Saturday, January 22, 2011

சாரு நிவேதிதா எந்த இயக்கத்தை சேர்ந்தவர் ? -- Mrinzo நிர்மல்






மனிதனின் வேதனையை , வலியை சாருபோல எழுதியவர்கள் யாரும் இல்லை..
எனவேதான் ஆரம்பகாலத்தில் அவர் இடது சாரி சிந்தனையாளர் என நினைத்தேன்…
பிறகுதான் அவர் எந்த வட்டத்திலும் சிக்காத சுதந்திர எழுத்தாளர் என புரிந்தது…
இந்துத்துவாவை எதிர்ப்பார்..திடீரென ஆன்மிகம் எழுதுவார்…
பெரியாரை போற்றுவார்..

ஆனால் சுய நலத்துக்காக போலி பகுத்தறிவு பேசி , மத நம்பிக்கைகளை புண் படுத்தும் கமல் போன்றோரை விமர்சிப்பார்…
இபப்டி ஆட்டுமந்தை சிந்தனையில் இருந்து விலகி, ஒரே மாதிரி சிந்திப்பதில் இருந்து தப்பித்து வரும் அவர் , தன் வாசகர்களும் அப்படி இருப்பதையே விரும்புகிறார்.. எந்த கருத்தையும் , நீதியையும் திணிப்பதில்லை..
” நீயே உனக்கு ஓளியாக இருப்பாய் “ என புத்தர் சொன்னதையும், “ உண்மை என்பதற்கு யாரும் வழி காட்ட முடியாது “ என ஜே கிருஷ்ணமூர்த்தி சொன்னதையும் இங்கு யோசித்து பார்க்கலாம்..
  மலம் அள்ளும் தொழில் செய்வோர் போன்ற ஒடுக்கப்பட்டோரின் வலிகளை பேசும் சாருவை, ஒடுக்கப்பட்டோர் நலம் நாடும் கம்யூனிஸ்ட்கள் ஏன் ஏற்பதில்லை என நண்பர் நிர்மல் தன் பாணியில் எழுதி இருக்கும் கட்டுரை இதோ உங்கள் பார்வைக்கு….
 
*************************************************************************************************************
சாருவின் எழுத்துக்களை கம்யூனிஸ்ட்கள் ஏன் வெறுக்கிறார்கள்? - - Mrinzo நிர்மல்
கம்யூனிஸ்ட்கள்:
கம்யூனிஸ்ட்கள்  என்றாலே அவர்கள் முற்போக்கு சிந்தனை கொண்டவர்கள், அடிமட்ட சமுதாயத்தின் வலியை, வேதனையை அறிந்தவர்கள் என்றுதான் அர்த்தம். அப்படிப்பட்டவர்கள் சாருவின் எழுத்தை ஏன் வெறுக்கவேண்டும்?    சாருவும்  சமுதாயத்தில் ஒதுக்கப்பட்டவர்களை பற்றிதானே எழுதுகிறார்? 
                                        என்னதான் கம்யூனிஸ்ட் என்றாலும் நமக்குள்   இருக்கும் உயர் சாதி பார்வை தான் காரணமோ !!!
                                        மேலும் சாருவின் எழுத்தில் காணப்படும்  Existentialism கோட்பாடுகள் ஒரு முதலாளித்துவ கோட்பாடு என்று கம்யூனிஸ்ட்கள் கருதுவதுதான் காரணமோ என்று நினைத்திருந்தேன்.
சமீபத்தில் எனக்கு கிடைத்த புரிதலில் இன்னும் சில விஷயங்கள் இருப்பது தெரியவந்தன.
  சாருவின் படைப்பில் வரும் கதாபாத்திரங்கள் , அவர்கள் பேசும் மொழி எல்லாம் சமுதாயத்தால் ஒதுக்கப்பட்ட பாலியல் தொழிலாளிகள், மறைந்து வாழ்பவர்கள்,  திருடர்கள், பிச்சைக்காரர்கள், மலம் அள்ளுபவர்கள், அரவாணிகள், மனம் சிதைந்தவர்கள் போன்றவர்கள் தான்.
இவர்களைப் பற்றி கம்யூனிசம் என்ன சொல்கிறது?
இப்படிப்பட்டவர்களுக்கு கம்யூனிசத்தில்   Lumpen-proletarian  என்று பெயர். Proletarian  என்றால் உழைப்பை  விற்று வாழும்  வர்க்கம் என பொருள். 
கம்யூனிசத்தை பொருத்தவரைக்கும் Proletarian (பாட்டாளி வர்க்கம்) தான் ஹீரோ. இந்த Proletarian வர்க்கத்தில் ஒரு மிக கேவலமான பிரிவுதான் Lumpen-proletarian.
இதை பற்றி மார்க்ஸ் தனது communist Manifesto வில் இவ்வாறு  கூறுகிறார்.
     " பழைய சமுதாயத்தின் மிகமிக அடிமட்ட அடுக்குகளிலிருந்து தூக்கி எறியப்பட்டுச் செயலற்று அழுகிக் கொண்டிருக்கும் சமூகக் கழிவாகிய ”ஆபத்தான வர்க்கம்”   
சமுக அக்கறை தங்களுக்குதான் என்று மார்த்தட்டிகொள்ளும்  கம்யூனிஸ்ட்களிடம் எந்த அக்கறையோ அல்லது அதன் பொருட்டு எந்த  சிந்தனையோ இல்லை.  உச்சகட்ட சிந்தனை செய்து இதற்கு காரணம் முதலாளி வர்க்கத்தின் சுரண்டல்கள்  என்பார்கள் அல்லது இது ஒரு Class Struggle என்பார்கள். 
          இந்த ஒதுக்கப்பட்ட சமூகம் (Lumpen-proletarian ) பற்றிய  பதிவுதான் சாருவின் எழுத்துகள் என  நினைக்கிறேன். தோழர்கள் தோள் கொடுக்கும் இவர்கள்  ஒடுக்கப்பட்டவர்கள்  அல்ல. இவர்கள், உங்களாலும் நம்மாளும் ஒதுக்கப்பட்டவர்கள்.
சாருவும் இந்த Lumpen-proletarian வர்க்கம்தான்,   
இந்த ஒதுக்கப்பட்டவர்களை சாரு அவர்களது பார்வையால் உலகை பார்க்கிறார், அப்படி பார்க்கும்போது இவள்ளவு அழுக்கா நம்மிடம் என்ற எதார்த்தம் நம்மை குத்துகிறது, நமது   போலியான வர்க்க முழக்கம் எவ்வளவு தூரம் தாளம் தப்பி அடித்து கொண்டுருக்கிறது . அது எவ்வளவு நாராசமாய் இருக்கு என்று புரிகிறது.  
இந்த கழிவுகள் நமது கழிவுகள்தான் தோழரே. இலக்கியத்தில்  கூட அவர்களை வெறுக்கும் நீங்கள் Communism is Humanism என்பதெலாம் வெறும் வாய் சொல்லா?  
இலக்கியவாதிகள்
                                        அப்புறம் இந்த இலக்கியவாதிகள்,
இலக்கியவாதிகள் முக்கியமா மறந்துபோன உண்மை இலக்கியம்.
இலக்கணத்திற்கு முன்பு இலக்கியம் என்பதை மறந்து விடுகிறார்கள்.
எனவேதான் சாருவின் எழுத்து இவர்களுக்கு அன் ஈசியாக இருக்கிறது.
கவிதைதான் முதலில் வந்திருக்கவேண்டும் அதற்கான இலக்கணங்கள் பிற்பாடு வந்தவை.
 
இலக்கணங்கள் மாற கூடியவை . அவ்வப்போது சாருவை போல, பாரதியை போல சிலர் தோன்றுவார்கள் இப்படிப்பட்டவர்களால் மட்டும்தான் மரபுகளை உடைக்க முடியும்.
Like the apple computer Ad says  " people who are crazy enough to think they can change the world, are the ones who do".
அப்புறம் இவரு ஒரு நலல Columnist  என்ற Certificate சிலர் தருகிறார்கள், இதன்  முலம் நீங்கள் சொல்லவருவது,  உங்களுக்கு அவர் எழுதும் Blog மட்டும் புரிகிறது என்பதுதான்.
எனக்கு அவர் எழுத்து புரியவில்லை என்பதை ஒரு தமிழன் தனது ஸ்டைலின் இப்படித்தான் சொல்லமுடியும்.
ஏன்னா "தமிழனுக்கு தோல்வி தழுவுதல் மரபு இல்லை", தமிழன் பிறந்த பிள்ளையை கீறி பொதைக்கிறவன் இல்லையா". இப்படி மொக்கை punch டயலாக் கேட்டு வளர்ந்த நாம இப்படித்தான் நமது அறியாமையை காட்டிக்கொள்வோம். 
            சாருவின் எழுத்து நடை ஒரு பாடம், அவருடைய எழுத்தில்  Blunt and honest தெரியும், உண்மையை சொல்லணும்னா தமிழர்களிடம் கம்மியா காணப்படும் ஒரு விஷயம் இது என்பதை நீங்கள் ஒத்துக்கொள்வீர்கள் .
உதாரணம் தொலைகாட்சியில் நேரடி ஒலிபரப்பு நிகழ்ச்சியில் நம்மில்  எத்தனை பேர் Madam, Sir என்று தேவையில்லாமல் ஒரு 20 வயது VJ விடம்  வழிகிறோம். கேட்டால் நாங்கள் எல்லோருக்கும் மதிப்பு குடுகிற  culture  என்கிறோம்.  நம்ம எந்த அளவுக்கு மற்றவர்களுக்கு   மதிப்பு கொடுக்கிறோம் என்பதற்கு நமது சாலையில் நாம் எழுப்பும் Horn ஒலி, நமக்கு முன்பாக நிற்பவனை திட்டுகிற திட்டு, நாம் காரில் அல்லது பைக்கில் போகும்போது பாதசாரிகளுக்கு நாம் காட்டும் மரியாதையை போன்றவைதான் சாட்சி. 
         இளையராஜா மாதிரி சாருவும் மொட்டை அடிச்சிக்கிட்டு அங்கும் இங்கும் கொஞ்சம் சில சம்ஸ்கிருத படைப்புக்களை படைச்சிக்கிட்டு இருந்தா இவரை இல்லக்கியவாதி என்று ஒத்து கொள்வார்கள்.  
       அப்புறம் இப்படி சாரு எழுதுவதால் எனன பயன் என்ற கேள்வி. ஏன் நீதி போதனை செய்வதில்லை ?
அப்படி செய்து ஒரு ஒரு பயனும் இல்லை!!!!!!!!!!!!!. நமக்கு பயன்படற மாதிரி எழுதுறோம் என்று நெறைய பேர் இருந்தார்கள் , இருக்கிறார்கள்,
வள்ளுவன் முதல் வைரமுத்து வரை.  இவர்களது எழுத்தை படிச்சிட்டு எனன கிழிச்சோம். சாதி அப்படிகெடக்கு, தீண்டாமை எல்லா இடத்திலும் இருக்கு, பொம்பிள பிள்ளைய வளர விடாம கொல்றோம்,
10000 பேர் செத்தாலும் கவலை இல்லை ஒரு மத  கட்டடம் ஒடஞ்சா    பக்கத்துக்கு வீட்டை குடும்பத்தோடு கொளுத்துறோம்,
eve டீஸிங் பண்ணி சாகடிகிறோம்.  கணக்கு பாடம் வராத நம்ம பையனை Engineer படிக்கச் வைத்து சாகடிகிறோம், சினிமா முதல் டீவி வரை வரை மார்க்கு போட்டு கழுத்தை அறுக்கிறோம். இதனால் நீங்கள் அறியவேண்டிய கருத்து என்னனா என்று படிச்சி கிழிச்சாச்சி.
அதனாலே நீயே அறிந்துகொள் என்று சாரு எழுதுகிறார். சாரு இலக்கிய வடிவில் தனது அனுபவத்தை பதிவு செய்கிறார், அனுபவத்தை தணிக்கை இல்லாமல்  பதிவு செய்கிறார், நாம்தான் நமது அனுபவத்தை மனைவிகிட்ட கூட பகிர மாட்டோமே!!!!!!!!!!!!!!!!!!. 
ஜீரோ டிகிரி எழுத்து
அவரது எழுத்து ஒரு ஜீரோ டிகிரி எழுத்து , அதாவது எந்த விருப்பும் வெறுப்பும் இல்லாமல் ( ஜீரோ டிகிரி Deviance) எழுதப் பட்ட எழுத்து. ஒரு ஆசிரியன் தனது விருப்பத்தையும் , வெறுப்பையும் காட்டாமல் தமிழில் எழுதுவது சாதாரண விஷயம் இல்லை,  மதத்தின் கூடாரம் , கம்யூனிசம் கூடாரம் அல்லது திராவிட கூடாரம்  இல்லாமல் தனக்கு என்று ஒரு கூடாரம்  அமைத்து எழுதுகிறார். உங்களையும் தனது கூடாரத்தில்  கட்டிப்போடாமல்,  உங்களுக்கென்று ஒரு தனி கூடாரம் அமைக்க துண்டுகிறார்.
- Mrinzo நிர்மல்

6 comments:

  1. //மதத்தின் கூடாரம் , கம்யூனிசம் கூடாரம் அல்லது திராவிட கூடாரம் இல்லாமல் தனக்கு என்று ஒரு கூடாரம் அமைத்து எழுதுகிறார். உங்களையும் தனது கூடாரத்தில் கட்டிப்போடாமல், உங்களுக்கென்று ஒரு தனி கூடாரம் அமைக்க துண்டுகிறார்//
    உண்மை!
    அருமையான அலசல்!

    ReplyDelete
  2. மதத்தின் கூடாரம் , கம்யூனிசம் கூடாரம் அல்லது திராவிட கூடாரம் இல்லாமல் தனக்கு என்று ஒரு கூடாரம் அமைத்து எழுதுகிறார்.
    சந்தோசம்.

    ReplyDelete
  3. சாருவை என்றில்லை பொதுவாகவே பின்நவீனத்துவ எழுத்துகளை கம்யுனிஸ்ட்டுகள் நிராகரிக்கிறார்கள்.

    பாட்டாளி வர்க்க அதிகாரம் என்பது நல்லது அத்தோடு சமூகம் முழுமைக்குமான விடுதலைக்கு அவசியமானது. ஆனால் அதிகாரம்,நிறுவனம் என்பவற்றை முழுமையாய் கெட்டவை எனக் கூறுகின்றன பின்நவீன எழுத்துக்கள்.

    ஒடுக்கப்படும் ஒவ்வோர் தனித்தனிப் பிரிவும் (ஓரினச் சேர்க்கையாளர்கள், பாலியல் தொழிலாளர்) தமது முன்னேற்றத்துக்கு போராடுவதை ஆதரித்து அங்கே பாட்டாளி வர்க்கம் முக்கியமில்லை எனக்காட்டுவதன் மூலம் முதலாளித்துவம் மேலும் வலுப்படும்.

    இக்காரணங்களே அவரது எழுத்தும் நிராகரிக்கப்பட காரணம் என நினைக்கிறேன்.

    ஆனால் அந்த Lumpen-proletarian சமூகப் பிரிவைப் பற்றி குறிப்பிட்டதன் மூலம் கம்யுனிஸ்ட்டுகளின் மனிதாபிமானத்தை வலுவாய் சந்தேகித்திருக்கிறீர்கள்.

    ஆனால் யோசித்துப் பாருங்கள் நண்பரே மார்க்சுக்கும் ஏங்கெல்சுக்கும் அந்தச் சமூகப் பிரிவு புரட்சிக்கு பயனற்றது எனப் பட்டதாலேயே அப்படி குறிப்பிட்டிருக்கலாம். குற்றவாளிகளும் பாலியல் தொழிலாளர்களும் முதலாளித்துவத்தின் கோரமுகத்தின் விளைவுகள்தானே. ஆக பாட்டாளி வர்க்க விடுதலை எனபது சமூகம் முழுமைக்குமான விடுதலை அல்லவா.

    ReplyDelete
  4. ‘திருவனந்தபுரத்தில் கூப்பிட்டாங்க... பாலக்காட்டிலே கூப்பிட்டாங்க... கொச்சியிலே கூப்பிட்டாங்க...’ (தமிழ்நாட்டில் ஒரு பயபுள்ளயும் ஒரு காலத்துலேயும் கூப்பிடாது). என்று பிலாக்கணம் வைப்பதற்கு பேசாமல் சாரு அங்கேயே குடியேறிவிடலாம். முல்லைப் பெரியாறுக்கு மலையாளிகளைப் பழிவாங்கிய மாதிரியும் இருக்கும்; தமிழகத்தில் ஒரு ஊளைச் சத்தம் குறைந்த மாதிரியும் இருக்கும்

    ReplyDelete
  5. வருகை தாருங்கள்...!
    வாசித்துப் பாருங்கள்...!
    பங்கு பெறுங்கள்...!!

    என்றும் உங்களுக்காக
    "நந்தலாலா இணைய இதழ்"

    ReplyDelete
  6. சாருவின் எழுத்து, எப்படி ஒதுக்கப்பட்ட அல்லது ஒடுக்கப்பட்டவர்களுக்காக போராடுபவர்களை அளக்கும் கருவியாகும்?
    சாருவின் எழுத்தை 360 degeree யில் பார்க்கும் நண்பர் நிர்மலின் பார்வை, ஏனோ கம்யூனிஸ்ட்களை பார்க்கும்போது மட்டும்
    ஜீரோ டிகிரி ஆகிவிடுகிறது. நிர்மல், கம்யூனிஸ்ட்கள் இந்திய மண்ணில் சாதியத்திற்கு எதிராக மற்றும் ஒதுக்கப்பட்ட,ஒடுக்கப்பட்டவர்களுக்காக
    நடத்திய நடத்துகின்ற போராட்டங்களை தயவு செய்து வாசித்துவிட்டு, அவர்களிடம் உயர் சாதி பார்வை உள்ளதா இல்லையா என
    விமர்சிக்கவும். விரிவாக கம்யூனிஸ்ட்களின் போராட்டங்களை வாசித்துவிட்டு, அவர்களுக்கு ஒடுக்கப்பட்டவர்களை பற்றி அக்கறை மற்றும்
    சிந்தனை உள்ளதா என சிந்திக்கவும். நிர்மல் என்றாவது தீக்கதிர் வாசித்து உண்டா? மிஸ்கின் செய்த தவறை தங்களும் செய்ய வேண்டாம்.
    வாழ்வின் வசந்த காலங்களை ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்காக பல வீரம் செறிந்த போராட்டங்களுக்காக பயன்படுத்திய
    பல உன்னதமான தலைவர்கள் இருந்த இருக்கிற ஒரு கட்சியை, அது ஒரு எழுத்தாளர் மீது உள்ள கருத்தை வைத்து முடிவுக்கு வருவது
    தவறு. இதை சாரு கூட ஏற்க்க மாட்டார் என நம்புகிறேன். எதோ கம்யூனிஸ்ட் கட்சியே சாருவின் எழுத்தை புறக்கணித்து தீர்மானம்
    நிறைவேற்றியது போல உள்ளது.

    சாருவின் எழுத்துக்கள் சாதியத்திற்கு எதிராக என்ன சாதித்து என எனக்கு தெரியாது. ஆனால் ஏதோ ஒரு சமுக அல்லது
    சுய காரணங்களால் கம்யூனிஸ்ட் கட்சியை வந்து அடைந்த அனைவரையும் சாதிய ஒடுக்குமுறைக்கு எதிராக கருத்தளவிலும்
    செயலளவிலும் போராடுபவர்களாக மாற்றியது மாற்றுவது ஒரு சாதனையே. உயர் சாதிய பார்வை இருந்திருந்தால் இது
    சாத்தியமாகாது.இந்திய சமுதாயத்தில் ஒதுக்கப்பட்டவர்களில் அல்லது ஒடுக்கப்பட்டவர்களில் பெண்களும் அடங்குவர். பெண்ணை ஒரு
    போக பொருளாகவும் சதை கோளமாக பார்க்காமல், அவர்களின் விடுதலைக்காக சமரசமின்றி போராடுவதும் கம்யூனிஸ்ட்கள்.
    தங்கள் குறிப்பிட்ட லும்பேன் ப்ரோலேடேரியன் மொழி, சாருவின் கதா பாத்திரம் பேசும் மொழி தான் என்பது ஏற்புடையதல்ல

    பிச்சைக்காரன் நிர்வாகி அவர்களே
    மலம் அள்ளும் தொழிலாளிக்கு ஆதரவாக அவர்களின் வாழ்விற்காக கம்யூனிஸ்ட்கள் நடத்திய நடத்தும் போராட்டங்களை அறிவீர்களா?
    தமிழகத்தின் எந்த நகரம் கிராமத்தில் சென்று பாருங்கள் அனைத்து துப்பரவு தொழிலாளியும் இருப்பது கம்யூனிஸ்ட் சங்கத்தில்தான். அவனின் அன்றாட நிகழ்வுகளில் பங்கேற்கும் ஒரே இயக்கத்தினர் கம்யூனிஸ்ட்கள் தான்
    கோயம்புத்தூர் பாராளுமன்ற உறுப்பினர் திரு நடராஜன் பத்தாண்டுகளுக்கு மேலாக துப்பரவு தொழிலாளர் சங்க செயலாளராக பணியாற்றியவர்.
    எந்த எழுத்தானாலும் அதை தான் வாசகரின் செயலில் வர செய்ய வேண்டும். அந்த செயல்களை கம்யூனிஸ்ட்கள் செய்து கொண்டுதான் உள்ளனர்

    ReplyDelete

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா