Pages

Sunday, January 2, 2011

தமிழ் மணம் டாப் 20 பதிவர்களில் என்னை கவர்ந்த இடுகைகள்/ பஞ்ச் வரிகள்

 
2010 கடைசி வாரத்தின் டாப் 20 பதிவர்களை தமிழ் மணம் வரிசை படுத்தி இருக்கிறது..
   இதை தவிரவும் பல பதிவுகளை படிக்கிறேன்,. ரசிக்கிறேன் ..
அனைத்டு பதிவுகளிலும் நான் ரசித்த விஷ்யங்களை ஒரே பதிவில் சொல்ல முடியாது..
ஆனால் சொல்ல விரும்புகிறேன்.
அதில் முதல் கட்டமாக இந்த வார டாப் 20 பதிவர்களின் இடுகைகளில் நான் ரசித்த வரிகளை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்..
வருடம் முடிவதால், நான் ரசித்த வரிகள் ஒட்டு மொத்த வருடத்தின் பார்வையாக இருக்கும்.

*********************************************************8
1 பதிவின் பெயர் : சிபி பக்கங்கள்
சி.பி.செந்தில்குமார்
 
இடுகை: சூப்பர்ஹிட் ஆன எந்திரன் உடைத்தெறிந்த கோலிவுட் செண்ட்டிமெண்ட்ஸ்
இந்த பதிவில் ஆதார பூர்வமாக பல தகவல்களை தந்து அசத்தி இருந்தார்.. 
எழுத்தாள்ர்களின் கதை சினிமாவுக்கு வரும்போது அது எடுபடாது என்பதை பட்டியலிட்டு விளக்கியது அழகு..
பஞ்ச் லைன்
இப்போது ஒரு எழுத்தாளரின் கதை சூப்பர் ஹிட் ஆகி ஓடுவதில் சந்தோஷம்.அமரர் சுஜாதா ஆத்மா சாந்தி அடையவும்,அவரது குடும்பம் பெருமைப்படவும்,புதிய எழுத்தாளர்களின் கதைக்கு டிமாண்ட் ஏற்படவும் இப்பட வெற்றி துணை புரிந்தால் மகிழ்ச்சி




( ஆழ்ந்த யோசனையுடன் எழுதப்பட்ட கட்டுரை) 
 


 
2பதிவின் பெயர் : வினவு!
வினவு!
.
இதில் எல்லா பதிவும் சமூகம் சார்ந்த பதிவு என்பதால் , பிடித்த பதிவு என எதையும் சொல்வது நியாயம் அல்ல... 
பாதிப்பு ஏற்படுத்திய பதிவு என்று வேண்டுமானால் சொல்லலாம்.
போபால் விபத்து சம்பந்தமாக ஏற்படுத்திய விழிப்புணர்வு குறிப்பிடத்தக்கது... 
அது சம்பந்தமாக இவர்கள் இயக்கம் வெளியிட்ட சிறப்பிதழை பலர் வாங்கி படித்தனர்..
திடீரென இலக்கிய விமர்சனத்தில் இறங்கி ஒரு பதிவு வந்ததையும் ரசித்தேன் 
அதிகளவு பாதித்த இடுகை: 

அம்பிகாவின் இறுதி ஊர்வலம்: யாருக்கும் கவலை இல்லை

பஞ்ச் லைன்


தொழிலாளிகள் அரசியல் உணர்வு பெறும்வரை அம்பிகாவின் மரணத்தை நாம் நினைவில் மட்டும் வைத்துக் கொள்வதைத் தவிர வேறு வழியில்லை

( பல ஊடகங்கள் கண்டு கொள்ளாததை , விரிவாக எழுதியது பதிவுலகம் ஒரு மாற்று ஊடகமாக உருவாகி வருவதை உணர்த்தியது)




3 பதிவின் பெயர் : உண்மைத்தமிழன்
உண்மைத் தமிழன்
கோவை விவகாரத்தில் விவகாரமான கருத்து சொன்னது ஒரு காமெடி என்றால் , அழகிய தமிழ் மகன் பாணியில், உண்மையான உண்மைதமிழன் யார் என்ற பிரச்சினையை கிளப்பியது மிகபெரும் காமெடி... 
ஆனால் அம்பேத்கார் படம் பற்றிய தகவல்கள் தந்த்துதான் இவருக்கு என்றென்றும் பெருமை சேர்க்கும் விஷ்யம்.. எனக்கு பிடித்தது இதில் காட்டிய அக்கறை
இடுகை :அம்பேத்கர் என்ன பாவம் செய்தார்..?
பன்ச் லைன் :  தேசத் தந்தை'யின் இந்த வாழ்க்கை வரலாற்றை பள்ளி மாணவர்களும் நிச்சயம் பார்த்தே தீர வேண்டும் என்று கட்டாயப்படுத்தி பார்க்க வைத்த அந்தப் புண்ணியவான் யாரோ.. அவருக்கு எனது முத்தங்கள். நன்றிகள்..!

அதுவெல்லாம் அந்தக் காலம் என்று கண்களில் ஏக்கத்தை வைத்துக் கொண்டு தொண்டையில் சொற்கள் சிக்கிக் கொண்டு பேச முடியாமல் தவி்த்தபடியே இப்போது சொல்கிறார்கள் 'பாபாசாஹேப் டாக்டர் அம்பேத்கர்' திரைப்படத்தை வெளியிடவே முடியவில்லையென்று..!





( இரு தலைவர்களை ஒப்பிட்டது பிடிக்கவில்லை.. ஆனாலும் அவர் சொல்ல வந்த விஷ்யம் நன்றாக வெளிப்பட்டது)



4பதிவின் பெயர் : ஸ்டார்ட் மியூசிக்!
பன்னிக்குட்டி ராம்சாமி
இவரது எல்லா பதிவுமே பிடிக்கும் என்பதால் , தனித்து ஒன்றை மட்டும் சொல்வது சிரமம்..
ஆனால் ஒரு வரியில் சிரிக்க வைத்த அந்த பதிவை மிகவும் ரசித்தேன்
இடுகை : அண்ணன் அழைக்கிறார் 

லதிமுக முதல் மாநில மாநாடு!


பன்ச் லைன் : எனக்கும் இருக்கு ஓட்டு!
20 சீட்டுத் தந்தாத்தான் கூட்டு!
நமது லட்சிய(?)திமுக வின் (அப்படியென்றால் என்ன என்பவர்கள் இங்கே பார்க்கவும்), முதல் மாநில மாநாடு விரைவில் நடக்க இருப்பதால் நமது கட்சி உறுப்பினர்கள் அனைவரும் நன்கொடை சேகரித்து வருமாறு அல்லது கொண்டு வருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். எதிர்வரும் தேர்தலை முன்னிட்டு மேலும் கட்சியை பலப்படுத்த (?) உறுப்பினர் சேர்க்கையை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.


(இதில் அடைப்பு குறியை பயன்படுத்திய விதம் சூப்பர் )
 


5 பதிவின் பெயர் : krpsenthil
கே.ஆர்.பி.செந்தில்
எழுத்தின் எல்லா துறைகளிலும் கலக்கும் இவர் எழுத்தில் நான் ரசிப்பது கட்டுரைகள்தான்..
கவர்ந்த பதிவு என்று சொன்னால் எல்லாம்..
மகிழ வைத்த இடுகை என்று வேண்டுமானால் ஒன்றை சொல்லலாம்
இடுகை: "ழ" என்கிற கனவின் விதை..
பன்ச் லைன் : "எனக்கு ஒரு கனவு இருக்கின்றது" என்ற மார்ட்டின் லூதர் கிங்கின் வாசகம் போலவே எங்களுக்கும் ஒரு கனவு இருந்தது


(கனவை செயல்படுத்தும் துணிச்சலும், வாய் சொல் வீரர் அல்ல என காட்டியதும் பிடித்து இருந்தது) 
 


6 பதிவின் பெயர் : பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்....ஜாக்கி சேகர் 
ஒரு முக்கிய பிரச்சைனை… ஆனால் யாரும் கண்டு கொள்ளவில்லை.. அதை இவர் அலசி இருந்தது பிடித்து இருந்தது…
இடுகை : சென்னை மாநகர பேருந்து இருக்கை மாற்றமும்,அறிவுக்கொழுந்து அதிகாரிகளின் யோசனையும்.
பன்ச்: உலகத்திலேயே பேருந்தினை எத்தனை பெரிய டிராபிக்காக இருந்தாலும் நடு ரோட்டில் நிறுத்தி, பயணிகளை ஏற்றி இறக்கும்  பேருந்து ஓட்டுனர்கள்... நமது அரசு பேருந்து ஓட்டுனர்கள்தான்... அவர்களை  யாரும் கேட்க முடியாது.. ஏனென்றால் அவர்களுக்கு சங்கம் இருக்கின்றது.


6பதிவின் பெயர் : சங்கவி
தரமான எழுத்தை வழங்குபவர் இவர்...


படித்தவுடன் சிரிக்க வைத்த பதிவு என்ற வகையில் இது எனக்கு பிடித்தது



விஜய்யின் காவலன் வெற்றி பெற சில வழிகள்
பன்ச் லைன் :  டிக்கெட் வாங்கும் போது வடை இலவசமா கொடுக்கலாம் அப்ப தான் எனக்கு முதல் வடை என்று சொல்லிக்கிட்டு ஒரு நாலு பேராவது வருவாங்க...


7 பதிவின் பெயர் : ☼ தொப்பீ...தொப்பீ ☼
THOPPITHOPPI
நான் பார்த்தவர்களில் வித்தியாசமான அரசியல் சமூக பார்வை கொண்டவர் இவர்.. பலர் எதிர்ப்பார்கள் என்று தெரிந்தும் துணிச்சலாக சொல்பவர்..
நான் அவர் கருத்தில் பலவற்றை ஏற்பதில்லை..
ஆனால் அவர் சொல்லும் விதம், துணிச்சல் ஆகிவற்றுக்காக நான் ரசித்தது...
  பதிவு : சீமானே பதில் சொல்லுங்கள்
பன்ச் லைன் :   நீங்கள் முதலில் உங்கள் கொள்கையை அறிவிக்கவும். உங்கள் கொள்கைக்கு எந்த கட்சி ஒத்துப்போகிறதோ பிறகு அந்த கட்ச்சிக்கு ஆதரவு தெரிவிக்கவும்.  எந்த ஒரு திட்டமும் இல்லாமல் வெறுமனே ஈழத்தமிழர் நலன் என்ற ஒற்றை வார்த்தையை  மட்டும் கையில் வைத்துக்கொண்டு சீட்டுக்காக அரசியல் நடத்த முயற்ச்சிக்க வேண்டாம்.



8பதிவின் பெயர் : http://cablesankar.blogspot.com
Cable Sankar
அண்ணனின் கும்பகோண விசிட் கட்டுரை மிக மிக சிறப்பான ஒன்று...  நாவல் போன்றது.. தன் தந்தை பற்றி சொல்வது நன்றாக இருந்தது...
ஆனால் என்னை சிரி சிரி என்று சிரிக்க வைத்த பதிவைதான் இங்கு சொல்ல விரும்புகிறேன்
பதிவு : தமிழ் சினிமா 2010
பன்ச் லைன் 
கமலின் மன்மதன் அம்பு பெரிய எதிர்பார்ப்பிற்கிடையே வந்தது. எதிர்பார்த்த அளவுக்கு இல்லை என்பதே ரிசல்ட்டாய் அமைந்திருக்கிறது.

( என்ன பெரிய எதிர்பார்ப்பு.?? ! முதல் நாளிலேயே கூட்டம் இல்லை... இது அவருக்கும் தெரியும்.. சும்மா சிரிப்புக்காக இப்படி எழுதியதை பார்த்து சிரித்து கண்ணீரே வந்து விட்டது )


8 பதிவின் பெயர் : டெரர் கும்மி
அருண் பிரசாத்
 
இடுகை : சாதனை முயற்சி
பன்ச் லைன் : பிடித்த வரியை கட் அண்ட் பேஸ்ட் செய்ய இயலவில்லை…


9 பதிவின் பெயர் : Philosophies Redefined
philosophy prabhakaran
இவரது எல்லா பதிவையும் முதல் ஆளாக படிப்பவன் நான் தான்...
ஆனால் பதிவு என்பதை தாண்டி பெர்சனலாக அவரை மதிக்க காரணமாக அமைந்த பதிவு..
பதிவு : பாலகன் பார்வையில் மகாத்மா...
பன்ச் லைன் : நண்பர்களின் உணர்வுகளை மதிக்கும் பொருட்டு இந்த பதிவை நீக்குகிறேன்


( இந்த பதிவை நேர்மையாகவும்  நாகரிகமாகவும் எழுதியது பிடித்து இருந்தது.. ஆனால் அவரது நண்பர்களின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்து, ஈகோ பார்க்காமல், பதிவை நீக்கி விட்டார்.. 
அந்த மெச்சூரிட்டி பிடித்து இருந்தது )


10 பதிவின் பெயர் : Dondus dos and donts






கேள்வி பதில் பகுதி பிடிக்கும்


சீனியர் பதிவரான இவரது நகைச்சுவை உணர்ச்சிக்கு ஒரு உதாரணம்,,


வங்காளதேசத்தில் 4 முறை திருமணம் செய்த ஒருவரை, அவரது 4 மனைவிகளும் ஒன்றாக சேர்ந்து சரமாரியாக அடித்துக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..உங்கள் கருத்து
பதில்: ஐந்தாவதாக மாட்டிக் கொள்ளக்கூடிய பெண் காப்பாற்றப்பட்டார்.



10 பதிவின் பெயர் : அரசையூரான்
ரஹீம் கஸாலி
 
இவர் இடுகையில் மிகவும் விரும்பி படித்தது…
அதென்ன மிசா அல்லது எமர்ஜென்சி
டீசண்ட் பதிவர்கள் வகையை சேர்ந்தவரான இவர் , சுவையாக எழுதுவதில் குறை வைப்பதில்லை
கதை , கவிதைகளை ரசித்து படிப்பேன்
இடுகை : சன் டி.வி-க்கு சில கேள்விகள்
பன்ச் லைன் : ராமர் பாலம் பற்றி உங்கள் தாத்தா கலைஞர் கடுமையான விமர்சனத்தை வைக்கிறாரே....இப்போது நீங்கள் ஒளிபரப்பும் ராமாயணம் தொடரில் ராமர் பாலத்தை காட்டுவீர்களா



11 பதிவின் பெயர் : தமிழா...தமிழா..
T.V.ராதாகிருஷ்ணன்
 
இவருடன் ஃப்ரீயாக பேச தயக்கமாக இருக்கிறது என்று முன்பு சொன்னேன்… அதெல்லாம் தேவையில்லை… நான் ஒரு நண்பன் என கூறிய அவர் பண்பு சென்ற வருடத்தில் மனதில் நிற்கும் ஒரு நிக்ழ்வு..
இவர் பதிவுகளில் அடி நாதமாக பொறுப்புணர்வும் விஷ்ய ஞானமும் இருக்கும்..
தெரியாத பல விஷ்யங்களை அள்ளித்ந்த இடுகை என்ற வகையில் இந்த இடுகை என்னை  மிகவும் கவர்ந்தது..
இடுகை : சுஜாதா..இன்னமும் வாழ்கிறார்
..பன்ச் :
நடிப்பில்..நடிகர்கள் எப்படி நடித்தாலும்..அவர்கள் பாணியில் சற்றேனும் சிவாஜியின் பாணி தெரிவதை மறைக்கமுடியாது..
அதுபோல இன்றைய எழுத்தாளர்கள் யாராயிருந்தாலும்..அவர்கள் எழுத்தில் எங்கேயேனும் சுஜாதா எட்டிப்பார்த்துக் கொண்டு இருப்பார்.
 
12 பதிவின் பெயர் : இந்திய மக்களாகிய நாம்....
வழக்கறிஞர் சுந்தரராஜன்
அரட்டை கச்சேரியாக இல்லாமல் ஆதாரத்துடன் , உழைப்புடன் எழுதுபவர் இவர்..ஒவ்வொன்றும் சின்சியராக எழுதப்படுவதால், ஒன்றை மட்டும் சொல்ல விரும்பவில்லை..
பன்ச் லைன் மட்டும் சொல்கிறேன்
”என்னிடம் தொலைக்காட்சி இல்லை, தொலைக்காட்சி ஊடகத்தில் நான் முழுநேர பணியாளனாக ஐந்து ஆண்டுகள் பணியாற்றியிருந்தபோதும்!  இப்போதும் அந்த தொந்தரவு இல்லாமல் சுகமாகவே வாழ்கிறேன்.”




13 , 14… தமிழ் மணம், வலைச்சரம்
பல கில்லாடிகள், பல பதிவுகள்..குறிப்பிட்டு சொல்ல முடியாது…




15 பதிவின் பெயர் : ரிலாக்ஸ் ப்ளீஸ் வருண்
என் கருத்துக்களை பிரதிபலிக்கும் சிலரில் ஒருவர்…
படித்தவுடன் ”அட” என வியக்க வைத்த இடுகை இது…
இடுகை :
குஷ்புவின் வெற்றியும் பத்தினிகளின் கண்ணீரும்
பன்ச் லைன் :
சட்டமும் குருடு, குஷ்பு ஒரு அரை வேக்காடுனு போகவேண்டியதுதான்!


16 பிச்சைக்காரன்
வெளியூர் பயணத்தை பற்றி இவர் எழுதிய கட்டுரை மிகவும் பிடிக்கும்.. ஆனால் அது இன்னும் பப்லிஷ் ஆகவில்லை… ஹி ஹி


17 பதிவின் பெயர் : மர்மயோகி
மர்மயோகி
வருட கடைசியில் நச் என ஒரு பதிவு போட்டு பழைய பதிவுகளை மிஞ்சி விட்டார் இவர்…
இடுகை :தமிழனுக்கு ஆங்கில புத்தாண்டு வாழ்த்து
பன்ச்:
ஓஹோ..ஆங்கிலேயனுக்கு அடிமைப்படுவதுதான் தமிழ் பற்றோ?
அப்படி என்றால்...
" wish you a happy new year தமிழா! "


18 பதிவின் பெயர் : மாற்றம்
Sindhan R
நல்ல கருத்துக்களை விறுவிறுப்பால சொல்லும் இடுகைகளை இதில் காணலாம்.
அதில் சுருக் என மனதில் பதிந்தது இது….
இடுகை :

பூகோளம் பொய்!

பன்ச் லைன் : பாடத்தில் படித்த
பள்ளிச்சிறுமி
நதியைப் பார்க்க வந்து
பூகோளம் பொய்யென்று சொன்னாள்


18பதிவின் பெயர் : பழமைபேசியின் பக்கம்
பழமைபேசி
பதிவுகள் அனைத்தும் பிடித்து இருந்தாலும், தலைப்பு ஒன்று உடனடியாக மனதை கவர்ந்தது..
அது : பதிவர்புரம்
பன்ச் லைன் : விழைதல் என்றால் விருப்பம். அப்படியாக, விருப்பப்பட்டு நடாத்தும் எந்தவொரு நிகழ்வும் விழாவாக நம்மிடையே உருவெடுக்கிறது. மகிழ்ச்சி, நல்லுறவு, நெறிமுறை, கொண்டாட்டம் முதலானவற்றை அடிப்படையாகக் கொண்டதுதான் விழா என்பது.


19 பதிவின் பெயர் : பிச்சைப்பாத்திரம்
சுரேஷ் கண்ணன்
அறிவு ஜீவி வகையை சேர்ந்த இவர் பதிவை, மாற்று பார்வைக்கு கவனிப்பேன்.
சாரு நூல் வெளியீட்டு விழாவௌ முழுதும் கவனித்து எழுதியவன் என்ற முறையில், அதை பற்றி என்ன எழுத போகிறார் என ஆவலுடன் பார்த்தேன்..
   ஆனால் ஏமாற்றம்.. சரியான பார்வை இல்லை..
ஆனால் அதை நிவர்த்தி செய்யும்படி இந்த பதிவு நேர்மையாக இருந்தது..

இடுகை :மன்மதன் அம்பு - அடி சறுக்கிய யானைகள்

பன்ச் லைன் :
கமல் மாதிரி இன்னும் சிலர் அதிபயங்கரமாக திட்டமிட்டு இது போல் பத்திருபது அம்புகளை தயாரித்தால் தற்போது தமிழ்த்திரையை ஆக்ரமித்திருக்கும் கழகவாரிசுகளை சுலபமாக விரட்டிவிடலாம். அந்தவகையில்  இந்தப்படம் தந்திருக்கும் ஒரே ஆறுதல் அது மட்டுமே. 


20 பதிவின் பெயர் : மங்குனி அமைச்சர்
மங்குனி அமைச்சர்
 
சுண்டி எழுக்கும் தலைப்புக்காக கவர்ந்த தலைப்பு… எழுத்தும் ஏமாற்றவில்லை…
அந்த இடுகை: "லேடிஸ் டெய்லர்" பலான படம் ???? (18 +)
பன்ச் லைன் : அந்த கேசட்டுல கடைசி வரைக்கு ஒரு பொண்ணோட கணுக்கால கூட காட்டல , நாங்களும் ஏதாவது தெரியுமான்னு அந்த படத்த திரும்ப , திரும்ப"மூணு வாட்டி போட்டு பாத்தோம்" . ஊஹும் ......................(அதுக்கு பேசாமா ஸ்ரேயா இல்ல நமிதா நடிச்ச படத்துக்கு போயி இருக்கலாம் .)

இதில் காணப்படும் ”ஏக்கம்” என்னை கவர்ந்தது…

24 comments:

  1. சில பேரை நான் வாசித்ததில்லை. அறிமுகப்படுத்தியதற்கு நன்றி!! :-)

    ReplyDelete
  2. Wish You Happy New Year

    http://sakthistudycentre.blogspot.com

    ReplyDelete
  3. என்னை பற்றிய விமர்சனத்திற்கு நன்றி....

    ReplyDelete
  4. மேட்டர் வித்தியாசமா இருக்கே அருமையான பதிவு

    ReplyDelete
  5. என்னை பற்றிய விமர்சனத்திற்கு நன்றி"

    நீங்கள் கொடுத்த பெயர் விளக்கம் என்னக்கு பிடித்து இருந்தது... இன்னும் பலவும் இருக்கின்றன

    ReplyDelete
  6. மேட்டர் வித்தியாசமா இருக்கே அருமையான பதிவு

    நன்றி நண்பரே

    ReplyDelete
  7. Wish You Happy New Year

    நன்றி

    சேம் டு யூ

    ReplyDelete
  8. சில பேரை நான் வாசித்ததில்லை. அறிமுகப்படுத்தியதற்கு நன்றி!! :-)

    ம்ம்..
    வாசித்து பாருங்கள்

    ReplyDelete
  9. விமர்சனத்திற்கு நன்றி....

    ReplyDelete
  10. ஆகா...முதல் இருபதில் அடியேனும் இருப்பதே நீங்க குறிப்பிட்டுத்தான் தெரியும்ங்க... பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete
  11. You are expanding your Boundries. Excellant. Proud to follow your Blog

    ReplyDelete
  12. ஆஹா..... என்னைப்பற்றி குறிப்பிட்டதற்கு ரொம்ப நன்றி சார். ரொம்ப சந்தோசமா இருக்கு, இந்த ஓட்டு, ஹிட்ஸ் எல்லாத்தையும் விட இதுலதான் சார் ரியல் நிறைவு...... மறுபடியும் நன்றி சார்.!

    ReplyDelete
  13. மகாத்மாவை நான் மறக்க நினைத்தாலும் நீங்க மறக்க விடமாட்டீங்க போல :))) நடத்துங்க...

    வெளியூர் பயணமா... எந்த ஊருக்கு பொய் வந்தீங்க... பதிவு எப்போ ரிலீஸ்...

    புத்தக சந்தைக்கு வரும் ஞாயிறு போகிறோம்தானே...

    ReplyDelete
  14. புதுப்பொலிவுடன் மீண்டு(ம்) வந்திருக்கிறேன்... நம்ம கடைப்பக்கம் வந்து பார்த்து கருத்து கூறவும்...

    http://www.philosophyprabhakaran.blogspot.com/

    ReplyDelete
  15. அடேஙகப்பா ரொம்ப அருமையான அலசல் .இந்த மேட்டரை ரெடி பண்ண 3 மணீ நேரம் ஆகி இருக்கும்னு தோணுது. உங்க உழைப்புக்கு ஒரு சல்யூட்.என்னைப்பற்றி எழுதுனதுக்கு நன்றி. ராம்சாமி சொன்ன மாதிரி சக பதிவர்கள் பாராட்டும்போதுதான் மனம் மகிழ்ச்சி அடைகிறது.

    ReplyDelete
  16. மிக்க நன்றி நண்பரே... மிக்க நன்றி

    ReplyDelete
  17. இதுல பதினாராவதா ஒரு பதிவரை பற்றி சொல்லி உள்ளீர்களே அவர் யார் சார் ?

    ReplyDelete
  18. என்னை விமர்ச்சித்ததற்கும், என் எழுத்துக்களை வாசிப்பதற்கும் மிக்க நன்றி நண்பரே...

    ReplyDelete
  19. தெரியாத பல பதிவர்களைத்தெரிந்துகொண்டேன்.னன்றி

    ReplyDelete
  20. இது போன்ற பதிவுகள் பதிவிடும்போது நேரம் பார்த்து பதிவிடவும், உங்கள் உழைப்புக்கேற்ற வரவேற்ப்பு(ஓட்டு) கிடைக்கவில்லை என்றுத்தான் நினைக்கிறேன். விடுமுறை நாட்களில் பதிவிடுவதை தவிர்க்கலாம்.

    ReplyDelete
  21. romba nandri sir (unga blog la tamil font copy past aakavillai

    ReplyDelete
  22. வித்தியாசமான எண்ணங்கள் தோழரே ///

    ReplyDelete
  23. வித்தியாசமான எண்ணங்கள் தோழரே ///

    நன்றி

    ReplyDelete
  24. romba nandri sir (unga blog la tamil font copy past aakavillai

    கவனிக்கிறேன்]

    ReplyDelete

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]