Tuesday, December 28, 2010

exclusive report: சாருவுக்கு ”இன்சல்டிங்” மெசேஜ் அனுப்பிய மனுஷ்யபுத்திரன் - கலகலப்பான புத்தக வெளியீட்டு விழா தொகுப்பு

 சாரு என்றால் எல்லோரையும் திட்டுபவர் என்ற பெயர் பரவியிருக்கிறது..உண்மையில் நான் அப்படிப்பட்டவன் அல்ல.  என சாரு கூறினார்.

இதற்கு முன்பும் , இதற்கு பிறகும் என்ற கவிதை தொகுப்பு நூல் ( எழுதியவர் : கவிஞர் மனுஷ்யபுத்திரன் ) வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது...

அந்த கவிதைகளை பற்றி பிறகு விரிவாக எழுதுவேன்..

இப்போது விழா பற்றிய சுருக்கமான தொகுப்பு , உங்கள் பார்வைக்கு




******************************************************************


  • விழா அரங்கு ஹவுஸ் ஃபுல் ஆகி விட்டது.. நின்று கொண்டு பலர் நிகழ்ச்சியை கவனித்தார்கள்.. 
  • அனைவருமே நேர்த்தியாக பேசினார்கள். சற்றும் தொய்வில்லாமல்  நிகழ்ச்சி நடந்தது
  • கவிதை பற்றிய நல்ல அறிமுகம் கிடைத்தது
  • பிரபஞ்சன், நா முத்துக் குமார், வசந்தபாலன், தமிழச்சி தங்க பாண்டியன், பாரதி கிருஷ்ணகுமார், வசந்தபாலன், சாரு நிவேதிதா, எஸ் ராமகிருஷ்ணன் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்
  • எஸ் ரா பேசுகையில், தனக்கு கவிஞர்கள் மேல் எப்போதும் ஒரு பொறாமை உண்டு என்றார். உரை நடையில் , பத்து பக்கங்கள் சொல்வதை கவிஞர்கள் சில வரிகளில் சொல்லி விடுவார்கள்.மனுஷ்ய புத்திரன் இந்த தொகுப்பில், கவிதையின் உச்சத்தை தொட்டு இருக்கிறார் என்றார்
  • நா முத்துகுமார் பேசுகையில் , “ நான் வெகு காலமாக மனுஷ்யபுத்திரனை கவனித்து வருகிறேன். படித்து வருகிறேன். இருவரும் சேர்ந்து கவிதை பயிற்சி வகுப்பு நடத்தி இருக்கிறோம். எங்களை இரட்டை புலவர்கள் என வேடிக்கையாக சொல்வார்கள். வெற்றிடத்தில் கிழக்கும்  இல்லை மேற்கும் இல்லை..  பறவையின் பாதைதான் திசையை உருவாக்குகிறது என்ற ஜென் தத்துவத்தை தொட்டு காட்டுகின்றன இவர் கவிதைகள்.வழக்கமாக இவர் கவிதைகளில் தனிமை , வெறுமை, துரோகம் போன்றவை இருக்கும். இந்த தொகுப்பில் அன்பு இருக்கிறது. விரைவில் அவரிடமிருந்து ஒரு நாவல் எதிர்பார்க்கிறேன் என்றார்
  •    தமிழச்சி தங்கபாண்டியன் பேசுகையில், மனுஷ்யபுத்திரன் தனக்கு வெகு நாள் பழக்கம் .. ஆனால் இந்த கவிதையை படித்தவுடன் ஏற்படும் நெகிழ்ச்சியால் அவரை ஒருமையில் அழைக்க தோன்றுகிறது என்றார் ( பாராட்டு முழுதும் அவரை ஒருமையிலேயே குறிப்பிட்டார் ) .. 
  • வசந்தபாலன் பேசுகையில், இப்போதெல்லாம் , இலக்கிய நிக்ழ்ச்சியில் இயக்குனர்கள் கலந்து கொள்வது என்றால் பயமாக இருக்கிறது என்று நகைசுவையுடன் குறிப்பிட்டார் ( மிஷ்கின் விவகார அனுபவம் !!! ) ஒவ்வொரு கவிதையையும் ஒரு சினிமா பாடலாக்க முடியும்...  அனைத்து கவிதைகளும் மனதில் ஒரு இமேஜ் உருவாக்குகிறது என்றார்
  • பலத்த எதிர்பார்ப்புகளுக்கிடையே சாரு மேடை ஏறினார்...  இந்த கவிதைகளை படித்ததும் , இவை உன்னத கவிதைகளாக தோன்றியது. உடனே மனுஷ்யபுதிரனுக்கு மெசேஜ் அனுப்பினேன்.. சர்வதேச அளவில் சிறந்த கவிஞர் நீங்கள்தான் என.. உடனே அவர் இன்சல்ட்டிங்காக ( ? !!! ) ஒரு பதில் அனுப்பினார் “ உங்கள் அன்புக்கு நன்றி “ நான் என்ன அன்பின் அடிப்படையிலா பாராட்டுகிறேன் ? அன்பின் அடிப்படையில் பாராட்ட வேண்டும் என்றால் என் மனைவியைதான் சிறந்த கவிஞர் என சொல்லி இருப்பேன்.. மனுஷ்யபுத்திரனை சிறந்த கவிஞர் என்று சொல்வது அன்பினால் அல்ல.. வாசிப்பின் அடிப்படையில்.. வாசிப்பு இல்லாதவர்கள் பேசுவதால்தான் , என் நாவலை சரோஜா தேவி கதை என்கிறார்கள்.. படித்து விட்டு பேச வேண்டும்..  நான் மனுஷ்யபுதிரன் கவிதைகளை படிக்காமல் வந்து விட்டு, சீரோ டிகிரியை பற்றி பேசினால் அது நியாயமா..மனுஷ்யபுத்திரன் ஒரு பேட்டியில், சாரு ஒருவரை பாராட்டுவார் ,,பிறகு அவரையே திட்டுவார் என்று சொன்னார்...   நகுலன், ஆதவன், போன்றோரை அன்றும் பாராட்டினேன்,, இன்றும் பாராட்டுகிறேன்.. நான் மாறுவதில்லை.. என்னால் பாராட்டப்படுபவர்கள் மாறினால் , நான் என்ன செய்ய முடியும்...  அடுத்து ஜெயலலிதா ஆட்சிக்கு வருவார் என பேசப்படுகிறது.. அதற்காக இவர் அன்னையே மேரியே என எழுத ஆரம்பித்தால் நான் திட்டிதான் ஆக வேண்டும்..ஆனால் இவர் அப்படி செய்ய மாட்டார்.. அதிமுக ஆட்சியில் அரசி என்ற கவிதை எழுதி பரபரப்பு ஏற்படுத்தினார்,,, கைது செய்யப்படுவார் என அச்சம் நிலவியது.. ஆனால் அதிமுக இலக்கியம் பற்றி ஆர்வம் காட்டாததால் கைது தவிர்க்கபட்டது...மை நேம் இஸ் கான் , பட் நாட் டெர்ரரிஸ்ட் என்பது போல ,. மை நேம் இஸ் சாரு , பட் ஐ வோண்ட் சேஞ்ச் என நகைச்சுவையுடன் முடித்தார்.பாரதிக்கு பிறகு அவர் பணியை செய்வது மனுஷ்யபுத்திரன் என புகழாரம் சூட்டினார் 
  • உலகதரத்தில் மனுஷ் எழுதுவதாக பிரபஞ்சனும் , ஒவ்வொரு கவிதையும் சிறப்பாக இருப்பதாக பாரதி கிருஷ்ணகுமாரும் பாராட்டினர்...   அவரது ஒவ்வொரு கவிதையும் , பல பழைய சம்பவங்களை , கவிதைகளை நினைவு படுத்துவதாக அவர் சொல்லி காட்டியது மிக சிறப்பாக இருந்தது.
  • உதாரணமாக நினைவுபடுத்தப்பட்ட பழைய கவிதை.”அவன் இறந்து விட்டான் என்றார்கள்  .. அவன் எப்போது வாழ்ந்தான்? “ 
  • ஏற்புரை நிகழ்த்திய மனுஷ் சிறப்பாக பேசினார்.. “ வாசிப்பின் அடிப்படையில் பாராட்டியதாக சாரு பேசினார் .. எனக்கு இந்த பாராட்டுகள் மறந்து விடும்.. ஆனால் இத்தனை பேர் காட்டும் அன்பு என்றும் மறக்காது “ என்றார் 
மனுஷ் கவிதைகளை பற்றி நிறைய பேச வேண்டும்...இன்னொரு பதிவில் பேசுவோம் 

13 comments:

  1. சூடான பதிவிற்கு நன்றி.

    ReplyDelete
  2. உங்களுடைய புகைப்படம் எங்கே...?

    ReplyDelete
  3. சகோ..!சாருவா ?!!...:))ஓகே..ஓகே...நடத்துங்க! :))))

    ReplyDelete
  4. நேரே பார்த்துபோன்ற உணர்வு. பதிவுக்கு, சுடச்சுட சூடான இந்த பதிவுக்கு நன்றிகள் சகா...
    அந்த பதிவுக்கும் வெயிட்டிங்.

    ReplyDelete
  5. Chek out my Update here:

    http://silarojakkal.wordpress.com/2010/12/25/%e0%ae%a4%e0%ae%b2%e0%af%88%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b4%e0%af%8d%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%b5%e0%ae%a3%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%a9/

    ReplyDelete
  6. 1. வெற்றிடத்தில் கிழக்கும் இல்லை மேற்கும் இல்லை.. பறவையின் பாதைதான் திசையை உருவாக்குகிறது
    2. மை நேம் இஸ் கான் , பட் நாட் டெர்ரரிஸ்ட் என்பது போல ,. மை நேம் இஸ் சாரு , பட் ஐ வோண்ட் சேஞ்ச்
    3. அவன் இறந்து விட்டான் என்றார்கள் .. அவன் எப்போது வாழ்ந்தான்? “

    These three statements made me really sit up and think. Beautiful and meaningful words.

    Chandramouli

    ReplyDelete
  7. இப்படிச் சுடும் என நான் எதிர்பார்க்கல....

    அன்புச் சகோதரன்...
    மதி.சுதா.
    பத்து ஆண்டினுள் பாதித்த பாடல்கள்.

    ReplyDelete
  8. சூடான பதிவிற்கு நன்றி.

    நன்றி

    ReplyDelete
  9. உங்களுடைய புகைப்படம் எங்கே...?

    இணைக்க மறந்து விட்டேன்

    ReplyDelete
  10. hese three statements made me really sit up and think. Beautiful and meaningful words.”

    எனக்கும் பிடித்த வரிகள் அவை

    ReplyDelete
  11. நல்ல பகிர்வு........

    ReplyDelete

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா