நம் தமிழ் பட இயக்குனர்கள் , ஒன்று காப்பி அடித்து படம் எடுப்பார்கள்.. அல்லது ஊரில் நடக்கும் வக்கிரங்களை அப்படியே காண்பித்து இருப்பதைத்தானே காட்டுகிறோம் என்பார்கள்…
படம் பார்த்து முடித்ததும் நம் மனதில் அந்த வக்கிரமான காட்சிகள் நிற்குமே தவிர நன்மை ஒன்றும் இருக்காது…
இதைதவிர வேறு கதைகளே இல்லையா என பார்த்தால் நம்மை சுற்றி ஆயிரம் கதைகள் இருக்கின்றன… ஆயிரம் அவலங்கள் இருக்கின்றன…
ப்ளு ஃபிலிம் இயக்குனரின் சமீபத்திய படத்தில் காட்டப்படும் பிரச்சினை நடக்கவே இல்லை என சொல்லவில்லை..
அது ஆபத்தான , தடுக்கப்பட வேண்டிய, கடும் நடவடிக்கைக்கு உரிய குற்றம்.. அதில் மாற்று கருத்து இல்லை..
ஆனால் அதைத்தான் வேட்டையாடு விளையாடு போன்ற படங்களில் காண்பித்து விட்டார்களே..மீண்டும் அதையே எடுப்பது, இயக்குனரின் வக்கிர புத்தியைதானே காட்டுகிறது..
எடுத்த விதமும் அவர் முந்தைய படம் போலவே இருக்கிறது..
அவர் தேகம் நாவலை முழுமையாக படித்து இருந்தால், வாழ்வின் அவலங்கள் – அவர் பார்க்காத ஓர் உலகம் – எப்படி இருக்கிறது.. எவ்வளவு கொடூரமாக இருக்கிறது என்பதை உணர்ந்து இருக்கலாம்…
இதயம் நடுங்க வைக்கும் அந்த அவலத்தை தேகம் நாவல் வாசிப்பு அனுபவ பின்னணியில் நண்பர் நிர்மல் விளக்குகிறார்..
படித்து பாருங்கள்..
*********************************************
தேகம் வாசிப்பு அனுபவம் 3- Mrinzo Nirmal
தேகம் நாவல் வெளி வந்தபோது மலம் அள்ளுதல் பற்றி பலவாறு விவாதிக்கப்பட்டது சிலர் ச்சீ என்று முகம் சுளித்தனர். அப்படி முகம் சுளித்தவர்கள் தங்களது குழந்தைகளின் மலத்தை அள்ளியிருப்பார்களா என்று சந்தேகம் வருகிறது.
இப்படியுமா நடக்கும் இந்த உலகத்தில் என்று கேட்பவர்களுக்கு இந்த youtube clip http://www.youtube.com/watch?v=VVPqgeWPTww&feature=related. தயவு செய்து முழு வீடியோவையும் பார்க்கவும். பார்த்து அருவருப்பை போக்கிக் கொள்ளவும்.
அந்த நாவலில் வரும் சமூகத்தை சேர்த்தவர்கள் எங்கள் ஊரில் உள்ளனர். அவர்களது பன்றி பிடிக்கும் ”நேக்”கும் அப்போது அவர்களிடத்தில் காணப்படும் தேக வலிமையும் நான் சிறுவனாய் இருந்தபோது என்னை ஆச்சரியப் படுத்தியுள்ளது. பன்றிக்கு நிகராக ஓடுவார்கள். நான் அத்லேடிக்ஸில் விருப்பம் உள்ளவனாய் இருந்ததால் அந்த மனிதர்களின் ஓடும் திறன் குறித்து வியந்திருக்கிறேன்.
பெரும்பாலும் பீ தின்று கொண்டிருக்கும் பன்றிகளை பிடிக்க தீபாவளி, பொங்கல் போன்ற நாட்களில் அவர்களை ஊருக்குள் காணலாம். இந்த சமூகத்தை சேர்ந்த பெண்கள் தலையில் ஒரு நார்பெட்டி மற்றும் கையில் ஒரு கிண்ணம் பொருத்திய நீண்ட கம்பு , இவற்றை வைத்துக்கொண்டு ஊரில் கிடக்கும் பன்றி பீ, கழுதை விட்டை போன்றவற்றை சேகரித்து அதை உரமாக்குவர்கள். இந்த கழுதை விட்டையை அவர்கள் சேகரிப்பது விசித்திரமாக இருக்கும்.
கழுதை விடடையை, நின்று கொண்டு அந்த கிண்ணத்தில் லாவகமாக எடுத்து அதை அப்படி தங்கள் தலையில் உள்ள நார்பெட்டிக்கு வீசுவார்கள், அது சமத்தாய் அந்த நார் பெட்டிக்குள் சென்று விழும்.
நான் எங்கள் ஊர் ஆற்று படுகையில் cricket விளையாட செல்லும்போது அவர்களது குடியிருப்பை தாண்டி போகவேண்டும். நாங்கள் cricket ஆடி கொண்டிருக்கும்போது அந்த சமூகத்தை சேர்ந்த சில சிறுவர்கள் மேட்ச் பார்ப்பதற்கு வருவார்கள்.
இவர்கள் குரங்கு வித்தை போன்றவைகளும் காண்பித்து பொழைப்பை நடத்துவார்கள்.
நான் cricket ஆடும்போது பார்த்த சிறுவர்கள் சிலரை ஊருக்கு போகும்போது எதேச்சையாக காண்பது வழக்கம் .அவர்கள் இப்போது பலூன் வியாபாரம் செய்கிறார்கள். எங்கள் ஊர் ஆற்றின் ஓரத்தில் மிக புகழ் பெற்ற ஒரு கோவில் இருப்பதால் அங்கு வரும் பக்தர்கள் ஆற்றில் குளிப்பது வழக்கம்.
இந்த சமூகத்தினர் ஆற்று தண்ணீர் அடியில் கிடக்கும் மண்ணை அரித்து அதில் எதாவது காசு, வெள்ளி கொலுசு போன்றவை கிடைக்குதா என்று மண் அரித்து கொண்டிருப்பார்கள். தண்ணீரில் விழுந்த பொருள் எப்படி நீரோட்டத்திற்கு ஏற்ப நகரும் என்ற நுணுக்கத்தை தெரிந்து வைத்திருப்பார்கள்.
நான் வேலைக்கு சேர்ந்த புதுதில் அலுவலகத்தில் சாப்பிட்டு கொண்டிருந்தேன் அப்போது சாப்பாட்டை முடித்த ஒரு Senior பீ , மலம் என்று அசிங்கமாக பேசினார். நானும் அவரிடம் பேசிகொண்டிருந்தேன். அப்போது அவர் கேட்டார் ஏல , நீயெல்லாம் மனுஷ சாதிதானா இப்படி ஒரு அருவருப்பும் இல்லமால் திங்கறே என்று . எனக்கு என்ன பதில் சொல்ல என்று தெரியவில்லை.
- Mrinzo Nirmal
இதையும் படிக்கலாம்...
“தேகம்” என்பது படைப்பின் (விற்பனையின்) உச்சம் !!! நிர்மல் பார்வையில் அல்ட்டிமேட் ரைட்டரின் நாவல்
எழுத்துலக இமயம் சாருவின் ”தேகம்” நாவல் , புரட்சிக்கான விதை- Mrinzo Nirmal-
உண்மையில் அவலமான ஒரு நிலைதான்.. இன்றைய இயக்குனர்களுக்கு இதெல்லாம் கண்ணில்படுவதில்லை.. அந்த வீடியோவையும் அது எந்த ஊர் மதுரையா..
ReplyDeleteசாப்பாட்டை முடித்த ஒரு Senior பீ , மலம் என்று அசிங்கமாக பேசினார். நானும் அவரிடம் பேசிகொண்டிருந்தேன். அப்போது அவர் கேட்டார் ஏல , நீயெல்லாம் மனுஷ சாதிதா//
ReplyDeleteஎன்னதான் இருக்கட்டுமே சாப்பிடும்போது இதையெல்லாமா பேசுவது. கொஞ்சம் ஓவர்தான்.
sir please read... http://manithana.blogspot.com/2011/02/blog-post.html
ReplyDelete//அவர் கேட்டார் ஏல , நீயெல்லாம் மனுஷ சாதிதானா இப்படி ஒரு அருவருப்பும் இல்லமால் திங்கறே என்று//
ReplyDelete>>> ஏன் அப்படி கேட்டார்?
அதிர்ச்சியாகத்தான் இருக்கிறது
ReplyDelete//தேகம் நாவலை முழுமையாக படித்து இருந்தால், வாழ்வின் அவலங்கள் – அவர் பார்க்காத ஓர் உலகம் – எப்படி இருக்கிறது.. எவ்வளவு கொடூரமாக இருக்கிறது என்பதை உணர்ந்து இருக்கலாம்//
ReplyDeleteஉண்மையாகவா? கஸ்டப்பட்டு தேடி நூலகத்தில் இரந்து எடுத்து வந்துள்ளேன் படிக்கத்தொடங்கப்போகின்றேன்.
உண்மையாகவா? கஸ்டப்பட்டு தேடி நூலகத்தில் இரந்து எடுத்து வந்துள்ளேன் படிக்கத்தொடங்கப்போகின்றேன்.
ReplyDeleteபடித்து விட்டு கருத்தை சொல்லுங்கள்
அவர் கேட்டார் ஏல , நீயெல்லாம் மனுஷ சாதிதானா இப்படி ஒரு அருவருப்பும் இல்லமால் திங்கறே என்று//
ReplyDelete>>> ஏன் அப்படி கேட்டார்?”
பேசுவதயே அருவருப்பு என நினைப்பவர் அவர்..
சிலர் அதை கையாள்கிறார்களே.. அவர்களுக்கு எப்படி இருக்கும்?
உங்களுக்கு மிஸ்கின் மீது எதற்கு இப்படி ஒரு கோபம்.யுத்தம் செய் என்னுடைய பார்வையில் நல்ல படம்
ReplyDeleteஎனக்கு ஒன்றுமே புரியவில்லை. யார் இவர்கள்? ஏன் மிஸ்கின் மீது இவ்வளவு கோபமாக இருக்கிறார்கள்? படித்த கோமாளிகளோ? "வேலை சோலிய" பார்க்காமல் ஓபி அடிப்பவர்களோ?
ReplyDelete