அவன் நாடினால் உங்களை அகற்றி விட்டு உங்களுக்கு பதிலாக ஏதேனும் புதிய படைப்பை கொண்டு வந்து விடுவான். இவ்வாறு செய்வது அல்லாஹ்வுக்கு சிரமமல்ல- திருக்குர் ஆன் – 35:16
*********************************************************
” சார்..ப்ளீஸ் ஏதாவது செய்யுங்க… புற ஊதா கதிர் வீச்சின் தாக்கம் அதிகரித்து கொண்டே செல்கிறது.. உலகில் மிச்சமிருக்கும் நாமும் அழிந்து விடுவோமோ என பயமாக இருக்கிறது “
அச்சதுடன் பேசிய அமைச்சர் சிங்கை மனதிற்குள் சிரித்தவாறே பார்த்தார் விஞ்ஞானி விஜயன்.
இயற்கையை சீர் குலைப்பதில் முக்கிய பங்காற்றிய அமைச்சர், கறுப்பு பணத்தை வங்கிகளில் முடக்கிய தலைவர்கள் எல்லாம் இப்போது அதன் விளைவை அனுபவிக்கிறார்கள்.. இப்படி ஒரு நிலை வரும் எனபதை அவர்களே எதிர்பார்த்து இருக்க மாட்டார்கள்.
கோடி கோடியாக பணம் இருந்தாலும் அதனால் பயன் ஒன்றும் இல்லை.. பெரும்பாலான மனித இனம் அழிந்து விட்டது. இந்த பணத்தை வைத்து எதையும் வாங்க முடியாது.
பணம் ஒரு பக்கம் இருக்கட்டும். உயிர் வாழ்வே சிக்கலாகி விட்டது.
“ சார்.. நீங்க சொல்வது உண்மைதான். அபாயமான கால கட்டத்தில்தான் இருக்கிறோம். புறா ஊதா கதிர்கள், அதிகரிக்கும் வெப்பம் என பல பிரச்சினைகளால் ஏற்கனவே கிட்டத்தட்ட உலகம் அழிந்து விட்டது. நம் நாடு மட்டும்- சாரி , மாநிலம் மட்டும்,. சாரி.. நம் ஊர் மட்டுமே உலகில் மிச்சம் இருக்கிறது… நாடு என இப்போது சொல்வது கூட அர்த்தம் அற்றது. ”
தான் எந்த நாட்டின் அமைச்சர் என மனீந்தர் சிங் குழம்பினார்.
” இப்போது இன்னும் ஒரு பிரச்சினை.. இப்போது நிலவும் கடும் வெப்பனிலையை சந்திக்கும் அளவுக்கு புதிதாக ஓர் உயிரினம் பரிணாம வளர்ச்சி பெற்று வருகிறது . அது நம்மை விட வலுவானது… அதனாலும் நமக்கு அபாயம் வரலாம் “
அமைச்சரும் , மற்றோரும் அதிர்ந்தனர்.
“ இதில் இருந்து தப்பிக்க என்ன வழி “
“ கடலுக்கு அடியில் சென்று விடுவதுதான் ஒரே வழி.. சில ஆண்டுகள் , முடிந்தால் சில தலை முறைகள் அங்கேயே இருந்து நம்மை வலுப்படுத்தி கொள்ள வேண்டும். அதன் பின் பூமிக்கு வந்தால் சாதகாம நிலை தோன்றி இருக்கலாம் “ அமைதியாக சொன்னார் விஜயன்.
“ அப்படி என்றால் கடலுக்கு அடியில் மாளிகை கட்ட முடியுமா ? “ அமைச்சரின் மனைவி ஷீலா அவசரமாக கேட்டாள்.
“ முடியாது மேடம். நான் வேறொரு வழி சொல்றேன். நீருக்கடியில் வாழும் பாலூட்டி ஒன்று உண்டு. அதன் உடலில் நம் உயிரை சேர்க்கும் தொழில் நுட்பம் , ஜீனோம் முறையில் கண்டு பிடித்துள்ளேன். அதன் படி நாம் அந்த உயிரியின் உடலில் பாதுகாப்பாக வாழலாம். நம் ஊர் மக்கள் அனைவரும் இப்படி மாறி விடுவதால் போர் அடிக்காது “
திகைப்புடன் பார்த்தனர் அனைவரும்.
“ வேறொரு உயிரி உடலில் இருக்கும் நான் பேசுவது அடுத்தவர்களுக்கு புரியுமா? “
அமைச்சர் டென்ஷனாக கேட்டார்.
“ அந்த உயிரி வடிவில் பேச முடியாது. உணர்வு இழைகளால் தகவல்கள் பரிமாறிக்கொள்ள முடியும். அதே நேரத்தில், மனிதன் என்ற உனர்வும் மறந்து விடும்.. பெயர் , படிப்பு எல்லாமே மறந்து விடும். எனவே அமைச்சரே, இந்த உண்மையை எல்லாம் ஒரு துருபிடிக்காத தகட்டில் பதித்து , கவிஞர் காஜாவிடம் கொடுத்து விடுகிறேன். உணர்வு இழைகளால் அதை அவர் படிக்க முடியும். அவர் அவ்வப்போது அதை படித்து காட்டுவார். எனவே அர்த்தம் புரியாவிட்டாலும், இந்த உண்மை அனைவர் காதிலும் விழுந்து கொண்டே இருக்கும்.
ஒரு கால கட்டத்தில், நீங்கள் மேலே வரும்போது சென்சார் மூலம் நாம் அடையாளம் கண்டு கொண்டு , மீண்டும் அழைத்து கொள்வேன். அதற்கு நீண்ட காலம் ஆகி, நான் இறந்து விட்டாலும், என் க்ளோனிங் உருவம் இங்கே இருக்கும் “
அமைச்சர் சந்தேகத்துடன் ஏதோ கேட்க வாய் திறந்தார்.
விஞ்ஞானி குறுக்கிட்டார்..
” நீங்கள் கேட்க நினைப்பது புரிகிறது.. உங்களுக்கு துரோகம் செய்து விட்டு, உங்களை எல்லாம் அப்படியே விட்டு விட்டால் என்ன செய்வது என்பது உங்கள் சந்தேகம். அப்படி செய்ய மாட்டேன். உலகில் நான் மட்டும் தனியாக இருந்து என்ன செய்வது. மேலும் பரிணாம வளர்ச்சியில் புதிதாக தோன்றும் மனிதர்களை நான் மட்டும் தனியாக சமாளிக்க முடியாது.. நீங்கள் எல்லாம் வந்தால்தான் முடியும். எனவே உங்கள் வருகை எனக்கும் முக்கியம்.. “
அனைவரும் சற்று திருப்தியுடன் தலை அசைத்தனர்.
மனித இனத்தின் கடைசி கூட்டம் கடலில் அடைக்கலம் புகுந்தது… உலகில் தனி மனிதனாக விஜயன் இருந்தார் ..
***********************************************
மனித- மீன் கூட்டம் கடலின் அடியில் தமக்கென ஒரு ஊர் அமைத்தன.. மனிதன் என்ப்தை மறந்து விட்டாலும், தாம் எல்லாம் ஒரே இனம் என்பது மட்டும் நினைவில் இருந்தது..
கவிஞர் தினமும் தட்டில் இருந்து சிலவற்றை படிப்பார்.. அவருக்கே அதன் அர்த்தம் தெரியாது.. ஆனால் தினமும் படிக்க வேண்டும் என்பது மனதில் பதிய வைக்க பட்டு இருந்தது..
“ நாம் வெறும் மீன்கள் அல்ல.. அதற்கும் மேலான ஓர் இனம். கடலுக்கு அப்பால் ஓர் உலகம் இருக்கிறது. கடலே சாஸ்வதம் என இருந்து விட கூடாது.. இங்கு காணும் இன்பங்கள் எல்லாம் அற்பமானவை.. நாம் இதை எல்லாம் விட உயர்ந்தவர்கள்”
இது போல ஏதாவது படிப்பார் .. அதாவது சப்தம் எழுப்புவார்.. உணர்வு இழைகள் மூலம் மற்றவை புரிந்து கொள்ளும்..
அங்கு கிடைக்கும் புழுக்களையும் , அழுக்கையும் சாப்பிடிவதில் இன்பம் கண்ட சில மீன்கள் இதை விரும்பவில்லை..
” கற்பனையான ஒன்றை அவர் பேசுகிறார்.. இருக்கும் வரை ஜாலியாக இருந்து விட்டு ஒரு நாள் சாவோம்.. இதுதான் வாழ்க்கை..இதற்கு மேல் ஒன்றும் இல்லை”
மலத்தை தின்று கொண்டே அவை பேசிக்கொண்டு இருந்தன..
சில மீன்களுக்கு குழப்பம்..
அவர் சொல்வது கொஞ்சம் உண்மையாக இருக்கலாம்.. ஒழுக்கமாக வாழ்வோம் என முடிவு செய்து, அவற்றை போலவே சிலைகள் செய்து வழிபட்டு வர தொடங்கின.. இந்த தெய்வங்களை வழிபட்டால், கவிஞர் சொல்லும் மேலான் உலகம் கிடைக்கும் என்பது அவற்றின் நம்பிக்கை..
இரண்டாம் தலை முறை மீன்கள் உருவாகி, தெய்வங்கள் உண்டு /இல்லை என்ற அக்கப்போரை தொடங்கின.
இதற்குள் தண்ணிர் வாழ்க்கை போரடித்து போன சில மீன்கள், அமைச்சர் மீன் தலைமையில் ”விண் உலக” – நீர் மட்டத்துக்கு மேல் -பயணம் மேற்கொள்ள திட்டமிட்டன..
கவிஞருடன் பேசி சில முடிவுகளுக்கு வந்தன..
- விண் உலகில் தண்ணிர் இருக்காது… எனவே சுவாசிப்பதற்காக தண்ணீர் பையை உடலில் கட்டி எடுத்து செல்ல வேண்டும்.
- விண் உலகம் சென்று மேலே பார்த்தால், அங்கும் ஒரு விண் இருக்கும்,, அங்கு செல்ல முடியாது.
- நம் இனத்தை சேர்ந்த யாரும் அங்கு வாழ முடியாது..
தண்ணீர் பைகளை கட்டி கொண்டு , அவை கண்டு பிடித்த “வின் ஊர்தியில், விண்ணை நோக்கி- நீரின் மேல் மட்டத்தை நோக்கி – பயணித்தன..
*******************************************
நீரின் மேல் மட்டதுக்கு மேல் வந்ததுமே , வெப்பம் கடுமையாக இருப்பது போல தோன்றியது.
“ அட சே… இதையா சொர்க்கம் என்று நினைத்தோம் “ அவற்றுக்கு கடும் ஏமாற்றம்.
சூரியனை பார்த்து திகைத்தன…
“ என்ன இது ? “
இதற்குள் அவற்றின் வருகையை அறிந்த விஞ்ஞானி தள்ளாத வயதில், ஒளி கலத்தில் வந்து சேர்ந்தார்…
கவிஞர் மீனுக்கு கடும் ஏமாற்றம்.
இதையா இத்தனை நாள் பாராட்டி வந்தோம்..
வெறுப்புடன் தன் தகட்டை கடலில் எறிந்தது.
“ ஓ நோ” விஞ்ஞானி தடுப்பதற்குள் , அந்த தகடு கடலில் மூழ்கியது…
” நீங்கள் எல்லாம் மனிதர்கள்.. மேலே வாருங்கள் “ அவர் சொல்வது புரியாமல் அவை மீண்டும் கடலுக்குள் பாய்ந்தன…
உலகின் கடைசி மனிதன் செய்வதறியாமல் தனியே அமர்ந்து இருந்தார்…
முடிவு ஏனோ யூகிக்கக் கூடியதாக இருந்தது. உங்களின் கற்பனை வியப்பளிக்கிறது. இன்னும் சற்று முயன்றால் ஆகச் சிறந்த கதைகள் உங்களால் படைக்கவியலும். அதற்கு என் வாழ்த்துகள்.
ReplyDeleteநன்றி கனாகாதலன்.. தவறை சுட்டி காட்டும் உங்களுக்கு மிக மிக நன்றி
ReplyDeleteநான் ஏதோ மொழி மாற்ற கதை என்று டிஸ்கியில் சொல்லப்போகிறீர்கள் என்று நினைத்தேன். ரொம்ப நல்லா எழுதி இருக்கீங்க!
ReplyDelete'மேலே' வந்தவுடன் ஒரு தாத்தா (விஞ்ஞானியோ அவர் க்ளோனோ) இருப்பார், அவர் சொல்வதைக் கேட்டால் தான் நல்வாழ்வு என்றும் அவர் ப்ரொக்ராமிங் செய்திருக்கலாமோ.. :))
ReplyDeleteஅப்பா.. என்னிடம் மட்டும் ஏதும் விருது கையில் இருக்கணும் கண்ணை திறந்துகொண்டே உங்களுக்கு அந்த விருதை தந்துவிடுவேன். உங்கள் எழுத்துக்கள், தேடல்கள், புதிய பகுப்பாய்வுகள் சிலர்க்கவைத்துவிடுகின்றன. (வெறும் புகழ்ச்சிக்காக சொல்லவில்லை)
ReplyDeleteசூப்பர் பாஸ்,
ReplyDeleteதொடர்ந்தும் எழுதுங்கள்
நன்றி சித்ரா மேடம்
ReplyDeleteஅன்புக்கு நன்றி ஜனா சார்
ReplyDeleteநன்றி தர்ஷன்
ReplyDeleteநன்றி மாதவி மேடம்
ReplyDeleteநண்பா, கதையென்று பார்த்தால் சிறப்பாகவும் வியப்பாகவும் இருக்கிறது.
ReplyDeleteஆனால் மேற்கண்ட வசனம் இறை நம்பிக்கையாளர்களை விளித்துச் சொல்லப் பட்டது. நீங்கள் நான் கொடுத்த பொறுப்பைத் தட்டிக் கழித்தால், நான் (மனிதர்களில்) வேறொரு சமுதாயத்தைக் கொண்டு இப் பணியை வாங்கிக் கொள்வேன் என்ற அர்த்தத்தில் சொல்லப் பட்டது.
மனிதர்களுக்கு முன் இப் பூவுலகின் ஆட்சி ஜின்களுக்குக் கொடுக்கப் பட்டிருந்தன. அவைகள் செய்த அட்டூழியத்திற்குப் பிறகு மனிதன் அனுப்பப் பட்டு அவனிடம் ஆட்சி கொடுக்கப் பட்டுள்ளது. இந்த இரு இனத்திற்குப் பிறகு வேறு ஒரு புதிய கூட்டம் வரப் போவதில்லை.
இனி இருவருக்கான விசாரணை நாள் வர இருக்கிறது. அதற்கு முன் உலக அழிவு நாள் உண்டு. இது சத்தியம். :)
அண்ணே சூப்பர்னே
ReplyDeleteதோழரே, நான் மேலே குறிப்பிட்டதன் பின்னணி வேறொரு இடத்தில் வரும் வசனத்திற்கானது. நீங்கள் மேற்கோடிட்ட வசனம்,
ReplyDelete//If He wills, He can do away with you and bring forth a new creation.And that is for Allah not difficult.//
'தன்னால் கொண்டு வர முடியும்' என்று இறைவன் கூறினாலும் மனிதன்,ஜின் இந்த இரண்டைத் தவிர
சோதனைக்கு உட்படுத்தப்படும் வேறு புதிய யாரும் வரப்போவதில்லை என்பதுதான் எல்லோருடைய ஏகோபித்த கருத்து.
nice fiction story
ReplyDelete