Tuesday, January 11, 2011

கத்தியை தீட்டாதே !! - நிர்மல்

கத்தியை தீட்டாதே என்ற கதையை  நம் வலைதளத்தில் படித்து இருப்பீர்கள்.. 


அதே கதையை சற்று மாற்றி நிர்மல் எனக்கு அனுப்பினார்...

அவர் ஆர்வத்தை பாராட்டும்விதமாக அதை இங்கே தருகிறேன்

*************************************************



எனக்கு முடிவு எடுக்க நேரம் ஆகும். ஆனால் முடிவு எடுத்து விட்டால் விரைவாக செயலாற்ற தொடங்குவேன்.ரம்யாவை காதலிக்கும் முன்பு கூட மிகவும் யோசித்தே முடிவு செய்தேன்.மிகவும் யோசித்த பின் ஒரு பூங்காவில்தான் என் சம்மதம் சொன்னேன்.அப்போது அவள் கண்களில் தோன்றிய மலர்ச்சி, பூங்காக்களின் பூக்களை விட ஒளி மிகுந்ததாக தோன்றியது.. 

நேற்று எதிர்பாராத விதமாக கீதா வீட்டுக்கு வந்தாள்
- என்ன திடீர்னு ? குழப்பம் கலந்து கேட்டேன்
- உங்க முடிவை தெரிஞ்சுக்கலாம்னு வந்தேன்
- யோசித்து பார்த்தேன், எப்போதும் யோசித்து முடிவுயேக்கும் நான் எப்படி உடனே  ஓகே சொன்னேன்!!!!
அவள் பாய்ந்து வந்து கன்னத்தில் முத்தமிட்டாள்.
இரவு என் வீட்டிலேயே தங்கினாள்..
இதோ நான் கொல்ல கிளம்பும்போது அவள் நிம்மதியாக தூங்கி கொண்டு இருக்கிறாள்..
-எப்படி கொல்வது? படுக்கை மீது ஒரு கூர்மையான கத்தி கிடந்தது. அழகாய் இருந்தது, அதில் Towell  என்று எழுதியருந்தது. இது போதும்..இதில் விஷம் தடவி, லேசாக கீறினால் போதும்.. அதிக சத்தமோ , ரத்தமோ இன்றி வேலை முடியும்..  நான் கெமிக்கல் எஞ்சினியர்.. எந்த விஷம் இதற்கு சரியாக இருக்கும் என எனக்கு தெரியும்.
 
 
போன வாரம், ஒரு நாள்  காலை எதிர்பாராத விதமாக ரம்யா போன் செய்தாள்

 -  என்ன ஆச்சு?
லேசாக அழும் குரல் கேட்டது 

- சாரி.. நாம் பிரியும் நேரம் வந்து விட்டது.. என் வீட்டுல வேற மாப்பிள்ளை பார்த்துட்டாங்க.. என்னால தடுக்க முடியல..

அதிர்ந்தேன்..  
-என்ன இவ்வளவு கூலா சொல்ற? எதிர்ப்பு வரத்தான் செய்யும்.. சந்தித்துதான் ஆகணும் 

- இல்லை… நான் காதலிச்சது தப்புனு இப்ப உணர்றேன். சாரி.. என்னை மன்னிச்சுடுங்க 

கோபம் தலைக்கேறியது… 
 
ரம்யா அலுவலகம் சென்றேன்…என்னை யாரும் பார்த்து விடாமல் கவனமாக இருந்தேன்..
யாரும் இல்லை…அவள் தன் அறையில் , மேஜையில் தலை சாய்ந்து கண் மூடி இருந்தாள்..
கத்தியை கைரேகை பதியாமல் எடுத்தேன்..லேசாக ஒரு கீறு..லேசாக ஒரு அதிர்வு தெரிந்தது..
-போதும்.. இனி அசைவு இருக்காது..

யாரோ வருவது போல இருந்தது…மின்னலாக பாய்ந்து கிளம்பினேன்..
 
வீட்டுக்கு வந்தவன் அதிர்ந்தேன்..போலீஸ்…- இவர்கள் எப்படி இங்கே? அதற்குள்? 

- வாங்க சார்..இந்த பொண்ணு வீட்ல ஏதோ பிரச்சினையாம்.. அதான் விசாரிக்க வந்தோம்… கீதாவை தேடி வந்து இருக்கிறார்கள்.. அவள் அப்பாவும் வந்து இருந்தார்.. 

- முதல் முறை உங்களிடம் லவ்வை சொன்னப்ப நீங்க பாசிடிவா எதுவும் சொல்லல.. பிறகுதான் நீங்க இன்னொரு பொண்ணை லவ் பண்றதா கேள்விப்பட்டு மனம் உடைஞ்சு போனேன்.
உங்களை பார்த்துட்டு தற்கொலை செய்து கொள்ளலாம்னு லெட்டர் எழுதி வச்சுட்டு வந்தேன்.. அதான் பதட்டமாகி தேடி வந்து இருக்காங்க… இனி தற்கொலைக்கு அவசியம் இல்லை..
புன்னகைத்தாள்..- 

-ஆமா சார்.. நானும் உங்க பொண்ணை காதலிக்கிறேன்.. தேவை இல்லாம போலீஸ் அது இதுனு தொல்லை ஆனதுக்கு சாரி சார்

 - பரவாயில்லை தம்பி.. சரிமா கீதா.. வீட்ல இருந்து எடுத்துட்டு வந்த கத்தி எங்கே? 6 வருடம் காத்திருந்து வாங்கிய அந்த dwight  Towell  கத்திஎங்கே?
 
 
அந்த கத்தியைபற்றி  Police இன்டர்நெட்டில் தேடிகொண்டிருந்தர்கள்
Dwight Towell is one of the world best  Knife maker who is living in Idaho, people wait for 5 -  6 years to buy one Towell knife. The Towell knife is engraved with gold on blued steel.   http://www.rehobothcustomknives.com/KDTW001.htm 
  • ரம்யாவின் தோழி கீதா.. ரம்யாவை விட, ரம்யா ரோஷினியவிட  அழகி.. பணக்காரி.,
 
"    அலுவலகம் ஒன்றில் பெண் கொலை செய்யப்பட்டார்.. கொலையாளி யாரென தெரியவில்லை… கொலை செய்த கருவி முக்கிய ஆதாரமாக கிடைத்துள்ளது"

15 comments:

  1. எனக்குத் தான் சுடு சோறு சாப்பிட்டுட்டு வரட்டுமா...

    அன்புச் சகோதரன்...
    மதி.சுதா.
    ஒழித்தோடும் அசினும் 109 நாள் துரத்தலும்..

    ReplyDelete
  2. பாவம் அவங்கள விடமாட்டிங்க போல இருக்கே.. அருமையாயிருக்கு...

    ReplyDelete
  3. சூப்பர் பாஸ்! கத்தி கலக்கலா இருக்கு!

    ReplyDelete
  4. இதுவும் நல்லா இருக்குது.

    ReplyDelete
  5. மேலதிகமாக ஒரு தகவல் வாத்தியார் பாணியில் அருமை

    ReplyDelete
  6. இந்தமுறை நிர்மல் உங்களை மேவவில்லை. நிர்மலின் கதையைவிட உங்கள்கதை சூப்பர்.

    ReplyDelete
  7. எப்படியும் போலீஸ் கொலையாளியைப் பிடிக்கத் தானே போகிறது?... டவல் கத்தி குறித்த தகவல் ஓஹோ!

    ReplyDelete
  8. இரண்டு பேரும் போட்டி போட்டு கலக்குறீங்க ! கலக்குங்க !

    ReplyDelete
  9. இரண்டு பேரும் போட்டி போட்டு கலக்குறீங்க ! கலக்குங்க !

    thank u

    ReplyDelete
  10. டவல் கத்தி குறித்த தகவல் ஓஹோ"

    நானும் அதை ரசித்தேன்

    ReplyDelete
  11. இந்தமுறை நிர்மல் உங்களை மேவவில்லை. நிர்மலின் கதையைவிட உங்கள்கதை சூப்பர்.

    உங்களுக்கு நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை

    ReplyDelete
  12. மேலதிகமாக ஒரு தகவல் வாத்தியார் பாணியில் அருமை

    நன்றி

    ReplyDelete
  13. சூப்பர் பாஸ்! கத்தி கலக்கலா இருக்கு!

    உங்க பாராட்டு கச்சிதமா இருக்கு

    ReplyDelete
  14. இதுவும் நல்லா இருக்குது.


    நன்றி மேடம்

    ReplyDelete
  15. பாவம் அவங்கள விடமாட்டிங்க போல இருக்கே.. அருமையாயிருக்கு...

    நன்றி சுதா

    ReplyDelete

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா