ஆங்கிலத்தில் சில வியாபார, மேனேஜ்மெண்ட் , மார்கெட்டிங் சம்பந்தமான புத்தகங்கள் படிக்கும் போது இது போல தமிழில் இல்லையே என்ற ஏக்கம் உண்டாகும்...
ஒரு கார் நிறுவன மேலாண்மை இயக்குனர் தன் கஷ்ட நஷ்டங்களை சொல்லும்போது , கார் துறையில் இல்லாதவர்களுக்கும் கூட அது பயன்படும்... அடிப்படை தொழில் நுணுக்கங்கள், செயல்பாடுகள், முடிவெடுக்கும் கலை என்பது எல்லோருக்கும் ஒன்றுதான்..
அதே போல தமிழில் , ஒரு துறை பற்றிய அனுபவம் , ஞானம் கொண்ட ஒருவர் , வியாபார பார்வையில் எழுதினால் நன்றாக இருக்குமே என்று நான் எண்ணியதுண்டு...
ஆனால், பம்ப், கார் போன்ற துறையில் இருப்பவர்கள் அப்படி எழுதினால், அனைவராலும் அதை புரிந்து கொள்வது சிரமம்..
ஆனால் அனைவருக்கும் தெரிந்த சினிமா என்ற விஷ்யத்தை , வியாபார பார்வையில் கேபிள் எழுதி இருக்கிறார் என்பது மகிழ்வூட்டியது..
ஆனால் எப்படி எழுதி இருப்பாரோ என்ற சந்தேகமும் இருந்தது...
புத்தக கண்காட்சியில் நான் வாங்கிய புத்தகங்களில் இதுவும் ஒன்று..
ஒரு புத்தகம் வாங்கியவுடன், லேசாக புரட்டி பார்த்து விட்டு, எப்போது அதை படிக்க வேண்டும் என வரிசை படுத்தி வைப்பது என் வழக்கம்...
அந்த வகையில் புரட்டி பார்க்க ஆரம்பித்தேன்..
ஆனால் வரிசை படுத்தி வைக்க வேண்டிய அவசியம் வரவில்லை...
காரணம், படிக்க ஆரம்பித்தவுடன் அடுத்தடுத்து வரும் விஷ்யங்கள் என்னை இழுத்து சென்று விட்டதால், படித்து முடித்த பின்னே கீழே வைக்க முடிந்தது...
ஏரியா பிரித்தல், வினியோகம் , விளம்பரம், ஒளிபரப்பு உரிமைகள் , மார்கெட்டிங் யுக்திகள், ஹாலிவுட் பார்வை என ஒவ்வொரு பக்கமும் இன்ஃபர்மேட்டிவாக இருக்கிறது...
ஆனால், ஒரு பாட புத்தகம் போல இல்லாமல் , ஒரு சுவையான கதை போல இருப்பதே இதன் தனி சிறப்பு..
அதற்கு காரணம் அனுபவத்தில் இருந்து கொடுக்கும் உதாரணங்கள்...
இந்த வியாபாரத்தில் சந்த்தித்த லாப நஷ்டங்களை அனுபவித்தில் இருந்து பகிர்ந்து கொள்வதே இந்த நூலின் தனி சிறப்பு.. அதனால்தான் சொல்ல வரும் விஷ்யங்கள் நன்றாக மனதில் நிற்கின்றன..
அனுபவ குறைவால் செய்த தவறுகளையும் வெளிப்படையாக ஒப்புக்கொண்டுள்ளார் கேபிள்...
ஆனால் இந்த ஃபிளோ , ஹாலிவுட் பார்வை வரும்போது லேசாக தடுமாறுகிறது...
அதுவும் இன்ஃபார்மாட்டிவாக இருந்தாலும், கதை போல செல்லும் நூலின் பாணியில் இருந்து விலகுவதாக தோன்றுகிறது...
ரிஸ்க் எடுத்தல், டிசிசஷன் மேக்கிங், மார்கெட்டிங் என்று பட்டையை கிளப்பும் இந்த புத்தகம் அனைவருக்கும் பயன்படும்..
அனைவருமே படிக்க் வேண்டும்..
சினிமா துறையில் ஆர்வம் இருப்பவர்களுக்கு சற்று கூடுதலாக பயன்படும்...
பய்னை எதிர்பார்க்காமல், சும்மா சுவாரஸ்யத்துக்காகவும் வாசிக்கலாம்..
அவ்வப்போது செய்திகளில் அடிபடும், எம் ஜி வினியோகம்,. ஏரியாக்கள், போன்ற வார்த்தைகளின் அர்த்தம் தெரிந்து கொள்ளவும் படிக்கலாம்...
********************************************
சினிமா வியாபாரம்..
ப்ளஸ் - 1 சுவையான நடை
2. அனுபவம் சார்ந்த விளக்கம்
3 . இன்ஃபர்மேட்டிவாக இருத்தல்
மைனஸ்
1. ஒரே எழுத்து மயமாக இருத்தல்.. ஓவியங்களோ , புகைப்படங்களோ சேர்த்து இருக்கலாம்..
2. ஹாலிவுட் பார்வை வரும்போது, அது தனி பிரிவாக தோன்றுதல்
வெர்டிக்ட்
சினிமா வியாபாரம் - சிறப்பான விருந்து
சினிமா வியாபாரம்
கேபிள் சங்கர்
கிழக்கு பதிப்பகம்
Subscribe to:
Post Comments (Atom)
Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com
விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....
Blog Archive
-
▼
2011
(189)
-
▼
January
(19)
- பரிணாம வளர்ச்சி என்பது தவறா? –இளைஞன் பார்வையில் இஸ...
- உலகின் கடைசி மனிதன் - End of World
- சாமியாரின் ரகசிய ஆராய்ச்சி – the unknown island
- சாரு நிவேதிதா எந்த இயக்கத்தை சேர்ந்தவர் ? -- Mrinz...
- பத்தாவது உலகம் – THE TEN’TH WORLD
- கேபிள் எழுதிய “சினிமா வியாபாரம்” புத்தகம்- சிறப்பா...
- செக்ஸை தீர்மானிப்பது எது??
- சாரு- மிகவும் தவறாக புரிந்து கொள்ளப்பட்டு வரும் எழ...
- ஒரே நாளில் 900 பேருடன் ஜல்சா செய்த பெண் - பலான சாத...
- முயல் ஆமை கதை- வித்தியாசமான நடையில் நிர்மல்
- கேபிள் சங்கருக்கு கிடைத்த அதிர்ச்சி- புத்தக கண்காட...
- கத்தியை தீட்டாதே !! - நிர்மல்
- பாலகுமாரன் , எட்கர் ஆலன் போ , புஷ்பா தங்கதுரை எழுத...
- புத்தக கண்காட்சியில் கேபிள் சங்கர் அராஜகம்- படத்து...
- பெண்ணை கைவிட்டு தன்னை காதலித்த ஆண்- நிர்மல் வழங்கு...
- கத்தியை தீட்டாதே !!
- உண்மையான உ.தமிழன் யார்? அதிர்ச்சி சம்பவம் !!!!!!
- தமிழ் மணம் டாப் 20 பதிவர்களில் என்னை கவர்ந்த இடுகை...
- 2011- டாப் டென் அச்சங்கள்
-
▼
January
(19)
// ஆனால் அனைவருக்கும் தெரிந்த சினிமா என்ற விஷ்யத்தை , வியாபார பார்வையில் கேபிள் எழுதி இருக்கிறார் என்பது மகிழ்வூட்டியது.. //
ReplyDeleteசொல்லப்போனால் சினிமா பற்றி எல்லாம் தெரியும் என்று நம்மில் பலர் நினைத்துக் கொண்டிருக்கிறோம்... ஆனால் சினிமா பற்றி நாம் தெரிந்துக் கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது... ஒருவேளை உங்களுக்கு சினிமா பற்றி அதிகம் தெரியுமோ என்னவோ...?
நூல் விமர்சனம் எழுதுவது இவ்வளவு சுலபம் என்றால் நான் கூட எழுதுவேனே...
ReplyDeleteமுயற்சி செய்கிறேன்...
கேபிள் வந்து பின்னூட்டம் போட்டபின்பு மீண்டும் வருகிறேன்...
ReplyDeleteசினிமா என்று ஒன்று இருக்கிறது என அனைவருக்கும் தெரியும் அல்லவா . அதைதான் சொன்னேன் . டென்சினோ மீட்டர் பற்றி யாராவது பேசினால் நமக்கு ஈடுபாடு வராது . அப்படி ஒரு கருவி இருக்கிறதா என்பதே சந்தேகமாக இருக்கும் . ஆனால் அனைவரும் சினிமா பார்த்திருப்போம் என்பதால் , ஈடுபாட்டுடன் படிக்க முடியும் .
ReplyDeleteஅருமை பாஸ்
ReplyDeleteஅருமையான அலசல்!
ReplyDeleteஇந்தநூல் பதிவுலக நண்பர் ஒருவரினால் எனக்கு அன்புடன் அனுப்பி வைக்கப்பட்டது. கேபிளாருக்கே இது தெரியுமோ தெரியாது. ஆனால் நட்பு புகழுக்காக என்றில்லை நல்லா இருக்கு. அடுத்து சங்கர் அண்ணா சினிமா திரையரங்கங்கள் பற்றி எழுதியவை எனக்கு ரொம்ப ரொம்ப பிடித்துப்போன ஒன்று.
ReplyDelete//சினிமா வியாபாரம் - சிறப்பான விருந்து// சாப்பிட்டு பார்த்துவிட்டுச் சொல்கிறேன் :)
ReplyDeleteஅலசல் நல்லாருக்குங்கோ
ReplyDeleteஇன்னும் கொஞ்சம் விரிவாக இருந்திருக்கலாம்.
ReplyDelete//ஹாலிவுட் பார்வை வரும்போது, அது தனி பிரிவாக தோன்றுதல்//
ReplyDeleteஅதுக்குக் காரணம் வேற ஒரு பேமானிங்க. கேபிள் அதுக்கு காரணமில்லை.