மிகவும் தவறாக புரிந்து கொள்ளப்பட்ட மனிதர் என்று ஓஷோவை சொல்வதுண்டு…
அதே போல தவறாக கருதப்பட்டு வரும் எழுத்தாளர் என்றால் அது சாரு நிவேதிதாதான்..
நேர்மையான பேச்சு, வெளிப்படையான விமர்சனம், பேசாத பொருளை பேசத் துணிந்த எழுத்து என்பதெல்லாம் தமிழ் சமுதாயத்துக்கு புதிது என்பதால் பலருக்கும் முதலில் அவர் எழுத்து அதிர்ச்சியையே தரும்..
ஒருவர் ஓர் ஓவியத்தை நம் கையில் தருகிறார்.. அதை பார்த்து நமக்கு கடுங்கோபம்..
ஓவியத்தில் இருக்கும் நபர் எங்கோ பார்த்தது போல இருக்கிறார்.. ஆனால் ஒழுங்கின்மையுடன் வரையப்பட்டு இருக்கிறார்.. எனவே ஓவியர் மேல் கோபம்..
பிறகுதான் தெரிகிறது..
அது ஓவியம் அல்ல.. முகம் பார்க்கும் கண்ணாடி…
ஆக, நாம் கண்ணாடி மேல் கோபப்பட்டு பயன் இல்லை என பிறகுதான் புரிகிறது…
அதே போல சமுதாயத்தின் சில இருளான பக்கங்களை , நம்முள் இருக்கும் இருளான பகுதிகளை ஒருவர் சுட்டி காட்டினால் , அவர் மேல் கோபப்படுவது பயன் அற்றது…
இதெல்லாம் வாழ்வியல் அனுபவங்கள் மூலமும், தொடர்ச்சியான வாசிப்பு மூலமும் புரிய ஆரம்பிக்கும்…
ஒவ்வொரு கட்டுரைக்கும் அவர் எவ்வளவு உழைத்து இருப்பார், எவ்வளவு படித்து இருப்பார் என்பதெல்லாம் சாதாரண வாசகனுக்கு தெரியாது..
ஒரு சின்ன கட்டுரையாவது எழுதிப்பார்த்தால்தான் அது எவ்வளவு உழைப்பை கோரும் வேலை என்பது புரியும்..
ஒரு வெளி நாட்டின் பெயரை சரியாக எப்படி உச்சரிப்பது என்பதைக்கூட சரியாக கவனித்து எழுதுவது சாருதான்…
நாம் தப்பும் தவறுமாக எழுதி யாரிடமாவது வாங்கி கட்டிக்கொள்ளும்போதுதான் , உச்சரிப்பில் கூட இவ்வளவு மேட்டர் இருக்கிறதா என்பதே நமக்கு தெரியும்…
நான்கு சினிமா பார்த்தால்தான் அதில் சிறந்த ஒரு சினிமாவை பற்றி எழுத முடியும்.. நான்கு புத்தகங்கள் படித்தால்தான் அதில் ஒரு புத்தகம் பற்றி எழுதமுடியும்..
சாருவின் எழுத்தில் வந்துள்ள “கோணல் பக்கங்கள்” தொகுதிகளில் அவர் குறிப்பிட்டுள்ள புத்தகங்கள் , சினிமாக்களை பட்டியலிடுவதற்கே நமக்கு சில வாரங்கள் ஆகும்..
அவற்றை எல்லாம் படிப்பது , பார்ப்பது என்றால் இந்த வாழ் நாளில் முடியாது..
அப்படி என்றால் இவற்றை எல்லாம் படிக்க அவர் எவ்வளவு உழைத்து இருப்பார் என்பதை யோசித்தால் பிரமிப்பாக இருக்கிறது…
சிலர் சரோஜாதேவி புத்தகம் போல இருக்கிறது என தேகம் நாவலை குறிப்பிட்டதை பார்த்து சிரிப்புதான் வந்தது..
கமெண்ட்ரீஸ் ஆன் லிவிங்க், ரைசிங் இன் லவ் போன்ற புத்தகங்களை படித்தவர்களுக்கு தேகம் நாவல் ஒரு தத்துவ நாவலை போன்று தோன்றும்…
வன்முறை என்பது எங்கோ ஓர் இடத்தில் இருப்பது… நம்முள்ளேயே இருக்கும் விஷயம்…
ஆதிக்கம் செலுத்துதல் , பொஸஸிவ்னஸ் , காமம் போன்றவற்றையே காதல் என நினைக்கிறோம்..
பேப்பரை பார்த்தால், பாதி கொலைகளுக்கு காரணம் காதல்தான்..
காதலித்த பெண்ணையே கொலை செய்ய முடியும் என்றால் அது என்ன காதல்?
வன்முறை காமம் போன்றவற்றை மனதிலேயே நிகழ்த்தி கொண்டு இருக்கும் சமூகத்தில் இது போன்ற அவலங்கள் நிகழத்தான் செய்யும்…
தூக்கத்தில் இருக்கும் ஒருவனை எழுப்பினால் , அவனுக்கு கோபம்தான் வரும்..
அதே போல , சாரு போன்ற எழுத்தாளர்கள் எதிர்ப்புகளை அவ்வப்போது சந்திக்கிறார்கள் என்பதே அவர்களுக்கு கிடைக்கும் விருதுதான்…
ஜே கிருஷ்ணமூர்த்தி, ஓஷோ போன்றவர்கள் தத்துவம் என்ற தளத்தில் நின்று செய்த பணிகளையே , சாரு இலக்கியம் என்ற தளத்தில் செய்கிறார் என்பதே என் கருத்து..
தத்துவ தளத்தில் அதற்கு தேவையான மொழியை அவர்கள் கச்சிதமாக கையாண்டது போல இலக்கியம் என்ற தளத்தில் அதில் மாஸ்டராக திகழ்வது சாருவின் ஸ்பெஷல்..
ஒரு வரியை கூட விட்டுவிடாமல் படிக்க செய்யும் பாணி அவருடையது என்பதால் கடினமான விஷயங்களை கூட படிக்க முடிகிறது..
தேகம் நாவலில் பார்த்தால் , வாய் விட்டு சிரிக்க வைக்கும் இடங்கள் எத்தனை எத்தனை…
ரசிக்க வைக்கும் இடங்கள் எத்தனை எத்தனை…
ஹார்ட் இயர்ண்ட் மணி வசனம், பிக்பாக்கட்டை கை விடும் இடம் என சொல்லிக்கொண்டே போகலாம்…
படிக்க கூடிய நடையில் எழுதுவது மட்டும் சிறப்பல்ல.. எழுத முடியாத , எழுதியிராத விஷயங்களை எழுதுவதே அவர் சிறப்பு என நினைக்கிறேன்..
அவர் போன்றவர்கள் தவறாக புரிந்து கொள்ளப்படுபவதால் அவர்களுக்கு ஏற்படும் இழப்பை விட , சமுதாயத்துக்கு த்னி மனிதனுக்கு ஏற்படும் இழப்பு அதிகம் என்பது என் அனுபவம்..
இவர் எழுத்தை சற்று முன்பே படிக்க ஆரம்பிக்கவில்லையே என்ற வருத்தம் எனக்கு உண்டு..
அதனால்தான் இப்போது அதிகமாக படித்து வருகிறேன்..
இப்போது படித்து கொண்டு இருப்பது காமரூப கதைகள்…
படித்து முடித்ததும் என் கருத்துக்களை உங்களுடன் பகிர்ந்து கொள்வேன்
நீங்கள் சொல்வது மிகுந்த உண்மை பார்வையாளன். முதலில் அவரைப் பற்றிய தவறான பிம்பத்தைத் தாங்கியவாறே படிக்க ஆரம்பித்தேன். அவரை விமர்சிப்பவர்களில் எத்தனை பேர் அவருடைய "முள்" சிறுகதையைப் படித்திருப்பார்கள் என்று தெரியவில்லை. இன்றும் முள் என் தொண்டையில் இருப்பது போலவே உணர்கிறேன். அவரிடம் கண்ட தைரியம் நான் யாரிடமும் காணாதது. அவரை விரும்புகிறவர்களோ வெறுக்கிறவர்களோ அவருடைய எழுத்தை சாதாரணமாக ஒதுக்கிவிட முடியாது. நான் அவரைக் கொண்டாடுபவனும் அல்லன். அவரைத் தூக்கி எறிபவனும் அல்லன். நாம் வாழும் தலைமுறையின் ஒரு தவிர்க்கவியலாத எழுத்தாளர் என்பது மட்டும் உண்மை.
ReplyDeletekanaakkathalan solvathai naanum vazhimzhikiren, aanaal athu avarin sirukathai, novel aakiya padaippulakam saarntha karuththu mattumey. mannikkavum paththi, katturai, piravatril naan avarai avvaaru ninaikkavillai.
ReplyDeletesiripputhan varukirathu
ReplyDeleteமிகவும் தவறாக புரிந்து கொள்ளப்பட்ட மனிதர் என்று ஓஷோவை சொல்வதுண்டு…
ReplyDeleteஅதே போல தவறாக கருதப்பட்டு வரும் எழுத்தாளர் என்றால் அது ஜெய மோகன் தான்..
நேர்மையான பேச்சு, வெளிப்படையான விமர்சனம், பேசாத பொருளை பேசத் துணிந்த எழுத்து என்பதெல்லாம் தமிழ் சமுதாயத்துக்கு புதிது என்பதால் பலருக்கும் முதலில் அவர் எழுத்து அதிர்ச்சியையே தரும்..
இதே மாதிரி மீதிப் பதிவுலயும் மானே, தேனே சேர்த்தால் (தேகம் - பின் தொடரின் நிழலின் குரல்/விஷ்ணுபுரம், கோணல் பக்கங்கள் - நவீன தமிழிலக்கிய அறிமுகம்)இன்னொரு சுவையான பதிவு தயார்...பொங்கலோ பொங்கல்..(ஏதோ நம்மால முடிஞ்சது!)
சூப்பர்!!!!!!! சாருவின் காமருபகதைகள் பற்றி தயவுசெய்து மதிப்புரை எழுதிவிடாதிர்கள், உங்கள் அனுபவுரையை எழுதுங்கள். இந்த மதிப்புரை சமச்சாரம்ல்லாம் எனக்கு என்னவோ கிராமத்தில் நாட்டாமை தீர்ப்பு சொல்றமாதிரி இருக்கு, அதுலாம் ஓல்ட் fasion . BLOGS எழுதுற நாம அதை தகர்கனும்னு நெனைக்கிறேன். Blog என்பதற்கும் ஒரு பத்திரிகை என்பதற்கும் வித்தியாசம் உண்டு, ப்ளோகில் அனுபவத்தைதான் எல்லோரும் எழுதிகிறார்கள், இது ஒரு open Diary. படத்தை, புத்தகத்தை மதிப்பிடுதல் குணம், சிருவயதிருந்து நம்மை மதிப்பிடு செய்துவந்ததற்கு நாம் செய்யும் பழிவாங்கல் என்று தோனுகிறது .
ReplyDeleteகாமருபகதைகள், உங்கள் இரத்தம் ஓட்டத்தை எப்படி கட்டுப்படித்தின என்று எழுதுங்கள். உங்களது அனுபவத்தை தனிகைல்லாமல் எதிர்பார்கிறோம். யூடுபில் Master and Margreta பார்த்துவிடுங்கள், அந்த நாவலின் review படிங்க, முடிந்தால் இந்த லின்கிலுள்ள Erotism: death & sensuality By Georges Bataille வாசிங்க. http://books.google.com.qa/books?id=bRIXve05LUMC&dq=book+georges+bataille+sex+taboo&printsec=frontcover&source=in&hl=en&ei=_SgyTd3FEYKurAfKo4y6CA&sa=X&oi=book_result&ct=result&resnum=12&ved=0CFMQ6AEwCw#v=onepage&q=book%20georges%20bataille%20sex%20taboo&f=false
தவறாகப்புரிந்துகொள்ளப்பட்ட மனிதர் என்பது உண்மைதான்.
ReplyDelete//ஜே கிருஷ்ணமூர்த்தி, ஓஷோ போன்றவர்கள் தத்துவம் என்ற தளத்தில் நின்று செய்த பணிகளையே , சாரு இலக்கியம் என்ற தளத்தில் செய்கிறார்//
ஒத்துக்கொள்ள முடியவில்லை.
கொஞ்ச நாளா ஏன் சாருவிற்கு வேட்டி தூக்குகிறீர்கள் என்று தெரியவில்லை? ஏங்க உங்க நெஞ்சத் தொட்டுச் சொல்லுங்க...ஜே கிருஷ்ணமூர்த்தி, ஓஷோ போன்றவர்கள் செய்த பணியும் சாரு போன்ற ஒரு சாமானிய எழுத்தாளன் எழுதும் சுய புராணக் கட்டுரைப் பணியும் ஒன்றா? ஜால்ரா கூட தாளம் தப்பி அடித்தால் நாராசமாய் இருக்கும்.
ReplyDelete//ஜே கிருஷ்ணமூர்த்தி, ஓஷோ போன்றவர்கள் தத்துவம் என்ற தளத்தில் நின்று செய்த பணிகளையே , சாரு இலக்கியம் என்ற தளத்தில் செய்கிறார் என்பதே என் கருத்து..//
ReplyDeleteஒத்துகறன்.....பேச்சு பேச்சா மட்டும் தான் இருக்கனும் .....next meet பண்ணுறேன் ....
ஓஷோ வின் தத்துவங்களும் சாருவின் தத்துவங்களும் ஒரே தராசா ? :))))) எனக்கு மத்தது எதுவும் புரியலே...:))) ஆனால் கோணல் பக்கங்களில் (வெளிவந்து ஒரு ஒரு பத்து வருஷம்?? இருக்குமா? ) அதில் சாருவின் கணிப்பு படி கவுண்டமணி க்கு முப்பது வருஷம் முன்னாடியே அறுபத்துநாலு வயசு ன்னு தத்துவம்(??) சொல்லி இருந்தார்...அதாவது இப்ப 90 வயசாவது இருக்கணும் சாரு அவர்களின் கணிப்பு படி...மெய்யாலுமா பார்வையாளன்...:))) அவர் படைப்பை விமர்சனம் பண்ற அளவுக்கு நமக்கு மூளை இல்லை...ஆனால் தைரியம் என்ற தொனியில் அவர் பேசும் அரைகுறை, அதிக பிரசங்கித்தனம் தான் கொஞ்சம் எரிச்சல் வருது...:)))))
ReplyDeleteமத்தபடி நான் இந்த டாபிக் கில் இருந்து வெளியே உள்ளேன் ஐயா...:)))))
>>> டைட்டிலே டக்கரா இருக்கு. படிச்சிட்டு சொல்லுங்க
ReplyDeleteவிரிவான விளக்கத்தை பிறகு அளிக்கிறேன்...
ReplyDeleteபின்னூட்டங்களில் விரிவாக சொல்ல முடியாது
"ஒரு சின்ன கட்டுரையாவது எழுதிப்பார்த்தால்தான் அது எவ்வளவு உழைப்பை கோரும் வேலை என்பது புரியும்"
ReplyDeleteமெய்யாலுமா? உழைப்பு எவ்வளவு செலவானதுங்கறதப் பொறுத்துதான் மதிப்பீடு இருக்கணுமா? அதையும் நாங்களே செஞ்சு பாத்தாத்தான் தெரியுமா? நீங்க எவ்வளவு சினிமா டைரக்ட் பண்ணி இருக்கீங்க சாமி? மணி ரத்தினம் படத்தப் பத்தியெல்லாம் யாரும் கேக்காமலே கருத்துக் குடுக்கறீங்களே, உங்களுக்கு சினிமா பின்னால இருக்கும் உழைப்பு தெரியுமா? உங்களுக்கு சினிமா விமரிசனம் எழுத என்ன தகுதி இருக்கு? அத கொஞ்சம் விளக்குங்களேன்....
"இதெல்லாம் வாழ்வியல் அனுபவங்கள் மூலமும், தொடர்ச்சியான வாசிப்பு மூலமும் புரிய ஆரம்பிக்கும்"
எல்லாரும் உங்கள மாதிரி முதிர்ந்த அறிவு உடையவங்களா இருக்க முடியுமா முதலாளி? ஏதோ இப்பத்தான் கொஞ்சம் கொஞ்சமா இந்தப் பாமர சனம் முன்னேறி வருது. கொஞ்சம் வழிகாட்டுங்க எசமான்...
"அவர் போன்றவர்கள் தவறாக புரிந்து கொள்ளப்படுபவதால் அவர்களுக்கு ஏற்படும் இழப்பை விட , சமுதாயத்துக்கு த்னி மனிதனுக்கு ஏற்படும் இழப்பு அதிகம் என்பது என் அனுபவம்"
வேண்டாங்க...இப்படி எல்லாம் எமோஷனலா சொன்னீங்கன்னா நான் ஓன்னு கதறி அழுதிடுவேன்...
mice
ReplyDeleteCharu is an excellent columnist. He has great command over the language. All his stories and essays in Varamalar, Vikatan and kumutham are good. His other stories are hard to understand and may be disgusting for a common man.
ReplyDeleteஎனக்கு ஏனோ இந்த "பிச்சைக்காரன்" blog சாருவினுடையது என்று தோன்றுகிறது. அது மட்டுமல்ல, இதில் எழுதப்பட்டிருக்கிற பெரும்பாலான கமெண்ட் கூட அவருடையது என்று எண்ணுகிறேன். அவருடைய எழுத்தில் எதுவும் இல்லை. wikipedia படித்துவிட்டு அதை வைத்து கதை பண்ணுகிறார்.
ReplyDelete‘திருவனந்தபுரத்தில் கூப்பிட்டாங்க... பாலக்காட்டிலே கூப்பிட்டாங்க... கொச்சியிலே கூப்பிட்டாங்க...’ (தமிழ்நாட்டில் ஒரு பயபுள்ளயும் ஒரு காலத்துலேயும் கூப்பிடாது). என்று பிலாக்கணம் வைப்பதற்கு பேசாமல் சாரு அங்கேயே குடியேறிவிடலாம். முல்லைப் பெரியாறுக்கு மலையாளிகளைப் பழிவாங்கிய மாதிரியும் இருக்கும்; தமிழகத்தில் ஒரு ஊளைச் சத்தம் குறைந்த மாதிரியும் இருக்கும்
ReplyDelete