வித்தியாசமான தகவல்களை வித்தியாசமான கோணத்தில் எழுதுபவர் நண்வர் நிர்மல்..
எக்கோ என்ற வார்த்தைக்கு பின் இருக்கும் சுவையான விஷ்யங்களை தனக்கே உரித்தான பாணியில் விளக்குகிறார்..
படித்து பாருங்கள்..
- பிச்சைக்காரன்.பிளாக்ஸ்பாட்.காம்
*************************************************************************************************
சுயபுராணமும், சுய புத்தி இல்லாமையும் – நிர்மல்
Echo என்றால் என்ன என்பது எல்லோருக்கும் தெரியும் -
எதிரொலி
அதாவது ஒரு வாக்கியத்தின் கடைசி சில சொற்களை மட்டும் மீண்டும் ஒலிக்கும் ஒரு செயல். இந்த எதிரொலியை ஆங்கிலத்தில் Echo என்று எதற்காக அழைக்கிறார்கள்?
இந்த Echo என்ற வார்த்தைக்கு ஒரு கதை இருக்கிறதாம்.
கிரேக்க புராணத்தில் Echo என்பது ஒரு தேவதையின் பெயர். மிகவும் இனிமையாக பாடவும், இசைக் கருவிகளை இயக்கவும் வல்லமை பெற்றவள் இந்த Echo. இந்த தேவதை Zeus என்ற தலைமை கடவுளின் மனைவி .
Hera என்ற பெண் தெய்வத்தால் சபிக்கபடுகிறாள், அந்த சாபத்தின் விழைவால் Echo என்ற தேவதையால் சுயமாக எதுவும் பேச முடியாமல் போகிறாள் . அவளால் பேச முடிவது ஒன்று மட்டும் தான்.
யாராவது பேசினால் அந்த பேச்சின் முடிவில் வரும் சில சொற்களை மீண்டும் பேசமுடியும், அவ்வளவுதான். இந்த சாபத்தால் மிகவும் கஷ்டப்படுகிறாள், ஓர் அழகான வாலிபனை காதலிக்க முயன்று தோற்கிறாள், அவளது காதலை சொல்லமுடியாமால், தனிமையில் தவித்து கல்லாகி சிதறிப் போகிறாள்.
இந்த சிதறிய கற்களில் உள்ள அவளது ஆன்மாதான் இன்றுவரை எதிரொலியாக ஒலிகின்றதாம்.
இந்த Echo என்ற வார்த்தையை எதிரொலி என்று நேரடியாக அர்த்தம் கொள்ளலாம் அல்லது சித்திக்காமல் சொன்னதை திரும்ப சொல்லும் எதற்கும் சொல்லலாம்.
இந்த Echo வை பற்றி தெரிந்துகொள்ளும்போது அவளது காதலனை பற்றியும் நமக்கு தெரிந்துவிடுகிறது, அந்த அழகான வாலிபன் பெயர் Narcissus , இவன் தனது அழகினால் மிகவும் தலைக்கனம் பிடித்தவனாக இருகிறான், அவனை காதலிக்கும் பல பெண்களை உதாசீனப்படுதுகிறான், Echo வை உதாசீனபடுத்தியது போல.
இப்படியாக வாழ்ந்துவந்த இவன் ஒருநாள் ஒரு ஆற்றின் ஓடும் தண்ணீரை பருக குனிகிறான் .அந்த ஆற்றின் நீரில் தெரியும் தனது பிம்பத்தின் மீது காதல் கொள்கிறான்.அவனை அடைய முயன்று தோற்கிறான், இறந்து விடுகின்றான்.
இந்த Narcissus என்ற பெயரில் இருந்துதான் Narcissam என்ற வார்த்தை வந்தது, இப்போது இந்த Narcissam என்ற சொல் ஒரு தனிநபரோ, அல்லது சமூகமோ சுயபுராணம் பாடிக்கொண்டு, தங்கள் மதம், தங்கள் சாதி, தங்கள் திறமை, தங்கள் கலாச்சாரம், தங்கள் கருத்து, தங்கள் கொள்கை, தங்கள் மொழி என பெருமை மட்டும் கொண்டு வாழ்பவர்களை குறிக்கும் சொல்லாக பயன்படுத்தப்படுகிறது.
இந்த Echo மாதிரி நாமும் பல நேரங்களில் சிந்தனை செய்யமுடியாமல் யாராவது சொன்னதை திரும்ப திரும்ப சொல்லுவோம், இந்த Narcissus போலவும் இருப்போம். இந்த இரு குணங்களின் கோர விளைவு மனித அழிவு.
எங்காவது ஒரு தனிநபரின் / ஒரு சமுகத்தின் நர்சிஸ்ஸ குணத்தால் , மனித படுகொலை நடந்துகொண்டிருக்கும் நாம் Echo மாதிரி " படுகொலை நடக்குதாம், படுகொலை நடக்குதாம்,படுகொலை நடக்குதாம்" என்று இருப்போம் அல்லது நாம் நமது நர்சிஸ்ஸ குணத்தால் மத்தவரை வதைப்போம்...........
_ Mrinzo Nirmal
அருமையாக சொல்லியிருக்கிறார் நண்பரே.!!
ReplyDeleteசூப்பர் கதை... நச் கருத்து...
ம்ம் அருமையான தகவல்
ReplyDeleteபொதுவாகவே கிரேக்க புராண கதைகள் சுவாரசியமானவை ஹெர்குலிஸ்,ஹீரா,சியுஸ்,நேமிசிஸ் இன்னும் பல பாத்திரங்கள்
ஆமாம் நீங்கள் பதிவெழுத வந்த ஆரம்பத்தில் அப்படியே சாருஒன்லைனில் வருவதன் ரீமிக்ஸ் ஒன்று A ஜோக் எல்லாம் போட்டு வருமே இனிமேல் அதெல்லாம் பார்க்கவே முடியாதா? நீங்கள்தான் அவரோடு ராசியாகி விட்டீர்களே
ReplyDeleteசாருக்கு மலாவி ஆனந்த் போல், உங்களுக்கு நிர்மலா...அருமை.
ReplyDeleteபுதிய நல்ல தகவல். பகிர்வுக்கு நன்றி பார்வையாளன், நிர்மல்.
ReplyDeleteநல்லாருக்கு, லாருக்கு, ருக்கு. ருக்கு ருக்கு
ReplyDelete(எக்கோ ங்க ...)
நல்லா எழுதி இருக்கிறார். பகிர்வுக்கு நன்றிங்க.
ReplyDelete// வித்தியாசமான தகவல்களை வித்தியாசமான கோணத்தில் எழுதுபவர் நண்வர் நிர்மல்.. //
ReplyDeleteஅதுக்காக நண்பர் என்ற வார்த்தையை நண்வர்ன்னு எழுதியிருக்கக் கூடாது :)))
echo பற்றிய கட்டுரை அருமை... இருப்பினும் தலைப்பில் எதொயோ போட்டு உள்ளே வேறு எதையோ போட்டிருக்கிறீர்கள்...
ReplyDelete@பிரபாகரன்
ReplyDeleteஎழுத்து பிழையை சுட்டிகாட்டியதற்கு நன்றி நண்வரே . ஸாரி . நன்றி நண்பரே
அருமையா..ரொம்ப அழகா இருந்தது..ரொம்ப ரசிச்சேன் இந்த கற்பனை கதையை...ஒலி..ஒளி அறிவியல் கோட்பாடுகளின் echo ..இப்படி அழகான கதாபாத்திரம் ஆனது புதுசா தான் இருந்தது:))...நார்சிஸ்ட் ஹிட்லர் கூட இதை ரசிச்சிருப்பார் .:))
ReplyDeleteபுதிய தகவல்கள்.. நன்றிகள்
ReplyDeleteநல்ல சுவாரஸ்யமான தகவல்! நன்றி!
ReplyDelete//செங்கோவி said...
ReplyDeleteசாருக்கு மலாவி ஆனந்த் போல், உங்களுக்கு நிர்மலா...அருமை.//
ஏண்ணே? ஏன்? எதுக்கு? நல்லாத்தானே போயிட்டிருக்கு?
ஆக இனிமே சுயபுராண பதிவு போடுபவர்களை நர்சிஸ்ஸ குணம் பிடித்து விட்டதது என்று கூறலாமா ?
ReplyDeleteஆஹா... அலாதி... நண்பர் நிர்மலை ஒருதடவை. புகைப்படத்துடன் அறிமுகம் செய்யுங்களேன்.
ReplyDeleteநல்ல அருமையான தகவல் தோழரே
ReplyDelete//ஆக இனிமே சுயபுராண பதிவு போடுபவர்களை நர்சிஸ்ஸ குணம் பிடித்து விட்டதது என்று கூறலாமா ? //
ReplyDeleteகரெக்ட்!!, ஒன்று அல்லது இரண்டு குழந்தைகள் உள்ள குடும்பங்கள் அதிகம் உள்ள இந்த காலத்தில், இந்த நார்சிசம் எல்லோரிடிதிலும் கொஞ்சம் அவபோது தலைகாட்டுவது தவிர்கமுடியாது என்று நேனைகேறேன். இந்த பதிவை எழுதிற நான் உட்பட.
50 ஆண்டு திராவிட ஆட்சியும்,மதவாத கட்சிகள், சாதி கட்சிகள் நம்மளை நமது மொழி, மதம் மற்றும் சாதி சார்ந்த நர்சிச்டாக மாற்றியுள்ளது. இது எந்தளவுன்றால் மேலசொன்ன்வன்றை பற்றி யாரும் பேசமுடியாத நிலை. இவையெல்லாம் நமது உணர்வுகளை பாதிக்கிறது. இப்படிப்பட்ட சமுகதில்தான் அடுத்த Hitler பிறப்பான்.
புதிய நல்ல தகவல்..
ReplyDeleteநன்றி மலிக்கா
ReplyDeleteதம்பி கூர்மதியன் said...
ReplyDeleteஅருமையாக சொல்லியிருக்கிறார் நண்பரே.!!
நன்றி தலைவரே
து உணர்வுகளை பாதிக்கிறது. இப்படிப்பட்ட சமுகதில்தான் அடுத்த Hitler பிறப்பான்.”
ReplyDeleteபயமாக இருக்கிறது
Jana said...
ReplyDeleteஆஹா... அலாதி... நண்பர் நிர்மலை ஒருதடவை. புகைப்படத்துடன் அறிமுகம் செய்யுங்களேன்”
அன்புக்கு நன்றி
பொதுவாகவே கிரேக்க புராண கதைகள் சுவாரசியமானவை ஹெர்குலிஸ்,ஹீரா,சியுஸ்,நேமிசிஸ் இன்னும் பல பாத்திரங்கள்
ReplyDelete”
ஆம்... உணமைதான்....
நல்ல அருமையான தகவல் தோழரே
ReplyDeleteநன்றி அரசன்
நல்லா எழுதி இருக்கிறார். பகிர்வுக்கு நன்றிங்க.
ReplyDeleteநன்றி மேடம்...
நல்லாருக்கு, லாருக்கு, ருக்கு. ருக்கு ருக்கு
ReplyDelete(எக்கோ ங்க ..
நன்றி நன்றி... ன்றி,றி
சாருக்கு மலாவி ஆனந்த் போல், உங்களுக்கு நிர்மலா...அருமை.”
ReplyDeleteஜீ பதிலை பார்க்கவும்....
புதிய நல்ல தகவல். பகிர்வுக்கு நன்றி பார்வையாளன், நிர்மல்.”
ReplyDeleteவருகைக்கு நன்றி கனாகாதலன்
ஆக இனிமே சுயபுராண பதிவு போடுபவர்களை நர்சிஸ்ஸ குணம் பிடித்து விட்டதது என்று கூறலாமா ?
ReplyDeleteநிர்மல் பதிலை பார்க்கவும்