தமிழ் இலக்கியத்துக்கு , எழுத்துக்கு சமீப காலத்தில் நடந்த ஒரு நல்ல விஷயம் என்றால் அது எழுத்துலக இமயம், நவீன இலக்கியத்தின் புயல் சின்னம் சாரு நிவேதிதாவின் தேகம் நாவல் வெளியானதுதான்..
புத்தக கண்காட்சியின் டாப் செல்லர் இந்த நாவல்தான்.
ஆனால் படித்தவர்களில் எத்தனை பேர் இதன் முழு வீச்சை உள்வாங்கினார்கள் என்பது கேள்வி குறிதான்..
இந்த நிலையில், இலக்கியத்தில் அடங்காத ஆர்வமும் , வாசிப்பில் அனுபவமும் கொண்ட நண்பர் நிர்மல் இந்த நாவல் குறித்து எழுதிய கருத்துக்கள் எனக்கு மிகவும் பிடித்து இருந்தது..
இது விமர்சனம் அல்ல.. தேகம் நாவல் வாசிப்பு அனுபவம்...
அந்த அனுபவத்தை நம்முடன் பகிர்ந்து கொள்கிறார் அவர்.. படித்து பாருங்கள்....
இப்படிப்பட்ட ஓர் உன்னத நாவலைப்பற்றி ஒரே பதிவில் சொல்லி முடிக்க முடியாது...
எனவே தொடர்பதிவுகளாக அனுபவ பகிர்வுகள் நம் வலைதளத்தில் வெளியிடப்படும்.
*******************************************************
தேகம் நாவல் வாசிப்பு அனுபவம் - பகுதி 1 - Mrinzo Nirmal
தேகம் சாருவின் புதிய நாவல் .
நாவலின் பின் அட்டையில் இருக்கும் குறிப்பு இந்த நாவல் மனித வதை ஏன் நடக்கிறது என்பதை உளவியல்ரீதியாக புரிந்துகொள்ளும் முயற்சி என்கிறது.
இந்த முயற்சியை எப்படி செய்கிறார்?
தனது வாழ்க்கையில் நடந்ததைக் கொண்டு இதை புரிந்துகொள்ள மற்றும் புரிய வைக்க முயற்சிக்கிறார்.
இதில் எது உண்மை எது கற்பனை என்ற ஆராய்ச்சி தேவையில்லை ஏனென்றால் அவருக்கு இல்லையென்றாலும் வேறு யாருக்காவது அது உண்மையாய் இருக்க கூடும்.
வதைத்தல் ஒரு தவறான செயல் என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒரு காரியம்தான். இதற்கான சட்டம் இருக்கிறது .சமுதாயத்தில் இந்த வதைத்தல் ஏற்றுகொள்ளப்பட்ட ஒரு செயல் இல்லை. அது பாவம் என்றும், ஒழுக்கமின்மை என்றும் சொல்லி தடுக்க முயன்றாலும் இந்த வதை நடந்து கொண்டுதான் இருக்கிறது.

மிகுந்த கட்டமைப்பு கொண்ட சமூகத்தில் ஒடுக்கப்பட்டவர்களுக்கும், ஒதுக்கப்பட்டவர்களுக்கும் எப்படிப் பட்ட வதையை இந்த சமூகம்
அளித்திருக்கிறது என்பதை தனது வார்த்தைகள் மூலமும் தர்மாவின் மூலமும் சொல்கிறார் சாரு. மலம் அள்ளும் சாதியில் பிறந்து, பன்றி வளர்த்து வாழ்ந்த தர்மா தனக்கு வாய்ப்பு கிடைக்கும்போது மற்றவரை வதைக்கும் போது காமக் கிளர்ச்சி அடைகிறான். இப்படி ஒதுக்கப்பட்டவர்கள் மற்றவரை வதைப்பதை நியாயப்படுத்தாமல் சமூக பிரச்சனையை முன்வைக்கிறார்.
பிரான்சு நாட்டில் வாழும் அழகிய பெண் செலின்.செலின் - தர்மா காதல் கதை ஒரு வதையின் கதையாய் இருக்கிறது. தர்மாவின் இயலாமைதான் அவர்களது பிரிவிற்கு காரணமாக படுகிறது, அப்படியென்றால் செக்ஸ்தான் காதலின் குறிக்கோளா? செக்ஸ் இல்லையென்றால் காதல் கவிதையில் முடிந்துவிடுகிறது. இந்த காதல் காம உறவில் வதைக்கப்படுவது செலினா / தர்மாவா? அல்லது இருவருமா?

துன்புறுத்தினால் மட்டும்தான் கலவி கொள்ள முடிகின்ற தர்மா ஏன் செலினை துன்புறுத்தி கலக்கவில்லை? துன்புறுத்துவதுபோல ஒரு விளையாட்டை விளையாடியிருகலாம் என்று கூட தோன்றுகிறது. தர்மாவிற்கும் இப்படி தோன்றுகிறது .ஆனால் சிறு குழந்தை போல இருப்பவளிடம் எப்படி தன்னால் அப்படிப் பட்ட விளையாட்டை விளையாட முடியும் என்று தவிர்க்கிறான்.
அந்த காதல் தோற்று கவிதையாய் ஆகிவிட்டது. காதல் இல்லாமல் ஒரு திருமணம் செய்தும் கள்ள தொடர்பு வைக்க அவள் தயாராக இருக்கிறாள். முடிவு ஒரு கொலை அல்லது தற்கொலை அல்லது விவகாரத்தாகத்தான் இருக்கும்.
இந்த காதல் உண்மையானது என்றால் தனது பிரச்சனையை ஏன் தர்மா செலினிடம் சொல்லவில்லை. தனது காம விளையாட்டின் அருமை பெருமைகளை பீத்திக்கொள்ளும் தர்மா இங்கு தனது Male Ego விடம் தோற்றுப் போனானா? கலாச்சார கட்டுப்பாடு அதை தடுத்துவிட்டதா? தர்மாவின் அந்த நிலைமைக்கு யார் காரணம் ? சமூகம்தனா? அல்லது தர்மாவா? செலினின் வாழ்ககையை ஒரு நரகமாக்கிவிட்டான் என்று நினைக்கிறேன்.
நான் நாற்பது பேரை போட்டு இருக்கிறேன் என்று கூறும் நேஹா, எழுத்தாளன் தர்மாவை காதலிக்கிறாள், தனது எழுத்துக்கு கச்சாப் பொருளாய் பெண்களை பாவிக்கும் தர்மாவிற்கு தேவை தேக சுகம்.எங்கே தேக சுகம் கொடுத்தால் தர்மாவும் நாற்பத்து ஒன்றாய் ஆளாய் ஆகிவிடுவான் என்று அஞ்சி தனது காதலை தொலைத்து வாழ்கையையும் தொலைக்கிறாள் நேஹா. இந்த வதைக்கு யார் காரணம்?

காதலும் செக்சும் பற்றிய புரிதலின்மையா?உண்மையான காதல் என்றால் யாரும் தொடாதவர்களுக்கு மட்டும்தான் வரவேண்டும் என்ற ஒரு சமூக நம்பிக்கையா? உண்மையான காதல் என்றால் என்ன? செக்ஸ் இல்லாததுதான் உண்மையான காதலா?
நேஹா தன்னை தர்மாவிற்கு தகுதியானவள் இல்லை என்கிறாள். நட்பையும் காதலையும் தனது வாழ்கையில் குழப்பிய பெண்ணாக பார்க்கிறேன். நமது உறவுமுறைகள் தரும் வதைகள் அதிகம், நமது உறவு முறைகளின் மீது நாம் கொண்ட பார்வை தருவது வதை.
அப்புறம் ஆழ்வார். முதலில் இவரை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. அப்புறம் பார்த்தால்..
அப்புறம் ஆழ்வார். முதலில் இவரை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. அப்புறம் பார்த்தால்..
அட நான்தான் அது.
மற்றவரின் இயலாமை, பசி, கஷ்டம் எல்லாம் ஒரு செய்தியாக பாவிக்கும் நான்தான் ஆழ்வார். sorry தர்மா
சாருவின் பார்வையில் மனிதவதை நடப்பதை தனது ஸ்டைலில் ரொம்ப சூப்பரா சொல்லி இருக்கிறார்.
கட்டுப்பாடான சமூக அமைப்பு, கீழ் சாதி, மேல் சாதி என்ற சமூக அமைப்பு. இது சாதி என்ற அமைப்பில் மட்டும் அல்ல. இனம், மொழி, மதம், கலாச்சாரம் போன்றவையின் மூலம் நான் நல்லவன், நான் சிறந்தவன், நான் மேலே நீ கீழே என்று பகுக்கும் சமுக கலாச்சாரம். இவற்றால் எழும் பழிவாங்கல் உணர்வு. இதனால் ஏற்படும் வதை.
காமம், காதல் கலவை செக்ஸ் பற்றிய பிற்போக்கு தன்மை அவற்றை ராணுவ கட்டுப்பாட்டோடு அனுசரிக்கும் முறை, காமத்தை பற்றி பேசுவதும், மனித உடலை புனிதமாகவும், தெய்வ அம்சமாகவும் அல்லது மனித உடல் பாவம் / பாவம் செய்ய தூண்டும் என்ற Theology போன்றவை மூலம் மனித உடலை நிராகரிக்கின்ற மனம்.

காமத்தில் கட்டுப்பாடு, கலவையை குறித்த சொல்லில் செயலில் ஒரு குறுகிய பார்வை. இந்த உறவு முறையில் மதத்தின் அத்துமீறல். இவற்றால் எழும் உறவு சிக்கல். இதனால் உருவாகும் sexual Violance எனப்படும் வதை.
பொருளாதார ஏற்றத் தாழ்வு, குப்பி கொடுப்பவனும், விந்து வங்கியில் விந்து தானம் கொடுப்பவனும், பசியும், பட்டினியும் ஒருபுறம். கோடியும், அதிகாரமும், ஆடம்பரமும், தோரணையும் என்று இருக்கும் நமது உலகம். முதலாளித்துவ கோர முகத்தின் மறு பக்கம் .

விபச்சாரம், பசி, பட்டினி, எதையும் ஒரு பொருளை போல பாவிக்கும் குணம், லாபகரமான செயல் ஒன்றை மட்டும் செய்வது. பெண்களை ஒரு கச்சா பொருளை பார்க்கும் பார்வை. மற்றவரின் கொடுமை, பசி எல்லாம் மற்றவர்க்கு வெறும் செய்தியாய் போன அவல நிலை. இவற்றால் வரும் அந்நியப்படுதல், சுயநலம், அடக்குமுறை. ஆன்மீகத்தின் மீது முதலாளித்துவ கொள்கையின் உடுருவல். இந்த எற்றத தாழ்வினால் விரிவாகும் ஏழை பணக்காரன் வித்தியாசம், அது கொண்டுவரும் வதை.
வதைப்பது ஒன்றும் ஒரு வழி பாதை இல்லை. மற்றவரை வதைப்பதில் வல்லுனன் தர்மா எப்படி வதைக்குள்ளாகிறான் என்பதை கதையின் ஓட்டத்தில் புரியவைக்கிறார் சாரு. வதை படுதலும், வதைப்பதும் யாரோ ஒருவனுக்கோ அல்லது ஒரு சமூகத்திற்கோ உள்ள ஒரு குணம் இல்லை, அது என்னிடமும், உங்களிடமும் இருபதுதான்.
மனித தேகத்தின் தேவை பரிபூரணமாய் பூர்த்தியாகும்வரை, இந்த தேவையின் ஏற்ற தாழ்வு இருக்கும்வரை, இந்த தேவையை நாம் நமக்கும் மற்றவருக்கும் மறுக்கும்வரை தேக வதை தொடர்ந்துகொண்டுதான் இருக்குமோ?!

இதையெல்லாம் தாண்டி ஏதோ ஒன்று இந்த புத்தகத்தில் இருக்கிறது எனபது எனக்கு தெரிகிறது என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை .எனது அனுபவமும் எனக்கு சொல்லித்தரும் என்று நினைக்கிறேன்.
அப்புறம் இந்த நாவல் ஒரு மனோதத்துவ நாவல் .இந்த கதையில் வரும் சில விஷயங்களை பற்றி யாராவது ஆராய்ச்சி பண்ணலாம் .உதாரணம் தர்மாவின் sexual behavior பெயர் என்ன? அப்படிப்பட்ட behavior ஏற்கனவே தெரிந்ததுதானா? அதற்கான மருத்துவம் என்ன? செலினின் கதாபத்திரம், நேஹா, ஆழ்வார் என எல்லோரிடம் ஒரு வித வதைக்கான catalyst இருபதுபோல இருக்கிறது. சாதாரண வாசகன் மட்டும் அல்ல, அறிவாளி கூட்டமும் படிக்கவேண்டியது அவர்கள் இந்த கதையில் வரும் behavior ஐ ஆராய்ச்சி பண்ணி சொல்லுவார்களா? இது நாம் வாழும் இந்த காலத்திலே நடக்குமா? தெரியவில்லை. Who will merge this Literature with science?
Take it serious, Novel like this is going to be the Seed for Revolution.
Cheers
Mrinzo Nirmal
Cheers
Mrinzo Nirmal
// எழுத்துலக இமயம் சாரு //
ReplyDeleteஇது உங்க வேலையா...? நிர்மல் வேலையா...?
நான் நேற்று பதிந்த 'பியானோ டீச்சர்'படமும் சுயவதையில் இன்பம் காணும் ஒரு பெண்ணைப் பற்றிய கதைதான்!
ReplyDeleteசாருவின் அறிமுகப் படுத்தலினாலேயே இப்படத்தைப் பார்த்தேன்.
தேகம் கிடைத்தால் வாங்கி வாசிக்கணும்!
>>> சாரு எழுதிய புத்தங்கங்களை நான் படித்ததில்லை. ஒரு சில பத்திரிக்கை கட்டுரைகள் மட்டுமே.
ReplyDeleteதேகம் பற்றி ஏற்கனவே ஒரு நண்பர் கூறியிரந்தார். முடிந்தால் எனக்கு ஜீக்கும் சேர்த்து ஒரு புத்தகத்தை வாங்கி அனுப்பி விடுங்க பாஸ்! இங்க புத்தகங்கள் வாங்க முடியாது
ReplyDeleteசாரு எழுதிய “எக்ஸிஸ்டென்ஷியலிசமும் பேன்சி பனியனும்” தான் முதலில் வாங்கிய நாவல்.பின்நவீனத்துவ நோக்கில் எழுதப்பட்ட முதல் நாவல்?(இது அவரே சொல்லிக்கொண்டது)மற்றபடி அவரின் பத்தி
ReplyDeleteஎழுத்துக்கள்தான் அறிமுகம்.
பேன்சி பனியனை முப்பது பக்கத்திற்கு மேல் படிக்க முடியாமல்
மூடி வைத்ததுதான். ஆயிரத்தோரு அரபிய இரவுகள் கணக்காக சுவராசியமில்லாத அதே சுயபுராணம்.சம்பாஷணைகள் இல்லாமல் போய்க்கொண்டே இருக்கும் அலுப்பூட்டும் நான்லீனியர் டைப் விவரிப்புகள்.
கடைசிவரை அதைப் படிக்க முடியவில்லை.நேற்று அவரின் புது நாவலான “தேகம்”(ரூ 90) புத்தகக் கண்காட்சியில் வாங்கினேன்.
மிகவும் கஷ்டப்பட்டுப் படித்தேன்.ஒரு வழியாக (”வதை”க்கப்பட்டேன்)முடித்தேன்.ஏன் வாங்கினோம் என்று ஆயிற்று.சுவராஸ்யமே இல்லை.
கொஞ்சம் கூட ஒட்டவே இல்லை.காரணம் ஆழம் இல்லை. வதையில் அதிர்வு இல்லை.காமா சோமாவென்று அசட்டுத்தனமான நாவல்.கோர்வை இல்லை.கதைச்சொல்லி விவரித்ததைவிட நேரலையாக வதை சம்பவங்களை விட்டிருக்கலாம். Action Packed இருந்திருக்கும். சாதாரண ஒரு குறும்படத்தில் கூட ரத்தமும் சதையுமாக சாதாரண டார்ச்சரைக் காட்டி அசத்துகிறார்கள்.
கோணங்கியின் “கழுதையாவரிகள்” கதையில் வரும் கழுதைகள் இன்னும் மனதை விட்டு அகலவில்லை.இதில் வரும் பன்றிகள்??????
இந்த மாதிரி நான் லீனியர் அல்லது பின் நவீனத்துவம்(?) எழுதுவதைகூட ஒரு திறமையுடன் செய்ய வேண்டும் என்று எண்ணுகிறேன்.இதில் அது இல்லை.
இவர் ஜீனியர் விகடனில் வரும் கிரைம் சம்பவங்கள் மற்றும் ஆபாச இணைய தளங்களில் காட்டப்படும் bizzare/weird sexual actக்களுக்கு கொடுக்கப்படும் பெயர்கள்,தோற்றங்கள் இரண்டையும் சேர்த்து இவற்றுடன் இலக்கியத்தை கலந்து மிக்ஸியில் அடித்து கொடுத்து அசட்டுத்தனமாக ஆகிவிட்டது.எழுத்து தொளதொளவென்று இருக்கிறது.
பொதுவாகவே இவர் தான் தெரிந்துக்கொண்ட sexual slang சொற்களை அடிக்கடி விளக்கம் கொடுத்து எழுத்துக்களில் ”காட்டிக்”கொள்வார்.
அடுத்த எரிச்சல் மீண்டும் சுயபுராணம்.இந்த நான்லீனியர் டைப்பில் வசதியாக எதை வேண்டுமானால எந்தப்பக்கத்திலும் ஆரம்பிக்கலாம்.முடிக்கலாம்.வசதியானது.
மனதில்தான் ஒட்டமாட்டேன் என்கிறது.நானும் பின் நவீனத்துவமாக டியூன் பண்ணிக்கொண்டு படித்தும் பார்த்தேன்.ஒட்டவில்லை. காரணம் எழுத்தில் சத்தியம் இல்லை.
தி.ராஜேந்தர் படங்களில் காணப்படும் அச்சுபிச்சுத்தனம் தெரிகிறது.
அதற்கடுத்து பாசாங்குத்தனமான சம்பந்தமே இல்லாத உபநிஷத்/ஜென்/ஹாம்லெட்/ராமாயணம்/ஹடயோகம் என்று மேற்கோள் கொடுத்து பிலிம் காட்டுகிறார்.
எரிச்சல் ஊட்டுகிறது.
கலவி விஷயங்களில் யதார்த்த வசனங்கள் வைத்தவருக்கு இதில் வரும் ரெளடிகள் சென்னைத் தமிழின் மிக முக்கிய கெட்டவார்த்தைகளான ”...தா” ”..ளா” உபயோகிக்காமல் எப்படி பேசுகிறார்கள் ?
Oru Blogil paditrhadhu