Pages

Sunday, February 27, 2011

கைய பிடிச்சு இழுத்தியா? ஷோபா சக்தி தன்னிலை விளக்கம்…

 

அரசியல் , பொருளாராதார , சமூக, ஆன்மீக நிலைப்பாடுகளை பொருத்தவரை விருப்பு வெறுப்பு இல்லாமல் அனைத்தையும் ஒரு பார்வையாளனாக கவனிப்பதே என் நிலைப்பாடு..

ஒருவர் எந்த நிலைப்பாட்டையும் எடுக்கலாம்.. அந்த நிலைப்பாட்டுக்கு உண்மையாக இருக்க வேண்டும்.. அவ்வளவுதான்..

அந்த வகையில் இடது சாரி கருத்துக்களில் முழு நம்பிக்கை வைத்து , அந்த தரப்பு வாதங்களை சிறப்பாக முன் வைக்கும் தளம்தான் வெண்ணிற இரவுகள்.

அந்த வலைத்தளத்துக்கு நீண்ட நாள் வாசகன் நான்.

சமீபத்தில் ஷோபா சக்தி , பெரியார் முகமூடிக்குள் ஓர் ஆணாதிக்க வாதி என்ற கட்டுரை படித்து அதிர்ந்தேன்..

மேலும் விஷ்யங்களை திரட்டியதும் அதிர்ச்சியே மேலோங்கியது ..

பெரியார் செய்துள்ள சேவை சாதாரணமானதல்ல…

இருட்டறையில் இருந்த சமூகத்துக்கு ஒளி பாய்ச்சியவர் அவர்..

அந்த இருட்டுக்க்கு கடவுள் நம்பிக்கை ஒரு காரணமாக இருப்பதாக நினைத்து கடவுள் நம்பிக்கையையும் எதிர்த்தார்.. இன்று பலர் நினைப்பது போல கடவுள் எதிர்ப்பு மட்டுமே அவர் பணி, அவர் இலக்கு, மிஷன் அல்ல…

பெண் விடுதலை, கல்வி, சமூக முன்னேற்றம் , சமூக நீதி என்று பல பணிகளை செய்துள்ளார்.

அத்னால்தான்  பெரியார் கொள்கைகளின் அடிப்படையில் பழக தொடங்கிய  இருவருக்கிடையே பிரச்சினை ஏற்பட்டது முக்கியத்துவ்ம் பெற்றது..

ஆனால் பிரச்சினை சித்தாந்த ரீதியாக இல்லாமல் , தனிப்பட்ட ரீதியில் இருந்தது வருத்தப்பட வைத்தது…

சரி, என்னதான் பிரச்சினை…

என்ன குற்றச்சாட்டு ?

1. ஷோபா சக்தியின் பெரியார் பற்றிய கருத்துக்களால் கவரப்பட்டு நான் அவருடன் பேசினேன்..ஆனால் அவர் என்னுடன் தவ்றாக நடந்து கொள்ள முயன்றார்..

2. போனில் என்னை காதலிப்பதாக சொன்னார்.. கோபத்தை அடக்கி கொண்டு நேரில் வர சொன்னேன். அடித்து அனுப்பினேன்

3 இன்னொரு நாள் என் ஊருக்கு வந்து விட்டு என்னை சந்திக்க வருமாறு சொன்னார்…மீண்டும் சென்றேன்.. அதே போல தவறாக நடக்க முயன்றார்.. கோபமாக திட்டி விட்டு , அடித்து விட்டு வந்தேன்.

4. ஆனால் அவர் திருந்த வில்லை.. கடைசியாக ஒரு முறை சந்தித்த போது கையை பிடித்து இழுக்க முயன்றார்.. திட்டி விட்டு வந்தேன்..

இது அவர் மேல் வைக்கப்படும் குற்றச்சாட்டு..

 

 இதற்கு சோபா சக்தி என்ன பதில் சொல்கிறார் என வெண்ணிற இரவுகள் சொல்லவில்லை..

ஷோபா சக்தி அப்படி செய்தாரா இல்லையா என்று தெரியவில்லை..ஆனால் அவர் தரப்பு கருத்து என்ன ? அவர் என்ன சொல்கிறார் என்பதும் தெரிய வேண்டும் அல்லவா..

அவர் தவறாக நடந்து கொண்டாரா.. அவர் பதில் என்ன ?

 

****************************************************************

2007 பெப்ரவரியில் ஒரு இதழில் எனது நேர்காணல் வெளிவந்ததைத் தொடர்ந்து அதைக் குறித்துப் பேச அவர் என்னைத் தொலைபேசியில் தொடர்புகொண்டார். அதுவே  முதலாவது அறிமுகம். அதையடுத்து வந்த நாட்களில் தொலைபேசி வழியே இருவரும் நீண்ட நேரங்கள் பேசினோம். குறிப்பாக ஈழப் போராட்டம் மற்றும் பெரியாரியல் குறித்தே பேசிக்கொண்டிருந்தோம். சில நாட்களிலேயே அவர் அழைப்பின்பேரில் அவரின் வீட்டுக்குச் சென்றேன்.

நான் சில நூற்களை அவருக்குக் கொடுத்தேன். அவர் பெரியாரின் படமொன்றை எனக்கு வழங்கினார்.

சில நாட்களிலேயே அடுத்த சந்திப்பு அவர் வீட்டின் அருகிலிருந்த ஒரு உணவுவிடுதியில் நடந்தது. அந்தச் சந்திப்பில் வலைப்பதிவுகளின் முக்கியத்துவம் குறித்து அவரிடம் நீண்டநேரம் விளக்கினேன். தமிழில் தட்டச்சு செய்யும் முறையை அவருக்கு விளக்கினேன். அடுத்து வந்த நாட்களில் அவருக்கு ஒரு வலைப்பதிவையும் ஆரம்பித்துக்கொடுத்தேன். அவர் வலைப்பதிவு உலகத்திற்குள் வந்ததன் பின்னாக எங்களது உரையாடல்களும் சந்திப்புகளும் அதிகமாயின. நட்பும் வலுப்பட்டது.

இந்த நட்பு ஒரு வருடத்திற்கும் சற்றுக் கூடுதலான காலம் மட்டுமே நீடித்தது. இந்தக் காலகட்டத்தில் பல்வேறு முரண்கள் எங்களுக்குள் வந்திருந்த போதும் பரஸ்பர விட்டுக்கொடுத்தல்கள் மூலம் நட்பு நீடித்தது.

இறுதியில் 2008 நடுப்பகுதியில் நட்பு முறிந்துபோயிற்று. அதன்பின்பு இன்றுவரை நாங்கள் ஒருவரையொருவர் சந்திக்கவேயில்லை. தொலைபேசியில் கூடப் பேசியதில்லை.

உறவு முறிந்ததுமே உடனடியாகவே அவர் இணையங்களில் என்னைப் பல பெண்களோடு உறவுள்ளவன் என்றும் கஞ்சாக் கேஸ் என்றும் குடிகாரன் என்றும் எழுதத் தொடங்கினார். எனக்கு இந்தக் 'குற்றச்சாட்டுகள்'  குறித்து எந்தக் கவலையுமில்லை. அதனால் எதிர்வினை ஏதும் இந்தக் கணம் வரை நான் செய்ததில்லை.

என்பொருட்டு எனது தோழர்களும்  வசைகளைச் சுமக்க நேரிட்டது. இலக்கியச் சந்திப்பையும், பெண்களை சந்திப்பையும், தலித் முன்னணியையும் கூட்டுக் கலவி முகாம்கள் என்றெல்லாம் எழுதினார். அப்போதும் நான் மவுனம் காத்தேன். அந்த மவுனம் என்பது விவாதத்திற்கு அஞ்சிய மவுனம் கிடையாது. அவரது விமர்சனங்கள் வெறும் வசைகளே என்பதாலும் அவைகளிற்கு ஆயுளோ பெறுமதியோ கிடையாது என்பதாலும் நான் மவுனமாயிருந்தேன். தாதா, தமிழினத் துரோகி என்று என்மீது அவர் வைத்த  வசைகளை அவரோடு நான் நட்பாயிருந்த நாட்களின் பெயரால் கண்டுகொள்ளாமலிருந்தேன். அது ஒருவகையில் நட்பிருந்த நாட்களிற்கு நான் கொடுத்த மரியாதை.

பிரிவு நிகழ்ந்த சில நாட்களிலேயே  //ஷோபா நமக்கிடையேயான உறவு என்ன? நீங்கள் என்ன லவ் பண்ணுறீங்களா// எனக் கேட்டுத்  தனது வலைப்பதிவில் எழுதினார். 22 யூலை 2008ல் வெளியாகிய அந்தக் கட்டுரை இப்போதும் அவரது தளத்திலுள்ளது.  அப்போதும் எனது பதில் மவுனமே. எங்களுக்கிடையே இருந்த உறவைப் பொதுவெளியில் எழுதவும், அதன்முலம் மற்றவரின் அந்தரங்கத்திற்குள் நுழைந்து வேடிக்கை பார்க்க விரும்பும் நபர்களிற்கு தீனிபோடவும் நான் ஒருபோதும் விரும்பியிருக்கவில்லை.

ஆனால் இப்போது  கிளப்பியிருக்கும் குற்றச்சாட்டு அவ்வகையானதல்ல.  ஒரு பெருங் கும்பலே அவதூறு என்னும் ஆயுதத்தின் துணையால் என்மீது தாக்குதலைத் தொடுத்துள்ளது. அந்த ஆயுதம் வெறுமனே ஷோபாசக்தி என்ற என்ற தனி மனிதனைக் குறிவைத்து வீசப்பட்டதல்ல. அவ்வாறு ஷோபாசக்தியைக் குறிவைக்க காரணங்கள் ஏதுமில்லை. அவர் இந்தக் குற்றச்சாட்டின் மூலம் எனது அரசியல் கருத்து நிலைப்பாடுகளையே தகர்க்க முயல்கிறார். அதனாலேயே பின்நவீனத்தும், போலித் தலித்தியம், போலிப் பெண்ணியம், போலிப் பெரியாரியம், சனநாயகக் காவலர்களின் முகமூடி எனச் சொற்களை வீசுகிறார். எனவே இப்போது நான் பேச நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளேன். அவதூறாளர்களே! நீங்களே என்னைப் பேசவைத்தீர்கள்.

அவருக்கும் எனக்கும் நடந்த இரண்டாவது சந்திப்பிலிருந்தே நாங்கள் இருவரும் ஒருவர்பால் ஒருவர் வெகுவாக ஈர்க்கப்பட்டோம். அது  மனம் சார்ந்த ஈடுபாட்டிலிருந்து பரஸ்பரம் உடல்சார்ந்த உறவாக எங்களது  மூன்றாவது சந்திப்பிலேயே மாறிற்று. 2008 நடுப்பகுதியில் நாங்கள் பிரியும்வரை அது தொடர்ந்தது.

 

இந்த  உறவு யாருக்கும் தெரியாதவொரு இரகசியச் செயற்பாடாகவும் இருக்கவில்லை. இந்த உறவு அய்ரோப்பியத் தமிழ் இலக்கிய வட்டத்தில் ஒருசிலராலாவது அறியப்பட்டேயிருந்தது. எனது குடும்ப உறுப்பினர்களும் அறிவார்கள். எனவே நான் பாலியல் அத்துமீறல் செய்தேன் அதனால் அவர்  என்னைத் தாக்கினார் என்ற பேச்சுக்கே இடமில்லை. அது வெறும் அவதூறே. இந்த  கூற்றை குற்றச்சாட்டிற்கான ஆதாரமாகக்கொண்டு மற்றவர்கள் என்மீது தாக்குதலைத் தொடுப்பதும் கொஞ்சமும் நேர்மையேயற்ற செயல்கள்.இவர் இயக்கப்படுவது   பிரிவிற்குப் பழிவாங்கும் எண்ணத்தால், மற்றவர்கள் இயக்கப்படுவது என்னைக் 'குணசித்திரப் படுகொலை' செய்யும் எத்தனத்தால்.

இவ்வளவு காலமும் நான் காத்துவந்த மவுனத்தை இப்போது  கலைத்து வைத்திருக்கிறார். எனக்கும் அவருக்குமிருந்த உறவையும் பிரிவையும்  உள்ளது உள்ளபடியே நான் பகிரங்கமாக இங்கே வைத்திருப்பதால் நிச்சயம் அவர் பெருத்த மனவுளைச்சலுக்கு ஆளாகுவார் என்பது எனக்குத் தெரியும். அதற்காக நான் மிகவும் வருந்துகிறேன்.

மறுபடியும் சொல்கிறேன், அவதூறாளர்களே நீங்களே என்னைப் பேசவைத்தீர்கள்!

Saturday, February 26, 2011

ஜோடி – a story by Mrinzo Nirmal

 

அன்புள்ள பிச்சைக்காரன் அவர்களுக்கு ..

                          என்  நண்பன் மிருகங்கள் எப்படி ஜோடியை தேர்வு செய்கின்றன என்று எனக்கு அனுப்பிய மெயிலில் , தவறுதலா இந்த கதையை   பேஸ்ட் செய்துவிட்டேன். மன்னிக்கவும்.

தயவு செய்து கதையை  நீக்கிவிட்டு தெளிவான பதிவாக வெளியிடவும்.

Cheers!!!!!

  - Mrinzo


அன்புள்ள Mrinzo

                            கதையை வாசித்துபார்த்தேன் எனக்கு  என்னவோ அதில் ஒரு சம்பந்தம் இருப்பதாக  பட்டது மேலும் அப்படி நீக்கும் பொறுப்பை வாசகரிடம் விட்டுவிடுவதென முடிவு செய்துவிட்டேன் .

 

    நன்றி

பிச்சைக்காரன்

*******************************************************************


ஒரு பெண் மயில், ஆண் மயிலின் தோகைஅழகு மற்றும் அளவை  கணித்துத்தான் தனது ஜோடியை தேர்வு செய்கிறது  . நான் எங்கள் ஊரில் மிக சாதாரண குடும்பத்தில் பிறந்தவன். அப்படி இப்படி என்று கல்லுரி முடித்து திருமணம் ஆகி இப்போது நன்றாய் வாழ்ந்து வருகிறேன். இந்த வாழ்க்கை நான் கடினப்பட்டு படித்து சம்பாதித்தது

, எனது திருமணம் காதல் திருமணம், ஆம் எங்கள் ஊரில் இன்று வரை பேசப்பட்டு வரும் காதல் காதல் கதை எங்களது. கல்லூரியில் படிக்கும்போது என்னோடு படித்தவள் என் மனைவி அழகுக்கும் அன்புக்கும்  இலக்கணம், படிப்பில் சூரன் நான் ஆனால் ஏழ்மையில் வாழ்பவன், என் மனைவி அதாவது என் காதலி எங்கள் ஊரில் மிக பெரிய செல்வந்தரின் ஒரே மகள், ஊரில் பாதி அவர்களது. அதுவும் ஒரே மகள்.Uca crenulata என்ற ஒரு நண்டு வகையில் பெண் நண்டு நூற்றுக்கும் அதிகமான ஆண் நண்டின் வளையை பார்த்து அதில் தனக்கு பிடித்த வளைக்கு சொந்தமான ஆண் நண்டை தனது ஜோடியாக்குமாம். படித்து வாழ்க்கையில் வெற்றிபெறுவதுதன் ஒரே குறிக்கோள் என்று இருந்த என்க்கு கவிதை சொல்லி தந்தாள், இருவரும் ஒருவர் ஒருவரை மிகவும் நேசித்தோம், ஒன்றாய் வாழ திட்டம் வகுத்தோம், கனவில் மிதந்தோம். அவளது குரல் மிகவும் இனிமையாக இருக்கும். எங்கள் காதலை புனிதம் போல போற்றி வளர்த்தோம்

அதில்  நாங்கள் இருவரும் சிறகடித்து பறந்தோம். கிராமத்தில் ஒய்வு நேரம் அதிகமா அல்லது ஓய்வு நேரத்தை சிறப்பாக பயன்படுதிகிறர்களா என்று தெரியவில்லை எந்த ஒரு சிறு தகவலும் கூட எல்லாருக்கும் தெரிந்துவிடும், யாரு வீட்ல என்ன குழம்பு, யாரு என்ன நகை வாங்குனா போன்றவை உட்பட. இப்படிப்பட்ட கிராமத்தில் எங்கள் காதலும் ஊருக்கு தெரியவர, என் காதலியின் பணக்கார அப்பா எங்களை ஊரை விட்டு துரத்தி விட, எனது குடும்பத்தோடு  பக்கத்துக்கு ஊருக்கு குடி புகுந்தோம்.

காதலின் குறுக்கே பணக்கார முதலைகள், ஏழையின் ரத்தத்தை உறிஞ்சி குடிக்கும் மிருகங்கள். அவள் அப்பாவிற்கு அவரது சாதியும் அவரது பணமும்தான் முக்கியம். மனதை பறிகொடுத்த நாங்கள் நடை பிணமாய் ஆனோம். நான் கற்ற கல்வியும் அவளின் தைரியமும் எங்களை ஊரை விட்டு ஓட செய்தது. சராசரி வருமானத்தோடு ஒரு வேலை ஒன்றை பார்த்து வாழ்கையை துவங்கினோம் இல்லை தொடர்ந்தோம். எங்கள் குழந்தையை பார்க்க வந்த என் மனைவியின் சொந்தம் எங்களை ஏற்றுகொண்டது. காதல் என்றும் வெற்றிபெறும் அது என்றும் அழிவதில்லை என்பதை முழுமனதோடு நம்பும் எங்களின் நம்பிக்கை வீண் போகவில்லை.

காதல் எனபது வாழ்ந்து காட்டுவது என்பதற்கு என் கதையை விட வேறு எந்த உதாரணம் வேண்டும். கவிதையில் துவங்கிய எங்கள் காதல், வெற்றி கவிதையாய் தொடர்கின்றது. எங்கள் காதல் புனிதமானது, அது என்றும் அழியாதது, காதல் வெற்றிபெற அந்த உண்மையான காதல் கண்டிப்பா உதவி பண்ணும். துருவத்தில் வாழும் ஒரு வகை மான் இனத்தில் ஆண் மான்களிடம் பயங்கர சண்டையில் எது வெற்றி பெறுகிறதோ அந்த ஆண் மானைதான்   ஒரு பெண் மான் தனது ஜோடியாக தேர்வுசெய்யுமாம். எல்லோருடைய காதலும் எங்களை போல வெற்றி அடைவதில்லை எனது நண்பன் ஒருவன் கூட காதல் திருமணம்தான், அவன் காதலித்து ஒரு சலவை தொழிலாளி மகளை, அழகி அவள். இவளை காதலிக்க அந்த ஊரில் மட்டும்  அல்ல பக்கத்துக்கு ஊரில் இருந்து கூட போட்டி இருந்தது, இந்த காதல் தகராறில் என் நண்பனை ஒருவன் ஆள் வைத்து அடிக்க கை கால் கட்டோடு 3 மாதம் மருத்துவமனையில் இருந்தான்,  அந்த தகராறில் என் நண்பனை அடிக்க வந்தவனின் மூன்று விரல்களை வெட்டி விட்டான், அவளவு வெறி காதல் மேல்.

இந்த சம்பவம்தான் அவனை அவளது காதலியிடம் சேர்த்தது. இப்போது இருவரும் வீட்டை விட்டு ஓடி வாழ்கிறார்கள், குழந்தை பிறந்தும் இருவர் விட்டிலும் அவர்களை ஏற்கவில்லை.

நண்பா  Mrinzo , மிருகங்கள் தங்கள் சந்ததி நன்றாய் இருக்குவேண்டும் என்கிற Instinct கொண்டுதான் செயல்படுவது போல எனக்கு தெரிகிறது,  அதில் நம்மளை போல காதல் என்று எல்லாம் இல்லை , உன்னோட முதல் கதையை படித்தபோதே அது புரிந்துவிட்டது உனக்கு காதல் என்றால் என்ன என்று தெரியவில்லை தயவு செய்து இந்த விலங்குகளின் ஜோடி சேர்தலைதான் நாம்  காதல் என்று சொல்லுகிறோம் என்று எழுதிவிடாதே. – பிச்சைக்காரன்

 

இதற்கும் என் நண்பன் கொஞ்சம் வசதியானவன். அவன் அப்பா. எல்லா சொத்தையும் மற்ற பிள்ளைகளுக்கு கொடுத்துவிட்டாராம், அதனால் எனது நண்பனுக்கும் அவன் வீட்டோடு சேர எந்த விருப்பம் இல்லையாம். இப்படி சொத்துக்காக உறவுகளை வெறுக்க வைக்கும் அளவிற்கு தள்ளியது அந்த காதல்தான். அப்படியென்றால் அவனது காதல் தோல்வி என்று தான்  சொல்லுவேன். உறவுகளோடு வாழ்ந்து காட்டுவதுதான் காதல்.  எனது காதல் கதையை சொல்லும்போது எல்லாம் எனது நண்பர்கள், உறவினர்கள், தெரிந்தவர்களின் காதல் கதையும் சேர்ந்துவிடுகிறது.

         காதலின் தீபம் ஒன்று ஏற்றினாளே என் நெஞ்சில்........... ஹலோ எவ்வளவு ஆனாலும் சரி அந்த இடத்தை முடிச்சிடுங்க, மாமா ஆசைப்பட்ட இடம், சரி அப்புறம் பார்போம், செல் போனை துண்டித்தான். அப்புறம் சொல்ல மறந்துட்டேன் இப்போ நான் தான்  எங்க மாமா விவசாயம், மில், ரியல் எஸ்டேட்... போன்றவற்றை நிர்வாகம் செய்கிறேன்.

                                   காதல் வாழ்க.

a story by Mrinzo Nirmal

Tuesday, February 22, 2011

எனக்கு என்ன வேணும்????????????- Mrinzo Nirmal


"சார்,   யார் சார் நீங்க? என்ன வேணும்? "
 வெள்ளை அடித்துக்கொண்டிருந்த அந்த மதில் சுவரை வெறித்து பார்த்து கொண்டிருந்த என் காதுகளில் சத்தமாய் கேட்டது. ”எதற்கு இந்த கத்தல்?ஒருவேளை ரொம்ப நேரமாய் கேட்டு கொண்டிருப்பாரோ? ”
அப்படி கேட்டது அந்த சுவரில் வெள்ளை அடித்து கொண்டிருந்தவர். 

         நான் வேலை மாற்றல் ஆகி இந்த நகரத்துக்கு வந்தது ஓர் ஆண்டு முன்பு, எனது நிறுவனம் எனக்கு  பதவி உயர்வு கொடுத்து இந்த நகரத்திற்கு அனுப்பியது. வேலைதான் எனது காதலி மனைவி என்று வாழ்பவன் நான். நேரம் தவறாமை, எந்த செயலையும் நேர்த்தியாக செய்யும் திறன், எவ்வளவு நேரம் ஆனாலும் வேலையை முடிக்காமல் தூங்க முடியாத சினிசியாரிட்டி -இவையே என் அடையாளங்கள்
. இந்த பரபரப்பான நகர வாழ்க்கை மிகவும் பிடித்துவிட்டது, எவ்வளவு  vibrant ..எவ்வளவு movement. மனிதன் என்பவன் இவ்வளவு சுறுசுறுப்பாய் இருப்பதுதான் நாட்டிக்கும் வீட்டிற்கும் நல்லது என்று எப்பொதும் நினைத்துக்கொள்வேன்.

      தினம் நான் எனது கம்பெனி வாகனத்திற்காக இந்த இடத்தில்தான் நிற்பது வழக்கம். நான் தங்கிருக்கும் அடுக்குமாடி குடிருப்பு இங்கு இருந்து சுமார் அரை கிலோமீட்டர் தூரம். நடந்துதான் வருவேன், ஒரு நாள் வழக்கம்போல இங்கு வாகனத்திற்காக காத்து கொண்டு இருந்தேன் அப்போதுதான் என் கண்ணில்பட்டது அந்த மதில் சுவர், வெள்ளை அடித்து கொண்டிருந்தார்கள். வெள்ளை அடித்து கொண்டிருந்தவரிடம் ஜீன்ஸ் டி ஷர்ட் அணிந்த ஒரு பெண் பேசிகொண்டிருந்தாள், அவள் முகத்தை பார்க்க முயற்சிக்கும்போது   அந்த சாலையின் இருபக்கத்திலும் சிக்னலுக்காக வரிசையாக வாகனங்கள் நின்றுவிட்டன. எவ்வளவு புதிய வாகனகங்கள் இப்போது சாலையில். Toyota, Scoda, Benze என்று, இதுபோக ஆட்டோகள், இருசக்கரம். இந்த சிக்னலில் எப்போதும் இப்படித்தான் பிஸியாக இருக்கும். 

                   எந்தனையோ முறை இந்த இடத்தில நின்று இருக்கிறேன்  அதுஎப்படி இன்று அந்த சுவரை கவனித்தேன்?  என்று யோசித்துக்கொண்டு கம்பெனி வாகனத்தில் ஏறி அலுவலகத்திற்கு வந்து கம்பூட்டர் லாகின் பண்ணி, மெயில் பார்த்தேன் , வேலைக்கு வரும்முன்பே வீட்டிலிருந்து மெயில் பார்த்துவிட்டுத்தான் கிளம்புவேன்  எனவே ஒரு புதிய மெயில்தான்   இருந்தது அதுவும் எனது  அலுவலகத்தில்  வேலை செய்யும் ஒரு பெண்ணின் ராஜினாமா கடிதம், நான்தான் அந்த பெண்ணின் அதிகாரி என்பதால் எனக்கு அனுப்பிருந்தாள்.  கவனமாய் வாசித்தேன்  வாசிக்கும்போது காரணம் இல்லாமல்  காலையில் கவனித்த அந்த சுவரும் அதன்  பக்கத்தில் பார்த்த அந்த பெண்ணும்   நினைவுக்குவந்தன. 

      அடுத்தநாள் வழக்கமான இடத்தில நின்று கொண்டிருந்தேன், அதே நெரிசல் கூட்டம் ,வாகன வரிசைகள், புழுதியாய் காற்று, இன்று பல மண் லாரிகள் வரிசையாய் எதிர் சாலையில் நின்றுகொண்டிருந்தன, அப்படி இப்படி வாகனம் மெதுவாய் செல்ல ஆரம்பித்தன. அப்போதுதான் நான்  நிற்கும் சாலையின் எதிர் புறத்தில் உள்ள அந்த சுவர் நன்றாய் வெள்ளை அடித்து இருந்தார்கள், ஆனாலும் அங்கு இன்னும் சிலர் அந்த சுவரில் கோடு போட்டுக்கொண்டிருந்தார்கள். உன்னிப்பாய் கவனிக்க முடியவில்லை மீண்டும் சிக்னல் நெரிசல் அந்த சுவரை மறைத்தது. 

        காலையில் அலுவலகம் கிளம்பும் முன்பு ஈமெயில் பார்த்து விட்டுத்தான் கிளம்புவேன். எல்லா ரிப்போர்ட்களையும் வாசித்துவிட்டு அலுவலகத்தின் எந்த பணி யாருக்கு கொடுக்கலாம், யாரோடு  மீட்டிங்,  எந்த வேலை முக்கியம் என்று எனது மனதுக்குள் திட்டம் தயாராய் இருக்கும் . வாசித்த ஈமெயில் ஒன்று எனது மேனேஜர் அனுப்பியது அந்த மெயிலுக்கான பதிலை இன்று அனுப்பவேண்டுமாம்.  நான் வாகனத்திற்காக நிற்கும் இடத்தில இருந்து சுமார் 10 போன் செய்து எனக்கு தேவையான எல்லா செய்தியையும் உறுதி செய்துகொண்டேன். மேனேஜர் மெயிலுக்கு பதில் தயார். வாகனத்தில் ஏறும்போதுதான் அந்த எதிர்புற சுவரை கவனித்தேன், அதில் ஏதோ எழுதியிருந்தது.

            அந்த சுவரில் என்ன எழுதியிருந்தது என்பதை பற்றி அறிய அப்படி ஒன்றும் அவா இல்லை என்றாலும், அந்த இடத்தில நிற்கும் போது ஓர் ஆசை வரும். . பெரும்பாலும் இப்படி பட்ட ஆசைகள் எனது நேரத்தையும் கவனத்தையும் வீணாக்கும் என்று நம்புவன் நான்.  நான் நிற்கும் இடத்திற்கும் அந்த சுவருக்கும் இடையில் இருவழி சாலை. அந்த இரு சாலைக்கு மத்தியில் ஒரு divider இருக்கிறது. கொஞ்சம் சிரத்தை எடுத்தால் ஒழிய அந்த வாசகத்தை வாசிக்க முடியாது என தோன்றியது. அப்படி நான் சிரத்தை எடுத்தாலும் அந்த வாசகத்தை  வாகன நெரிசல் மறைத்துவிடும், இல்லையென்றால் நான் போன் செய்துகொண்டிருப்பேன் நான் அதை வாசிக்க மறந்துவிடுவேன். 

            இப்போது வந்துள்ள புதிய மேனேஜர் என்னை போல அவர் விட்டிலிருந்து கிளம்பும் போதே எனக்கு 5 போன் செய்துவிடுவார். நானும் மேனேஜர் ஆனால் இவரை போலத்தான் இருக்க வேண்டும் என்று நினைத்து கொள்வேன். 

                 நான் நிற்கும் சாலை இன்று அதிகமாய் கூட்டம் இருந்தது, வாகனங்களில் கட்சி கொடி பறந்தன, மீண்டும் அந்த சுவர் மீது எழுதிய வாசகத்தை படிக்கமுடியவில்லை. இந்த சுவர் இப்போது அடிக்கடி நினைவுக்கு வருகிறது, காரணம் இல்லாமல் ஒரு நாள் நான் 7 Habits Of Effective People என்ற புத்தகத்தை பற்றி எனது Team Membersக்கு ஒரு training Presentation கொடுக்கும்போது இந்த சுவர் அதில் ஏதோ எழுதிருப்பது போல என் நினைவுக்கு வந்தது. தினம் அந்த இடத்தில வந்து நின்றாலும் என்னால் அந்த சுவரை அதில் எழுதிருப்பதை வாசிக்க முடியவில்லை.  வாசிக்க எத்தனை தடை!!  மாணவர்கள் ஊர்வலம், கட்சி ஊர்வலம், பாடை ஊர்வலம், இந்த சிக்னல் வாகன நெரிசல், புழுதி  காற்று, வாகன சத்தம், மண் லாரிகள், ஆட்டோகள் என்று பல பல. இதனை தடங்கலுக்கு மத்தியிலும் அந்த வாசகத்தை எப்படி வாசிப்பது? இல்லை வாசிப்பது என்பது அவசியம்தானா? ஏன் அந்த சுவர் அடிக்கடி நினைவுக்கு வருகிறது. கொஞ்ச நாளாய் அந்த சுவர் கனவிலும் வருகிறது.

                               எப்படியாவது வாசித்து விடவேண்டும் என்று வந்து நிற்பேன், எனது ரோல் மாடல் மேனேஜர் போன் செய்வார் அவரிடம் பணியை பற்றி உரையாடும்போது எவ்வளவு அனுபவம் எனக்கு கிடைகிறது, நான் மேனேஜர் ஆவதற்கு என்ன திறமை தகுதிகளை வளர்த்து கொள்ள வேண்டும் என்று எனக்கு புரியவைக்கிறார். இப்படியும் ஒரு மா மனிதனா என்று வியந்திருக்கிறேன். 
அப்போது நான் மிக தீவிரமாய் ஒரு ப்ரொஜெக்டில் ஒரு தீவிரவாதி போல இயங்கி கொண்டு இருந்தேன் அவ்வப்போது வயிற்றில் வரும் வலியை பொருட்படுத்தாமல். வயிற்றில் வலி வரும்போது அந்த சுவரும் நினைவுக்கு வரும் , அதில் உள்ள வாசகத்தை வாசித்துவிடலாம் என்று வந்து நிற்பேன், அதை விடவும் முக்கியமான போன் கால் வரும் அல்லது வாகன வரிசை மறைத்துவிடும்.

                               எபபடி நாட்கள் போனது என்று தெரியவில்லை ஆனால் என் வயிற்றில் வலி, அந்த சுவர் நினைவு கொஞ்சம் அடிக்கடி வருவதுபோல இருந்தது. எனது  வலியை பற்றி டாக்டரிடம் ஆலோசனை கேட்க அந்த சாலையை கடந்தேன், நான் வழக்கமாய் காத்திருக்கும் இடத்திற்கு எதிர்ப்புறம்தான் அந்த ஆஸ்பத்திரி இருக்கிறது. இன்று எப்படியும் அந்த சுவர் வாசகத்தை வாசித்து விடலாம் என்று நினைத்து. ஆபீசிக்கு லீவ் சொலிவிட்டு அந்த சாலையை கடந்தேன் , முதல்முறையாக. 

                                வாகன நெரிசல் கடந்து மக்கள் கூட்டம் கடந்து சாலையின் மத்தியில் உள்ள தடுப்பு சுவர் கடந்து அந்த சுவரின் அருகில் வந்தேன் அந்த வாசகத்தின் மீது வெள்ளை அடித்து கொண்டிருந்தார்கள். 

                                 வெள்ளை அடிக்கப்பட்ட அந்த சுவர், படிக்க மறந்த அந்த வாசகம்,மறந்து  போன நண்பனின் பிறந்தநாள், மறந்து  போன அப்பா அம்மாவின் திருமண நாள்,பெயர்  மறந்து  போன என் ஆபீசை பெருக்கும் அந்த பெண் ,  மறந்து  போன சிரிப்போடு இருக்கும் எனது சிறுவயது போட்டோ, வாசிக்க மறந்து  போன கவிதை, நலம் விசாரிக்க மறந்து போன எனது LKG டீச்சர்,  படிக்க மறந்து  போன புத்தகங்கள்,  சொல்ல மறந்த காதல். மேனேஜர், ஈமெயில், டி ஷர்ட் ஜீன்ஸ் பெண், ராஜினாமா பெண், 7 Habits, போன், மறந்து போன.........,மறந்து போன........,மறந்து போன .......,மறந்து போன...........  என்று உறைந்து இருந்த என்னை நினைவுக்கு கொண்டுவந்தார் அந்த ஆள். "சார்,          யார் சார் நீங்க. என்ன வேணும்? "

  ”ம்ம்ம்ம்ம்ம் அதுவந்து ஒன்னும் இல்லை என்று அந்த இடத்தை விட்டு நகர்தேன்  ”
                   எனக்கு........................ என்ன............................. வேணும்????????????

- a story by   Mrinzo Nirmal 

Saturday, February 19, 2011

கலக்கும் பின்னூட்டங்கள்

பதிவுகளை விட பின்னூட்டங்கள் சிறந்த சிந்தனையை வெளிப்படுத்துவதுண்டு..

பின்னூட்டங்களை மட்டும் படிப்பவர்கள் பலர் உண்டு…

 

தற்போதைய பதிவுகளுக்கு , இடுகைகளுக்கு வரும் பின்னூட்டங்களை அனைவரும் படிப்பார்கள்..

பழைய இடுகைகளுக்கு வரும் பின்னூட்டங்கள் , பலரது கவனத்துக்கு வராமல் போய் விடும். எனவே அதில் சிலவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்..

அவர்கள் சிந்தனை , அனுபவம், எழுத்து அனைவரையும் சென்றடைய வேண்டும் என்பது என் விருப்பம்..

****************************************************************

பழைய இடுகைகளுக்கு வந்த புதிய பின்னூட்டங்கள்

 

Dear Mr.Paarvaiyaalan ,this posting is very good. I just happen to see your your posting and I am sending my comments to you. I had a similar experience like this and I want to share this with you.Around 10 years ago I was travelling in a TN Government bus to Neyveli and the bus was bound to Kumbakonam.Conductor switched on the VCD Player and played Azhgan movie which was directed by K,Balachander.I was enjoying the movie.Bus was not at all crowded ,hardly 10 to 15 passengers in the bus.Just before the Chengalpat a group of passengers agitated that the movie was not upto their taste and they wanted another movie.They particularly demanded Vijaykanth or Vijay movie.Conductor played movie of Vijaykanth. Later they were all enjoying the movie and I was crying inside my heart for travelling with such a low sense people. Personally I have the same opinion like about Carnatic music. I hate Carnatic music. Thulasi Ram

By Thulasi on கர்நாடக இசைமீது சாதாரண மனிதனின் கோபம் at 3:49 AM

மனமல்ல! உணர்வுதான் நீங்கள். மனம் உங்கள் உடலிலுள்ள ஒரு பகுதியான மூளையில் இருந்து மட்டுமே செயல்புரிகிறது. ஆனால், உணர்வோ உங்கள் உடல் முழுவதும் நின்று செயல்புரிகிறது. மனம் உங்களின் ஒரு பகுதி. ஆனால் உணர்வோ உங்களின் முழுமை. மனம் உங்கள் உடல் முழுவதிலுமுள்ள உணர்வோடு தொடர்பு வைத்திருக்கிறது. உங்கள் உணர்வை மனத்தால்( எப்படி வேண்டுமானாலும் ) நிர்வகிக்க முடியும். மனம் அதன் கட்டுப்பாட்டில், உங்கள் உணர்வை வைத்திருக்கிறது . ஆனால் மனமோ நான் எனும் ஒரு 'மாயை'யில் சிக்கி இருக்கிறது. அதற்கு இந்த 'நான்' எனும் 'மாய சொரூபம்'ஏற்பட்டிருக்கிறது. மனம் ‘சுயமாக’ தன கற்பனையில் ஒரு செயலை நிகழ்த்தி பார்த்தால், அந்த செயலுக்குண்டான உணர்வு மாற்றங்கள் உங்கள் உடலில் நிகழ்வதை உங்களால் காண முடியும். உங்கள் உணர்வு ஒரு அப்பிராணி. அதற்கு சுயமில்லை. அதற்கு எதுவும் தெரியாது. அது எடுப்பார் கைப்பிள்ளை. ஆனால், அதுதான் நீங்கள். ஆமாம் இந்த வாழ்க்கையை நுகர்வது உங்கள் உணர்வுதான். மனமல்ல! உணர்வுதான் நீங்கள். http://vaalkaivilakkam.blogspot.com/search?updated-max=2011-02-05T19%3A38%3A00-08%3A00&max-results=7

By SUNDARAN on எண்ணங்களுக்கு அப்பால்… – ஜே கிருஷ்ணமூர்த்தி on 2/17/11

வறுமையை மட்டுமல்ல பாரதியை கூட விமர்ச்சிக்க தகுதியில்லை ..இப்போது உயிரோடு வாழ்ந்து வரும் நாம் என்ன சாதித்தோம் ஒரு எழுச்சி வீரனை நம்மோடு இல்லாத ஒருவரையும் அவரது படைப்புகளையும் வாழ்ந்த நிலையையும் விமர்ச்சிப்பவர்களை என்ன சொல்வது? மனசு மிகவும் சங்கடப்படுகிறது மனிதர்களின் மன நிலையையும் பார்வைகளையும் பார்க்கும்

போது..

By தமிழரசி on பாரதியை விமர்சியுங்கள்..ஆனால் வறுமையை கிண்டல் செய்யாதீர்கள்... on 2/12/11

Wednesday, February 16, 2011

எழுத்து சித்தரை சீண்டுவதா? – களங்கப்பட்டுவிட்டதா ஜெமோ எழுத்து?- இலக்கிய பரபரப்பு

 

 

அறம் பற்றியும் அறச்சீற்றம் பற்றியும் துல்லியமாக எழுத்தில் பதிவு செய்பவர் ஜெயமோகன்..

அவர் எழுத்துக்களை அவர் தமிழுக்காக ரசித்து படிப்பவர்கள் பலர்…

அல்ட்டிமேட் ரைட்டர் சாருவின் ரசிகர்கள்கூட  ஜெமோவின் எழுத்தை படிக்க தவறுவதில்லை…

இந்த நிலையில் ஜெயமோகனின்  நான்காவது கொலை என்ற கதை பெரும் சர்ச்சையை உருவாக்கி உள்ளது… ஜெயமோகனின் எழுத்து களங்கப்பட்டுவிட்டதாக பரவலாக பேச்சு எழுந்துள்ளது..

என்ன மேட்டர்?

அது ஒரு நகைச்சுவை கதை …

நானும் படித்தேன்

ஆனால் எனக்கு சிரிப்பு வரவில்லை.. வேதனையே ஏற்பட்டது..

எழுத்து சித்தர் பாலகுமாரனை வரம்பு மீறி கிண்டல் செய்து இருந்தது மனதை காயப்படுத்தியது…

இலக்கிய அக்கப்போருக்கெல்லாம் அப்பாற்பட்டு ஒரு ஞானியாக வாழ்பவர் எழுத்து சித்தர் பாலகுமாரன்…யாரும் அடைய முடியாத புகழை அடைந்து , வாய்ப்ப்புகள் கதவை தட்டும்போதே சற்று ஒதுங்கி கொண்டவர் அவர்..

எண்ணற்ற மக்களின் வாழ்க்கையை தொட்டவர்.. அவ்ரால் சிறந்த சிந்தனையை பெற்றவர் அனேகம்…

அவரை போய் அவதூறாக பேசுவது நியாயமா..?

 

இதில் எழுத்தாளர் எஸ் ராவையும் கிண்டல் செய்கிறார்..

உபபாண்டவம் நாவல் என்பது விஷ்ணுபுரத்தின் காப்பி என சற்றும் பொருத்தம் இல்லாமல் சொல்கிறார் ஜெ..

விஷ்ணுபுரம் சிறந்த நாவல்..அதில் சந்தேகம் இல்லை… ஆனால் உபபாண்டவமும் சிறந்த நாவல்தான்..  அதை மட்டம் தட்டுவதில் என்ன பயன்?

உபபாண்டவம் முற்றிலும் வேறு..

ஆனால் அதை கூட இலக்கிய அக்கப்போர் என விட்டுவிடலாம்.. ஆனால் இலக்கியத்தை விட உயர்ந்த இடத்தில் இருக்கும் எழுத்து சித்தரை சீண்டியதில் எந்த அறமும் இல்லை….

ஜெயமோகனின் எழுத்தில் இது ஒரு களங்கமாகவே கருதப்படும்…. 

அவர் எழுத்தை நீங்களே பாருங்கள்….

******************************************************************

நான்காவது கொலை – ஜெயமோகன்

இது விஷ்ணு  புரம் . இரண்டாம் பதிப்பு ...."
திடீரென்று ஒரு பெரும் ஒலி எழுந்தது .
"அதென்ன போர்க்கூச்சலா ?"
"
"ஸ்ஸ் ஆ!"
"பார்த்து . ஆங்காங்கே அலங்காரத்துக்காக சம்ஸ்கிருதம் பதித்திருக்கிறது
, கிழித்துவிடும்.....இதுதான் பின்வாசல்.இந்த வழியாக போனால் தப்பி
விடலாம்.ஆனால் கவனம் அங்கங்கே சில முயல்வளை சுரங்கங்கள்
உண்டு .
கால் வைத்தால் உள்ளே இழுத்துவிடும் நேராக இங்கிருந்து
கிழக்காக உள்ள உபபாண்டவபுரம் என்ற ஊருக்கு போய்விடுவீர்கள் .
இதைபார்த்து கட்டியதுதான். கொஞ்சம் இத்தாலி கட்டடக்கலையும்
உண்டு . கால்வினோ என்று ஒரு கைவினையாளர் உதவினார்
. "
"அது இன்னும் பயங்கரமான இடமா?"
"கொடூரமான ஊர் . அங்கே எல்லாமே அலைந்துகொண்டோ
மிதந்துகொண்டோதான் இருக்கும் .உள்ளே எல்லாமே விசித்திரமாக
இருக்கும் . கேவில் , கொபூராம், இரண்மனை இந்தமாதிரி....."
"கடவுளே இதெல்லாம் என்ன?"
"அச்சுப்பிழை .ஏழெட்டு இடத்தில் தடுக்கி எழுந்துபார்த்தால்
நீங்களேகூட ஹேம்ஸி , வட்டாசீன் என்று மாறியிருப்பீர்கள்.."
"வாட்சன் என்ன இது கொஞ்சம் தைரியமாக இருங்கள் ..."
"இங்கேயிருந்து போன ஒரு ஆசாமி பரம ஆபாசமாக மாறிவிட்டார் ,
இங்கே சேர்த்துக்கொள்ளமாட்டோம் என்று சொல்லிவிட்டார்கள் .
காட்டிலே அலைகிறார் ..

 

*******

"ஆமா இல்ல ? என்ன பண்ரதுன்னே தெரியலையே ... ஆரம்பத்திலே
தலைப்பை குடுத்து தொலைச்சிட்டேன். எல்லாம் இந்த க.சீ.சிவக்குமார்
செஞ்ச வேலைங்க ."
"யார் அவன் ,முக்கிய வில்லனா? நாசகார விஞ்ஞானி ? "
"கோணங்கி மாதிரி ஐதீகமா ஆறதுக்கு இப்ப அப்ரண்டீஸ்ஷிப்
எடுத்துக்கிட்டிருக்கான். பெரிய விண்ணன். அவன்தான் சொன்னான்,
தொடர்கதை எழுதறது சல்லிஸான விஷயம்னு .என்ன கதைன்னு
தெரியாமலே தலைப்பு குடுத்திடுவான். 'கல்கில நான் தொடர்கதை
எழுதறதா விளம்பரம் வந்திருக்கு , நல்ல தீமா ஒண்μ சொல்லு
தலைவான்'றான் ஒரு நாளைக்கு . அப்டியே எழுதி எல்லாரும் ஆகா
ஓகோன்னு சொல்ற மாதிரி பேரும் வாங்கிடறான் . இன்னொரு
பத்திரிகையாள நண்பர் சொன்னார்
பாலகுமாரனுக்கெல்லாம்
அத்தியாயத்தை கேட்டு வாங்கிறப்ப கதைச்சுருக்கத்தை நாமதான்
சொல்லி குடுக்eμn‘னு. அதையெல்லாம் நம்பி எறங்கிட்டேன்
."

Tuesday, February 15, 2011

ஜெயமோகனின் கொற்றவை - என் பார்வையில்


ஜெயமோகனின் கொற்றவை  நாவல் படிக்க எனக்கு ரொம்ப நாளாகவே விருப்பம் இருந்தது..ஆனால் அதன் சைஸ் பயமுறுத்தியது. 
அல்ட்டிமேட் ரைட்டர் சாரு நிவேதிதாவின் எந்த எழுத்தையும் பாய்ந்து போய் படிக்கும் நான், அவரது சற்று பெரிய புத்தகங்களை பார்த்தால் தயங்குவது வழக்கம்..

அதே போல கொற்றவையை வாசிக்க ஆரம்பிப்பதிலும் ஸ்டார்ட்டிங் டிரபிள் இருந்தது. கடைசியில் ஒரு நாள் , சரி என்னதான் இதில் இருக்கிறது என மோதிப்பார்க்க தீர்மானித்தேன்.

சில பக்கங்கள் பார்ப்போம்.. சரிப்படவில்லை என்றால் அத்துடன்கொற்றவை நாவலை மறந்து விடுவோம் என நினைத்து படிக்க ஆரம்பித்தேன்..

Friday, February 11, 2011

அவள் தந்த முத்தம் ….

 

ந்த செய்தி தாளை பார்த்து இருந்தால், ஷீலா இறந்திருக்க மாட்டாள்.ஆனால் விதி வலிது…

அந்த பேப்பரை அவன் பையில் இருந்து எடுப்பதற்குள் குமார் வந்து விட்டான்.

அவசரமாக பையை வாங்கி பத்திர படுத்தினான்.

“என்ன போரடிக்குதா” கேட்டபடியே முத்தமிட்டான்..

அவள் தந்த பியரை பருகினான்….

அவளை இன்று மாலைதான் பார்த்தான்..

எந்த பெண்ணுடன் பேசினால் சக்சஸ் கிடைக்கும் என்பது அவனுக்கு அத்துபடி.. ஆனால் இவளை சரியாக கணிக்க முடியவில்லை..

மாடர்ன் டிரஸ்சில் இருந்தாலும் , அவளை மற்ற பெண்கள் மாதிரி நினைக்க முடியவில்லை..

ஆனால் இந்த அழகு சிலையை அப்படியே விட்டுவிடவும் மனசில்லை..

-எப்படி பேச்சை ஆரம்பிப்பது..

ஆனால் எதிர்பாராத விதமாக அவளே பேச்சை ஆரம்பித்தாள்…

- ஒரு பிரண்டை வர சொல்லி இருந்தேன்.. இன்னும் வரல… படம் வேற ஆரம்பிக்க போகுது.. இனி வர மாட்டா… ரெண்டு டிக்கட் வேஸ்ட் ஆக போகுது…ரெண்டு டிக்கட்டையும் நீங்களே வச்சுக்கோங்க.. தூக்கி போட மனசு வரல..

புன்சிரிப்புடன் சொன்னான்

-  நீங்க என் கூட படத்துக்கு வர்ரதா இருந்தா ரெண்டு டிக்கட்டை கொடுங்க..

படம் முடிய இரவு ஆகி விட்டது..

அதன் பின் டின்னர்.. பின் அவளது வீடு..

தனியாகவே வசித்து வந்தாள் என்பதால் “வசதியாக” இருந்தது…

- சரி..கிளம்புறேன்..

எழுந்தான்…

- நான் சந்தித்ததில் மறக்க முடியாதவர் நீங்கள்.. மீண்டும் சந்திப்போம் என்றாள்.

-மீண்டும் சந்திக்க முடியாது… அவன் குரலில் தெரிந்த மாற்றம் அவளை குழப்பியது..

எதிர்பாராத விதமாக சட் என கத்தியை எடுத்தான்.. அவள் கழுத்தில் ஒரு கோடு இட்டது கத்தி.

- பேப்பரை எடுத்த நீ அதை படித்து இருக்க வேண்டும் ..எதையும் முழுசா செய்யணும்… சிரித்தான்

தமிழ் நாட்டை கலக்கும் சீரியல் கொலைகாரன் இவன் தான்.. பெண்களை மயக்கி, உல்லாசமாக இருந்து விட்டு, போகும் முன் கழுத்தில் பாய்ச்சுவது இவன் ஸ்டைல்… இவன் பற்றி துப்பு கிடைக்காமல் இருந்த நிலையில், தற்போது இவன் புகைப்படம் கிடைத்துள்ளது…. இவனை பற்றிய தகவல் கிடைத்தால்….

இதை எல்லாம் படிக்க அவள் இல்லை….

னி இங்கு இருக்க கூடாது… போட்டோ வெளியாகி விட்டது.. சிக்கி கொள்வோம்.

தன் பொருட்களை பாக் செய்ய ஆரம்பித்தான்..

எதையும் முழுசா செய்யணும்… எதையும் விட்டு விட்டு சென்று மாட்டி கொள்ள கூடாது.

தன் அறையில் அனைத்தையும் மூட்டை கட்டினான்..

இனி இப்படி ஒருவன் இருந்ததே யாருக்கும் தெரிய கூடாது…

- கிளம்ப வேண்டியதுதான்..

நெஞ்சு லேசாக வலிப்பது போல இருந்தது…

- கொஞ்சம் ஓய்வெடுத்து விட்டு கிளம்பலாம்

அமர்ந்தான்..

செய்தி தாள் கண்ணில் பட்டது..

- ஷீலா இதை பார்த்து இருந்தால் , அனாவசியாமாக உயிரை விட்டு இருக்க மாட்டாள்

சிரித்து கொண்டான்..

பேப்பரின் மற்ற செய்திகளை புரட்டினான்.

- அட .என்ன இது ? ஷிலாவின் போட்டோ?

ஒரு நாள் மனைவி என்ற பெயரில் கொலைகளை செய்து வரும் பலே கொலைகாரி இவள்தான்… ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு ஆணுடன் குடும்பம் நடத்துவாளாம்.. “ அது:” முடிந்ததும், பாலிலோ , வேறு பானத்திலோ விஷம் வைத்து கொன்று விடுவாளாம்.. இவளை பற்றிய தகவலை தெரிவிக்க வேண்டிய முகவரி..

- பேப்பரை முழுசா படிக்காமல் போனோமே..

நினைவு தவறும் முன் கடைசியாக அவள் தந்த பியரும், முத்தமும் நினைவுக்கு வந்தன…

 

Tuesday, February 8, 2011

காமம் , தேகம் , மரணம்- வரமா சாபமா?-Mrinzo நிர்மல்





காமம் , மரணம் என்பது எல்லா உயிரிகளுக்கும்  பொதுவான ஒன்றுதான்...
ஆனால் எல்லா உயிர்களும் இதை இயல்பாக ஏற்று வாழும் நிலையில், மனிதனுக்கு மட்டும் இவை ஏன் சிக்கலான விஷ்யங்களாகி விட்டன?
காமம், மரணம், உடல் போன்றவை மனிதனுக்கு வரமா சாபமா என்று தனக்கே உரித்தான பாணியில் அலசுகிறார் நண்பர் நிர்மல்..


*********************************************************************************


தேகம் நாவல் வாசிப்பு / பகிர்வு அனுபவம்: -Mrinzo நிர்மல்
                       
அனுபவ பகிர்வு என்பது எவ்வளவு பலம் கொண்டது!!!! நான் சில தகவலை பிச்சைக்காரனோடு பரிமாறிக்கொண்டேன். 
அதன் வடிவம், முடிவு குறித்து என்னிடம் ஒரு குழப்பம் இருந்தது. ஆழமான வாசிப்பு அனுபவம் உடைய பிச்சைக்காரன் அதை கோர்வை ஆக்கி, தனது புரிதலின் சாற்றை அதில் கலந்து இதை ஒரு கட்டுரையாக ஆக்கிவிட்டார்.  Mrinzo நிர்மல் மற்றும் பிச்சைக்காரனின் கூட்டுமுயற்சி இது. 
(இல்லை... இது முழுக்க முழுக்க  நிர்மலின் எழுத்து... ப்ரூஃப்  ரீடர் பணி மட்டுமே என்னுடையது... -பிச்சைக்காரன் )  

                       தேகம் நாவலில் வரும் தேகங்களை பற்றி பேசும்போது நாம் காண்பதெல்லாம் தேகத்தின் வலி காமத்தின் வலி மேலும் மரணம். 

காமம் மனிதனுக்கு ஒரு வரமா அல்லது சாபமா என்கிற கேள்வி நமக்குள் எழுகிறது. அதுபோல இந்த பசி, தூக்கம், தாகம், காமம், முதிர்ச்சி,  மரணம் கொண்டதுதான் நமது தேகம். அதாவது நமது உடல். இந்த உடல் நமக்கு சாபமா? அல்லது வரமா? 

                                    பசி, தூக்கம், தாகம், காமம், முதிர்ச்சி,  மரணம் எல்லாம் அனைத்து உயிரினங்களுக்கும் பொருந்துமா?
 நமது தேகத்தை கொஞ்சம் மற்ற உயிரினங்களின் தேகத்தோடு ஒப்பிட்டு பார்க்கலாமா? 
       உலகில் உள்ள உயிர் இனங்களை இப்படியாக வகைப்படுத்தலாம் என்று நினைக்கிறேன். இதன் மூலம் எந்த வகை உயிர் இனத்துக்கு காமம் என்பது ஒரு பிரச்சினையாக இருக்கிறது என்பதை அலச இருக்கிறேன்.. 
  • தேக மரணம் இல்லாதவை , 
  • தேக மரணம் பயம் இல்லாதவை, 
  • தேக மரணம் பயம் உள்ளவை. 

              மரணம் இல்லாத உயிர் இனங்கள் இருகின்றனவா? 

  • அமீபா போன்ற ஒரு செல் உயிர் இனங்களில் மரணம் கிடையாதாம். எப்படி என்றால் ஒரு அமீபா நன்றாக சாப்பிட்டு வளர்ந்தபிறகு அது இரண்டாக பிளந்து இரண்டு அமீபாவாக மாறுகிறது.
 இதை போல வேறுசில ஒற்றை  செல் உயிரினங்களும்   இரண்டாக மாறுகின்றன. 
இப்படிப்பட்ட இனப் பெருக்கமுறையை Asexual Reproductive System என்கிறோம். இந்த Asexual Reproductive System மில் மரணம் இல்லை என்பதை பார்த்தீர்களா!!அதாவது இனப்பெருக்கம் செய்யும்போது அந்த முதல் உயிரினம் அழிந்துவிடுகிறது. அது எந்த எச்சத்தையும் விட்டுவிட்டுபோகவில்லை.  இங்கு தாய், தந்தை என்று யாரும் இருக்கமாட்டார்கள். எல்லோரும் சகோதரர்கள். இவை நம்மை போல முதிர்ச்சியடைந்து சாவதில்லை. மற்றபடி பசியால் அல்லது விபத்தால் மரணம் ஏற்படும் வாய்ப்பு இருக்கிறது.
obviously, இந்த வகை உயிரினத்துக்கு செக்ஸ் பற்றிய சிக்கல் இருக்க வாய்ப்பில்லை .. இதற்கு செக்ஸ் என்பது வரமா சாபமா என்ற கேள்வியே இல்லை.. ஏனென்றால் செக்ஸ் என்பதே இதில் இல்லை....
  •                        அடுத்தது, இனபெருக்கம் செய்யும் போது  அழியாமல் தொடரும் ஆனால் மரணத்தை பற்றி அறியாது. அதனின் Instinct கொண்டு வாழும். Tarantula என்ற சிலந்தி கலவி செய்து முடித்தவுடன் பெண் tarantula ஆண்  tarantula வை கொன்று சாப்பிட்டுவிடுமாம்,  ஆனாலும் அவைகள் கலவி செய்துகொண்டுதான் இருக்கின்றன. இது போல இன்னும் பல உதாரணங்கள் இருக்கின்றன 
 இந்த வகை உயிரினத்தில், செக்ஸ் இருக்கிறது.. ஆனால் இது குறித்த சிக்கல் இல்லை.. செக்ஸ் என்பது இதற்கு வரமும் இல்லை, சாபமும் இல்லை... ஒரு செயல்.. அவ்வளவுதான்.. 
  •                           கடைசியாக மனிதர்கள். நமது இனபெருக்க முறையில் நாம் மறைந்துபோவதில்லை, தொடர்ந்து இருக்கிறோம்.  நாம் அந்த அமீபா போல இல்லாமல் கலவிக்கு பின்பும் தொடர்ந்து இருக்கிறோம், அதுபோல மற்ற மிருகத்தை போல அல்லாமல் நாம் முதிர்வு அடைந்து மரணம் அடைவோம் என்கிற அறிவும்  இருக்கிறது.

      இந்த அறிவினால்தான்  நமக்கு மரண பயம் உள்ளது. இந்த அறிவினால்தான் நாம் சாவை எப்படி வெல்லலாம்.. எப்படி இந்த மரண பயத்திலிருந்து நாம் விடுபட்டு வாழலாம் என்கிற கேள்விகள்.   அந்த கேள்விக்கான விடைதான் நாம் உருவாக்கிய  தத்துவங்கள், சிந்தனைகள். ஆக, உடல் மூலம் மரணததை வெல்ல முயற்சிக்கிறான். 

                       பிரமிட் கட்டுதல், கல்லறை கட்டுதல், புதைக்கும் போது சில பொருட்களோடு புதைத்தல், சிலை வைத்தல், போட்டோ எடுத்து வைத்து கொள்ளுதல், மறுபிறப்பு, ஆத்மாவுக்கு அழிவு இல்லை,   நாம் இறந்தாலும் மற்றுமொரு  காலத்தில் உயிர்போம், அல்லது மறுபிறவி எடுப்போம், இந்த உடல் நமக்கு மறு உலகில் கிடைக்கும் என்ற பல நம்பிக்கைகள் இந்த மரண பயத்தின் வடிவங்கள்தான். இவையாவும் நம்மை நாம்  ஆறுதல் படுத்த நாம் உருவாக்கிகொண்டதுதான். 

                      இந்த பயத்தின் கோர வடிவம் ஒரு தேகம் இன்னொரு தேகத்தை தன் ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வந்து தன் இருப்பை விரிவு படுத்தி கொள்ள முயற்சிப்பதுதான். அதுபோல தனது இருப்பை ( Existence)  பயமுறுத்தும் எந்த தேகத்தையும் வதைப்பதில் எந்த தயக்கமும் காட்டுவதில்லை, 

மனித வதையின் உளவியல் காரணம் இந்த மரண பயமுமும் அதன்பொருட்டு வரும் இருப்பு சார்ந்து எழும் சிக்கல்தானோ?? 

                       இந்த இருப்பும், நாம் இருக்கிறோம் என்ற அறிவு எல்லாம் நமக்கு வரமா? அல்லது சாபமா? 

  •                    அது ஒரு வரம்  என்றால் எப்படி நம்மால் நமது உடலை, மற்றவரின் உடலை வதைக்க முடிகிறது? 
  • எப்படி மதத்தின் பெயரில் மனித வதை செய்யமுடிகிறது? 
  •  எப்படி சுயவதை செய்து கொள்ள முடிகிறது? (தண்ணீ அடித்தல், புகை பிடித்தல், இயற்கைக்கு மாறான செக்ஸ் பழக்கங்கள் போன்றவற்றை சிலர் உடல் ஏற்காது... ஆனால் மன வக்கிரங்களுக்காக அந்த பழக்கங்களை தொடர்தல் சுய வதை... அதே போல கொள்கை சார்ந்த விஷயங்கள், அறம் சார்ந்த விஷ்யங்கள் போன்றவைகளுக்காகவும் சுய வதை  நடப்பது இயல்பு )
  • காமத்தின் பசி ஏன் அதிகமாகிக்கொண்டு போகிறது? 
  •  எப்படி காதலியை கொலை செய்யமுடிகிறது?  
  • காதலியின் முகத்தில் ஆசிட் ஊத்தமுடிகிறது? 
  • கோணி ஊசியால் மற்றவனின் குறியை துளைக்க முடிகிறது?
  •  எப்படி  காம வேட்கையால் வன்புணர்ச்சி பண்ண முடிகிறது? 
  • எதற்கு  முதிர்ந்த வயதிலும் சுட்டரிக்கும் வெயிலில் எறா விற்க வேண்டும்? 
  • எதற்கு  pick pocket அடிக்க வேண்டும்? 
  • எதற்கு catamite, Gigglo வாக  இருக்கும் வேண்டும்? 
  • ஒரு பெண்ணின்  மார்பு அவளுக்கு ஏன் இத்தனை சிரமங்களை  கொடுக்கவேண்டும்?  
  • மனித உடலின் குறைபாடு ஏன் காதலை வெறும் கவிதையாய் மாற்றவேண்டும்? 

                   அந்த அமீபா போல நாமமும் உடல் உறவில் அழிந்தால் என்ன? 
அப்படி அழிவதில்லை..
ஆனால் என்றோ ஒரு நாள் யாருடைய தேகம் என்றாலும் அழியத்தான் போகிறது.. செல்வமோ, புகழோ, அதிகாரமோ இதை மாற்றப்போவதில்லை...ஆனால் இதை மனம் ஏற்பதில்லை... 


  •       இன்னொரு தேகத்தை தன் ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வந்து தன் இருப்பை விரிவு படுத்தி கொள்ள முயற்சிக்கும்  வரை நமது  தேகம் நமக்கு ஒரு சாபம்தான். 

அதே போல தன் மனதின் இருப்பை , தன் தேகத்தின் மூலம் விரிவு படுத்தி கொள்ள முயற்சிப்பதும் நமக்கு நாமே கொடுத்து கொள்ளும் தண்டனைதான்...

  • இயல்பை விட்டு தவறும்போது காமம் என்பது சாபமாகிறது..

எனவேதான் பேப்பரை எடுத்தால் காமம் சார்ந்த அவலங்களை பற்றிய செய்திகளை காண நேர்கிறது...


  •  மரணம் என்பது இயல்பான ஒன்று..  தேகம் சார்ந்து தன்னை அடையாளப்படுத்தி கொள்ளும் மனம், இன்னொரு தேகத்தின் மூலம் தன் இருப்பை விரிவு படுத்திக்கொள்ள விரும்பும் மனம் , இதன் அபத்தத்தை உணர்ந்தே இருக்கிறது..எனவேதான் மரணம் என்பது சாபமாக தோன்றுகிறது...

Monday, February 7, 2011

யுத்தம் செய் ப்ளூ ஃபில்மா? ஃபிலாப் ஃபில்மா? காப்பி ஃபில்மா? பதிவர்களிடம் கருத்து கணிப்பு

யுத்தம் செய் படம்  பிளாப் படம், ப்ளூ ஃபில்ம் , காப்பி ஃபில்ம் என பல்வேறு கருத்துக்கள் வலம் வரும் நிலையில், பதிவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பது முக்கியமாகிறது..

பலரின் கருத்துக்களை பார்த்தால் நடுனிலை பார்வை கிடைக்கும் என்பதால் அனைவரின் கருத்தையும் தொகுத்து தருகிறேன்..
( என் கருத்து தவிர்க்கப்பட்டுள்ளது .அதே போல மெட்ராஸ் பவன் சிவகுமார் பொன்றோர் இந்த படத்தை புறக்கணித்து விட்டதால், அவர்கள் கருத்தும் இல்லை)
முடிவு என்ன என்பது கடைசியில் கொடுத்துள்ளேன்..இது என் கருத்து அல்ல...
*******************************************


யுத்தம் செய் - கொரிய படங்களின் வாந்தி

யுத்தம் செய் Memory of Murder ன் காப்பி என நினைத்து இருந்தேன் ஆனால் மிஸ்கின் சில பல கொரியன் படங்களின் இன்ஸ்பிரேஷனாக எடுத்து இருக்கிறார்.

படம் ஆரம்பத்திலேயே என்னகு தெரிந்து விடுகிறது கைகள் வெட்டபட்டு காட்சிக்கு வைக்கபடும் சீன்கள் No Mercy என்ற கொரியன் படத்தில் சுட்டது என்று ,அதேபோல் மார்ச்சுவரி அதிகாரி கேரக்டரும் இந்த படத்தில் இருந்து சுட்டதுதான் 

-ராயல் ராஜ்(பெயரில் மட்டும்)
 *******************************************
சமீபத்தில் வந்த ஈசன் ப்டத்தின் கருவும் இப்படத்தின் கருவும் ஒரே விதமாய் வாடை வருவதை மறக்க முடியவில்லை. அது மட்டுமில்லாமல் சேரன் ஏன் அவரது அஸிஸ்டெண்டுகளை பற்றிய பைல்களை அவர்கள் கண் முன்னே குப்பை தொட்டியில் போட வேண்டும்? அவர் ஒன்று அவ்வளவு அரகண்டான ஆளாய் காட்டவில்லையே? அதே போல் கடைசியில் வரும் குத்து பாட்டு பெரியதாய் எதுவும் இம்பாக்டை கொடுக்கவில்லை. அங்கு நடக்கும் ஹைஃபை கலாச்சாரத்துக்கு கொஞ்சமும் பொருந்தவில்லை. அமீருக்கு ஒரு வேண்டுகோள் நீங்கள் நல்ல இயக்குனர். தயவு செய்து இம்மாதிரியான வேடங்களில் நடித்து மீண்டும் நடிக்க ஆரம்பித்துவிடாதீர்கள். என்னைப் பொறுத்தவரை அந்த பாடல் படத்தின் ஓட்டத்தை கொஞ்சம் குறைக்கிறது என்றே தோன்றுகிறது.
-       கேபிள் சங்கர்
கைகள் துண்டாக்கப்படுவது. டிரில்லிங் மிஷினில் துளையிடுவது, விதவிதமாக கத்திகளைக் காண்பிப்பது என்று அடிவயிற்றில் சிலீர் உணர்வைத் தூண்டுகிறது. ஏ சர்டிபிகேட் கொடுத்தது சரியானதுதான்..
மிஷ்கின் என்றாலே குத்துப்பாட்டு என்கிற அசிங்கமான ஒரு அடையாளத்தை தன்னையறியாமலேயே மிஷ்கினே திணித்துக் கொண்டிருக்கிறார். இதிலும் ஒரேயொரு பாடல். கன்னித்தீவு.
சேரன் பணியாற்றுவது சிபிசிஐடி பிரிவு என்று சொல்கிறார்கள். இந்தப் பிரிவில் பணியாற்றும், கான்ஸ்டபிள்கள், சப் இன்ஸ்பெக்டர்கள், இன்ஸ்பெக்டர்கள், கண்காணிப்பாளர்கள் சீருடை அணிந்துதான் பணியாற்ற வேண்டும் என்பதில்லை. பெரும்பாலும் மப்டியில்தான் இருப்பார்கள். 

ஆனால் இவர்களுக்கான அதிகார அத்தாரிட்டி தனி டி.ஜி.பி. தலைமையில் இயங்குகிறது.. தனி ஹெட்குவார்ட்டர்ஸும் இருக்கிறது.. அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் தனிப் பிரிவு அலுவலகங்கள் இருக்கின்றன. ஆனால் இவர்கள் அந்தந்த மாநகர காவல்துறை ஆணையாளர்கள் மற்றும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்களின் கட்டுப்பாட்டுக்குள் வர மாட்டார்கள். சி.பி.சி.ஐ.டி.யின் மாநிலத் தலைமைக்கு மட்டுமே கட்டுப்படக் கூடியவர்கள்.
படத்தில் சிட்டி கமிஷனரின் உத்தரவின்பேரில், சி.பி.சி.ஐ.டி. இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாகவும், மூடப்பட்ட ஒரு வழக்கை நகர போலீஸ் கமிஷனரே சேரனிடம் விசாரிக்கச் சொல்வதுமாக காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன. 

லோக்கல் ஸ்டேஷன்களின் இன்ஸ்பெக்டர்கள் வழக்கை சரிவர விசாரிக்கவில்லையெனில்தான் அதனை சி.பி.சி.ஐ.டி. பிரிவுக்கு மாற்றுவார்கள். அதுவும் மாநகர ஆணையர்கள் மற்றும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்களின் சிபாரிசின் பேரில் மாநில சட்டம் ஒழுங்கு டி.ஜி.பி.தான் இதற்கு உத்தரவிடுவார். 

சி.பி.சி.ஐ.டி. பிரிவில் பணியாற்றும் அதிகாரிகள் நேரடியாக யாருடனும் தொடர்பில் இருக்க முடியாது என்பதால் நேர்மையாக வழக்கை நடத்துவார்கள் என்பது அனுமானம்

அதேபோல் விசாரிக்கப் போகும்போது இதே மூன்று பேருடன்தான் போக வேண்டுமா..? கூடுதல் போலீஸாருடன்தான் போவார்கள். இதுபோல் போயிருந்தாலே படத்தில் பல முடிச்சுக்களை முன் பாதியிலேயே அவிழ்த்துவிட்டிருக்கலாம். ஆனால் சினிமாவுக்கு இறுதிக் காட்சிவரை கொண்டு போக வேண்டியிருந்ததால் அதையே மெயின்டெயின் செய்துவிட்டார் இயக்குநர்



-       உண்மை தமிழன்
 **************************************************


பாதி அரங்கம் மட்டுமே நிரம்பியிருந்தது.
- மிஷ்கின் இனியாவது வதை, வன்முறை, வன்புனர்ச்சி போன்ற கதைக்களத்தை தவிர்க்கலாம்.
- பல காட்சிகள் இயக்குனரின் முந்தய படங்களை நினைவூட்டுகின்றன, குறிப்பாக சண்டைக்காட்சிகள் அப்படியே அஞ்சாதே ஸ்டைல்.
- படத்தின் ப்ளஸ் என்று கூறிய அதே சஸ்பென்ஸ். கீழ்த்தட்டு ரசிகர்கள் என்னடா படம் எடுக்குறானுங்க என்று கெட்டவார்த்தை கமெண்ட் அடிக்கிறார்கள்.
- படத்தை நிச்சயமாக குடும்பத்துடன் போய் பார்க்க முடியாது. அந்த அளவிற்கு கோரமான காட்சிகள்

-       -பிலாசபி பிரபாகரன்


***********************************************************

மிகத்தீவிரமான உணர்வுக்குவியல்களை இந்த படம் உங்களுக்கு நிச்சயம் ஏற்படுத்தாது. 
வெகு நிச்சயமாய் குழந்தைகளுக்கான படமல்ல இது-
ந்ந்தா ஆன்லைன்

*************************************************
குனிய குனிய குட்டிகிட்டேதான் இருப்பாங்க! என்னைக்காவது நிமிர்ந்து திருப்பி அடிச்சா உங்களால தாங்கிக்கவே முடியாதுடாஎன்று வில்லன்களால் பாதிக்கப்பட்ட நடுத்தரவர்க்க கோயிஞ்சாமி பொங்கி எழும்போது பேசுகிற புராணகாலத்து டயலாக்கை இன்னும் எத்தனை படங்களில்தான் கேட்கப்போகிறோமோ! அந்த இரட்டை வரி வசனத்தை அடிப்படையாக கொண்ட மிடில்கிளாஸ் கோயிஞ்சாமிகள் பொங்கி எழுந்து பழிவாங்கும் படங்களின் எண்ணிக்கை தமிழில் ஆயிரங்களைத்தொடும். யுத்தம் செய் படத்தின் ஒருவரியும் கிட்டத்தட்ட அதுதான்...

படம் முழுக்கவே காட்சிகள் பலதும் பொறுமையை சோதிக்கும்படி அமைத்திருக்கிறார். ஒரு வெற்றிடம் அதை பாத்திரங்கள் நிரப்புகின்றன.. காட்சி முடிய பாத்திரங்கள் நகர மீண்டும் வெற்றிடம்.. இதுமாதிரியான டெக்னிக் கொரிய ஜப்பான் சீன மூக்குசப்பையானவர்களின் படங்களுக்கு ஓகே.. இது வெடைப்பான மூக்கு கொண்டோர் பார்க்கிற தமிழ்ப்படம். மிஷ்கின் தன் வாழ்நாளில் ஒரு தமிழ்படமாவது எடுப்பார் என நம்புகிறேன்.

இது நல்லபடம்தான் ஆனால் ஓடாது
-       அதிஷா

****************************************************
ஹாலிவுட் படங்கள் செவன், ஹாஸ்டல் போன்றவற்றின் பாதிப்பு கதையில் தெரிகிறது. அகதா கிறிஸ்டியின் கதைக் களம் அப்படியே இதிலும் எடுத்தாளப்பட்டுள்ளது. குழந்தைகளைத் தவிர்த்துவிட்டு, பார்க்க வேண்டிய படம்.

-டூட்டிஆன்லைன்

*****************************


ரிசல்ட்

காபி படம் - 60 %
பிளாப் ஃபில்ம் - 30%
ப்ளூ ஃபில்ம் - 10%

இது பதிவர்களின் கருத்து..

ப்ளூ ஃபில்ம் என்பதே என் கருத்து..

என் கருத்துக்கு மாறாக கருத்து கணிப்பு இருந்தாலும், அதை அப்படியே வெளியிடுவதே நடுனிலை என்பதால் அப்படியே வெளியிட்டுள்ளேன்


“தேகம்” என்பது படைப்பின் (விற்பனையின்) உச்சம் !!! நிர்மல் பார்வையில் அல்ட்டிமேட் ரைட்டரின் நாவல்


ஒரு படைப்பு என்பது நம்மை யோசிக்க வைக்க வேண்டும்.. நமக்கு சவால் விட வேண்டும்...

அல்ட்டிமேட் ரைட்டர் சாரு வழங்கி இருக்கும் தேகம் நாவலின் சிறப்பு என்னவென்றால் படிக்கும் ஒவ்வொருவருக்கும் , ஒவ்வொரு வித அனுபவத்தை தரக்கூடியது அந்த நாவல்..

Sunday, February 6, 2011

ப்ளூ ஃபில்ம் இயக்குனருக்கு இந்த அவலம் தெரியுமா? தேகம் வாசிப்பு அனுபவம்- நிர்மல்

 

 
நம் தமிழ் பட இயக்குனர்கள் , ஒன்று காப்பி அடித்து படம் எடுப்பார்கள்.. அல்லது ஊரில் நடக்கும் வக்கிரங்களை அப்படியே காண்பித்து இருப்பதைத்தானே காட்டுகிறோம் என்பார்கள்…
படம் பார்த்து முடித்ததும் நம் மனதில் அந்த வக்கிரமான காட்சிகள் நிற்குமே தவிர நன்மை ஒன்றும் இருக்காது…
இதைதவிர வேறு கதைகளே இல்லையா என பார்த்தால் நம்மை சுற்றி ஆயிரம் கதைகள் இருக்கின்றன… ஆயிரம் அவலங்கள் இருக்கின்றன…
ப்ளு ஃபிலிம் இயக்குனரின் சமீபத்திய படத்தில் காட்டப்படும் பிரச்சினை நடக்கவே இல்லை என சொல்லவில்லை..
அது ஆபத்தான , தடுக்கப்பட வேண்டிய, கடும் நடவடிக்கைக்கு உரிய குற்றம்..  அதில் மாற்று கருத்து இல்லை..
ஆனால் அதைத்தான் வேட்டையாடு விளையாடு போன்ற படங்களில் காண்பித்து விட்டார்களே..மீண்டும் அதையே எடுப்பது, இயக்குனரின் வக்கிர புத்தியைதானே காட்டுகிறது..
எடுத்த விதமும் அவர் முந்தைய படம் போலவே இருக்கிறது..
அவர் தேகம் நாவலை முழுமையாக படித்து இருந்தால், வாழ்வின் அவலங்கள் – அவர் பார்க்காத ஓர் உலகம் – எப்படி இருக்கிறது.. எவ்வளவு கொடூரமாக இருக்கிறது என்பதை உணர்ந்து இருக்கலாம்…
 
இதயம் நடுங்க வைக்கும் அந்த அவலத்தை தேகம் நாவல் வாசிப்பு அனுபவ பின்னணியில் நண்பர் நிர்மல் விளக்குகிறார்..
படித்து பாருங்கள்..
*********************************************
தேகம் வாசிப்பு அனுபவம் 3- Mrinzo Nirmal
தேகம் நாவல் வெளி வந்தபோது  மலம் அள்ளுதல் பற்றி பலவாறு விவாதிக்கப்பட்டது சிலர் ச்சீ என்று முகம் சுளித்தனர். அப்படி முகம் சுளித்தவர்கள் தங்களது குழந்தைகளின் மலத்தை அள்ளியிருப்பார்களா என்று சந்தேகம் வருகிறது.
இப்படியுமா நடக்கும் இந்த உலகத்தில் என்று கேட்பவர்களுக்கு இந்த youtube clip http://www.youtube.com/watch?v=VVPqgeWPTww&feature=related. தயவு செய்து முழு வீடியோவையும் பார்க்கவும்.  பார்த்து அருவருப்பை போக்கிக் கொள்ளவும். 
               அந்த நாவலில் வரும் சமூகத்தை சேர்த்தவர்கள் எங்கள் ஊரில் உள்ளனர். அவர்களது பன்றி  பிடிக்கும் ”நேக்”கும் அப்போது அவர்களிடத்தில் காணப்படும் தேக வலிமையும் நான் சிறுவனாய் இருந்தபோது என்னை ஆச்சரியப் படுத்தியுள்ளது. பன்றிக்கு நிகராக ஓடுவார்கள். நான் அத்லேடிக்ஸில் விருப்பம் உள்ளவனாய் இருந்ததால் அந்த மனிதர்களின் ஓடும் திறன் குறித்து வியந்திருக்கிறேன்.
பெரும்பாலும் பீ தின்று கொண்டிருக்கும் பன்றிகளை பிடிக்க தீபாவளி, பொங்கல் போன்ற நாட்களில் அவர்களை ஊருக்குள்  காணலாம். இந்த சமூகத்தை சேர்ந்த பெண்கள் தலையில் ஒரு  நார்பெட்டி மற்றும் கையில் ஒரு கிண்ணம் பொருத்திய நீண்ட கம்பு , இவற்றை  வைத்துக்கொண்டு ஊரில் கிடக்கும் பன்றி  பீ, கழுதை விட்டை போன்றவற்றை சேகரித்து அதை உரமாக்குவர்கள். இந்த கழுதை விட்டையை  அவர்கள் சேகரிப்பது விசித்திரமாக இருக்கும்.
  கழுதை விடடையை, நின்று கொண்டு அந்த கிண்ணத்தில் லாவகமாக எடுத்து அதை அப்படி தங்கள் தலையில் உள்ள நார்பெட்டிக்கு வீசுவார்கள், அது சமத்தாய் அந்த நார் பெட்டிக்குள் சென்று விழும்.
நான் எங்கள் ஊர் ஆற்று படுகையில் cricket விளையாட செல்லும்போது அவர்களது குடியிருப்பை தாண்டி போகவேண்டும். நாங்கள் cricket ஆடி கொண்டிருக்கும்போது அந்த சமூகத்தை சேர்ந்த சில சிறுவர்கள் மேட்ச் பார்ப்பதற்கு வருவார்கள்.
இவர்கள் குரங்கு வித்தை போன்றவைகளும் காண்பித்து பொழைப்பை நடத்துவார்கள். 
         நான் cricket ஆடும்போது பார்த்த சிறுவர்கள் சிலரை ஊருக்கு போகும்போது எதேச்சையாக காண்பது வழக்கம் .அவர்கள் இப்போது பலூன் வியாபாரம் செய்கிறார்கள். எங்கள் ஊர் ஆற்றின் ஓரத்தில்  மிக புகழ் பெற்ற ஒரு கோவில் இருப்பதால் அங்கு வரும் பக்தர்கள் ஆற்றில் குளிப்பது வழக்கம்.
இந்த சமூகத்தினர் ஆற்று தண்ணீர் அடியில் கிடக்கும் மண்ணை அரித்து அதில் எதாவது காசு, வெள்ளி கொலுசு போன்றவை கிடைக்குதா என்று மண் அரித்து கொண்டிருப்பார்கள்.  தண்ணீரில் விழுந்த பொருள் எப்படி நீரோட்டத்திற்கு ஏற்ப நகரும் என்ற நுணுக்கத்தை தெரிந்து வைத்திருப்பார்கள். 
         நான் வேலைக்கு சேர்ந்த புதுதில் அலுவலகத்தில் சாப்பிட்டு கொண்டிருந்தேன் அப்போது சாப்பாட்டை முடித்த ஒரு Senior பீ , மலம் என்று அசிங்கமாக பேசினார். நானும் அவரிடம் பேசிகொண்டிருந்தேன். அப்போது அவர் கேட்டார் ஏல ,  நீயெல்லாம் மனுஷ சாதிதானா இப்படி ஒரு அருவருப்பும் இல்லமால் திங்கறே என்று . எனக்கு என்ன பதில் சொல்ல என்று தெரியவில்லை. 
- Mrinzo Nirmal


இதையும் படிக்கலாம்...


“தேகம்” என்பது படைப்பின் (விற்பனையின்) உச்சம் !!! நிர்மல் பார்வையில் அல்ட்டிமேட் ரைட்டரின் நாவல்


எழுத்துலக இமயம் சாருவின் ”தேகம்” நாவல் , புரட்சிக்கான விதை- Mrinzo Nirmal-


Saturday, February 5, 2011

யுத்தம் செய் - ப்ளூ பிலிமா , கிரேட் பில்மா ?

ஒரு படம் நல்ல படமா இல்லையா என எப்படி மதிப்பிடுவது?


தொழில் நுட்ப காரணங்களுகாகவோ,  காட்சி அமைப்புகளுக்காகவோ படத்தை பாராட்ட முடியாது..

படம் பாத்த பின், பார்ப்பவனுக்கு அது என்ன பாதிப்பு ஏற்படுத்தியது ,,அவனை என்ன யோசிக்க வைத்தது என்பதே முக்கியம்..

அந்த வகையில், மிஷ்கினின் அஞ்சாதே பெண்கள் என்றால் யூஸ் அண்ட் த்ரோ என்பது போன்ற காட்சி அமைப்பால் முகம் சுழிக்க  வைத்தது...



அடுத்த படமான நந்தலாலாவை பார்த்து அசந்து விட்டோம்..

இவர் நல்ல இயக்குனர்.. நாம்தான் சரியாக புரிந்து கொள்ளவில்லை என நினைத்தோம்..

ஆனால், அது அவர் சிந்தனை அல்ல ,, காபி படம் என்று குட்டு உடைந்தது..

இந்த நிலையில், மிஷ்கினை பற்றி மதிப்பிட எதுவாக , வந்துள்ள படம்தான் யுத்தம் செய்...

பெயரை பார்த்ததும், மக்களின் அன்றாட பிரச்சினைகளுக்கு குரல் கொடுக்கும் கதை, சேரன் நடித்து இருக்கிறார்,, எனவே நாகரிமான முறையில் காட்சி அமைப்புகள் இருக்கும் என நினைப்பீர்கள்..

அதுதான் கிடையாது..



அந்த காலத்தில், விடியோ யுகம் நிலவியது... விடியோ ப்ளேயரும், கேசட்டும் வாங்கி ப்ளூ பிலிம் பார்ப்பார்கள் சிலர்.. ஆனால் அது சிறிது நேரத்திலேயே
அலுத்து விடும்...

அப்படி இல்லாமல் , படம் முழுதும் பார்க்கும் படி, விறு விருப்பாக அமைக்கப்பட்ட ப்ளூ பில்ம்தான் , யுத்தம் செய் என சொல்ல நினத்த்தாலும், அப்படி சொல்ல முடியாது..

ஆனால், அவருக்கு இதைதவிர வேறு கதை கருவே கிடைக்காதா என்று என்ன தோன்றுகிறது...

நல்ல கதை என்பது ஜப்பான் படத்தில் இருந்துதான்  சுட வேண்டும் என்பதில்லை .

நம்மை சுற்றியே ஆயிரம் கதைகள் உள்ளன...

சரி, வக்கிரமான கதைதான் வியாபாரம் ஆகும் என நினைத்தாலும், அதை பார்க்கும் படி எடுக்காமல், அதிர்ச்சியூட்டும் வகையில் எடுப்பது , தார்மீக உணர்ச்சி இல்லை என்பதையே காட்டுகிறது..

ஆனால் , இதை பலரும் ரசித்து பார்ப்பதை பார்த்தால், பாவமாக இருக்கிறது.. பயமாகவும் இருக்கிறது...

திறமையான படைப்புதான்..

ஆனால் குடும்பத்துடன் பார்க்க முடியாது..

யுத்தம் செய்- அனைவருக்கும் ஏற்றதல்ல

புளு பிலிம் இயக்குனர் இதை புரிந்து கொண்டு படித்தாரா? தேகம் நாவலின் நுட்பமான ஒரு பகுதி, நிர்மல் பார்வையில்

அல்டிமேட் ரைட்டர் சாரு நிவேதிதாவின் தேகம் நாவல் அவர் மற்ற நாவல்களை விட சிறிது..
ஆனால் இந்த சின்ன நாவல் ஏற்படுத்தும் தாக்கமோ மிக அதிகம்..

நுனிப்புல் மேய்வது போல மேலோட்டமாக படிக்க கூடாது...

ஒவ்வொரு வரியிலும் விஷயங்கள் பொதிந்துள்ளன..

ப்ளூ பிலிம் இயக்குனர் போல இந்த நாவலை படிப்பது ஒரு வகை..

புரிந்து படித்து நாவலை கொண்டாடுவது ஒரு வகை..

தேகம் நாவலில் வரும் ஒரு நுட்பமான விஷயத்தை பலர் கவனித்திருக்க வாய்ப்பில்லை..

அதை நண்பர் நிர்மல் அழகாக விளக்குகிறார் ,,,, படித்து பாருங்கள்...



Thursday, February 3, 2011

சாட்சியில்லாமல் சில சம்பவங்கள்



சதீஷுக்கு இஞ்சினியரிங் மூளை. உலோகவியலில் ஆர்வம் அதிகம். இரண்டு, மூன்று உலோகங்களை குறிப்பிட்ட விகிதத்தில் கலந்து புதிய சேர்மம் ஒன்றினைக் கண்டுபிடித்திருந்தான். அது பயன்பாட்டிற்கு வந்தால் இப்போது இருக்கிற, ஸ்டீல், அலுமினியம், தாமிரம் எனப் பல உலோகங்களுக்கு வேலை இல்லாமல் போய்விடும். தவிரவும் கோட்டிங் - பெயிண்டிங் போன்றவைகளின் தேவையும் இருக்காது. பொதுமக்களின் பல பயன்பாடுகளுக்கு உற்பத்திச் செலவு மிகவும் குறையும். இஞ்சினியரிங் தளத்தில் ஒரு பெரிய கண்டுபிடிப்பாக இருக்கும், அதோடு சந்தையில் மிகவும் வரவேற்பிருக்கும் என்றும் நம்பினான்.

“தொழில் என்பது மக்களுக்குச் செய்யும் சேவையாக இருக்கவேண்டும்” என்று மீட்டிங்கில் பிரசங்கம் செய்யும் தனது முதலாளி ராமச்சந்திரன் இதை வரவேற்பார் என்று நினைத்தான். ஆனால் அங்கேதான அவனுக்கு மிகுந்த ஏமாற்றம் கிடைத்தது



(அதீதம் இணைய இதழில் வெளியாகி இருக்கும் என் இந்த சிறுகதையை http://atheetham.com/sirukathai4.html. இந்த இணைப்பை சொடுக்கி படிக்கலாம் )