Monday, January 31, 2011

பரிணாம வளர்ச்சி என்பது தவறா? –இளைஞன் பார்வையில் இஸ்லாம்

எதையும்  கேள்வி கேட்பது பகுத்தறிவு..

நடை முறையில் பகுத்தறிவு என்பது அப்படி செயல்படுவதில்லை…

கடவுள் இல்லை என நம்புவது மட்டுமே  பகுத்தறிவு என்பதே தமிழ் நாட்டு பாணி.

கடவுள் மட்டும் இல்லை.. அரசியல், சினிமா மயக்கம், அறிவியல் என எல்லாவற்றையும் முன் முடிவு எதுவும் இல்லாமல் பார்ப்பதே உண்மையான பகுத்தறிவு..

அதாவது ஒரு விஷ்யத்தை தேடி கண்டு பிடிக்க வேண்டும்… ஒரு முடிவு எடுத்து விட்டு தேடுதல் கேலிக்குரியது..

அறிவியல் என சொல்வதை அப்படியே நம்பி கொண்டு இருந்தால், உலகம் இந்த அளவுக்கு வளர்ந்திருக்காது..

உலகம் தட்டை என்று சொன்ன அன்றைய “ அறிவியல் “ உண்மை பின்பு மாற்ற்ப்பட வில்லையா?

அறிவியல் என்பது தொடர்ந்து மாறி கொண்டு இருக்கும் ஒன்று..

உதாரணமாக பரிணாம கொள்கை என்பது ஒரு காலத்தில் அறிவியல் உண்மையாக இருந்தது.. இப்போது அதுவே கூட தவறாக இருக்க கூடும் என்ற கருத்து பரவ ஆரம்பித்துள்ளது…

 

உதாரணமா சர்வைவல் ஆஃப் ஃபிட்டஸ்ட் என்ற கொள்கையை பாருங்கள்.

தகுதியுடையதே எஞ்சும் என்பது ஓர் அறிவியல் விதி.

இதற்கு நிரூபணம் என்ன?

யானை போன்ற விலங்குகள் இன்னும் வாழ்கின்றன என்றால் அதற்கு காரணம் அவை தகுதியுடையவை என்றார்கள் ..

ஆனால் தகுதியுடைய, வலிமுடைய விலங்குகள் அழிந்து இருக்க கூடும் என்ற சாத்தியத்தை இப்போது உணர ஆரம்பித்து உள்ளார்கள்.

 

தகுதியுடையது வாழும்,,, வாழும் உயிரினங்கள் தகுதி இருப்பதாலேயே வாழ்கின்றன என்ற அபத்தமான லாஜிக்கை உணர ஆரம்பித்து இருப்பதால் , பரிணாம கொள்கையின் அடிப்படையே தகர ஆரம்பித்துள்ளது…

என்னை பொருத்தவரை கடவுள் இருக்கிறார் , இல்லை என்றோ இந்த கடவுள்தான் உண்மை அந்த கடவுள் பொய் என்றோ எந்த முன் முடிவும் இல்லாமல் ,  ஓர் ஆய்வு மாணவனை போல, ஒரு பார்வையாளனை போல அனைத்தையும் கவனிப்பது வழக்கம்..

இப்படி இருப்பதால், கடவுள் என ஒருவர் இருந்தால், கண்டிப்பாக அவர் என்னை ஏற்பார் , என் ஆர்வத்தை மதிப்பார் என்பது என் எண்ணம்..

அப்படி கடவுள் என யாரும் இல்லாவிட்டாலும் கூட வாழ்வில் பல விஷ்யங்களை தெரிந்து கொண்ட திருப்தி கிடைக்கும் ..

கடவுள் இல்லை என தீவிர நம்புவது ஒரு வித மன தடையே.. அதே போல ஆன்மீகம் சார்ந்த மூட நம்பிக்கைகள், சாமியார்களை நம்பி ஏமாறுதலும் மன தடைதான்..

இதெல்லாம் இல்லாமல் , வெறும் தேடலுடன் மட்டும் இருந்தால் எத்தனை எத்தனை விஷ்யங்கள் நம்மை சுற்றி கொட்டி கிடக்கின்றன.

 

கிறிஸ்தவ பள்ளியில் படித்ததால், சிறு வயதில் இருந்தே பைபிள் அறிமுகம் உண்டு..

வாழ்வின் அனுபவங்கள் சேரும் போது அது ஒவ்வொரு அர்த்தம் அளித்து வருவதால் அதை இன்னும் படித்து முடிக்கவில்லை..

அதே போல கீதையும் அவ்வப்போது படிப்பதுண்டு..

ஆனால் குர் ஆன் அவ்வளவு பரிச்சயம் இல்லாமல் இருந்து வந்தது…

சமீப கால கட்டத்தில் அதையும் படிக்க ஆரம்பித்து இருக்கிறேன்..

அடடா… இத்தனை காலம் படிக்காமல் விட்டு விட்டோமே..இதை பற்றி தெரிந்து கொள்ளாமல் போய் விட்டோமே என வருந்தினேன்..

சென்ற வாரம் நான் படித்த ஒரு வாசகம்…

அவன் நாடினால் உங்களை அகற்றி விட்டு உங்களுக்கு பதிலாக ஏதேனும் புதிய படைப்பை கொண்டு வந்து விடுவான். இவ்வாறு செய்வது அல்லாஹ்வுக்கு சிரமமல்ல- திருக்குர் ஆன் – 35:16

படித்ததும் திகைத்தேன்..

இது என்ன சொல்கிறது?

மனித இனம் அழிந்து அதற்கு பின் வேறொரு உயிர் தோன்றுமா என யோசித்தேன்..

யோசித்து பார்த்தால் பரிணாம வளர்ச்சி என்பதற்கெல்லாம் ஆதாரம் இல்லை…

ஏதோ ஒரு இயற்கை சக்தியால் , ஒரு அபூர்வ நிகழ்ச்சியால்தான் மனிதன் உண்டாகி இருக்க முடியும்..

அந்த இயற்கை சக்தியை அல்லா என்றோ அல்லது வேறு பெயரிலோ சொல்லலாம்.. ஆனால் ஓர் இயற்கை சக்தி இருப்பதை யாரும் மறுக்க முடியாது…

இதை குறித்து நண்பர் அரபு தமிழனிடம் விளக்க்கம் கேட்டேன்..

அவர் பதில் அனுப்பினார்…

”மேற்கண்ட வசனம் இறை நம்பிக்கையாளர்களை விளித்துச் சொல்லப் பட்டது. நீங்கள் நான் கொடுத்த பொறுப்பைத் தட்டிக் கழித்தால், நான் (மனிதர்களில்) வேறொரு சமுதாயத்தைக் கொண்டு இப் பணியை வாங்கிக் கொள்வேன் என்ற அர்த்தத்தில் சொல்லப் பட்டது.
மனிதர்களுக்கு முன் இப் பூவுலகின் ஆட்சி ஜின்களுக்குக் கொடுக்கப் பட்டிருந்தன. அவைகள் செய்த அட்டூழியத்திற்குப் பிறகு மனிதன் அனுப்பப் பட்டு அவனிடம் ஆட்சி கொடுக்கப் பட்டுள்ளது. இந்த இரு இனத்திற்குப் பிறகு வேறு ஒரு புதிய கூட்டம் வரப் போவதில்லை.”

'தன்னால் கொண்டு வர முடியும்' என்று இறைவன் கூறினாலும் மனிதன்,ஜின் இந்த இரண்டைத் தவிர‌
சோதனைக்கு உட்படுத்தப்படும் வேறு புதிய யாரும் வரப்போவதில்லை என்பதுதான் எல்லோருடைய ஏகோபித்த கருத்து

இது அவர் அளித்த பதில்..

நான் மறைவானப் பொக்கிஷமாக (தனியாக) இருந்தேன்.

எனது அருமை பெருமைகள் அறியப்பட விரும்பினேன். எனவே என்னிலிருந்து ஒளியை எடுத்து அதிலிருந்து படைப்பினங்களைப் படைத்தேன். எனது படைப்புகளில் ஆகச் சிறந்த படைப்பு, மனிதன்”

புகை அற்ற நெருப்பின் ஜ்வாலையால் அவன் ஜின்னை படைத்தான் “

இது போன்ற கருத்துக்களை ஆழ்ந்து யோசித்து வைத்தன….

 

ஒரு விஷ்யத்தை இருக்கிறது , இல்லை என அவசரமாக பேசுவ்தை விட, தெரிந்து கொள்ள வேண்டும் என்று அணுகினால் எத்தனையோ கதவுகள் நமக்காக திறக்க காத்து இருகின்றன..

அறிவியலை குறிப்பிட்ட அளவுக்கு மேல் படிக்க்க ஆரம்பித்தால் , தத்துவ நூல் போல தோன்றும்//

அதே போல மத நூல்கள் , குறிபிட்ட அளவுக்கு மேல் அறிவியல் போல தோன்றும்…

 

நான் குறிப்பிட்ட ஒரு வரி என்னை ஒரு வாரம் யோசிக்க வைத்தது.. படிக்க வைத்தது…

படிக்க படிக்க , இன்னும் படிக்க வேண்டும் என்றே தோன்றுகிறது..

கடந்த தலைமுறை செய்த தவறை நாமும் செய்ய கூடாது…

உண்மையான பகுதறிவு என்பது அனைத்தையும் அறிவதே.. எதையும் தெரிந்து கொள்ளாமல் இருப்பது பகுத்தறிவு அல்ல..

24 comments:

  1. very interesting...... தொடர்ந்து கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.

    ReplyDelete
  2. இந்த இடுகைக்கு நான் கருத்து கூற விரும்பவில்லை.... Follow up comments required...

    ReplyDelete
  3. "சமன் செய்து சீர் தூக்கும் கோல்போல் அமைந்து, ஒருபால்
    கோடாமை-சான்றோர்க்கு அணி."

    ReplyDelete
  4. இஸ்லாமிய அறிமுகம் ஆகிக் கொண்டிருக்கும் அருமை சகோதரர்க்கு,
    தங்களை போல் திறந்த மனதுடன் அணுகும் போதுதான்,அது எம்மதமாயினும்,அதில் உள்ள நன்மை தீமைகளை தெளிவாக விளங்கிக்கொள்ள முடியும்,...

    தொடர்ந்து படியுங்கள்,தொடர்ந்து எழுதுங்கள்...

    அன்புடன்
    ரஜின்

    ReplyDelete
  5. தோழரே! நீவிர் (அறிவுப்) பிச்சைக்காரனல்ல. அறிவைத்தேடித் தேடிப் பெற்று
    அலசி ஆராய்ந்து ஆச்சர்யப்பட்டு 'தான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்' என்று துணிந்து அறிவிக்கும்

    ஒரு 'புரட்சிகர பகுத்தறிவு விஞ்ஞானி' :)

    ReplyDelete
  6. //என்னை பொருத்தவரை கடவுள் இருக்கிறார் , இல்லை என்றோ இந்த கடவுள்தான் உண்மை அந்த கடவுள் பொய் என்றோ எந்த முன் முடிவும் இல்லாமல் , ஓர் ஆய்வு மாணவனை போல, ஒரு பார்வையாளனை போல அனைத்தையும் கவனிப்பது வழக்கம்..

    இப்படி இருப்பதால், கடவுள் என ஒருவர் இருந்தால், கண்டிப்பாக அவர் என்னை ஏற்பார் , என் ஆர்வத்தை மதிப்பார் என்பது என் எண்ணம்..

    அப்படி கடவுள் என யாரும் இல்லாவிட்டாலும் கூட வாழ்வில் பல விஷ்யங்களை தெரிந்து கொண்ட திருப்தி கிடைக்கும் ..

    கடவுள் இல்லை என தீவிர நம்புவது ஒரு வித மன தடையே.. அதே போல ஆன்மீகம் சார்ந்த மூட நம்பிக்கைகள், சாமியார்களை நம்பி ஏமாறுதலும் மன தடைதான்..

    இதெல்லாம் இல்லாமல் , வெறும் தேடலுடன் மட்டும் இருந்தால் எத்தனை எத்தனை விஷ்யங்கள் நம்மை சுற்றி கொட்டி கிடக்கின்றன.//

    மிக சரியான கருத்துகள். அழகாக, எளிமையாக எழுதுகிறீர்கள். தொடர்ந்து எழுதுங்கள்.

    ReplyDelete
  7. அருமையான கட்டுரை கண்டிப்பா நெறைய பின்னுடம் இதற்கு வராது அப்படி வந்தாலும் உங்களது மற்ற மதத்தின் மீது உள்ள காதலை சுட்டிக்காட்டி வரும். நெறைய பேர் எதுக்கு கடவுளை பற்றி பேசி அவரோட கோவத்துக்கு ஆளாகனும் என்றும் இருக்கலாம்.


    பரிணாம வளர்ச்சிதான் சரி என்ற முடிவைபோல அது தவறு என்ற முடிவுதான் தவறு என்று நெனைகிறேன். அது ஒரு முடிவு அல்ல அது ஒரு அறிவியல் கருத்து அவளவுதான். இந்த முடிவை சர்ந்தாதா நமது கடவுளின் நம்பிக்கை? அப்படியென்றால் அது நம்பிக்கை அல்ல வெறும் யுகம்.

    இந்த கடவுள் இல்லை, இருக்கிறார் என்பதை போல ஒரு அபத்த கேள்வி இல்லை, இதற்கு சில மதவாதிகள் பதில் சொலுவது அதைவிடவும் அபத்தம். இது எல்லாம், கடவுளை அறிவியல் அறிவு கொண்டு சிந்திக்கும் மூடத்தனம். அறிவியல்தான் yes அல்லது No என்று முடிவு சொல்லும். நீங்கள் சொல்லுவது போல ஒரு தேடல்தான் முக்கியம்.

    நான் கடவுளை நம்புகிறேன் அது எனது தேர்வு என்பதுதான் சரி என்று படுகிறது, இந்த தேர்வை நான் அறிவால் ஆராச்சி செய்து யாருக்கும் prove பண்ண அவசியம் இல்லை என்கிறே மன பக்குவம் தேவை. அது போல கடவுள் இல்லை என்கிறதும் ஒரு தேர்வுதான், கடவுள் இருகிறார இல்லையா எனக்கு தெரியாது என்பதும் ஒரு தேர்வுதான், Its all about our personal choice. கடவுளை/ நல்லதை / உண்மையை அறிய முற்படுகிறேன் என்ற முறைதான் சரியாக இருக்கும். இந்த பயணம்தான் முக்கியம் முடிவு அல்ல

    ReplyDelete
  8. அருமை ,

    ஒரு பார்வையாளனாக இருப்பதற்கு எதையும் முழுமையாக புரிந்து கொள்ளும் பக்குவம் வேண்டும் அது வயதாக வயதாக வளர வேண்டும் என்று தெரிகிறது ,எனக்கு அந்த பக்குவம் கிடையாது

    உமது தேடலுக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  9. நல்ல பகிர்வு பார்வையாளன். என்னுடைய எண்ணங்கள் உங்கள் எழுத்தில். மிக்க மகிழ்ச்சி.

    ReplyDelete
  10. இந்த இடுகைக்கு நான் கருத்து கூற விரும்பவில்லை.... Follow up comments required..."

    தலைப்பு வைக்க ஐடியா கொடுத்ததே நீங்கள்தானே

    ReplyDelete
  11. நல்ல பகிர்வு பார்வையாளன். என்னுடைய எண்ணங்கள் உங்கள் எழுத்தில். மிக்க மகிழ்ச்சி”

    நன்றி கனாகாதலன்

    ReplyDelete
  12. Chitra said...
    very interesting..”

    நன்றி மேடம்

    ReplyDelete
  13. தோழரே! நீவிர் (அறிவுப்) பிச்சைக்காரனல்ல”

    இல்லை...

    என்றுமே அறிவை தெடும் நிலையிலேயே இருக்க விரும்பிகிறேன்..

    ReplyDelete
  14. சமன் செய்து சீர் தூக்கும் கோல்போல் அமைந்து, ஒருபால்
    கோடாமை-சான்றோர்க்கு அணி”

    அருமை

    ReplyDelete
  15. இந்த பயணம்தான் முக்கியம் முடிவு அல்ல”

    சரியா சொன்னீங்க

    ReplyDelete
  16. தொடர்ந்து படியுங்கள்,தொடர்ந்து எழுதுங்கள்...

    அன்புடன்
    ரஜின்”

    அன்புக்கு நன்றி

    ReplyDelete
  17. உமது தேடலுக்கு வாழ்த்துக்கள்”

    நன்றி

    ReplyDelete
  18. மிக சரியான கருத்துகள். அழகாக, எளிமையாக எழுதுகிறீர்கள். தொடர்ந்து எழுதுங்கள்.

    மிகவும் நன்றி

    ReplyDelete
  19. ஒருவனின்' அடிமை said...
    very nice

    நன்றி

    ReplyDelete
  20. பார்வையாளன், நீங்கள் இதுவரை எழுதிய பதிவுகளில் இந்தப் பதிவு முக்கியமான ஒன்று. மற்ற பதிவுகளைக் குறை கூறுவதாக எண்ண வேண்டாம்:)

    நாகூர் ரூமியின் ‘இஸ்லாம் ஒரு எளிய அறிமுகம்’ அருமையான புத்தகம் (கிழக்கு வெளியீடு). இஸ்லாம் பற்றிய சரியான புரிதல் ஓரளவிற்கு எனக்கு ஏற்பட அந்தப் புத்தகம் ஒரு முக்கியக் காரணம். நீங்களும் முடிந்தால் படியுங்கள். புத்தகத்தின் தலைப்புதான் ‘எளிய அறிமுகம்’. சொல்லப்படும் விஷயங்களின் கனம் அதிகம்:)

    ReplyDelete
  21. சகோதரர் பார்வையாளன் அவர்களுக்கு,

    அஸ்ஸலாமு அலைக்கும் (உங்கள் மீது இறைவனின் சாந்தியும், சமாதானமும் நிலவுவதாக...ஆமீன்)

    சொல்லுவதற்கு ஒன்றுமில்லை, உங்கள் தேடலை தொடருங்கள் என்பதை தவிர. உங்களுக்கு இஸ்லாம் குறித்த கேள்விகள் இருப்பின் இந்த சகோதரனையும் மனதில் கொள்ளுங்கள். இறைவன் நாடினால் பதிலளித்து அனுப்புகின்றேன்.

    மற்ற சகோதர/சகோதரிகளுக்கு, குரானை படிக்க வேண்டுமென்று ஆசைப்படுபவராக இருக்கின்றீர்களா? அப்படியென்றால், aashiq.ahamed.14@gmail.com என்ற ஐ.டிக்கு ஒரு மெயில் அனுப்புங்கள். குரான் தமிழ் அர்த்தங்கள் soft copy அனுப்பி வைக்கின்றேன். இன்ஷா அல்லாஹ்.

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் இறைவன் அமைதியையும், மகிழ்ச்சியையும் தந்தருள வேண்டுமென்று பிரார்த்திக்கும்

    உங்கள் சகோதரன்,
    ஆஷிக் அஹ்மத் அ

    ReplyDelete
  22. there is a verse in quran which says allah opens up the heart of a man towards the religion
    (way of life / search of god) when He seeks good to him. Somehow I think it is Almighty's plan to get you acquainted with Islam. Now that you, yourself is reading it, I dont wanna say anything more. Hope it opens new doors in life for you, which may, God willing guide you to the straight path.

    Share more,
    Peace.

    ReplyDelete
  23. மிக நிதானமாக படித்து முடித்தேன். தங்களின் மிக முக்கியமான பதிவுகளில் இதுவும் ஒன்று என்பதில் மற்றக்கருத்து கிடையாது.

    கடவுள் மட்டும் இல்லை.. அரசியல், சினிமா மயக்கம், அறிவியல் என எல்லாவற்றையும் முன் முடிவு எதுவும் இல்லாமல் பார்ப்பதே உண்மையான பகுத்தறிவு..

    நூற்றுக்கு நுர்று உண்மை.

    ReplyDelete

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா