மறைக்கப்பட்ட, மறக்கப்பட்ட வரலாறுகள் எத்தனையோ உண்டு.
கொடூரங்கள், ஆக்கிரமிப்புகள், வதைகள் என இவற்றின் பேட்டர்ன் ஒரே மாதிரி இருக்கும் என்பதைத்தான் சாரு நிவேதிதாவின் தேகம், சீரோ டிகிரி போன்றவை சொல்கின்றன.
நம் மண்ணில் நடந்த எத்தனையோ சம்பவங்கள் நமக்கு தெரிவதில்லை..
அந்த வகையில், நம்மிடம் இருந்து மறைக்கப்பட்ட , இதயத்தை கலங்க வைக்கும் , வரலாற்று தகவலை, நண்பர் நிர்மல் நம்முடன் பகிர்ந்து கொள்கிறார்.
********************************************************************
கொஞ்ச நாட்களுக்கு முன்பு எனது நண்பன் ஒருவன் ஒரு வரலாற்று கதை சொன்னான் . அதை உங்களிடம் பகிரலாம் என தோணுது.
ஒரு நாள் முழுவதும் புலம்பி கொண்டிருந்த அந்த கதையின் சுருக்கம் இது.
சந்தல் tribal revolt பற்றி அவன் எனக்கு கூறினான், அவன் ஏதோ ஒரு டுபாகூர் புத்தகத்தில் படித்தானாம், அந்த புத்தகத்தில் சந்தல் Revolt பற்றி ஒரு சிறு குறிப்பு வந்ததாம், பின்பு அதை பற்றி அவன் மேலும் படித்ததை என்னிடம் கூறினான்,
எனக்கு துளி கூட அந்த கதையை நம்பமுடியவில்லை.
சந்தல் என்பவர்கள் வட இந்தியாவில் வாழும் ஒரு பழங்குடினர், அவர்கள் பிரிட்டிஷ் நம்மை ஆண்ட பொழுது பிரிட்டிஷ் சர்க்கார் ஆதரவு ஜமிந்தார்களின் அடக்குமுறைக்கு எதிராக போராடிவந்தர்களாம்.
( பழங்கிடியினரின் நிலத்தை அபகரிக்க, ஜமிந்தார்களும் , பிரிட்டிஷாரும் கூட்டாக செயல்பட்டனர் )
இந்த சந்தல் பழங்குடியினர்களை அடக்குவதற்காக இந்த ஜமிந்தார்கள் பிரிட்டிஷ் ராணுவத்தை கொண்டு பழமையான போர் கருவிகளுடன் போருக்கு வந்த இந்த சந்தல் மக்களை துப்பாக்கி, பீரங்கி கொண்டு கொன்று குவித்தார்களாம்.
இந்த சந்தல் revolt 30 June 1855 நடந்ததாம். இந்த அடக்குமுறையில் 10,000 க்கு மேற்பட்ட அந்த பழங்குடியினர்கள் கொல்லப்பட்டு, பெண்கள் மானபங்க படுத்தப்பட்டு, ஒரு Genocide போல திட்டமிட்டு வன்முறை செய்தார்களாம்,
( பழங்குடியினரின் வீரத்துக்கு முன் எதிரிகளால் தாக்கு பிடிக்க முடியவில்லை. எனவே தந்திரத்தை பயன்படுத்தி அவர்களை வென்றனர் )
இது தான் அவன் சந்தல் Revolt பற்றி படித்த விபரம்.
மேலும் அவன் படித்த புத்தகத்தில் சந்தல் Revolt என்ற ஒரு வார்த்தைதான் இருந்ததாம், அதை பற்றி மேலும் மேலும் படித்தபோது மிகவும் வேதனை அடைந்தானாம்.
ஒரு வேளை அந்த புத்தகத்தில் இந்த கொடூரங்களை பற்றி எழுதியிருந்தால் கூட அவன் இந்த வேதனையும், சிந்தனை மாற்றமும் வந்திருக்காதாம். மேலும் இந்த சந்தல் மக்கள்தான் 1967 ஆம் ஆண்டு Naxalbari என்ற மேற்குவங்க கிராமத்தில் நிலசுவந்தர்கள் மீது நடந்த ஆயுத போராட்டத்தில் போராடினர்களாம். இதுதான் பின்பு Naxalite இயக்கமாக மாறியதாம்.
நான் அவனிடம் சில கேள்வி கேட்டேன், . நான் கேட்டது.
1 இந்த சந்தல் Revolt 1857 சிப்பாய் கலகத்திற்கு முன்பு நடந்திருக்கிறது அதாவது 1855 ஆம் ஆண்டு. 10000 உயிர்களை தங்களின் சுதந்திரத்திற்காக பலி கொடுத்த இந்த கலகம்தானே உண்மையான முதல் சுதந்திர போர், பின்பு ஏன் அந்த சிப்பாய் கலகத்தை முதல் சுதந்திர போர் என்று நாம் படிக்கின்றோம் ?
2 இந்த கதை உண்மை என்றால் அன்றைய / இன்றைய இந்தியாவில் எந்த தாக்கமும் இந்த Genocide ஏற்படுத்தவில்லையா?
உங்களுக்கு தெரிந்தால் பதில் சொலுங்கள். இந்த கதை ஒரு கட்டு கதைதானே?
- Mrinzo Nirmal
******************************************
நண்பரே,,, இது கட்டு கதை அல்ல...
நம் நாட்டில் நடந்த கொடூரம்தான் இது...
இது இப்போதும் நடக்கிறது என்பதே இதில் இருக்கும் அவலம்...
திட்டமிட்டே இதை மறைத்து விட்ட்னர் என்பதே உங்களுக்கு என் பதில்
- பார்வையாளன்
இன்றைய இந்தியாவில் எந்த தாக்கமும் இந்த Genocide ஏற்படுத்தவில்லையா? "
ReplyDeleteஇன்றைய இந்தியாவிலும் இதே சாயலில் சம்பவங்கள் நடக்கின்றதே !!
பத்தாயிரம் பேர் செத்தார்கள், இந்தியாவின் பெரிய புரட்சி, அதன் நீட்சி இன்று வரை உள்ளதே ! இதை நம்பலமா????
ReplyDeleteசாந்தல் கலகப் புரட்சி செய்தவர்கள்.. பழங்குடியினர், திராவிடர்கள்...... அவர்கள் என்ன பிராமணார்களா? வரலாற்றுப் புத்தகத்தில் படிக்க..
அவர்கள் வெள்ளையனை மட்டும் எதிர்த்திருந்தால், அக்கதையை திரைப்படம் ஆக்கி இருப்போம், படித்து இருப்போம். அவர்கள் எதிர்த்தது வெள்ளையனையும் அவந்து அடிவருடிகளாக இருந்த ஆதிக்கச் சாதியினரையும் தானே .....
சாந்தல் கலகம் தாக்கத்தை ஏற்படுத்தவில்லையா???
நமக்கு அருகே மிக அருகே 40,000 தமிழர்கள் ஈழத்தில் இனப் படுகொலை செய்யப்பட்டார்கள். தமிழ்நாட்டில் என்னத் தாக்கம் வந்தது. வரலாற்றில் இவற்றைப் படிக்கப் போகிறமா???? இல்லையே !!!
அதே போலத் தான். பாதிக்கப்பட்டவன் ஆதிக்கச் சாதியாய் இருந்தால் மட்டுமே, அதுவும் வரலாறாய் மாறும். இல்லையேல் மறக்கப்பட்டு, மறுக்கப்பட்டு, எங்கோ ஒரு மூலையில் ஒரு பத்தி செய்தியாய் வந்துப் போகும்.... நாமும் கண்டும் காணமலும் இருப்போம். ....
இக்பால் செலவன்
நல்ல பகிர்வு..
ReplyDeleteஅறியாத விசயமாக இருக்கிறது.. இந்த சேதி உண்மைஎன்றால் இது தான் முதல் சுதந்திரபோராக இருக்க வேண்டும்..
ReplyDeleteஇதுவரை இப்படி ஒரு சம்பவம் நடந்ததாக கேள்வி பட்டதே இல்லை .தேடி படித்து பார்க்கலாம்
ReplyDeleteமறைக்கப்பட்ட ஒரு வரலாறு
ReplyDeleteசாரு உங்களது பெயரை மாற்றிகொள்ளுங்கள் என்று கூறுகிறாரே .மாற்றிகொள்வீர்களா?
ReplyDeleteசாந்தல் கலகம் பற்றிய எமது விரிவான பதிவு. படிக்கவும். http://bit.ly/hpDqbD
ReplyDeleteவரலாறுகள் வேண்டுமென்றே சில மகாத்தமாக்களால் மறைக்கப்பட்டது பல உண்டு. இது இன்னும் ஒரு உதாரணமே.
ReplyDeleteஅதேபோல நாகலாந்து மக்கள் பற்றியும் உண்மைகளை எவராவது வெளிக்கொண்டுவரவேண்டும். அந்த மக்கள் பெரும் கொடுமைகளை இன்றும் அனுபவித்துக்கொண்டுதான் உள்ளனர்.
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்
ReplyDeletesame to u
அந்த மக்கள் பெரும் கொடுமைகளை இன்றும் அனுபவித்துக்கொண்டுதான் உள்ளனர்"
ReplyDelete‘
ஆம்.. உண்மைதான்
சாந்தல் கலகம் பற்றிய எமது விரிவான பதிவு. படிக்கவும்”
ReplyDeleteபடித்து விட்டேன்.. விரிவான பதிவுக்கு நன்றி
சாரு உங்களது பெயரை மாற்றிகொள்ளுங்கள் என்று கூறுகிறாரே .மாற்றிகொள்வீர்களா?
ReplyDeleteஎன்ன செய்ய்லாம்... நீங்களே சொல்லுங்கள்
இந்த சேதி உண்மைஎன்றால் இது தான் முதல் சுதந்திரபோராக இருக்க வேண்டும்.”
ReplyDeleteகண்டிப்பாக..
ஒவ்வொரு நாட்டினதும் அறிவிக்கப்பட்ட வரலாற்றைவிட மறைக்கப்பட்ட வரலாறுதான் அதிக பக்கங்களைக் கொண்டிருக்குமோ?
ReplyDeleteதமிழ்நாட்டில் என்னத் தாக்கம் வந்தது. வரலாற்றில் இவற்றைப் படிக்கப் போகிறமா???? இல்லையே !!! ”
ReplyDeleteஇந்த உண்மையை வெட்கத்துடன் ஒப்புக்கொள்கிறென்