Pages

Sunday, January 9, 2011

பாலகுமாரன் , எட்கர் ஆலன் போ , புஷ்பா தங்கதுரை எழுத்தில் முயல்-ஆமை கதை

முயல் ஆமை ஓட்ட பந்தயத்தில் கலந்து கொண்டதும், ஆமை வென்றதும் உங்களுக்கு தெரியும்.

இந்த கதையை வேறு சில எழுத்தாளர்கள்  எழுதி இருந்தால் எப்படி இருந்திருக்கும் ..

முதல் கட்டமாக மூன்று எழுத்தாளர்கள் பாணியில் அந்த கதையை பொது நலன் கருதி வெளியிடுவதில் , பிச்சைக்காரன் டாட் பிளாக்ஸ்பாட் டாட் காம் பெருமை படுகிறது 


**************************************************


பந்தய ஆமை  - பாலகுமாரன்


திகாலையில், தொலை தூர குயில் சத்தம் கேட்டதும் ஆமையின் உள்மனம் விழித்துக்கொண்டது.. மெல்ல புத்தி விழிப்படைந்து புலன்களை எழுப்பியது...
கண் விழித்த்தும், மூச்சை இழுத்து விட்டு அமைதியாக சில நொடிகள் இருக்க வேண்டும் என்பது தந்தை சொல்லி கொடுத்த விஷ்யம்.
அதை இன்றும் செய்தது ஆமை..
ஆனால் மனதில் எப்போதும் தோன்றும் அமைதி தோன்றவில்லை.. இன்றைய தினம் சவாலான தினமாக இருக்கும் என்பது புரிந்து போயிற்று.
இன்று வீட்டிலேயே இருக்கவும் முடியாது. வெளியில் வேலை இருக்கிறது.
தவிர்க்க முடியாத வேலை..
ஆமைகளின் விளையாட்டு போட்டி இருக்கிறது... கலந்து கொண்டே ஆக வேண்டும்..
குளித்து விட்டு, தியானம் முடித்து கிளம்பியது...
மகன் ஏதோ ஒரு குழப்பத்துடன் இருப்பதை முகம் பார்த்தே அறிந்தது தந்தை ஆமை..
சான்றோர்கள் முக குறிப்பை வைத்தே உள்ளம் உணர்வார்கள்..அவர்கள் நட்பை நம் உறுப்பை கொடுத்தாவது பெற வேண்டும். உறுப்பை கொடுக்க வேண்டும் என சொல்வது முக்கியத்துவத்தை வலியுறுத்தவதற்காகத்தான்..

கவலை படாமல் கிளம்பு.. வெற்றி தோல்வி மாறி மாறி வரத்தான் செய்யும், நல்லவனாக இரு ..அது போதும்ஆசீர்வதித்தது..
மறு பேச்சு பேசாமல் பணிவுடன் வெளியே செல்லும் மகனை பெருமையுடன் பார்த்தது தந்தை ஆமை.
தந்தை ஆசி தந்த பலம் உற்சாகம் தந்தது...
ஆமைகளும் மற்ற விலங்குகளும் விளையாட்டு அரங்கிற்கு ஏற்கனவே வந்து விட்டன...
அரங்கிற்குள் அவசரமாக நுழைந்த போது, முயல் எதிர்பட்ட்து..
“ வணக்கம் “ முயல் சிரிப்புடன் கை கூப்பியது..
அந்த வணக்கத்தில் ஒரு கர்வம் தெரிந்தது... அந்த கர்வம் அழிவில்தான் முடியும் என்றும் தோன்றியது..
 என்ன போட்டியா? “: அலட்சியமாக கேட்ட்து..
 இப்படி கேட்பது குணம் கெட்ட தன்மை..
பதில் பேசாமல் நகர்ந்தது ஆமை...
“ என்ன பதிலை காணோம்? .. நீயும் ஆமை.. போட்டியிடுவதும் ஆமைகள்.. இதில் என்ன பெருமை இருக்கிறது.. நீ உண்மையான வீரனாக இருந்தால், என்னுடன் மோதிப்பார் “
திமிராக சவால் விட்ட்து முயல்..
அதற்குள் கூடி விட்ட கூட்டம், “ ஆமாம்.. முயல் சொல்வதே சரி “ என கூச்சலிட்டது..
கூட்டத்திற்கு என அறிவு இல்லை.. அது அழகானவன், வலிமையானவனை கண்மூடித்தனமாக நம்பும்.. எப்போதும் இதுதான் நிலை..
இதை இப்படியே அனுமதிக்க கூடாது..
எல்லாம் மாறக்கூடியது.. இறைச்சித்தம் இருப்பின் இதுவும் மாறும்...
“ சவாலை ஏற்கிறேன் “ ஆமை திடமாக கூறியது...
கூட்டம் திகைத்து நின்றது..
அவசர அவசராமாக நடுவர்களுக்கும் விஷ்யம் சென்றது..
மற்ற போட்டியாளர்களான ஆமைகள் விலகின..
முயலும், ஆமையும் மட்டும் களத்தில் நின்றன...
ஓடும் முன் ஒரு நிமிடம் கண் மூடி தியானம் செய்த பின் ஓட ஆயத்தமானது ஆமை..
ஆமையின் நிதானம் முயலுக்கு கலவரம் ஏற்படுத்தியது...
திமிர் பிடித்தவனுக்கு தோல்வி பற்றிய சந்தேகம் எப்போதுமே இருக்கும்..அதை மறைக்க அதிகம் அலட்டுவான்..
தானும் அமைதியானவன் என காட்டிகொள்ள ஆசைப்பட்ட முயல் கண் மூடி தியானம் செய்வது போல நடித்தது..
தவம் , தகுதியுடையவர் மட்டுமே செய்ய முடியும்... மற்றவர்கள் செய்ய முயல்வது கேடாக முடியும்..
கேடாக முடிந்தது...
கண் மூடியதும், காலையில் சாப்பிட்ட அதீத உணவு வேலையை காட்டியது... தூக்கம் முயலை ஆக்கிரமித்து விட்டது...
ஓட்ட்த்தை துவக்கும் விசில் சத்தம் வந்த்துமே , தன் வெற்றி உறுதி என நெல்முனை அளவும் சந்தேகமின்றி ஆமைக்கு  புரிந்து விட்ட்து..

*******************************************

ஒரு வெண்முயல் கண் சிமிட்டுகிறது
- புஷ்பா தங்கதுரை

-போட்டியில் ஜெயித்தால்தான் உன் கழுத்துக்கு மாலை.. இல்லை என்றால் கத்திதான்... கண்டிஷனை கேட்டு கலங்கி போனது முயல்.
காதலித்த இளவரசி கல்யாணம் என்றதும் கண்டிஷன் போடுவது எரிச்சலை ஏற்படுத்தினாலும் , காதலை மறக்க முடியவில்லை..
- சரி..எப்படியும் ஜெயித்து விடலாம்.. நம்பிக்கையும் தோன்றியது.
தினமும் பயிற்சி எடுக்க ஆரம்பித்த்து....
கண்டிஷன் போட்ட இளவரசி முயலும் பயிற்சியில் கலந்து கொண்டு உற்சாகப்படுத்தியது..
-          நீயே கண்டிஷன் போட்டு விட்டு, நீயே உற்சாக படுத்துகிறாயோ..ஏன் இந்த இரட்டை வேடம்? கோபத்துடன் கத்தியது முயல்
-          கண்டிஷன் போட்ட்து நான் அல்ல.. என் குடும்பத்தினர்.. அப்போதுதான் காதலை ஏற்பார்களாம்.. உண்மையில் எனக்கும் இது பிடிக்கவில்லை ..இளவரசி முயல் கண் கலங்கியது...
-           
-          சாதாரண முயலை காதலித்து இருந்தால் பிரச்சினை இல்லை... இள்வரசியை காதலித்த்து தப்பா போச்சே.. நினைத்து கொண்ட
-          து முயல்..
போட்டிக்கு முன் அதிவேகமாக ஓடும் திறன் வந்து விட்ட்து..

போட்டி களத்துக்கு வந்த முயல் திகைத்த்து..
போட்டியாளராக ஆமை..
-          இதில் ஏதும் சதி இருக்குமோ?. யோசித்த்து.
ஒன்றும் புலப்பட வில்லை.

-          போட்டிக்கு இன்னொரு முயலோ , வேகமாக ஓடும் சிறுத்தையோ இல்லாமல் , ஆமையை ஏன் வைத்தார்கள்.. இதில் சதி இருக்கிறது.. வென்றாலும் பயன் இருக்காது... தோற்றாலும் அசிங்கம்... வேறு ஐடியா செய்ய வேண்டும்.. தனக்கும், இளவரசிக்கும் ஓடும் திறன் இருக்கிறது.. யாராலும் பிடிக்க முடியாது. சட் என முடிவு எடுத்த்து...
ஓடுவதற்கான விசிலை அடித்த்தும், ஆமை ஓட தொடங்கியது...
முயல் ஓடவில்லை.. வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த இளவரசியை பார்த்து க்ண் சிமிட்டியது.
-          ஓடு என்று கூக்குரல் எழுப்பியபடி எதிர் திசையில் ஓடியது.. இளவ்ரசியும் சேர்ந்து ஓடியது..
-          பிடி அவர்களை... ப்லர் துரத்தியும் பலனில்லை ..தேசத்தை விட்டு இரண்டும் சென்றதும்தான் ஓட்ட்த்தை நிறுத்தின..

போட்டியில் ஆமை ஜெயித்தாலும், வாழ்வில் முயல் ஜெயித்த்து

 ********************************************

பேராசிரியர் ஆல்பர்ட்டின் வினோத ஆராய்ச்சி
எட்கர் ஆலன் போ

மேகங்களுக்கிடையே மறைந்து கொஞ்சம் மட்டுமே எட்டிப்பார்த்த நிலா , உலகில் நடக்கும் பயங்கரங்களை பார்க்க முடியாமல் ஒளிந்து கொள்கிறதோ என என்ன வைத்த்து. இரவுக்கே உரிய மர்மங்களை அனுபவிப்பது போல வீசிய குளிர் காற்று எலும்புகளை ஊடுருவியது.

இந்த குளிரை மிஞ்சும் அளவுக்கு ஆய்வு கூடத்தில் சூடான விவாதம் நடந்து கொண்டிருந்த்து.
“ மிஸ்டர் ஆல்பர்ட்.. உயிர் என்று தனியாக எதுவும் இல்லை.. உடலின் இயக்கம்தான் உயிர்.. உடல் அழிந்து விட்டால் உயிர் என்பதற்கு வேலை இல்லை “
ஆய்வாளர் டாக்டர். ஜேம்ஸ் உறுதியாக பேசினார். அவர் இந்த பிரிவில் முது நிலை கல்வி முடித்து விட்டு , பல ஆய்வுகள் செய்தவர்.

“ டாக்டர் ஜேம்ஸ்.. உயிர் என்பது தனித்து செயல்பட முடியும் என ஏற்கனவே நிரூபித்து இருக்கிறேன். உதாரணமாக இப்போது பாருங்கள்..
பேராசிரியர் ஆல்பர்ட் கூண்டை திறந்தார்.. முயல் ஒன்று குதித்து ஓடிவந்த்து.
“இந்த முயலை பாருங்கள்.. எவ்வளவு உயிர் துடிப்புடன் இருக்கிறது.. ஆனால் இது ஏற்கன்வே இறந்த முயல்.. என் உயிர் சக்தியை இதனுள் செலுத்தி இயங்க வைத்து கொண்டு இருக்கிறேன் “
ஆல்பர்ட் சொல்வதை நம்ப முடியாமல் பார்த்தார் ஜேம்ஸ்.
“ உங்களால் நம்ப முடியாது என எனக்கு தெரியும்... நான் சொல்வதை நிரூபிக்கிறேன் “ கண் மூடி ஆழ்னிலை மயக்க நிலைக்கு சென்றார் ஆல்பர்ட்.
முயலும் மயக்க நிலைக்கு சென்றது..
ஆல்பர்ட் மீண்டும் கண் விழித்த போதுதான் முயலும் கண் விழித்த்து..
“ அபாரம் புரஃபசர் ஆல்பர்ட் . மருத்துவ, மன நல , ஆன்மீக துறையில் இது ஒரு புரட்சி “ கை குலுக்கினார் ஜேம்ஸ்
“ இந்த முயல் தன்னை உயிருள்ள பிராணி என்றே நினைத்து கொள்ளும். மரண உலோகமான காரீயம் இத கண்ணில் பட்டால்தான் , இதற்கு உண்மை தெரியும்.. உண்மை தெரிந்தால் இறந்து விடும் .. அதே போல நான் இறந்தாலும் இந்த முயல் இறந்து விடும். அதுவரை தன்னை தனித்து செயல்படும் ஒரு விலங்காகவே நினைத்துக்கொள்ளும்..
இந்த ஆய்வின் முக்கிய கட்டம் நாளை நடக்க இருக்கிறது..  ஆமை ஒன்றுடன் முயலை போட்டியில் கலந்து கொள்ள செய்ய இருக்கிறேன்.. அந்த நிலையில் முயல் எப்படி செயல்படுகிறது, தான் முயல் என்பதை மறக்காமல் செயல்படுகிற்தா என பார்க்க வேண்டும் “ என்றார் ஆல்பர்ட்.

போட்டி களத்தில் முயலும் ஆமையும் நின்றன. ஆய்வாளர்கள் தனி அறையில் அமர்ந்து பார்த்து கொண்டு இருந்தனர்..
கூட்டத்தினரின் கரவொலியுடன் , மரண ஓசையும் கேட்பது போல ஆல்பர்ட்டுக்கு தோன்றியது.. ஏன் என புரியவில்லை..
இதை பார்க்க வெளியூரில் இருந்து பேராசிரியர் ராபர்ட்டும் வந்து இருந்தார்.
மிகவும் ஆவலாக இருக்கிறேன் “: என்றார் ராபர்ட்..
“ உங்கள் வருகைக்கு நன்றி.. பையில் என்ன அது ? “ கேட்டார் ஆல்பர்ட்.. ஜேம்ஸ் உரையாடலை மவுனமாக பார்த்து கொண்டு இருந்தார்.
“ ஒரு ஆய்வுக்காக காரீயம் எடுத்து வந்து இருக்கிறேன் “ திறந்து காட்ட ஆயத்தமானார் ராபர்ட்..
விசில் அடித்து போட்டி ஆரம்பமானது.. முயல் முன்னிலை பெற்றது..

“ அய்யோ.. திறக்க வேண்டாம். “ ஜேம்ஸ் பதறினார்..
“ இதை முயல் பார்த்தால்தான் தவறு.. நாம் பார்க்கலாம் “ ஆல்பர்ட் காரீயத்தை கையில் வாங்கினார்..
வாங்கியதும் முகம் வியர்த்த்து..
ஒரு விபத்தில் தான் இறந்து விட்ட்தும், ஜேம்ஸ் உயிர் மூலம்தான் தான் வாழ்வதும், இது எல்லாம் ஜேம்ஸ் ஆராய்ச்சிதான் என்றும் புரிந்த்து..
உண்மை தெரிந்த்தும், உயிரற்று விழுந்தார் ஆல்பர்ட்..
இவர் இறந்ததும் முயலும் சுருண்டு விழுந்தது..
ஆமை போட்டியில் வென்றது..

***************************************

சரி.. அடுத்த கட்டமாக வேறு சில எழுத்தாளர்கள் பார்வையில் வெளிவர உள்ளது...
ஒன்றாக வெளியிட்டால் படிக்க முடியாது என்பதால் ஒவ்வொன்றாக வெளியிடப்படும்..

எந்த வரிசையில் வெளியிட வேண்டும் என நீங்களே பின்னூட்டத்தில் சொல்லுங்கள்.. அதன் படி வெளியிடப்படும்... முழுதும் வரிசைபடுத்த வேண்டாம்.. டாப் பிரியாரிட்டி சில மட்டும் சொன்னால் போதும்... உங்கள் பிரியாரிட்டி ரகசியமாக இருக்க வேண்டும் என நினைத்தால் மெயிலில் சொல்லுங்கள்.. அல்லது வெளியிட வேண்டாம் என்று குறிப்பிட்டு பின்னூட்டம் இடுங்கள்..

இதோ தேர்வு செய்ய வேண்டிய பட்டியல் 

1. நடுவர்களே !பதில் சொல்லுங்கள்- மாறுபட்ட பார்வையில் தொப்பிதொப்பி

2. வேகம்- ஏடாகூடா  நடையில் சாரு நிவேதிதா

3. பின்தொடரும் முயலின் குரல்- ஜெயமோகன்

4 கொல்லத்தான் நினைக்கிறேன் - ராஜேஷ்குமார்

5 ஓடிப்போன நடுவர் - ஜான் கிரிஷாம்

7 .பழம் உனக்கு, கொட்டை எனக்கு- சரோஜா தேவி

8 சிறுவன் பார்வையில் இறைவன் - பிலாசபி பிரபாகரன் 

9 முயல் வியாபாரம் - கேபிள் சங்கர்

10 மனிதர்களே. இது உங்களுக்கான கதை - ஹைக்கூ அதிர்வுகள் ஆனந்தி

11 பெண் தேடிய பேச்சுலர் - உண்மைத்தமிழன் 

12 கவிதை ஓட்டம்- அன்புடன் ஆனந்தி

13 முயலும் சின்ன பயலும் - வெண் தயிர் மனசு (செல்ல நாய்குட்டி )

14 முயல் ஆமை பயோடேட்டா- கே ஆர் பி செந்தில்

15 அண்ணன் காட்டிய வழியம்மா- ஆதிமூல கிருஷ்ணன் 

16 கண்டேன் பந்தயத்தை- 
தம்பி கூர்மதியன்
17 முயல் கூண்டின் ஜன்னல் - 
நா.மணிவண்ணன் (  வம்ப வெலைக்கு வாங்குவோம்ல
18 சுவையான சில கேள்விகள் - மிடில்கிளாஸ் மாதவி 
19 முயல் ஆமை - எனக்கு பிடித்தது எது ? - மைத்துளிகள் Matangi Mawley
20 . முயல் போட்டியில் முக்கியமான பொழுதுகள் - வானம் தாண்டிய சிறகுகள் (ஜீ ) 
21  முயலைபற்றி - அரசன் ( கரைசேரா அலை)
23. ஓடலும் தேடலும் - பாகிரதி ) எல்கேதாட்ஸ் 
24. இந்தியாவில் எயிட்ஸ் இல்லை - பிரடெரிக் ஃபொர்சித்
24 வெறி நாய்கள் நடுவில் அப்பாவி முயல்- அகதா கிறிஸ்டி
25 சுயனலமின்றி சுகம் இல்லை - அயன் ராண்ட்
**********************************
பின்னூட்டதிலோ மெயிலிலோ நீங்கள் விரும்பும் எண்ணை மட்டும் சொன்னால் போதும்... 

23 comments:

  1. அருமை அருமை.. கலக்குறீங்க பார்வையாளன். 2,3.

    ReplyDelete
  2. non linear, postmodrn styla? may be u can start with charu, jaya mohan, சரோஜா தேவி, ஹைக்கூ அதிர்வுகள் ஆனந்தி,

    Very interesting and eager!!!

    ReplyDelete
  3. அப்ஜெக்ஷன் யுவர் ஆனர், எனது பதிவின் பெயர் மொக்கையான சில கேள்விகள் என்று வேண்டுமானால் இருக்கும், (அது எப்படிங்க, நானே சுவையானன்னு போட்டுக்கறது?..:-)) )
    5, 4, 23 இவற்றைப் படிக்க ஆவலாய் உள்ளேன்

    ReplyDelete
  4. கலக்கிட்டீங்க பாஸ்!
    அதிலும் பாலகுமாரன் செம கலக்கல்!
    1,2,3 முதல்ல அப்புறம் மற்றதெல்லாம்!
    9 (இது தொடரா போகாதே?)
    7 ரொம்ப முக்கியம் - ஏன்னா நான் அந்த இலக்கிய இதழைப் படிச்சதில்ல! :-)

    ReplyDelete
  5. எந்த கூண்டுளையும் ஜன்னல் இருக்காதுங்க . ஹி ஹி .என்னோட நம்பெர யாரும் சொல்ல மாட்டாங்க .

    நமக்கு 8 , 10 போட்டுடுங்க

    ReplyDelete
  6. அருமை அருமை.. கலக்குறீங்க பார்வையாளன். 2,3.

    நன்றி கனாகாதலரே

    ReplyDelete
  7. எந்த கூண்டுளையும் ஜன்னல் இருக்காதுங்க .”

    கரெக்டா பாயிண்டை பிடிச்சுடீங்க..

    பத்து ரூபாய் நோட்டு , நூறு ரூபாய் நோட்டு என்றால் அதில் சுவாரஸ்யம் இல்லை..

    ஒன்பது ரூபாய் நோட்டு என்றால்தான் அதில் மேட்டர் இருக்கிறது..

    இதற்கு மேல் சொல்லை சன்பென்சை உடைக்க விரும்பவில்லை

    ReplyDelete
  8. 9 (இது தொடரா போகாதே?)

    அது தொடரா போகாது..ஆனால் சுருககமாக எழுதுவதில் கில்லாடியான அண்ணன் உண்மையாரின் “சிறு”கதையை நினைத்தால்தான் பயமாக இருக்கிறது..

    மறுபட்ட இருவேடங்களில் கதா நாயகன் தோன்றி கலக்க இருக்கிறார்.. பிட்டு பட மேட்டர்களும் உண்டு

    ReplyDelete
  9. ஏன்னா நான் அந்த இலக்கிய இதழைப் படிச்சதில்ல! :-)”

    அட ஆண்டவா... வாழ்வின் ஒரு முக்கிய இன்பத்தை இழந்து விட்டீர்களே..

    டோண்ட் வொரி..

    போதுமான ஆதரவு கிடைத்தால் அதை நம் பதிவில் படித்து இன்புறலாம்

    ReplyDelete
  10. அப்ஜெக்ஷன் யுவர் ஆனர், எனது பதிவின் பெயர் மொக்கையான சில கேள்விகள் என்று வேண்டுமானால் இருக்கும்,

    பஎயர் என்னவாக இருந்தாலும், உள்ளடக்கம் சுவையாக இருக்கும்.. அதனால்தான் இந்த பெயர்..

    ReplyDelete
  11. ஹலோ.பார்வையாளன் ..என்னைய வச்சு காமடி ..கீமடி பண்ணலையே...(நிர்மல் உங்களுக்கு அப்படி என்ன கொல வெறி என் மேலே...:))))

    மண்ணை கைவிட்டு பன் னை காதலித்த ஆண்:)) - நிர்மல்...
    அருவாளை எடுக்காதே - பார்வையாளன்..

    இதையும் சேர்த்து கொள்ளளவும் யுவர் ஹானர்..:))))

    ReplyDelete
  12. அசத்தல் பதிவு

    ReplyDelete
  13. @ஆனந்தி
    1 சாரு ,ஜெமோவுக்கு அடுத்தபடியாக உங்கள் எழுத்தை நிர்மல் எதிர்பார்ப்பது எனக்கே சற்று பொறாமையாக இருக்கிறது
    2இந்த கதையை நிர்மல் எழுதினால் எப்படி இருக்கும் என யோசித்தபோது , அவரே எனக்கு எழுதி அனுப்பிவிட்டார் .சில மாற்றங்கள் சொல்லியிருக்கிறேன் . மேம்படுத்திய கதை விரைவில் பப்ளிஷ் ஆகும்

    ReplyDelete
  14. ஆஹா... நிதானமாக வாசித்து முடித்தேன். ஒன்று தெரிகின்றது நண்பரே.
    தங்களுக்கும் எனக்குமான வித்தியாசம்.....
    தங்கள்போல முயலாமைதான்.

    ReplyDelete
  15. இரண்டு நாட்களாக புத்தக சந்தைக்கு சென்று வந்த களைப்பில் இருந்ததால் நெட்பக்கம் வர முடியவில்லை...

    நூறாவது இடுகை எழுதியிருக்கிறேன்... படித்துவிட்டு கருத்து தெரிவிக்க வேண்டுகிறேன்...
    http://philosophyprabhakaran.blogspot.com/2011/01/100.html

    ReplyDelete
  16. எனக்கும் உங்களை சந்தித்ததில் மகிழ்ச்சியே... ஞாயிற்றுக்கிழமை வருவதாக கூறினீர்கள்... ஆனால் வரவில்லையே...

    ReplyDelete
  17. உண்மையில் வித்தியாசமான பதிவு தான் ஒரு கதைக்கு இத்தனை தலைப்பா வியப்பாயிருக்கிறது...

    அன்புச் சகோதரன்...
    மதி.சுதா.
    ஒழித்தோடும் அசினும் 109 நாள் துரத்தலும்..

    ReplyDelete
  18. எல்லோரையும் படிச்சுக் கரைச்சுக் குடிச்சு வச்சிருக்கீங்க
    பெரிய எழுத்தாளராய், சிந்தனையாளராய் வர வாய்ப்பிருக்கு. Keep it Up

    ReplyDelete
  19. 2,3,4, 9,11,15 24,8,7 என் வரிசை

    ReplyDelete
  20. 21 மிகவும் எதிர்பார்க்கிறேன்

    ReplyDelete
  21. 2,3 முதல்ல எழுதுங்க......இப்போதைய பதிவு அருமை.....

    ReplyDelete

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]