Thursday, January 20, 2011

பத்தாவது உலகம் – THE TEN’TH WORLD

 

தாமஸ் ஆல்வா எடிசன் தனக்கு புது புது ஐடியாக்கள் தோன்றியது எப்படி என தனக்கே புரியவில்லை என பேட்டியில் குறிப்பிட்டார்.. ஏதோ ஒரு வேற்று கிரகத்தில் இருந்து யோசனைகளை யாராவது அனுப்புகிறார்களோ என அடிகடி நினைப்பதாக குறிப்பிட்டார்…

தையல் மெஷினுக்கு தகுந்த ஊசி அமைப்பது குறித்து எந்த ஐடியாவும் இன்றி குழம்பினேன்… ஒரு நாள் தூக்கத்தில் ஒரு கனவு..சிலர் என்னை கொல்ல வருகிறார்கள்.. அவர்கள் கயில் வேல்… அந்த வேலின் நடிவில் ஓர் ஓட்டை.. தையல் ஊசி பிறந்தது இந்த கனவு மூலம்தான்

எனக்கு அவள் மேல் எந்த கோபமும் இல்லை.. ஏன் அவளை கொன்றேன்.. ஏன் அப்படி நடந்து கொண்டேன்… எனக்கே புரியவில்லை…

எடிசன் மரண தருவாயில், யாரோ ஒருவருடன் பேசுவது போல இருந்தது… அங்கு யாரும் தென்படவில்லை ..

 

*******************************************************************************************************

ன்னும் கொஞ்ச நேரத்துல பத்தாம் உலகம் கிரகத்தில் கால் வைத்து விடுவோம் ..என்ன நடக்க போகுதா ?” திகிலடைத்த குரலில் சொன்னார் ஆராய்ச்சியாளர் ராஜா..

”ஒண்ணும் கவலைப்படாதீங்க… தற்காப்பு ஆயுதங்கள் நம் கிட்ட இருக்கு.. தவிர, சிக்னல் கொடுத்தா உடனே வந்து காப்பாற்ற சக விஞ்ஞானிகள் பக்கத்துலயே , விண் ஊர்த்தியில சுத்திகிட்டு இருக்காங்க… “ என்றான் ஆய்வு மாணவன் குமார்..

அவனுக்கு விண்வெளி பயணம் பற்றிய அனுபவம் இருப்பதால் பயமின்றி இருந்தான்.. ராஜாவை பொறுத்த வரை அவர் விஞ்ஞானி என்ற போதிலும் விண்வெளி துறைக்கும் அவருக்கும் சம்பந்தம் இல்லை… இருந்தாலும் அவரை அழைத்து வந்து இருந்தார்கள்.. அவர் தம்பி ஒருவன் சென்ற பயணத்தில் காணாமல் போனவர்களில் ஒருவன்.. எனவே ராஜாவும் இதற்கு ஒப்பு கொண்டார்..

சூரியனை சார்ந்து ஒன்பது கிரகங்கள்தான் இருக்கின்றன என வெகுகாலமாக நினைக்கப்பட்ட நிலையில், பத்தாவது கிரகம் கண்டு பிடிக்கப்பட்டபோது உலகெங்கும் அதிர்ச்சியும் ஆவலும் ஏற்பட்டன..

புதிய உலகம் கண்டு பிடிப்பு “

“ மனிதர்கள் உள்ளனரா? உயிர்கள் இருக்கின்றனவா ?”

“ இத்தனை காலம் மறைந்து இருந்தது எப்படி ‘?

“ ஆய்வு செய்ய செல்வது ஆபத்தா ? ”

என்றெல்லாம் செய்தி தாள்களும் , தொலைகாட்சி சானல்களும் செய்திகள் வெளியிட்டு தள்ளின..

இவ்வளவுக்கும் மத்தியில் ஆய்வுக்காக கிளம்பிய ராக்கெட்டும் அதில் கிளம்பியவர்களும் திரும்பி வரவில்லை..

எந்த தகவலும் கிடைக்க வில்லை..

ராக்கெட் காணவில்லை… விஞ்ஞானிகள் கதி என்ன ?”

“ இந்த பயணத்தை அனுமத்தித்தது சரியா? “

“ இந்தியா இதை செய்திருக்க கூடாது… வளர்ந்த நாடுகள்தான் செய்ய முடியும் “

கண்டனங்களும் விமர்சனங்களும் குவிந்தன..

 

இவ்வளவு நடந்த பின், ஆய்வை கை விடுவது மானப்பிரச்சினை…

பலத்த பாதுகாப்புடன் அடுத்த பயணத்துக்கு ஆயத்தமானது இந்திய விண்வெளி கழகம்…

சென்ற முறை போல் அல்லாது, விண்வெளி ஆய்வாளர்கள் மட்டுமன்றி பல்துறை ஆய்வாளர்களையும் அனுப்ப முடிவு செய்தது…

பன்னிருவர் அடங்கிய குழு புறப்பட்டது..

அதி ஒருவர்தாம் இயற்பியல் விஞ்ஞானி ராஜா..

பத்தாம் உலகத்தை நெருங்கியதும் , அந்த குழு ஒரு முடிவெடுத்தது..

- அனைவரும் போய் ஆபத்தில் சிக்கினால் , தகவல் கிடைக்காமல் போய் விடும்… இருவர் மட்டும் முதலில் செல்லட்டும்.. அவர்கள் தரும் தகவல் அடிப்படையில் மற்றவர்கள் செல்லலாம்..

 

விண்வெளி ஆய்வாளர்கள் ஜேம்சும், குமாரும் கிளம்ப ஆயத்தமானார்கள்..

ஆனால் ஒரு சிக்கல்..

இவர்கள் சென்று அனுப்பும் தகவல் அடிப்படையில் செயல்பட போதிய அனுபவம் தேவை..ஜேம்சுக்குதான் இந்த அனுபவம் உண்டு.. அவரே  போனால் எப்படி?

கடைசியில் பல யோசனைகளுக்கு பிறகு ராஜாவும் , குமாரும் பத்தாம் உலகத்தில் இறங்குவது என்றும், மற்றவர்கள் ஒரு குறிப்பிட்ட வட்ட பாதையில் சுற்றி கொண்டு இருப்பது எனவும் முடிவு செய்யப்பட்டது..

 

ன்னொரு கிரகத்தில் கால் வைத்து விட்டோம் “ ராஜாவுக்கு சிலிர்ப்பாக இருந்தது…

கதைகளில் மட்டுமே படித்து இருப்பது நடந்து விட்டதே…

தொலைவில் குயில் கூவும் சப்தம் கேட்டத்து..

ஏங்கோ ஓர் இடத்தில் தேவன் கோயில் மணியோசையும், ஆலய மணியோசையும், தொழுகைக்கான அழைப்பு ஓசையும் கேட்டன..

இருவருக்கும் ஆச்சர்ய்மாக இருந்தது…

திடீரென ஆச்சர்யம் விலகி அதிர்ச்சி ஏற்பட்டத்து…

எங்கோ ஒரு கிரகத்தில் எப்படி இது போல நடக்க முடியும்? ஒரு வேளை இதெல்லாம் நம் கற்பனையா?

- இன்னும் உள்ளே சென்று பார்க்கலாம்..

இருவரும் நடந்தனர்…

கீழே ஏதோ பேப்பர் பறந்து வந்த்தது..

எடுத்து பார்த்தான் குமார்..

தமிழ் எழுத்துக்கள் !!!!

நம்பவே முடியவில்லை…

படித்தான்…

முதல் நாளில், கூட்டமே இல்லாததை வைத்து கமல் படம் பிளாப் என சொல்ல முடியாது…  அவரது நடிப்பு திறமை எக்ஸ் எனவும் , உழைப்பு ஒய் என்றும் , கூட்டாம் இசட் எனவும் வைத்து கொள்ளுங்கள்.

வெற்றி = எக்ஸ் பிளஸ் ஒய் மைன்ஸ் இசட்

இந்த அடிப்படையில் படம் மாபெரும் வெற்றிதான்..

இந்த ஃபார்முலாவை வைத்து பார்த்தால், ரஜினி படத்துக்கு கூட்டம் அதிகம்,,, இசட் மதிப்பு அதிகம் என்பதால் அது மைன்ஸ் ஆகி விடும்.. எனவே அது தோல்வி என கருதப்பட வேண்டும்..”

 

- என்ன இது… 

குமாரின் முகத்தை பார்த்தார் ராஜா..

திடீரென அவருக்கு உண்மை புரிந்தது..

“ அட பாவிகளா.. எங்கெல்லாமோ சுத்தி விட்டு, பூமியிலேயே இறங்கி விட்டோம் போல.. இது பூமிதான்.. பத்தாம் உலகம் அல்ல “

கத்தினார் ..

- சார்.. சார்… அப்படி நடக்க வாய்ப்பில்லை… பூமிக்கும் நமக்குமான தூரத்தை செக் செய்த படியேதான் இருக்கிறோம்.. இப்போது பூமியை விட்டு பல கோடி மைல் தள்ளி இருக்கிறொம்… வாருங்கள் ..இன்னும் பார்க்கலாம்..

இருவரும் சென்றனர்,,,

 

ஊர் போல தோன்றியது..

வீடுகள் அழகாக, வரிசாக இருந்தன…

அதிகாலை நேரம்… வீடுகள் பூட்டப்பட்டு இருந்தன….

தெரு சுத்தமாக இருந்தது…

- சார்… பூமி போலவே மனிதர்கள் இங்கு இருக்கிறார்கள் என்பது உறுதிடாகி விட்டது.. பாருங்கள்

- அப்படி இருந்தாலும், அங்கு நடந்த வளர்ச்சி போலவே இங்கும் எப்படி நடந்தது? ஆச்சர்யம்…

 

புரிந்தும் புரியாமலும் நடந்தனர்,,,

தமிழ்னாட்டில் நடப்பது போலவே இருந்தது…

- சரி.. யாரிடமாவது பேசி பார்க்கலாம்

ஒரு வீட்டின் கதவை தட்டினர்..

டொக் டொக் டொக்..

- யாரது……………….

ஒரு பெண் கதவை திறந்தாள்….

நம் ஊர் பெண் போலவே இருந்தாள்,,,

- என்ன வேணும்…

- மேடம்.. வந்து… இது என்ன உலகம்? இந்த உலகத்தின் பெயர் என்ன ?

அவள் எரிச்சலுடன் பார்த்தாள்…

- ஏதாவ்து கேம் ஷோவா? என்ன கேள்வி இது ?

கதவை அடித்து சாத்தினாள்…

- ஒண்ணும் புரியல. சிக்னல் கொடுத்து நம்ம ஆட்களை வர சொல்லலாமா?

ராஜா யோசித்தார்,,,

- வேண்டாம்.. இன்னொரு வீட்டில் பார்க்கலாம்..

இருவரும் நடக்க தொடங்கினர்..

நான் போக்கிரிக்கு போக்கிரிராஜா..

ஒரு வீட்டில் இருந்து பாடல கசிந்து கொண்டு இருந்தது..

- நான் என்ன நினைக்கிறேன் என்றால், உலகின் போக்கு பிடிக்காத சிலர் இங்கு ரகசியமாக வந்து செட்டில் ஆகி இருக்கிறார்கள்.. சில நூறு ஆண்டுகள் முன்பு இப்படி வந்து இருக்க வேண்டும்.. அப்படியே ஒரு நாகரிகம் வளர்ந்து வருகிறது … ஆக நாம் பார்ப்பது மனிதர்கள்தான்..

ராஜா சொன்னதை மறுத்தான் குமார்..

- இல்லை… இயற்கை ஒரு பேக்கப் போல பூமியை போன்ற , மனிதர்களை போன்ற ஒன்றை உருவாக்கி இருக்கிறது… பூமி அழிந்தாலும் , இந்த பூமி தொடரும் என்பது அதன் எண்ணமாக இருக்கலாம்…

அடுத்த வீட்டு கதவை தட்டினார்கள்..

பிறகு காலிங் பெல்லை கவனித்து அதை அழுத்தினார்கள்…

கதவு திற்க்கப்பட்டது…

அங்கே..

….

….

முதல் பயணத்தில் காணாமல் போன விஞ்ஞானிகள் அமர்ந்த்து பேசி கொண்டு இருந்தனர்…

கதவை திறந்தது மகேஷ்.. ராஜாவின் தம்பி…

“ மகேஷ் !!! “ அவனை கட்டி பிடித்து கொண்டார் ராஜா,,

-வாங்க…

இருவரையும் வரவேற்று அமர வைத்தனர் அவர்கள்…

- இங்கு இருப்பவர்கள் அனைவரும் மனிதர்கள்தான்… பூமியில் இருக்கும் சிறந்தவர்களை வைத்து இது உருவாகி வருகிறது..

இளம் வயதில் இறந்து விட்டதாக நீங்கள் நினைக்கும் கவிஞர்கள், கலைஞர்கள், விளையாட்டு வீரர்கள் , போராளிகள்  எல்லாம் இங்குதான் இருக்கிறார்கள்…

எங்களை போன்ற ”காணாமல் போனவர்களும் “ இங்குதான் இருக்கிறார்கள்…

- பாரதியார் இங்குதான் இருக்கிறாரா? ஆவலுடன் கேட்டான் குமார்..

அவர் மட்டுமல்ல… இன்னும் பலரும் இங்கு வந்து கவிதைகள் படைத்து இருக்கிறார்கள்… கண்டுபிடிப்புகள் நிகழ்த்தி இருக்கிறார்கள்… சரி… நீ போய் ரெஸ்ட் எடு… பிறகு பேசலாம்..

குமாரை அனுப்பினான் மகேஷ்…

மகெஷும் ராஜாவும் மட்டும் இருந்தனர்..

“ அண்ணே.. இனி நான் அங்கு வர முடியாது… சில கண்டு பிடிப்புகளை மட்டும் உனக்கு சொல்றேன்.. பயன் படும்…

யுரேனியம் மூலம்தான் அணு சக்தி கிடைக்கும் என்பதல்ல.. வேறு வழியும் இருக்கிரது..”

விளக்க ஆரம்பித்தான்…

வியப்புடன் கேட்டார் ராஜா..

- இனி அணு குண்டு செய்வது பொம்மை செய்வது போல ஆகி விடுமே .. நினைத்து கொண்டார்..

-இன்னொரு ஆய்வு..  இந்த முறையை பயன்படுத்தி பிளாஸ்டிக்கை விட வலுவான, ஆனால் லேசான  பொருளை தயாரிக்கலாம்.. ஒரு மரத்தை வெட்டினால் ஒரு டன் சூப்பர் பிளாஸ்டிக் தயாரிக்கலாம்.. இதை அழிக்கவே முடியாது..

- அட வியந்து போனார் அவர்…

அவன் கொடுத்த ஆய்வு தாள்களை படிக்க ஆரம்பித்தார்…

அங்கே நுழைந்த இன்னொரு ஆய்வாளரையோ, அவரை நோக்கி மகேஷ் வெற்றி என கட்டை விரல் உயர்த்துவதையோ கவனிக்கவில்லை…

இரவு சாப்பிட்டிவிட்டு, இருவரும் ஒரே அறையில் படுத்தனர்.

ராஜாவுக்கு தூக்கம் வரவில்லை..

திடீரென ஓர் எண்ணம்..

முதுகு தண்டு சில்லிட்ட்டது..

ஒரு வேளை அனைத்துமே நாடகமோ….

இப்படி ஏமாற்றி தூங்கவைத்து கொன்று விடுவார்களோ…

பக்கத்தில் பார்த்தார்..

மகேஷ் ஆழந்து தூங்கி கொண்டு இருந்தான்..

- இதுதான் சந்தர்ப்பம்.. ஓடி விடலாம்..

மெல்ல நகர்ந்தார்,,,,

- எங்கே போகிறீர்கள்

மகேஷ்….

- இல்லை.. பிஸ் அடிக்கணும்

- ஹா.. ஹா… இப்பத்தானே போய் வந்தீர்கள்..அதற்குள் திரும்ப ஏன்?

அவன் குரலில் இருந்த அழுத்தம் நடுங்க வைத்தது…

அப்படியே மயங்கி விழுந்தார்..

 

கேஷ் முகம் மெல்ல , மெழுகு உருகுவது போல மாறி கொஞ்சம் கொஞ்சமாக காணாமல் போனது…

வீடுகள், தெருக்கள், மரங்கள், ஆய்வாளர்கள் எல்லாம் மறைந்தன்..

வெளி மட்டுமே இருந்தது….

கண் விழித்தபோது, குமாரும் அருகில் இருந்தான்…

கண்ணுக்கெட்டிய வரை யாரும் இல்லை…

பாலைவனம் போல இருந்தது….

- எல்லாம் கனவா… சிரித்து கொண்டார்..

குமாரும் கண்விழித்தான்..

அவனுக்கு எதுவும் நினைவில்லை…

- ஓக்கே சார்…. இங்கு மனிதனோ வேறு உயிரிகளோ இருக்க வாய்ப்பில்லை .. இங்கு ஆய்வு செய்யவும் எதுவும் இல்லை.. ரிப்பொர்ட் க்ளோஸ் செஞ்சு்டலாம்.. போன முறை வந்தவர்கள் விபத்தில் சிக்கி இருக்க கூடும்….”

*************************************************

- நான் கண்டுபிடித்துள்ள இந்த முறையை பயன்படுத்தி ஒவ்வொரு கிராமத்திலும் சின்னஞ்சிறிய அணு மின் நிலையம்  தயாரிக்கலாம்… கிராமங்கள் தன்னிறைவு பெறும் .

ராஜா உரை ஆற்றி முடிந்ததும் நிருபர்கள் சூழ்ந்து கொண்டனர்..

“ இந்த ஐடியா எப்படி சார் தோன்றியது ?”

“ எல்லாம் ஆழ் மனதின் ஆற்றல்.. ஒரு விஷயத்தை ஆழ்ந்து யோசித்தால் கனவுகள் மூலம் தீர்வு கிடைக்கும்.. எனக்கு கனவில்தான் இந்த ஐடியா கிடைத்தது… சுப்பர் பிளாஸ்டிக்கும் இப்படித்தான் கண்டு பிடித்தேன் “

சுற்றுச்சூழல் சிந்தனையாளர்களின் எதிர்ப்பு புறக்கணிக்கப்பட்டு , டைனி நியூக்லியர் பிளாண்ட், சூப்பர் பிளாஸ்டிக் திட்டங்கள் செயல்படுத்த பட்டன..

ராஜா நோபல் பரிசு பெற்றார்..

இந்த இரண்டும்தான் உலகையே அழிக்க போகின்றன என்பதையோ அதன் பின் பத்தாம் உலக வாசிகள் ஆதிக்கத்துக்குள் பூமி வந்து விடும் என்பதையோ அவர்கள் யாரும் அறிந்திருக்கவில்லை…

 

- ங்கு உயிர் இல்லை என அவசரப்பட்டு முடிவு செய்து விட்டோமோ… உயிர் என்றால் நம்மை போலவே இருக்கும் என எப்படி நினைத்தோம்? உடலே இல்லாமல் வாழும் சாத்திய கூறுகள் கூட இருக்கலாமே… ஒரு நாள் முழுக்க அங்கு இருந்திருக்றோம்.. களைப்பே இல்லையே.. சாப்பிட்டது போலவும்,  செஸ் விளையாடியது போலவும் தோன்றியதே?

குமார் மட்டும் குழம்பிக்கொண்டு இருந்தான்..

10 comments:

  1. கதை அருமை பாஸ்
    அப்புறம் அந்த தையல் மெஷின் கண்டு பிடிக்கப்பட்டமை அவர் ஓர் அந்த எண்ணத்தில் இருந்தமையால் அது கனவாக வந்திருக்கலாம். சாகுந் தறுவாயில் தனக்குத்தானே புலம்புவது கூட வழமைதானே. வேறெதுவும் பெருசா இருக்காது

    ReplyDelete
  2. சுவாரசியமான கதை .....

    ReplyDelete
  3. Good one, Inspired by The move Inception?

    ReplyDelete
  4. @நிர்மல் கனவை உண்மை போல தோன்ற வைத்த கதை இன்சப்ஷன் . இதில் உண்மை கனவு போல ஆகிறது

    ReplyDelete
  5. அருமையான கதை பாஸ்!

    ReplyDelete
  6. மாறுபட்ட விஞ்ஞான கதை - interesting reading

    ReplyDelete
  7. ஆரம்பம் இருந்த அளவிற்கு முடிவில் சுவாரஷ்யம் இல்லை. இதை இன்னும் சிறப்பாக உங்களால் எழுதியிருக்க இயலும்.

    ReplyDelete
  8. இதுபோன்ற கதைகளை தேடிப்படிக்கும் என்போன்றவர்களுக்கு தாங்கள் தந்திருப்பது விருந்துதான்.

    ReplyDelete

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா