யுத்தம் செய் படம் பிளாப் படம், ப்ளூ ஃபில்ம் , காப்பி ஃபில்ம் என பல்வேறு கருத்துக்கள் வலம் வரும் நிலையில், பதிவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பது முக்கியமாகிறது..
பலரின் கருத்துக்களை பார்த்தால் நடுனிலை பார்வை கிடைக்கும் என்பதால் அனைவரின் கருத்தையும் தொகுத்து தருகிறேன்..
( என் கருத்து தவிர்க்கப்பட்டுள்ளது .அதே போல மெட்ராஸ் பவன் சிவகுமார் பொன்றோர் இந்த படத்தை புறக்கணித்து விட்டதால், அவர்கள் கருத்தும் இல்லை)
முடிவு என்ன என்பது கடைசியில் கொடுத்துள்ளேன்..இது என் கருத்து அல்ல...
*******************************************
யுத்தம் செய் - கொரிய படங்களின் வாந்தி
*******************************************
**************************************************
*************************************************
பலரின் கருத்துக்களை பார்த்தால் நடுனிலை பார்வை கிடைக்கும் என்பதால் அனைவரின் கருத்தையும் தொகுத்து தருகிறேன்..
( என் கருத்து தவிர்க்கப்பட்டுள்ளது .அதே போல மெட்ராஸ் பவன் சிவகுமார் பொன்றோர் இந்த படத்தை புறக்கணித்து விட்டதால், அவர்கள் கருத்தும் இல்லை)
முடிவு என்ன என்பது கடைசியில் கொடுத்துள்ளேன்..இது என் கருத்து அல்ல...
*******************************************
யுத்தம் செய் - கொரிய படங்களின் வாந்தி
யுத்தம் செய் Memory of Murder ன் காப்பி என நினைத்து இருந்தேன் ஆனால் மிஸ்கின் சில பல கொரியன் படங்களின் இன்ஸ்பிரேஷனாக எடுத்து இருக்கிறார்.
படம் ஆரம்பத்திலேயே என்னகு தெரிந்து விடுகிறது கைகள் வெட்டபட்டு காட்சிக்கு வைக்கபடும் சீன்கள் No Mercy என்ற கொரியன் படத்தில் சுட்டது என்று ,அதேபோல் மார்ச்சுவரி அதிகாரி கேரக்டரும் இந்த படத்தில் இருந்து சுட்டதுதான்
-ராயல் ராஜ்(பெயரில் மட்டும்)
சமீபத்தில் வந்த ஈசன் ப்டத்தின் கருவும் இப்படத்தின் கருவும் ஒரே விதமாய் வாடை வருவதை மறக்க முடியவில்லை. அது மட்டுமில்லாமல் சேரன் ஏன் அவரது அஸிஸ்டெண்டுகளை பற்றிய பைல்களை அவர்கள் கண் முன்னே குப்பை தொட்டியில் போட வேண்டும்? அவர் ஒன்று அவ்வளவு அரகண்டான ஆளாய் காட்டவில்லையே? அதே போல் கடைசியில் வரும் குத்து பாட்டு பெரியதாய் எதுவும் இம்பாக்டை கொடுக்கவில்லை. அங்கு நடக்கும் ஹைஃபை கலாச்சாரத்துக்கு கொஞ்சமும் பொருந்தவில்லை. அமீருக்கு ஒரு வேண்டுகோள் நீங்கள் நல்ல இயக்குனர். தயவு செய்து இம்மாதிரியான வேடங்களில் நடித்து மீண்டும் நடிக்க ஆரம்பித்துவிடாதீர்கள். என்னைப் பொறுத்தவரை அந்த பாடல் படத்தின் ஓட்டத்தை கொஞ்சம் குறைக்கிறது என்றே தோன்றுகிறது.
- கேபிள் சங்கர்
கைகள் துண்டாக்கப்படுவது. டிரில்லிங் மிஷினில் துளையிடுவது, விதவிதமாக கத்திகளைக் காண்பிப்பது என்று அடிவயிற்றில் சிலீர் உணர்வைத் தூண்டுகிறது. ஏ சர்டிபிகேட் கொடுத்தது சரியானதுதான்..
மிஷ்கின் என்றாலே குத்துப்பாட்டு என்கிற அசிங்கமான ஒரு அடையாளத்தை தன்னையறியாமலேயே மிஷ்கினே திணித்துக் கொண்டிருக்கிறார். இதிலும் ஒரேயொரு பாடல். கன்னித்தீவு.
சேரன் பணியாற்றுவது சிபிசிஐடி பிரிவு என்று சொல்கிறார்கள். இந்தப் பிரிவில் பணியாற்றும், கான்ஸ்டபிள்கள், சப் இன்ஸ்பெக்டர்கள், இன்ஸ்பெக்டர்கள், கண்காணிப்பாளர்கள் சீருடை அணிந்துதான் பணியாற்ற வேண்டும் என்பதில்லை. பெரும்பாலும் மப்டியில்தான் இருப்பார்கள்.
ஆனால் இவர்களுக்கான அதிகார அத்தாரிட்டி தனி டி.ஜி.பி. தலைமையில் இயங்குகிறது.. தனி ஹெட்குவார்ட்டர்ஸும் இருக்கிறது.. அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் தனிப் பிரிவு அலுவலகங்கள் இருக்கின்றன. ஆனால் இவர்கள் அந்தந்த மாநகர காவல்துறை ஆணையாளர்கள் மற்றும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்களின் கட்டுப்பாட்டுக்குள் வர மாட்டார்கள். சி.பி.சி.ஐ.டி.யின் மாநிலத் தலைமைக்கு மட்டுமே கட்டுப்படக் கூடியவர்கள்.
ஆனால் இவர்களுக்கான அதிகார அத்தாரிட்டி தனி டி.ஜி.பி. தலைமையில் இயங்குகிறது.. தனி ஹெட்குவார்ட்டர்ஸும் இருக்கிறது.. அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் தனிப் பிரிவு அலுவலகங்கள் இருக்கின்றன. ஆனால் இவர்கள் அந்தந்த மாநகர காவல்துறை ஆணையாளர்கள் மற்றும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்களின் கட்டுப்பாட்டுக்குள் வர மாட்டார்கள். சி.பி.சி.ஐ.டி.யின் மாநிலத் தலைமைக்கு மட்டுமே கட்டுப்படக் கூடியவர்கள்.
படத்தில் சிட்டி கமிஷனரின் உத்தரவின்பேரில், சி.பி.சி.ஐ.டி. இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாகவும், மூடப்பட்ட ஒரு வழக்கை நகர போலீஸ் கமிஷனரே சேரனிடம் விசாரிக்கச் சொல்வதுமாக காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன.
லோக்கல் ஸ்டேஷன்களின் இன்ஸ்பெக்டர்கள் வழக்கை சரிவர விசாரிக்கவில்லையெனில்தான் அதனை சி.பி.சி.ஐ.டி. பிரிவுக்கு மாற்றுவார்கள். அதுவும் மாநகர ஆணையர்கள் மற்றும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்களின் சிபாரிசின் பேரில் மாநில சட்டம் ஒழுங்கு டி.ஜி.பி.தான் இதற்கு உத்தரவிடுவார்.
சி.பி.சி.ஐ.டி. பிரிவில் பணியாற்றும் அதிகாரிகள் நேரடியாக யாருடனும் தொடர்பில் இருக்க முடியாது என்பதால் நேர்மையாக வழக்கை நடத்துவார்கள் என்பது அனுமானம்
அதேபோல் விசாரிக்கப் போகும்போது இதே மூன்று பேருடன்தான் போக வேண்டுமா..? கூடுதல் போலீஸாருடன்தான் போவார்கள். இதுபோல் போயிருந்தாலே படத்தில் பல முடிச்சுக்களை முன் பாதியிலேயே அவிழ்த்துவிட்டிருக்கலாம். ஆனால் சினிமாவுக்கு இறுதிக் காட்சிவரை கொண்டு போக வேண்டியிருந்ததால் அதையே மெயின்டெயின் செய்துவிட்டார் இயக்குநர்
லோக்கல் ஸ்டேஷன்களின் இன்ஸ்பெக்டர்கள் வழக்கை சரிவர விசாரிக்கவில்லையெனில்தான் அதனை சி.பி.சி.ஐ.டி. பிரிவுக்கு மாற்றுவார்கள். அதுவும் மாநகர ஆணையர்கள் மற்றும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்களின் சிபாரிசின் பேரில் மாநில சட்டம் ஒழுங்கு டி.ஜி.பி.தான் இதற்கு உத்தரவிடுவார்.
சி.பி.சி.ஐ.டி. பிரிவில் பணியாற்றும் அதிகாரிகள் நேரடியாக யாருடனும் தொடர்பில் இருக்க முடியாது என்பதால் நேர்மையாக வழக்கை நடத்துவார்கள் என்பது அனுமானம்
அதேபோல் விசாரிக்கப் போகும்போது இதே மூன்று பேருடன்தான் போக வேண்டுமா..? கூடுதல் போலீஸாருடன்தான் போவார்கள். இதுபோல் போயிருந்தாலே படத்தில் பல முடிச்சுக்களை முன் பாதியிலேயே அவிழ்த்துவிட்டிருக்கலாம். ஆனால் சினிமாவுக்கு இறுதிக் காட்சிவரை கொண்டு போக வேண்டியிருந்ததால் அதையே மெயின்டெயின் செய்துவிட்டார் இயக்குநர்
- உண்மை தமிழன்
பாதி அரங்கம் மட்டுமே நிரம்பியிருந்தது.
- மிஷ்கின் இனியாவது வதை, வன்முறை, வன்புனர்ச்சி போன்ற கதைக்களத்தை தவிர்க்கலாம்.
- பல காட்சிகள் இயக்குனரின் முந்தய படங்களை நினைவூட்டுகின்றன, குறிப்பாக சண்டைக்காட்சிகள் அப்படியே அஞ்சாதே ஸ்டைல்.
- படத்தின் ப்ளஸ் என்று கூறிய அதே சஸ்பென்ஸ். கீழ்த்தட்டு ரசிகர்கள் என்னடா படம் எடுக்குறானுங்க என்று கெட்டவார்த்தை கமெண்ட் அடிக்கிறார்கள்.
- படத்தை நிச்சயமாக குடும்பத்துடன் போய் பார்க்க முடியாது. அந்த அளவிற்கு கோரமான காட்சிகள்
- -பிலாசபி பிரபாகரன்
***********************************************************
மிகத்தீவிரமான உணர்வுக்குவியல்களை இந்த படம் உங்களுக்கு நிச்சயம் ஏற்படுத்தாது.
வெகு நிச்சயமாய் குழந்தைகளுக்கான படமல்ல இது-
ந்ந்தா ஆன்லைன்
‘குனிய குனிய குட்டிகிட்டேதான் இருப்பாங்க! என்னைக்காவது நிமிர்ந்து திருப்பி அடிச்சா உங்களால தாங்கிக்கவே முடியாதுடா’ என்று வில்லன்களால் பாதிக்கப்பட்ட நடுத்தரவர்க்க கோயிஞ்சாமி பொங்கி எழும்போது பேசுகிற புராணகாலத்து டயலாக்கை இன்னும் எத்தனை படங்களில்தான் கேட்கப்போகிறோமோ! அந்த இரட்டை வரி வசனத்தை அடிப்படையாக கொண்ட மிடில்கிளாஸ் கோயிஞ்சாமிகள் பொங்கி எழுந்து பழிவாங்கும் படங்களின் எண்ணிக்கை தமிழில் ஆயிரங்களைத்தொடும். யுத்தம் செய் படத்தின் ஒருவரியும் கிட்டத்தட்ட அதுதான்...
படம் முழுக்கவே காட்சிகள் பலதும் பொறுமையை சோதிக்கும்படி அமைத்திருக்கிறார். ஒரு வெற்றிடம் அதை பாத்திரங்கள் நிரப்புகின்றன.. காட்சி முடிய பாத்திரங்கள் நகர மீண்டும் வெற்றிடம்.. இதுமாதிரியான டெக்னிக் கொரிய ஜப்பான் சீன மூக்குசப்பையானவர்களின் படங்களுக்கு ஓகே.. இது வெடைப்பான மூக்கு கொண்டோர் பார்க்கிற தமிழ்ப்படம். மிஷ்கின் தன் வாழ்நாளில் ஒரு தமிழ்படமாவது எடுப்பார் என நம்புகிறேன்.
இது நல்லபடம்தான் ஆனால் ஓடாது
- அதிஷா
****************************************************
ஹாலிவுட் படங்கள் செவன், ஹாஸ்டல் போன்றவற்றின் பாதிப்பு கதையில் தெரிகிறது. அகதா கிறிஸ்டியின் கதைக் களம் அப்படியே இதிலும் எடுத்தாளப்பட்டுள்ளது. குழந்தைகளைத் தவிர்த்துவிட்டு, பார்க்க வேண்டிய படம்.
-டூட்டிஆன்லைன்
*****************************
ரிசல்ட்
காபி படம் - 60 %
பிளாப் ஃபில்ம் - 30%
ப்ளூ ஃபில்ம் - 10%
இது பதிவர்களின் கருத்து..
ப்ளூ ஃபில்ம் என்பதே என் கருத்து..
என் கருத்துக்கு மாறாக கருத்து கணிப்பு இருந்தாலும், அதை அப்படியே வெளியிடுவதே நடுனிலை என்பதால் அப்படியே வெளியிட்டுள்ளேன்
// மிஷ்கின் இனியாவது வதை, வன்முறை, வன்புனர்ச்சி போன்ற கதைக்களத்தை தவிர்க்கலாம். //
ReplyDeleteஅந்த சொற்றொடரில் பாதி நீக்கப்பட்டிருக்கிறது...
நான் பாராட்டி எழுதிய பதிவின் முக்கால்வாசியை விட்டுவிட்டு மீதமிருக்கும் கால்வாசியை ஏன் கிண்டி எடுத்துட்டு வந்திருக்கீங்க...
யுத்தம் செய் ஒரு தரமான தமிழ் சினிமா... இதுவே எனது கருத்து... (பின்னூட்டம் வெளியாக வேண்டும்... ஜாக்கிரதை...)
ReplyDeleteதமிழ்மணம் ஓட்டுப்பட்டையை இணையுங்கள்... அப்போதுதான் மைனஸ் ஓட்டு போடா முடியும்...
ReplyDeleteஉனக்கு என்ன தெரியும்..?
ReplyDeleteஇதுக்கு பேரு நடு நிலையா ?? எல்லாரும் சொன்ன நெகடிவ் பாயின்டுகள "மட்டும்" போட்டு இருக்கீங்க...
ReplyDeleteஅவங்க சொன்ன பாசிடிவ் பாயின்டுகள அப்படியே "தவிர்த்து" இருக்கிறீர்கள்..
என்னமோ இடிக்குது..!!!!!
அண்ணே நா இன்னைக்கு நைட்டு படம் பார்க்கலாம்னு நெனச்சேனே அப்ப போகவேணாமா சொல்லறீங்களா
ReplyDelete//// மிஷ்கின் இனியாவது வதை, வன்முறை, வன்புனர்ச்சி போன்ற கதைக்களத்தை தவிர்க்கலாம். //
ReplyDeleteஅந்த சொற்றொடரில் பாதி நீக்கப்பட்டிருக்கிறது...
நான் பாராட்டி எழுதிய பதிவின் முக்கால்வாசியை விட்டுவிட்டு மீதமிருக்கும் கால்வாசியை ஏன் கிண்டி எடுத்துட்டு வந்திருக்கீங்க...//
நானும் இதை கவனிச்சேன் பிரபா..:))
பார்வையாளன்..என்னாச்சு உங்களுக்கு...தொடர்ந்து உங்க பதிவுகள் சாரு விசுவாசியாகவும்..யுத்தம் செய் படத்தை கீழ்த்தரமாய் விமர்சிப்பதிலுமே கழிகிறதே ஏன்...??? நிர்மல் அவர்களின் வெகு அழகான படைப்பை எதிர் நோக்கி இருக்கிறேன்..ஆனால் சாருவின் தேகம் விமர்சிப்பிலே இன்னும் மீண்டு வரல அவர் அப்டிங்கிறது இன்னும் வருத்தம்....பார்வையாளன்..லீவ் திஸ் டாபிக்..நம்மை சுத்தி இன்னும் அழகான அல்லது கொடூரமான விஷயங்கள் இருக்கின்றன...அதையும் கொஞ்சம் பார்க்கலாமே....நீங்கள் எழுதலாமே...உங்கள் மர்ம சிறுகதைகளை வெகுவாய் எதிர்பார்க்கிறேன்...உங்களை ஒரு சிறுகூட்டுக்குள் திணிச்சுக்காதிங்க பார்வையாளன்...பார்த்துக்கோங்க...ஆல் தீ பெஸ்ட்..
நன்றி !தலைவா?
ReplyDeleteநிச்சயமா கொரிய, உலக சிமிமாவின் பாதிப்பு மிஷ்கினின் காட்சியமைப்புகளில் இருக்கிறது. முன்னைய படங்களிலும் அப்படித்தான்! தமிழுக்கு அது புதிதுதான்!
ReplyDelete//அதே போல மெட்ராஸ் பவன் சிவகுமார் பொன்றோர் இந்த படத்தை புறக்கணித்து விட்டதால்//
ReplyDelete>>> >>> சார்.. நான் ஏதோ சின்னதா ஒரு ஓட்டல் வச்சி நடத்திட்டு வர்றேன். என் பேரை பதிவில் போட்டுட்டீங்க. யுத்தம் செய் படத்தை நான் இன்னும் பார்க்கவில்லை. அது காப்பி என்று நான் எங்கும் கருத்து சொல்லவில்லை. மிஸ்கின் துணை இயக்குனர்களை நக்கல் செய்தததாலும், நந்தலாலா கிகுஜிரோவின் அபேஸ் என்று தெரிந்ததாலும் மட்டுமே இப்படத்தை நான் பார்க்கவில்லை. மற்றபடி இப்படம் நன்றாக உள்ளதென படம் பார்த்தவர்கள் சொல்கிறார்கள். யுத்தம் செய் எங்கிருந்து எடுக்கப்பட்டது எனும் தகவல்களை நண்பர்கள் வலைப்பூக்களில் போடுகிறார்கள். அந்த வெளிநாட்டு படங்களை பார்த்துவிட்டு, யுத்தம் செய் படத்தையும் பார்த்தால் மட்டுமே அது குறித்து என் கருத்தை தெரிவிக்கை இயலும்.அதுபோல இதுவரை நான் எவரையும் ஒரு குறிப்பிட்ட படத்திற்கு போக வேண்டாம் என்று சொன்னதே இல்லை. பிரபாகரன் யுத்தம் செய் செல்லப்போகிறேன் என்றார். அது அவர் விருப்பம். எனக்கு அதில் தலையிட உரிமை இல்லை. என் எந்த பதிவிலும் ஒரு படத்தை குறிப்பிட்டு அந்த படத்தை யாரும் பார்க்க வேண்டாம் என்று சொன்னதே கிடையாது. அது போல் மிஸ்கின் ப்ளூ பிலிம் இயக்குனர் என்று சொல்வது எனக்கு சரியாக படவில்லை. வெகுஜன படங்களில் உள்ளது போன்ற ஆபாசம், கவர்ச்சி கூட அவர் படங்களில் இது வரை வந்ததில்லை. அனைத்து குத்து பாடல்களிலும் மஞ்சள் புடவை நடிகைகள் மார்பை காட்டியதில்லை. அதற்கு மிஷ்கினை பாராட்டியே தீர வேண்டும். தன் நண்பர் சாருவை பாடல் காட்சியில் இருட்டடிப்பு செய்தது மனவருத்தமே. கமல் காப்பி அடித்தாலும் அது தவறுதான். நான் கமலின் ரசிகன் என்றபோதிலும்....இந்த கருத்தை நீங்கள் போடுவீர்கள் என்று நம்புகிறேன் . எடிட் செய்யாமல். தயவு செய்து கேட்டுக்கொள்கிறேன். அதுபோல, என்னைவிட சினிமா பற்றி அற்புதமாக எழுதும் பதிவர்கள் பலர் உள்ளனர். அவர்கள் எண்ணங்களை தங்கள் பதிவில் போடவும். நான் வெறும் அப்ரண்டிஸ். நன்றி சார்!
யுத்தம் செய் ஒரு தரமான தமிழ் சினிமா... இதுவே எனது கருத்து... (பின்னூட்டம் வெளியாக வேண்டும்... ஜாக்கிரதை...)"
ReplyDeleteஇப்போது நீங்கள் நினைப்ப்தை உண்மையாக சொல்கிரீர்கள்... நல்லது..
சில கால, கழித்து இந்த படத்தையா பாராட்டினோம் என நினைப்பீர்கள்
மிஸ்கின் துணை இயக்குனர்களை நக்கல் செய்தததாலும், நந்தலாலா கிகுஜிரோவின் அபேஸ் என்று தெரிந்ததாலும் மட்டுமே இப்படத்தை நான் பார்க்கவில்லை”
ReplyDeleteஇந்த தார்மீக உணர்வு பாராட்டுக்கு உரியது..
நிச்சயமா கொரிய, உலக சிமிமாவின் பாதிப்பு மிஷ்கினின் காட்சியமைப்புகளில் இருக்கிறது. ”
ReplyDeleteஆமாம் நண்பரே
அப்ப போகவேணாமா சொல்லறீங்களா”
ReplyDeleteஆமாம்.. போகாதீங்ங்ங்க...
மன்னிக்கவும்....
ReplyDeleteஉங்க பார்வைல வெளிநாட்டு படங்கள சுட்டு போடுறது தப்புன்னு மட்டும் வச்சுக்கிட்டா........கலைஞானியோட record films கல என்னான்னு சொல்றது!
என் பார்வையில் - இந்த அளவுக்கு தைரியமா ஒரு குத்துப்பாட்டு தவிர காமடின்ற பேர்ல ஆபாச வசனங்கள் இல்லாம படமெடுத்த டைரடருக்கும், அவருக்கு முழு சுதந்திரம் கொடுத்த தயாரிப்பாளருக்கும் ஒரு சல்யூட்!
/* யுத்தம் செய் படத்தின் ஒருவரியும் கிட்டத்தட்ட அதுதான் என்றாலும்.. இதனை ஆயிரத்தில் ஒன்றென நகர்ந்து போய்விட முடியாது. */
ReplyDeleteஏன் இந்த கேவலமான பொழப்பு பிச்சைக்காரரே ? நல்ல படம் நல்ல படம் தான். என்னவோ மிஷ்கின் தான் தமிழ் சினிமாவுக்கு வன்முறைய கத்து தருவது போல் சொல்கிறீரே ? நம்ம பிடிச்ச முயலுக்கு நாலு கால் உண்டு. மூணுகால்னு சொன்னா எப்படி சார் ?