Monday, January 17, 2011

செக்ஸை தீர்மானிப்பது எது??


 நண்பர் நிர்மல் தனக்கே உரிய பாணியில் வழங்கும் இந்த அறிவியல் கட்டுரையை படித்து பாருங்கள்..

___________________________________________________________________

ஒய் குரோமோசோம்- மனித இடப்பெயர்ச்சி வரலாற்றின் கதா நாயகன் - -Mrinzo Nirmal

மனிதர்களின் chromosome எண்ணிக்கை 23 ஜோடி என்று தெரியும், இந்த 23 ஜோடிகளில் ஒரு ஜோடிதான் நமது செக்ஸ்   அதாவது நாம் ஆண் / பெண் என்று தீர்மானிக்கிறது என்பதும் தெரியும்.

 மேலும் ஆண்களின் செக்ஸ் chromosome ஜோடி XY என்றும் பெண்களின் ஜோடி XX என்று குறிபிடுவார்கள். இந்த ஆண்களின் செக்ஸ் chromosome ஜோடியிலுள்ள Y என்ற chromosome ஒரு சிறப்பு தன்மை உள்ளது என்கிறார்கள். 
எப்படியென்றால் எனது Y chromosome  நான் எனது அப்பாவிடமிருந்து பெற்றேன்.
அவர் அவரது அப்பாவிடமிருந்து என     தலைமுறை தலைமுறையாக மாறாமல் அந்த Y-Chromosome வந்துகொண்டிருகிறதாம். சுருக்கமாக சொல்லப்போனால் நான், எனது சகோதரன், எனது அப்பா , தாதா அவரது அப்பா,  பெரியப்பா, சித்தப்பா அவரது ஆண் மக்கள் எல்லோருக்கும் ஒரே Y-Chromosome தான் இருக்கும், ஏன் வாசித்துகொண்டிருக்கும் உங்களுக்கும் எனக்கும் கூட ஒரே Y -Chrmosome இருக்கலாம். இப்படி ஒரே மாதிரியான Y-Chromosme உள்ளவர்கள் தற்போதோ அல்லது சில / பல தலைமுறைகளுக்கு முன்பு ஒரு ஆணிடமிருந்து பெற்றிருப்பார்கள். இப்படி தலைமுறை தலைமுறையாய் வந்துகொண்டிருக்கும் இந்த Y-Chromosome  சில சமையத்தில் சிறு மாறுதல் உண்டாகுமாம் இந்த மாறுதல் சில நூறாண்டுகளுக்கு ஒருமுறை நடக்கலாம் இந்த மாறுதலை Mutation என்று குறிப்பிடுகிறார்கள், இந்த மாறுதல் ஒருமுறை நடந்தால் நமது Y-Chromosome அந்த மாற்றங்களோடுதான் தலைமுறை தலைமுறையாக வந்துகொண்டிருக்கும்.
 
      இந்த மாற்றங்களோடு வந்துகொண்டிருக்கும் Y-Chromosome தான் நமது ஹீரோ, எழுதபடாத மனித இடப்பெயர்ச்சி  வரலாற்றின் கதாநாயகன், இந்த y-Chromosome மாற்றத்தை ஆராய்வதுமுலம் நமது பூர்விகம் எது நமக்கும் உலகில் உள்ள மற்ற மக்களுக்கும் என்ன சம்பந்தம் என்பதை அறியலாம. அதன்படி பார்த்ததில் தற்போது வாழும் எல்லா மனிதர்களும் Africa கண்டத்திலிருந்துதான் இடப்பெயர்ச்சி ஆனார்களாம், அவர்கள் ஆப்ரிக்காவின் கிழக்கு கடற்கரை ஓரமாக நடந்து மத்தியாசியவிற்கு வந்து பின்பு ஐரோப்பா, ரஷ்யா, அலாஸ்கா அதன்   வழியாக அமெரிக்க கண்டம் சென்றார்களாம், மேலும் மத்திய ஆசியாவிலிருந்து இந்தியா கடற்கரை வழியாக ஆஸ்திரேலியா சென்றார்கள் என்கிறார்கள்  இந்த ஆராச்சியாளர்கள். see the map for reference
 
எப்படி மனித இரத்ததை வகைபடித்தினர்களோ அதுபோல இந்த y-Chromosome  வகைபடுத்திவிட்டார்கள். 
உங்களது y-Chromosme  என்ன என்பதை தெரிந்துகொண்டால் உங்களை போல y-Chromosme  உள்ளவர்கள் எங்கிருக்கிறார்கள் எனபது கண்டுபிடித்துவிடலாம், உங்களது mutation marker வைத்து உங்களின் இடப்பெயர்ச்சி  வரலாற்றை எழுதிவிடலாம்.
 
-Mrinzo Nirmal

9 comments:

  1. அறிந்த தகவல்கள்தான் என்றாலும் வாசிக்க சுவாரகசியமாக இருந்தது. ஒரு அறிவியல்பதிவுக்கு நிர்மலுக்கு தாங்ஸ்..

    ReplyDelete
  2. எனது male Y -Chromosome வகை Haplogroup M69 என்பதாகும். இந்த Haplogroup ஐ பற்றி மேலும் அறிய http://en.wikipedia.org/wiki/Haplogroup_H_(Y-DNA) லிங்கில் பார்க்கவும்.

    Mrinzo Nirmal

    January 17, 2011 5:46 AM

    ReplyDelete
  3. பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  4. >>> போங்கண்ணே, எனக்கு வெக்க வெக்கமா வருது!

    ReplyDelete
  5. // Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com //

    உங்களுடைய இந்த புதிய சேவைக்கு வாழ்த்துக்கள்... இதை ஒரு தனி பக்கமாக இணைத்திருக்கலாமே...

    ReplyDelete
  6. இதற்குள் இன்னுமொரு சூட்சுமம் இருக்கிறது விரைவில் பதிவாய் இடுகிறேன்...


    அன்புச் சகோதரன்...
    மதி.சுதா.
    தமிழின் “ழ” வும் உச்சரிப்பு உபத்திரமும்.

    ReplyDelete
  7. அப்பப்ப அந்த மாதிரி பதிவு போடுவேனு சொல்லிட்டு எப்ப பார்த்தாலும் இந்த மாதிரி பதிவா போடுறாரே . எண்ண மாதிரி சின்னபையன் எப்படி எட்டிபார்க்கிறது

    ReplyDelete
  8. அடடே..நீங்களுமா..நம்ம கடையில இதே சரக்கு கொஞ்சம் வேற மாதிரி:
    முந்து

    ReplyDelete
  9. ஏற்கனவே தெரிந்தாலும்.....அருமை! :-)

    ReplyDelete

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா