Wednesday, January 5, 2011

கத்தியை தீட்டாதே !!

” அவள் உயிருடன் இருக்க கூடாது “ முடிவு செய்த பின் , நான் என்ன செய்ய வேண்டும் என திட்டமிட தொடங்கினேன்.
எனக்கு முடிவு எடுக்க நேரம் ஆகும். ஆனால் முடிவு எடுத்து விட்டால் விரைவாக செயலாற்ற தொடங்குவேன்.
ரம்யாவை காதலிக்கும் முன்பு கூட மிகவும் யோசித்தே முடிவு செய்தேன்.
அவள் அழகு, அறிவு, இளமை என்ற கூட்டணிக்குள் இடம்பிடிக்க யாராக இருந்தாலும் முயல்வார்கள்.


ஆனால் அவளே தூது விட்டும் கூட நான் சம்மதம் சொல்லவில்லை..
மிகவும் யோசித்த பின் ஒரு பூங்காவில்தான் என் சம்மதம் சொன்னேன்.
அப்போது அவள் கண்களில் தோன்றிய மலர்ச்சி, பூங்காக்களின் பூக்களை விட ஒளி மிகுந்ததாக தோன்றியது..
அதன் பின் வேகமாக செய்லாற்ற தொடங்கினேன்…
விதவிதமான இடங்களுக்கு சென்றோம்… சாதாரண இடங்கள் கூட அவள் வருகையால் உல்லாச புரி ஆனது போல இருந்தது…
- என் மேல் இத்தனை ஆசை வைத்து கொண்டு , ரொம்பத்தான் பிகு செய்தீர்களே ? அவள் கிண்டலை நான் நான் கண்டு கொள்ளவில்லை..
இந்த உல்லாச பயணத்தில் ஒரு சின்ன தடங்கல் வந்தது… அது பெரிய பிரச்சினையாக மாறும் என எனக்கு தெரியாது…
இதற்கு முன்பே கூட ஒரு பிரச்சினை வந்த்து.. ஆனால் அது சுமுகமாக முடிந்தது..
ரம்யாவின் தோழி கீதா.. ரம்யாவை விட அழகி.. பணக்காரி..
-உங்க கிட்ட தனியா பேசணும் என்றாள்..
- என்னிடம் பேச என்ன இருக்கு ? எனக்கு குழப்பம்
- சரி. என் வீட்டுக்கு வா.. யாரும் இல்லை..தனியா பேசலாம் என்றேன்..
வீட்டுக்கு வந்து கொஞ்ச நேரம் எதுவும் பேசவில்லை…
மெதுவாக சொன்னாள்
- ஐ ல்வ் யூ… உங்களுக்கு ஓகேனா எங்க வீட்ல சம்மதம் வாங்கிடுவேன்.. எந்த பிராப்லமும் இருக்காது..
திகைத்தேன்..
-இது என்ன தொல்லை…? இவள் இப்படி நினைப்பாள் என்றால் வீட்டுக்கு வர சொல்லி இருக்க மாட்டேனே.. இந்த விவகாரம் தெரிந்தால் ரம்யா என்ன நினைப்பாள்… ? இவளை கட் செய்து விட வேண்டும் ஆனால், இப்போது எதுவும் சொல்ல வேண்டாம் என நினைத்தேன்..
- கொஞ்சம் யோசிக்க டைம் வேண்டும் என்றேன்..
அந்த சம்பவத்துக்கு பிறகு அவள் வெளியூர் சென்று விட்டாள்..
அந்த பிரச்சினை அப்படியே முடிந்தது..
அதே போல இப்பொது வந்த தடங்கலும் நீங்கும் என நினைத்தது தவறு..
ரம்யாவை ஒரு வாரம் பார்க்க முடியவில்லை..
போனிலும் பேசவில்லை…
- என்ன ஆச்சு…
போன வாரம், ஒரு நாள்  காலை எதிர்பாராத விதமாக போன் செய்தாள்
- ரம்யா.. என்ன ஆச்சு?
லேசாக அழும் குரல் கேட்டது
- சாரி.. நாம் பிரியும் நேரம் வந்து விட்டது.. என் வீட்டுல வேற மாப்பிள்ளை பார்த்துட்டாங்க.. என்னால தடுக்க முடியல
அதிர்ந்தேன்..
-  என்ன இவ்வளவு கூலா சொல்ற? எதிர்ப்பு வரத்தான் செய்யும்.. சந்தித்துதான் ஆகணும்
- இல்லை… நான் காதலிச்சது தப்புனு இப்ப உணர்றேன். சாரி.. என்னை மன்னிச்சுடுங்க
கோபம் தலைக்கேறியது…
- என்னென்ன ஆசை வார்த்தைகள் பேசி இருப்பாள்… இப்ப ஜஸ்ட் லைக் தட் , இப்படி சொல்றா..
போனை கட் செய்தேன்
ஒரு வாரம் ஒரே குழப்பம்..
பின்புதான் முடிவு செய்தேன்..
- அவளை கொன்று விட வேண்டும்…
எங்கு செய்வது…
அவள் அலுவலகத்தில் வைத்து முடிப்பது நல்லது..
ல்ன்ச் முடித்து விட்டு அவள் அறையில் தனியாக ஓய்வு எடுப்பாள் ..அதுதான் நல்ல சந்தர்ப்பம்…
கொன்று விட்டு கீதாவுடன் செட்டில் ஆகி விட வேண்டியதுதான்..
நேற்று எதிர்பாராத விதமாக கீதா வீட்டுக்கு வந்தாள்
- என்ன திடீர்னு ? குழப்பம் கலந்து கேட்டேன்
- உங்க முடிவை தெரிஞ்சுக்கலாம்னு வந்தேன்
- யோசித்து பார்த்தேன்… எனக்கு ஓக்கேதான்
அவள் பாய்ந்து வந்து கன்னத்தில் முத்தமிட்டாள்.
இரவு என் வீட்டிலேயே தங்கினாள்..
இதோ நான் ரம்யாவை கொல்ல கிளம்பும்போது அவள் நிம்மதியாக தூங்கி கொண்டு இருக்கிறாள்..
-எப்படி கொல்வது?
படுக்கை மீது ஒரு கூர்மையான கத்தி கிடந்தது..
-இது போதும்..இதில் விஷம் தடவி, லேசாக கீறினால் போதும்.. அதிக சத்தமோ , ரத்தமோ இன்றி வேலை முடியும்..  நான் கெமிக்கல் எஞ்சின்யர்.. எந்த விஷம் இதற்கு சரியாக இருக்கும் என எனக்கு தெரியும்.

ரம்யா அலுவலகம் சென்றேன்…
என்னை யாரும் பார்த்து விடாமல் கவனமாக இருந்தேன்..
யாரும் இல்லை…
அவள் தன் அறையில் , மேஜையில் தலை சாய்ந்து கண் மூடி இருந்தாள்..
கத்தியை கைரேகை பதியாமல் எடுத்தேன்..
லேசாக ஒரு கீறு..
லேசாக ஒரு அதிர்வு தெரிந்தது..
-போதும்.. இனி அசைவு இருக்காது..
யாரோ வருவது போல இருந்தது…
மின்னலாக பாய்ந்து கிளம்பினேன்..
- கத்தியை விட்டு விட்டேனே.
பரவாயில்லை.. அது என் கத்தி அல்ல… அதில் ரேகையும் இருக்காது..

வீட்டுக்கு வந்தவன் அதிர்ந்தேன்..
போலீஸ்…
- இவர்கள் எப்படி இங்கே? அதற்குள்?
_ வாங்க சார்..இந்த பொண்ணு வீட்ல ஏதோ பிரச்சினையாம்.. அதான் விசாரிக்க வந்தோம்…
கீதாவை தேடி வந்து இருக்கிறார்கள்.. அவள் அப்பாவும் வந்து இருந்தார்..
- நீங்க ரம்யாவை காதலிப்பது எனக்கு லேட்டாதான் தெரியும்.. அதுதான் கடைசியா உங்களை பார்த்துட்டு தற்கொலை செய்து கொள்ளலாம்னு லெட்டர் எழுதி வச்சுட்டு வந்தேன்.. அதான் பதட்டமாகி தேடி வந்து இருக்காங்க… இனி தற்கொலைக்கு அவசியம் இல்லை..
புன்னகைத்தாள்..
- ஆமா சார்.. நானும் உங்க பொண்ணை காதலிக்கிறேன்.. தேவை இல்லாம போலீஸ் அது இதுனு தொல்லை ஆனதுக்கு சாரி சார்
- பரவாயில்லை தம்பி.. சரிமா கீதா.. வீட்ல இருந்து எடுத்துட்டு வந்த கத்தி எங்கே? அது காஸ்ட்லி கத்தி மா… கைப்பிடி மட்டுமே பயங்கர விலை… உலகத்திலியே அந்த மாதிரி கத்தி அது மட்டும்தான்… போன வாரம்தாம் மியூசியத்தில் வாங்கினேன்.. அவசரத்தில் அதை போயி எடுத்துட்டு வந்துட்ட… இனி உனக்கு அது தேவை இல்லைனு நினைக்கிறேன்.. கொடுத்துடுமா “
சிரித்தபடி சொன்னார் அப்பா…
போலிசார் ஆர்வமாக கத்தி பற்றி கேட்க ஆரம்பித்தனர்…
-அட ஆண்டவா… அந்த கத்தியையா நான் எடுத்து சென்றேன்
டிவியில் செய்தி ஓடியது…
- அலுவலகம் ஒன்றில் பெண் கொலை செய்யப்பட்டார்.. கொலையாளி யாரென தெரியவில்லை… கொலை செய்த கருவி முக்கிய ஆதாரமாக கிடைத்துள்ளது..  அது சென்ற வாரம்தான் வாங்கப்பட்டது என்பதால், வாங்கியவரை போலிஸ் தேடுகிறது “

31 comments:

  1. இதைத் தான் கத்திக் கத்தி சொல்லறது என்பார்களோ... ஹ..ஹ.ஹ..

    அன்புச் சகோதரன்...
    மதி.சுதா.
    இலங்கையில் திணறும் காவலன் விநியோகமும் யாழ்ப்பாணத்து எதிர்ப்பும்

    ReplyDelete
  2. நல்ல விறுவிறுப்பான கதை.

    ReplyDelete
  3. கதை நல்லா இருந்துச்சு....
    இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  4. ஆகா! இப்பிடி மாட்டிட்டானே பயபுள்ள! சூப்பர்! ஆமா அது எப்பிடி நீங்களும் கதை? :-)

    ReplyDelete
  5. அண்ணே இப்படித்தான் கதை எழுதனுமானே . நானும் முயற்ச்சிக்கிறேன்

    ReplyDelete
  6. ஹேய்...உங்க ப்லொக்கில் கதை:)))...வெரி குட்...நல்லா இருக்குங்க பார்வையாளன்...நல்ல கிரைம் கதை...அந்த முடிவு நல்ல ட்விஸ்ட்...short and sweet .

    ReplyDelete
  7. மீண்டும் ஒரு கலக்கல்ஸ்...

    ReplyDelete
  8. திரில்லர் கதை..சுவாரஸ்யமான நடை..பார்வையாளன்!!

    ReplyDelete
  9. அருமையான படைப்பு

    ReplyDelete
  10. அருமையா சொல்லி இருக்கீங்க ... ரொம்ப விறுவிறுப்பா இருந்தது

    ReplyDelete
  11. நல்ல விறுவிறுப்பான கதை...

    ReplyDelete
  12. அருமையா சொல்லி இருக்கீங்க. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  13. நல்ல முயற்சி
    வாசிக்கையில் திக் திக்கென்றுதான் இருந்தது

    ReplyDelete
  14. யோவ்.....என்னய்யா கதை எழுதறே.........அதான் கீதாவை திருமணம் செய்வதற்கு எதற்கு.....ரம்யாவை கொலை செய்ய வேண்டும்...... ரம்யாவே....விலகிப் போகிறே ளே...அவளை (ரம்யா) விட்டு..விட்டு கிதாவை கல்யாணம் செய்ய வேண்டியது தானே....இதற்கு எதற்கு கொலை செய்ய வேண்டும்.... லாஜிக்கே இல்லை......waste......

    ReplyDelete
  15. யோவ்.....என்னய்யா கதை எழுதறே.........அதான் கீதாவை திருமணம் செய்வதற்கு எதற்கு.....ரம்யாவை கொலை செய்ய வேண்டும்...... ரம்யாவே....விலகிப் போகிறே ளே...அவளை (ரம்யா) விட்டு..விட்டு கிதாவை கல்யாணம் செய்ய வேண்டியது தானே....இதற்கு எதற்கு கொலை செய்ய வேண்டும்.... லாஜிக்கே இல்லை......waste......

    ReplyDelete
  16. அதான் கீதாவை திருமணம் செய்வதற்கு எதற்கு.....ரம்யாவை கொலை செய்ய வேண்டும்...... ரம்யாவே....விலகிப் போகிறே ளே...அவளை (ரம்யா) விட்டு..விட்டு கிதாவை கல்யாணம் செய்ய வேண்டியது தானே."

    அவனுக்கு திருமணம் என்பதை விட, பழி வாங்குவதே முக்கிய்மாக இருந்தது..

    ReplyDelete
  17. @ தர்ஷன் ,

    நன்றி பாஸ்

    ReplyDelete
  18. @லக்‌ஷ்மி

    நன்றி

    ReplyDelete
  19. ம.தி.சுதா said...
    இதைத் தான் கத்திக் கத்தி சொல்லறது என்பார்களோ... ஹ..ஹ.ஹ..”

    ஹா ஹா

    ReplyDelete
  20. ஜீ... said...
    ஆகா! இப்பிடி மாட்டிட்டானே பயபுள்ள! சூப்பர்! ஆமா அது எப்பிடி நீங்களும் கதை? :-)

    ஹி ஹி,.,, சும்மா ஒரு ஆர்வம்தான்..

    ReplyDelete
  21. நன்றி சிவகுமார்

    ReplyDelete
  22. நன்றி வெறும்பய

    ReplyDelete
  23. THOPPITHOPPI said...
    அருமையான படைப்பு”

    நன்றி நண்பரே

    ReplyDelete
  24. நா.மணிவண்ணன் said...
    அண்ணே இப்படித்தான் கதை எழுதனுமானே . நானும் முயற்ச்சிக்கிறேன்”

    தலைவரே.. இதெல்லாம் ஓவர்

    ReplyDelete
  25. ஆனந்தி.. said...
    ஹேய்...உங்க ப்லொக்கில் கதை:)))...வெரி குட்...நல்லா இருக்குங்க பார்வையாளன்...நல்ல கிரைம் கதை...அந்த முடிவு நல்ல ட்விஸ்ட்...short and sweet ”

    தேங்க்யூ

    ReplyDelete
  26. நன்றி செங்கோவி

    ReplyDelete
  27. நன்றி அன்பரசன்

    ReplyDelete
  28. Chitra said...
    கதை நல்லா இருந்துச்சு....



    வெல்கம் பேக் சித்ரா மேடம்’

    ReplyDelete

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா