இதை படித்து விட்டேன்,,, ஆனால் என் உணர்வுகளை எழுத முடியவில்லை... அதாவது எழுத தெரியவில்லை..
இந்த நிலையில், நண்பர் நிர்மல் தன் கருத்துக்களை பதிவு செய்துள்ளார் ஒரு பின்னூட்டம் வழியாக..
பெரும்பாலானோர் பின்னூட்டத்தை படிப்பதில்லை..எனவே தனி பதிவாக அவர் கருத்தை வெளியிடுவதில் பெருமைப்படுகிறேன்...
””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””
காம்ரூப கதைகள்- ஒரு பார்வை by Nirmal
அன்பு நண்பரே காமரூப கதைகள் நாவலை பற்றி, எனது குறிப்புகளை வெகு நாளாய் வைத்திருகிறேன், யாரிடம், எப்படி பகிர்ந்துகொள்ள என்ற நிலை.
மேலும் நான் இப்படி பட்ட சிறந்த நாவலைப்பற்றி பேச தகுதி உள்ளவன்தானா என்ற அச்சம். இதை பதிவுசெய்ய internet இல் எங்கும் வழி இல்லை போல தோன்றுகிறது. ( there is no discussion on this Novel) முடிந்தால் ஒரு பதிவாக்கம் செய்யுங்கள். காமரூப கதைகள் , இது ஒரு இன்டர்நெட் நாவல், 108 குட்டி கதைகளை கொண்டது, இதற்கு மதிப்புரை எழுதுவதற்கு எனக்கு தகுதி இல்லை, எனது வாசிப்பு அனுபவத்தை பகிர்துகொள்ளலாம் என்று ஆசைபடுகிறேன்.
முதல்முறை படிக்கும்போது பெருமாள் மற்றும் அவரது நண்பர்களது காம விளையாட்டின் ஒரு தொகுப்பு என்று நினைத்தேன், அடுத்தமுறை மிகவும் பொறுமையாக படித்து பார்த்ததில் சில விஷயங்கள் புரிந்தன. அனைத்து கதைகளிலும் பொதுவாக இருபது mobile, gadgets, sex,women unable to keep realtionship permentantly, anger, violance, breaking friendship, extra maritial...
இந்த நாவலை சரியாய் புரிந்துகொள்ள " Master and Margareta" என்ற ரஷ்ய நாவலை படிக்கவும் என்றதால் , அந்த நாவலை பற்றி தேடினேன் .நல்ல வேளை youtube இல் அந்த நாவலின் திரைப்பட வடிவத்தை பார்த்தேன். அந்த நாவல் stalin அடக்குமுறைக்கு உள்ளான Soviet Russia காலத்து மனிதர்கள் எப்படி மனபிறழ்வுக்கு ஆளாகி வாழ்ந்து வந்தர்கள் பற்றியது. காம ரூப கதைக்கும் master and Margarita விற்கும் என்ன சம்பந்தம்?
காமரூப கதைகள் கதாபாத்திரங்கள் அனைத்தும் நாம் அன்றாடம் சந்திக்கும் மனிதர்களாகவும், அவர்களது செயல் எந்த ஒரு வியப்பையும் அளிக்காமலும் இருக்கின்றன,
அதைபோலத்தான் Master and Margareta வில், மக்கள் அவர்கள் செய்யும் காரியங்கள் எல்லாம் அவர்கள் அனுபவிக்கும் Repression இன் வெளிப்பாடு என்று புரியும், மேலும் அந்த நாவலில் பலருக்கு ( பெரும்பாலும் கவிஞர்கள், எழுத்தாளர்கள்) Schizophrenia என்ற மன நோய் இருப்பதாக வருகிறது. இந்த Schizophrenia என்றால்ல் என்ன ?
அதற்கும் mobile phone,internet,chat ,stress, feable relationship, gadgets,sex,phrophacy, religion, education system ... போன்றவைகளை சம்பந்தப்படுத்தி பார்த்தால் இன்றைய சமூகமும் அதில் வாழும் நாமும் கூட Schizophrenia நோயோடு வாழ்த்து வருகிறோமோ என்ற அச்சத்தை, சந்தேகத்தை நமக்குள் விதைக்கிறது. இந்த நாவலை ஒரு மனோதத்து நோக்கில் இதற்கு முன்பு அணுகி இருக்கிறார்களா என்று தெரியவில்லை, நான் ஒன்றும் மனோதத்துவ நிபுணர் இல்லை, எனவே உறுதியாக சொல்லமுடியவில்லை. உங்கள் அனுபவத்தையும் கூட பகிர்ந்து கொள்ளுங்கள். Mrinzo
கருத்துரையே இப்படியென்றால் பதிவு எப்படி இருக்கும்.... வித்தியாசமாயிருக்கு....
ReplyDeleteஅன்புச் சகோதரன்...
மதி.சுதா.
பொது அறிவுக் கவிதைகள் - 4
//அதில் வாழும் நாமும் கூட Schizophrenia நோயோடு வாழ்த்து வருகிறோமோ என்ற அச்சத்தை, சந்தேகத்தை நமக்குள் விதைக்கிறது//.
ReplyDeleteஉண்மைதான். இவரை இன்னும் கொஞ்சம் விரிவாக எழுதச்சொல்லக்கூடாதா? ஆவலாக இருக்கு பாஸ்.
புரியாத விஷயங்களெல்லாம் எழுதறீங்க... மறுபடியும் புரியாத விஷயத்துல மூக்கை நுழைக்க விரும்பலை... நான் துளைகளை மூடிட்டு கிளம்புறேன்...
ReplyDeleteநம்ம ரெண்டு பேருடைய அலெக்சா ரேட்டிங்கும் ஒரே பக்கமா இருக்கே... யார் முதலில் ஒரு லட்சத்திற்குள் நுழைவது என்றொரு ஆரோக்கியமான போட்டி வைத்துக்கொள்ளலாமா...
ReplyDeleteஅன்பு நண்பர்களுக்கு
ReplyDeleteஎனக்கு புலப்பட்ட ஒரு கோணத்தை சொன்னேன், மீண்டும் நாவலை படிக்கணும், அதைப்பற்றி தெரியனுமுன்னு எவ்வளவு ஆர்வமாய் இருக்கு. இதுக்கு மேல என்னால எழுதமுடியாது நன் ஒரு doctor இல்லை. இதுதான் Boss நம் ஊர்ல problem. இந்த நாவல் ஒரு ஐரோப்பா நாட்டில் வெளிவந்திருந்தால், doctor கள், அச்டிவிச்டுகள், cinema டைரக்டர் என்று இந்த நாவலை பற்றி எழுதி, விழிப்புணர்வு ஊட்டிருபார்கள். நம்ம ஊர்ல அவங்கள ரொம்ம பிஸி, நம்மளைப்போல அக்காத்திகள் எதயாவது பொலம்பலாம்.
Schizophrenia, borderline personality disorder போன்ற பல நோய்களுக்கு "Stress" ஒரு காரணம். இந்த ஒரு serious ஆன ஒரு விஷயத்தை இப்படி கிளு கிளுப்பா சொல்ல ஒரு தைரியம் மற்றும் அந்த விஷயத்தை பற்றி ஒரு அழ்ந்த பேரறிவு வேண்டும்.
Schizophrenia நோய் ஒரு மரபு வழி கூட. இந்த நோய் பற்றி பின்வரும் தளங்களுக்கு சென்று பார்க்கவும் பின்பு நம்ம நாவலின் பாத்திரங்களோடு ஒப்பிடவும்.
http://www.schizophrenia.com/earlysigns.htm
http://en.wikipedia.org/wiki/Schizophrenia
இந்த நாவலின் கதை பெருமாள் முலமாக சொல்லபடுகிறது, அதனால் நாமமும் அவரோடு சேர்த்துக்கொண்டு கும்மாளம் கொண்டாடம் போடுகிறோம், பெருமாள் மீது பொறமை வராத ஆம்பிளை இருக்காது. சற்று நமது கவனத்தை ஓவரு பெண்கள் மீது செலுத்துவோம். அவர்கள் அனைவரும் ஒரு விதமாய் Stressfulla இருப்பதாய் காண்கிறேன். எதுனால இந்த stress, யாரு காரணம் People or System.
இந்த புத்தகம் படித்தபிறகு நம்மளை மாதிரி ஆட்கள் என்ன செய்யணும் மீண்டும் 60 வது கதையை படிக்கணும்.
அதில்வரும் NLP என்ற நோய் பற்றி தேடினேன் கண்டுபிடிக்க முடியவில்லை. அந்த கதையில் வரும் மனநோய் Schizophrenia அறிகுறிகள் ஆனால் அந்த கடிதம் எழுதும் நபர் ஒரு தவறான காரணத்தை கூறுகிறார் என்று நெனைக்கிறேன், அப்படி ஒரு நோய் இல்லை என்று நினைக்கிறன், இந்த சந்தேகதைஎல்லாம் சாரு வந்து தீர்க்க மாட்டார், அது அவரது வேலையும் இல்லை. நாம்தான் யாராவது மனநல மருத்துவரிடம் பணம் கொடுத்து கேட்கணும், எல்லாம் TOV. மேலும் அந்த நபர் தான் கடைசியாக அசைவம் சாப்பிட நாளை நினைவில் வைத்திருக்கிறார், இந்த ரெண்டு விஷயங்களும் அவர் கூறும் மற்ற கருத்துக்கு ஒரு contradiction. அதற்கு பெருமாளின் பதிலை படித்துவிட்டு உங்கள் உணர்வுகளை எழுத்துகள்.
இப்படி contradiction களை கண்டுபிடிக்கமுடிந்தால் சாரு நாவலை என்னும் அதிகம் ரசிக்கலாம், இதுவரை நீங்கள் பெறாத அனுமவத்தை அது தரும்.
Mrinzo
05:00 to 7:10 PM
என்ன சொன்னாலும் அவர் எழுத்தில் ஒரு வித ஈர்ப்பு இருக்கிறது....
ReplyDelete[im]http://picasaweb.google.com/lh/photo/rCoIQtEiabMh2UI3bK4IKi9j97G3bgYlzpJdIyM-C88?feat=directlink[/im]