***************************************************************
- அவர் எனக்கு நல்லா தெரிஞ்சவரு.. தைரியமா பொண்ணு கொடுக்கலாம் “ என் குரலில் அபார நம்பிக்கை...
என்னை நம்பிக்கையுடன் பார்த்தார் பெண்ணின் தந்தை .
- என்னம்மா. உஷா... பையன் நல்ல எழுத்தாளராம்.. கெட்ட பழக்கம் எதுவும் இல்லாதவராம்.. உனக்கு கரெக்டா இருப்பாரு.. பொண்ணு பார்க்க வர சொல்லட்டுமா...”
- போங்கப்பா.. உங்க இஷ்டம் வெட்கத்துடன் உள்ளே சென்ற உஷாவை பார்த்ததுமே அவள் சம்மதம் புரிந்து விட்டது..
***********************
அண்ணன் உஷார் தமிழனுக்கும் எனக்கும் பல ஆண்டுகள் பழக்கம் உண்டு. எல்லா விஷயங்களிலும் எனக்கு முன்னோடியான அவர், திருமண விஷ்யத்திலும் முன்னோடியாக இருக்க வேண்டும் என விரும்பினேன்.
அவருக்கோ எந்த பெண்ணையும் பிடிக்கவில்லை..
கடைசியில், வட பழனி முருகன் கோயிலுக்கு ஒரு நாள் சென்ற போதுதான் அவளை பார்த்தார்.. கண்டதும் காதலில் விழுந்தார்...
மெயில், எஸ் எம் எஸ் என நாடு முன்னேறி விட்டாலும், கடிதம் மூலமே தன் காதலை சொல்ல விரும்பினார் அவர்..
நானும் சரி என விட்டு விட்டேன்.
- தம்பி,.. இந்த லெட்டரை அவளிடம் சேர்த்து விடு .வெட்க சிரிப்புடன் ஒரு 500 பக்க நோட்டை கொடுத்தார்..
அந்த நோட்டுக்குள் கடிதம் இருக்கிறதா என தேடினேன்..
காணவில்லை
- வழக்கம் போல மறந்து விட்டாரா?
என்ன தேடியும் கிடைக்கவில்லை
- என்ன தேடுற ? கேட்டார்
- லெட்டர் காணோம் .
_ லெட்டர் காணோமா? அட முட்டாளே.. இந்த நோட்டில்தான் கடிதம் எழுதி இருக்கிறேன்
- இவ்வளவு பெரிய லவ் லெட்டரா...? அசந்து விட்டேன்
இத்தனை நாள் லவ் ஏன் வொர்க் அவுட் ஆகவில்லை என புரிந்தது...
- அண்ணே.. லவ் லட்டர் கொடுத்து, காதலிச்சு, எதிர்ப்பு சமாளிச்சு, கடைசியில் கல்யாணம் செய்யுமளவுக்கு டைம் இல்லை... நான் நேரடியா அண்ணியோட அப்பாவிடம் பேசி மேட்டரை முடிச்சு வைக்கிறேன்.
அவர் என் நண்பன் சோமுவுக்கு தெரிந்தவர் என்பதால் அவருடன் பேசி சம்மதிக்க முடியும் என நம்பினேன்..
என் நம்பிக்கை வீண் போகவில்லை...
பெண் பார்க்க வர சொல்லி விட்டார்
******************************
பொண்ணு உஷார் தமிழனோட எழுத்துக்க்ளுக்கு ரசிகையாம்.. எனவே எளிதில் சம்மதம் கிடைத்து விட்டது..
நிச்சயம் செய்ய முடிவானது..
தட்டு மாற்றிகொள்ள அனைவரும் தயாரானார்கள்..
அப்போது,
- நிறுத்துங்க...
குரல் கேட்டு திகைத்தோம்...
உஷார் தமிழன் கோபத்தோடு உள்ளே நுழைந்தார்..
குழப்பமாக இருந்தது...
உஷார் தமிழன் தான் என் பக்கத்தில் இருக்கிறாரே.. புதிதாக நுழையும் இவர் யார்?
- நான் தான் உணமையான உஷார் தமிழன்... எனக்கு கல்யாணம் செஞ்சு கொடுங்க...
எனக்கு பழைய சம்பவம் நினைவுக்கு வந்தது..
எங்கள் ஊரில் முருகன் என ஒருவன் இருந்தான்... கடை ஒன்று நடத்தி வந்தான்.. பழைய பேப்பர் கடை..
போர்டு இல்லாமல் நடத்த ஒரு மாதிரியாக இருந்ததால், கடை என எழுதி வைத்தான்.
ஆனால் வேறு பல கடைகள் முளைக்கவே, பேப்பர் கடை என பெயரை மாற்றினான்..
நியூஸ் பேப்பர் கேட்டு சிலர் வர ஆரம்பித்தனர்..
எனவே பழைய பேப்பர் கடை என பெயர் மாற்றினான்..
பேர் வைத்த நேரம், வியாபாரம் சூடு பிடித்தது..
இதை பார்த்த இன்னொருவன் போட்டி கடை ஆரம்பித்தான்...
அவன் பெயரும் பழைய பேப்பர் கடைதான் .. குழப்பம் ஏற்பட்டது...
எனவே முருகன் பழைய பேப்பர் கடை என பெயர் மாற்றம் செய்தான்...
புது ஆளும் முருகன் பழைய பேப்பர் கடை என பெயர் மாற்றி கொண்டான்..
கடுப்பான முருகன், பழைய முருகன் பழைய பேப்பர் பழைய கடை என பெயர் மாற்றி கொண்டான்.
இதற்கிடையே இன்னொருவனும் போட்டி கடை ஆரம்பித்தான்..
முருகன் ப்ழைய பேப்பர் கடை..
முதல் போட்டியாளன் திகைத்து போய், பழைய முருகன் பழைய பேப்பர் கடை என பெயர் மாற்றினான்..
முருகனுக்கு டென்ஷன் ஆகிவிட்டது..
பழைய பழைய பழைய முருகன், பழைய பழைய பழைய பேப்பர், பழைய பழைய பழைய கடை என தழைய தழைய புட்வை கட்டுவது போல பிரமாண்டமாக பெயர் வைத்தான்..
அதே போல , இங்கும் புதிதாக ஒரு உஷார் தமிழன் வந்தது அதிர்ச்சியாக இருந்தது...
- அப்பா... யார் உண்மையான உஷார் தமிழன் என கண்டு பிடித்து இன்னிக்கே முடிவு பண்ணுங்க ... இல்லைனா எனக்கு கல்யாணமே வேண்டாம்... தீர்மானமாக சொன்னாள் உஷா..
அவளது தந்தை என்னை விரோதமாக பார்த்தார்..
நான் தானே இந்த ஏற்பாட்டை செய்தவன்..
சட் என ஐடியா தோன்றியது...
இரு உஷார்களையும் தனி தனி இருக்கையில் அமர வைத்தேன்..
இருவர் கையிலும் கேள்வி தாள்கள் கொடுத்தேன்...
-ஒரு மணி நேரம் டைம்.. உங்கள் பதிலை வைத்து உண்மை, போலி கண்டு பிடிக்கப்படும்...
இருவரும் தன்னம்பிக்கையுடன் எழுத ஆரம்பித்த்னர்...
யார் உண்மை என எனக்கே குழம்பிவிட்டது..
அந்த கேள்வி தாள் இப்படி இருந்தது...
உண்மை கண்டறியும் வினா தாள்
கீழ் காணும் வினாக்களுக்கு பத்து வரிகளில் பதில் அளிக்கவும்..
1.” பிட்டு ”சிறு குறிப்பு வரைக
2 புனித போர் என்றால் என்ன ?
3 மழை நேரம்... காரில் வருகிறீர்கள்... பேருந்து நிறுத்ததில் பேருந்துக்காக காத்து இருக்கின்றனர் சிலர்... ஓர் அழகான பெண்.. மருத்துவ மனைக்கு அவசரமாக செல்ல வேண்டிய மூதாட்டி... அவசரமாக இண்டர்வியூ செல்ல வேண்டிய பக்கத்து வீட்டு பையன் - நால்வரும் லிஃப்ட் கேட்கிறார்கள்.. அந்த காரில் இருவர்தான் செல்ல முடியும்... என்ன செய்வீர்கள்
4 .காப்பி - சிறு குறிப்பு வரைக...
************************
இருவரும் எழுதி முடித்து , பேப்பரை கொடுத்தனர்...
முதல் நபர் விடைகளை பார்த்தேன்..
கீழ் காணும் வினாக்களுக்கு பத்து வரிகளில் பதில் அளிக்கவும்..
1.” பிட்டு ”சிறு குறிப்பு வரைக
பரிட்சையில் பிட்டு அடித்துதான் பாஸ் ஆனேன்..
ஒரு முறை , இடுப்பில் வைத்து இருந்த பிட், கண்டுபிடிக்கப்பட்டு விட்டது...
ஆசிரியர் திட்டினார்,,
நான் சொன்னேன் “ கற்றது கையளவு.. கல்லாதது இடுப்பளவு “
2 புனித போர் என்றால் என்ன ?
ஆன்மீகம் சம்பந்தப்பட்ட விஷ்யம்..
3 மழை நேரம்... காரில் வருகிறீர்கள்... பேருந்து நிறுத்ததில் பேருந்துக்காக காத்து இருக்கின்றனர் சிலர்... ஓர் அழகான பெண்.. மருத்துவ மனைக்கு அவசரமாக செல்ல வேண்டிய மூதாட்டி... அவசரமாக இண்டர்வியூ செல்ல வேண்டிய பக்கத்து வீட்டு பையன் - நால்வரும் லிஃப்ட் கேட்கிறார்கள்.. அந்த காரில் இருவர்தான் செல்ல முடியும்... என்ன செய்வீர்கள்
மூதாட்டி, அந்த பையன் எப்படி போனால் எனக்கென்ன? அந்த பெண்ணை காரில் ஏற்றிக்கொள்வேன்...
4 .காப்பி - சிறு குறிப்பு வரைக...
நான் சாப்பிடுவது, டீ தான்
அடுத்த நபர் விடைகளை பார்த்தேன்...
கீழ் காணும் வினாக்களுக்கு பத்து வரிகளில் பதில் அளிக்கவும்..
அது முடியாது... பத்து பக்கங்களுக்கு குறைவாக எழுதி எனக்கு பழக்கம் இல்லை... அப்ஜெக்டிவ் வகை தேர்வுகளிலேயே அடிஷனல் ஷீட் வாங்கியவர்கள் நாங்கள்...
1.” பிட்டு ”சிறு குறிப்பு வரைக
தன் மாமியாரை துப்பாக்கியால் சுட்டு விட்டான் என்பது ஒருவன் மேல் குற்ற சாட்டு,.. குறி தவறியதால் அவள் தப்பி விட்டாலும், இவன் நீதி மன்றம் முன் நிறுத்தப்பட்டான்...
- நீதிபதி அவர்களே... தவறு என் மீது அல்ல.. குடிபோதையில்தான் இப்படி நடந்தது.. எனவே குற்றம் நான் அடித்த சரக்கின் மீதுதான் என்றான்
நீதிபதி சொன்னார்
- நீ எப்படி இருந்தாலும் அந்த குற்றம் செய்திருப்பாய்.. குடித்து இருந்ததால் குறி தவறி விட்டது.. எனவே கொலை குற்றத்தில் இருந்து காப்பாற்றி சரக்கு நன்மைதான் செய்து இருக்கிறது என்றார்..
அதைப்போல , பிட்டு படங்களால்தான் என் படிப்பு பாழானது என ஒரு காலத்தில் நினைத்தேன்..
ஆனால் இப்போது பார்த்தால் பிட்டு பட விமர்சனங்கள் எழுதி புகழ் பெற்று வருகிறேன்.. எனவே பிட்டு படங்கள் எனக்கு நன்மையே செய்கிறது....
சரக்கு, பிட்டு படம் போன்றவை மேல் சுமத்தப்படும் குற்றச்சாட்டுகள் தவறானவை..
2 புனித போர் என்றால் என்ன ?
நினைக்க ஒரு மனம் இருந்தால் அதை மறந்து விடலாம்... அதை மறக்க ஒரு மனம் இருந்தால், நினைத்து விடலாம்.. இருப்பதோ ஒரு மனம்.. நான் என்ன செய்வேன்..
3 மழை நேரம்... காரில் வருகிறீர்கள்... பேருந்து நிறுத்ததில் பேருந்துக்காக காத்து இருக்கின்றனர் சிலர்... ஓர் அழகான பெண்.. மருத்துவ மனைக்கு அவசரமாக செல்ல வேண்டிய மூதாட்டி... அவசரமாக இண்டர்வியூ செல்ல வேண்டிய பக்கத்து வீட்டு பையன் - நால்வரும் லிஃப்ட் கேட்கிறார்கள்.. அந்த காரில் இருவர்தான் செல்ல முடியும்... என்ன செய்வீர்கள்
அந்த பையனிடம் காரை கொடுத்து, அந்த மூதாட்டியை மருத்துவ மனையில் விட்டுவிட்டு, இண்டர்வியூ செல்லுமாறு சொல்வேன்... முடித்து விட்டு வீட்டில் காரை விட்டுவிடுமாறு சொல்வேன்..
நான் அந்த பெண்ணுடன் பேருந்து நிலையத்தில் தனியாக நிற்கும் வாய்ப்பு கிடைக்கும் ... வொர்க் அவுட் செய்ய முடியுமா என பார்ப்பேன்....
4 .காப்பி - சிறு குறிப்பு வரைக...
நமக்கு வேண்டிய இயக்குனர் காப்பி அடித்தால் தவறில்லை... நம் ஆக்கங்களை பிறர் காப்பி அடித்தால் தவறு...
*********************
- இவர்தான் உண்மையான உஷார் தமிழன்.. கண்டு பிடித்து விட்டேன்.... சந்தோஷமாக குரல் எழுப்பினேன்..
உஷார் முகத்தில் பெருமிதம்...
- எப்படி கண்டு பிடுச்சீங்க... கேட்ட உஷாவிடம் விடைத்தாளை நீட்டினேன்...
சரக்கு, பிட்டு படம்...
படிக்க படிக்க அவள் முகம் மாறியது...
- நீங்க கிளம்புங்க உங்களுக்கு லெட்டர் போடுறோம் , உஷார் தமிழனை அனுப்பிய அவள், என்னை ஆஃபீஸ் ரூம் அழைத்து சென்றாள்..
******************************************
ரத்த களறியுடன் வெளியே வந்த நான் இப்போது தேடுவது நல்ல மருத்துவரை... உண்மையான மருத்துவர் இருந்தால் சொல்லுங்க.. இன்னொரு போலி வேண்டாம் !!!!!!
அருமை. அருமை...........
ReplyDeleteவெறும் மருத்துவர் போதுமா இல்ல.... ;)
ReplyDeletehahahaaaa.. this is hilarious!
ReplyDeleteஎதுவும் சொல்வதற்கில்லை... சம்பந்தப்பட்டவர் இதைப் படித்தால் கடுங்கோபம் கொள்வார் என்று மட்டும் உறுதியாக தோன்றுகிறது... எதற்கு இந்த வேண்டாத வேலை...
ReplyDeleteஅருமை. அருமை...........
ReplyDeleteநன்றி
எதற்கு இந்த வேண்டாத வேலை”
ReplyDeleteஉங்கள் அன்புக்கு நன்றி..
உங்கள் மெச்சூரிட்டி வியக்க வைக்கிறது..
hahahaaaa.. this is hilarious!
ReplyDelete:)
வெறும் மருத்துவர் போதுமா இல்ல.... ;)
ReplyDeleteஹா ஹா
:)) உனாதானாவின் விஷயத்தில் விளையாடாதீங்கன்னே! பாவம் அவரு!
ReplyDeleteநல்ல காமெடி மற்றும் வில்லங்கமான கதை
ReplyDeleteஜோக் தானே என் அப்பன் முருகன் அருளால் சீரியஸா எடுத்துக்க மாட்டார்
ReplyDeleteஉண்மையார் என்று முன்பு லக்கி எழுதுவார், ஆனா இப்போ
ReplyDelete'உண்மை' யார் என்று போட்டி நடக்கிறது. 'லுக்'காளரின்
இந்தக் குழப்பத்தை லக்கி'லுக்' தீர்த்து வைக்கக் கோருகிறேன். :)))
உங்களால் மட்டும் எப்படி இதெல்லாம் முடியுது? நன்றாகத்தான் இருக்கு. ஆனால் பலர் உங்களை கொலை வெறியுடன் தேடிவருவதாக கேள்விப்பட்டேன். கவனம் ஹ..ஹா..ஹா...
ReplyDeletethamizhan sari athu enna unmaiththamizhan?marravar ellaam polith thamizharkalaa? naan ninaiachchen neenga pathivu pottutteenga!
ReplyDeleteபகிர்வுக்கு மிக்க நன்றிங்க ..
ReplyDelete// நமக்கு வேண்டிய இயக்குனர் காப்பி அடித்தால் தவறில்லை... நம் ஆக்கங்களை பிறர் காப்பி அடித்தால் தவறு...//
ReplyDelete!
Super
ReplyDeleteசான்சே இல்ல அமர்க்கள படுத்திடீங்க.............
ReplyDeleteபழைய முருகன் பேப்பர் காமடி சூப்பர் .......
ReplyDeleteஹ..ஹ..ஹ... அருமை..
ReplyDeleteஇங்குள்ள கருத்துக்களும் கற்பனையே...
அன்புச் சகோதரன்...
மதி.சுதா.
பிரபல பாடகரின் பிரபலமில்லாத மறைவு - Bobby Farrel
ஹ..ஹ..ஹ... அருமை..
ReplyDeleteஇங்குள்ள கருத்துக்களும் கற்பனையே...
அன்புச் சகோதரன்...
மதி.சுதா.”
நன்றி
:)) உனாதானாவின் விஷயத்தில் விளையாடாதீங்கன்னே! பாவம் அவரு “
ReplyDeleteபழைய உனாதானாவா? புது உனாதானாவா?
:)
நல்ல காமெடி மற்றும் வில்லங்கமான கதை
ReplyDeleteநன்றி
ஜோக் தானே என் அப்பன் முருகன் அருளால் சீரியஸா எடுத்துக்க மாட்டார்
ReplyDeleteஐ ஹோப் ஸோ
பழைய முருகன் பேப்பர் காமடி சூப்பர் .......
ReplyDeleteமத்த மேட்டர்லாம் காமடியா இல்லையா?
middleclassmadhavi said...
ReplyDeleteSuper
நன்றி மேடம்
வழி மொழிகிறேன் அரபுதமிழன்
ReplyDeleteஆனால் பலர் உங்களை கொலை வெறியுடன் தேடிவருவதாக கேள்விப்பட்டேன். கவனம் ஹ..ஹா..ஹா”
ReplyDeleteஹா ஹா
நன்றி ஜனா
ReplyDeleteநன்றி அரசன்
ReplyDelete