அரசியல் , பொருளாராதார , சமூக, ஆன்மீக நிலைப்பாடுகளை பொருத்தவரை விருப்பு வெறுப்பு இல்லாமல் அனைத்தையும் ஒரு பார்வையாளனாக கவனிப்பதே என் நிலைப்பாடு..
ஒருவர் எந்த நிலைப்பாட்டையும் எடுக்கலாம்.. அந்த நிலைப்பாட்டுக்கு உண்மையாக இருக்க வேண்டும்.. அவ்வளவுதான்..
அந்த வகையில் இடது சாரி கருத்துக்களில் முழு நம்பிக்கை வைத்து , அந்த தரப்பு வாதங்களை சிறப்பாக முன் வைக்கும் தளம்தான் வெண்ணிற இரவுகள்.
அந்த வலைத்தளத்துக்கு நீண்ட நாள் வாசகன் நான்.
சமீபத்தில் ஷோபா சக்தி , பெரியார் முகமூடிக்குள் ஓர் ஆணாதிக்க வாதி என்ற கட்டுரை படித்து அதிர்ந்தேன்..
மேலும் விஷ்யங்களை திரட்டியதும் அதிர்ச்சியே மேலோங்கியது ..
பெரியார் செய்துள்ள சேவை சாதாரணமானதல்ல…
இருட்டறையில் இருந்த சமூகத்துக்கு ஒளி பாய்ச்சியவர் அவர்..
அந்த இருட்டுக்க்கு கடவுள் நம்பிக்கை ஒரு காரணமாக இருப்பதாக நினைத்து கடவுள் நம்பிக்கையையும் எதிர்த்தார்.. இன்று பலர் நினைப்பது போல கடவுள் எதிர்ப்பு மட்டுமே அவர் பணி, அவர் இலக்கு, மிஷன் அல்ல…
பெண் விடுதலை, கல்வி, சமூக முன்னேற்றம் , சமூக நீதி என்று பல பணிகளை செய்துள்ளார்.
அத்னால்தான் பெரியார் கொள்கைகளின் அடிப்படையில் பழக தொடங்கிய இருவருக்கிடையே பிரச்சினை ஏற்பட்டது முக்கியத்துவ்ம் பெற்றது..
ஆனால் பிரச்சினை சித்தாந்த ரீதியாக இல்லாமல் , தனிப்பட்ட ரீதியில் இருந்தது வருத்தப்பட வைத்தது…
சரி, என்னதான் பிரச்சினை…
என்ன குற்றச்சாட்டு ?
1. ஷோபா சக்தியின் பெரியார் பற்றிய கருத்துக்களால் கவரப்பட்டு நான் அவருடன் பேசினேன்..ஆனால் அவர் என்னுடன் தவ்றாக நடந்து கொள்ள முயன்றார்..
2. போனில் என்னை காதலிப்பதாக சொன்னார்.. கோபத்தை அடக்கி கொண்டு நேரில் வர சொன்னேன். அடித்து அனுப்பினேன்
3 இன்னொரு நாள் என் ஊருக்கு வந்து விட்டு என்னை சந்திக்க வருமாறு சொன்னார்…மீண்டும் சென்றேன்.. அதே போல தவறாக நடக்க முயன்றார்.. கோபமாக திட்டி விட்டு , அடித்து விட்டு வந்தேன்.
4. ஆனால் அவர் திருந்த வில்லை.. கடைசியாக ஒரு முறை சந்தித்த போது கையை பிடித்து இழுக்க முயன்றார்.. திட்டி விட்டு வந்தேன்..
இது அவர் மேல் வைக்கப்படும் குற்றச்சாட்டு..
இதற்கு சோபா சக்தி என்ன பதில் சொல்கிறார் என வெண்ணிற இரவுகள் சொல்லவில்லை..
ஷோபா சக்தி அப்படி செய்தாரா இல்லையா என்று தெரியவில்லை..ஆனால் அவர் தரப்பு கருத்து என்ன ? அவர் என்ன சொல்கிறார் என்பதும் தெரிய வேண்டும் அல்லவா..
அவர் தவறாக நடந்து கொண்டாரா.. அவர் பதில் என்ன ?
****************************************************************
2007 பெப்ரவரியில் ஒரு இதழில் எனது நேர்காணல் வெளிவந்ததைத் தொடர்ந்து அதைக் குறித்துப் பேச அவர் என்னைத் தொலைபேசியில் தொடர்புகொண்டார். அதுவே முதலாவது அறிமுகம். அதையடுத்து வந்த நாட்களில் தொலைபேசி வழியே இருவரும் நீண்ட நேரங்கள் பேசினோம். குறிப்பாக ஈழப் போராட்டம் மற்றும் பெரியாரியல் குறித்தே பேசிக்கொண்டிருந்தோம். சில நாட்களிலேயே அவர் அழைப்பின்பேரில் அவரின் வீட்டுக்குச் சென்றேன்.
நான் சில நூற்களை அவருக்குக் கொடுத்தேன். அவர் பெரியாரின் படமொன்றை எனக்கு வழங்கினார்.
சில நாட்களிலேயே அடுத்த சந்திப்பு அவர் வீட்டின் அருகிலிருந்த ஒரு உணவுவிடுதியில் நடந்தது. அந்தச் சந்திப்பில் வலைப்பதிவுகளின் முக்கியத்துவம் குறித்து அவரிடம் நீண்டநேரம் விளக்கினேன். தமிழில் தட்டச்சு செய்யும் முறையை அவருக்கு விளக்கினேன். அடுத்து வந்த நாட்களில் அவருக்கு ஒரு வலைப்பதிவையும் ஆரம்பித்துக்கொடுத்தேன். அவர் வலைப்பதிவு உலகத்திற்குள் வந்ததன் பின்னாக எங்களது உரையாடல்களும் சந்திப்புகளும் அதிகமாயின. நட்பும் வலுப்பட்டது.
இந்த நட்பு ஒரு வருடத்திற்கும் சற்றுக் கூடுதலான காலம் மட்டுமே நீடித்தது. இந்தக் காலகட்டத்தில் பல்வேறு முரண்கள் எங்களுக்குள் வந்திருந்த போதும் பரஸ்பர விட்டுக்கொடுத்தல்கள் மூலம் நட்பு நீடித்தது.
இறுதியில் 2008 நடுப்பகுதியில் நட்பு முறிந்துபோயிற்று. அதன்பின்பு இன்றுவரை நாங்கள் ஒருவரையொருவர் சந்திக்கவேயில்லை. தொலைபேசியில் கூடப் பேசியதில்லை.
உறவு முறிந்ததுமே உடனடியாகவே அவர் இணையங்களில் என்னைப் பல பெண்களோடு உறவுள்ளவன் என்றும் கஞ்சாக் கேஸ் என்றும் குடிகாரன் என்றும் எழுதத் தொடங்கினார். எனக்கு இந்தக் 'குற்றச்சாட்டுகள்' குறித்து எந்தக் கவலையுமில்லை. அதனால் எதிர்வினை ஏதும் இந்தக் கணம் வரை நான் செய்ததில்லை.
என்பொருட்டு எனது தோழர்களும் வசைகளைச் சுமக்க நேரிட்டது. இலக்கியச் சந்திப்பையும், பெண்களை சந்திப்பையும், தலித் முன்னணியையும் கூட்டுக் கலவி முகாம்கள் என்றெல்லாம் எழுதினார். அப்போதும் நான் மவுனம் காத்தேன். அந்த மவுனம் என்பது விவாதத்திற்கு அஞ்சிய மவுனம் கிடையாது. அவரது விமர்சனங்கள் வெறும் வசைகளே என்பதாலும் அவைகளிற்கு ஆயுளோ பெறுமதியோ கிடையாது என்பதாலும் நான் மவுனமாயிருந்தேன். தாதா, தமிழினத் துரோகி என்று என்மீது அவர் வைத்த வசைகளை அவரோடு நான் நட்பாயிருந்த நாட்களின் பெயரால் கண்டுகொள்ளாமலிருந்தேன். அது ஒருவகையில் நட்பிருந்த நாட்களிற்கு நான் கொடுத்த மரியாதை.
பிரிவு நிகழ்ந்த சில நாட்களிலேயே //ஷோபா நமக்கிடையேயான உறவு என்ன? நீங்கள் என்ன லவ் பண்ணுறீங்களா// எனக் கேட்டுத் தனது வலைப்பதிவில் எழுதினார். 22 யூலை 2008ல் வெளியாகிய அந்தக் கட்டுரை இப்போதும் அவரது தளத்திலுள்ளது. அப்போதும் எனது பதில் மவுனமே. எங்களுக்கிடையே இருந்த உறவைப் பொதுவெளியில் எழுதவும், அதன்முலம் மற்றவரின் அந்தரங்கத்திற்குள் நுழைந்து வேடிக்கை பார்க்க விரும்பும் நபர்களிற்கு தீனிபோடவும் நான் ஒருபோதும் விரும்பியிருக்கவில்லை.
ஆனால் இப்போது கிளப்பியிருக்கும் குற்றச்சாட்டு அவ்வகையானதல்ல. ஒரு பெருங் கும்பலே அவதூறு என்னும் ஆயுதத்தின் துணையால் என்மீது தாக்குதலைத் தொடுத்துள்ளது. அந்த ஆயுதம் வெறுமனே ஷோபாசக்தி என்ற என்ற தனி மனிதனைக் குறிவைத்து வீசப்பட்டதல்ல. அவ்வாறு ஷோபாசக்தியைக் குறிவைக்க காரணங்கள் ஏதுமில்லை. அவர் இந்தக் குற்றச்சாட்டின் மூலம் எனது அரசியல் கருத்து நிலைப்பாடுகளையே தகர்க்க முயல்கிறார். அதனாலேயே பின்நவீனத்தும், போலித் தலித்தியம், போலிப் பெண்ணியம், போலிப் பெரியாரியம், சனநாயகக் காவலர்களின் முகமூடி எனச் சொற்களை வீசுகிறார். எனவே இப்போது நான் பேச நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளேன். அவதூறாளர்களே! நீங்களே என்னைப் பேசவைத்தீர்கள்.
அவருக்கும் எனக்கும் நடந்த இரண்டாவது சந்திப்பிலிருந்தே நாங்கள் இருவரும் ஒருவர்பால் ஒருவர் வெகுவாக ஈர்க்கப்பட்டோம். அது மனம் சார்ந்த ஈடுபாட்டிலிருந்து பரஸ்பரம் உடல்சார்ந்த உறவாக எங்களது மூன்றாவது சந்திப்பிலேயே மாறிற்று. 2008 நடுப்பகுதியில் நாங்கள் பிரியும்வரை அது தொடர்ந்தது.
இந்த உறவு யாருக்கும் தெரியாதவொரு இரகசியச் செயற்பாடாகவும் இருக்கவில்லை. இந்த உறவு அய்ரோப்பியத் தமிழ் இலக்கிய வட்டத்தில் ஒருசிலராலாவது அறியப்பட்டேயிருந்தது. எனது குடும்ப உறுப்பினர்களும் அறிவார்கள். எனவே நான் பாலியல் அத்துமீறல் செய்தேன் அதனால் அவர் என்னைத் தாக்கினார் என்ற பேச்சுக்கே இடமில்லை. அது வெறும் அவதூறே. இந்த கூற்றை குற்றச்சாட்டிற்கான ஆதாரமாகக்கொண்டு மற்றவர்கள் என்மீது தாக்குதலைத் தொடுப்பதும் கொஞ்சமும் நேர்மையேயற்ற செயல்கள்.இவர் இயக்கப்படுவது பிரிவிற்குப் பழிவாங்கும் எண்ணத்தால், மற்றவர்கள் இயக்கப்படுவது என்னைக் 'குணசித்திரப் படுகொலை' செய்யும் எத்தனத்தால்.
இவ்வளவு காலமும் நான் காத்துவந்த மவுனத்தை இப்போது கலைத்து வைத்திருக்கிறார். எனக்கும் அவருக்குமிருந்த உறவையும் பிரிவையும் உள்ளது உள்ளபடியே நான் பகிரங்கமாக இங்கே வைத்திருப்பதால் நிச்சயம் அவர் பெருத்த மனவுளைச்சலுக்கு ஆளாகுவார் என்பது எனக்குத் தெரியும். அதற்காக நான் மிகவும் வருந்துகிறேன்.
மறுபடியும் சொல்கிறேன், அவதூறாளர்களே நீங்களே என்னைப் பேசவைத்தீர்கள்!