Saturday, December 25, 2010

மன்மதன் அம்பு,ஒரு மாறுபட்ட பார்வை -Mrinzo Nirmal.

மன்மதன் அம்பு படு தோல்வி படம் என எழுதியிருந்தேன். தோல்வியில் கவுரமான தோல்வி என்பதும் உண்டு.. ஆனால் மன்மதன் அம்பு படத்தின் தோல்வி கேவலமான தோல்வி என நான் சொன்னதை, நண்பர் பிரபாகரன் உள்ளிட்டோர் ஏற்கவில்லை..
நான் நடு நிலை தவறி விட்டதாக குற்றம் சாட்டினார்கள்..

ஆனால் பிரபாகரன் சினிமா பார்க்க சென்ற போது, 600 சீட் கொண்ட தியேட்டரில், ஊழியர்கள் உட்பட வெறும் ஆறு பேர் இருப்பதை பார்த்து நான் சொன்னது உண்மை என அறிந்தார்..
படம் பார்த்து முடித்ததும், என்னை விட கடுமையாக படத்தை விமர்சித்தார்..



இது ஒரு புறம்..

எதையும் வித்தியாசமாக அணுகும் நண்பர் Mrinzo Nirmal...


அவர் தனக்கே உரிய பாணியில் படத்தை விமர்சித்து இருக்கிறார்..சில விமர்சனங்களுக்கு பதிலும் தந்து இருக்கிறார்..


அவரது வித்தியாசமான கருத்து, இதோ உங்கள் பார்வைக்கி 

************************************************

கலாச்சார காவலர்களின் சிக்கலும், கமல்ஹாசனின் நக்கலும்
-Mrinzo Nirmal.


மன்மதன் அம்பு விமர்சனம் 
 



படம் வெற்றியா அல்லது  தோல்வியா என்கிறதை மக்களிடமும் காலத்திடமும் விட்டுவிட்டு எனது  படம் பார்த்த அனுபவத்தை  எழுதலாம்னு நெனைக்கிறேன். 

நான் ரசித்து பார்த்தேன், 

முக்கியமான விஷயம் பாட்டு இல்லை கமலுக்கும் KSRகும் ரொம்ப நன்றி. 

பொதுவா நம்மூர் படங்கள் ஒரு dream land படமாக இருக்கும் அல்லது எதார்த்த cinema என்று எதாவது ஒரு கொடுரம், அவலத்தை காட்டுவார்கள், 

இந்த படம் இப்படி இல்லை தலைவா. கொஞ்சம் நம்மள நோண்டும், நமளை குற்றவாளி கூண்டில் ஏற்றி மண்டைய கொடையும்.
             
இந்த கதையின் முடிவு உங்களுக்கு அருவருப்பா தோணுதா?  அது நமது சமுதாயத்தின்  பற்றி   கமலின் உச்சகட்ட நக்கல்தான் இந்த முடிவு,

//க்ளைமேக்சில் எல்லோரும் குழப்பமாக பேசி கடைசியில் சுபமாக முடிப்பது// இந்த முடிவு சுபம் இல்லை, கேவலம், குழப்பத்தின்  ஆரம்பம்  அதற்குத்தான்   அந்த குழப்பமான dialogues, கமல் flash back  scen இல்  எப்படி பின்னோக்கி நகர்ந்தார்களோ அதுபோல கதையோடு நகர்த்து  பாருங்கள், உங்களுக்கு விளங்கும்.  

//கமலுக்கும், த்ரிஷாவுக்கும் காதல் எப்படி வந்ததென்று சொல்லாதது// correct அது காதல் இல்லை. 

thats my point of view

படத்தை பற்றி பெண்கள் யாரும் கருத்து சொல்லவில்லை? குடும்பத்தோடு பாருங்கள், உங்கள் மனைவியோடு இந்த படத்தை பற்றி கலந்துரையாடுங்கள், உங்கள் பிள்ளைகளை பற்றி விவாதியுங்கள்.  

இந்த படத்ல சில scen களை சில கலாச்சார காவலர்கள் நீக்கிவிட்டார்களம், இப்படி  நீக்கிட்டு போனா     இந்த படத்தின் முடிவுதான் எதிர்காலத்தில்.

 என்னை பொறுத்தவரை ஒரு 100 பேருக்கு இந்த முடிவு அருவருப்பா தோனிச்சுனா, அது ஏன் என்று புரிந்தால்   அதுதான் இந்த படத்தின் வெற்றி.

5 comments:

  1. தமிழ்மணத்தில் 15-வது இடம் பிடித்தமைக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. நானும் எதாவது படத்த தியேட்டர்ல போய் பார்க்கலாம்னா ஒரு படமும் ஓட மாட்டேங்குது.... என்ன ஆச்சு தமிழ் சினிமாக்கு?

    ReplyDelete
  3. // ஆனால் பிரபாகரன் சினிமா பார்க்க சென்ற போது, 600 சீட் கொண்ட தியேட்டரில், ஊழியர்கள் உட்பட வெறும் ஆறு பேர் இருப்பதை பார்த்து நான் சொன்னது உண்மை என அறிந்தார்.. //

    அதுபற்றி இன்னும் விரிவாக எழுதாது எனது தவறுதான்... மூன்று தியேட்டர் கொண்ட அந்த காம்ப்ளெக்சில் ஒரு திரையரங்கில் மட்டும்தான் காலை 9 மணி ஸ்பெஷல் காட்சி போட்டிருந்தார்கள்... நாங்கள் 8.45 மணிக்கு உள்ளே சென்றோம்... ஆனால் படம் 8.30க்கே போட்டுவிட்டார்கள் போல... அந்த அரங்கம் நிரம்பிவிட்டதா அல்லது என்ன காரணம் என்று சரிவர சொல்லப்படவில்லை... நாங்கள் உட்பட சிலர் மட்டும் வேறொரு திரையரங்கில் அமர்த்தப்பட்டோம்... மற்றபடி கூட்டம் வேறொரு திரையரங்கில் இருந்தது என்பதுதான் உண்மை... படம் எவ்வளவு மொக்கையாக இருந்தாலும் பெரிய நடிகரின் படத்திற்கு முதல் ஒரு வாரத்திற்கு கூட்டம் பின்னி எடுக்குமே...

    ReplyDelete
  4. // தமிழ்மணத்தில் 15-வது இடம் பிடித்தமைக்கு வாழ்த்துக்கள். //

    repeat...

    ReplyDelete
  5. ஆந்திராவில் “மன்மத பாணம்” என்ற பெயரில் வெளியாகி படுதோல்வியை தழுவியுள்ளது.. இது அங்குள்ள சிலருக்கே அதிர்ச்சியை அளித்துள்ளதாம்...

    முதல் நாள் ஒரு காட்சி கூட ஹவுஸ்ஃபுல் ஆகவில்லை என்பது கவலையளிக்கும் காட்சி, கமலுக்கு...

    Collections on December 23, 2010

    Movie Name MORNING SHOW MATNEE SHOW FIRST SHOW SECOND SHOW
    Manmadha Banam 25358 28334 26064 29284

    ReplyDelete

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா