பாதி நாவல் வரை ஒரு குறையாக இருந்தது..
அதை நிவர்த்தி செய்யும் வகையில் ஒரு இடம் வருகிறது..

அடுத்த நாவலுக்கு , ஒரு தலைப்பு வைக்க சீரியசாக ஓர் ஐடியா கொடுப்பார் பாருங்கள்.,,.
என் சிரிப்பை பார்த்து அருகில் இருந்தவர்கள் விநோதமாக என்னை பார்த்தார்கள்..

*** புரம் என்பது இவர் “ அவருக்கு “ தரும் தலைப்பு...  அது என்ன என்பது புத்தகத்தில் பாருங்கள்...


ஓக்கே.. இதன் பிளஸ் மைனஸ்களை பார்க்கலாம்...
************************************************
பிளஸ் 

1  சிறிய நாவல்
2  புதிய கதைக்களன்
3 புதிய தகவல்கள்..
4 நகைசுவை
5 கதாசிரியர் நடுவில் வரும் இடங்கள்..
6 பொருத்தமான கவிதைகள், மேற்கோள்கள்
7  வாசகனையும் நாவலில் ஈடுபட செய்யும் யுக்தி..
8 சுவையான எழுத்து நடை

மைனஸ் 
1  இவ்வளவு சிறந்த நாவலில் கவனக்குறைவான பிழைகள் காணப்படுவது
2  முன்னுரை இல்லாதது .. ( இலக்கியம் தெரிந்த பலர் கூட இதை சரியாக அணுகவில்லை என்பதால் முன்னுரை அவசியமாகிறது... அதே நேரத்தில் ஒரு சாதாரண வாசகன் இதை நன்கு உள்வாங்க முடியும் எந்த விளக்கமும் இல்லாமல் )
3  சில பழைய கவிதைகள் இடம் பெற்று இருப்பது


மொத்தத்தில், அனைவரும் படிக்க வேண்டிய நாவல்... படிக்க முடியும் நாவல்./..

இதை படித்து புரிந்து கொண்டால், வேறொரு புத்தகம் படிக்க வேண்டிய அவசியம் இருக்காது...
ஜே கே, ஓஷோ , குர்ஜீப், ரமணர்  போன்றோரின் கருத்துகளை சாறு பிழிந்து , சக்கையை நீக்கி , சாறை மாட்டும் தரும் நாவலை , சரோஜாதேவி புத்தகம் என மிஷ்கின் சொல்வது வினோதம்...

 வெர்டிக்ட் 

தேகம் - ஆரம்பம் முதல் இறுதி வரை வேகம். தவற  விட கூடாத நாவல் 

***************************
தலைப்பு : தேகம்
ஆசிரியர் : சாரு நிவேதிதா
விலை : ரூ.90/-
வெளியீடு : உயிர்மை பதிப்பகம்

23 comments:

  1. தேகம் நாவல் இன்னும் படிக்கவில்லை இந்திய வாசிகள் கொடுத்து வைத்தவர்கள். உடனே சுட சுட வாங்கி ருசித்து விட்டீர்கள் ! நானும் இணையத்தில் கிடைக்குமா எனத் தேடிப் பார்த்துவிட்டேன் இன்னும் வரவில்லை. புதுப் பெண்டாட்டிக்கு தாலிக் கட்டிவிட்டு, பிறந்த வீட்டுக்கு மாம்பிள்ளையை மட்டும் அனுப்பி வைத்தார் போலிருக்கு !!!

    ReplyDelete
  2. //நான் எதை எல்லாம் சம்பாதித்தேனோ அவை என்னிடம் இல்லை, எதை கொடுத்தேனோ அது என்னிடம் இருக்கிறது // ஆழ்ந்த அனுபவ வரி. அருமையான விமர்சனம் நண்பரே.
    @ இக்பால்,
    இந்தியவாசிகள் என்று பொதுவாக குறிப்பிட வேண்டாம். என்னைப் போன்று மற்ற மாநிலங்களில் இருப்பவர்களும் புது வெளியீடுகள் இணையத்தில் வரும் வரை காத்திருக்க வேண்டியிருக்கிறது. இப்போது இரு புத்தகங்களுக்காக காத்திருக்கிறேன். 1. செகாவின் மீது பனி பெய்கிறது- எஸ்.ரா 2. தேகம்.

    ReplyDelete
  3. அருமையான மற்றும் தெளிவான அலசல்.
    மைனஸ் பிளஸ்வுடன் சூப்பரா சொல்லிட்டீங்க. கண்டிப்பாக வாங்கி படிக்கிறேன். பகிர்வுக்கு நன்றி தல.

    ReplyDelete
  4. இங்கே கிடைக்குமா என்று தெரியவில்லை! வாசிக்கத் தூண்டுகிறது உங்கள் பார்வை! :-)

    ReplyDelete
  5. மிக நல்லாவே எழுத ஆரம்பிச்சிட்டீங்க பார்வையாளன்

    ReplyDelete
  6. மிக நல்லாவே எழுத ஆரம்பிச்சிட்டீங்க பார்வையாளன்”

    இவ்வளவு நாள் நல்லா எழுதலைனு வெளிப்படையாக சொன்னதுக்கு நன்றி

    ReplyDelete
  7. இங்கே கிடைக்குமா என்று தெரியவில்லை! வாசிக்கத் தூண்டுகிறது உங்கள் பார்வை! :-)


    நன்றி ... படித்து பாருங்கள்

    ReplyDelete
  8. கண்டிப்பாக வாங்கி படிக்கிறேன்”

    படிச்சுட்டு கருத்து சொல்லுங்க

    ReplyDelete
  9. புதுப் பெண்டாட்டிக்கு தாலிக் கட்டிவிட்டு, பிறந்த வீட்டுக்கு மாம்பிள்ளையை மட்டும் அனுப்பி வைத்தார் போலிருக்கு ”

    ஹா ஹா

    ReplyDelete
  10. அருமையான விமர்சனம் நண்பரே. ”

    நன்றி

    ReplyDelete
  11. உங்கள் விமர்சனம் அந்த நாவலை படிக்கும் எண்ணத்தை உருவாக்குகிறது.

    ReplyDelete
  12. அருமையா எழுதுறிங்க.
    இடையே அந்த முக்கியமான அலங்கார வரிகள் அருமை

    ReplyDelete
  13. itha padicheengala?

    http://silarojakkal.wordpress.com/2010/12/15/thegam-patri-eriyum-kadal/#comment-118

    ReplyDelete
  14. To all who are unable to find books online, Visit the website: www.udumalai.com. you can order any books and charu's latest books too.

    ReplyDelete
  15. @லதாமகன்
    படித்தேன் . புரிதலுடன் எழுதப்பட்டு இருந்தது . வாழ்த்துக்கள்

    ReplyDelete
  16. தல, விமர்சனம் சூப்பர்..நான் அப்பவே சொன்னேன்ல, சாருவின் தீவிர ரசிகரான உங்களால் பெட்டரா சொல்ல முடியும்னு!
    -----செங்கோவி
    ஈசன் - விமர்சனம்

    ReplyDelete
  17. தீவிர ரசிகரான உங்களால் பெட்டரா சொல்ல முடியும்னு!"

    பெட்டர் அப்படீனு இல்லை பாஸ்...
    இது என் பார்வை.. அவ்வளவுதான்...
    ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கருத்து..
    ஒரே புத்தகம் ஒவ்வொருவரையும் ஒவ்வொரு மாதிரி பாதிக்கும்...

    என்னை பொறுத்தவரை அனைவரின் கருத்தையும் ஆர்வமாக படித்து வருகிறேன்...

    ReplyDelete
  18. சூப்பர் அலசல்.

    விழாவில் வாங்கி விட்டேன். உடனே படிக்க வேண்டிய நிலைமைக்கு இப்போது தள்ளப்பட்டேன். நன்றி.

    ReplyDelete
  19. நாவலில் சரோஜாதேவி பற்றி எங்காவது கிளுகிளுப்பாக ஏதாவது இருக்கா....

    ReplyDelete
  20. அனானி நண்பரே . அதை விட கிளுகிளுப்பான மேட்டர்கள் உள்ளன . ஆனால் கீழ்தரமான எண்ணங்கள் உண்டாக்காது

    ReplyDelete
  21. dei charu neeyellam uyiroda nadamaduradhe perusu.......

    ReplyDelete

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா